ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

maladaptive daydreaming என்பது மனநலக் குறைபாடா?

Go down

maladaptive daydreaming என்பது மனநலக் குறைபாடா? Empty maladaptive daydreaming என்பது மனநலக் குறைபாடா?

Post by சிவா Tue Apr 04, 2023 4:51 pm

maladaptive daydreaming என்பது மனநலக் குறைபாடா? Maladaptive-daydreaming

நீங்கள் வகுப்பில் அமர்ந்து பாடம் கவனித்துக்கொண்டு இருக்கும் போது திடீரென தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறார்கள். அனைவருமே அதிர்ச்சியில் இருக்கும் போது நீங்கள் துணிச்சலாக சண்டையிட்டு மொத்த பள்ளியையும் காப்பாற்றுகிறீர்கள். அனைவரும் உங்களை கைத்தட்டி பாராட்ட, நீங்கள் ரகசியமாக விரும்பும் பெண்ணும் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார்...

இது போன்று உங்கள் பள்ளிக்காலங்களில் கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

ஆம் என்றால் நீங்கள் மட்டும் இல்லை, நம்மில் பலரும் இவ்வாறு கற்பனை செய்து பார்த்திருப்போம்.

சமீபத்தில் உலகளவில் பிரபலமான ஒரு சமூக வலைத்தளப் பக்கம் மேலே விவரித்துள்ள சம்பவத்தை மீம்ஸாக பதிவு செய்திருந்தது. அந்தப் பதிவிற்கு வந்த கமெண்ட்ஸ்களை வைத்து பார்த்தால், இது நாடு கடந்து அனைவரிடமும் காணப்படும் பொதுக்கற்பனையாகத் தெரிகிறது.

இது மட்டுமல்ல, வேறு வகையான ’நாயக பிம்பத்திலும்’ உங்களை நீங்கள் கற்பனை செய்து பார்த்திருக்கலாம்.

உதாரணமாக, சிலர் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர் போலவும், நடிகர்கள் போலவும் கற்பனை செய்வார்கள். சிலர் கால்பந்தில் 10 கோல்கள் அடிப்பது போலவும், ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது போலவும் கற்பனை செய்வார்கள்.



இவ்வாறு போலியான சூழலில் (Fake scenarios) நம்மைப் பொருத்தி கற்பனை செய்வதை மாலடாப்டிவ் டே ட்ரீமிங் (maladaptive daydreaming) என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. வழக்கமான பகல்கனவைவிட maladaptive daydreaming நிலையில் கற்பனைகள் மிகவும் தெளிவாக இருப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய கற்பனைகள் நம்முடைய மனநலத்திற்கு நல்லதா?

போலியான சூழலில் தன்னைப் பொருத்தி ஒருவர் கற்பனை செய்வது ஏன்?



’’பொதுவாக நிஜத்தில் செய்ய முடியாத விஷயத்தைத்தான் நாம் இவ்வாறு கற்பனை செய்துபார்ப்போம். சாதிக்க வேண்டும் என்ற லட்சியமும் தாழ்வுமனப்பான்மையும் ஒரேசேர உள்ளவர்களிடம்தான் maladaptive daydreaming பிரச்னை அதிகம் உள்ளது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் நிஜ உலகில் நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதிக்க முடியாத போது போலியான ஒரு சூழலை உருவாக்கி அதில் தங்களைப் பொருத்தி ரோல் ப்ளே செய்வார்கள். இது அவர்களுக்கு உள்ளுக்குள் குதூகலத்தை ஏற்படுத்தும். இது ஒரு வகையான அடையாளப் பிரச்னையின் வெளிப்பாடு’’.

maladaptive daydreaming என்பது மனநலக் குறைபாடா?



''இதை மனநலக் குறைபாடாக மருத்துவ உலகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. டி.எஸ்.எம். (Diagnostic and Statistical Manual of Mental Disorders) எனும் மனநலக் குறைபாட்டிற்கான கையேட்டில் இந்தப் பிரச்னை இதுவரை வகைப்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இந்தப் பிரச்னையால் நிறைய பேர் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. எனவே இதன் தீவிரம் அதிகரித்துள்ளதால் விரைவில் இந்தக் கையேட்டில் வகைப்படுத்தப்படலாம்''.

கற்பனை செய்வது படைப்பாற்றல் சார்ந்த விஷயமாக பார்க்கப்படும் நிலையில், எந்த இடத்தில் அது பிரச்னைக்குரியதாக மாறுகிறது?
''கற்பனை செய்து பார்ப்பது நல்ல விஷயம்தான், ஆனால் யதார்த்ததில் இருந்து தப்பித்துக்கொள்ள கற்பனை செய்யும் போது அது பிரச்னைக்குரிய ஒன்றாக மாறுகிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே நாம் அனைவரும் கற்பனை செய்கிறோம். ஆனால், தினசரி வாழ்க்கையை பாதிக்கும்போது அதற்கு கவனம் கொடுக்க வேண்டும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் அதிகம் கற்பனை செய்வார்கள். இதனால் அவர்களின் தூக்கம் வெகுவாக பாதிக்கும். தூக்கம் பாதிக்கும் போது உடல்நலம், மனநலம் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒருவர், தினமும் இரவு 10 மணி முதல் 2 மணிவரை வாழ்க்கையில் சாதித்து பெரிய ஆளாகுவது போல கற்பனை செய்துபார்ப்பாராம். இது தொடக்கத்தில் சந்தோஷத்தை, திருப்தியைக் கொடுத்தாலும், ஒருகட்டத்தில் எல்லா நேரங்களிலும் கற்பனை உலகை மனம் நாட ஆரம்பித்துவிடும்.

அந்தக் கற்பனை உலகம் நமக்கு நாமே உருவாக்கியது என்பதால் அங்கு நாம்தான் ஹீரோ. கற்பனை உலகில் தன்னை ஹீரோவாக நினைத்து வாழக்கூடியவர் யதார்த்த உலகில் அவ்வாறு இல்லையெனும் போது தன்னம்பிக்கை இழப்புக்கு உள்ளாகிறார். இதனால் சமூகத்தை அவரால் துணிச்சலாக எதிர்கொள்ள முடியாது. இது கல்வி, தொழில்வாழ்க்கை, தினசரி வாழ்க்கை, உறவு வாழ்க்கை என அனைத்திலுமே எதிரொலிக்கும். இத்தகைய கற்பனை என்பது நமக்கு நாமே மாட்டுக்கொள்ளும் போலியான முகமூடி போன்றது.’’.

இதன் அறிகுறிகள் என்ன?



''இந்தப் பிரச்னை OCD (Obsessive-compulsive disorder) மற்றும் ADHD (Attention-deficit/hyperactivity disorder) குறைபாடோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஏதாவது எண்ணங்கள், கற்பனைகள் தொடர்ச்சியாக உங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு சூழலை எதிர்கொள்ள முடியவில்லை எனும் போது கற்பனையில் அந்த சூழலை உருவாக்கி மனம் திருப்தி அடைய ஆரம்பிக்கும். உதாரணமாக, ஓர் இடத்தில் தைரியமாக பேச முடியவில்லை எனும் போது இந்தப் பிரச்னை உள்ளவர்கள் தனிமையில் அந்தச் சூழலை மறு உருவாக்கம் செய்து மிகவும் தைரியமாக பேசுவதுபோல கற்பனை செய்வார்கள். தொடக்கத்தில் 5 நிமிடம், 10 நிமிடம் என்று ஆரம்பிக்கும் கற்பனை, அதில் திருப்தி கிடைக்க கிடைக்க மணிக்கணக்கில் தொடர ஆரம்பிக்கும். தொடர்ச்சியான பல மணி நேர எண்ணங்கள் மற்றும் கற்பனையிலிருந்து ஒருவரால் மீள முடியவில்லை என்றால் அவருக்கு maladaptive daydreaming இருக்கலாம். சிகரெட்டுக்கு அடிமையான ஒருவர், மன அழுத்தமாக உள்ளபோதெல்லாம் எப்படி புகை பிடிக்க நினைக்கிறாரோ, அதேபோல இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கற்பனை உலகிற்குள் செல்ல விரும்புவார்கள்''.

’maladaptive daydreaming' பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது எனில், அதில் சமூகவலைத்தளங்களின் பங்கு உள்ளதா?



''பொதுவாகவே சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் போது அது நம் மனநலத்தை பாதிக்கும். அதிலும், ரீல்ஸ், ஷாட்ஸ் போன்றவை ’maladaptive daydreaming' ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில், அனைவருமே ரீல்ஸில் தங்களுடைய வாழ்க்கையின் சந்தோஷமான பக்கத்தைத்தான் பதிவிடுகிறார்கள். தன் வாழ்க்கையின் சோகமான பக்கங்களை யாரும் ரீல்ஸாகவோ, ஷாட்ஸாகவோ பதிவிடுவதில்லை. எனவே தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும் போது அந்தப் பிரபலத்தின் வாழ்க்கை போல நம் வாழ்க்கை இல்லையே, நாம் அதுபோல வெற்றி பெறவில்லையே என்று மனம் கவலை கொள்ள ஆரம்பிக்கும். அந்தக் கவலை அதிகரிக்கும் போது அதை எதிர்கொள்ளவதற்கான உத்தியாக (coping technique) அந்த ரீல்ஸில் வரும் சூழலோடு நம்மைப் பொருத்தி கற்பனை செய்ய ஆரம்பிப்போம். நான் முன்பு சொன்னது போல அந்தக் கற்பனை மணிக்கணக்கில் தொடரும் போது மனநலத்தை பாதிக்கும்''.

இதிலிருந்து விடுபடுவது எப்படி? இதற்கான சிகிச்சை என்ன



?இது இன்னும் நோயாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் இதற்கான பிரத்யேக சிகிச்சை என்று எதுவும் கிடையாது. தற்போது நடத்தை சிகிச்சைதான் (Behavior therapy) வழங்கப்படுகிறது. இந்தப் பிரச்னை அவர்களை எப்படி, எதனால் பாதிக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, அந்த எண்ணங்கள் மற்றும் கற்பனையிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுவழிகளை (coping technique) கற்றுத்தருகிறோம். அந்த மாற்று வழிகளைப் பின்பற்றி வாழ்க்கை முறை மற்றும் நேரம் செலவிடுதலில் சில மாற்றங்களைச் செய்தாலே இதிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

பிபிசி தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
» பேச்சு என்பது சில்வர் என்றால், மவுனம் என்பது தங்கம்’
» தேக்கம் என்பது மரணம், நீரோட்டம் என்பது வாழ்வு.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum