புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_m10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_m10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_m10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_m10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_m10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_m10மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 7:11 pm

மார்பகப் புற்றுநோய் குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்  Breast-cancer
குறித்து முழுதாக அறிந்து கொள்ளுங்கள்

பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இருக்கும். இந்த ஹார்மோன் சீரற்ற நிலையில் இருக்கும்போது மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்து உண்டாகும்

ஒரு விஷயம் குறித்த விழிப்புணர்வு இல்லாத போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. மார்பகப் புற்றுநோயும் அப்படித்தான். புற்று நோய் பற்றிய தெளிவு முன்கூட்டியே நமக்கு இருக்கும்பட்சத்தில் நோய் ஏற்படாமல் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மார்பகப் புற்று நோய் தொடர்பாக நமக்கிருக்கும் சந்தேகங் களுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மார்பக சிகிச்சை மருத்துவரும் ஆன்கோபிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணருமான கீர்த்தி கேத்ரீன் கபீர் மற்றும் திருச்சி, காவேரி மருத்துவ மனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் அனிஸ்.

மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன?


மார்புக்குள் சில சுரப்பி களும் (Glands), சில கொழுப்புத் திசுக்களும் (Fatty tissues) இருக்கும். சுரப்பிகளில் உள்ள செல்கள் அசாதாரண முறையில் பெரி தாகும்போது, அந்த செல்கள் சேர்ந்து ஒரு கட்டியாக உருமாறும். இதைத்தான் மார்பகப் புற்றுநோய் என்கிறோம்.

யாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் வரும்?


பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் காலத்தில் 20 வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய் நிற்கும் 40 முதல் 50 வயது வரை உடலுக்குள் அதிகப்படியான ஹார்மோன் மாறுபாடுகள் இருக்கும். அவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகம்.

குடும்பப் பின்னணி இருப்பவர்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான ரிஸ்க் அதிகமா?


அனைவருக்கும் கிடையாது. சில குடும்பங்களில் நிறைய பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததென்றால், ஏதாவது ஒரு பிறழ்வு (Mutation) அவர்களின் குடும்பத்தின் ஜீன்களில் இருந் தால், அடுத்த தலைமுறைக்கும் அந்த ரிஸ்க் இருக்கும். பொதுவாக நாம் பார்க்கும் மார்பகப் புற்றுநோய்களில் 75 சத விகிதம் குடும்பப் பின்னணி இருக்காது. 25 சதவிகிதம்தான் குடும்பப் பின்னணியில் பாதிக்கப்பட்ட நபர்கள் வருகின்றனர்.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறையும் என்கிறார்கள்... அப்படியானால் திருமண மாகாத, குழந்தைபெறாத பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ரிஸ்க் அதிகமா?

கொஞ்சம் ரிஸ்க் அதிகம்தான். பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இருக்கும். இந்த ஹார்மோன் சீரற்ற நிலையில் இருக்கும்போது மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்து உண்டாகும். கர்ப்ப காலத்தின் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் இந்த ஹார்மோன் குறைவாக இருக்கும். கர்ப்பம் தரிக்காமல், தாய்ப்பால் அளிக்காமலிருந்தால் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகம் இருக்கும். அதனால் இவர்களுக்கு ரிஸ்க் அதிகம்தான்.

மார்பகப் புற்றுநோய், உடலின் மற்ற பாகங் களுக்கும் பரவுமா?


ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சைகள் அளிக்கும்போது, வேறு இடங்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருபவர்கள்தான் அதிகம். அதற்குள் அது உடலின் பல இடங்களுக்கும் பரவியிருக்கலாம். கல்லீரல், எலும்புகள், தலை என எங்கு வேண்டுமானாலும் பரவலாம்.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா?


ஓரளவு தடுக்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது, ஹார்மோனல் இம்பேலன்ஸ் நார்மலாகும். மசாலா, காரம் அதிகம் சேர்த்த உணவுகளையும், துரித உணவுகளையும், கொழுப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவுகள் ஹார்மோன் தூண்டுதலை உண்டாக்கி, வீக்கத்தை அதிகப்படுத்தும். இதைத் தடுக்க பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும். வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாமலிருக்க சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம். வருமுன் காப்போம் என்பது மார்பகப் புற்றுநோய்க்கு மிகவும் பொருந்தும்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிய என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?


40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை கட்டாயமாக ஸ்க்ரீனிங் மேமோகிராம் (Screening Mammogram) செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து எளிமையான முறையில் குணப்படுத்த முடியும். 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதமொருமுறை மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு ஏற்பட்டு சில தினங்களுக்குப் பிறகு இந்தப் பரிசோதனை செய்ய சிறந்த காலமாகும். மேமோகிராம் பரிசோதனையில் ஏற்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் வந்துவிடுமோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. இது குறித்துப் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகமிக குறைந்த அளவிலான கதிர்வீச்சுதான் வெளிப்படுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்துகின்றன அந்த ஆய்வுகள்.

மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?


ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் மார்பகப் புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை, ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி என இதற்கான சிகிச்சை மூன்று நிலைகளில் தரப்படுகிறது. 2 அல்லது 3 செ.மீ அளவில் வளர்ந்துள்ள ஆரம்ப நிலையில் இருக்கும் புற்றுக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி சரி செய்யலாம். கட்டி 5 அல்லது 6 செ.மீ அளவில் உள்ளது; அது சருமம், மார்பு எலும்புகளை அரித்துள்ளது எனில் அக்கட்டியை அறுவை சிகிக்சை மூலம் நீக்கிவிட்டு, கட்டி மீண்டும் வளராமல் இருக்க அந்த இடத்தில் ரேடியேஷன் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

மார்பகத்தில் உள்ள புற்று செல்கள் உடலின் மற்ற பகுதிகளில் பரவாமல் இருக்கவும், பரவியிருந்தால் குணப்படுத்தவும் கீமோதெரபி சிகிச்சை வழங்கப்படும். இந்த மூன்றும் சேர்ந்து வழங்கப்படும்போது நோயாளி முழுமையாகக் குணமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சுய பரிசோதனை.!


* கண்ணாடியின் முன் நின்று, மார் பகங்களின் பக்கவாட்டில் கைகளை வைக்க வேண்டும். ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.

* தலைக்கு மேலே கைகளை உயர்த்தி, ஏதேனும் மாற்றங்கள் தெரிகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

* நின்று கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ, கை விரல்களைச் சேர்த் தாற்போல வைத்துக் கொண்டு, நுனி விரல்களால் வட்ட வடிவில் அல்லது நீள்வடிவில் (line pattern) மார்பகம் மற்றும் காம்புகளில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்பதைத் தடவிப் பார்க்க வேண்டும்.

* இறுதியாக அக்குள் அடியில் பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் அசாதாரணமாகத் தெரியும்பட்சத்தில், மருத்துவரை அணுக வேண்டும்.

குறிச்சொற்கள் #மார்பகப்_புற்றுநோய் #Breast_cancer #புற்றுநோய்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 7:15 pm


பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் காலத்தில் 20 வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட மார்பகப் புற்றுநோய் இப்போது கிட்டத்தட்ட வீட்டுக்கு வீடு காண்கிற பாதிப்பாகப் பெருகியிருக்கிறது. மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்தாலே அது வருவதற்கு முன் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

யாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் வரும்?


பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் காலத்தில் 20 வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய் நிற்கும் 40 முதல் 50 வயது வரை உடலுக்குள் அதிகப்படியான ஹார்மோன் மாறுபாடுகள் இருக்கும். அவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகம்.

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?


மார்பக சருமம் சிவந்து காணப்படுதல், கைகளைத் தூக்கும் போது குழி விழுதல், அக்குள் அடியில் வீக்கத்துடன் காணப்படும் நெறிக்கட்டிகள் , கை வைத்துப் பார்க்கும்போது மார்பகத்தில் கட்டி போல உருள்வது, காம்பில் நீர் அல்லது ரத்தம் வருவது போன்றவை.

சாதாரண கட்டியா, புற்றுநோய்க் கட்டியா என்பதை எப்படிக் கண்டறிவது?


கை வைத்துப் பார்க்கும்போது கொழுப்புக் கட்டிக்கும், புற்றுநோய்க் கட்டிக்கும் வித்தியாசம் அறிவது கடினம். ஸ்கேன் மூலமாகத்தான் எந்த மாதிரியான கட்டி என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே கட்டி வந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பொதுவாகவே அனைவரது வீட்டிலும் ஹேர் டை உபயோகிக்கிறார்கள். ஹேர் டை உபயோகிப்பவர்களுக்குப் புற்றுநோய், குறிப்பாக மார்பகப் புற்றுநோய் வரும் என்பது உண்மையா?

ஹேர் டைக்கும் மார்பகப் புற்றுநோயோடு தொடர்பு இல்லை.

கருத்தடை முறைகளைப் பின்பற்றுவோருக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் உண்டா?


மூன்று மாதங்களுக்கோ, ஆறு மாதங்களுக்கோ எடுத்துக்கொள்வது தவறில்லை. இரண்டு வருடங்களைத் தாண்டி உபயோகிக்கும்போது தான் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் கூடும். எனவே தான் மருத்துவர்கள் இத்தகைய மாத்திரைகளை நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப் பரிந்துரைப்பதில்லை.

ஸ்ட்ரெஸ்ஸுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா?


நிச்சயம் தொடர்புண்டு. ஸ்ட்ரெஸ் இருக்கும்போது ஹார்மோன் மாற்றங்கள் இருக்கும். அதனால் ரிஸ்க் அதிகரிக்கலாம்.

புற்றுநோய் இரண்டு மார்பகங்களையும் தாக்குமா?


சிலருக்கு ஒரே நேரத்தில் ரெண்டு மார்பகங்களிலும் பாதிப்பு வரலாம். சிலருக்கு ஒரு மார்பகத்தில் மட்டும் வரலாம். சிலருக்கு வேறு வேறு காலகட்டத்தில் எந்த மார்பகத்திலும் புற்றுநோய் பாதிப்பு வரலாம்.

மார்பகங்களை அகற்றுவதுதான் தீர்வா?


20 வருடங்களுக்கு முன், மார்பகப் புற்றுநோய் வந்தால் மார்பகங்களை முழுவதும் நீக்கிவிடுவார்கள். ஆனால், இப்போது அப்படி கிடையாது. ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும்போது, மார்பகத்தைப் பாதுகாக்கலாம். இதுவே இரண்டாம் நிலை அல்லது கடைசி நிலையில வரும்போது, மார்புக்குள்ளேயே அது அதிகம் பரவியிருக்கும். அப்போது மார்பகததைப் பாதுகாக்க முடியாது. அந்நிலையில் மார்பகத்தை முழுதாக நீக்கிவிட்டு, நம் உடலுக்குள்ளேயே இருக்கும் திசுக்களைக் கொண்டு மார்பக வடிவத்தில் ரீகன்ஸ்ட்ரக்ஷன் சிகிச்சை செய்துகொள்ளலாம்.

மார்பகப் புற்றுநோய்க்கும் நிணநீர் சுரப்பி வீக்கத்துக்கும் என்ன தொடர்பு?


மார்பகப் புற்றுநோய் பரவும் நிலையில் இருந்தால், அது முதலில் அக்குள் அடியில் உள்ள நிணநீர் சுரப்பிகளில் தான் பரவும். சுய மார்பகப் பரிசோதனை செய்யும்போது சிலருக்கு மார்பகம் பெரிதாக இருந்தால், மார்புக்குள் இருக்கும் கட்டி சிறிதாக இருந்தால், கை வைத்துப் பார்க்கும் போது கண்டுபிடிக்க கஷ்டமாக இருக்கும். அக்குள் அடியில் ஏதாவது பரவி இருந்தால், நம்மால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். அக்குள் அடியில் வீக்கம் இருக்கும்போதும், கை முழுவதும் வீக்கமாக இருக்கும்போதும் அதுவும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளில் ஒன்று. எனவே அதையும் பரிசோதனை செய்ய வேண்டும்.

மார்பகங்களின் அளவுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா?


மார்பகங்களின் அளவுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ஆனால் மார்பகத்தின் வகையைப் பொறுத்து அந்த பாதிப்பு ஏற்படலாம். உதாரணத்துக்கு அடர்த்தியான டென்ஸ் (dense) பிரெஸ்ட் உள்ளவர்களுக்கு , மார்பத்திற்குள் நிறைய சுரப்பிகள் இருக்கும். கொழுப்புத் திசுக்கள் குறைவாக இருக்கும். அவர்களுக்கு அதிகப்படியான ரிஸ்க் இருக்கலாம்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 7:18 pm

கருத்தடை மாத்திரைகள் மார்பகப்புற்று வாய்ப்பை அதிகரிக்குமா? - ஆய்வறிக்கையும் மருத்துவ விளக்கமும்

``மார்பக திசுக்களை பொறுத்தவரை அவை ஹார்மோன் மாத்திரைகளுக்கு எதிர்வினையாற்றும். மேலும் இந்த மாத்திரைகளின் அளவு வேறுபடும் பட்சத்தில் மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.’’

புரோஜெஸ்டோஜென் (Progestogen) ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஆபத்தை 30% அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் 'ஆக்ஸ்ஃபோர்டு பாப்புலேஷன் ஹெல்த்'ஸ் கேன்சர் எபிடெமியாலஜி' பிரிவின் ஆராய்ச்சியாளர்களால் 'PLOS மெடிசின்' எனும் மருத்துவ இதழில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `புரோஜெஸ்டோஜென் - ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை 30% அதிகரிக்கிறது' என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு ஆலோசகர் (Consultant Reproductive Medicine) மருத்துவர் அபிநயாவிடம் பேசியபோது, ``கருத்தடை மாத்திரைகள் என்றால், ஹார்மோன் மாத்திரைகள்தான். புரோஜஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும்போது, இது இனப்பெருக்கத்தைத் தடுக்கும் மற்றும் கர்ப்பப்பையில் கருவைத் தங்கவிடாது. நம் உடலில் இயற்கையாக இருக்கும் ஹார்மோன்களை விட இந்த ஹார்மோன் மாத்திரைகள் சற்று வித்தியாசமானவை. இதற்கு நம் உடலில் உள்ள சில திசுக்கள் சாதாரணமாக வினையாற்றினாலும், சில திசுக்களில் மாற்றங்கள் ஏற்படும்.

ஹார்மோன் மாத்திரைகள் கர்ப்பப்பை, இனப்பெருக்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் வினையாற்றும். மேலும் இனப்பெருக்க உறுப்பு மற்றும் கர்ப்பப்பையை இந்த ஹார்மோன் மாத்திரைகள் பாதுகாக்கும். அதோடு கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

அதே நேரம் மார்பக திசுக்களை பொறுத்தவரை அவை இந்த ஹார்மோன் மாத்திரைகளுக்கு எதிர்வினையாற்றும். மேலும் இந்த ஹார்மோன் மாத்திரைகளின் அளவு வேறுபடும் பட்சத்தில் மார்பகப் புற்றுநோய்க்கு இது வழிவகுக்கிறது. 20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை பயன்படுத்தலாம். அவையே மருத்துவர்களாலும் பரிந்துரை செய்யப்படுகிறது.

20 - 35 மைக்ரோ கிராம் டோசேஜ் அளவிலான ஹார்மோன் மாத்திரைகளை ஓராண்டு வரை கருத்தடைக்கு பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கருத்தடைக்கு, ஹார்மோன் மாத்திரைகளை தவிர, காப்பர் டி, மாதந்தோறும் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என ஹார்மோன் ஊசி போன்றவற்றை பயன்படுத்தலாம்" என்றார்.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வராஜ், ``பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வருடம் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம் மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டுகளில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் நம் நாடு தான் முதலிடத்தில் இருந்தது. போதிய விழிப்புணர்வு, சிகிச்சை முறை காரணமாக அதன் தாக்கம் இப்போது குறைந்துள்ளது. ஆனால் மார்பகப் புற்றுநோயின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், 28 பெண்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

வெளிப்புற காரணிகள், மாசு, உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை புற்றுநோய் காரணிகள் என்றாலும், பெரும்பாலும் மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது இது உருவாகிறது. மார்பகப் புற்றுநோய்க்கும் இது பொருந்தும். உடல் பருமன், இயற்கையாக உடலில் உருவாகும் ஹார்மோன் குறைபாடு மற்றும் அதற்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஹார்மோன் மாத்திரைகளும் மார்பக புற்றுநோய் உருவாகக் காரணிகளாக உள்ளன.

மிகவும் சிறு வயதில் பூப்படைவதும், 55 வயது வரைக்கும் மாதவிடாய் தொடர்வதும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு இயற்கையாகவே உடலில் சுரக்கும் புரோஜஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும் போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதிக நாள்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவது ஆகியன, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

புற்றுநோய் கட்டிகளில் ஆரம்ப காலத்தில் வலி இருக்காது. மார்புப் பகுதியில் இத்தகைய கட்டிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. முதலில் ஸ்கேன் மூலம் அந்த கட்டி பற்றி அறிந்து கொண்டு, புற்றுநோய் கட்டிக்கான சாத்தியக்கூறுகள் உண்டென்றால் ஊசி மூலம் FNAC சிகிச்சை செய்யப்படும். அதன் முடிவில் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.

மார்பகப் புற்றுநோய் மிகவும் மெதுவாகப் பரவும் தன்மை உடையது. ஒரு புற்றுநோய் செல் இரண்டாக 100 நாள்கள் எடுக்கிறது. இதன் ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்திலும், 6 மாதங்கள் இடைவெளியின்றி சிகிச்சை மேற்கொள்வதன் மூலவும் 100 சதவிகிதம் நோயிலிருந்து மீளலாம்.

புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை முறை (கீமோதெரபி), ரேடியோதெராப்பி எனும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை முறை மட்டுமே போதுமானது. இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்.

புற்றுநோய் மட்டும் இன்றி, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களுக்குக் காரணம் நம் உடலில் இருக்கும் அதிகமான கலோரிகள் மற்றும் அதிகக் கொழுப்பு தான். நாம் உட்கொள்ளும் அரிசி உணவானது உடனடியாகச் செரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை உடையது. பெரும்பாலும் அரிசி உணவின் பயன்பாட்டை குறைத்து, சிறுதானிய உணவுகளை உட்கொள்வது நோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கும்" என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 7:19 pm

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்து; நோயாளிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா?


இப்போது மார்பகப் புற்று நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பன்னாட்டு மருந்து தயாரிப்பாளரான ரோச் நிறுவனம் இந்தியாவில் புதிய மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே ஊசி மூலம் இரண்டு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை இணைத்து, சிகிச்சை நேரத்தை 90% குறைக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், புராஸ்ட்டேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிக அளவில் புற்றுநோய் வருகிறது. மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோயான மார்பகப் புற்றுநோயே பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முக்கியமானது. இருப்பினும், சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.

இப்போது மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பன்னாட்டு மருந்து தயாரிப்பாளரான ரோச் நிறுவனம் இந்தியாவில் புதிய மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே ஊசி மூலம் இரண்டு மோனோகுளோனல் ஆன்டிபாடிகளை இணைத்து, சிகிச்சை நேரத்தை 90% குறைக்கிறது.

புதிய மருந்தான PHESGO என்பது பெர்ஜெட்டா (pertuzumab), ஹெர்செப்டின் (trastuzumab) மற்றும் ஹைலூரோனிடேஸ் ஆகியவற்றின் கலவை. இந்த மருந்து சிகிச்சை செலவை 20 சதவிகிதம் குறைக்கும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

``மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத்தரத்தை PHESGO மருந்து மேம்படுத்தும். சிகிச்சைக்கான நேரத்தைக் கணிசமாகக் குறைப்பதன் மூலம் அவர்களுக்கு வசதியையும் வாழ்க்கைத் தரத்தையும் வழங்கும். நோயாளிகளும் அவர்களைப் பராமரிப்பவர்களும் இப்போது மருத்துவமனையில் குறைவான நேரத்தைச் செலவிட்டாலே போதும்” என்று ரோச் பார்மா இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் வி சிம்ப்சன் இம்மானுவேல் கூறியுள்ளார்.

இந்த மருந்தின் வரவானது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குக் குறைவான தயாரிப்பு மற்றும் நிர்வாக நேரமே தேவைப்படுகிறது.

PHESGO என்கிற இந்த மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முதன்முதலில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டதே கோவிட் தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் இருந்த 2020 ஜூன் மாதத்தில்தான். பின்னர் 2020 டிசம்பரில் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி (EMA) அங்கீகாரம் அளித்தது.

இந்தியாவில் இந்த மருந்துக்கான அங்கீகாரம் அக்டோபர் 2021-ல் கிடைத்தது. ஜனவரி 2022-ல் இறக்குமதி உரிமம் வழங்கப்பட்டது.

உலக அளவில், டிசம்பர் 2021 நிலவரப்படி, 17,000 மார்பகப் புற்றுநோயாளிகள் PHESGO மூலம் பயனடைந்துள்ளனர் என்று ரோச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) 2021 அறிக்கையின்படி, 2020-ம் ஆண்டில் உலக அளவில் 23 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6.85 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 78 லட்சம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், இது உலகின் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறிவிட்டது.

அதிக வருமானம் உள்ள நாடுகளில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சை மூலம் வாழ்வு நீடிக்கப்படுதல் சாத்தியமாகியிருக்கிறது. அந்த நாடுகளில் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மார்பகப் புற்றுநோயுடன் உயிர்வாழ்தல் 90% ஆக இருக்கிறது. இந்தியாவில் இது 66% ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 40% வரையும் உள்ளது.

புற்றுநோய் சிகிச்சையானது மிகவும் செலவுமிக்கது; அதிக நேரத்தை விழுங்கக்கூடியது. நோயாளிகள் பல முறை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். மற்றும் நீண்ட சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நடைமுறைகள் நோயாளிகள், அவர்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தப் பின்னணியில் மார்பகப் புற்றுநோய்க்கான புதிய மருந்தானது மாபெரும் மாற்றத்தை உருவாக்கக்கூடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 02, 2023 7:20 pm

ஆண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்; மலட்டுத் தன்மைதான் காரணமா? ஆய்வு சொல்வது என்ன?


இந்த ஆய்வில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை சேர்ந்த, 2005 முதல் 2017 வரை மார்பகப் புற்றுநோயால் பாதிப்புக்குளான 80 வயதுக்கு உட்பட்ட 1,998 ஆண்களை நேர்காணல் செய்தனர்.

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும். ஆண்களுக்கு வருமா? அதெப்படி வரும் என்கிறீர்களா? ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும். ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கும், அவர்களது மலட்டு தன்மைக்கும் தொடர்பிருக்கலாம் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்த முடிவுகள் `மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

பெண்களோடு ஒப்பிடும்போது ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆண்களிடம் காணப்படும் மலட்டுத்தன்மைக்கும் அவர்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்கும் தொடர்புண்டா என்பதைக் கண்டறிய குறைந்த ஆய்வுகளே இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள `தி இன்ஸ்டிடியூட் ஆஃப் கேன்சர் ரிசர்ச்' அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மலட்டுத்தன்மை உள்ள ஆண்களுக்கும், குழந்தை இல்லாத ஆண்களுக்கும் அவர்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய் தாக்கத்துக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்தனர். இந்த ஆய்வில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை சேர்ந்த, 2005 முதல் 2017 வரை மார்பகப் புற்றுநோயால் பாதிப்புக்குளான 80 வயதுக்கு உட்பட்ட 1,998 ஆண்களை நேர்காணல் செய்தனர். இவர்களில் 112 பேர் (5.6 சதவிகிதம்) மலட்டுத் தன்மையுடனும், 383 பேருக்கு (19.2 சதவிகிதம்) குழந்தைகள் இல்லாதததும் தெரிய வந்தது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படாத ஆண்களை ஒப்பிட்டபோது, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு குழந்தைகள் இல்லாதது தெரியவந்துள்ளது. எனவே ஆய்வின் அடிப்படையில், ஆண்களின் மார்பகப் புற்றுநோய்க்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக