புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Balaurushya
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
432 Posts - 48%
heezulia
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
29 Posts - 3%
prajai
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_lcapபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_voting_barபிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 07, 2023 7:55 pm

First topic message reminder :

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 QmCGLen

சென்னைக்கு பிரதமர் நரேந்திரமோடி நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணியளவில் வரும்போது 3 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.60 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

விமான நிலையத்தில் புதிய கட்டுமானங்களை சுற்றிப்பார்த்துவிட்டு வரும் பிரதமர் மோடி பல்லாவரத்தில் நடைபெறும் பிரமாண்ட விழா மேடையில் இருந்தபடி இந்த புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை 'பொத்தான்' அமுக்கி திறந்து வைக்கிறார்.

தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலையும் விழா மேடையில் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

மேலும் நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

மதுரையில் செட்டி குளம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.785) 4 வழிசாலை திட்டத்தையும் நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டத்தையும் போக்குவரத்துக்கு திறந்து வைக்கிறார்.

இதுதவிர திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) யான 4 வழிச் சாலை திட்டத்துக்கும் வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.2400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விழா மேடையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள், அடிக்கல் நாட்டும் திட்டங்கள் குறித்த குறும்படம் எல்.இ.டி.திரை மூலம் காண்பிக்கப்பட உள்ளது. விழா மேடையில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் எல்.முருகன், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் அமர இருக்கை போடப்படுகிறது.

மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்று பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆகியோர் பேசுகின்றனர்.

பிரதமர் பங்கேற்று பேசும் பல்லாவரம் அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் பொது மக்கள் அமர 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 3:58 pm

ரூ. 2,467 கோடியில் புதிய விமான முனையம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 Modi-chennai

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பிலும் தமிழக பா.ஜ.க சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதேப் போல அ.தி.மு.க முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். இதன் பின்னர் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 4:22 pm

பிரதமர் மோடி வருகையால் சென்னையில் விழாக்கோலம்- கலை நிகழ்ச்சிகள் நடத்தி பா.ஜனதா உற்சாகம்


சென்னை விமான நிலையத்தில் ரூ.2467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதைதொடர்ந்து ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்த பிரதமர் அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைத்தார்.

இதன்பிறகு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை சென்றடைகிறார்.

அங்கு ராமகிருஷ்ணா மடம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மாலையில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். அங்கு பல்வேறு ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

ஒரேநாளில் சென்னையில் 4 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் இன்று இரவு மைசூர் சென்று தங்குகிறார். நாளை அவர் நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று சுற்றி பார்க்கிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னை மாநகர் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னை வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், மெரினா விவேகானந்தர் இல்லம், பல்லாவரம் மைதானம் ஆகிய 4 இடங்களிலும் தமிழக பா.ஜனதாவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி வருகையையொட்டி தமிழகத்தில் திருவிழாபோல் குதூகலம் கூடியிருப்பதாக தெரிவித்து உள்ளார். தமிழக மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டு உள்ள பிரதமரை வரவேற்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இன்று மதியம் முதலே பிரதமரை வரவேற்க பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்களின் அருகே திரண்டனர்.

சென்னை விமான நிலையம் அருகில் சுமார் 25 ஆயிரம் பேர் திரண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த இடம் திருவிழாகோலம் பூண்டிருந்தது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தாரை தப்பட்டை முழங்க பிரதமரை வரவேற்கும் வகையில் பா.ஜனதாவினர் விண்ணதிர வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினார்கள்.

இதேபோன்று நேப்பியர் பாலம் அருகில் உள்ள சிவானந்தா சாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட இடங்களிலும் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகிலும் வழிநெடுக திரண்ட பா.ஜனதாவினர் சாலையின் இருபுறமும் நின்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் கைகளில் பதாகைகளையும் ஏந்தி இருந்தனர். ஜி.20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது உள்ளிட்ட மத்திய அரசின் சாதனைகளை விவரிக்கும் வகையில் நீளமான பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

சென்னை மாநகர் முழுவதுமே விழாக்கோலம் கொண்டு இருந்தது. பாரதிய ஜனதா கட்சியினர் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டனர்.

சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 22 ஆயிரம் போலீசார் மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 4:29 pm

சென்னையில் பிரதமர் மோடிக்கு ‘காந்தியின் தமிழக வருகை’ குறித்த புத்தகம் பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்


பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 972675

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின், ‘காந்தி இன் தமிழ்நாடு’ (Gandhi Travel in TamilNadu) என்ற புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார். அது, காந்தியின் தமிழக வருகை குறித்த புத்தகம் ஆகும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகை தந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமருக்கு புத்தகம் பரிசு: சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புத்தகம் பரிசளித்து வரவேற்றார். 'Gandhi's Travel in TamilNadu' என்ற புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் வழங்கி வரவேற்றார்.

மக்களைப் பார்த்து கையசைத்த பிரதமர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் வந்த பிரதமர் மோடி மக்களைப் பார்த்து கையசைத்தார். விமான நிலையப் பகுதிகளில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி காரில் இருந்தபடி பார்வையிட்டார்.

புகைப்படக் காட்சியை பார்வையிட்டார்:

புதிய விமான நிலைய முனையத்தில் வைக்கப்பட்டிருந்து புகைப்பட காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும், புதிய முனையத்தில் இருக்கின்ற பல்வேறு வசதிகளையும் பிரதமர் பார்வையிட்டார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பிரதமருக்கு விளக்கினார்.

முதல்வருடன் கைக்குலுக்கி பாராட்டு:

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, புதிய முனையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். அப்போது, உடன் இருந்த முதல்வர் ஸ்டாலினுடன் கைக்குலுக்கி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 4:44 pm

சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 972678

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் விமானப்படை தளம் வந்தார். அங்கிருந்த சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை - கோயம்புத்தூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுவாகும். இந்தியாவில் இயக்கப்படும் 12-வது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

இதனைத் தொடர்ந்து, தாம்பரம் - செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதைத் தவிர்த்து, திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை கோவை, திருவாரூர், நாகப்பட்டிணம் பயணிகளுக்கு பயனளிக்கும் என்ற ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில் பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் ரூ.294 கோடியில் நிறைவடைந்துள்ளது. நாகை மாவட்டம் அகஸ்தியம் பள்ளியில் இருந்து உப்பு ஏற்றிச் செல்ல இது உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 08, 2023 6:04 pm

விளக்கமாக உள்ளது.

நேரலையில் பார்த்தேன்.

அண்ணாமலையை காணவில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 1:58 am

பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த 8 கோரிக்கைகள்


சென்னை அடுத்துள்ள பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்ட பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், இந்தியாவில் மத்திய அரசு, மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றித் தரும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் வளம் பெறும்.

கடும் நிதி நெருக்கடியிலும் தி.மு.க. அரசு சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு இந்த ஆண்டு ரூ.44,365 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள ரூ.2,423 கோடி மதிப்பிலான 2 சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.1,277 கோடி மதிப்பீட்டிலான 2 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழகத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்காக, சென்னை - மதுரவாயல் உயர்மட்டச் சாலை, சென்னை- தாம்பரம் உயர்மட்டச் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலை ஆக்குதல், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் நெடுஞ்சாலையையும், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழித்தடமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்கள் விரைவுபடுத்தவேண்டும்.

பிரதமர் தொடங்கி வைத்துள்ள 'வந்தே பாரத்' ரயில் தமிழகத்தின் மேற்குப் பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அதுபோல், சென்னையிலிருந்து மதுரைக்கும் 'வந்தே பாரத்' ரயில் இயக்கவேண்டும். அதன் டிக்கெட் கட்டணத்தை அனைவரும் பயணம் செய்யும் வகையில் குறைக்கவேண்டும்.

தமிழகத்திற்கு பல ஆண்டுகளாக இரயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குப் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அந்தத் திட்டங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலே உள்ளது. எனவே தமிழகத்திற்கு புதிய இரயில்வே திட்டங்களை அறிவிப்பதோடு, ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

தமிழகத்தில் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு, பரந்தூரில் புதிய நவீன விமான நிலையம் அமைக்க உள்ளோம். அதுபோலவே, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய ரூ.1,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் பங்கினை வழங்கும் ஒப்புதல் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.9,000 கோடி செலவில் கோவையிலும், 8,500 கோடி ரூபாய் செலவில் மதுரையிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தரவேண்டும்.

மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் உள்ளது. எனவே, மாநிலங்களின் திட்டங்களை நிறைவேற்ற, நிதித் தேவைகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும்.

பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்து இருப்பார் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 2:02 am

T.N.Balasubramanian wrote:விளக்கமாக உள்ளது.

நேரலையில் பார்த்தேன்.

அண்ணாமலையை காணவில்லை.


கர்நாடக தேர்தல் பணியில் இருப்பதால் வர இயலவில்லை எனக் கூறியுள்ளார்கள். அண்ணாமலை அகில இந்திய அளவில் பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். இப்பொழுது இந்தியும் கற்று வருகிறார். இனிமேல் எங்கு தேர்தல் என்றாலும் அங்கு அண்ணாமலையின் செயல்பாடு பாஜகவிற்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 4:07 pm

வனத்துறை சீருடையில் கலக்கல்; யானைகளுக்கு கரும்பு வழங்கினார் பிரதமர் மோடி


பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 Gallerye_143016837_3289109.jpg?w=640&dpr=1

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். இங்குள்ள வன பகுதிக்குள் வனத்துறையினர் பிரத்யேக ஜீப்பில் பிரதமர் மோடியை அழைத்து சென்றனர்.

பிரதமர் வனத்துறையினர் உடுத்தும் பச்சை மற்றும் காக்கி வண்ணம் கலந்த சீருடையை அணிந்து சென்றார். மேலும் தொப்பி, ஒரு ஜாக்கெட் கையில் வைத்திருந்தார்.

யானை முகாமுக்கு சென்றார்


பந்திப்பூர் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரதமர் முதுமலை சென்றார். தொடர்ந்து பிரதமர், காலை 10.25 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, யானை உணவகத்தை பார்வையிட்ட அவர், இரண்டு யானை பாகன்ளை சந்தித்து பேசினார். 72 வயதான பாமா என்ற யானை மற்றும் குட்டி யானை பொம்மிக்கு கரும்பு கொடுத்ததுடன், நடந்து சென்று வளர்ப்பு யானைகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பின்னர், முதுமலையில் எடுக்கப்பட்டு, 'ஆஸ்கார்' விருது பெற்ற, 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவண படத்தில் இடம் பெற்ற, பாகன் பொம்மன் - பெல்லி தம்பதிகளை சந்தித்து பேசினார்.

தெப்பக்காட்டில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, அங்கிருந்து மசினகுடி சென்று, ஹெலிகாப்டர் மூலம், மைசூர் சென்று, அங்கு, நடைபெறும் நாட்டின் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் பொன்விழாவில் பங்கேற்கும் பிரதமர், மைசூரில் இருந்து சிறப்பு விமான மூலம் டில்லி செல்கிறார்.

பாகன்களிடம் விசாரிப்பு


முதுமலையில் யானை பாகன்கள் தேவராஜ் , சுகுமாறன் ஆகிய இருவரிடமும் யானைகள் குறித்து விசாரித்தார். தொடர்ந்து உங்களுக்கு ஏதும் குறைகள் உள்ளனவா என்றும் கேட்டார். பின்னர் முதுமலையில் இருந்து மைசூரு கிளம்பும் போது மோடி , மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 09, 2023 4:08 pm

கடைக்கோடி பூத் உறுப்பினரை பாராட்டி செல்பி எடுத்த பிரதமர் மோடி: பா.ஜ., தொண்டர்கள் நெகிழ்ச்சி


பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi - Page 2 Tamil_News_large_3289154.jpg?w=640&dpr=1

சென்னை: சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஈரோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மணிகண்டன் என்ற பாஜ., பூத் கமிட்டி உறுப்பினருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

அதனை, 'சிறப்பு செல்பி' எனக்குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட அது வைரலாகியது. கடைக்கோடி பூத் உறுப்பினரை பாராட்டி அவருடன் பிரதமர் செல்பி எடுத்து கொண்டதாக, தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்.

மோடி, தனது சமூக வலைதளபக்கத்தில், செல்பி எடுத்த புகைப்படங்களுடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒரு சிறப்பு செல்பி...


சென்னையில் மணிகண்டனை சந்தித்தேன். அவர், ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க தமிழக பா.ஜ., கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார். மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால், அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பா.ஜ.,வுக்குக் கொடுக்கிறார்.

மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதை பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி கூறியுள்ளார்.

இதனை பார்த்து சமூக வலைதளவாசிகள் பிரதமரை பாராட்டியும், புகழ்ந்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக