ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்!

Go down

H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! Empty H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்!

Post by T.N.Balasubramanian Mon Mar 13, 2023 8:58 pm

தொண்டை வலி, தொண்டையில் எரிச்சல், தொண்டை அரிப்பு, தொண்டை கட்டு இப்படி தொண்டை தொற்று பாதிப்பு கொரோனாவுக்கு பிறகு பரவலாக அதிகரித்துவருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த தொண்டை தொற்று பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவே இந்த கட்டுரை.



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601718

சுவாச குழாய் தொற்று என்பது சுவாச மண்டலத்தை பாதிக்கும் நிலை. இது உடலின் சுவாசத்துக்கு பொறுப்பாகும். இந்த நோய்த்தொற்றுகள் சைனஸ், தொண்டை, நுரையீரல் அல்லது காற்றுப்பாதைகளை பாதிக்கலாம். இந்த சுவாச நோய்த்தொற்றுகள் மேல் சுவாச நோய்த்தொற்றுகள், குறைந்த சுவாச நோய்த்தொற்றுகள் என்று இரண்டு வகைப்படும். மேல் சுவாச தொற்றின் போது மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை அறிகுறியாக தென்படும். இந்த தொண்டை தொற்று என்றால் என்ன, ஏன் உருவாகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதை விளக்குகிறார் பொதுநல மருத்துவர் எஸ். சகாய ஆண்டனி MBBS, MRCP(UK), பிரசாந்த் மருத்துவமனை.


​தொண்டை தொற்று என்றால் என்ன​



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601888

தொண்டை தொற்று என்று சொல்வதை காட்டிலும் இதை மேல் சுவாச குழாய் தொற்று அதாவது upper respiratory infection என்று தான் சொல்ல வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்று மூக்கில் இருந்து தொண்டை வழியாக( trachea ) காற்று குழாய் வழியாக நுரையீரலை சென்று அடைகிறது. மூக்கிலிருந்து காற்று இந்த upper trachea வரை இருப்பது மேல் சுவாசகுழாய் என்று சொல்வோம். இதற்குள் தொற்று ஏற்பட்டால் அது upper respiratory infection என்றழைக்கப்படுகிறது. இவை பாதிப்பை உண்டு செய்யும் இடத்துக்கு ஏற்ப அவை அழைக்கும் பெயர்களும் மாறுபடும்.


​தொண்டை தொற்று வகைகள்​



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601869



மூக்கில் வந்தால் இது Rhinovirus infection என்று சொல்லப்படுகிறது. இது மூக்குக்கு அருகில் சைனஸ் இருக்கும் இடத்தில் தொற்று நேர்ந்தால் அது rhinosinusitis infection என்று சொல்லப்படுகிறது. அப்படியே சற்று கீழ் பகுதிக்கு சென்று தொற்று உண்டு செய்யலாம். இது உள்நாக்கு அழற்சி Tonsillitis என்று சொல்லப்படுகிறது. வாய்ப்பகுதிக்குள் செல்லும்.

இதற்கு பிறகு காற்று நம்முடைய வாய்ஸ் பாக்ஸ் larynx அல்லது voice box பகுதிக்கு செல்லும். இது வெற்றுக்குழாய் ஆகும். தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு செல்லும் வழியில் மூச்சுக்குழாய்க்கு காற்று உள்ளே செல்ல அனுமதிக்கும். நம்முடைய Vocal cord அதாவது இங்குதான் குரல் நாண்கள் உள்ளது. நாம் பேசும் போது இவைதான் சத்தம் வெளிகொண்டுவர உதவுகிறது. அதனால் தான் இது voice box என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் தொற்று வரும் போது laryngitis என்று அழைப்போம். இதனால் சத்தம் பேசினாலும் வெளிவராது. அங்கிருந்து இன்னும் கீழ் பகுதிக்கு வரும் போது tracheitis என்று அழைக்கப்படுகிறது. இந்த itis என்பது அழற்சி நிலை ஆகும். இது வீக்கத்தால் வரக்கூடிய நிலை.



​தொண்டை தொற்று வருவதற்கு என்ன காரணங்கள்​



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601831



தொண்டை தொற்று வர பல காரணங்கள் இருந்தாலும் பொதுவான காரணமாக சொல்லப்படுவது வைரல் தொற்றுதான். இதில் பொதுவானது இன்ஃப்ளூயன்ஸா influenza virus வகை வைரஸ் தான். இதிலும் பலவிதமான துணை வைரஸ்கள் உண்டு. இவை எல்லாமே வேகமாக பரவக்கூடியவை.

அதனால் தான் இதை ஃப்ளூ என்று சொல்வார்கள். flu என்பது இன்ஃப்ளுயன்ஸா வைரலால் உருவாகிறது. upper respiratory infection with fever என்று சொல்லப்படுகிறது. இந்நிலை மூக்கு முதல் ட்ரக்கியா வரை இருக்கலாம். அல்லது அதற்கு கீழ் இருக்கலாம்.

தொண்டை தொற்றுக்கு காரணமான இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் Influenza A viruses

தொண்டை தொற்றுக்கு காரணமான இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் Influenza A viruses இதில் பல வகைகள் உண்டு.

இந்த Influenza A viruses -ல் H1N1 flu என்னும் வைரஸ் ஒன்று உண்டு. இதிலேயே அதிக வேரியண்ட் வைரஸ் உண்டு. H3 N2 இப்படி உண்டு. H1N1 என்பது தான் பொதுவானது. இதை தான் நாம் ஸ்வைன் ஃப்ளூ - swine flu என்று சொல்கிறோம்.

இந்த வைரல் தொற்றால் upper respiratory infection பாதிப்பு மக்களிடம் அதிகமாக பார்க்க முடிகிறது.



​தொண்டை தொற்றுக்கு பாக்டீரியல் தொற்று​



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601817



தொண்டை தொற்றுக்கு பாக்டீரியல் தொற்று காரணமாக இருக்கலாம். எனினும் இது மிதமானதாக இருக்கும். ஆண்டி பயாடிக் எடுத்துகொண்டாலே பெருமளவு சரியாகிவிடும்.

அதுவே streptococcus virus என்னும் தொற்று உண்டானால் தொண்டை தீவிரமான பாதிப்பை அடைந்துவிடும். ஏனெனில் இது நிம்மோனியா வரை கூட உண்டு செய்யலாம் என்பதால் இதை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.



​தொண்டை தொற்று தொற்று நோயா?​



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601800

கண்டிப்பாக இவை தொற்று தான். மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தும்மல், இருமல், வாய் வழியாக வெளிப்படும் எச்சில் துளியில் இருந்து பரவும். வீட்டிலும் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு எளிதில் பரவலாம்.

தொண்டை தொற்று மேல் சுவாச குழாயில் மட்டும் தான் வந்துள்ளது என்றால் அவை ஒரு வாரத்தில் சரியாகிவிடும். சிலருக்கு இதனால் வறட்டு இருமல் இரண்டு வாரங்கள் வரை இருக்கும்.

தொண்டை தொற்று சாதாரணமாக தான் வந்துள்ளதா அல்லது மோசமான தொற்றா என்பதை சுயமாக கண்டறிய முடியாது. ஆனால் தொண்டை தொற்று என்பது முதல் நாளில் தொடங்கி அடுத்த நாட்களில் அதிகமாக பரவி அதற்கடுத்த நாட்களில் படிப்படியாக குறைய தொடங்கும். ஆனால் இப்போது ரெட் அலர்ட் போன்று பலரும் தொண்டை தொற்று தீவிரமாக கொண்டுள்ளனர்.



​தொண்டை தொற்றுக்கு மருத்துவரை அணுகுவது எப்போது?​



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601775



தொண்டை வலி. தொண்டையில் விழுங்குவது சிரமம், பேசும் போது சத்தம் வராமல் இருப்பது எல்லாமே மருத்துவரை அணுக பரிந்துரைக்கும் அறிகுறியே. இது ஸ்டெப்டோகாக்கஸ் streptococcus அல்லது தீவிர H1N1 அறிகுறியாக இருக்கலாம்.

பேச்சு வராமல் இருக்கும் போது கண்டிப்பாக ஆண்டி பயாடிக் மருந்துகள் தேவைப்படும். மிக தீவிரமான நிலையில் உரிய மருத்துவ பரிசோதனை தேவைப்படும். அதுவே குடும்பத்தில் எல்லோருமே இந்த தொற்று இருக்கு என்று வரும் போது அவர்களுக்கு கண்டிப்பாக H1N1 பரிசோதனை தேவைப்படும்.

ஏனெனில் இவை கொரோனோ போன்று சுவாச குழாய் பிரச்சனை தீவிரப்படுத்தலாம். ஓமிக்ரான் நுரையீரலை பாதிக்கவில்லை. நிமோனியா உண்டு செய்யவில்லை. ஆனால் சுவாச பிரச்சனைகளை உண்டு செய்தது.



​தொண்டை தொற்று தவிர்க்க முடியுமா?​



H1N1 Influenza : ​மூக்கு முதல்தொண்டை வரை உண்டாகும் தொற்றுகள், மருத்துவர் தரும் விளக்கம்! 98601745

தொண்டை தொற்றுக்கு சுயமாக மாத்திரை எடுக்க கூடாது. இதனால் தொற்று தீவிரமான பிறகு சிகிச்சை வருகிறார்கள். பாரசிட்டமால் மாத்திரைகள் எடுக்கலாம்.

உப்பு நீரில் தொண்டையில் படும்படி வாய் கொப்புளிக்கலாம்.

ஆரோக்கியமான டயட் எடுத்துகொள்ளலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் எடுக்கலாம். அலர்ஜி இருந்தால் பழங்கள் தவிர்க்க வேண்டுமே தவிர மற்றவர்கள் பழங்கள் எடுக்கலாம். இது எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.

தொண்டை தொற்று இருப்பவர்கள் H1N1 பரிசோதனை செய்ய வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஆனால் தீவிரமாக இருக்கும் போது,. கொத்து கொத்தாக வீட்டில் அனைவரும் தொற்றுடன் வரும் போது மருத்துவரே இந்த H1N1 பரிசோதனைக்கு உட்படுத்துவார்.

இது ஸ்டெப்டோகாக்கஸ் streptococcus அல்லது H1N1 தொற்றாக இருந்தால் கண்டிப்பாக ஆண்டி பயாடிக் தேவை. மற்ற சாதாரண தொற்றுகள் விரைவில் சரியாகிவிடலாம்.




நன்றி சமயம் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் படிப்பவர்கள் ஜாக்கிரதை! மருத்துவர் தரும் எச்சரிக்கை டிப்ஸ்...
» கவர்ச்சியாக நடித்தது ஏன்? : விளக்கம் தரும் அஞ்சலி!
» உடலுறவு இல்லாமலே பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள்- மருத்துவர்கள் அறிவுரை
» எடை குறைக்கும், குரல் வளம் தரும், ஞாபகசக்தி தரும்... வெற்றிலை! #VikatanPhotoCards
» உலக கரன்சிகள் பனமாற்றம் அறிவது எப்படி, அதை பற்றி விளக்கம் தரும் வலை தளம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum