புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
89 Posts - 38%
heezulia
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
340 Posts - 48%
heezulia
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
24 Posts - 3%
prajai
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
manikavi
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 செல்லா - சிறுகதை Poll_c10 செல்லா - சிறுகதை Poll_m10 செல்லா - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்லா - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 25, 2023 9:51 pm


 செல்லா - சிறுகதை ZA8kOty

தகதகத்து எரியும் சிதையையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் செல்லா.அன்னைக்கென்னவோ மேலக் காத்து சுத்தி தூக்கியாட்டுச்சு. காத்து அடிக்க அடிக்க சிதையோட தீயும் அதுக்குத் தக்கபடி கழைக்கூத்தாடிங்க மாதிரி மேலேயும் கீழேயும் பக்கவாட்டுலயுமா ஆடிக்கிட்டு இருந்துச்சு.

கையில இருக்கற நீட்டக் கம்ப ஊனிக்கிட்டே வானத்த அண்ணாந்து பாத்தா.கறுப்புச் சாயத்த ஊத்துன மாதிரி கன்னங்கரேல்னு கெடந்துச்சு. அங்கங்கே கண்ணாடிச் சில்லுகள கொட்டி வச்சாப்படி நட்சத்திரம் மினுக்கிட்டுருந்துச்சு.

ஒரு பக்கமா இருந்த நட்சத்திரக் கூட்டத்தப் பார்த்தவளுக்கு, முண்டாசு கட்டிட்டு முறுக்கு மீசையோட அவங்க குலதெய்வம் கருப்பண சாமி நிக்கற‌ மாதிரியே இருந்துச்சு.ஊஹூம், இது கருப்பணசாமி இல்ல. அவங்க அப்பன் ராசப்பனாட்ட இல்ல இருக்குன்னு நெனைச்சுக்கிட்டா. அவனுக்கும் நல்ல முறுக்கு மீச‌. அவனும் படுக்கப் போற வரைக்கும் துண்டு முண்டாசக் கட்டிட்டேதான் திரிவான். படுக்கறப்பகூட அத கலைக்காம பக்கத்துல வச்சுக்கிட்டேதான் தூங்குவான்.

பக்கத்துல எரிஞ்சுகிட்டு இருந்த சிதையிலிருந்து சட்டுன்னு எழுந்திருச்சுது அந்த உருவம். எரிஞ்சுக்கிட்டே கை கால வேற நீட்டுது. தங் கையிலிருந்த தடியாலேயே, ``செத்தும் கொழுப்பு அடங்கல பாரு’’ன்னு ஓங்கி மண்டைலயே ஒண்ணு போட்டு, தடிய அது மேலயே வச்சு அமுக்கிப் பிடிச்சுக்கிட்டா. அப்படியே அடங்கிப்போயி, மறுபடியும் உக்கிரமா எரிய ஆரம்பிச்சது. சிரிச்சுக்கிட்டே தடிய வெலக்கிட்டா.

அன்னைக்கு எட்டு மணிக்குத்தான் கொண்டாந்தாங்க. ஆறு மணிக்கு மேல பெருந்துறை மின் மயானத்துல எரிக்க மாட்டாங்கன்னு இங்க எடுத்தாந்தாங்க.இப்பல்லாம் முன்ன மாதிரி அவ்வளவா யாரும் கொண்டாறதில்ல. எப்பவாச்சும் ஒண்ணு ரெண்டு வருது. இன்னைக்குக் கொண்டாந்ததுக்கு முப்பது வயசுகூட இருக்காது. ஆம்பள. பாத்தவளுக்கு நெஞ்சுக்குள்ள துயரம் முட்டுச்சு. `வெட்டியாள்' வேலைக்கு வந்து எத்தனையோ எரிச்சிருந்தாலும் இளவயசுப் பசங்க, குழந்தைகளைக் கொண்டாந்தாங்கன்னா அவளையும் அறியாம கண்ணுல தண்ணி துளிக்கும்.

தற்கொல பண்ணிச் செத்துப்போயி ரெண்டு நாள் ஆகுது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் கூறு போட்டு அன்னைக்கு ஏழு மணிக்குத்தான் வந்து சேர்ந்திருக்கு. ``பாவம்... மனசுல எத்தன ஆசையோட போச்சோ..?’’ன்னு முனகிட்டா. எரிக்கிற‌ மேடைக்கு முன்னாடி மட்டும் பளிச்சுன்னு ஒரு டியூப் லைட் போட்டிருந்தாங்க. அடிக்கிற அனல்ல அதோட ஒளிகூட மங்கலாத்தான் தெரிஞ்சுச்சு.

மொதல்ல எல்லாம் ரொம்ப பயந்துக்குவா. அவ பொறந்தவுடனேயே அவங்க அம்மாக்காரி மேல போயிட்டா. ராசப்பன்தான் சுடுகாட்டு மண்ணுலேயே அவள வளத்தினான். பகலா இருந்தா அவளையும் பக்கத்துல வச்சுக்கிட்டேதான் எரிப்பான். எரிஞ்சுட்டுருக்கற பொணம் எந்திரிச்சு நிக்கறதப் பாத்து அவளுக்கு கொலயெல்லாம் நடுங்கும். ``பயப்படாத புள்ள... ஒண்ணும் இல்ல. உள்ள இருக்கற நாடி நரம்பெல்லாம் எரியறப்ப வெறச்சுக்கும். அதுதான் எந்திரிக்கற மாதிரி தெரியுது.’’

``ஏ அப்பு... இது பேயில்லையா?’’ன்னு இவ கேக்கற கேள்விக்கு ``ஹா ஹா’’ன்னு பெரிசா சிரிச்சுகிட்டே சொல்லுவான். நல்ல ஆகிருதியான கருத்த உருவத்தோட அவன் சிரிக்கறதப் பாக்கறவங்க அவனத்தான் பேயின்னு நெனச்சு பயந்துருவாங்க. ``பேயாவது ஒண்ணாவது. மனுஷ மனசுக்குள்ளாற இருக்கற பொறாம, பொச்சரிப்புக்கு மேலயா ஒரு பேயி இருக்கும்..?’’

``இன்னிக்கு மத்தியானம் கொண்டாந்துட்டு சடங்கெல்லாம் பண்ணிட்டு சண்ட போட்டு அடிச்சுக்கிட்டாங்களே... யாருன்னு நெனக்க? ஊர்ல பெருந்தனக்காரர் பொண்டாட்டி. நெஞ்சுவலில நின்னது நிக்கப் போயிருச்சு. தகனம் பண்ணக் கொண்டாந்துட்டு அம்மாக்காரி கையில போட்டிருக்கற வைர மோதிரத்துக்கு அண்ணனும் தம்பியுமா எனக்கு உனக்குன்னு அப்புடி அடிச்சுக்கிட்டாங்க. கூட வந்தவங்க வெலக்கலேன்னா வெட்டுக் குத்து வரைக்கும் போயிருப்பானுக. இந்த மாதிரி ஆளுகளுக்கு மேலதானா கொடூரமா ஒரு பேய் இருக்கப் போகுது... போம்மா’’ன்னு சிரிச்சுகிட்டே சொன்னான். ``கண்ணு... மத்தவங்களுக்கு வேணா இது செத்தவங்கள எரிக்கற எடமாத் தெரியலாம். ஆனா எம் மனசுக்கு அந்த சிவன் சாமியோட கோவிலாட்டத்தான் நெனப்பேன். பாரு இந்த எரிக்கற எடம் மட்டுமா, சுத்திக் கெடக்கற அத்தன மண்ணுமே அந்த ஈசனோட நெத்திக்கண்ணு மாதிரி தணலா சுடறதாத்தான் எனக்குத் தோணும்...’’

சடபுடன்னு சத்தங் கேட்டு தன்னுணர்வுக்கு வந்தா. பொணம் எரிஞ்சு கங்கோட தகதகன்னுது. `இன்னிக்கு வேல அவ்வளவுதான், காலைல வந்து கிளறிவுட்டு எலும்பப் பொறுக்கிக்கலாம்’ன்னு ஒரு ஓரமா ஒடச்சுப் போட்ட சட்டி, கழட்டிப் போட்ட பூமால எல்லாத்தயும் ஒதுக்கிட்டே மனசுக்குள்ளாரவே பேசிக்கிட்டா. தடிய ஓரமா சாச்சு வச்சுட்டு நடக்க ஆரம்பிச்சா.

கறுப்புத் துப்பட்டிய எடுத்துப் போத்திக்கிட்டு கையில பெரிய டார்ச்லைட்ட எடுத்துகிட்டா.ரெண்டுமே ராசப்பனோடது. ரெண்டு பக்கமும் கரடுமுரடா குண்டுகுழியுமாக் கெடந்தாலும், தகனமேடை வர்ற பாத மட்டும் மனுசங்க நடக்கறதனால புல்பூண்டெல்லாம் மொளைக்காம பளிச்சுன்னு கெடக்கும். டார்ச்லைட்டோட வட்ட ஒளியில நடந்தவ மனசுல மறுபடியும் ராசப்பன் நெனப்பு. ``ஏ புள்ள, நானுஞ் செரி, எங்கப்பன், பாட்டன்னு எல்லாம் இந்த வெட்டியான் வேலதான். இதுல ஒண்ணும் கொறைவு இல்ல. ஆனாக்கா இப்பவே எல்லாரும் கரண்டுலதான் கொண்டு போய் போடறாங்க. சடங்கு, சம்பிரதாயமெல்லாம் பண்ணினா எதோ நாலு காசு கெடைக்கும். எல்லாங் கொஞ்சம் கொஞ்சமா அருகிட்டு வருது. நீயாவது ரெண்டு எழுத்து படி புள்ள’’ன்னு பள்ளிக்கொடத்துல சேர்த்து வுட்டான்.

பள்ளிக்கொடம் மேலும் கீழும் பார்த்தாலும், சேர்த்துகிச்சு. மூணாவது படிக்கிற வயசுல ஒண்ணாவது சேர்த்துகிட்டாங்க. என்னதான் நல்ல சொக்காயும் பாவாடையும் போட்டுக்கிட்டுப் போனாலும், வாத்தியார்லேர்ந்து கூடப்படிக்கிற புள்ளைங்க வரை, எல்லாம் என்னமோ புதுசா வந்துருக்க‌ மிருகத்த பாக்கற மாதிரிதான் பார்த்தாங்க. அதுவும் கிட்ட போனாலே ``பொண நாத்தம் நாறுதிடி. தீஞ்ச வாசம் வருதுடி’’ன்னு கேலி பண்ணவே... ``நா இங்கேயே கெடக்கேனப்பு. இஸ்கூலுக்குப் போகலை’’ன்னு அழவே, ராசப்பனும் சரின்னு வுட்டுட்டான்.

அவ வயசுக்கு வந்தப்புறம்தான் ஊர்லேர்ந்து நாதியத்து கஞ்சிக்கு அல்லாடிட்டு இருந்த கெழவி ஒருத்திய கூட்டிட்டு வந்து தங்க வச்சான்.அவளும் வந்த ரெண்டு நாளுலேயே, ``ராவெல்லாம் யாரோ கூப்பிடாறப்புடி இருக்கு’’ன்னு ஓடிப் போயிட்டா. பொறவு ``யாரும் வேண்டாம் அப்பு. நீதான சொல்லுவ, சிவன் பூமின்னு. அவனுக்கு மேல யாரு காவல்’’னு அவ சொல்லவே, வுட்டுட்டான்.

அப்புறமும் ``கண்ணு... எனக்குப் பொறவு உனக்குன்னு யாரும் வேண்டாமா’’ன்னு ரெண்டு மூணு மாப்புளய பாத்தான். எல்லாருமே ஒண்ணக் கண்டாப்டி இவங்க செய்யற வேலயச் சொல்லி ``ஏ... ராசப்பா, உனக்கெதுக்குடா ஊரு மாப்பிள. உன்னையாட்டமே பொணம் எரிக்கறவனுக்குக் கட்டிக் குடு போ’’ன்னு சொல்லவே, மனசுக்குள்ள மறுகிட்டு கெடந்தவங்கிட்ட, ``ஏ அப்பு வெசனப்படற, எனக்குண்டு இனி இன்னொருத்தன் பொறக்கப்போறானா... அதது நடக்கற காலத்துல நடக்கும்’’ன்னு அவ தேத்தினா.

செல்லாவுக்கு கலியாணத்துல எல்லாம் விருப்பமே வரல. கடேசி வரைக்கும் அப்பங் கூடவே கூழோ கஞ்சியோ குடிச்சுட்டுக் கெடந்திருலாம்னுதான் நெனச்சா. அதுவுல்லாம பள்ளிக்கொடம் போன அனுபவத்துல ``ஆமா, வர்றவனும் மோந்து பாத்துட்டு பொண நாத்தமடிக்குதுன்னு சொல்லவா’’ன்னு மனசுக்குள்ள மொனகிக்குவா. ஆனா என்னமோ இந்தக் கவலையே அரிச்சிருச்சோ என்னவோ, ஒரு நா மத்தியானம் கம்பங்கஞ்சியக் குடிச்சுட்டுப் படுத்தவன் எந்திருக்கவே இல்ல. என்ன அழுதாலும் `போனவங்க வர மாட்டாங்க’ன்னு பொறந்ததுலேர்ந்து சுடுகாட்டிலேயே கெடக்கற அவளுக்குத் தெரியாதா?! கடசிச் சடங்கு பண்ணி நல்லபடியா ராசப்பன அனுப்பி வச்சா.

ராசப்பனோட எடத்துக்கு வெட்டியான் வேலைக்கு யாருமே அவுங்க சாதிசனத்துல ஒத்துக்க மாட்டேனுட்டாங்க. பஞ்சாயத்துல ``வேற வழியில்ல. எதோ கொஞ்சம் காசக் கொடுத்து ராசப்பம் புள்ளய வெளில அனுப்பிட்டு மயானத்தப் பூட்டிரலாம்’’ன்னு முடிவு பண்ணினாங்க. அவங்க முடிவக் கேட்ட செல்லா, ``பொறந்ததுலேர்ந்து பாத்து வளந்த தொழிலு, செத்தவங்கள சொந்தக்காரங்களே அருவருப்பாதான் தொடறாங்க. ஆனா நாங்க சாமியாட்டம் நெனச்சு சடங்கு செஞ்சி நல்லபடியா அனுப்பி வைக்கிறத புண்ணியமா நெனக்கிறோம். அப்பம் போனா என்னய்யா. சாக மட்டும் நா செய்யறேன்’’ன்னு சொன்னா.

`பொட்டப்புள்ளயா இருக்கறவள பொணம் எரிக்க வுடறது’ன்னு மொதல்ல தயங்குனாங்க. ஊர்ல இருக்கற கெழங்கட்டைங்க, ``நாங்க செத்தா மயானத்துலதான் எரிக்கணும். கரண்டுல வக்கக் கூடாது’’ன்னு பொலம்பறத மனசுல வச்சு, வேற வழியில்லாம கடசில அவள `ஊர் வெட்டியாள்’ன்னு ஏத்துக்கிச்சு.

ஆனா சுடுகாட்டுல இருக்கற குடிசைல தங்க வேண்டாம்னு, ஊருக்குள்ளே ஒரு வீட்டையும் ஒதுங்கிக் கொடுத்தாங்க. அதோட எட்டு மணிக்கு மேல யாரும் எரிக்கப்போக்கூடாதுன்னு உத்தரவும் போட்டாங்க. மொதல்ல ராசப்பங் காலத்துல படி அரிசியும் இருபத்துஞ்சு ரூபாயும் கொடுத்த மாதிரி இல்லாம ஒரு பொணத்துக்கு ஐந்நூறு கொடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுபோக பஞ்சாயத்துக்காரங்க மாசம் ரெண்டாயிரம் தர்றதா ஒத்துக்கிட்டாங்க. இருட்டாக் கெடந்த மயானத்துல நாலஞ்சு டியூப்லைட்டும் போட்டுக் குடுத்தாங்க. என்னதான் பஞ்சாயத்து சொன்னாலும், மின் மயானத்தில வைக்கக் காசில்லாம தூக்கிட்டு வர்ற ஏழைங்ககிட்ட, குடுக்கற காச வாங்கிக்குவா. அதேமாதிரி அனாதைப் பொணமா வர்றதுக்கும் இவளே கைக்காசு போட்டு, சடங்கெல்லாம் செஞ்சி தகனம் பண்ணி வைப்பா.

விசுக்குன்னு கால்ல ஒரு பெருச்சாளி உரசிட்டுப் போகவேதான் ``ஏ அப்பா...’’ன்னு நெனப்புலேர்ந்து நெசத்துக்கு வந்தா செல்லா. ``மணியாயிப்போச்சே, புள்ள தூங்கிருக்குமோ’’ன்னு நெனச்சுக்கிட்டே நடைய வெரசா எட்டிப் போட்டா.

இவ வேலய ஏத்துக்கிட்டப்புறம் ஒரு நா அந்தி சாயற பொழுதுல, வூட்டுக்குப் போலான்னு கெளம்புனா. லைட்டு எரிஞ்சாலும் சுத்தியும் ஒரு சத்தமுமில்ல. காத்துகூட அடிக்காம கமுக்கமா கெடந்தது. மசான அமைதின்னு சனங்க சொல்லிட்டுத் திரியுதுங்களே, அதுசரிதான் போலன்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டே நடந்துக்கிட்டிருந்தா. கருவேல மரந்தான் முள்ளுச்செடியாக் கொட்டிக் கெடக்கு. எலிதான் நெறயா ஓடிட்டுத் திரியும். விஷமுள்ள பாம்பு ஒண்ணும் அதிகமா கண்ணுக்குத் தெம்படாது. எப்பவாவது பச்சப்பாம்புதான் மூக்க நீட்டிட்டு நிக்கும்.

அப்பத்தான் லேசா எங்கியோ கொழந்த அழற மாதிரி சத்தங் கேட்டுது. பக்கத்துலேயே பொதைக்கிற இடுகாடும் இருந்தது. பெரும்பாலும் இயற்கையா செத்துப்போன கொழந்தைகள எரிக்கக் கொண்டு வர மாட்டாங்க. விபத்துல, இல்லைன்னா வேற மாதிரி செத்தாத்தான் கொண்டு வருவாங்க.

ஆனா அமாவாச நடுநிசிக்கு மந்திரவாதிங்க, கோடங்கிக்காரங்க பொதச்ச கொழந்தயத் தோண்டி எடுத்து, மூளையிலிருந்து அஞ்சன மை, வசிய மை தயாரிக்க திருடிக்கிட்டுப் போவாங்கன்னு ராசப்பன் விடிய விடிய டார்ச்லைட்டோட சுத்திகிட்டே இருப்பான்.அதுவும் தலைச்சன் புள்ளன்னா வுடவே மாட்டாங்கன்னு கண்ணுகொட்டாம காவக் காப்பான். இப்ப எங்க மந்திரவாதியும் கோடங்கிக்காரரரும்..? ரண்டு நாளு முன்னாடி கோடங்கிப் பாட்டன நடுரோட்டுல பாத்து விசாரிச்சப்ப, பேரன் வெளியூர்ல படிக்கப் போறான்னு சொல்றாரு. ``சந்தோஷமா இருக்கு பாட்டா’’ன்னு வாழ்த்திட்டு வந்தா.

மறுபடியும் லேசா அழற சத்தம் மாதிரியே கேட்டுச்சு. சுத்திப் பாத்தா ஒண்ணையும் காணல. சுத்துவட்டாரம் எல்லாத்துக்கும் அதான் சுடுகாடுங்கறதனால ராசப்பங் காலம் மாதிரி அஞ்சு ஆறுன்னு வரலைன்னாலும் தெனத்திக்கும் ஒண்ணாச்சும் வரும். அன்னைக்கென்னவோ எமனுக்கே அலுத்துப்போன மாதிரி தகனத்துக்கு ஒண்ணும் வரல்ல. கேட்டப் பூட்டலாம்னு தள்ளறா... சாத்துறதுக்கில்லாம என்னவோ தட்டுதேன்னு பார்த்தா, பொறந்த கைக்குழந்த ஈரங்காயாம கெடக்கு. எந்திரிச்சு உட்கார்ற பொணத்தப் பார்த்தே மிரளாதவளுக்கு திக்குன்னுச்சு. குனிஞ்சு கையில எடுக்கறா, `ஆம்பளப்புள்ள.’

``எந்தச் சிறுக்கி மவ இப்படிச் செஞ்சா?! முடியற இடத்துல தொடக்கத்தக் கொண்டாந்து போட்டுட்டு ஓடியிருக்கா’’ன்னு வைஞ்சுகிட்டே ஓட்டமா ஓடி, பஞ்சாயத்துக்காரர் வீட்டு வாசலத் தட்டினா. ஊரே கூடிப்போச்சு. ``சரி, ஒரு வாரம் வச்சுப் பாக்கலாம்’’னு முடிவு பண்ணினாலும், யார் வூட்ல பாலுக்கு அழுவுற சிசுவ வச்சுக்குவாங்க... கடசில செல்லாவே, ``என்ற வூட்லேயே இருக்கட்டும்’’னு சொல்லவும், எல்லாத்துக்கும் நிம்மதியாப்போச்சு.

ஒரு வாரங் கழிச்சும் யாருமே வல்லைன்னதும், பஞ்சாயத்து எதாவது அனாத ஆசிரமத்துல கொண்டு போயி வுடறதுன்னு முடிவு செஞ்சாங்க. என்னதான் ஒரு வாரமா புட்டிப்பாலக் கொடுத்து வளர்த்ததுனாலும் அதும் பேர்ல ஒரு பாசம் வந்துருச்சு செல்லாவுக்கு. பஞ்சாயத்துக்கிட்ட ``நானே வளக்குறேங்க’’ன்னு சொன்னா. ``சரி... வச்சுரு. ஆனா நாளையும் பின்ன யாராச்சும் வந்து கேட்டா உனக்குத்தான் கஷ்டம்’’னுட்டு விட்டுக்கொடுத்துருச்சு.

அன்னைலேர்ந்து தெனத்திக்கும், ``எம் புள்ளய எங்கிட்டு இருந்து பிரிச்சுராத சாமி’’ங்கறதுதான் செல்லாவோட வேண்டுதலாப் போச்சு.

தொழிலுக்கு வர்ற நேரத்துல கொழந்தய என்ன பண்ணுறதுன்னு தெகச்சப்ப வேலாயி உதவிக்கு வந்துச்சு. அதுக்கும் யாருமில்லை. எதோ ரண்டு மூணு கடையில மொற வாச பெருக்கி வயிறு வளர்த்துட்டு இருந்துச்சு.

கொழந்தைக்கு அவங்க அப்பன் ராசப்பன் நெனப்பா `ராசா’ன்னே பேர் வச்சா. அது நடந்தும் இப்ப ஒன்பது வருஷம் ஓடிப்போச்சு. தங்கமாத்தான் தாங்கி வளத்தறா. மொதல்ல எல்லாம் ராசாவும் ``அம்மா... அம்மா’’ன்னு அவளயேதான் சுத்திச் சுத்தி வருவான். ஆனா இப்பத்தான் சின்னதா ஒரு விலக்கம் வந்த மாதிரி மனசுக்குப் படுது. ``சேச்சே... புள்ள வளர்ந்துச்சு... பெரிய மனுஷத்தனம் கூடிப்போச்சு’’ன்னு பெருமையாத்தான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டே வீட்டுக்கிட்ட வந்துட்டா.

வீட்டுக்கு வந்தவ நேரா முன்னாடி இருக்கற குளிக்கிற ரூம்புக்குப் போயி தடார் தடார்னு தண்ணிய தலையோட ஊத்திக்கிட்டு, காலைலேயே எடுத்து வச்சிட்டுப் போயிருந்த உடுப்ப மாத்திட்டு, துன்னூற எடுத்து நெத்தில இட்டுக்கிட்டு தூங்கிட்டு இருந்த ராசாவோட தலைய நீவிக் கொடுக்கிறா‌. அவ கை ஈரம் பட்டவுனே லேசா நெளிஞ்சு மறுபடியும் போர்வைக்குள்ள சுருண்டுக்கறான்.

பக்கத்துலேயே பாயக்கூட விரிக்காம ஒரு தலகாணியப் போட்டுப் படுத்துக்கறா. இது அத்தனையுமே ராசா போர்வைலேர்ந்த ஓட்ட வழியா பார்த்துகிட்டேதான் படுத்திருந்தான்.

பக்கத்துல போய் படுக்கலாம்னு மனசுக்குள்ள நெனச்சவனுக்கு எங்கிருந்தோ அருவருப்பு வந்து அப்பிக்கிச்சு. ராசாவுக்கு தன்னோட தொழில் தெரியாமயேதான் வச்சிருந்தா செல்லா. எப்படியாச்சும் ஊர்க்காரங்க கால்ல வுழுந்தாவது தான் படிக்காத படிப்ப அவன படிக்க வச்சிடணும்னு உறுதி பண்ணிக்கிட்டா. அதுவும் கோடங்கிப்பாட்டன் பேரனப் பத்திச் சொன்னதக் கேட்டதிலிருந்து தம் புள்ளயையும் அதுமாதிரியே பெரிய படிப்புப் படிக்க வைக்கோணும்னு வைராக்கியமே பண்ணிக்கிட்டா.

உள்ளூர் பள்ளிக்கொடத்துல சேர்த்துனா தன்னைய மாதிரியே கிண்டல் பண்ணினா, புள்ள மனசு வீணாப் போயிருமேங்கற வெசனத்துல இவங்க சுடுகாட்டுக்குச் சேராத ஊர்ல கவர்மென்ட் இஸ்கூல்ல கொண்டுட்டுப் போய் சேர்த்தா. தன்னோட சைக்கிள்லேயே ராசாவக் கொண்டு போய் வுட்டுட்டு வருவா. சாயங்காலமா திரும்பி வர்றப்ப கூட்டிட்டு வர்றதுக்கு டீக்கடை கணேசன இருபத்து ஐஞ்சு ரூபா குடுத்து சேர்த்துருந்தா. அவ அப்படி கணேசன சேத்துனத்துக்குக் காரணமே அவனால பேச முடியாதுன்னுறதுதான். அவ வேலக்கி கெளம்பறப்பல்லாம் அழுதுட்டே, ‘‘எப்பமா வருவ... எங்க போறே’’ன்னு கேட்பான் ராசா.

``அம்மா நாலு வூட்ல பத்து பாத்திரம் தேய்க்கிறேண்டா கண்ணு. அதான்’’ன்னு சொல்லித் தேத்திருவா. ஆனா எது நடக்கக்கூடாதுன்னு நெனச்சாளோ அத ராசா ஒரு நா பாத்திட்டான். அவள தேடிட்டு வந்தவன் பந்து சுடுகாட்டுக்குள்ள விழவே, பயந்துட்டே போய் எடுக்கறப்ப, அவ பொணம் எரிக்கறதப் பாத்துட்டான். ``அம்மா இந்த வேலதான் செய்யறாளா?’’ன்னு அன்னைக்கு ஒட்டிட்ட அருவருப்புனாலதான் அவகிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சான். பாவம் செல்லா... வளர்ற புள்ள தனியாப் போகுதுன்னு பெருமையா நெனச்சுக்கிட்டா.

வெளையாடப் போறப்பெல்லாம் இவனையொத்த பசங்க சேத்துக்க மாட்டாங்க. ஆசையாயிருக்குதுன்னு கேட்டா, ``போடா... வந்துட்டான்...’’ன்னு எளக்காரம் பேசி வெரட்டி விட்டுருவாங்க. ஏன்னு கொழப்பமா இருந்தாலும் செல்லாகிட்டேயோ, வேலம்மா ஆயாகிட்டேயோ எதுவுமே கேட்டுக்க மாட்டான்.

அவனுக்கு செல்லா ஒரு `வெட்டியாள்’னு என்னிக்குத் தெரிஞ்சு போச்சோ, அன்னைலேர்ந்து அவனா மத்த பசங்ககூட சேர்றத நிறுத்திட்டான். செல்லாவ அம்மாங்கற பாசத்தோடு ஓடிப்போய் கட்டிக்கப் போறப்பவே, அவனோட கண்ணுல அவ பொணத்த எரிக்கறது படமா ஆடும். அவ்வளவுதான், பாசத்துக்குப் பதிலா பயமாயிரும். அப்படியே தள்ளிப் போயிருவான்.பள்ளிக்கொடத்துலேயும் கூடப் படிக்கிற பசங்களுக்கு விசயம் தெரிஞ்சுருமோன்னு கலவரப்பட்டுட்டே சிநேகிதக்காரப் பசங்ககிட்டகூட பேசாமயே கெடந்தான்.

அவங்கூட ரொம்ப சிநேகிதமா இருக்கற மணிகூட ``டேய் ராசா, எங்கப்பா கோயில்ல பூசாரியா இருக்காரு. உங்கப்பா என்ன பண்ணுறாரு’’ன்னு கேட்பான். ``எனக்கு அப்பா இல்லடா. அம்மா மட்டுந்தான்’’னு சொல்லிட்டு, என்ன வேலை பாக்குறான்னு சொல்லாம அலுங்காப்புடி பேச்ச மாத்திருவான்.

இந்த மாத்தமெல்லாம் செல்லாவோட கண்ணுல பட்டாலும், ``கூட வெளாடற புள்ளைங்ககிட்ட சண்ட போட்டுக்கிட்டு தனியா வெளாடுதுபோல... செரியாப் போயிரும்’’ன்னு தம்பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டிருந்தா.

யார் கூடவும் வெளாடப்போகாம தனக்குத் தானே வெளாண்டுட்டிருந்த ராசாவுக்கு நல்லா வெளாட ஒரு இடம் கெடச்சது. அவங்க வூட்லேர்ந்து கொஞ்ச தூரத்துலேயே பிளாஸ்டிக் கொடம் செய்யற கம்பெனி கட்ட ஆரம்பிச்சாங்க.நிறைய மணலும் கல்லுங் கொண்டாந்து கொட்டியிருந்தாங்க. அவனுக்குப் பள்ளிக்கொடத்துல முழுப்பரீட்சை லீவு வேற‌ விட்டுருந்தாங்க. அந்த மணல்ல வீடு கட்டறதும், சறுக்கி வெளாடறதுமா நல்லாப் பொழுதுபோச்சு. சாமானெல்லாம் கொண்டாந்து போட்டாங்களே ஒழிய, வேலைய ஆரம்பிக்கவே இல்ல. அப்பப்ப வேலை செய்யற ஆளுங்க ரண்டு மூணு பேர் வந்து சுத்தம் பண்ணிட்டுப் போவாங்க. ஒரு தாத்தா மட்டும் காவலுக்கு வந்தாரு. மொதல்ல தொரத்தினாலும், என்னமோ இவன பிடிச்சுப் போகவே, இவன வெளையாட வுட்டுட்டாரு.

செல்லாகூட, ``பள்ளிக்கொடம் லீவுன்னு எங்க ராசா சுத்திட்டு வர்ற. தலையெல்லாம் மண்ணாக் கெடக்கு. சித்திர மாச கத்திரி வெயிலு மண்டயப் பொளக்குது. அம்மா மோர் கடஞ்சு வெச்சிட்டுப் போறேன். எங்க வெளாடினாலும் வந்து குடிச்சுட்டுப் போகோணும்’’ன்னு சொல்வா. எங்க, இப்பத்தான் அதெல்லாம் அவங் காதுலயே வுழுகறதில்லையே. அவம் பாட்டுக்கு குவிச்ச மண்ணே கதின்னில்ல கெடந்தான்.

அப்பதான் ஒருநா ராசா வெளையாடப் போற இடத்துலே ஒரே கூட்டமா நிக்காங்க. வாட்ச்மேன் தாத்தா கீழே படுத்துருக்காரு. ஒரு பெரிய பிளஷர் காரு வந்து வேகமா நிக்குது. அதுலேர்ந்து வெள்ளவெளேர்னு சட்ட போட்டுட்டு இறங்குன ஒரு ஆள், ``என்ன நடந்தது, எப்ப இறந்தாரு?’’ன்னு சத்தமா கேட்டாரு.

``காலேல எல்லோருமா சேர்ந்துதான் டீ குடிச்சுட்டு இருந்தோமுங்க. குடிக்கச் சொல்லவே அப்படியே மாரடைச்சு வுழுந்துட்டாரு சார்.’’

``சரி... இவரோட வீடு எங்கன்னு தெரிஞ்சவங்க போய் வெவரஞ் சொல்லிக் கூட்டிட்டு வாங்க.’’

``ஐயா, இவருக்கு பொண்ணு மட்டுந்தானுங்க.கட்டிக் கொடுத்துட்டாரு. அதுவும் புருஷனுமா கட்டட வேலதாங்க செய்யறாங்க. வேல செய்யுற எடத்துல எல்லாமா சேர்ந்து எங்கியோ கோவிலுக்கெல்லாம் டூர் போயிருக்காங்க.திங்கக்கெழமதான் வருவாங்களாம்.’’

``இதென்னயா வேதனையாப்போச்சு.அதுவரைக்கும் பொணத்த இப்படியே வச்சுக்கிட்டா இருக்க முடியும் . எந்தச் சடங்கும் பண்ணாம எரிச்சா அந்தப் பாவம் நமக்குத்தானய்யா. சாகறவரு நாம புதுக்கம்பெனி கட்டற எடத்துலயா வந்து சாகணும்...’’ என்றபடி கையிலேயே கார் சாவியினால குத்திக்கிட்டாரு.

கேட்டுக்கிட்டு இருந்த ராசாவுக்கு கண்ணுலேர்ந்து மளமளன்னு தண்ணியாக் கொட்டுது. ``வாட்ச்மேன் தாத்தா செத்துப் போயிட்டாரா?!’’

``ஐயா, எங்க ஊர்ல இந்த மாதிரி அனாதையா சாகிறவங்களுக்கு எல்லாச் சடங்கையும் ஈமக்காரியத்தையும் எங்க சுடுகாட்டு வெட்டியாள் செல்லா நல்லபடியா செஞ்சி தகனம் பண்ணி வைப்பாங்க. வேணா கூட்டிட்டு வரட்டுங்களா?’’

``ஏய்யா... என்ன கேள்வி இது, மொதல்ல போயி கூட்டிட்டு வா.’’

அந்த ஆளு போன கொஞ்ச நேரத்துலேயே கூட்டத்தப் பொளந்துட்டு செல்லா வந்து நின்னா. அவ கண்ணுல படாம கூட்டத்துக்குள்ள ஒதுங்கிக்குறான் ராசா.

``ஏம்மா, இந்தப் பெரியவரு இங்க வந்து இறந்துட்டாரு. மக எங்கியோ ஊருக்குப் போயிட்டாளாமாம். எல்லா சடங்கையும் நடத்தி வச்சி தகனம் பண்ணிருங்க... இந்தாங்க பணம்.’’

அந்தப் பணத்தக் கண்ணெடுத்தும் பாக்காம ``ஐயா, நா இந்த மாதிரி போறவங்களுக்கு பணம் வாங்கறதில்லைங்க’’ன்னா செல்லா.

அவளையே ஆச்சரியமா பாத்தவரு, பக்கத்துல நின்ன கூலியாள்கிட்ட, ``இந்தா கன்னுச்சாமி, ஒரு மாலைய வாங்கி போட்டு அடக்கம் பண்ணிட்டு வந்துரு’’ன்னு பணத்தக் கொடுத்துட்டு கார்ல ஏறிப் போயிட்டாரு.

கொஞ்ச நேரத்துலேயே சொர்க்க ரதம்ன்னு எழுதியிருக்கற வண்டியத் தள்ளிட்டு வந்து பொணத்த தங்கையாலேயே எடுத்துப் போட்டுட்டுப் போயிட்டா செல்லா. எல்லாத்தையும் பாத்துகிட்டு இருந்த ராசாவுக்கு இன்னும் அழுகாச்சியா வந்துச்சு.

ரெண்டு நா கழிச்சு காலைல ``ஏம்மா, இதுதான் வெட்டியாள் வீடா’’ன்னு வெசாரிக்கற சத்தங் கேட்டுக் கதவத் தெறந்தா செல்லா. அங்க ஒல்லியா கறுப்பா ஒரு பொம்பள நின்னுகிட்டு இருந்துச்சு. இவளப் பாத்ததும் தயங்கிட்டே ``ஏம்மா நீங்கதானே’’ன்னுச்சு.

சத்தங் கேட்டு ராசாவும் முழிச்சுக்கிட்டான். ``யாராவது செத்துப்போயிட்டாங்களா?! பஞ்சாயத்துல போயி சொல்லிருங்க. எத்தன மணிக்கு கொண்டாருவீங்க?’’ன்னா செல்லா படபடன்னு. இவ சொன்னதக் கேட்டு நின்னுட்டிருந்தவ ``அம்மா’’ன்னு அழுதுட்டே கால்ல வுழுந்துட்டா.

``என்னம்மா...?!’’ பதறிப் போயிட்டா செல்லா.

``நா வாட்ச்மேன் மகம்மா. டூர் போயிட்டு இன்னைக்குத்தா வந்தேன். வந்தவொன்னே சேதி சொன்னாங்க, ‌‌‌‌‌‌‌‌‌‌‌போட்டத போட்டபடி ஓடியாந்தேன். நா செய்யற சடங்க நீங்க செஞ்சி எங்கப்பன நல்லபடியா அனுப்பி வச்சிருங்கீங்க. ரொம்ப நன்றி தாயி’’ன்னு அழுதுகிட்டே கைகூப்புனா.

``எதுக்குமா நன்றியெல்லாம், போற உயிரு சொல்லிட்டா போகுது. தேத்திக்குங்க... சாம்பல சொம்புல போட்டு வச்சிருக்கேன், குடுக்கறேன். கொண்டு போயி உங்க மொறப்படி நல்லபடியா சடங்கு பண்ணி கரைச்சுருங்க’’ன்னு சொன்ன செல்லாவோட கையப் புடிச்சு கண்ணுல ஒத்திக்கிட்டே அந்தப் பொண்ணு மறுபடியும் சொல்றா, ``யாருக்கும்மா இந்த மனசு வரும்... செத்துட்டா பொணம்னு சொல்லி, பெத்ததுங்களே அருவருப்பா பாக்கற காலத்துல, யாருன்னே தெரியாம தொட்டு இத்தன சடங்கையும் செஞ்சு நல்லபடியா தகனம் பண்ணுறீங்களே... எம்புட்டுப் புண்ணியம்... நல்லா இரு தாயி..!’’ன்னு கைகூப்புறா. கூப்புன கையைத் தடுத்த செல்லா, அவளக் கூட்டிட்டு வெளிய போறா.

அப்பதான் செல்லாக்கே உறைக்குது... ``ஐயோ...ராசா கேட்டுருப்பானோ’’ன்னு துடிச்சுப் போயி படுத்திருக்கற எடத்தப் பாக்குறா. போர்வைய தலையோடு போத்திக்கிட்டு கெடக்கற ராசாவப் பாத்தவளுக்கு, நிம்மதியா மூச்சு வருது... ``வாம்மா போலாம்’’ன்னு கதவ ஒருகழிச்சு வச்சிட்டுக் கிளம்பிப் போறா.

படுத்துக்கிட்டே எல்லாத்தையும் போர்வை ஓட்ட வழியாப் பார்த்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருந்த ராசா, அன்னைக்கு ராத்திரியில எப்பவும் போல தம் பக்கத்துல படுத்த, செல்லாவ கட்டிட்டுப் படுத்தான். ரொம்ப நாளைக்கப்புறம் ராசாவத் தடவிக் கொடுத்த செல்லாவுக்கு கண்ணில் நீர் கரை கட்டுச்சு. என்னதான் பையன் வளர்றான். அதனாலதான் தன்ன விட்டு வெலகிப் போறான்னு மனசுக்குள்ள தேத்திக்கிட்டாலும், ஒரு ஓரத்துல ஏக்கத்தோடதான் கெடந்தா. அன்னைக்கி மனசளவுல மறுபடியும் ராசா தங்கிட்ட வந்துட்டாங்கற ஒரு நிம்மதில அமைதியாத் தூங்குனா.

அடுத்த வருஷம் பள்ளிக்கொடம் போன ராசா புது வகுப்புல எல்லோரும் உங்கள அறிமுகப்படுத்திக்குங்கன்னு சொன்ன வாத்தியார்கிட்ட ``எம் பேர் ராசா. எங்கம்மா செல்லா வெட்டியாள் தொழில் செய்யறாங்க...’’ன்னு சொன்னான் கம்பீரமா.

- விஜி முருகநாதன்


கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 29, 2023 3:01 pm

அருமையான கதை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக