ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Fri Apr 07, 2023 7:55 pm

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi QmCGLen

சென்னைக்கு பிரதமர் நரேந்திரமோடி நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணியளவில் வரும்போது 3 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.60 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

விமான நிலையத்தில் புதிய கட்டுமானங்களை சுற்றிப்பார்த்துவிட்டு வரும் பிரதமர் மோடி பல்லாவரத்தில் நடைபெறும் பிரமாண்ட விழா மேடையில் இருந்தபடி இந்த புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை 'பொத்தான்' அமுக்கி திறந்து வைக்கிறார்.

தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலையும் விழா மேடையில் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

மேலும் நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

மதுரையில் செட்டி குளம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.785) 4 வழிசாலை திட்டத்தையும் நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டத்தையும் போக்குவரத்துக்கு திறந்து வைக்கிறார்.

இதுதவிர திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) யான 4 வழிச் சாலை திட்டத்துக்கும் வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.2400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

விழா மேடையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள், அடிக்கல் நாட்டும் திட்டங்கள் குறித்த குறும்படம் எல்.இ.டி.திரை மூலம் காண்பிக்கப்பட உள்ளது. விழா மேடையில் பிரதமருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் எல்.முருகன், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் அமர இருக்கை போடப்படுகிறது.

மத்திய மந்திரி எல்.முருகன் வரவேற்று பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் ஆகியோர் பேசுகின்றனர்.

பிரதமர் பங்கேற்று பேசும் பல்லாவரம் அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் பொது மக்கள் அமர 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Last edited by சிவா on Fri Apr 07, 2023 8:00 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Fri Apr 07, 2023 7:57 pm

பிரதமரின் சென்னை வருகை- முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்


சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி சென்னையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

பிரதமரின் சென்னை வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் தொடர்பாக பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணிவரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது.

பிரதமர் விவேகானந்தர் இல்லத்திற்கு வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ்ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்.

போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்று பாதையானது மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும்.

மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 2 மணி முதல இரவு 8 மணி வரை இடையிடையே திசைமாற்றம் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்படும்.

* அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்சு வளைவில் திருப்பி அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

* வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் NRT புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.

* ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

* கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தவெளி நோக்கி திருப்பிவிடப்படும்.

அதிக பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Fri Apr 07, 2023 7:57 pm

பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், பிரதமரை சந்திக்க முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னைக்கு நாளை மாலை வருகிறார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை மோடி திறந்துவைக்கிறார். இதனைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. அப்போது, சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.

மேலும், தாம்பரம்-செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையைத் மோடி தொடங்கி வைக்கிறார். ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதனிடையே, மயிலாப்பூர், ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும், மாலை 6 மணியளவில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில், நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.கவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தலைமைப் பதவியைக் குறிவைத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வந்தனர்.

இதில், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இதனிடையே, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். தற்போது, அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி மேலிடம் ஆசி இருந்தால்தான், தமிழகத்தில் தி.மு.கவை எதிர்கொள்ள முடியும், அ.தி.மு.க. தலைமையை முழுமையாக கைப்பற்ற முடியும் என்பதால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ.க. தயவை எதிர்நோக்கி உள்ளனர்.

மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சந்திக்கத் தனித்தனியே நேரம் கேட்டுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Sat Apr 08, 2023 1:02 am

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட தமிழக காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.



பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்பதும் சென்னை - கோவை வந்தே பாரத் நிகழ்ச்சியை தொடங்கும் அவர் வேறு பல சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக வர்ம் பிரதமர் மோடியை எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பதவியை இழக்க செய்து அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் என செல்வபெருந்தகை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Sat Apr 08, 2023 1:18 am



பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் விவரம்:



ஏப்.,08(சனி)


பிற்பகல் 1:35 : ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் சென்னை கிளம்புதல்

பிற்பகல் 2:45 : சென்னை விமான நிலையம் வருகை

பிற்பகல் 2:50 : சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக கிளம்புதல்

பிற்பகல் 2:55 : விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு வருகை

மாலை 3:00 - 3:15 : சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தல்

மாலை 3:20 : விமான நிலையத்தின் முனையத்தில் இருந்து கிளம்புதல்

மாலை 3:25 : சென்னை விமான நிலையம் வருகை

மாலை 3:30 : எம்ஐ-17 ஹெலிகாப்டரில் கிளம்புதல்

மாலை 3:50 : ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடுக்கு வந்தடைதல்

மாலை 3:55 : அடையாறில் இருந்து சாலை மார்க்கமாக கிளம்புதல்

மாலை 4:00 : சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைதல்

மாலை 4:00 - 4:20 : சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தல்

மாலை 4:25 : சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்புதல்

மாலை 4:40 : மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு வருகை

மாலை 4:45 - 5:45 : ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளுதல்

மாலை 5:45 : ராமகிருஷ்ண மடத்தில் இருந்து கிளம்புதல்

மாலை 5:55 : அடையாறு ஹெலிபேட் வருகை

மாலை 6:00 : அடையாறு ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்புதல்

மாலை 6:20 : சென்னை விமான நிலையம் வருகை

மாலை 6:25 : சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கிளம்புதல்

மாலை 6:30 : சென்னை அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை

மாலை 6:30- 7:30 : பல்வேறு அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்/ அடிக்கல் நாட்டுதல்

மாலை 7:35 : நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து கிளம்புதல்

மாலை 7:40 : சென்னை விமான நிலையத்திற்கு வருகை

மாலை 7:45 : சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் கிளம்புதல்

இரவு 8:40 : மைசூரு விமான நிலையம் வருகை

ஏப்.,09


காலை 9:35 : தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக கிளம்புதல்

காலை 9:40 : நீலகிரியில் உள்ள தெப்பக்காடு ஹெலிபேடுக்கு வருகை

காலை 9:45 : ஹெலிகாப்டர் மூலம் தெப்பக்காடு ஹெலிபேடில் இருந்து கிளம்புதல்

காலை 10:20 :மைசூரு பல்கலை வருகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Sat Apr 08, 2023 2:01 pm

தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி


சென்னையில், aaichnairportவிமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்.

தமிழ்நாட்டில் புதிய விமான நிலையம் முனையம் உள்படப் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க வருகை தர உள்ள பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

சென்னையில் ரூ.2.467 கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலைய முனையம் உள்படப் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவரின் வருகையையொட்டி 5 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் போலீஸார் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு வருகையையொட்டி பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு பயணம் குறித்துத் தமிழில் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் , “சென்னையில், விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையைத் துவக்கி வைத்து, பிறகு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்”. இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Sat Apr 08, 2023 2:26 pm

பிரதமர் மோடி வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: தமிழக மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பு


பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகையை ஒட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், 1.36 லட்சம் சதுர மீட்டரில் 1,260 கோடி ரூபாய் செலவில் சர்வதேச ஒருங்கிணைந்த முனையத்தின் புது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை, பிரதமர் மோடி இன்று மாலை 3:00 மணியளவில் துவங்கி வைக்கிறார். இதனால், விமான நிலையம் வரும் பயணியர், முன்கூட்டியே வருமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

'வந்தே பாரத்'


பின், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 'வந்தே பாரத்' விரைவு ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். இதனால், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியர்கள், இன்று மதியம் 2:00 மணி முதல் 6:00 மணி வரையில் அல்லிகுளம் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர்.

அதுபோல், சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. குறிப்பாக, நடைமேடை 4, 6க்கு நேரடியாக செல்லும் நுழைவுகளில் அனுமதிக்கப்படாது. விரைவு ரயில்கள் ஏற்கனவே இருக்கும் கால அட்டவணைப்படி வழக்கம் போல் இயக்கப்படும். அதேபோல காமராஜர் சாலையில், விவேகானந்தர் இல்லத்தில், ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மெரினா செல்ல தடை


பிரதமர் மோடி குறித்து அவதுாறு பேசியதாக, காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இதை கண்டித்து, காங்கிரசார் நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காமராஜர் சாலை, விவேகானந்தர் மடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரைக்கு போலீசார் 'சீல்' வைக்க முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே, பிரதமர் வருகையால், மெரினா கடற்கரையில், கண்ணகி சிலை - நொச்சிகுப்பம் வரை, இன்று மாலை, 7:00 மணி வரை மீனவர்கள் யாரும் படகுகள் வாயிலாக மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து மாற்றம்


சென்னை மாநகர போக்குவரத்து போலீசார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஐ.என்.எஸ்., அடையார் விமான படை தளத்தில் இருந்து, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும், இன்று மாலை 3:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு உள்ளது.

பிரதமர், மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது, காந்தி சிலை அருகே, கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள், ஆர்.கே.சாலைக்கு திருப்பி விடப்படும்.

அங்கிருந்து நடேசன் சாலை சிக்னலில் ஐஸ் ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சிக்னல் வழியாக செல்லும் வாகனங்கள், தொழிலாளர் சிலை அல்லது அண்ணா சாலைக்கு வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

போர் நினைவு சின்னத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள், தொழிலாளர் சிலையில் இருந்து, வாலாஜா சாலையில், அண்ணா சாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சிக்னலில் திருப்பி விடப்படும்.

வணிக வாகனங்கள், மதியம் 2:00ல் இருந்து, இரவு 8:00 மணி வரை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா ஆர்ச்சில் இருந்து, முத்துசாமி பாலம் வரை, இரு திசைகளிலும் செல்ல அனுமதி இல்லை.

கீழ்ப்பாக்கம் ஹன்டர்ஸ் சாலையில் இருந்து செல்லும் வணிக வாகனங்கள், ஹன்டர்ஸ் சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி, அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பி விடப்படும். கீழ்ப்பாக்கம் லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து, காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்ல உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

அடையாறு கிரீன்வேஸ் சாலையில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள், மந்தைவெளி நோக்கி திருப்பி விடப்படும் ராயபுரம், என்.ஆர்.டி., புதிய பாலத்தில் இருந்து செல்லும் வாகனங்கள், ஸ்டான்லி சுற்று, மின்ட் சிக்னல், மூலகொத்தளம் சிக்னல், பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, காமராஜர் சாலையில், தொழிலாளர் சிலையில் இருந்து, விவேகானந்தர் இல்லம் வரை கூடுதல் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

போலீசாரின் செய்திக்குறிப்பு: பல்லாவரத்தில் இருந்து விமானம் நிலையம், கிண்டி மார்க்கமான வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Sat Apr 08, 2023 2:28 pm

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Gallerye_09033166_3288274

ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், திருநீர்மலை மேம்பாலம் ஏறி, 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக, வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னை நகருக்குள் செல்லலாம்

ஜி.எஸ்.டி., சாலை பெருங்களத்துாரில் இருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள், தாம்பரம் மேம்பாலம் வழியாக வலது புறம் திருப்பி விடப்படுகின்றன. கிஷ்கிந்தா சாலையில் இருந்து, தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்


பல்லாவரத்தில் இருந்து விமானம் நிலையம், கிண்டி மார்க்கமான வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், திருநீர்மலை மேம்பாலம் ஏறி, 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக, வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாகவோ சென்னை நகருக்குள் செல்லலாம்.

ஜி.எஸ்.டி., சாலை பெருங்களத்துாரில் இருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள், தாம்பரம் மேம்பாலம் வழியாக வலது புறம் திருப்பி விடப்படுகின்றன. கிஷ்கிந்தா சாலையில் இருந்து, தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Sat Apr 08, 2023 3:14 pm

வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் தெலுங்கானா அரசு; பிரதமர் மோடி தாக்கு


தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளுக்கு, சந்திரசேகர ராவ் தலைமையிலான மாநில அரசு தடையாக உள்ளதாகவும், ஒத்துழைப்பு வழங்குவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தெலுங்கானா சென்ற பிரதமர் மோடி, செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு நலத்திட்டங்களை துவக்கி வைத்து பேசியதாவது: வளர்ச்சிதிட்டங்களின் பலன்களை தெலுங்கானா அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், சிலர் தடுக்கின்றனர். மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அங்கு ஆளும் அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆனால், தெலுங்கானாவில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. உள்கட்டமைப்பு பணிகள் தாமதமாகின்றன. நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்ற கொள்கையை பின்பற்றி சந்திரசேகர ராவ் அரசு பணியாற்றி வருகிறது. குடும்ப அரசியலும், ஊழலும் வேறு வேறு இல்லை. குடும்ப அரசியல் இருக்கும் இடத்தில் வாரிசு அரசியல் இருக்கும்.

பா.ஜ., வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறது. இதற்காக பாடுபடுகிறது. சமீபத்தில், எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அக்கட்சி தலைவர்கள் பீதியடைந்துள்ளனர். அவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளதால், அச்சத்துடன் செயல்படுகின்றனர். அவர்கள் நிம்மதியை இழந்து தவிக்கின்றனர். ஊழலும், வாரிசு அரசியலும் கைகோர்த்தபடி நடக்கின்றன. ஊழல்வாதிகள், நலத்திட்டங்களை தடுக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் மற்றும் ஊழலை மட்டுமே ஆதரிக்கின்றன. இதனை எதிர்த்து போராட உறுதிபூண்டுள்ளோம். ஊழலுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட மக்கள் முன்வர வேண்டும். ஊழல் மற்றும் அதிகாரப்பசியில் உள்ளவர்கள் ஏழைகளுக்கான திட்டங்களை நிறுத்துகின்றனர். இவ்வாறு மோடி பேசினார்.

புறக்கணிப்பு


தெலுங்கானாவில், அரசு நலத்திட்ட துவக்க விழாவில் கலந்து கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், விழாவை அவர் புறக்கணித்தார். விமான நிலையத்திற்கு சென்று, பிரதமரரையும் அவர் வரவேற்கவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by சிவா Sat Apr 08, 2023 3:18 pm

சென்னை வந்தார் பிரதமர் மோடி: முதல்வர், ஆளுநர் வரவேற்பு


பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi 972668

சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றனர்.

பிரதமர் மோடி இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு வருகை தந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பிரதமரை வரவேற்பதற்காக தமிழக அமைச்சர்கள், திமுக எம்பி கனிமொழி, பாஜக முக்கிய நிர்வாகிகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

பிற்பகல் 3.25 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்று, மாலை 4 மணிக்கு சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi Empty Re: பிரதமர் மோடியின் தமிழக வருகை - Vanakkam_modi

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum