by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
தமிழக செய்திகள்
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 82 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளது.
கடந்த வியாக்கிழமை கொச்சியில் இருந்து தமிழகம் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், 1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பர்மா பசாரில் கடை வைத்துள்ள மொஹமத் இலியாஸ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இவரை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய உள்ளனர். சென்னை காவல்துறையின் ஆயுதப் படையில் உள்ள 50 காவலர்கள் இந்த சோதனையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் இருந்தனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீண்டது.
டிசம்பர் 2022ம் ஆண்டு, திருச்சியில் உள்ள இலங்கை நிவாரண முகாமை சேர்ந்த 9 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த ஹஜ் சலீம் என்ற போதை பொருள் விற்பனை செய்பவருக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டவரக்ள் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆளுநருக்கு எதிரான தீர்மானம்: அதிமுக வெளிநடப்பு, பாஜக எதிர்த்து வாக்களிப்பு..!
ஆளுநருக்கு எதிரான தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். முன்னதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ பன்னீர்செல்வம் அவர்களை நீக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுவதாக கூறி திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் இன்று ஆளுனறூக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட நிலையில் பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரும் சட்டமன்றத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே அதிமுக வெளிநடப்பு செய்தது என்பதால் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
‘அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைவோம்’ - கத்தோலிக்க பாதிரியார்
தூத்துக்குடி: ‘அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைவோம்’ - கத்தோலிக்க பாதிரியார் அதிரடி
‘கத்தோலிக்க திருச்சபை விழாவிற்கு தி.மு.க-வை மட்டும் அழைத்தால் நாங்கள் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க-வில் இணைவோம்’ என கத்தோலிக்க பாதிரியார் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி மறைமாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் 150வது ஆண்டு விழா விரைவில் வர இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க திருச்சபையின் குருமார்கள் செய்து வருகிறார்கள். இந்த விழாவில் முக்கிய நாளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைக்கவும் ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் அமலதாஸ் என்கிற ஓய்வு பெற்ற பாதிரியார், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
அதில் அவர் "பெருந்தகை ஆயர் அவர்களே 2021 சட்டமன்ற தேர்தலின்போது டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் சொன்னதை செய்யாமல் புதிய கடைகளை திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.
அதேப் போல புனித வெள்ளி அன்று டாஸ்மாக் கடையை அடைக்க வேண்டும் என்று பா.ஜ.க, நாம் தமிழர் கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதை தி.மு.க அரசாங்கம் புறந்தள்ளிவிட்டன. மேலும் தி.மு.க அரசு அமைந்த பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகள் நசுக்கப்பட்டு வருகிறது. இப்படி நமது கோரிக்கைகள் எதையுமே தி.மு.க அரசாங்கம் செய்ய முன் வருவதில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பொன்விழா ஆண்டில் முதலமைச்சரை அழைக்க இருப்பதாக தெரிகிறது. அப்படி முதலமைச்சர் மட்டும் அழைத்தால் அது ஒரு சார்பாக அமைந்து விடும் என்பது என் கருத்து.
அழைப்பதாக இருந்தால் அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, நாம் தமிழர் என்று எல்லா கட்சிகளையும் அழைக்க வேண்டும். இல்லை தி.மு.க மட்டும் தான் அழைப்போம் என்று சொன்னால் நாங்கள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை" இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
ஓய்வு பெற்ற பாதிரியாரின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன? என தூத்துக்குடி மறைமாவட்ட வட்டாரங்களில் விசாரித்தோம். "அவருக்கு வயது 75. அவர் ஓய்வு பெற்றோருக்கான பாதிரியார்கள் இல்லத்தில் தங்கி இருக்கிறார். அவருக்கு ஞாபக மறதி நோயும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே எந்த நிலையில் அவர் இந்த கருத்தைச் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனாலும் இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்கள்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி
புதுடில்லி: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை எங்களின் பேரணியை தடுத்து நிறுத்துவது நியாயம் இல்லை என்ற ஆர்எஸ்எஸ் தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்றனர்.
அடையாளம் காட்டப்படும் இடங்கள் மற்றும் பல கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கலானது. இதனை ஏற்ற ஐகோர்ட் பேரணி நடத்த அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு, சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரணி விவகாரத்தில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது. நிலைமையை கருத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி தரப்பட்டது. பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை. பிரச்னைகள் உள்ள இடங்களில் தான் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் கடமை. அதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. எனக்கூறினார்.
சென்னை ஐகோர்ட் அனைத்து விவரங்களையும் ஆய்ந்த பின்னரே பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது, இதனை குறைத்து மதிப்பிட முடியாது, ஆனால் இதனை தமிழக அரசு ஏற்க மறுப்பது நீதிதுறையை கேலிக்கூத்தாக்கும் செயல். நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்து வருவது ஒரு வழக்கமான விஷயம். இதில் மாநில அரசு தலையிட்டு எங்களை அடக்கி வைப்பது நியாயமற்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமைதான் என வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு சென்னை ஐகோர்ட் வழங்கிய அனுமதியை ஏற்று கொண்டதுடன், தமிழக அரசின் அப்பீலை தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவை அடுத்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்த அறிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சிறை கைதிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் வீடியோ காலில் பேசலாம்; தமிழக அரசு அறிவிப்பு
சிறைகளில் கைதிகள் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மற்றும் அவர்களது வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருக்க வீடியோ அழைப்பு வசதிகளை அரசு அறிமுகப்படுத்தும் என்று தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சிறைத்துறை தொடர்பாக 13 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப்ரல் 11) சட்டப்பேரவையில் வெளியிட்டார். கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களின் தவறுகளை உணர்ந்து, மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், அலைபேசி மையங்களில் கைதிகளுக்கு அழைப்பு (ஆடியோ) அதிர்வெண் மற்றும் கால அளவை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இதையும் படியுங்கள்: போரூர் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகள்.. எந்தெந்த பகுதிகள் பயன் பெறும்?
கைதிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை, அதாவது ஒரு மாதத்திற்கு 10 முறை குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படுவார்கள், மேலும் ஒரு அழைப்பில் அதிகபட்சம் 12 நிமிடங்கள் பேசலாம்.
மத்திய சிறைகள், பெண்கள் சிறைகள், சிறப்பு சிறைகள் உள்ளிட்ட அனைத்து சிறைகளிலும் நூலக வசதி, 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
105 துணைச் சிறைகள், எட்டு மாவட்ட சிறைகள் மற்றும் திருப்பூரில் உள்ள மகளிர் சிறை (இணைப்பு) ஆகியவற்றில் அனைத்து உபகரணங்களுடன் 600 சிசிடிவிகளை நிறுவுவதன் மூலம் சிறைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், ஒன்பது மத்திய சிறைகளில் வீடியோ காலில் பேசும் வசதி அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சிறைத் தலைமையகத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க, சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகளின் தலைமையகத்திற்கு உள்ளூர் பகுதி நெட்வொர்க் மற்றும் ஃபயர்வால் ஆகியவற்றை சிறைத்துறை அமைக்கும்.
அனைத்து மத்திய சிறைகளுக்கும் ரூ.3 கோடி செலவில் மொத்தம் 450 டிஜிட்டல் மொபைல் ரேடியோ வாக்கி-டாக்கிகள் மற்றும் 15 ரிப்பீட்டர்கள் அனைத்து உபகரணங்களுடன் வாங்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
மேலும், 26 கோடி ரூபாய் கூடுதல் செலவில் கைதிகளுக்கான உணவு முறைகளை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்டு, ‘ஃப்ரீடம்’ (FREEDOM) என்ற பெயரில் சிறைச்சாலை கவுன்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் இனி போலீஸ் கேன்டீன்களில் கிடைக்கும்.
கடலூரில் 6 வயது மாணவிக்கு பாலியல் கொடுமை: தி.மு.க கவுன்சிலர் கைது
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில், பள்ளிச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது குறித்த தகவல் கோரலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சக்தி நகரில் இயங்கிவரக்கூடிய தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்றில் யூ.கே.ஜி., பயின்று வரும் புதுப்பேட்டையைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி 11-04-2023 அன்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்குச் சென்ற பின்னர், தனக்கு வயிறு வழிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்தச் சிறுமியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது,அந்தச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தச் சிறுமி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில், அப்பள்ளியின் தாளாளரும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருமான பக்கிரிசாமி என்பவர்மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு, பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டிருக்கிறேன்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி, விருத்தாச்சலம் நகர மன்றத்தின் 30வது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனேயே, அவரின் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் நிலை இரத்து செய்யப்பட்டு, கட்சியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலரும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
எங்களது அரசைப் பொறுத்தவரையில், “நான் செய்தியைக் கேள்விப்படவில்லை – தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்”, என்று நான் சொல்லத் தயாராக இல்லை. இந்தச் செய்தியை அறிந்தவுடனேயே சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினேன், சம்மந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்து, அது தொடர்பான செய்தியை எனக்குத்
தந்தார்கள்.
இந்த அரசைப் பொறுத்தவரையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே ஓர் அவமானச் சின்னம் எனக் கருதுகிறோம். அந்த வகையில், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும், அவர்கள்மீது எந்தவித பாரபட்சமுமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுத்திடுவோம் என்பதை இந்த அவையில் நான் உறுதியோடு பதிவு செய்கிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்தில் 14 யானைகள் பலி: தமிழக வன ஆர்வலர்கள் கவலை
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை கோவனூர் செல்லும் வழியில் நடிகர் சத்யராஜின் சகோதரியின் பண்ணை வீடு உள்ளது. அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் குட்டியானை நீர் அருந்தும் பொழுது உள்ளே தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை 4 மணி அளவில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை காவலர்கள் அந்தப் பகுதியை சோதனை செய்த பொழுது குட்டியானை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிவித்தனர். குட்டி யானையின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர், மாவட்ட வன மருத்துவர், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மற்றும் வனத்துறை காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 2 ஜே.சி.பி இயந்திரங்கள் கொண்டு தொட்டியை உடைத்து குட்டி யானையை வலையின் மூலம் மேலே எடுத்தனர். இதைத் தொடர்ந்து குட்டியானையை மருத்துவர்கள் அருகில் உள்ள வனப்பகுதியில் வைத்து உடற்கூராய்வு செய்து அங்கு புதைத்தனர்.
கோவை மாவட்டம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தற்போதைய கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் உணவு மற்றும் நீர் தேடி வருகின்றன.வனத்துறையினர் ஊருக்குள் வரும் விலங்குகளை வனத்திற்குள் விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும் நடக்கின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் தமிழகம் முழுவதும் 14 யானைகள் மின்வேலியிலும், பல்வேறு காரணங்களினாலும் மர்மமான முறையிலும் உயிரிழந்துள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
வன விலங்குகளை பாதுகாக்க தமிழக அரசும், வனத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரை: செமினாருக்கு வந்த குஜராத் மாணவி கற்பழிப்பு; 2 பேர் கைது
கடந்த ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இருவரை, தமிழகத்தின் மதுரை காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 11) கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் (வயது 22) மற்றும் அவரது நண்பர் ஜெரோம் கதிரவன் (வயது 23) என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். 2022 டிசம்பரில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள ஒரு லாட்ஜில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அகமதாபாத்தைச் சேர்ந்த பெண், பட்டயக் கணக்கியல் (சிஏ) படிப்பைத் தொடர்ந்து, செமினாரில் பங்கேற்பதற்காக டிசம்பர் 16 அன்று மதுரை வந்தடைந்தார்.
அங்கு தங்கியிருந்தபோது அப்பெண் நோய்வாய்ப்பட்டதாகவும், தனக்கு முன்பே தெரிந்த ஆஷிஷ் உதவியை நாடியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆஷிஷ் டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடக்கவிருந்த செமினாரில் பங்கேற்க மதுரை வந்து அதே லாட்ஜில் தங்கியிருந்தார்.
மருந்து மற்றும் உணவு கொண்டு வர கதிரவனின் உதவியை ஆஷிஷ் நாடினார். பின்னர் இருவரும் அந்த பெண்ணை லாட்ஜில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியேறியதாக போலீசார் தெரிவித்தனர்.
வீடு திரும்பிய அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி குஜராத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் மதுரை ஸ்டேஷனுக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபை ஹைலைட்ஸ்: நான் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை – இ.பி.எஸ் புகார்; சபாநாயகர் பதில்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 12) கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருத்தாசலத்தில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி உரிமையாளரான தி.மு.க கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
பின்னர், சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிறு வலியால் அந்த சிறுமி துடித்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. பெற்றோர்கள் அளித்த புகாரை பதிவு செய்தும் எப்.ஐ.ஆர் எதுவும் போடவில்லை. நேற்றைய தினம் இரவு குழந்தையின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இந்த அரசானது ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. 5 வயது சிறுமி பள்ளி தாளாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பிஞ்சு குழந்தையை அந்த பள்ளியின் உரிமையாளரே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர் புகார் அளித்து 13 மணிநேரம் கழித்துதான் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், தகவல் கிடைத்ததுமே கைது செய்துவிட்டதைப் போல் முதல்வர் பேசியுள்ளார். உளவுத்துறை மூலம் உடனே தகவல் கிடைக்கவில்லை என்பதே திறமையற்ற ஆட்சி நடக்கிறது என்பதற்குச் சாட்சி.
இது குறித்து ஜீரோ ஹவர்ஸில் இதுபற்றி பேச நான் எழும்பியதுமே நேரலையை ரத்து செய்துவிட்டனர். அதற்கு முன்னும், பின்னும் காட்டுகின்றார்கள். முதல்வரின் பதில், சிறப்பு தீர்மானமெல்லாம் காட்டுகின்றார்கள். நான் பேசிய பேச்சை மட்டும் கட் செய்துள்ளனர். அதனால், வெளிநடப்பு செய்து உள்ளோம். சட்டசபையில் நேரலை என வாக்குறுதி கொடுத்தனர். அதை நிறைவேற்றினர். ஆனால், பிரதான எதிர்கட்சியினர் பேசுவதை காட்டவில்லை. இதனால் சட்டசபையில் ஜனநாயகம் இல்லை. சபை நடுநிலையாகச் செயல்படவில்லை
எதிர்கட்சியினர் கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல், அமைச்சர்கள், முதல்வர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புகின்றனர். இது என்ன ஜனநாயகம்? பிரதான எதிர்கட்சியினர் பேசுவதையும் ஒளிபரப்ப வேண்டுமே? அ.தி.மு.க ஆட்சியில் இருந்த போது எல்லோர் பேசுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது” என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதன்பின்னர் சட்டசபையில் நேரலை தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நான் பேசுவதை நேரலை செய்வதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசும்போது, நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
அ.தி.மு.க உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமியின் புகார் குறித்து பேசிய அப்பாவு பேசினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை தொடந்து சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை வழங்கப்படும் எனவும் நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனவும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.
“ஆணுறுப்பில் அடித்து கொன்றேன்... உடலை 6 துண்டுகளாக வெட்டி எரித்தேன்!”
- விமான நிலைய ஊழியரைக் கொன்ற பெண் ‘பகீர்’ வாக்குமூலம்!
காணாமல்போன விமான நிலைய ஊழியர் ஜெயந்தனைக் கொலைசெய்த புகாரில், ஜெயந்தனின் ரகசிய மனைவி பாக்யலட்சுமி என்பவர் கைதாகியிருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தைக் கேட்டு கிறுகிறுத்துக் கிடக்கிறது போலீஸ் வட்டாரம்!
இது குறித்து சென்னை பழவந்தாங்கல் போலீஸாரிடம் பேசினோம். ``காணாமல்போன விமான நிலைய ஊழியர் ஜெயந்தன் பயன்படுத்திய செல்போன் சிக்னல், அழைப்பு விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரித்தபோதுதான் அவருக்கு பாக்யலட்சுமி என்று ஒரு ரகசிய மனைவி இருப்பது தெரிந்தது. புதுக்கோட்டை, பொன்னமராவதியைச் சேர்ந்த பாக்யலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. இவரைத் தன் வீட்டினருக்குத் தெரியாமல் ஜெயந்தன் ரகசியத் திருமணம் செய்திருக்கிறார். சமீபத்தில், ஜெயந்தனுடன் ஏற்பட்ட பிரச்னையால் பாக்யலட்சுமி அவரைப் பிரிந்து புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார்.
கடந்த மார்ச் 19-ம் தேதி புதுக்கோட்டைக்குச் சென்ற ஜெயந்தன், அங்கு பாக்யலட்சிமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த பாக்யலட்சுமி, ஜெயந்தனின் ஆணுறுப்பில் தாக்கியிருக்கிறார். ஏற்கெனவே மதுபோதையிலிருந்த ஜெயந்தன் அதனால் மயங்கி விழுந்து, உயிரிழந்திருக்கிறார். பதற்றமடைந்த பாக்யலட்சுமி, தன்னுடைய நண்பரான சங்கரின் உதவியுடன் ஜெயந்தனின் சடலத்தை தலை, உடல், கை கால்கள் என ஆறு துண்டுகளாக வெட்டியிருக்கிறார். பிறகு, அவற்றை பாக்யலட்சுமியின் வீட்டுக்கு அருகிலேயே வைத்து இருவரும் எரித்திருக்கிறார்கள். ஆனாலும், அவை முழுமையாக எரியாததால், அவற்றை பாக்யலட்சுமியின் வீட்டுக்கு அருகிலேயே புதைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், ஜெயந்தனை போலீஸ் தேடுவது குறித்துத் தெரிந்துகொண்ட பாக்யலட்சுமி, அதை சங்கரிடம் தெரிவித்திருக்கிறார். இருவரும் புதைக்கப்பட்ட ஜெயந்தனின் பாதி கருகிய உடல் பாகங்களைத் தோண்டியெடுத்து, சென்னைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். கோவளம் பகுதியைச் சேர்ந்த பூசாரி வேல்முருகனின் உதவியுடன், ஜெயந்தனின் உடல் பாகங்களை கோவளம் பூமிநாதர் கோயிலை ஒட்டிய குட்டையில் வீசியதோடு, சில பரிகார பூஜைகளையும் செய்திருக்கிறார் பாக்யலட்சுமி.
இது தொடர்பான விசாரணையில், “ஜெயந்தனை ஆணுறுப்பில் அடித்து நான்தான் கொன்றேன்; உடலை ஆறு துண்டுகளாக வெட்டி எரித்தேன்’ என எந்தப் பதற்றமும் இல்லாமல் கூலாகப் பதிலளித்திருக்கிறார் பாக்யலட்சுமி. கொலைக்கான உண்மையான காரணம் குறித்துக் கேட்டபோது, ‘என் பர்சனலில் தலையிட்டார்’ என்றே பதிலளித்தார். பாக்யலட்சுமி அடையாளம் காட்டிய குட்டையிலிருந்து, அழுகிய நிலையில் சில உடல் பாகங்களை மீட்டிருக்கிறோம். அவை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. சங்கர், பூசாரி வேல்முருகன் ஆகியோரைத் தேடிவருகிறோம்” என்றனர்.
ஜெயந்தனின் மரணத்தில் இன்னும் பல மர்மங்கள் இருப்பதாகவே தோன்றுகிறது!
தண்டவாளத்தின் சூடு தாங்காமல் போராட்டத்தை முடித்த காங்கிரசார்
திருநெல்வேலி,: திருநெல்வேலியில் ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரசாரை, போலீசார் கண்டுகொள்ளவில்லை. தண்டவாளம் சூடு தாங்காமல், அவர்களாகவே போராட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டனர்.
காங்., ராகுல் எம்.பி.,பதவி பறிப்பை கண்டித்து, நேற்று அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் கட்சியினர் போராட வந்தனர்.
போலீசார் அவர்களை தடுக்காததால், ரயில் நிலையம் உள்ளே சென்றனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற, 'அந்த்யோதயா' ரயில் நின்ற மூன்றாவது நடைமேடைக்கு சென்ற காங்கிரசார், தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதிய நேரம் என்பதால் தண்டவாளம் சூடு தாங்க முடியவில்லை. போலீசாரும் போராட்டத்திற்கு இடையூறு செய்யவில்லை. காங்கிரசார் அவசர, அவசரமாக போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு, அங்கிருந்து கிளம்பினர்.
வாசலுக்கு வந்ததும், போலீஸ் அதிகாரிகள் காங்கிரசாருக்கு கை கொடுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி, பின்னர் விடுவித்தனர். போராட்டத்தில், 120 பேரை கைது செய்ததாக கணக்கு மட்டும் காண்பித்தனர்.
அபாய சங்கிலியை இழுத்தவர் கைது
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரசார், நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு மறியல் போராட்டத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.அப்போது, நாகர்கோவிலில் இருந்து ஹட்சிக்குடா நோக்கி சென்ற விரைவு ரயிலில் வள்ளியூரில் ஏறி நாங்குநேரி அருகே வந்த போது, அபாய சங்கிலியை பிடித்து காங்கிரஸ் தொண்டர் ஒருவர் நிறுத்தினார். இதனால் அரை மணி நேரம் ரயில் நின்றது. அபாய சங்கிலியை பிடித்து இழுத்த ராதாபுரம் வட்டார ராகுல் பேரவை தலைவர் ஜெயபாண்டியை, போலீசார் கைது செய்தனர்.
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்