புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
30 Posts - 81%
heezulia
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
1 Post - 3%
viyasan
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
209 Posts - 41%
heezulia
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
21 Posts - 4%
prajai
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_m10புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Mar 2023 - 16:02

புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்? Vikatan%2F2023-03%2F762de0c9-9b3e-4d82-b247-65ee3a8fd47e%2FUntitled_6.jpg?rect=0%2C0%2C990%2C557&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

``ஐ.சி.சி-ன் முடிவு சட்டப்படி செல்லாது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கொந்தளித்த ரஷ்யா, அந்த நீதிமன்றத்துக்கு எதிராகவே வழக்கு பதிந்திருக்கிறது.

சமீபகாலமாக உலக நாடுகள் பலவற்றிலும் பதற்றமான சூழலே நிலவிவருகிறது.

போர், எல்லைப் பிரச்னை, ஏவுகணைச் சோதனை, போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் ஒருபுறமிருக்க, உலகத் தலைவர்கள் சிலர் கைதாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகிய மூவரையும் கைதுசெய்ய முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் எந்தெந்த வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள்...

விரைவில் கைதாவார்களா?

2006-ம் ஆண்டு, அமெரிக்காவின் முக்கிய ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப், ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸை கோல்ஃப் போட்டி ஒன்றில் சந்தித்திருக்கிறார். அதன் பிறகு ட்ரம்ப்பும், அந்த நடிகையும் நெருக்கமான உறவில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 2016-ம் ஆண்டில் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தன்னுடன் உறவிலிருந்ததை மீடியாக்களிடம் வெளிப்படுத்தி, பணம் பெறும் திட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார் ஸ்டார்மி டேனியல்ஸ். இந்தத் தகவல் ட்ரம்ப்பின் காதுகளை எட்ட, ஸ்டார்மியிடம் பேரம் பேசி, பணம் கொடுத்து அவர் வாயை அடைத்திருக்கிறார். இதற்காகத் தன்னுடைய வழக்கறிஞர் மூலமாக ட்ரம்ப் சட்டவிரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை செய்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அந்தக் குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்துவந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் தான் கைதுசெய்யப்படவிருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். மேலும், `போராட்டத்துக்குத் தயாராகுங்கள்’ என்று தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். இதனால், ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பலரும் அமெரிக்க அரசின் சட்டத்துறை அதிகாரிகளுக்குச் சமூக வலைதளங்கள், இ-மெயில்கள் வாயிலாக மிரட்டல் விடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், ட்ரம்ப் கைதுசெய்யப்பட்டால் எப்படியிருக்கும் எனச் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன. ``ட்ரம்ப் கைதுசெய்யப்படுவதற்கான அறிகுறிகள் அமெரிக்காவில் தென்படுகின்றன. நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸார் தயார்நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகிக்கொண்டிருக்கும் ட்ரம்ப்புக்கு, இந்த விவகாரம் தலைவலியாக அமைந்திருக்கிறது’’ என்கின்றனர் ட்ரம்ப் வழக்கை உற்று நோக்குபவர்கள்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளைப் பதிந்திருக்கிறது ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்த நாட்டின் அரசு. குறிப்பாக, `பெண் நீதிபதியை மிரட்டியது’, `வெளிநாட்டுத் தலைவர்கள் வழங்கிய பரிசுப்பொருள்களை அரசுக் கருவூலத்தில் சேர்க்காமல் அதிக விலைக்கு விற்றது’ ஆகிய இரண்டு வழக்குகள் தீவிரமடைந்திருக்கின்றன. இவற்றில், பரிசுப்பொருள் மோசடி வழக்கில் ஆஜராக மறுத்த இம்ரானைக் கைதுசெய்ய உத்தரவிட்டது பாகிஸ்தான் நீதிமன்றம். இதைத் தொடர்ந்து, காவல்துறைக்கும் இம்ரான் ஆதரவாளர்களுக்குமிடையே வெடித்த மோதலால், பாகிஸ்தானே வன்முறைக் காடானது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், காவல்துறையுடன் தொடர் மோதலில் ஈடுபட்ட இம்ரானின் ஆதரவாளர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர். இம்ரான் கான் உட்பட அவரது நெருங்கிய வட்டத்திலுள்ள 17 பேர்மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. இதனால் மீண்டும் அவரைக் கைதுசெய்யும் முயற்சி முடுக்கிவிடப்படவிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் இரு பெரும் தலைவர்களும் வெளிப்படையாக மோதிக்கொண்டிருப்பதைப் பல தரப்பினரும் விமர்சித்துவருகிறார்கள்.

கடந்த ஆண்டு, பிப்ரவரி 24-ம் தேதியன்று தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போரில், தங்கள் நாட்டைச் சேர்ந்த 16,000-க்கும் அதிகமான குழந்தைகளை, சட்டவிரோதமாகக் கடத்திச் சென்றதாக ரஷ்யாமீது குற்றம்சாட்டியது உக்ரைன். இது தொடர்பான வழக்கை நெதர்லாந்திலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) விசாரித்துவந்தது. விசாரணையின் முடிவில், ``ரஷ்ய அதிபர் புதின் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்’’ என்றதோடு, அவருக்கு எதிராகக் கைது வாரன்ட்டையும் பிறப்பித்திருக்கிறது ஐ.சி.சி. ரஷ்யாவின் குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவர் மரியா லவோவா-பெலோவாவுக்கு (Maria Lvova-Belova) எதிராகவும் கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு’’ என்று வரவேற்றிருந்தார். 123 உறுப்பு நாடுகளைக்கொண்ட ஐ.சி.சி-யில் அமெரிக்கா உறுப்பினர் இல்லை என்றாலும், ஜோ பைடன் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்.

``ஐ.சி.சி-ன் முடிவு சட்டப்படி செல்லாது. இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கொந்தளித்த ரஷ்யா, அந்த நீதிமன்றத்துக்கு எதிராகவே வழக்கு பதிந்திருக்கிறது. புதினுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர், கைது வாரன்ட் பிறப்பித்த நீதிபதிகள்மீது கிரிமினல் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது ரஷ்யாவின் உயர்மட்ட விசாரணைக்குழு. ``ஐ.சி.சி-க்கு எனத் தனியாகக் காவல்துறை கிடையாது. அதன் கீழுள்ள 123 உறுப்பு நாடுகளில் புதின் கால் வைத்தால் மட்டுமே அவரைக் கைதுசெய்ய முடியும். அதற்கு, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். அதேநேரம், உலக அளவில் செல்வாக்குமிக்க தலைவராக வலம்வரும் புதினுக்கு, இது ஒரு பின்னடைவுதான். அவர் போர்க்குற்றம் இழைத்ததாக ஐ.சி.சி தெரிவித்திருப்பதால், புதினின் மதிப்பு உலக நாடுகள் மத்தியில் குறையும். பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட முடியாத சூழல் உருவாகும்” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

இந்த மூவரில் ரஷ்ய அதிபர் புதின் கைதாவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றாலும், ட்ரம்ப், இம்ரான் கான் ஆகிய இருவரும் விரைவில் கைதுசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது. இந்தப் பக்கத்தை நீங்கள் புரட்டும்போது அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 25 Mar 2023 - 18:31

பலநாட்டு தலைகளின் தலைகளுக்கு நல்ல காலமில்லையோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக