by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
தமிழ்நாட்டின் 2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். |
இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிருக்கான உரிமைத்தொகை 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
பத்திரப்பதிவுக் கட்டணம் 4%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்வு,
கூடுதலாக ஒரு லட்சம் பேருக்குச் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க இலக்கு,
8.35 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ விரிவுபடுத்தப்படும்,
அடுத்த ஆண்டு, ஜனவரி 10, 11-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு என்பன போன்ற அறிவிப்புகள் கவனம் பெற்றிருக்கின்றன.
`ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற 1,000 பேர் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராக தலா 7,500 ரூபாயும், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெற்ற 1,000 பேருக்கு தலா 25,000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
`கோவையில், 9,000 கோடி ரூபாயிலும், மதுரையில் 8,500 கோடி ரூபாயிலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்...
ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்...
சேலத்தில் 880 கோடி ரூபாயிலும், விருதுநகரில் 1,800 கோடி ரூபாயிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
`விருதுநகர், வேலூர், கோவை ஆகிய இடங்களில் ரூ.410 கோடி செலவில் 4 சிப்காட் பூங்காக்கள்,
7 மாநகராட்சிகளில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவை,
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம், கோவையில் 172 கோடி ரூபாயில் செம்மொழிப் பூங்கா,
அந்தியூரில் 80,567 ஹெக்டேரில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்,
மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாயில் நான்குவழி மேம்பாலம்...
அடையாறு, கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ.1,500 கோடி செலவில் செயல் திட்டங்கள்...
1,000 கோடி ரூபாய் செலவில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் போன்றவை முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.
வருவாய்ப் பற்றாக்குறை 62,000 கோடி ரூபாயிலிருந்து 30,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருப்பதையும் அமைச்சர் உரையில் குறிப்பிட்டார். 2023-24 நிதியாண்டில் 1,43,197.93 கோடி ரூபாய் கடன் வாங்குவதற்கு, தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இதனால், வரும் நிதியாண்டு முடிவின்போது தமிழகத்தின் கடன் மதிப்பு 7,26,028.83 கோடி ரூபாயாக இருக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதிப்பிட்டிருக்கிறார். எனினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்துவது, சமையல் எரிவாயு மானியம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைப்பு, கல்விக் கடன் ரத்து, ஆசிரியர்களுக்குச் சம வேலை, சம ஊதியம் உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டிலும் இல்லாதது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பட்ஜெட் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை:
“மின்கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். தாலிக்குத் தங்கம், மகளிருக்கு ஸ்கூட்டர் என அ.தி.மு.க கொண்டுவந்த பல திட்டங்களை நிறுத்திவிட்டார்கள். இந்த இரண்டும்தான் வருவாய்ப் பற்றாக்குறை குறைவதற்குக் காரணம். `தகுதியானவர்களைக் கணக்கெடுத்து உரிமைத்தொகை வழங்குவோம்’ என்பது நியாயமில்லை. கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரனுக்குக் குறைவாக நகைக் கடன் பெற்ற 48 லட்சம் பேருக்கு பதிலாக 14 லட்சம் பேருக்கு மட்டும்தான் தள்ளுபடி அறிவித்தார்கள். அதுபோல இதுவும் ஆகிவிடக் கூடாது. அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் கொடுத்தால்தான் அது உரிமைத்தொகை. தேர்ந்தெடுத்துச் சிலருக்கு மட்டும் கொடுத்தால், அது உதவித்தொகை. காலைச் சிற்றுண்டி திட்டம் நல்ல திட்டம், வரவேற்கிறோம். ஆனால், இன்ஸ்டால்மென்ட் முறையில் நிறைவேற்றுவது மாணவர்களிடம் பாரபட்சம் பார்ப்பதற்குச் சமமானது. சிறு, குறு நடுத்தரத் தொழில்களுக்குப் போதுமான முக்கியத்துவம் இல்லை. பட்ஜெட்டில் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 3%-லிருந்து 1%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் 10 ஆண்டுக்கால ஆட்சி முடியும்போது கடன் மதிப்பு 4.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது மூன்றே ஆண்டுகளில் 7.5 லட்சம் கோடி ரூபாயாகக் கடன் அதிகரிக்கப்போகிறது என்று கணித்திருக்கிறார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது இந்த பட்ஜெட்” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
ஆனால், மாநில பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்க முடியுமோ, அதை யோசித்துத் தயாரித்திருக்கிறார்கள் என்கிறார் பொருளாதார வல்லுநர் சோம. வள்ளியப்பன். இது தொடர்பாக பேசிய அவர், “இதில் புதிய வரிகள் பெரிதாக இல்லை. பதிவுத்துறை வரிகளைக் குறைத்திருக்கிறார்கள். கல்வி, பெண்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். மகளிர் உரிமைத்தொகை எத்தனை குடும்பங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரியவில்லை. ஆறு மாதங்களுக்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதால், சுமார் ஒரு கோடிப் பெண்களுக்கு மேல் பயனடைவார்கள் என்று கருதுகிறேன். தகுதி அடிப்படையில் பெண்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தை இது போக்குகிறது. தொழில்துறைக்குப் பரவலாக ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். காவல்துறைக்குக் கூடுதல் ஒதுக்கீடு இருந்திருக்கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால், நன்கு யோசித்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்றே கூறலாம்” என்றார்.
பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றிருக்கும் இந்த பட்ஜெட்டின் திட்டங்கள், விரைவாகவும் குழப்பமின்றியும் செயல்பாட்டுக்கு வர வேண்டும்! |
குறிச்சொற்கள் #தமிழ்நாடு_பட்ஜெட்_2023_2024 |
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்