ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை கால பானங்கள்

Go down

கோடை கால பானங்கள் Empty கோடை கால பானங்கள்

Post by சிவா Wed Mar 29, 2023 10:54 pm

பாரம்பரிய பானங்கள்


வாயுக்கள் நிரப்பப்பட்டு, `சுவையூட்டிகள்’ சேர்க்கப்பட்டு, கெடாமல் இருக்க ரசாயனக் கலவைகள் கலக்கப்பட்டு, பழங்களின் சத்து என்று பொய் முலாம் பூசப்பட்டு, பல் கூச்சம் உண்டாகும் அளவுக்கு `சில்’லெனக் கிடைக்கும் செயற்கைக் குளிர்பானங்களைத் தொடர்ந்து அருந்துவதால் எலும்பு அடர்த்தி குறைவு நோய், வயிற்றுப் புண், செரியாமை, உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவை நம் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளது என்கின்றன ஆராய்ச்சிகள்.

கடந்த இருபது ஆண்டுகளாகப் பன்னாட்டு செயற்கை பானங்களிடம் அடிமைப்பட்டு நோய்களால் அவதிப்படுகிறோம். கழிப்பறையைச் சுத்தம் செய்யும் அமிலத்தைப் போலப் பயன்படும் ஒரு செயற்கை பானம், நம் உடலில் எப்படிப்பட்ட வன்முறையை அரங்கேற்றும் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இந்தக் கோடையிலிருந்தாவது இயற்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரிய பானங்களைப் பருக ஆரம்பிப்போம். கோடைக் காலத்தில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்யவும், இழந்த ஆற்றலை மீட்கவும், தாகத்தைத் தணித்துக்கொள்ளவும், வெப்ப நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படும் பாரம்பரிய பானங்கள் என்னென்ன?

`மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு



முப்பது வருடங்களுக்கு முன்புவரை, இல்லம்தோறும் தேவையான அளவுக்குக் கம்பரிசி இருந்தது. வெயில் காலம் வரும்போது, கம்பஞ்சோற்றோடு மோரும் சின்ன வெங்காயமும் கலந்த குளிர்ச்சியான பானம் தயாரிக்கப்பட்டு அருந்தப்பட்டது. ஆனால் இன்றைக்குக் கம்பு, கேழ்வரகு என்றாலே முகத்தைச் சுளிக்கும் இளவட்டங்கள் பட்டிதொட்டிகளில்கூட பெருகிவிட்டனர். பாரம்பரியச் சிறுதானியமான கம்பில் மருத்துவக் குணங்கள் அதிகம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

‘கம்பு குளிர்ச்சியெனக் காசினியிற் சொல்லுவர்காண்’ என்று எழுதி, கம்பங் கூழானது உடலுக்குக் குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கும் என்கிறார் சித்தர் அகத்தியர். போர் வீரர்களுக்குப் புஷ்டி கொடுக்கக் கம்பு அடை, கம்பு சோறு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதை வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறியலாம். நம்முடைய பாரம்பரிய ஊட்டச்சத்து பானங்கள், நெடுங்காலமாகக் கம்பின் துணையுடன் தயாரிக்கப்பட்டவைதான். உடல் வெப்பத்தைக் குறைப்பதுடன் நல்ல பலத்தையும் தருகிறது. கொதிக்கும் கோடைக் காலத்துக்குக் கம்பை அடிப்படையாகக் கொண்ட உணவைத் தாராளமாக உண்ணலாம். அதேவேளையில், தோல் நோய் உள்ளவர்கள் மட்டும் கம்பை அதிகம் பயன்படுத்தக் கூடாது. ‘கவி சக்கரவர்த்தி’ கம்பர்போல, ஏழைகளின் ‘மருத்துவச் சக்கரவர்த்தி’ கம்பு எனலாம்!

நலம் தரும் நன்னாரி



சுவையாலும் வாசனையாலும் மதிமயங்கச் செய்யும் நன்னாரி சர்பத், மிகச் சிறந்த குளிர்ச்சியூட்டி. நன்னாரி வேரை ஆறு மணி நேரம் நீரில் ஊறவைத்து, பின் லேசாகக் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறும், சிறிது பனைவெல்லமும் சேர்த்தால் நலமான நன்னாரி சர்பத் தயார். மொகலாய சக்கரவர்த்தி பாபரின் சுயசரிதையான ‘பாபர் நாமாவில்’ சர்பத் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. `பித்தம் அதி தாகம் உழலை’ என வெப்ப அறிகுறிகளைக் களை எடுக்கும் ஆயுதமாக நன்னாரியைப் பிரயோகிக்கலாம் என்கிறார் தேரையர்.

இது உமிழ்நீர்ச் சுரப்பிகளின் (Salivary glands) செயல்பாட்டை அதிகரித்து, நாவறட்சியைப் போக்குகிறது. உடலில் உண்டாகும் வியர்வை நாற்றத்தைத் தடுப்பதுடன், ரத்தத்தையும் தூய்மை படுத்தும் (Blood purifier) நன்னாரியை, `மருத்துவத் துப்புரவாளர்’ எனலாம். நன்னாரி சர்பத்துடன் இளநீரும், நுங்கு கூழ்மத்தையும் சேர்த்து மது கலக்கப்படாத ஆரோக்கிய `காக்டைல்’ பானம், சில நூற்றாண்டுகளுக்கு முன் பிரசித்தமாக இருந்தது.

நன்னாரியில் சாப்போனின்கள், சைட்டோஸ்டீரால், வேனிலின் என முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. மனதைச் சாந்தப்படுத்தும் பொருட்களும் இதில் இருப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக் கின்றன. பரபரக்கும் அதிவேக மனிதர்களின் மனதைச் சாந்தப்படுத்தும் `மனசாந்தினியாகவும்’ நன்னாரி செயல்படுகிறது.

வெப்பம் தணிக்கும் கரும்புச் சாறு



சங்க கால மக்கள், கரும்பின் இனிப்பான சாற்றை விருப்பத்தோடு பருகியதாக `கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்’ என்ற பெரும்பாணாற்றுப்படை பாடல் வரி தெரிவிக்கிறது. தேனின் சுவைக்கு ஒப்புமை கூறும் அளவுக்கு இனிப்பான கருப்பஞ்சாறு, உடலின் அழலைத் தணிக்கக் கூடியது. அதிகரித்த பித்தத்தைக் குறைத்து, வெயில் காலத்தில் உண்டாகும் நீர்க்கடுப்பையும் தடுக்கிறது.

தேகத்தில் நெருப்புபோலத் தகிக்கும் எரிச்சலைக் குறைக்க, `குளு குளு பவுடர்’ விளம்பரங்களை நம்பி ஏமாறாமல், கரும்பஞ்சாற்றோடு தயிர் சேர்த்து அருந்துவதால் தேக எரிச்சல் நிவர்த்தியாகும்’ என்று சவால் விடுகிறது சித்த மருத்துவக் குறிப்பு ஒன்று. கருப்பஞ்சாற்றோடு இஞ்சி, எலுமிச்சை கலந்த பானம், செரிமானத் தன்மையை அதிகரித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. கருப்பஞ்சாறும் இஞ்சிச் சாறும் செரிமானத்துக்குத் தேவையான சுரப்புகளை (Digestive juices) அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

இதம் தரும் பதநீர்



பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

பனை மரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் முக்கிய பானம் பதநீர். உடலுக்குக் குளிர்ச்சியையும் ஊட்டத்தையும் தரவல்லது பதநீர். விரைவில் செரிமானமாகி உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். தென் தமிழகத்தின் அநேக இடங்களில், பதநீரில் ஊற வைத்த நுங்கை ருசிப்பது அலாதியான அனுபவம். சுவையோடு சேர்த்து வெப்பத்தையும் தணிக்கவல்லது இந்தக் கலவை. பதநீரில் சுக்கு சேர்த்துத் தயாரிக்கப்படும் சில்லுக் கருப்பட்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை போன்றவையும் பதநீரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

காலங்களைத் தாண்டிய எலுமிச்சை



எலுமிச்சை சாற்றோடு, பனை வெல்லம் அல்லது உப்பு சேர்த்து அருந்துவதால் உற்சாகம் கரைபுரள்வதோடு, உடலின் நீர்ச்சத்தும் அதிகரிக்கும். மாரத்தான் போட்டியாளர்களும் அக்காலத்தில் மலைகளைக் கடந்து பயணம் செய்வோரும் ஆற்றலுக்குப் பயன்படுத்தியது எலுமிச்சையைத்தான். பொன் நிறத்தில் வறுக்கப்பட்ட சிறிதளவு சீரகத்தை எலுமிச்சை சாற்றில் கலந்து அருந்த, சூட்டினால் வரும் பேதி தடைபட்டு நிற்கும்.

பாரம்பரிய பானங்கள்



அரிசியைக் கழுவிய கழுநீரில் பனைவெல்லமும், சிறிது வெண்ணெயும் கலந்த காலை பானம் வெயிலுக்கு உகந்தது. சுகப் பிரசவம் உண்டாக்க, கர்ப்பிணிகளுக்கு இன்றும் சில கிராமங்களில் இந்தப் பானம் அறிவுறுத்தப்படுகிறது (அரிசி கழுவிய நீருக்குப் பதில், சீரகம்/ சோம்பு கலந்த நீரையும் பயன்படுத்தலாம்). வெப்பத்தால் ஏற்பட்ட சோர்வைப் போக்க, மோர் சேர்ந்த கேழ்வரகுக் கூழுடன், பச்சை வேர்க்கடலையைக் கலந்து கொடுக்கும் வழக்கம் வடஆர்க்காடு மாவட்டத்தில் அதிகம் உள்ளது. வெட்டிவேர், சீரகம், வெந்தயம் கலந்த தண்ணீர் உள்ளுறுப்புகள்வரை குளிர்விக்கும்.

கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு நோயுண்டாக்கும் `ஃபிரிட்ஜ்’ நீருக்குப் பதிலாக, நீரில் கருப்பட்டி கரைத்த இனிப்பு பானத்தைக் கொடுத்து மகிழ்விக்கலாம். பன்னெடுங்காலமாக உள்ள நீராகாரம், கோடைக்கு ஏற்ற இதமான பானம்.

இவை மட்டுமல்லாமல் அனைத்து பானங்களுக்கும் அடிப்படையான தண்ணீரை மண்பானைகளில் சேமித்து வைத்து, ஒரு நாளைக்கு 3 4 லிட்டர்வரை அருந்துவது அவசியம். கற்றாழைக்குள் இருக்கும் கூழ் போன்ற பகுதியை எடுத்து மோர், சீரகம் சேர்த்து மத்தைக்கொண்டு கடைந்து கிடைக்கும் குளிர்ச்சிமிக்க பானத்தை, வேனிற் காலத்தில் பயன்படுத்தலாம். கிர்ணி (முலாம்), சாத்துக்குடி, மாதுளை, திராட்சை ஆகிய இயற்கை பழச்சாறுகளைத் தாராளமாகப் பருகலாம். பழச்சாறுகளைவிட பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இருந்தாலும் வெயில் காலத்தில் நீரிழப்பை சமன் செய்வதற்குப் பழச்சாறுகளை அருந்துவதில் தவறில்லை. சுவையூட்டச் சர்க்கரைக்குப் பதில் வெல்லத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

செயற்கை பானங்களைத் தவிர்த்து, நம்மோடு உறவாடும் இயற்கை பானங்களுக்கு வாக்களித்து கோடைக் காலத்தைக் குளுமையாகக் கடத்துவோம்.

டாக்டர் வி.விக்ரம்குமார்,
அரசு சித்த மருத்துவர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோடை கால பானங்கள் Empty Re: கோடை கால பானங்கள்

Post by சிவா Wed Mar 29, 2023 10:58 pm

கோடைக்கு ஏற்ற குளிர்ச்சி பானங்கள்


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்


தேவையான பொருட்கள்

ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
குளிர்ந்த பால் - 1 டம்ளர்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்.

செய்முறை: சுத்தம் செய்த ஸ்ட்ராபெர்ரி பழங்களுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பின்னர், ஸ்ட்ராபெர்ரி விழுதுடன் ஒரு டம்ளர் குளிர்ந்த பால் சேர்த்து அதனுடன் ஏதாவது ஒரு ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார்.

பயன்கள்: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் காணப்படும் வைட்டமின் பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள் சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப்பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன.

மேலும், ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும் ஏராளமான நார்ச்சத்துகளும் நிறைந்தது. இதனை கோடைகாலத்தில், அடிக்கடி மில்க் ஷேக் செய்து அருந்தி வர, உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு இதனை காலை உணவாகவும் சாப்பிடக் கொடுக்கலாம்.

கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு ஜூஸ்


தேவையான பொருட்கள்

கேரட் - 2
வெள்ளரிக்காய் - பாதியளவு
ஆரஞ்சு - 1
சர்க்கரை - அரை கப்
தண்ணீர் - 1 டம்ளர்.

செய்முறை: கேரட், வெள்ளரிக்காய், ஆரஞ்சு பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன், சிறிது உப்பு, தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஜூஸை நன்கு வடிகட்டி விட்டு பரிமாறவும். சர்க்கரை விரும்பாதவர்கள் ஜூஸை வடிகட்டிய பின், தேன் கலந்து குடிக்கலாம். சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பயன்கள்: கேரட்டில், கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. வெள்ளரிக்காயில் நீர் சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், வெள்ளரிக்காய் இன்சுலின் சுரப்பிற்கும் உதவுகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் உற்பத்தியைப் பராமரிக்கின்றன. மேலும், உடலை குளிர்ச்சியாகவும் வைக்க உதவுகிறது. எனவே, வெயில் காலத்தில் அனைவரும் அருந்த உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானது.

கசகசா கீர்


தேவையான பொருட்கள்:

கசகசா விதை - 2 தேக்கரண்டி
வெல்லம்- ¼ கிலோ
தேங்காய் - அரை மூட்டி
முந்திரி - 8-10
கிஸ்மிஸ் - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர்- 2 டம்ளர்
ஏலக்காய் - 4.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து முதலில் வெல்லப்பாகு தயார் செய்ய வேண்டும். பின்னர், கசகசா, முந்திரி, ஃப்ரஷ்ஷாக துருவி அரைத்த தேங்காய் மற்றும் ஏலக்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல மைய அரைக்க வேண்டும். பின்பு வெல்லப்பாகில் இந்த அரைத்த கசகசா விழுதைச் சேர்த்து கொதி வரும் வரை வேகவைக்க வேண்டும். கசகசா கீர், பாயசம் பதத்துக்கு வந்ததும் இறக்கிவிட வேண்டும். பின்னர், முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்து சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். சுவையான ஆரோக்கியமான கசகசா கீர் தயார்.

பயன்கள்: பாப்பி விதைகள் எனும் கசகசாவில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கசகசா உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனை கோடைக்காலத்தில் அடிக்கடி பாலுடன் கலந்து அருந்தி வர , உடல் குளிர்ச்சி பெறும். மேலும், இந்த கசகசா கீர் இரவில் அருந்த நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. இது இந்திய கர்நாடக மாநிலத்தின் கிளாசிக் உணவு வகைகளில் ஒன்றாகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோடை கால பானங்கள் Empty Re: கோடை கால பானங்கள்

Post by சிவா Wed Mar 29, 2023 11:01 pm


சூட்டை தணிக்கும் நன்னாரி


#கோடை வந்துவிட்டாலே உடல்சூடு, வேர்க்குரு, கட்டி என வந்து தொல்லை கொடுக்கும். இதற்கு #நன்னாரி சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் உடலுக்கும் பல நன்மைகளைத் தருகின்றது. நன்னாரி, கொடி வகையைச் சேர்ந்தது. இலை நீண்டு ஊசிபோல் ஒடுங்கி இரு்ககும். இலையின் நடுவில் வெண்மை கலந்த பச்சையும், ஓரங்களில் அடர் பச்சை என இரண்டு வகைகளில் உள்ளது. சுருள், சுருளாக இருந்தால் சீமை நன்னாரி, மாகாளிக் கிழங்கு வேர்தான் நாட்டு நன்னாரி.

இதை பானங்கள் தயாரிக்கவும், நோயைக் குணப்படுத்தவும் பயன்படுத்துவர். இதன் வேரை தண்ணீரில் ஊற வைத்து கஷாயமாகவோ, சர்பத்தாகவோ அருந்த நல்ல பலன்களைப் பெறலாம். நன்னாரிப் பொடியை ஒரு கப் பாலில் 1 தேக்கரண்டி கலந்து குடிக்க சிறுநீர் மஞ்சளாக போவது நிற்கும். கஷாயத்தை சிறிது பால் சேர்த்து சாப்பிட வயிற்றுப்போக்கு, இருமல் குணமாகும். வேரைச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து சீரகம் சர்க்கரை சேர்த்து நெய்யில் குழைத்து தினமும் 2 வேளை 10 நாட்கள் சாப்பிட சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, உடல் சூடு குணமாகும். நன்னாரி பசியைத் தூண்டும் சூட்டைத் தணிக்கும் உடம்பிற்கு குளிர்ச்சியைத் தரும்.

இது வாதம், மூட்டுவலி, சிறுநீரகக் கோளாறு, வேர்க்குரு, வேனல்கட்டி, தலைசூடு, தலைவலிக்கு மருந்தாக தீர்வளிக்கிறது.நன்னாரி வேரைக் காய்ச்சி நீரில் பெருங்காயம் நெய் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அல்சர் வராது. பால் அல்லது டீ காய்ச்சி இறக்கியதும் சர்க்கரை போடும்போது நன்னாரி வேர்ப் பொடியையும் ஒரு தேக்கரண்டி சேர்த்து குடிக்க மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குடிக்கும் பானைத் தண்ணீரில் நன்னாரி வேரை நன்கு கழுவி விட்டு துளசியுடன் சேர்த்து போட்டு வைக்க, தண்ணீர் மணமாக இருப்பதுடன் கோடையின் தாகத்தையும் தீர்க்கும். குளியல் பொடி தயாரிக்கும்போதும், நன்னாரி வேரை சேர்த்துக் கொள்ள மணமாக இருப்பதுடன் தோல் நோய்கள் வராமல் தடுக்கும். மேலும், உடலை உஷ்ண நோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோடை கால பானங்கள் Empty Re: கோடை கால பானங்கள்

Post by சிவா Thu Mar 30, 2023 12:16 am

பழ லஸ்சி
கோடை கால பானங்கள் E_63217



தேவையானவை:



வாழைப்பழம் - 1
கொய்யா பழம் - 1,
சப்போட்டா பழம் - 1,
கிர்ணி பழத்துண்டுகள் - ஒரு கிண்ணம்,
ஆரஞ்சு சுளைகள் - 10,
புளிக்காத தயிர் - 200 மி.லி.,
சர்க்கரை - 100 கிராம்.

செய்முறை:



வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். கொய்யா பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக்கவும், சப்போட்டா மற்றும் கிர்ணி பழத்தின் தோல் உரித்து, விதை எடுத்துக் கொள்ளவும்.ஆரஞ்சு சுளைகளை மெல்லிய தோல் நீக்கி, விதை எடுத்து, எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்து, தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து, 10 நிமிடம், பிரிஜ்ஜில் வைக்கவும்.

அருமையான பழ லஸ்சி தயார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோடை கால பானங்கள் Empty Re: கோடை கால பானங்கள்

Post by சிவா Sun Apr 02, 2023 8:00 pm

இளநீர் சர்பத்!


தேவையானவை:


லேசான வழுக்கையுடன் கூடிய செவ்விளநீர் மற்றும் நாட்டு இளநீர் தலா - 1, நன்னாரி சர்பத் - ஒரு தேக்கரண்டி, சப்ஜா விதைகள், சர்க்கரை - ஒரு தேக்கரண்டி, கொஞ்சம் ஐஸ் கட்டிகள்.

செய்முறை:


இரண்டு இளநீர்களையும் வெட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். இரண்டு இளநீர்களின் வழுக்கைகளையும் நறுக்கி, இளநீரில் சேர்க்கவும்.

சப்ஜா விதைகளை சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து எடுத்து, அதனுடன் நன்னாரி சர்பத், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து பருக, சுவையான, சத்தான இளநீர் சர்பத் தயார்.

வெள்ளரிப் பிஞ்சு சாலட்!


தேவையானவை:


வட்டமாக நறுக்கிய வெள்ளரிப் பிஞ்சு - 1 கப், (வெள்ளரியில் விதை அதிகம் முற்றாமல் இருக்க வேண்டும்) தக்காளி, பெரிய வெங்காயம், கேரட் தலா - 1. மூன்றையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். மிளகு துாள் - 2 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு.

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு எடுத்து பவுலில் போட்டு, அப்படியே சுவைக்கலாம். கோடைக்கு இதமான சாலட் இது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோடை கால பானங்கள் Empty Re: கோடை கால பானங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum