புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிமுக vs பா.ஜ.க.
Page 1 of 1 •
"அண்ணாமலை ரகசியமாக பேசும் தமிழக அமைச்சர் யார்?" நிர்மல்குமார் குற்றச்சாட்டால் தகிக்கும் பாஜக, அதிமுக
#பாரதிய_ஜனதா கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் சேர்ந்துள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திரைமறைவில் மாநில அமைச்சருடன் தொடர்பில் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அத்துடன், அதிமுக, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் பரஸ்பரம் எதிர்வினை விமர்சனத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த இரு கட்சிகளின் கூட்டணி அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
#அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில், கட்சியில் மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலிலும் சக்தி வாய்ந்த தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் முன்னாள் முதல்வர் #எடப்பாடி_கே.பழனிசாமி வேகம் காட்டி வருகிறார். அதிமுக ஒட்டுமொத்தமாக தன் பின்னே திரள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில், பிற கட்சி நிர்வாகிகளையும் கட்சியில் இணைத்துக் கொள்ள அவர் அவர் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது
அதன் ஒரு பகுதியாகவே, கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்வாகிகளையும் அடுத்தடுத்து அதிமுகவில் அவர் இணைத்துக் கொண்டதாக தெரிகிறது.
பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக பதவி வகித்த சி.டி.ஆர். நிர்மல்குமாரும் அவர்களில் ஒருவர்.
காயத்ரி ரகுராமைப் போல சி.டி.ஆர்.நிர்மல்குமாரும் பா.ஜ.க.வில் இருந்து விலகும் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
அதேநேரத்தில், நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவ படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற #பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.
அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.
'420' மலை, மனநலம் குன்றியவர் போல் செயல்படுகிறார், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை வேவு பார்க்கிறார் என்று அண்ணாமலை மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ஏன் என்று கேட்டோம். |
"கூட்டணிக் கட்சியாக இருக்கும் போதே சமீப காலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் அதிமுகவினர் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடவில்லை. அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அதிமுகவினர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். ஆனால், தற்போது என்ன நடக்கிறது? எனக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் பா.ஜ.க.வினர் பலரும் தாக்குதல் நடத்துவதுடன், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தையும் எரித்துள்ளனர். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தாமல் அண்ணாமலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நல்ல மனநிலையில் உள்ள ஒருவர் செய்யும் காரியமா இது?" என்று அவர் பதிலளித்தார்.
திரைமறைவில் அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை பேரம் பேசுவதாக குறிப்பிட்டிருந்தீர்களே. அது யார்? என்ற கேள்வியை முன்வைத்தோம். |
அதற்கு அவர், "என்னுடன் பயணிக்கும் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என் முடிவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டியே நான் சில விஷயங்களை தெரிவித்திருந்தேன். அதைத் தாண்டி குறிப்பிட்ட அமைச்சர் யார்? என்ன நடந்தது? என்பது குறித்துப் பேசி கூடுதல் தர்மசங்கடங்களை உருவாக்க விரும்பவில்லை. அதைத் தாண்டி, என் மீதான பா.ஜ.க.வினரின் தனிப்பட்ட தாக்குதல்களும் மோசமாக இருக்கலாம் என்பதால் அந்த சங்கடங்களை தவிர்க்க விரும்புகிறேன்" என்றார்.
பா.ஜ.க.வில் மாநில அளவிலான பொறுப்பில் இருந்த சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு அதிமுகவில் இன்னும் பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அதிமுகவிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் வலுவான தலைவராக உருவெடுத்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படப் போவதாக அவர் கூறுகிறார்.
அதேநேரத்தில், பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்துச் சென்று அதிமுகவை வளர்க்கும் நிலை உருவாகியிருக்கிறது என்ற அண்ணாமலை விமர்சனத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக கண்ணாடி அல்ல, கல் வீசியதும் உடைந்து விழுவதற்கு. அது சமுத்திரம். அதன் மீது கல் வீசினால் கல் காணாமல் போகுமே தவிர சமுத்திரம் அப்படியேதான் இருக்கும்," என்றார்.
அவர் மேலும் "அம்மாவைப் போன்ற தானும் ஒரு தலைவர் என்று அண்ணாமலை தன்னை அழைத்துக் கொள்ளக் கூடாது. செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம்" என்றும் ஜெயக்குமார் கூறினார். |
பா.ஜ.க. - அதிமுக இடையே சிறுசிறு உரசல்கள் இருந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி நீடிக்கும் என்று டி.ஜெயக்குமார் கூறினார். நம்முடன் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனும் இதையே பிரதிபலித்தார்.
"பா.ஜ.க. - அதிமுக இடையே இருப்பது தேர்தல் கூட்டணிதான். தேர்தல் அல்லாத மற்ற நேரங்களில் கட்சியை வளர்க்க ஒவ்வொருவருமே ஆசைப்படுவது இயல்புதான். தமிழ்நாட்டில் . 25 நாடாளுமன்ற தொகுதிகளை வெல்வோம், நாங்களே உண்மையான எதிர்க்கட்சி என்பன போன்ற பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுகள் அப்படியான ஆசைகளே. ஆனால், ஆசைக்கும், குறிக்கோளுக்கும் வேறுபாடு இருக்கிறது. குறிக்கோள் என்பது நடைமுறை யதார்த்தம் சார்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் வரும் போது அவர்களிடம் அந்த யதார்த்த அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்" என்று அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படங்களை பா.ஜ.க.வினர் எரித்தது அநாகரிகம் என்று சாடிய வைகைச்செல்வன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதிர்ச்சியற்ற தலைவராக செயல்படுவதாக விமர்சித்தார்.
#சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் அதிமுக தலைவர்களின் விமர்சனங்கள் குறித்து பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜனிடம் பிபிசி தமிழ் பேசியது.
சி.டி.ஆர்.நிர்மல்குமார் கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குறிப்பிட்ட அவர், சுயலாபத்திற்காக ஒரு முடிவை எடுத்துவிட்டு, கட்சி மீது நிர்மல்குமார் பழி போடுவதாக நாகராஜன் கூறினார்.
தமிழ்நாட்டு அரசியலில் கட்சி மாறுவது என்பது புதிதல்லல, செந்தில்பாலாஜி, நயினார் நாகேந்திரன், முத்துசாமி போன்ற பலரும் கட்சி மாறியவர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணியைப் பொருத்தவரை அண்ணாமலையோ, எடப்பாடி பழனிசாமியோ கூறுவதே இறுதியானதாக இருக்கும். மற்ற தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துகளோ, சமூக வலைதள பதிவுகளோ கூட்டணியை தீர்மானிக்காது. 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தேமுதிகவுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்த போதே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அந்த கூட்டணி அமைந்து பெரு வெற்றி பெற்றது. அரசியலில் ஒரேயொரு நாளில் எத்தகைய மாற்றங்களும் நடக்கலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
ஜெயலலிதாவுடன் #அண்ணாமலை தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்ற டி.ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "ஜெயலலிதா அதிமுகவுக்கு தலைவர் என்பது போல அண்ணாமலை தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு தலைவர். அவர் தன்னுடைய கட்சியில் ஒரு தலைவராக, அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறார். சிறப்பாக செயல்படுகிறார். அதிமுக வங்கக்கடல் என்றால் பா.ஜ.க இந்தியப் பெருங்கடல்" என்கிறார் கரு.நாகராஜன்.
பிபிசி தமிழ்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்த பாஜக அதிமுக முறுகலை மாநில அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் சரியாக புரியாது, அதை காண தேசிய அரசியல் பார்வை அவசியம்
இப்பொழுது பழனிச்சாமி தமிழகத்தில் தன்னை ஒரு சக்தியாக காட்டி பாஜகவினை தன் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு கட்சியாக திமுகவுக்கு காங்கிரஸ் போல் ஆக்க நினைக்கின்றார் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது
தமிழகத்தில் நாங்கள்தான் எல்லாம் எங்களுக்கு பணிந்து நின்றால் சில இடங்களில் வெல்ல உங்களுக்கு உதவுவோம் அதே நேரம் நாடளாவிய பிரச்சினையில் உங்களை ஆதரிப்போம், நாடு உங்கள் பாடு தமிழகம் எங்கள் காடு, உங்களுக்கு நாட்டுபற்று இருந்தால் எங்களை ஆதரித்தே தீரவேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு
அப்படி ஆதரிக்காவிட்டால் உங்களை கழற்றிவிடுவோம் ஒரு சீட்டும் ஒரு தேர்தலிலும் கிடைக்காது எனும் ரகசிய மிரட்டல் வேறு
இப்படியெல்லாம் அதிமுக நம்ப காரணம் அதனை பழைய பாஜகவாக நினைத்து அது பல சமரசங்களை செய்யும் என எதிர்பார்ப்பதுதான்
பாஜக அப்படியான சமரசங்களை முன்பு செய்த கட்சி, சந்தேகமில்லை ஆனால் அந்த காலம் வேறானது
பாஜகவின் முதல் எதிரி காங்கிரஸ், அது ஒன்றுதான் பரம வைரி முதல் எதிரி
அந்த காங்கிரஸை வீழ்த்த எல்லா மாகாண கட்சியுடனும் தயக்கமின்றி கூட்டணி வைத்தார்கள், ஒவ்வொரு மாகாண கட்சிசொன்ன நிபந்தனைக்கெல்லாம் கட்டுபட்டார்கள்
அப்படித்தான் ஊழல் கட்சி என அறியபட்ட ஜெயலலிதாவுடனெல்லாம் கூட்டணி கண்டார்கள் , 1996ல் மிக மோசமான நிலையில் இருந்த அதிமுகவினை பாஜக கூட்டணிதான் தூக்கி நிறுத்திற்று
ஆனால் பாஜகவின் பலவீனத்தை பயன்படுத்தி தன் இஷ்டத்துக்கு அதனை ஜெயா ஆட்டுவிக்க முயல பாஜக திமுக பக்கமே சாய்ந்தது
இதெல்லாம் காங்கிரஸை ஒழிக்க அவர்கள் செய்த ராஜதந்திரம், அந்த இலக்குக்காக எந்த கூட்டணி என்றாலும் ஏற்றுகொண்டார்கள்
ஆனால் இப்பொழுது காங்கிரஸ் களத்தில் இல்லை, இனி மீளவாய்ப்பு இல்லை எனும் வகையில் பாஜகவின் பார்வையும் ஆட்டமும் மாறிவிட்டது
இன்னும் மாகாண கட்சிகளை விட்டுவைத்தால் அல்லது அங்கு நாம் ஆதிக்கம் செலுத்த தயங்கினால் எதிர்காலத்தில் அது கட்சிக்கு சிக்கலாகும் என கருதுகின்றார்கள்
இப்பொழுதெல்லாம் அவர்கள் ஆட்டமே அதிரடியானது, பழனிச்சாமி போல தப்புகணக்கிட்ட சிவசேனா இன்று அடையாளமேமாறி நிற்கின்றது
பழைய பாஜக இது இல்லை, மாகாண கட்சிகள் ஆட்டிவைக்கும் அந்த பாஜக இது இல்லை
அதுவும் தமிழகத்தில் அவர்களின் எம்பி கணக்கு பூஜ்ஜியம் எனும் வகையில் இந்த காலி மைதானம் அவர்களுக்கு கவலையே இல்லாதது
சிக்கல் இங்கு பழனிச்சாமிக்கே அன்றி பாஜகவுக்கு அல்ல
எங்களுடன் சேராவிட்டால் என பாஜகவினை அதிமுக மிரட்ட முடியாது, அதே நேரம் தங்கள் பக்கம் வராவிட்டால் பழனிச்சாமியினை எப்படி பந்தாட முடியும் என்பது பாஜகவுக்கு தெரியும்
இப்பொழுது ஜெயா இருந்திருந்தாலே பாஜக இந்த ஆட்டம்தான் ஆடும், அதுதான் நிஜம் இங்கே பழனிச்சாமியெலலம் வெறும் தூசு
இந்த புதிய பாஜகவின் சீற்றமான முடிவினைத்தான் அண்ணாமலை அடித்து சொன்னார் "இனி இதுதான் அரசியல், எங்கள் முடிவுதான் முடிவு, எங்களை யாரும் கட்டுபடுத்த முடியாது" என்பது ஆயிரம் அர்த்தம் கொண்ட பேச்சு
பெரும் முடிவோடுதான் பாஜக நிற்கின்றது, இல்லையேல் இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து இப்படி அவரை மோதவிடமாட்டார்கள்
பழனிச்சாமி தன்னால் முடிந்தவரை பம்மாத்து காட்டலாம், கூட்டணி இல்லை என குழப்பலாம் இன்னும் சில பின்னடைவுகளை பாஜகவுக்கு கொடுக்கலாம்
அனால் பின்வாங்கிவிட்டு பின் சீறிவரும் சுனாமி போல பாஜக அதன் பின் மிக பலமான அடிகளை அடிக்கும் அதனில் பழனியார் தப்பமுடியாது என்பது நிஜம்
ஆக எல்லா வகையிலும் நெருக்கடியும் பலவீனமும் அதிமுகவிற்குத்தான் உண்டே தவிர பாஜகவுக்கு அல்ல, அதனால் பழனிச்சாமி தரப்பு எல்லா வகை அஸ்திரத்தையும் தன் பலம் முழுவதையும் பயன்படுத்திபார்க்கும்
ஆனால் அவர்களால் வெல்லமுடியுமா என்றால் இல்லை, கங்கையின் பெரும்வெள்ளம் முன்னே கொங்கு நாட்டு ஓடைகள் நின்றுவிட முடியாது
காலம் அதை காட்டும், அண்ணாமலையின் குரல் டெல்லி பாஜகவின் குரலாக அதைத்தான் சொல்கின்றது
தமிழக காங்கிரஸ் எப்படி நாசமானதோ அப்படி தமிழக பாஜகவினையும் உருவாக்க அவர்கள் நினைக்கவில்லை, தமிழக அரசியலின் வழமையான கோஷ்டி அரசியலை முளையிலே அகற்றுகின்றார்கள்
தமிழிசை முதல் எல்லோரும் கவுரமாக வெளியேற்றபட்டது , தனக்கென கோஷ்டி உருவாக்க நினைப்போர்களை தட்டி வைப்பது இல்லை ஓட வைப்பது என ஒரு தலமையின் கீழ் கட்டுகோப்பாக செயல்படும் கட்சியாக அதனை உருவாக்குகின்றார்கள்
அகில இந்திய பாஜகவில் கோஷ்டிகள் இல்லை, ஒரே நோக்கம் ஒரே தலமை ஒரே இலக்கு என தெளிவாக கட்டுப்பாடோடு இருக்கின்றார்கள்
அந்த கட்டுபாட்டைத்தான் தமிழக பாஜகவிலும் கொண்டுவர முயல்கின்றார்கள் அதுதான் அவசியமும் கூட, அவ்வகையில் இங்கு நடப்பதெல்லாம் மிக சரியானது
அதுதான் நல்லது அதுதான் சரியானது
இங்கு நடப்பது அண்ணாமலையின் சர்வாதிகாரம் அல்ல மாறாக காங்கிரஸ் போல் குழம்ப கமலாலயம் தயாராக இல்லை, கோஷ்டி சேர்த்து சண்டையிட இது சத்யமூர்த்தி பவன் இல்லை
"மோடி தலமையில் அண்ணாமலையும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான், முடிந்தால் அமைதியாக வேலை செய்யுங்கள் இல்லை வெளியேறுங்கள் சிக்கல் இல்லை, அண்ணாமலையினை எதற்கு அனுப்பினோம் என எங்களுக்குத்தான் தெரியும், அவர் தன் வேலையினை செய்யட்டும் நீங்கள் உங்கள் வேலையினை செய்யுங்கள்
இல்லாவிட்டால் அகலுங்கள்" என்பதுதான் இப்போது பாஜகவின் நிலைப்பாடு
இதை புரிந்தவன் அமைதியாகின்றான், புரியாதவன் தவளை போல் தன்னை பாம்புகளுக்கு காட்டி கொடுக்கின்றான் அவை ஓடிவந்து விழுங்குகின்றன
இப்பொழுது பழனிச்சாமி தமிழகத்தில் தன்னை ஒரு சக்தியாக காட்டி பாஜகவினை தன் கட்டுபாட்டில் இருக்கும் ஒரு கட்சியாக திமுகவுக்கு காங்கிரஸ் போல் ஆக்க நினைக்கின்றார் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது
தமிழகத்தில் நாங்கள்தான் எல்லாம் எங்களுக்கு பணிந்து நின்றால் சில இடங்களில் வெல்ல உங்களுக்கு உதவுவோம் அதே நேரம் நாடளாவிய பிரச்சினையில் உங்களை ஆதரிப்போம், நாடு உங்கள் பாடு தமிழகம் எங்கள் காடு, உங்களுக்கு நாட்டுபற்று இருந்தால் எங்களை ஆதரித்தே தீரவேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு
அப்படி ஆதரிக்காவிட்டால் உங்களை கழற்றிவிடுவோம் ஒரு சீட்டும் ஒரு தேர்தலிலும் கிடைக்காது எனும் ரகசிய மிரட்டல் வேறு
இப்படியெல்லாம் அதிமுக நம்ப காரணம் அதனை பழைய பாஜகவாக நினைத்து அது பல சமரசங்களை செய்யும் என எதிர்பார்ப்பதுதான்
பாஜக அப்படியான சமரசங்களை முன்பு செய்த கட்சி, சந்தேகமில்லை ஆனால் அந்த காலம் வேறானது
பாஜகவின் முதல் எதிரி காங்கிரஸ், அது ஒன்றுதான் பரம வைரி முதல் எதிரி
அந்த காங்கிரஸை வீழ்த்த எல்லா மாகாண கட்சியுடனும் தயக்கமின்றி கூட்டணி வைத்தார்கள், ஒவ்வொரு மாகாண கட்சிசொன்ன நிபந்தனைக்கெல்லாம் கட்டுபட்டார்கள்
அப்படித்தான் ஊழல் கட்சி என அறியபட்ட ஜெயலலிதாவுடனெல்லாம் கூட்டணி கண்டார்கள் , 1996ல் மிக மோசமான நிலையில் இருந்த அதிமுகவினை பாஜக கூட்டணிதான் தூக்கி நிறுத்திற்று
ஆனால் பாஜகவின் பலவீனத்தை பயன்படுத்தி தன் இஷ்டத்துக்கு அதனை ஜெயா ஆட்டுவிக்க முயல பாஜக திமுக பக்கமே சாய்ந்தது
இதெல்லாம் காங்கிரஸை ஒழிக்க அவர்கள் செய்த ராஜதந்திரம், அந்த இலக்குக்காக எந்த கூட்டணி என்றாலும் ஏற்றுகொண்டார்கள்
ஆனால் இப்பொழுது காங்கிரஸ் களத்தில் இல்லை, இனி மீளவாய்ப்பு இல்லை எனும் வகையில் பாஜகவின் பார்வையும் ஆட்டமும் மாறிவிட்டது
இன்னும் மாகாண கட்சிகளை விட்டுவைத்தால் அல்லது அங்கு நாம் ஆதிக்கம் செலுத்த தயங்கினால் எதிர்காலத்தில் அது கட்சிக்கு சிக்கலாகும் என கருதுகின்றார்கள்
இப்பொழுதெல்லாம் அவர்கள் ஆட்டமே அதிரடியானது, பழனிச்சாமி போல தப்புகணக்கிட்ட சிவசேனா இன்று அடையாளமேமாறி நிற்கின்றது
பழைய பாஜக இது இல்லை, மாகாண கட்சிகள் ஆட்டிவைக்கும் அந்த பாஜக இது இல்லை
அதுவும் தமிழகத்தில் அவர்களின் எம்பி கணக்கு பூஜ்ஜியம் எனும் வகையில் இந்த காலி மைதானம் அவர்களுக்கு கவலையே இல்லாதது
சிக்கல் இங்கு பழனிச்சாமிக்கே அன்றி பாஜகவுக்கு அல்ல
எங்களுடன் சேராவிட்டால் என பாஜகவினை அதிமுக மிரட்ட முடியாது, அதே நேரம் தங்கள் பக்கம் வராவிட்டால் பழனிச்சாமியினை எப்படி பந்தாட முடியும் என்பது பாஜகவுக்கு தெரியும்
இப்பொழுது ஜெயா இருந்திருந்தாலே பாஜக இந்த ஆட்டம்தான் ஆடும், அதுதான் நிஜம் இங்கே பழனிச்சாமியெலலம் வெறும் தூசு
இந்த புதிய பாஜகவின் சீற்றமான முடிவினைத்தான் அண்ணாமலை அடித்து சொன்னார் "இனி இதுதான் அரசியல், எங்கள் முடிவுதான் முடிவு, எங்களை யாரும் கட்டுபடுத்த முடியாது" என்பது ஆயிரம் அர்த்தம் கொண்ட பேச்சு
பெரும் முடிவோடுதான் பாஜக நிற்கின்றது, இல்லையேல் இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்து இப்படி அவரை மோதவிடமாட்டார்கள்
பழனிச்சாமி தன்னால் முடிந்தவரை பம்மாத்து காட்டலாம், கூட்டணி இல்லை என குழப்பலாம் இன்னும் சில பின்னடைவுகளை பாஜகவுக்கு கொடுக்கலாம்
அனால் பின்வாங்கிவிட்டு பின் சீறிவரும் சுனாமி போல பாஜக அதன் பின் மிக பலமான அடிகளை அடிக்கும் அதனில் பழனியார் தப்பமுடியாது என்பது நிஜம்
ஆக எல்லா வகையிலும் நெருக்கடியும் பலவீனமும் அதிமுகவிற்குத்தான் உண்டே தவிர பாஜகவுக்கு அல்ல, அதனால் பழனிச்சாமி தரப்பு எல்லா வகை அஸ்திரத்தையும் தன் பலம் முழுவதையும் பயன்படுத்திபார்க்கும்
ஆனால் அவர்களால் வெல்லமுடியுமா என்றால் இல்லை, கங்கையின் பெரும்வெள்ளம் முன்னே கொங்கு நாட்டு ஓடைகள் நின்றுவிட முடியாது
காலம் அதை காட்டும், அண்ணாமலையின் குரல் டெல்லி பாஜகவின் குரலாக அதைத்தான் சொல்கின்றது
தமிழக காங்கிரஸ் எப்படி நாசமானதோ அப்படி தமிழக பாஜகவினையும் உருவாக்க அவர்கள் நினைக்கவில்லை, தமிழக அரசியலின் வழமையான கோஷ்டி அரசியலை முளையிலே அகற்றுகின்றார்கள்
தமிழிசை முதல் எல்லோரும் கவுரமாக வெளியேற்றபட்டது , தனக்கென கோஷ்டி உருவாக்க நினைப்போர்களை தட்டி வைப்பது இல்லை ஓட வைப்பது என ஒரு தலமையின் கீழ் கட்டுகோப்பாக செயல்படும் கட்சியாக அதனை உருவாக்குகின்றார்கள்
அகில இந்திய பாஜகவில் கோஷ்டிகள் இல்லை, ஒரே நோக்கம் ஒரே தலமை ஒரே இலக்கு என தெளிவாக கட்டுப்பாடோடு இருக்கின்றார்கள்
அந்த கட்டுபாட்டைத்தான் தமிழக பாஜகவிலும் கொண்டுவர முயல்கின்றார்கள் அதுதான் அவசியமும் கூட, அவ்வகையில் இங்கு நடப்பதெல்லாம் மிக சரியானது
அதுதான் நல்லது அதுதான் சரியானது
இங்கு நடப்பது அண்ணாமலையின் சர்வாதிகாரம் அல்ல மாறாக காங்கிரஸ் போல் குழம்ப கமலாலயம் தயாராக இல்லை, கோஷ்டி சேர்த்து சண்டையிட இது சத்யமூர்த்தி பவன் இல்லை
"மோடி தலமையில் அண்ணாமலையும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான், முடிந்தால் அமைதியாக வேலை செய்யுங்கள் இல்லை வெளியேறுங்கள் சிக்கல் இல்லை, அண்ணாமலையினை எதற்கு அனுப்பினோம் என எங்களுக்குத்தான் தெரியும், அவர் தன் வேலையினை செய்யட்டும் நீங்கள் உங்கள் வேலையினை செய்யுங்கள்
இல்லாவிட்டால் அகலுங்கள்" என்பதுதான் இப்போது பாஜகவின் நிலைப்பாடு
இதை புரிந்தவன் அமைதியாகின்றான், புரியாதவன் தவளை போல் தன்னை பாம்புகளுக்கு காட்டி கொடுக்கின்றான் அவை ஓடிவந்து விழுங்குகின்றன
குறிச்சொற்கள் #பிரம்ம_ரிஷியார் #பாஜக #அதிமுக #தேசிய_அரசியல் |
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி தொடர்கிறது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். |
அதேவேளையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை எரித்த பாஜகவினர் மீது அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். |
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்று கடந்த மாதம் 23ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “திமுக ஆட்சியின் அவலநிலையை மக்களிடம் எடுத்து செல்வது தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.” என்றார். பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. உரிய நேரத்தில் இதற்கான தேர்தல் நடைபெறும். அது தொடர்பாக கட்சி சார்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறிய ஜெயக்குமார், அத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை பாஜக மேலிடம் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை நேற்றே தெரிவித்தோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும் நம்புகிறோம் என்றும் கூறினார்.
பாஜகவுடன் அதிமுகவுக்கு மோதல் இல்லை என்றும் தனது பேட்டியின்போது ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
“பாஜக ஐ.டி.விங்கை சேர்ந்த பக்குவப்படாத சிலர் ஒருசில கருத்துகளை தெரிவித்தனர். அதற்கு நாங்களும் பதில் அளித்துவிட்டோம். மற்றபடி கூட்டணி தொடர்கிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியும், தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்கிறது,” என்றார் அவர்.
ஈபிஎஸ் அணியில் ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் வியாழக்கிழமையன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதற்கிடையே, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், `ஓ.பன்னிர்செல்வத்திற்கு என்று கட்சியே இல்லை. அவர் கட்சியை நடத்தவில்லை, கடையை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்` என்று பதிலளித்தார்.
அதிமுக- பாஜக கருத்து மோதலின் பின்னணி என்ன?
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் வைத்திருந்தார். அதை தொடர்ந்து பாஜக ஐ.டி. விங்கைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவ படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.
இதேபோல், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்திருந்தார்.
இதேபோல் ஜெயலலிதாவோடு தன்னை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ஜெயக்குமார், செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அண்ணாமலை வாய் கொழுப்போடு பேசுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்திருந்தார்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வாய்க்கொழுப்பில் பேசுகிறார் அண்ணாமலை..!" - செல்லூர் ராஜூ
``பா.ஜ.க-வுக்குச் சகிப்புத்தன்மை இல்லை என்பது தெரிகிறது. அந்தக் கட்சி ஏன் தமிழகத்தில் வளரவில்லை என்பதற்கு இதுதான் காரணம். திராவிட இயக்கங்கள்போல வர வேண்டும் என்றால் முடியாது." - அண்ணாமலை |
பா.ஜ.க-வின் ஐடி விங் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர், அந்தக் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தனர். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறிய கருத்து, பா.ஜ.க-அ.தி.மு.க இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், பா.ஜ.க-வுடனான தங்கள் கூட்டணி தொடரும் என்றும், தங்களுக்கிடையே எந்தப் பிரச்னையும் இல்லை என்றும் அ.தி.மு.க-வினர் கூறினர்.
இந்த நிலையில், `அண்ணாமலை வாய்க்கொழுப்பில் பேசுகிறார்' என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, ``முதலில் பா.ஜ.க-வுக்குச் சகிப்புத்தன்மை இல்லை என்பது தெரிகிறது. அந்தக் கட்சி ஏன் தமிழகத்தில் வளரவில்லை என்பதற்கு இதுதான் காரணம். திராவிட இயக்கங்கள்போல வர வேண்டும் என்றால் முடியாது. அந்த இயக்கத்துக்கு தகுதியும் கிடையாது. அண்ணாமலை இன்றைக்கு வாய்க்கொழுப்போடு பேசுகிறார். மத்தியில் தங்களுடைய ஆட்சி இருக்கின்றது என்கிற வாய்க்கொழுப்பில், அம்மாவையும், தலைவரையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
அம்மாவையும், தலைவரையும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு எவனுக்கும் தகுதி கிடையாது. தமிழகத்தில் அம்மாவைப்போல் எவனும் பிறக்கவும் இல்லை, பிறக்கவும் முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. பா.ஜ.க என்றால் மதிக்கக்கூடிய கட்சியாக இருந்தது. இப்போது அதில் சில விஷக்கிருமிகள் எல்லாம் இருக்கின்றன. இதைக் கண்டித்து மோடியும், நட்டாவும், அமித் ஷாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க-விலிருந்து ஆட்களை இழுக்குற அளவுக்கு அ.தி.மு.க இழிவான கட்சி அல்ல. இன்றைக்கு கண் கெட்டவர்களாக அவர்கள் பேசுகிறார்கள்" என்று கூறினார்.
ஆடு உறவு... குட்டி பகை! - அ.தி.மு.க - பா.ஜ.க பஞ்சாயத்து!
பழைய தமிழ்த் திரைப்படங்களில் ஒரு காட்சி வரும். கதாநாயகியைப் பெண் பார்க்க வரும் கதாநாயகனை, நாயகிக்குப் பிடித்துவிடும். ஆனால், நாயகியின் தம்பிக்குப் பிடிக்காது. ‘அந்தாளு பெரிய மீசை வெச்சுருக்காரு. பார்க்க பயங்கரமா இருக்காரு... எனக்குப் பிடிக்கலை... நீ வேண்டாம்னு சொல்லிடு’ என குறுக்கே விழுந்து உருளுவார் அந்தத் தம்பி. தம்பியின் தலையில் குட்டுவைத்து, “கல்யாணம் பண்ணிக்கப்போற அவளே சந்தோஷமா தலையாட்டுறா. நீ ஏண்டா குறுக்க மறுக்க ஓடிக்கிட்டிருக்க?” எனப் பெரியவர்கள் அதட்டுவார்கள். கிட்டத்தட்ட அந்தத் தம்பியின் நிலைதான், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்பட்டிருக்கிறது. டெல்லியோடு இணக்கமாகச் செல்ல எடப்பாடியும், எடப்பாடியை அனுசரித்துச் செல்ல டெல்லியும் தீர்மானமாகிவிட்ட நிலையில், “எனக்கு இந்தக் கூட்டணி பிடிக்கலை. அறுத்துவிடுங்க...” எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் அண்ணாமலை.
பிரதான கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வுடன் மோதல் போக்கை அண்ணாமலை உருவாக்கிக்கொள்வது இது முதன்முறையல்ல. “நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி”, “தி.மு.க-வுக்கு மாற்று நாங்கள்தான்” என முழக்கமிட்டது முதல், ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியபோது, “இதற்குத்தான் பிரிந்து நிற்க வேண்டாமெனச் சொன்னோம்” என கமென்ட் அடித்தது வரை, அ.தி.மு.க தலைமையைச் சீண்டிப்பார்க்கும் வேலையை அவர் குறைத்துக்கொள்ளவே இல்லை. டிசம்பர் 8, 2022-ல், கமலாலயத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வுக்கு எதிராக வெளிப்படையாகவே வெடித்தார் அண்ணாமலை. எடப்பாடியைக் குறிப்பிட்டு அவர் அப்போது அடித்த கமென்ட்டுகளெல்லாம் சேலத்தையும் சென்றடைந்தன. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த அ.தி.மு.க தலைமை, அவருக்கு ‘செக்’ வைக்கும்விதமாக, பா.ஜ.க-வின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமாரைத் தங்கள் கட்சியில் இணைத்து, ‘ஷாக்’ கொடுத்தது. இதை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லை. இந்தச் சூழலில்தான், “அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தொடர்ந்தால், என் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கொதித்திருக்கிறார். டெல்லி தலைமைக்கும் இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை அவர் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. ‘அண்ணாமலையின் இந்த ‘ஸ்டன்ட்’ எந்த அளவுக்கு உண்மை... டெல்லியின் ரியாக்ஷன் என்ன... பா.ஜ.க., அ.தி.மு.க தலைமைகளின் மனநிலை என்ன?’ என்பது குறித்தெல்லாம் விரிவாக விசாரித்தோம்...
“எடப்பாடிக்கு சலாம் போட முடியாது..!” - வெடித்த அண்ணாமலை... கண்டித்த சீனியர்கள்! |
கடந்த மார்ச் 17-ம் தேதி, அமைந்தகரையில் நடந்த கட்சி நிர்வாகிகளின் அவசரக் கூட்டத்தில்தான், அ.தி.மு.க உறவை விலக்கிக்கொள்ள வேண்டும் எனப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சீனியர் பா.ஜ.க தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.
“கூட்டத்தில் அண்ணாமலை அப்படி வெடிப்பாரென யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘ஐந்து சீட், பத்து சீட் வாங்குறதுக்காக நான் மாநிலத் தலைவராக வரலை. என்னால இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டு, எடப்பாடி முன்னாடி சீட்டுக்காகக் குனிஞ்சு சலாம் போட முடியாது. கட்சியை வளர்க்குறதுக்காகத்தான் வந்தேன். அதைச் செய்தே தீருவேன். நம்மோட பலத்தை நாம தனியாகப் போட்டியிட்டு நிரூபிக்கணும். சில பேருக்கு இதில் உடன்பாடு இருக்காது. அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடர்ந்தால், என் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். ஒரு தொண்டனாக இருந்து பணியாற்ற நான் தயார்’ என்றார் அண்ணாமலை. மேடையில் அமர்ந்திருந்த கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி, நாராயணன் திருப்பதி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் இது அதிர்ச்சிதான்.
சென்னை பெருங்கோட்டப் பொறுப்பாளரான கரு.நாகராஜன் எழுந்து, ‘தலைவரே... நீங்க அப்படி முடிவெடுக்கக் கூடாது. நீங்க இல்லாம, நாங்க என்ன பண்ணுவோம்?’ எனத் தேம்பித் தேம்பி அழுதார். அவரைத் தொடர்ந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் எழுந்து, ‘நீங்க எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு. தனியாகவே போட்டியிடுவோம் தலைவரே’ என்று கோஷமிட்டார்கள். இவர்களின் கூச்சல்கள், கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. டென்ஷனான வானதி சீனிவாசன், ‘கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது டெல்லி தலைமைதான். மையக்குழுக் கூட்டத்தில் பேசவேண்டியதை, இங்கு ஏன் பேசுகிறீர்கள்... பதவியை ராஜினாமா செய்வேன் என்றெல்லாம் இங்கு பேச வேண்டுமா...’ எனக் கொதித்துவிட்டார். நாராயணன் திருப்பதியும் அண்ணாமலையின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். அண்ணாமலைக்கு போன் போட்டு, மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தமும் கண்டித்திருக்கிறார். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அண்ணாமலை கண்டுகொள்ளவில்லை.
அண்ணாமலையின் பேச்சு பத்திரிகைகளுக்கு ‘லீக்’ ஆனது. அ.தி.மு.க - பா.ஜ.க இடையே முரண்பாடு இருப்பதாக மீடியாக்கள் பேசின. தான் எதிர்பார்த்ததுபோலவே, அ.தி.மு.க-வுடனான உறவில் கசப்பு மருந்தைத் தடவிவிட்டார் மலை. ஆனால், அதைக் கட்சி சீனியர்களும் டெல்லியும் துளியும் விரும்பவில்லை. ஒருகாலத்தில், வானதிக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் ஆகவே ஆகாது. ஆனால், கூட்டணி தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வேலுமணியுடன் அரசியல்ரீதியாகக் கைகோத்துக்கொண்டார் வானதி. அந்தப் பக்குவம் அண்ணாமலையிடம் இல்லை. இவர் ஒருவரால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகிவிட்டது. எல்.முருகன் தலைவராக இருந்து உருவாக்கிய இடத்தை நாங்கள் மீட்டெடுக்கவே இன்னும் மூன்றாண்டுகள் ஆகும். அந்த அளவுக்குக் கட்சியின் இமேஜை இறக்கிவிட்டார் அண்ணாமலை” என்று குமுறித் தீர்த்தனர்.
“ஆர் யூ த்ரெட்டனிங் அஸ்?” - கண்சிவந்த சந்தோஷ்! |
அமைந்தகரை கூட்டத்தில் பேசிய கையோடு, டெல்லிக்கும் ஒரு கடிதத்தை அனுப்பினாராம் அண்ணாமலை. அதில், கட்சியை மறுசீரமைக்கச் சில திட்டங்களை அண்ணாமலை கூறியிருப்பதாகவும், அதற்குத் தலைமை சம்மதிக்காத பட்சத்தில் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கடிதப் போக்குவரத்து குறித்து பா.ஜ.க மாநிலச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.
“தலைமைக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் மோடிதான் நமக்கு முகம். அவரை முன்னிறுத்தி நாம் தனியாகக் களம் கண்டால், தமிழகத்தில் 20 சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற முடியும். கண்டிப்பாகத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. ஆனால், கட்சியின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். இதற்காகத்தான் என்னை பா.ஜ.க-வுக்கு அழைத்து வந்தீர்கள். தலைவர் பதவியை அளித்தீர்கள்.
இந்தச் சீரமைப்பைச் செய்தால் மட்டுமே கட்சி வளரும் என நம்புகிறேன். அதற்குத் தலைமை சம்மதம் தெரிவிக்கவில்லையென்றால், என்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்யத் தயார்’ எனக் கூறியிருக்கிறார். இந்தக் கடிதத்தைக் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷுக்கு அனுப்பிவைத்த தேசியத் தலைமை, அண்ணாமலையிடம் பேசச் சொன்னது.
அண்ணாமலையைத் தொடர்புகொண்ட சந்தோஷ், எடுத்த எடுப்பிலேயே, ‘ஆர் யூ த்ரெட்டனிங் அஸ்’ எனக் கண்சிவந்துவிட்டார். இதை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லை. ‘நான் யாரையும் மிரட்டவில்லை. என் மனதில் இருப்பதைச் சொன்னேன்’ எனச் சமாளிக்க, அதை சந்தோஷ் ஏற்கவில்லை. முதன்முறையாக, கடினமான வார்த்தைகள் சந்தோஷிடமிருந்து வந்து விழுந்திருக்கின்றன. அ.தி.மு.க-வுடனான உறவை முறித்துக்கொள்ள அண்ணாமலை முயல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி முடிசூடிக்கொள்ளவிருக்கும் நிலையில், தனக்கான அரசியல் எதிர்காலம் கொங்கு மண்டலத்தில் அஸ்தமனமாகிவிட்டது என்பதை லேட்டாக உணர்ந்திருக்கிறார் அண்ணாமலை. எடப்பாடி ‘ஸ்ட்ராங்’ ஆகிவிட்ட சூழலில், அவர் பின்னாலிருக்கும் சமூக பலத்தையும், டெல்லி அனுசரணையையும் அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாது. இது அண்ணாமலைக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. தனித்துப்போட்டியிட்டு, தனது தலைமையில் தேர்தலைச் சந்தித்து, தன்னை நிரூபிக்கப் பார்க்கிறார் அண்ணாமலை. ஆனால், தேசியக் கட்சியான பா.ஜ.க-வில் அது சாத்தியமில்லை. தவிர, சமீபத்தில் ஒரு வீடியோ சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரத்தில், அ.தி.மு.க-வின் கையும் இருப்பதாக நம்புகிறார் அண்ணாமலை. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன், அண்ணாமலையின் கடிதம் குறித்து விசாரிக்கப்படவிருக்கிறது. மே 10-ம் தேதிக்குப் பிறகு சில காட்சிகள் மாறலாம். தனக்கான வாய்ப்பைத் தலைமை தராவிட்டால், தமிழகத்தில் ‘தனி ரூட்’ எடுக்கவும் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை” என்றனர் விரிவாக.
“பா.ஜ.க இருப்பது லாபம்தான்!” - எடப்பாடியின் கணக்கு |
பா.ஜ.க-வுடனான உறவை, அ.தி.மு.க-வினர் பெரும்பாலானோர் விரும்பவில்லை. என்றாலும், இன்றைய அரசியல் சூழலில் டெல்லியின் கதகதப்பை இழக்க எடப்பாடி விரும்பவில்லை. “எடப்பாடிக்கு ஆதரவான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு, எடப்பாடியின் கணக்கிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன” என்கிறது இலைக் கட்சி வட்டாரம்.
இது தொடர்பாக அ.தி.மு.க-வின் சீனியர் அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “தேசிய அரசியலில் அம்மாவுக்கு இருந்த பார்வையே வேறு. 2014 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு எதிராகப் பிரதமர் வேட்பாளராகும் தகுதி அம்மாவுக்கு இருந்தது. அதனால்தான், யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்மொழியாமல், தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து நின்று வெற்றிபெற்றார். ‘மோடியா... லேடியா...’ என முழங்கினார். அம்மா எடுத்த நிலைப்பாட்டை எங்களால் எடுக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கானது இல்லையென்றாலும், அதில் சொல்லிக்கொள்ளும்விதமான வெற்றியை நாங்கள் பெற வேண்டும். அதற்கு, பிரதமர் வேட்பாளர் என்கிற முகம் அ.தி.மு.க-வுக்குத் தேவை. அதனால்தான், பா.ஜ.க-வுடனான உறவை முறித்துக்கொள்ள எடப்பாடி விரும்பவில்லை. ‘பா.ஜ.க - அ.தி.மு.க இடையே இடைவெளியை ஏற்படுத்த ஊடகங்கள் முயல வேண்டாம். தேசநலன் கருதி மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும்’ என்று அ.தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேசியிருப்பதன் பின்னணியும் இதுதான்.
தவிர, டெல்லியுடனான சுமுக உறவைவைத்து அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடித்து, பொதுக்குழுவைக் கூட்டி, புதிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். இதற்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளை ஓ.பி.எஸ் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். அதேபோல, தேர்தல் நேரத்தில் ஓ.பி.எஸ்., தினகரன் ஒன்றிணைந்து செயல்பட்டால், தென் மாவட்டங்களில் எடப்பாடிக்குச் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் சிவகங்கையில் நடந்ததுபோல, சில காரியங்கள் நடக்கலாம். அவர்கள் இருவரையும் அடக்கிவைக்க டெல்லியின் உதவி அவசியம் எடப்பாடிக்குத் தேவைப்படும்.
தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க வட்டாரங்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமாகத் தாக்குதல் தொடுக்கத் தயாராகிறது டெல்லி மேலிடம். கூட்டணியை நாங்கள் முறித்துக்கொண்டால், அந்தத் துறையினரின் வாகனங்கள் சேலத்துக்கும் கோயம்புத்தூருக்கும் செல்ல நேரிடலாம். இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், ‘பா.ஜ.க நம்மோடு இருப்பது லாபம்’ என்கிற முடிவுக்கு எடப்பாடி வந்திருக்கிறார். இப்போதைக்கு இந்தக் கூட்டணி உடையாது” என்றார் தீர்க்கமாக.
“ஆடு உறவு, குட்டி பகை... அடுத்தது என்ன?” |
டெல்லியின் மனநிலையும், எடப்பாடியின் மனநிலையோடு ஒத்துப்போகிறது என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். நம்மிடம் பேசியவர்கள், “பா.ஜ.க-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பெரிய மாநிலக் கட்சியாக அ.தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக உடைந்த சிவசேனாவின் ஒரு பகுதியோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. இவர்களைத் தாண்டி பெரிய கட்சி என பா.ஜ.க தலைமையில் எவருமே இல்லை. 66 எம்.எல்.ஏ-க்கள், நான்கு எம்.பி-க்கள் அ.தி.மு.க-வுக்கு இருக்கிறார்கள். தேசிய அளவில், மொத்த வாக்காளர்களில் ஒரு சதவிகிதத்துக்கு மேல் வாக்குவங்கி வைத்திருக்கும் கட்சிகள் வெறும் 17 தான். அவற்றில் அ.தி.மு.க-வும் அடக்கம். இப்படியொரு கட்சியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இழக்க டெல்லி விரும்பவில்லை. டெல்லியின் ‘பல்ஸ்’ புரியாமல், அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்.
தமிழகத்தில், கட்சி வளர்வதற்கான சூழலை முதலில் தகர்த்ததே அண்ணாமலைதான். சீனியர்களை அரவணைத்துச் செல்லாதது, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தாதது, கூட்டணிக் கட்சியை மதிக்காதது என அவர் உடைத்த ஃபர்னிச்சர்கள் ஏராளம். எடப்பாடி படத்தை எரித்த கட்சி நிர்வாகியை கேசவ விநாயகம் நீக்க, அண்ணாமலையோ அந்த நிர்வாகிக்கு மீண்டும் பதவியளித்தார். அ.தி.மு.க - பா.ஜ.க இடையே இருந்த சுமுகமான உறவைக் கெடுத்து, அ.தி.மு.க வாக்காளர்களிடம் பா.ஜ.க-மீது நம்பிக்கையின்மையை உருவாக்கியதும் அவர்தான். அதனால்தான், அவரை மாநிலப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு டெல்லிக்கு அ.தி.மு.க-வும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஆடு உறவாட விரும்புகிறது. ஆனால், குட்டி பகைமையோடு பாய்ச்சலைக் காட்டுகிறது” என்றனர்.
பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க தேவை. போலவே, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க தேவை. இதை டெல்லியும் சேலமும் நன்றாக உணர்ந்திருக்கின்றன. ஆனால், டெல்லி சொல்வதைக் கேட்டு நடக்கவேண்டிய அரவக்குறிச்சிக்கோ இது புரியவில்லை. மன்னார்குடி, தேனி ரூட்டில் தனியே பஸ் ஓட்டப் பார்க்கிறார் அண்ணாமலை. ஆனால், கமலாலயத்திலிருந்து அவர் வண்டியில் ஏற யாரும் தயாராக இல்லை. ஆனாலும், இப்போதைக்கு அவர் ஓயாமல் ஹாரன் அடிப்பதை நிறுத்தப்போவதில்லை!
இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க இன்றளவும் இருக்கிறது. ‘மாநிலத் தலைமையால் கூட்டணி குறித்து ஒரு முடிவெடுக்க முடியாது’ என்று பா.ஜ.க மூத்த தலைவர்களான ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். அதன்படி, வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க தலைமையும், தேசிய பா.ஜ.க தலைமையும் கலந்தாலோசித்து முடிவுசெய்யும். அதில் எடுக்கப்படும் முடிவுதான் இறுதியானது. இடையில் யார் என்ன சொன்னாலும் நடக்காது!” - ஜெயக்குமார், அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்.
“அ.தி.மு.க-வுடன் மத்திய பா.ஜ.க நெருக்கமாக இருக்கிறது, தமிழக பா.ஜ.க அப்படி இல்லை’ என்ற கருத்து எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் மூடிய அறைக்குள்ளே பேசிய விவகாரங்களை நாங்கள் வெளியிடவேண்டிய அவசியமில்லை. சிலர் வேண்டுமென்றே இட்டுக்கட்டிப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் என்பது தி.மு.க-வை எதிர்ப்பதுதான். அந்த வகையில் அ.தி.மு.க - பா.ஜ.க இரண்டுமே தோழமைக் கட்சிகள். எங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை!” - நாராயணன் திருப்பதி, பா.ஜ.க மாநில துணைத் தலைவர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1