புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
53 Posts - 42%
heezulia
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
304 Posts - 50%
heezulia
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
21 Posts - 3%
prajai
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_m10கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 7:55 pm

கஞ்சா அருங்காட்சியகம் - THC NYC The-House-of-Cannabis

#அருங்காட்சியகம் என்று சொன்னதும் நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை வைத்துள்ள இடம் அல்லது ஓவியங்கள் அல்லது கலை பொருட்கள் விக்கப்பட்டுள்ள இடம் போன்ற காட்சிகள் தான் கண்முன் வரும். அதை மீறி யோசித்தால் உடைந்த உறவுகளை பற்றிய கிரோஷியா நாட்டு அருங்காட்சியகம், டெல்லியில் உள்ள கழிவறை அருங்காட்சியகம் போன்றவை நினைவுக்கு வரும்.

ஆனால் இதை விட வித்தியாசமான ஒரு அருங்காட்சியகத்தை பற்றி தான் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். கொஞ்ச நஞ்சம் இல்லை முற்றிலும் வித்தியாசமான அருங்காட்சியகம் தான் அது. எல்லா நாடுகளும் கஞ்சாவை தடை செய்து வரும் நிலையில் ஒரு நாடு மட்டும் கஞ்சாவிற்கு என பிரத்யேகமாக அருங்காட்சியகம் (04/07/2023) திறக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல நகரமான நியூயார்க் நகரத்தில் தான் இப்படி ஒரு அருங்காட்சியகம் உருப்பெற்றுள்ளது. The House of Cannabis- கஞ்சாக்களின் வீடு (THC NYC) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் நான்கு தளங்களை கொண்டுள்ளது. மன்ஹாட்டனின் சோஹோ சுற்றுப்புறத்தில் 427 பிராட்வேயில் அமைந்துள்ள 25,000-சதுர-அடி பிராமாண்ட கட்டிடம் முழுக்க கஜாவை பற்றிய தகவல்கள் நிறைந்திருப்பதாக அதன் உரிமையாளர்களான மார்செல் ஃப்ரே மற்றும் ராபர்ட் ஃப்ரே ஆகியோர் கூறுகின்றனர்.

கஞ்சா அருங்காட்சியகத்தில் பல தனித்துவமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை குறிப்பிடத்தக்க அனுபவங்களை வழங்குவதற்காக கட்டப்பட்டுள்ளன. அதனைக் கண்டு ஆராய்வது மூலம் கஞ்சா பயிர் பற்றிய பல புதிய விஷயங்களை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம். ஒரு தளம் முழுவதும் கஞ்சா சாகுபடி, அதன் வகைகள் பற்றிய தொகுப்புகள் உள்ளன.

கஞ்சா அருங்காட்சியகத்தில் பல தனித்துவமான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் மாடியில், தி ஸ்பாட் எனப்படும் நகர்ப்புற காடுகளின் முக்கியத்துவத்தை விளக்கும் அறை உள்ளது. அறை முழுவதும் பரந்த வேர்களைக் கொண்ட ஒரு மாபெரும் மர நிறுவல் இங்கு உள்ளது. அதே போல மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் விவாத இடங்களும் இங்கு உண்டு.

காட்சி கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் ப்ரோக்ராமர், AI துறைகளில் தேர்ச்சிபெற்ற பெஞ்சமின் கார்டனால் உருவாக்கப்பட்ட தி ஹிப்னோட்ரோம், என்பது காட்சி மற்றும் ஆடியோ மூலம் உச்ச நிலையை (HIGH feel ) அடையக்கூடிய ஹிப்னாடிக் பயணமாகும். கஞ்சா இல்லாமல் கலைகளை வைத்து உச்சநிலை அனுபவம் தரும் இடமாக இது உள்ளது.

மூன்றாவது மாடியில் 6000 வருடங்களாக பூமியில் வளர்ந்து வரும் கஞ்சா செடிகள் எப்படி உருவானது என்பதில் தொடங்கி இப்போது எப்படி இருக்கிறது என்பது வரை எல்லாவற்றையும் காட்சிப்படுத்துகிறார்கள். மைக்ரோவேர்ஸ் (microverse) எனும் அரங்கில் கஞ்சா செடியின் மைகிரோஸ்கோப் காட்சிகளை பெரிய திரைகளில் காட்சிப்படுத்துகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல், உலகப் புகழ்பெற்ற கலைஞரான ஜேசன் க்ரூக்மேன், செயற்கை நுண்ணறிவு மூலம், பார்வையாளர்கள் காமம், சிரிப்பு, ஆற்றல், தூக்கம், படைப்பாற்றல் போன்ற கஞ்சா எடுப்பவர்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள உதவும் களத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அறைகள் மட்டும் இல்லாமல் வகை வகையான கஞ்சாக்களின் வாசனைகளை மக்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு, கஞ்சா சார்ந்த உலகளாவிய சட்டங்கள், வரைமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கும் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.travek அதோடு கஞ்சா இசை விழாவும் இங்கு நடைபெறுகிறது. நியூயார்க் பக்கம் போனால் இந்த அருங்காட்சியத்தை பார்க்க மறந்துவிடாதீர்கள்.

15 மில்லியன் டாலர் மதிப்பில் எழுப்பட்டுள்ள இந்த கஞ்சா அருங்காட்சியகம், வாரம் முழுக்க காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். THC NYC க்கான டிக்கெட் விலை மாணவர்கள் மற்றும் இராணுவப் பணியாளர்களுக்கு $25 (இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.2,000), பொது மக்களுக்கு $39 (இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3,200) மற்றும் விஐபி டிக்கெட்டுகளின் விலை $75 (இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.6,150) ஆகும்.

நியூஸ் 18


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 08, 2023 7:58 pm

முடி அருங்காட்சியகம்


துருக்கியின் கப்படோசியாவில்(Cappadocia) உள்ள ஒரு சிறிய நகரம் அவனோஸ்(Avanos). இந்த நகரம் மட்பாண்டங்கள் மற்றும் செராமிக் பாண்டங்களுக்கு பிரபலமானது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமாகும். இருப்பினும், அப்பகுதியின் புகழ்பெற்ற பீங்கான் கடைகளில் ஒன்றின் அடித்தளத்தில், முற்றிலும் வேறுபட்ட ஒரு குகை போன்ற இடத்தில கூந்தல் நிறைந்த அறை அருங்காட்சியகமாக மாறி உள்ளது.

இந்த குகை அமைப்பில் மட்டும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 க்கும் மேற்பட்ட பெண்களின் முடி துண்டுகள், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு தகவல் போன்ற குறிப்புகளுடன் காணப்படுகிறது. என்ன இது முடிகளை போய் காட்சி படுத்தி வைத்திருக்கிறார்களே! வீட்டில் 1 துண்டு முடி இருந்தால் கூட அள்ளி வெளியில் வீசுவார்கள். இவர்கள் இத்தனை ஆயிரம் பேரின் முடிகளை வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கலாம்.

இந்த மனித முடி மாதிரிகளின் வித்தியாசமான அருங்காட்சியகத்திற்கு பின்னணியில் ஒரு அழகிய கதை உள்ளது. துருக்கிய குயவரான கலிப் கோருக்சு(Galip Körükçü)அவனோஸ் வீதியில் ஒரு மட்பாண்ட கடை வைத்துள்ளார். அவருடைய நீண்ட நாள் தோழி சில காரணங்களால் அவனோஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளார். மிகவும் அன்பான தோழி விடைபெறுவதை நினைத்து வருந்திய கலிப்புக்கு தோழி தனது தலைமுடியை நினைவுப் பரிசாக கொடுத்து சென்றுள்ளார்.

அதை அவர் பத்திரமாக தனது கடைக்கு கீழே இருக்கும் சுரங்க குகைக்குள் பத்திரமாக வைத்துள்ளார். அதன் பின்னர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த கதையைக் கூறியுள்ளார். அதன்பின்னர். இந்த சோகமான கதையைக் கேட்ட ஒவ்வொரு பெண்ணும் அவரது கடைக்கு வந்து, தனது தலைமுடியையும் அவருக்கு வழங்கினர். ஏறக்குறைய 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அருங்காட்சியகம் பல்வேறு வண்ண முடிகளின் தொகுப்பைக் குவித்துள்ளது.

நிலத்திற்கு அடியில் உள்ள குகை அமைப்பில் இவை அனைத்தையும் கலிப் சேகரித்து வைத்துள்ளார். நீங்கள் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்தவுடன், தரையைத் தவிர அனைத்து மேற்பரப்பிலும் முடி-நினைவுச் சின்னங்கள் மற்றும் அதனுடன் இணைந்த குறிப்புகள் மூடப்பட்டிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த விசித்திரமான கண்காட்சியில் சில பெண்கள் தங்கள் புகைப்படத்தையும் விட்டு சென்றுள்ளனர். இப்படி அந்த அரை முழுக்க நிரம்பியுள்ளது.

அதன் பின்னர், கலிப்பின் இந்த தலைமுடிகள் தொகுப்பு #அருங்காட்சியகம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. அதே போல இந்த இடத்தில இவ்வளவு ஆயிரக்கணக்கான மக்களின் முடிகள் இவ்வளவு சீராக வளர்ந்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது தான் பம்பர் பரிசு. இது வணிக ரீதியாக அவர் செய்த முன்னெடுப்பு என்றால் அதன் மூலம் இந்த இடம் மேலும் பிரபலமானது.

ஜூன் மற்றும் டிசம்பர் என்று வருடத்திற்கு இரண்டு முறை, குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் காலிப் கடைக்குள் நுழையும் முதல் வாடிக்கையாளரை,அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று, சுவரில் இருந்து 10 வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க சொல்வார். அந்த 10 நபர்களுக்கு தனக்கு ஆதரவு தந்ததற்காக நன்றி தெரிவித்து, கப்படோசியா சுற்றி பார்க்கும் மொத்த செலவையும் அவரே ஏற்பார். அது மட்டும் இல்லாமல் மட்பாண்டங்கள் செய்வதில் அனுபவம் பெற்ற இவரிடம் இலவசமாக மட்பாண்டங்கள் செய்யவும் கற்றுக் கொள்ளலாம்.

நிச்சயமாக, கடைக்குள் நுழையும் ஒவ்வொரு பெண்ணும் தனது தலைமுடியை விட்டுச் செல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒரு சிறிய நன்கொடை செய்ய விரும்பினால், கத்தரிக்கோல், காகிதம், பேனாக்கள் மற்றும் டேப் அனைத்தும் வழங்கப்படும். முடி அருங்காட்சியகம் மட்டும் அல்லாமல் இவரது மட்பாண்ட கடையும் துருக்கிய கைவினைப் பொருட்களின் பாரம்பரிய பாணி வரலாற்று, சமகால, மலர் மற்றும் வடிவியல் வடிவமைப்புகளுடன் அற்புதமான கையால் செய்யப்பட்ட மட்பாண்ட தொகுப்பை வைத்துள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 09, 2023 12:45 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக