ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_m10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_m10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10 
heezulia
ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_m10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10 
i6appar
ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_m10ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?

Go down

ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Empty ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?

Post by சிவா Fri Mar 24, 2023 1:05 am

ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? Aebbc160-c807-11ed-95f8-0154daa64c44
1831இல் ரிச்சர்ட் வெஸ்டால் எழுதிய பாஸ்ட் அண்ட் லிலித்


யார் அது?

அவளை நன்றாகப் பாருங்கள், அது லிலித்.

யார்?

ஆதாமின் முதல் மனைவி. அவளுடைய அழகான கூந்தல் மீது காதல் கொள்ளாதீர்கள். அவளுடைய அழகுக்கு அழகு சேர்க்கும் ஒரு பணக்கார ஆபரணமாக இருந்தாலும், ஒரு இளைஞனை அந்த அழகுடன் அடையும் போது அவள் ஒருபோதும் அவனை விடமாட்டாள்."

1808 ஆம் ஆண்டின் ஜோஹன் வுல்ஃப்கேங் வான் கோத்தேவின் சிறந்த மேடை நாடகத்தில் லிலித் குறித்து வரும் குறிப்புகள் இவை.

பல்வேறு கூற்றுப்படி, சொர்க்கத்தை அடைந்த முதல் பெண் அவள் தான். ஆனால் அவள் ஆதாமுக்காக ஏவாள் படைக்கப்பட்டது போலவோ, ஆதாமாலோ படைக்கப்படவில்லை...

#லிலித் அதை நன்கு அறிந்திருந்தாள்.

பல நூற்றாண்டுகளாக, அவளது கதை பல்வேறு புனைவுகளாக வெளிவருகிறது.மந்திரங்கள், பேய் ஓட்டுவது, இசை, இலக்கியம் என பல பரிணாமங்களை அடைந்து இன்று நவீன உலகில் வீடியோ கேம்ஸ் மூலம் அவள் வலம் வருகிறாள்.

காணாமல் போன பெண்



பைபிளின்படி, லிலித் ஒரு வெற்றிடத்திலிருந்து பிறந்தார்.

ஏசாயா 34:14-ல் அவருடைய பெயர் ஒரே ஒரு முறை மட்டுமே காணப்படுகிறது.

"காட்டுப் பூனைகள் கழுதைப்புலிகளுடன் கூடும், ஒரு சாட்டிர் (satyr) மற்றொன்றை அழைக்கும்; லிலித்தும் அங்கேயே இளைப்பாறுவாள், அவனிடத்தில் அவள் இளைப்பாறுவாள்."

இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட விவிலிய உரையின் மிகப் பழமையான சாட்சியமான உப்புக்கடல் சுருள்களில், லிலித் "ஒரு ஞானிக்கான பாடல்" என்ற பாடலிலும் தோன்றுகிறார், இது பேயை ஓட்ட பயன்படுத்தக்கூடும்.

ஆதியாகமத்தில் (1:27) பல சந்தேகங்களுக்கும் பல்வேறு விளக்கங்களுக்கும் வழிவகுக்கும் ஒரு பகுதி உள்ளது.

கடவுள் தம் உருவில் மனிதனைப் படைத்தார்; கடவுளின் சாயலில் அவரைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். தேவன் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை நோக்கி: நீ பலனளித்துப் பெருகுங்கள் என்றார்.

இது மனித படைப்பின் ஆறாம் நாளில் நிகழ்கிறது. ஏழாவது நாள், கடவுள் ஓய்வெடுத்தார்.

பின்னர், "தான் உருவாக்கிய மனிதனை" ஈடனில் வைத்ததாகவும், அதன் பின்னரே, 2:18-இல் அப்பொழுது தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனியாக இருப்பது நல்லதல்ல; அவருக்கு ஒரு உதவி சந்திப்பாக மாற்றுவேன்" என்றார்.

2:21-இல் "தேவனாகிய கர்த்தர் ஆதாமின்மேல் ஆழ்ந்த உறக்கத்தை உண்டாக்கினார், அவர் தூங்கிவிட்டார். பின்பு அவன் தன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, மாமிசத்தை வைத்து மூடினார்;

2:22-இல் தேவனாகிய கர்த்தர் மனுஷனிடத்திலிருந்து எடுத்த விலா எலும்பிலிருந்து, ஒரு பெண்ணை உண்டாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

ஆறாம் நாளில் படைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது?

பாபிலோன் முதல் பைபிள் வரை



ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? D9193eb0-c807-11ed-95f8-0154daa64c44
பிரான்சின் ஆக்ஸெர் தேவாலயத்தின் ஈடன் தோட்டத்தில்
ஆதாம், ஏவாள், லிலித்தின் கறை படிந்த கண்ணாடி


“முதலில் படைக்கப்பட்ட இந்த உயிரினம் ஆண்ட்ரோஜினஸ்” என்று ஒரு விளக்கம் முன்வைக்கப்படுகிறது. இது ஒரே நேரத்தில் ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னர் பிரிக்கப்பட்ட ஒரு உயிரினம் என்று பொருள்.

“இரண்டு ஏவாள்கள் இருந்தனர், ஆதாமுக்கு முதல் ஏவாளை பிடிக்கவில்லை. அதனால் கடவுள் ஆதாமை திருப்திப்படுத்தும் வகையில் அதை மாற்றினார்” என்று மற்றொரு விளக்கமும் கூறப்படுகிறது.

பைபிள் எழுதப்படுவதற்கு முன்பு கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கும் - 5ஆம் நூற்றாண்டுக்கும் இடையே முன்பு குறைந்தது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இப்பகுதியின் கற்பனையில் லிலித் உயிருடன் இருந்த போதிலும், லிலித்துடனான தொடர்பு பின்னாளில் எழுத்தப்பட்ட தொகுப்பில் இருந்து உருவானது.

லிலித்தின் பெயரைப் பற்றிய முதல் குறிப்பு "கில்காமெஷின் காவியம்" (எழுதப்பட்டதில் மிகப்பழமையான காவியம்) மற்றும் கிமு 2000 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு பலகையில் காணப்படும் சுமேரிய புனைவுகளான "ஹுலுப்பு-மரம்" ஆகியவற்றில் காணப்படுகிறது.

விவிலிய இலக்கிய அறிஞர் ஜேனட் ஹோவ் கெய்ன்ஸ் எழுதியது போல , "அதன் இருண்ட தோற்றம் பாபிலோனிய அரக்கவியலில் உள்ளது - அங்கு கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளை வேட்டையாடிய இந்த சிறகுகள் கொண்ட ஆவியின் தீய சக்திகளை எதிர்கொள்ள தாயத்துகள் மற்றும் மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன."

"லிலித் பண்டைய இத்தியர்கள், எகிப்தியர்கள், இஸ்ரேலியர்கள், கிரேக்கர்களின் உலகிற்கு குடிபெயர்ந்தார்."

இதுவே ஏசாயா புத்தகத்தில் எந்த அறிமுகமும் இல்லாமல் தோன்றுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு அது தெரியும் என்று எழுத்தாளர் நம்பினார் என்பதற்கான அடையாளம் இது.

அது பாபிலோனிய தல்மூத்தில் (கி.பி. 500-600) இருந்தது, இது சட்ட விவாதங்கள், பெரிய ரபிகளின் பதிவுகள் மற்றும் பைபிளிலிருந்து வரும் பகுதிகள் குறித்த தியானங்களின் தொகுப்பாகும்.

பாபிலோனைப் போலவே தல்முடிக் லிலித்துக்கும் நீளமான கூந்தலும் சிறகுகளும் இருந்தன. அதில் லிலித் ஆரோக்கியமற்ற பாலியல் பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தாள் என குறிப்புகள் உள்ளன.

பின்னர் லிலித்தை மூலக் கதையில் இணைக்கும் பிற நூல்களும் உள்ளன.

குறிப்பாக கி.பி 1300 இல் ஸ்பெயினில் எழுதப்பட்ட, யூத மாய சிந்தனையின் இரண்டு அடிப்படை புத்தகங்களில் ஒன்றான 'கபாலா' என்று அழைக்கப்படும் புத்தகத்தில் இந்த குறிப்புகள் இருந்தன.

"ஆணாக ஆதாமும், பெண்ணாக உண்மையான லிலித்தும், அவனிடம் இருந்து படைக்கப்பட்டது" என்பதை அவர் உறுதிப்படுத்துகிறார். ஒரே நேரத்தில் ஆணும் பெண்ணுமாக இருந்து பின்னர் பிரிக்கப்படும் ஆண்ட்ரோஜினஸ் உயிரினமாக இருந்தார் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

ஆதாமை தன் எதிரியான ஏவாவுடன் பார்த்த லிலித், "பொறாமையில் பறந்து சென்று, தனிமையில் இருந்த ஆண்களைப் பிடித்து, அவர்களின் விதையைத் திருடி, பேய்க் குழந்தைகளைப் பெற்று, அவர்களை நோய்களுக்கு ஆளாக்கினாள்."

ஆனால், 8 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்ட ஒரு அநாமதேய கடிதம் தான் அந்த உறவைப் பற்றிய கூடுதல் விவரங்களை முதன்முதலில் வழங்கியது.

சமரசம் செய்ய முடியாத வேறுபாடுகள்



பாபிலோன் மன்னர் நேபுகாத்நேச்சரின் நோயுற்ற மகனைக் கவனிக்க பென் சிரா சென்றபோது, அவர் செனோய்(Senoy), சான்செனோய்(Sansenoy) மற்றும் செமாஞ்செலோஃப்(Semangelof) ஆகிய மூன்று மருத்துவ தேவதூதர்களின் பெயர்களைக் கொண்ட தாயத்தை பொறித்ததாக விவரிக்கும் ஒரு அத்தியாயத்தின் முன்னணி கதாபாத்திரம் லிலித் ஆவார்.

அவர்கள் யார் என்று நேபுகாத்நேச்சார் கேட்டபோது "கடவுள், ஆதாம் என்ற மனிதனையும் லிலித் என்ற பெண்ணையும் படைத்த சிறிது காலத்திற்குப் பிறகு, அவர்கள் சண்டையிட தொடங்கினர்" என்று பென் சிரா அவரிடம் கூறினார்.

லிலித்: "நான் கீழே படுக்க மாட்டேன்"

ஆதாம்: "நான் கீழே படுக்க மாட்டேன், ஏனென்றால் நான் மேல் நிலையில் இருக்கும்போது நீ கீழ் நிலையில் இருக்க மட்டுமே தகுதியானவள்."

லிலித்: "நாம் இருவரும் பூமியிலிருந்து படைக்கப்பட்டதால், நாம் இருவரும் சமமானவர்கள்."

அவர்கள் ஒரு உடன்பாட்டை எட்டப் போவதில்லை என்பதை உணர்ந்த லிலித், கடவுளின் விவரிக்க முடியாத பெயரின் புனித எழுத்துக்களான டெட்ராகிராமானை வெட்கமின்றி உச்சரித்துவிட்டு காற்றில் பறந்தார்.

ஆதாம் தன்னைப் படைத்தவர் முன் நின்று, "அகிலங்களின் இறைவனே, நீ எனக்குக் கொடுத்த பெண் என்னை விட்டு ஓடிப் போய்விட்டாள்" என்று கூறினான்.

அவள் திரும்பி வராவிட்டால், ஒவ்வொரு நாளும் ஆதாமின் நூறு குழந்தைகள் இறந்துவிடுவார்கள் என்று லிலித்திடம் சொல்ல கடவுள் மூன்று தேவதூதர்களை அனுப்பினார்.

ஆனால், அதற்கு மறுத்த லிலித், "குழந்தைகளை நோய்வாய்ப்படுத்துவதற்காகவே நான் படைக்கப்பட்டேன்; அவர்கள் ஆண் குழந்தைகளாக இருந்தால், பிறப்பு முதல் எட்டாம் நாள் வரை அவர்கள் மீது எனக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் பெண் குழந்தைகளாக இருந்தால், பிறப்பு முதல் இருபதாம் நாள் வரை மட்டுமே எனக்கு அதிகாரம்."

ஆனால் குழந்தைகளின் தாயத்தில் தேவதூதர்களின் பெயர்களையோ படங்களையோ பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.

என்றும் இருக்கும் லிலித்



ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்? 2346f5e0-c808-11ed-95f8-0154daa64c44
ஜான் கோலியர் எழுதிய 'லிலித்' நூலிலுள்ள குறிப்புகள்


இது லிலித் சொர்க்கத்திற்கு சென்ற பாதை குறித்து நன்கு அறியப்பட்ட பதிப்பு இதுவாகும். ஆனால் இது மிகவும் சர்ச்சைக்குரியது.

பல அறிஞர்கள் "பென் சிராவின் எழுத்துக்களை" ரபிய சிந்தனையின் பிரதிநிதியாக அங்கீகரிக்காதது ஒரு காரணமாகும்.

பைபிள், தல்மூத் மற்றும் பிற ரபினிக்கல் விளக்கங்களை கேலி செய்யவும், வேண்டுமென்றே நையாண்டிக் கட்டுரையாக இதைக் கருதியவர்களும் இருந்தனர். ஏனெனில் அதன் மொழி பெரும்பாலும் ஆபாசமாகவும், அதன் தொனி மரியாதையற்றதாகவும் இருந்தது.

லிலித் குறித்த புராணங்கள் மற்றும் வரலாறு விவாதத்திற்கு உட்பட்டது. ஆனால் பண்டைய கதைகளின் பாதைகளில் நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொண்டால், பென் சிராவின் பதிப்பு ஒரு குறிப்பிட்ட மதிப்பைக் கொண்டுள்ளது.

"நாங்கள் லிலித்", 2018-ம் ஆண்டு பிரான்சில் நடந்த பேரணியில் ஒரு சிறுமியின் கையில் இருந்த பதாகை

தனது உரிமைகளை விட சொர்க்கத்தை விட்டுக் கொடுக்க விரும்பிய ஒரு பெண் அவள். அதுமட்டுமல்ல, யூதர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காகத் செங்கடலில் வசிக்கச் சென்றாள்.

இவை அனைத்தும் மத்திய காலத்தின் தொடக்கத்தில் இருந்தன.

ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் ஏன் பின்னாளில் படைக்கப்பட்டு, அவருக்குக் கீழ்படியுமாறு அறிவுறுத்தப்பட்டாள் என்பதை பென் சிராவின் அந்த சில வரிகள் விளக்கின.

ஆனால், அவள் ஏன் பயங்கரமானவளாக இருந்து பிறகு பெண்ணியத்தின் அடையாளமாக மாறினாள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, லிலித் தன்னால் சமமான வாழ்க்கையை வாழ முடியாததால், தான் ஈன்ற சிறகுகளுடன் உலகம் முழுவதும் தொடர்ந்து பறந்து வருகிறார். இது அடுத்தடுத்த தலைமுறைகள் பெண்கள் மீது வைத்திருக்கும் பார்வையை பிரதிபலிக்கிறது.

குறிச்சொற்கள் #ஆதாம் #ஏவாள் #லிலித் #பைபிள்
பிபிசி தமிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சரப்ஜித்தை காப்பாற்ற ரூ.25 கோடி கேட்ட பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர்
» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
» என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» இவங்களில் யார், ஷிவா ,யார் தமிழன் சரியாக சொல்லி ரோசெஸ் பெறுங்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum