Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
Page 1 of 1
வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
கோடைக்காலம் துவங்கி, வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் நாம் மன்றாடி வருகிறோம். பத்து நிமிடத்திற்கு மேல் வெயிலில் நின்றாலே யில் நனைந்ததுபோல வியர்வையால் நனைந்துவிடுகிறோம். வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்கள். |
உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது, வியர்வைச் சுரப்பிகள் உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேறும். வியர்வை சுரப்பியின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் வியர்க்குரு உருவாகிறது. இதை, `வேர்க்குரு’ அல்லது `வியர்க்குரு’ (Prickly Heat) என்கிறோம். இது கோடை காலத்தில் ஏற்படும் தொந்தரவு தவிர வியாதி அல்ல. இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற பழக்கங்களாலும் ஏற்படலாம். இதனை, இயற்கையாக போக்கும் வைத்தியங்கள் பற்றி இங்கு காண்போம். |
மஞ்சள் மற்றும் அறுகம் புல் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதனை உடலுக்கு தேய்த்து குளித்து வர வெப்ப சொறி நீங்கும். அல்லது மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். #வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.
சிறிதளவு நெல்லிக்காய் உடன், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் (Terminalia bellirica) சேர்த்து நன்கு பொடியாக்கி, அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பின்னர் ஆற விட்டு குடித்து வர வெப்பத்தால் ஏற்படும் சொறி குறையும்.
இளநீர், கருப்புச்சாறு, வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி சாறு போன்றவற்றை பருகுவதால், உடலின் நீரிழப்பு சரி செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த பானங்கள் வெப்ப சொறியினை குறைக்க உதவுகிறது.
கோடை காலத்தில் கிடைக்கும் பனம் நுங்கு, உடல் உஷ்ணம் மற்றும் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த உதவுகிறது. அந்த வகையில், வெப்ப சொறியினை போக்க பனம் நுங்கு சாப்பிடலாம். அல்லது கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.
வெப்ப சொறி உட்பட, வெப்பத்தால் ஏற்படும் பல வகை சரும நோய்களுக்கு சந்தனம் ஒரு சிறந்த தீர்வு ஆகும். இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, வெப்ப சொறி பரவலை தடுக்கிறது.
கடலைப் பருப்பு, வெந்தயம் மற்றும் பாசிப்பயறினை சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்து பொடியாக அரைத்து, அதனை குளியலின் போது பயன்படுத்தி வர வெப்ப சொறி பிரச்சனை குறையும்.
வேப்பிலையுடன், சிறிதளவு மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து அரைக்க கிடைக்கும் கலவையினை உடலில் தேய்த்து குளித்து வர வெப்பத்தால் ஏற்படும் தடிப்புகள், சொறி மற்றும் #வியர்குரு குறையும்.
குறிச்சொற்கள் #வியர்க்குரு #வேர்க்குரு #miliaria #prickly_heat |
Re: வியர்க்குரு அல்லது வேர்க்குரு - இயற்கை வைத்தியங்கள்
வெயில் காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குரு... இயற்கை முறையில் எளிய தீர்வுகள்!
வியர்க்குரு பிரச்னையை, தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்; எளிதாகத் தடுக்கலாம்
கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. சில நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வியர்வை கொட்டுகிறது. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் எனப் படையெடுக்கும் நோய்களின் பயமுறுத்தல்.
கோடைக்கால நோய்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாடாய்ப்படுத்தும் முக்கியமான பிரச்னை வியர்க்குரு. இதனை, நம் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சமாளிக்கலாம்; தடுக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். வியர்க்குரு பிரச்னைக்கான தீர்வுகளாக அவர் பகிர்ந்தவை...
எப்படி உருவாகிறது வியர்க்குரு?
உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்குப் படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.
வியர்வையால் இந்தச் சிறிய கட்டிகள் வருவதால், இதை `வேர்க்குரு’ அல்லது `வியர்க்குரு’ (Prickly Heat) என்கிறோம். இது தொந்தரவே தவிர, வியாதி அல்ல. அதே நேரத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.
வியர்க்குரு யாரை பாதிக்கும்?
கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.
இயற்கை முறையில் தீர்வுகள்
* நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.
* வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
* வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.
* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.
* அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.
* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.
* பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.
* கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.
* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.
* உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* நேரம் தவறித் தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.
* குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு நெருங்காது.
கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில அவசியமான பழக்கங்கள்...
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* முடிந்த வரையில் குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் இரு முறை குளிக்க வேண்டும்.
* வாரத்தில் இரு தினங்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
* வெயிலில் வெகு நேரம் அலைவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, காலை 12 முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்கலாம். அப்படிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், கறுப்பு நிறக் குடைகளை தவிர்த்துவிட்டு, வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்தலாம்.
* உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க, இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
குறிச்சொற்கள் #வியர்வை #வியர்க்குரு #வேர்க்குரு #miliaria #prickly_heat |
Similar topics
» இருமலுக்கு இயற்கை வைத்தியங்கள்!
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» ஆதிகால வைத்தியங்கள்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» ஆதிகால வைத்தியங்கள்
» இன்னலும் துன்பமும் புலிகளுக்கு வருவது இயற்கை; அதை அவர்கள் வெல்வதும் இயற்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|