புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
29 Posts - 60%
heezulia
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
194 Posts - 73%
heezulia
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
8 Posts - 3%
prajai
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
3 Posts - 1%
Barushree
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_m10விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 01, 2023 2:33 pm

விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்' Ade0bc50-cfaa-11ed-ba41-8f6fba0dffcb

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபது, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜூவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

2 பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைக்கின்றனர்.

கதை என்ன?



அருமபுரி என்ற மலைகிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால் அந்த சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) தலைமையிலான மக்கள் என்ற படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கி போராடுகிறது. அந்த அமைப்பின் தலைவரான விஜய் சேதுபதியை கைது செய்ய செல்லும் காவல்துறை குழுவில், வாகன ஓட்டுநராக பணியாற்றுகிறார் குமரேசன்(சூரி).

உயர் அதிகாரியின் உத்தரவுகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரி சேத்தனால் மெமோ கொடுக்கப்படுகிறது.

தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்க போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய சேதுபதி பிடிப்பட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் மீதிக்கதை.

ஹீரோ சூரி



விடுதலை படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே அனைவரும் ஆச்சரியமாக பார்த்த ஒன்று, வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனாக நடிப்பது பற்றித்தான்.

அதை ஈடுசெய்யும் வகையில் சூரி இந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் என்று படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

காவல்துறை ஊழியராக வரும் சூரி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக மற்றொரு ரசிகர் தெரிவித்தார்.

குமரேசன் கதாப்பாத்திரத்தில் சூரி வாழ்ந்து இருக்கிறார், இது அவரின் வாழ்நாள் கதாப்பாத்திரமாக அமையும் என ஒருவர் தெரிவித்தார்.

"சூரியிடம் இப்படிப்பட்ட நடிப்பை எதிர்ப்பார்த்து நான் தியேட்டருக்கு வரவில்லை, காமெடி கதாபாத்திரத்தில் வரும் சூரி தான் இதுவா என்று அதிசயமாக இருந்தது" என்று ரசிகை ஒருவர் கூறினார்.

"காவல்துறையில் கடைநிலை ஊழியராக வரும் சூரி, உயர் அதிகாரியின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல், தனது தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்," என காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

விஜய் சேதுபதி vs சூரி



வெற்றிமாறன், விஜய் சேதுபதி கூட்டணியை பார்க்க தியேட்டருக்கு வந்தேன், ஆனால் விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகள் தான் இருக்கின்றன. சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை அவர் வழங்கி இருக்கிறார் என்றார் ஒரு ரசிகர்.

"முதல் பாகத்தில் விஜய் சேதுபத்திக்கு குறைவான காட்சிகள் மட்டுமே இருக்கிறது. அடுத்த பாகத்தில் அவருக்கு அதிக காட்சிகள் இருக்கலாம். ஆனால் அவர் நேர்த்தியான நடிப்பை வழங்கினார்."

"என்னுடைய எதிர்ப்பார்பை மீறி, விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது," என்று ரசிகை ஒருவர் தெரிவித்தார்.

"படத்தில் விஜய் சேதுபதியை விட சூரிக்கு தான் அதிக காட்சிகள் இருக்கிறது. விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் ஒரு துணை கதாப்பாத்திரம் போல வருகிறது," என்றார்.

'கதை ஓட்டத்துடன் இசை'



விடுதலை படத்திற்கு இளையராஜாவின் இசை பக்கபலமாக இருக்கிறது. புதிய இசையை இந்த படத்திற்காக அவர் வழங்கியிருக்கிறார் என்று ரசிகை ஒருவர் தெரிவித்தார்.

"வெற்றிமாறனின் காட்சி அமைப்பில் உள்ள உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்த இளையராஜாவின் பின்னணி இசை முக்கிய பங்காற்றுகிறது. திரைக்கதையின் ஓட்டத்தில் இசையும் சேர்ந்து பயணம் செய்கிறது."

"விடுதலை படத்தில் வரும் இரண்டு பாடல்களுக்கு ராஜா சாரின் இசையில் நன்றாக இருக்கிறது," என்றார் ஒரு ரசிகர்.

'உங்களை காயப்படுத்தும்'



"படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் வரும் காட்சிகள் நம்மை நிலை குலையச் செய்யும். என்னால் சில காட்சிகளை பார்க்க முடியவில்லை. ஆனால் அதில் வரும் அம்சங்கள் அனைத்தும் படத்திற்கு தேவையானவை. அந்தளவுக்கு வெற்றிமாறன் படத்தை அசலாக படம் பிடித்து இருக்கிறார்," என்று ரசிகை ஒருவர் தெரிவித்தார்.

"ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் பங்கு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கதை நடைபெறும் மலைக் கிராமத்தை அவரது கேமராவின் மூலம் நம்மால் நேரடியாக உணர முடிகிறது."

"படத்தின் தொடக்கத்தில் வரும் '7 நிமிட ஒரே ஷாட்', நிச்சயம் படத்தை அடுத்த வெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது."

"விடுதலை படத்திற்கு தேசிய விருது, ஆஸ்கார் விருது போன்ற அனைத்து விருதும் நிச்சயம் கிடைக்கும். நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கும் விருது கிடைக்கும்" என்று ஒரு ரசிகர் கூறினார்.

"படத்தின் இரண்டாவது பாதியில் ஊருக்குள் பெண்களிடம் செய்யும் வன்முறைகள் என் இதயத்தை கலங்கடித்தன. பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை படத்தில் பார்க்கும் போது ஒரு பெண்ணாக என்னால் அந்த வலியை உணர முடிந்தது," என ரசிகை தெரிவித்தார்.

“இது படமல்ல, ஒரு அனுபவம். முதல் 10 நிமிடத்தை நிச்சயம் மிஸ் பண்ணாதீங்க” என்று ஒரு ரசிகர் கூறினார்.

பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 01, 2023 2:37 pm

கதாநாயகனாக சூரி வெற்றி பெற்றாரா? ஊடகங்கள் சொல்வது என்ன?


சீட் நுனியில் உட்கார வைக்கும் காட்சிகள்



இந்தத் திரைப்படம் குறித்து ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

அரசின் திட்டங்கள், இயற்கை வளப் பாதுகாப்பு, மக்கள் எதிர்ப்பு, சில குழுக்களின் வன்முறை, காவல்துறை அடக்குமுறை, கடமைக்காகத் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுக்கும் அப்பாவிக் காவலர்கள் என்று தமிழ் சினிமாவில் பல கதைகள் இதற்கு முன்பும் வந்துள்ளன.

ஆனால், “அவற்றில் ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்கள் மட்டுமே முதல் வரியில் குறிப்பிட்ட விஷயங்களை அவரவர் சார்ந்த நிலையில் ஒரு வாழ்வியலாகக் காட்டுகின்றன. அப்படியொரு படத்தை இயக்குநர் வெற்றிமாறன் கொடுத்துள்ளார்,” என்று தினமலர் நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.

“படத்தின் தொடக்கக் காட்சிகளில் இருந்தே பார்வையாளர்களை பதற்றத்தில் இருக்க வைத்து, தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெற்றிமாறன் இயக்கியுள்ளார்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் விமர்சனம் வழங்கியுள்ளது.

“கதையில் வரும் பிரச்னைகளுக்கு வித்திடும் காரணங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும், அவற்றை வெற்றிமாறன் காட்சிப்படுத்தியுள்ள விதம், படம் பார்ப்பவர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ளார்,” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

“18 பக்கங்களைக் கொண்ட ‘துணைவன்’ சிறுகதையில் கதையின் மையப்புள்ளியை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் தனது கற்பனைகளையும் கலந்து வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே நாவல் ஒன்றை படமாக எடுத்து வெற்றி கண்டவர், இம்முறை இந்தச் சிறுகதையின் மூலம், உலகம் முழுவதும் மூன்றாம் தர நாடுகள், வளரும் நாடுகளில் நிகழும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் பெரும் கதையாடலை நடத்தியிருக்கிறார்,” என்று இந்து தமிழ் அதன் விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

கதாநாயகனாக சூரியின் நடிப்பு எப்படி?



“படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள காட்டுப்பகுதி, காவல்துறை குழு இருக்கும் இடம், கதாபாத்திரங்களுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள் என ஒவ்வோர் அம்சமும் குறிப்பிடும்படி அதிக ஈடுபாட்டை படத்தில் காட்டியுள்ளன,” என்று தினமலர் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

“வெற்றிமாறன் படத்தில் சூரி கதாநாயகனா என்று யோசித்தவர்கள், படத்தைப் பார்த்த பிறகு குமரேசன் என்ற போலீஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவுக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் என்பதை ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள்.

ஓர் இடத்தில்கூட இதற்கு முந்தைய நகைச்சுவை நடிகர் சூரியை பார்க்கவே முடியாது,” என்று தினமலர் கதாநாயகனாக நடித்துள்ள சூரியை பாராட்டியுள்ளனர்.

“வாத்தியராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பு அபாரமானதாக இருந்தது” என்று பாராட்டியுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, சில கொடூர சம்பவங்களை அவற்றின் எதார்த்ததோடு காட்சிப்படுத்தியிருப்பதால் காண்பதற்குக் கடினமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதோடு, “சில தொழில்நுட்பத் தவறுகள் இருந்தபோதிலும் கதையின் அளவு மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தை அடிப்படையாக வைத்து அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிடலாம்” என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் விமர்சனத்தில் கூறியுள்ளது.

தடைபடும் கதையோட்டம்



“பவானிஸ்ரீ மலைக்கிராமத்து பெண்ணாகச் சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறனின் பட நாயகிகளுக்கே உரிய வீரத்தைப் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பாசம், காதல், சோகம், துணிவை வெளிப்படுத்தும் காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார்,” என்று இந்து தமிழ் அவரது நடிப்பைப் பாராட்டியுள்ளது.

“சுற்றிலும் மலைகள், மரம், செடி, அரிக்கேன் விளக்குகள், காட்டாறு, பாறைகள், லுங்கியும் துண்டும் அணிந்த எதார்த்த மனிதர்கள், குறுகலான தெருக்கள், ஓட்டு வீடுகள், டீக்கடைகள், உருவங்களற்ற நம்பிக்கை அடிப்படையிலான தெய்வங்கள், போலீஸ் பட்டாலியன், செக்போஸ்ட், செய்தியாளர்கள், போலீஸ் ஜீப் என்று படம் முழுக்கவே கதைக்களத்தில் வேல்ராஜின் ஒளிப்பதிவு படம் பார்ப்பவர்கள் மனதில் கனத்த மௌனத்தைச் சுமக்கச் செய்துள்ளது,” என்றும் இந்து தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது.

“காவல்துறையின் விசாரணைக் காட்சிகளை மிகவும் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். சென்சார் செய்யப்பட்டும் அந்தக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது ஆச்சர்யம்தான்” என்று குறிப்பிட்டுள்ள தினமலர், படத்தின் ஆரம்பத்தில் வரும் ரயில் குண்டுவெடிப்புக் காட்சி நீளமாகவும் இடைவேளைக்குப் பின் சிறிது நேரம் கதையோட்டம் கொஞ்சம் தடைபடுவதும் படத்தின் வேகத்தைக் குறைப்பதாக விமர்சித்துள்ளது.

“விடுதலை பாகம் 1’ திரைப்படம், பன்னாட்டு நிறுவனங்களின் பசிக்கும் தாகத்திற்கும் காவு கொடுக்கப்படும் பாமர மக்களின் சதைக்கும் ரத்தத்திற்கும் மருந்து தடவியிருக்கிறது,” என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 01, 2023 2:39 pm

விடுதலை படம் கூறும் 'கொடூர' சம்பவங்கள் - தமிழகத்தில் நடந்த உண்மைக் கதையா?


வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கிறது 'விடுதலை' திரைப்படம். இந்தப் படத்தில் வரும் சம்பவங்கள் 1980களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. விடுதலை திரைப்படம் கூறும் 'கொடூர' சம்பவங்கள் உண்மையில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களை ஒத்திருக்கின்றன

அந்தச் சம்பவங்கள் எங்கு, எப்போது நடந்தன? விரிவாக இங்கு தெரிந்துகொள்வோம்.

முதலில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை திரைபடத்தின் கதையைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

படத்தின் துவக்கத்தில் மிகப் பெரிய ரயில் விபத்து ஒன்று நடக்கிறது. இதைத் தொடர்ந்து பெருமாள், டி.ஏ., எஞ்சினீயர் ஆகியோர் தலைமையில் இயங்கும் விடுதலைப் படையை முடக்கவும் முக்கியப் புள்ளிகளை உயிரோடனோ, சுட்டோ பிடிக்கவும் ஆணை வருகிறது.

அதற்கான சிறப்புப் படையில் வந்து சேர்கிறான் குமரேசன். சிறப்புப் படையில் மேலதிகாரியால் துன்புறுத்தப்படும் குமரசேன், அந்த மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலிக்கத் தொடங்குகிறான்.

ஒரு கட்டத்தில், அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரையும் பிடித்து வந்து பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறார்கள். அதில் குமரேசனின் காதலியும் இருக்கிறார். அதற்குப் பிறகு என்ன ஆகிறது என்பது இந்த முதல் பாகத்தின் கதை.

ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை விரிவாக்கம் செய்து உருவான படம் இது. அந்தக் கதையில் என்கவுன்டர் செய்யப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் கோனார் என்ற போராளி, செல்லும் வழியில் காவலர்களுடன் நடத்தும் உரையாடல்தான் கதை.

இடதுசாரி இயக்கங்களுக்குள் உள்ள முரண்பாடுகள் மீதான கேலியையும் காவலர்களின் அதிகாரம் மீதான ஆசையையும் அந்த உரையாடலில் சுட்டிக்காட்டுவார் அந்தப் போராளி.

ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை, துவக்கத்தில் காவலர்களின் பார்வையிலும், பிறகு காவலர்களால் பாதிக்கப்படும் மலைகிராம மக்களின் பார்வையிலும் கதை நகர்கிறது.

'விடுதலை' படத்தின் இந்த முதல் பாகத்தில் 1980களின் மத்தியில் தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்களின் சாயல் தெரிகிறது. இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாகவே, இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை என அறிவிப்பு ஒன்று காட்டப்படுகிறது.

ஆனால், 80களில் தமிழ்நாட்டில் தீவிரமாக இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை, அதை முடக்க காவல்துறை மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவையே படமாக விரிந்திருப்பதை புரிந்துகொள்ள முடியும்.

மருதையாற்றுப் பாலம் தகர்ப்பு



டு வைத்து ரயில் தகர்க்கப்படும் காட்சி வருகிறது. இது 1987ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி அரியலூருக்கு அருகில் உள்ள மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்வை ஒத்ததாக உள்ளது.

1987 காலகட்டத்தில் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பு அரியலூர், கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டது. அந்தத் தருணத்தில் இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க இந்தியப் படை இலங்கைக்குச் செல்லும் எனப் பேச்சுகள் அடிபட்டு வந்தன.

ஆகவே, தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான ரயில் பாலத்தைத் தகர்ப்பதன் மூலம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்க இந்தக் குழு முடிவு செய்தது.

அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து சில்லக்குடி செல்லும் வழியில் உள்ளது மருதையாற்றுப் பாலம். இந்தப் பாலம்தான் சென்னையையும் திருச்சியையும் இணைக்கும் முக்கியமான ரயில் பாலம்.

இந்தப் பாலத்தை ரயில் வராத நேரமாகப் பார்த்து தகர்த்துவிட்டு, பொறுப்பேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. எதற்காகச் செய்தோம் என்பதை சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்குச் சொல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மூன்று குழுக்கள் உருவாக்கப்பட்டன. பாலத்தைத் தகர்க்க ஒரு குழு, சுவரொட்டிகள் மூலம் இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு குழு, குண்டு வெடித்ததும் ரயில் நிலையங்களுக்கு இந்தச் செய்தியைச் சொல்ல ஒரு குழு.

அதிகாலை 3.10க்கு ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. அரியலூர் இருப்புப் பாதை உதவி அலுவலர் டேனியலுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில், மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், டேனியல் அதை நம்பவில்லை. சிறிது நேரத்தில் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலரும் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைச் சொன்னார். அப்போதும் டேனியல் நம்பவில்லை.

பிறகு மீண்டும் தொலைபேசி மூலம் அழைத்த இருப்புப் பாதை அலுவலர், திருச்சிராப்பள்ளிக்கு வரும் ரயிலை இடையிலேயே நிறுத்த வேண்டுமெனச் சொன்னார். அதை டேனியல் ஏற்கவில்லை.

சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் அதிகாலை 4.35க்கு அரியலூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. 4.37க்கு புறப்பட்டது. எட்டு நிமிடத்தில் சில்லக்குடி நிலையத்தை ரயில் அடைய வேண்டும்.

ஆனால், 15 நிமிடமாகியும் ரயில் சில்லக்குடிக்கு வரவில்லை. இதையடுத்து ரயிலைத் தேடி புறப்பட்டார் சில்லக்குடி இருப்புப் பாதை அலுவலர். அவர் மருதையாற்றுப் பாலத்திற்குச் சென்று பார்த்தபோது, பாலம் இடிந்து போயிருந்ததால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாயிருந்தது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தார்கள். 90 பேர் காயமடைந்தனர்.

பாலத்தைத் தகர்த்து கவனத்தை ஈர்ப்பதுதான் விடுதலைப் படையின் நோக்கம் என்றும் ரயிலைக் கவிழ்ப்பது அவர்கள் நோக்கமல்ல என்றும் அந்த அமைப்பிற்கு நெருக்கமானவர்கள் சொன்னார்கள். இந்த வழக்கில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதற்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி பொன்பரப்பியில் ஒரு வங்கிக் கொள்ளை முயற்சியின்போது, தமிழரசன் உள்ளிட்ட ஐந்து பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

விடுதலை படத்தைப் பொறுத்தவரை, ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்து விடுதலைப் படையினர் தேடப்படுவது போன்றவற்றை ஒத்திருக்கும் காட்சிகள் மட்டும் இந்த முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இது தவிர, 1992ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-23ஆம் தேதி வாச்சாத்தியில் காவல்துறை நடத்திய வன்முறைச் சம்பவத்தின் சாயலில் ஒரு நிகழ்வும் இந்தப் படத்தில் காட்டப்படுகிறது.

விடுதலைப் படையின் தலைவரைத் தேடும் காவல்துறை, அந்தத் தலைவருக்கு ஆதரவாக உள்ள ஒரு மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரையும் அழைத்து வந்து, அடைத்து வைத்து பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் காட்சி படத்தில் வருகிறது.

1992ஆம் ஆண்டு ஜூன் 22-23ஆம் தேதி 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் வாச்சாத்தி என்ற கிராமத்திற்குள் புகுந்து சந்தனக் கட்டைகளைத் தேடுவதாகக் கூறி வன்முறையில் இறங்கினர். இதில் 34 பேர் கொல்லப்பட்டனர். 18 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். மொத்தம் 107 பேர் பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, உயிரோடு இருந்த 215 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. பல ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது மேல் முறையீட்டில் உள்ளது.

தமிழ்நாடு விடுதலைப் படை இயங்கியது, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மத்திய - கடலோர மாவட்டங்கள். விடுதலை திரைப்படத்தில், சம்பவங்கள் நிகழ்வது தர்மபுரி பகுதியை ஒட்டி இது நடப்பதாகக் காட்டப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 01, 2023 2:41 pm

அரசியல் தலைவர்கள் பாராட்டு



விடுதலை திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது” என்று சூரியின் நடிப்பு குறித்தும் பாராட்டினார்.

அதேபோல் இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், "அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், "வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.

மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரை நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள்



"இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூரியிடம் வெளிப்பட்டிருக்கும் நடிப்பு ஒரு சாதாரண மாற்றம் அல்ல, அது ஒரு பரிணாம வளர்ச்சி” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், “இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு, “அண்ணா நீங்கள் இல்லாமல் தமிழ் சினிமா ஒரு அடி முன்னால் செல்லாது என்ற நிலையை உருவாக்கியதற்கு உங்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கூறியுள்ளார்.

குணச்சித்திர நடிகரான கயல் தேவராஜ், “விடுதலை திரைப்படத்தினுடைய கதையின் நாயகனாக சூரியின் முகவரி சொல்லும்,” என்று கூறியுள்ளார்.

“நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

"அதேபோல் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும்,” என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

படம் வெளியாவதற்குச் சில வாரங்கள் முன்னதாக விடுதலை திரைப்படத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த இயக்குநர் சுதா கொங்காரா, “விடுதலை திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்று என் நண்பர் சொன்னதால், அதைக் காண வந்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இப்படம் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்



விடுதலை திரைப்படம் குறித்து விமர்சித்திருக்கும் ஊடகவியலாளர் பரத்வாஜ்ரங்கன், “விசாரணை திரைப்படம் அளவிற்கு இந்தப் படம் வலிமையாக இல்லை," என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டரில், “விசாரணை திரைப்படத்தில் காணப்பட்ட அந்த வலிமையான சக்தி, விடுதலையில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான பிரசாத் ரங்கசாமி, “விடுதலை, தமிழ் சினிமாவின் மணி மகுடத்தில் ஏறியிருக்கும் மற்றொரு வைரம். நடிகர் சூரிக்கு எனது அன்பும் மரியாதையும். இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இதயத்தில் இருப்பதை, சினிமாவின் மூலம் பேசுகிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சினிமா ஊடகவியலாளரான கவிதா, “நடிகர் சூரிக்கு சல்யூட். விடுதலை திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

சூரியின் நடிப்பை வியக்கும் ரசிகர்கள்



சூரியின் நடிப்பை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சூரியின் சினிமா பயணத்தில் விடுதலை திரைப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறி வருகிறார்கள்.

“நடிகர் சூரிக்கு அவரின் மொத்த வாழ்நாளுக்கான வாய்ப்பாக விடுதலை திரைப்படம் அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்காக முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது வெற்றிமாறனின் மிகச் சிறந்த படம் அல்ல. ஆனால் இதுவொரு நல்ல திரைப்படம்,” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், ”சூரியின் வெள்ளந்தித்தனமான இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாய் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவரும் கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 01, 2023 8:09 pm

விடுதலை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சூரி இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ள நிலையில், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், தமிழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

விடுதலை படம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தோழர் வெற்றி மாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார்.

மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது 'வெற்றிமாறன் படைப்பு' என முத்திரை பதித்துள்ளார். வெல்க விடுதலை! என்று குறிப்பிட்டிருந்தார்

விடுதலை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக