புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_c10H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_m10H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_c10H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_m10H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_c10H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_m10H3N2 வைரஸ் ஆபத்தானதா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

H3N2 வைரஸ் ஆபத்தானதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 08, 2023 1:03 am

H3N2 வைரஸ் ஆபத்தானதா? Picsar31

H3N2 வைரஸ் பரவலை காற்று மாசு தீவிரப்படுத்தும் என்பதால், மற்ற இன்ஃப்ளூயன்சா துணை வகை வைரஸ்களைக் காட்டிலும் இது வேகமாக பரவுவதாக வைராலஜிஸ்ட் கூறுகின்றனர்.

H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் என்ன?



காய்ச்சல்
இருமல்
குமட்டல்/ வாந்தி
வாந்தி
தொண்டை வலி
உடல் வலி/ சோர்வு
வயிற்றுப்போக்கு

மேற்சொன்ன அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம், விடாத தீவிர காய்ச்சல் , நெஞ்சுப்பகுதியில் வலி, எதையும் சாப்பிட முடியாத நிலை, தலைசுற்றல், வலிப்பு போன்றவை அபாய அறிகுறிகள் என்று அறிந்து உடனே சிகிச்சை எடுக்க வேண்டும்.

ஐ.சி.எம்.ஆர். ஆய்வுகளின் படி, நோய் எதிர்ப்பு சக்தி குன்றியோருக்கு குறிப்பாக குழந்தைகள், முதியோர், இணை நோய் இருப்பவர்களுக்கு சற்று தீவிரத்துடன் H3N2 வைரஸ் பாதிப்பு வெளிப்பட வாய்ப்பு உண்டு.

பல்ஸ் ஆக்சிமீட்டர் துணை கொண்டு ஆக்சிஜன் அளவுகளை சோதித்து வர வேண்டும்.

95% Spo2 க்கு குறைந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

90% க்கு கீழ் SPO2 சென்றால் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும்.

சுய மருத்துவம் கூடாது. அது ஆபத்தானது. பொன்னான நேரத்தை அதில் வீணாக்கி விடக் கூடாது.

குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு காய்ச்சல், இருமல் தோன்றும் போதே மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

இது வைரஸ் தொற்று என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதால் பலனில்லை என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

H3N2 வைரஸ் பரவாமல் தடுக்க எவ்வாறு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்? எதை செய்யலாம்? எதையெல்லாம் செய்யக் கூடாது? என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

H3N2 வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி இல்லாதவர்கள் அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுபவர்கள் ஐ.சி.எம்.ஆர். வழங்கியுள்ள கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எதையெல்லாம் செய்ய வேண்டும்?



முகக்கவசம் அணிவது அவசியம்

கூட்ட நெரிசலாக இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்

தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மறைத்துக் கொள்ள வேண்டும்

கண்கள், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்

தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ளவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்

காய்ச்சல், உடல் வலிக்கு பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம்

எதையெல்லாம் செய்யக் கூடாது?



கை குலுக்குவதோ, உடல் ரீதியான வேறு வகை வாழ்த்துப் பரிமாற்றமோ கூடாது

பொது இடங்களில் எச்சில் உமிழக் கூடாது

மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்கோ அல்லது வேறு மருந்துகளையோ எடுக்கக் கூடாது

மற்றவர்களுடன் ஒன்றாக நெருக்கமாக அமர்ந்து உண்ணக் கூடாது

மழை மற்றும் குளிர்காலத்தின் போது பெரும்பான்மையோருக்கு வந்து செல்லும் சாதாரண காய்ச்சல் தொற்று இது. எனினும், குழந்தைகள், முதியோர் மற்றும் இணைநோய்கள் இருப்பவர்களுக்கு அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு H3N2 வைரஸ் குறித்து சென்னையில் பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் மருத்துவரும், குழந்தைகள் நல மருத்துவருமான ராவணகோமகனிடம் பேசினோம்.

ஆண்டுதோறும் மழை மற்றும் குளிர் காலத்தின் போது வரக் கூடிய காய்ச்சல் இது, அதற்குக் காரணமான HN வகை வைரஸ்களில் ஒன்றே தற்போது பரவும் H3N2 வைரஸ் என்று அவர் கூறினார்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக, தமிழ்நாட்டில் வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரிக்குப் பிறகும் குளிர் நீடிப்பதால்தான் இந்த காய்ச்சல் தற்போதும் பரவி விருவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "முகக்கவசம், சோப் போட்டு அடிக்கடி கை கழுவுதல், கூட்டத்தில் இருப்பதை தவிர்த்தல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளையே இதற்கும் கையாள வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொண்டு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும்." என்றார்.

"குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுடையவர்கள் ஆகியோருக்கு H3N2 வைரஸ் பாதிப்பு தீவிரமானதாக இருக்கலாம். அவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுவது அவசியம். மற்றவர்களைப் பொருத்தவரை, வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் மிதமாக இருந்தால் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று வீட்டிலேயே இருக்கலாம். பாராசிட்டமால் மருந்தை எடுத்துக் கொள்ளலாம். நல்ல ஓய்வும், சூடான தண்ணீரை பருகுவதும் சிறந்த பலன் கொடுக்கும். இதன் மூலம் வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்க முடியும்" என்கிறார் மருத்துவர் ராவணகோமகன் தெரிவித்தார்.

"H3N2 வைரஸ் திரிபு உருவாகக் கூடும் என்பதால் ஒருமுறை இந்த பாதிப்புக்கு ஆளாகி மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்றக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆகவே, குழந்தைகளை பெற்றோர் மிகுந்த கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.

கூடுதல் பாதுகாப்பாக, ஆண்டுக்கு ஒருமுறை இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகளை 70 சதவீதம் வரை குறைக்கலாம் என்றார் அவர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய் போன்ற இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ராவணகோமகன் அறிவுறுத்தினார்.

  குறிச்சொற்கள் #இன்ஃப்ளூயன்சா  #H3N2 #வைரஸ் #காய்ச்சல்
பிபிசி தமிழ்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 09, 2023 7:19 pm

H3N2 காய்ச்சல் வந்தவர்கள் இதை செய்தாலே போதும்


கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் H3N2 என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஏற்கனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு H3N2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்திருந்தது. இவ்வகையான வைரஸ் காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் வழங்கினால் அதன் பிறகு ஆன்டிபயாட்டிக் தேவைப்படும்போது வேலை செய்யாது என்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இது குறித்து கூறிய போது H3N2 வைரஸ் காய்ச்சல் வந்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வீட்டிலேயே மூன்று நாட்கள் இருந்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாது என்றும் ஓய்வு எடுப்பதன் மூலம் H3N2 காய்ச்சல் சரியாக விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 09, 2023 7:24 pm

மிரட்டும் காய்ச்சல்... காரணம் என்ன?


மூச்சுத்திணறல் (Breathlessness). நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அதன் பகுதிகளில் வைரஸ் ஆக்கிரமிக்கும்போது ஆக்சிஜன் கொள்முதல் குறைந்துபோகும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்.

‘இப்போது வரும் சாதாரண சளி, காய்ச்சலே கடுமையாக உடலை உலுக்கிப் போடுகிறது. பல நாள்கள் படுக்கையில் கிடக்க வேண்டியுள்ளது’ என்று பலரும் புலம்புகிறார்கள். இதற்குக் காரணம், H3N2. இந்தியாவில் கடந்த டிசம்பரிலிருந்து தற்போது வரை இன்ஃப்ளூயன்சா - ஏ வைரஸின் திரிபு வகையான H3N2 எனும் வைரஸ், பருவ கால மாற்றம் காரணமாக சீசனல் தொற்றாக அதிகம் பரவிவருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ICMR) ஆய்வுகளில் H1N1 வகையைவிட இது அதிகமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

அது ஏன் H1N1, H3N2 என்று பெயர் பெறுகிறது?



கடந்த 1918-ல் உலகம் முழுமைக்கும் பரவும் பெருந்தொற்றாக இன்ப்ளூயன்சா ஏ வகை பெருந்தொற்று பரவியது. இதை H1N1 என்று வழங்கினோம். ஸ்பானிஷ் ஃப்ளூ என்றும் அதைச் சொன்னோம்.

எப்படி கொரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரதத்தில் மாற்றங்களை அடைந்து திரிபுகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறதோ, அதுபோல இன்ஃப்ளூயன்சா வைரஸும் ஒவ்வொரு வருடமும் சீசனல் காய்ச்சலாக மக்களிடையே பரவும்போது உருமாறிக்கொண்டே செல்கிறது. இதை ANTIGENIC SHIFT & DRIFT (எதிர்ப்புத் திறன் பெயர்வு & பிறழ்வு) என்று குறிப்பிடுகிறோம். கடந்த சீசனில் வந்து காய்ச்சல் ஏற்படுத்திய வைரஸைவிட இந்த சீசனில் மாற்றத்துடன் வருவதால், வருடா வருடம் நமக்கு சீசனல் காய்ச்சல், சளி தொற்றுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு பன்றிகளில் பரவி வந்த H1N1 வைரஸ் தன்னகத்தே சில மாற்றங்களைச் செய்து மனிதர்களுக்கு இனம் விட்டு இனம் தாவியது. இதற்கு ‘பன்றிக் காய்ச்சல் வைரஸ்’ (SWINE FLU) என்று பெயர் வந்தது. 2009-ல் இருந்து இப்போது வரை பன்றிக்காய்ச்சல் தொற்று வருடாவருடம் அனைத்து நாடுகளிலும் சீசனில் அதிகரித்து மறையும். இந்த H1N1-க்கு எதிராக வருடா வருடம் அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும். அதை வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் செலுத்திக்கொள்வது வழக்கம். நம் நாட்டிலும் நீரிழிவு போன்ற எதிர்ப்பு சக்தி குன்றிய மக்களுக்கு வருடா வருடம் H1N1-க்கு எதிரான தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

இப்போது H3N2க்கு வருவோம். இந்த வைரஸும் மனித குலத்துக்குப் புதிதல்ல. கடந்த 1968-69-ல் ஹாங்காங்கில் முதல் முறையாக இது கொள்ளை நோயாக உருவெடுத்தது. பல சீசனல் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ்கள் போல H3N2-ம் அடிக்கடி மக்களிடையே பரவி தொற்றை ஏற்படுத்தும் தன்மையுடையது.

இப்போது வந்துள்ள H3N2-ன் அறிகுறிகள்



ஏனைய சீசனல் வைரஸ் தொற்றுகள் போலவே காய்ச்சல், அதீத தொண்டை வலி, வறட்டு இருமல், உடல் வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு அறிகுறிகள் ஒரு வாரம் வரை இருந்து பிறகு குணமாகும். இது ஏனைய சீசனல் வைரஸ் தொற்றுகள் போல தானாக குணமாகும் (SELF LIMITING) தன்மையது.

எனினும் இம்முறை காய்ச்சல் சற்று தீவிரத்தன்மையுடன் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியரில் அதீத காய்ச்சலாக வெளிப்படுகிறது (102 டிகிரிக்கு மேல்). காய்ச்சல் குணமான பின்னும் தொண்டை வலி, உடல் சோர்வு, இருமல் போன்றவை மேலும் ஒரு வார காலத்திற்குத் தொடரலாம். குறிப்பாக குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள், உடல் எடை குறைவாக இருக்கும் குழந்தைகள், புரதச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள், முதியோர்கள், இணை நோய்கள் (நீரிழிவு/ரத்தக்கொதிப்பு / இதய நோய் / சிறுநீரக நோய்) உள்ளோருக்கு சற்று தீவிரத்துடன் நோய் வெளிப்படக்கூடும். எனவே கவனம் தேவை.

நோயின் அபாய அறிகுறிகள்



அதீத காய்ச்சல் (ஜுரம் மிக அதிகமாக தொடர்ந்து சில நாள்கள் நீடிப்பது நிமோனியா நுரையீரல் தொற்றின் காரணமாக இருக்கலாம். கட்டாயம் மருத்துவரை சந்திக்க வேண்டும்.)

மூச்சுத்திணறல் (Breathlessness). நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அதன் பகுதிகளில் வைரஸ் ஆக்கிரமிக்கும்போது ஆக்சிஜன் கொள்முதல் குறைந்துபோகும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஆக்சிஜன் அளவு 90%க்கு கீழ் இருப்பின் ஆக்சிஜன் கொடுக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

கொரோனாத் தொற்றைப் போலவே இந்த வைரஸையும் தொண்டை மற்றும் நாசித் தடவல் எடுத்து ஆர்.டி.பி.சி.ஆர் முறை மூலம் இனங்காண முடியும். டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களிலும் அதீத காய்ச்சல் ஏற்படும் என்பதால் மருத்துவர் பரிந்துரையின்படி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

காய்ச்சலின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்



காய்ச்சல் / இருமலுக்கான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரையில் எடுக்க வேண்டும். சுய மருத்துவம் தவறு. குறிப்பாக குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் சுய மருத்துவம் செய்வது ஆபத்தில் முடியலாம். காய்ச்சலுக்கான பல இருமல் டானிக்குகளிலும் பாராசிட்டமால் கலந்து இருக்கும். பாராசிட்டமால் ஓவர் டோஸ் ஆகும் வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.

காய்ச்சல் மிக அதிகமாக இருக்கும்போது குளிர்ந்த நீரில் உடல் முழுவதும் ஒத்தி எடுப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும் (COLD WATER)

இது வைரஸ் காய்ச்சல் என்பதால் பாக்டீரியாக்களைக் கொல்லும் மாத்திரைகளுக்கு இந்தத் தொற்றை குணப்படுத்துவதில் பயனில்லை. எனவே ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்வதில் யாதொரு பயனுமில்லை.

நீரை நன்றாகக் காய்ச்சிப் பருக வேண்டும்.காய்ச்சல் இருக்கும் நோயாளிகளுக்கு நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். கஞ்சி, இளநீர், ஆப்பிள், மாதுளைப் பழச்சாறுகள், ஓ.ஆர்.எஸ் (Oral Rehydration Solution) திரவக்கரைசல் கொடுக்க வேண்டும். உடல்நிலை சீரானதும் இட்லி, இடியாப்பம், ரசம், கோழிச்சாறு, மஞ்சள் மிளகு கலந்த பால் போன்றவற்றைப் பருகலாம்.

குழந்தைகள் ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சிறுநீர் கழிப்பதை உறுதிசெய்ய வேண்டும். இல்லையென்றால் உணவு/திரவம் உட்கொள்ளும் திறன் குறைந்துள்ளதை அறிந்து உடனே மருத்துவமனையில் சேர்த்து ரத்த நாளம் வழியாக திரவங்கள் வழங்கப்பட வேண்டும்.

நோய்த்தொற்றைத் தடுக்கும் வழிகள்



அறிகுறிகள் இருப்போர் கட்டாயம் காய்ச்சல் குணமாகும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக் (ISOLATION) கொள்ள வேண்டும். இதனால் தொற்று பிறருக்குப் பரவும் வாய்ப்பு குறையும். நோய்த்தொற்று அறிகுறிகள் இருப்போர் முகக்கவசம் அணிய வேண்டும்.

கைகுலுக்குவதைத் தவிர்ப்போம், கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். நீரிழிவு / ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். முதியோர்கள் / பல்வேறு இணை நோய்கள் இருப்பவர்கள் அவசியமின்றி வெளியே செல்வதையும் நெரிசல் மிகுந்த இடங்களையும் தவிர்ப்பது நல்லது.

புரதச்சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள், நீரிழிவு, சிறுநீரக நோய் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள், முதியவர்களுக்கு ப்ளூ தடுப்பூசி நல்ல பலனைத் தரும்.

H3N2 ஏனைய பருவகாலக் காய்ச்சல்களைப் போலவே, பெரும்பான்மையினருக்கு உயிருக்கு ஆபத்தற்ற தொற்றைத் தந்து நம்மை விட்டுக் கடந்து செல்லும் தன்மையுடையது. எனவே அதீத அச்சம் தேவையற்றது. எச்சரிக்கையுடன் அணுகினால் போதுமானது. வருமுன் காப்பதற்குச் செய்ய வேண்டிய நடவடிக்கைகளிலும், வந்தபின் காலந்தாழ்த்தாமல் முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதிலும் அக்கறை காட்டினால் இந்தத் தொற்றை வென்றிடலாம்.

குறிச்சொற்கள் # #H3N2 #இன்ஃப்ளூயன்சா #காய்ச்சல்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 12, 2023 9:32 pm



H3N2 வைரஸ் என்றால் என்ன?


காய்ச்சல் தொற்று நோயை உண்டாக்கும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் 4 வகைகளாகப் பிரிக்கப்படுள்ளது, இதில் இன்ஃப்ளூயன்சா A மேலும் பல்வேறு துணை வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று H3N2 ஆகும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) கூற்றுப்படி, H3N2 வைரஸ் 1968-ம் ஆண்டு காய்ச்சல் தொற்றுநோயை ஏற்படுத்தியது. இதனால் உலகளவில் சுமார் ஒரு மில்லியன் மக்களும், அமெரிக்காவில் சுமார் 1 லட்சம் பேரும் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.

H3N2 வைரஸ் அறிகுறிகள் என்ன?


H3N2 வைரஸ் அறிகுறிகளும் மற்ற காய்ச்சல் அறிகுறிகள் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தொண்டை புண், மூக்கு அடைப்பு, சளி, சோர்வு ஆகியவை அறிகுறிகளாக கூறப்படுகிறது. குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஏற்படும்.

இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கூற்றுப்படி, H3N2 காய்ச்சல் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். 3 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் குறைந்துவிடும். இருப்பினும், இருமல் 3 வாரங்களை வரை நீடிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?


ஐ.எம்.ஏ படி, இந்த வைரஸ் பொதுவாக 15 வயதுக்குட்பட்ட அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது. குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா, நீரிழிவு, இதய நோய், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளது.

நோய் பரவாமல் தடுப்பது எப்படி?


சாப்பிடுவதற்கு முன் மற்றும் உங்கள் முகம், மூக்கு, வாய் தொடுவதற்கு முன் கைகளை கழுவ வேண்டும். சானிடைசர் பயன்படுத்துவது, ஏற்கனவே வைரஸ் அல்லது வேறு ஏதேனும் பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஆகியவை நோய் பரவாமல் தடுப்பதைக் கட்டுப்படுத்தும்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகள், காரம் குறைவான மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகள் சாப்பிடுவது உதவியாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக