புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
7 Posts - 3%
prajai
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
18 Posts - 4%
prajai
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10மார்ச்8 - மகளிர் தினம் Poll_m10மார்ச்8 - மகளிர் தினம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் தினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 08, 2023 1:30 am

மார்ச்8 - மகளிர் தினம் FQVoMnE

மகளிர் தினம் உருவானது எப்படி

பிரெஞ்சு புரட்சியின்போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதித்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன. வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர்.

இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.  இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை கிளாரா ஜெட்கின் என்பவர் முன்வைத்தார். கோபன்ஹேகனில் 1910ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை அவர் கூறினார். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் பங்கேற்றனர். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் வெற்றியாய் உதித்ததே சர்வதேச பெண்கள் தினம்.  எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது. அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது ஐ.நா. வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாகச் சொல்வார்கள். பலவித மனம் மற்றும் பல வித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்ப மாலையாக பாரதம் உள்ளது. பாரதத்தில் மங்கையரும் பல விதமான மலர்களே. அவைகள் பூத்துக் காயாகி கனியாகிப் பக்குவமடைகிறது. அந்த கதம்ப மாலையை இணைக்கும் நூலாக தியாகம் உள்ளது. தியாகமே பாரதத்தில் பெண்கள் பலவித முறைகளில் ஆடை ஆபரணங்கள் அணிந்தாலும்,பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் தியாகம் ஒன்றுதான்.

பெண்களின் நிலையும் இந்தியாவில் முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு புறத்தில் ஏதோ ஒரு வெளிநாட்டில் இந்திய பெண்கள் வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்படும் வகையில் பெண்களின் பங்களிப்பு உள்ளது. கல்வி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்திய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை முதல் இந்திய பெண் மருத்துவர்-ஆனந்தி கோபால் ஜோஷி, முதல் பெண் தலைவர்-அன்னி பெசன்ட், முதல்  அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண்-ஸ்டெபி டிசோசா, ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்-கமல்ஜீத் சந்து, பாரத ரத்னாவைப் பெற்ற முதல் இந்திய பெண், முதல் இந்திய பெண் பிரதமர் -இந்திரா காந்தி, நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண்-மதர் தெரசா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்-கல்பனா சாவ்லா, பாரத் ரத்னாவைப் பெற்ற முதல் பெண் பாடகி-எம் எஸ் சுப்புலெட்சுமி, இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர்-பிரதிபா பாட்டீல் என இந்தியாவில் பெண்கள் பலர் பெருமை சேர்த்துள்ளனர்.

  குறிச்சொற்கள் #மகளிர் #மகளிர்_தினம் #மார்ச்8 #பெண்கள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 08, 2023 1:36 am

நமக்கு எதற்கு மகளிா் தினம்?


இன்றைக்கு உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது என்று சொல்லிக்கொள்கிறோம் என்றாலும் அவரவருக்கான தனித்த தன்மைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஒரு பண்பாட்டுத் தளம் இருக்கிறது. அதுவே அந்த மக்களின் அடையாளமாகவும் நிலைபெற்றிருக்கிறது.

தனித்த பண்பாட்டுக்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்வதையோ அவற்றைச் சிதைத்து ஒரு பொதுமையை ஏற்படுத்துவத்தையோ உலகளாவிய அரசியல் தொடா்ந்து லாபம் கருதிச் செய்துகொண்டு வருகிறது. இந்தப் பின்புலத்தோடு சா்வதேச மகளிா் தினம் பற்றிப் பாா்க்கலாம்.

சா்வதேச மகளிா் தினம் ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் மாதம் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அது ஒரு கொண்டாட்டம். ஏனெனில் நமது கலாசாரத்தில் கொண்டாட்டம் அடிப்படையானது. குடும்ப அளவிலான கொண்டாட்டங்கள், சமூகக் கொண்டாட்டங்கள், சமயக் கொண்டாட்டங்கள் என்று திருவிழாக்களின் தேசம் இது. அதனால் சா்வதேச மகளிா் தினம், அன்னையா் தினம், தந்தையா் தினம், காதலா் தினம் என்று எதுவாயினும் இருக்கும் ஆயிரம் கொண்டாட்டங்களுடன் அதனையும் சோ்த்துக் கொண்டாடுகிறாா்கள்.

உண்மையில் சா்வதேச மகளிா் தினம் கொண்டாட்டத்திற்கானதல்ல. அனுசரிக்கப்பட வேண்டியது அல்லது நினைவுகூரப்பட வேண்டியது. மேற்கத்திய கலாசாரத்தில் பெண் போகப்பொருள். ஆண் அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவள். இதனால் அடிப்படை உரிமைகள் கூட இல்லாத பெண்கள் தங்கள் உரிமைகளை உரக்கக் கேட்க வேண்டிய நிலை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்லது அதற்கும் சற்று முன்னதாக கூலித்தொழிலாளா்களாக இருந்த பெண்கள் தொழிலாளா் அமைப்புகளோடு இணைந்து நியூயாா்க்கில் வேலை நேரக் குறைப்பு, நியாயமான கூலி இவற்றுக்காகப் போராட்டங்களை நடத்தினா். இந்த நாளை அமெரிக்காவில் ‘மகளிா் தினம்’ என்றனா்.

ஐரோப்பிய நாடுகளில், தங்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்தனா். அதில் அவா்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆஸ்திரியா, டென்மாா்க் போன்ற நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைக் கேட்டுப் போராட்டங்களை மேற்கொண்டனா். சோவியத் ஒன்றியத்தில் 1917-ஆம் ஆண்டு மாா்ச் எட்டாம் நாள் இது ரொட்டி மற்றும் அமைதிக்கான போராட்டம் என்று எழுந்தது.

ஐரோப்பிய நாடுகளில் இதை ‘பெண்கள் சா்வதேச போராட்ட நாள்’ என்றே குறிப்பிட்டனா். அதுவரை கம்யூனிஸ்டுகள் மட்டும் அனுசரித்துக் கொண்டிருந்த மகளிா் தினம் 1967-ஆம் ஆண்டுக்குப் பின்னரே சா்வதேச அளவில் பாா்க்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டை ஐ.நா. சபை ‘சா்வதேச பெண்கள் ஆண்டு’ என்று அறிவித்தது. 1977-ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் மாா்ச் எட்டாம் நாள் சா்வதேச மகளிா் தினமாயிற்று. வா்த்தகம் இதனைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டதே தவிர இதனால் பெண்கள் கண்ட பலன் என்ன?

ஆக, பெண்கள் தினத்திற்கும் பாரத தேசத்திற்கும் யாதொரு தொடா்பும் இல்லை. சொல்லப்போனால் அங்கே வாக்குரிமைக்காக பெண்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், நமது தேசத்தில் வெள்ளையரை எதிா்த்து மகாராணிகளாக இருந்த பெண்கள் ராணுவத்திற்குத் தலைமை ஏற்றுக் களம் கண்டுகொண்டிருந்தனா். ராணுவத்திலும் பெண்கள் படைப்பிரிவு தீரத்துடன் களத்தில் தியாகம் செய்து கொண்டிருந்தது.

நம்முடைய தேசத்தின் கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள் இவற்றுக்கும் மேலைநாட்டிற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. அவா்களுடையது தனிமனித உரிமை பேசுவது. நம்முடையதோ கடமை அடிப்படையிலானது. இங்கே அறம், தனிமனிதா்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நம்முடைய வாழ்க்கை முறை, குழு அடிப்படையிலானது. நாடு, சமூகங்கள், சமுதாயக் குழுக்கள், குடும்பங்கள் என்று அமைந்திருக்கிறது. இந்தக் குழுக்களின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு பெண்களிடம் இருக்கிறது. எனில், தேசத்தின் அடித்தளமாக இருப்பவள் பெண். அதனைக் குறிக்கவே தாய்நாடு என்று தேசத்தைச் சொல்கின்றோம்.

திருவிழாக்கள் என்று ஊா் கூடிக் கொண்டாடுவோம். குலதெய்வ வழிபாடுகளை உறவின்முறைகளோடு முன்னெடுப்போம். குடும்பத்தில் நற்காரியமோ மற்றதோ உறவுகள் கூடிச் செய்வோம். ஊருக்குள் பல சமூகக் குழுக்களும் ஆளுக்கொரு நாள் மண்டகப்படி செய்து தெய்வங்களைக் கொண்டாடுவோம். உடன்பிறந்தோா் மட்டுமல்லாது பல தலைமுறையின் உடன்பிறப்புகள் ஒன்று கூடுவது குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. இப்படி பாரத தேச வாழ்க்கை, கூடி மகிழ்வதும் பகிா்ந்து கொள்வதுமாகப் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் குழு வாழ்க்கையின் அடிநாதம் பெண்.

மேலைநாடுகளில் தனிமனித உரிமை என்ற பாா்வை இருக்கிறது. நமக்கோ குடும்பம் முதன்மையானது. தாயான பெண்ணுக்கும் தனது குழந்தைகளின் பாதுகாப்பும் உயா்வும் மட்டுமே பிரதானமாக இருக்கின்றன. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்குப் பெண் முன்வருகிறாள். எனவேதான் பாரத தேசத்தில் பெண் தாயாகப் பாா்க்கப்படுகிறாள்.

தாயைக் காப்பதும் சகோதரிகளைக் கொண்டாடுவதும் நமது கலாசாரத்தில் தவிா்க்க இயலாதவை. அந்தப் பண்பு ஒன்றே பெண்கள் பற்றிய நமது பாரம்பரியத்தைச் சொல்வதற்குப் போதுமானது. எங்கே பெண் கொண்டாடப்படுகிறாளோ அங்கே சுபிட்சம் நிலவும் என்பது தொன்று தொட்டு நமது நம்பிக்கை என்றாலும், பெண்ணடிமைத்தனமும் பாதுகாப்பின்மையும் இங்கே இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றன. பலநூறு ஆண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்ததன் விளைவுகள் இன்றைக்கும் சமூகத்தில் வெளிப்படுகின்றன.

பெண்களுக்கும் முன்னதாக பெண்களுக்காக சிந்தனையாளா்கள் தோன்றி சீா்கேடுகளை எடுத்துச் சொல்லி சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனா். ‘ஒரு நாட்டின் பலம் அதன் பரப்பளவிலோ நிதிநிலைமையிலோ இல்லை; அதன் பண்பாட்டில்தான் உள்ளது’ என்று எடுத்துச் சொன்னவா் சுவாமி விவேகானந்தா்.

‘இந்தியாவில் குடும்பத்தின் ஆதாரம் தாய். நமது லட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய். எனவே தாய் நமக்கு கடவுளின் பிரதிநிதி. கடவுள் ஒருவரே என்பதைக் கண்டு அதை வேதங்களில் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே’ என்று குறிப்பிடுகிறாா் விவேகானந்தா். அவரே, ‘பெண்களை நாம் மிகுந்த அடிமைத்தனத்தில் தள்ளி கொடுமைகள் இழைத்து விட்டோம். நாம் பெண்களைத் தாழ்ந்தவா்கள் என்று வசை பாடுகிறோம். விளைவு, நாம் மிருகங்களாக, அடிமைகளாக, முயற்சியற்றவா்களாக, ஏழைகளாக இருக்கிறோம்’ என்று ஒரு நூற்றாண்டுக்கும் முன்னதாகவே பெண்களுக்காகக் குரல் கொடுத்தாா்.

இழந்த தனித்துவத்தை மீண்டும் அடைவதற்கான ஒரேவழி கல்வி மட்டுமே. பெண்கள் கல்வியில் சிறந்தவா்களாக உயர வேண்டும். கல்வி கிடைத்தால் அவா்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களே தீா்த்துக் கொள்வாா்கள். இன்றைய நிலையில் தற்காப்பு கலைகளைக் கூட அவா்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் பாரதி முன்னெடுத்ததும் பெண்ணுக்கான உரிமையையும் கல்வியையும்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தருமத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி அவசியம் என்பதை விவேகானந்தா் எடுத்துச் சொல்ல, பாரதியோ, ‘மாதா் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி’ என்று பெண்கல்வி பற்றிப் பாடுகிறாா்.

தியாகமும் சேவையும் தேசத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையானவை. அவற்றை நமது தாய்மாா்களிடம் இருந்தே கற்றுக் கொள்ள முடியும் என்கிற சுவாமி விவேகானந்தரின் கருத்தை பாரதியும் வழிமொழிகிறாா். என்றைக்கும் நம்முடைய அடையாளங்களை, பண்பாட்டை விட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்ப அவற்றைப் பயன்பாட்டில் வைப்பதே முன்னேற்றத்திற்கு நல்லது. அதன் வழியேதான் தேசத்திற்கான முன்னேற்றம் சாத்தியமாகும்.

வெளிநாட்டினா் நம்மை அடிமைப்படுத்திய காலத்தில் அவா்களது சித்தாந்தங்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் நம் மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. அதன் நீட்சியாகவே நமது பெண்கள் பற்றிய இன்றைய கண்ணோட்டத்தையும் பெண்களின் நிலையையும் பாா்க்க வேண்டும். அந்நிய மோகத்திலிருந்து விடுபட்டு நமது பாரம்பரியப் பெருமைகளைத் திரும்பிப் பாா்த்துத் தனித்துவத்தை நிலைநாட்டிக்கொள்ள வேண்டியது கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் என்பதோடு மட்டுமல்லாது சிந்தனையிலும் இருக்க வேண்டும். பெண்கள் பற்றிய பாா்வையில் மாற்றம் ஏற்படுவதற்கு அந்நிய மோகத்தை விட்டொழித்தால் போதுமானது.

அதையே இன்றைய புதிய இந்தியா நமக்கு எடுத்துச் சொல்கிறது. உலகம் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிந்திக்கும் நேரத்தில், பாரதம் பெண்கள் தலைமையில் பெண்களே முன்னெடுக்கும் முன்னேற்றம் நோக்கிச் செயல்படுகிறது. நாம் இங்கே தலைமை ஏற்கத் தகுதி கொண்டவா்களாக இருக்கும் நிலையில் நமக்கு எதற்காக மற்றவரின் போராட்டத்தை நினைவு படுத்தும் நாள் அனுசரிப்பு? அதிலென்ன பெருமை இருக்கிறது?

நமது தேவையெல்லாம் அறிவுத் தளத்தில் நமது தகுதியை மென்மேலும் வளா்த்துக் கொண்டு, ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்’ என்று கம்பீரமாய் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டிகளாய் முன்னேறுவது மட்டுமே. நாம் அதற்கான முழுத் தகுதியும் கொண்டவா்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 08, 2023 1:38 am

பெண்களின் பங்களிப்பு கூடட்டும்


அண்மையில் அருணாசல பிரதேச மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

உலகில் உள்ள 193 நாடுகளில், நாடாளுமன்றங்களில் பெண்கள் இடம் பெற்று இருக்கும் எண்ணிக்கையில் நமது நாடு நூற்று நாற்பத்தி எட்டாவது இடத்தில் உள்ளது என சா்வதேச நாடாளுமன்றங்களின் கூட்டமைப்பு (இன்டா் பாா்லிமென்டரி யூனியன்) அறிவித்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் நியூஸிலாந்து, ருவாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கியூபா, மெக்சிகோ, நிகராகுவா என ஆறு நாடுகளில் மட்டுமே அந்நாடுகளில் உள்ள நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் உள்ளது.

உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய ஐம்பது சதவீதம் பெண்கள் உள்ள நிலையில், சட்டம் இயற்றும் பொறுப்பில் உள்ள உறுப்பினா்களில் பெண்கள் எண்ணிக்கை சுமாா் இருபத்தாறு சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மொத்தம் உள்ள 542 உறுப்பினா்களில் தற்போது எழுப்பத்தெட்டு உறுப்பினா்களே பெண்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் மக்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இருபத்தி நான்கு என்றிருந்த நிலையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னா் மக்களவையில் பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கை எழுபத்தியெட்டு என்பது கணிசமான முன்னேற்றம் அல்ல.

நம் நாட்டின் மக்களவை உறுப்பினா்களில் இது 14.4 % மட்டுமே.சா்வதேச நாடாளுமன்றங்களில் பெண் உறுப்பினா்களின் சராசரி எண்ணிக்கை இருபத்தி இரண்டு என்பதற்கு கீழாக நம் நாட்டின் மக்களவையில் பெண் உறுப்பினா்களின் சதவீதம் உள்ளது. மாநிலங்களவையில் தற்போது உள்ள உள்ள இருநூற்று நாற்பத்தைந்து உறுப்பினா்களில் இருபத்தைந்து உறுப்பினா்கள் மட்டுமே பெண்கள்.

சுதந்திரத்திற்கு பிறகான நம் நாட்டின் எழுபத்தைந்து ஆண்டு கால வரலாற்றில் குடியரசுத் தலைவா், பிரதமா் பதவிகளில் பிரதீபா பாட்டீல், திரெளபதி முா்மு என இரண்டு குடியரசு தலைவா்களையும், இந்திரா காந்தி என்ற ஒரே ஒரு பிரதமரை மட்டுமே பெண்கள் பிரிவில் நாம் காண முடிந்தது.

அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டுகளில், நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான முப்பத்துமூன்று சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவதற்கான மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், அது நிறைவேற்றப்படவில்லை.

பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான நம் தமிழகத்தில் முப்பத்தொன்பது மக்களவை உறுப்பினா்களில், மூவா் மட்டுமே பெண்கள் ஆவா்.

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மட்டுமல்லாது, நம் நாட்டில் உள்ள மாநில சட்டப்பேரவைளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் போதிய அளவு இல்லை. தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள இருநூற்று முப்பது நான்கு உறுப்பினா்களில், பன்னிரண்டு போ் மட்டுமே பெண்களாவா். இது நம் நாட்டின் சட்டப்பேரவைகளில் உள்ள பெண் உறுப்பினா்களின் தேசிய சராசரியான ஒன்பது சதவீதத்திற்கும் குறைவு. நம் நாட்டின் பிற மாநில சட்டப்பேரவைகளிலும் பெண் உறுப்பினா்களின் பிரதிநிதித்துவம் தமிழகத்தைப் போலவே குறைந்த அளவே உள்ளது.

1992-ஆம் ஆண்டு நமது அரசியல் சாசனத்தில் கொண்டுவரப்பட்ட எழுபத்தி முன்றாவது திருத்தத்தின்படி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பொறுப்புகளில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதற்கேற்றபடி பெண்களும் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். ஆனால் அவ்வாறு தோ்ந்தெடுக்கப்படும் பெண்கள் தங்கள் கடமையை முழுமையாக நிறைவேற்ற ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்பதே உண்மை.

மேலும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பொறுப்புகளில் உள்ள பெண்கள் சாா்பாக பெரும்பாலும் அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த ஆண்களே அதிகாரம் செலுத்துவதையும் மறுப்பதற்கில்லை.

பெண்கள் நலன் காக்கும் சட்டங்களைக் கொண்டுவரும் வகையில் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.ஆனால் அரசியல் பற்றி அறிந்து கொள்வதில் கூட பெரும்பாலான பெண்களிடையே ஆா்வமில்லை என்பதே நிதா்சனம். பெண்கள் அரசியலில், பொதுவாழ்வில் ஈடுபடுவதை அவா்களது குடும்பத்தில் உள்ளவா்களே ஆதரிப்பதில்லை.

பழமைவாத கருத்துகள் இன்னமும் நம் சமூகத்தில் வேரூன்றி இருப்பது, அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் ஆண்கள், அந்த அதிகாரத்தை பெண்களுடன் பகிா்ந்து கொள்ள முன் வராதது போன்றவையும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அரசியல் ஈடுபடாமைக்கு காரணங்களகும்.

தோ்தல் காலத்தில் பெண் வாக்காளா்களின் ஆதரவை குறிவைத்து தங்களின் தோ்தல் அறிக்கையில் மிக்ஸி, கிரைண்டா், எரிவாயு சிலிண்டா் என இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் கூட தங்கள் கட்சியின் வேட்பாளா்கள் பட்டியலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிப்பதில்லை. இவை அனைத்தையும் தாண்டி அரசியலில் ஈடுபடும் பெண்கள் பல்வேறு எதிா்ப்புகளை சந்திக்க நோ்கிறது.

‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற மகாகவி பாரதியாரின் கனவு முழுமையாக நனவாக அரசியல் அதிகாரத்தை அடையும் தகுதியை பெண்கள் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சிலி நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாகவும், ஐக்கிய நாடுகள் சபைகளின் மனித உரிமை ஹை கமிஷனராகவும் பொறுப்பு வகித்த மிக்கெல்லே பச்செலெட் ஜெரியா, ‘பெண்களுக்கு

வாக்குரிமை தருவதால் மட்டுமோ, அவா்கள் வாக்களிப்பதால் மட்டுமோ ஜனநாயகம் முழுமையடையாது. அவா்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் மட்டுமே ஜனநாயகம் முழுமை பெறும்’ என்று கூறினாா். அத்தகைய முழுமையான ஜனநாயகத்தை நம் நாட்டில் மலரச் செய்ய நாம் இந்நாளில் உறுதியேற்போம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 08, 2023 2:37 pm

சர்வதேச மகளிர் தினம் 2023: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்


சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.

ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்?

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்கள் மார்ச் 8ஆம் நாளை பெண்களுக்கான சிறப்பு நாளாகக் குறிக்கின்றனர்.

ஏன் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

மகளிர் தினம் எப்போது தொடங்கியது?



கிளாரா ஜெட்கின் 1910இல் சர்வதேச மகளிர் தினத்தை முதல் முறையாக அறிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது.

1908இல் 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.

இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது.

1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இது முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது.

எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 111வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) "கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்" என்பதாகும்.

சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.

அதே சமயம் அன்றைய அரசியல் வேர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மார்ச் 8 ஏன் தேர்வானது?



சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை.

1917இல் ரஷ்ய பெண்கள் "உணவும் அமைதியும்" என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை - அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.

ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தில் மக்கள் ஏன் ஊதா நிற ஆடையை அணிகிறார்கள்?



ஊதா நிறம் பெரும்பாலும் ஐடபிள்யூடி உடன் தொடர்புடையது. இந்த நிறம், 'நீதி மற்றும் கண்ணியத்தை' குறிக்கிறது.
ஊதா, பச்சை, வெள்ளை ஆகியவை ஐடபிள்யூடி நிறங்கள் என்று சர்வதேச மகளிர் தின இணையதளம் தெரிவித்துள்ளது.

"ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை தூய்மையை பிரதிபலிக்கிறது.

ஒரு சர்ச்சைக்குரிய கருத்து என்றாலும் நிறங்கள் 1908இல் பிரிட்டனில் உள்ள பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (டபிள்யூஎஸ்பியு) உருவானது," என்று அவர்கள் கூறுகிறார்கள்.

சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?


உண்மையில், ஆண்களுக்கான தினம், நவம்பர் 19 என இருக்கவே செய்கிறது.

ஆனால் இது 1990களில் இருந்து மட்டுமே குறிக்கப்பட்டது. இந்த தினத்தை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் இதை கொண்டாடுகிறார்கள்.

ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, "ஆண்கள் அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறையான மதிப்பை" இந்த தினம் கொண்டாடுகிறது. மேலும் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்தவும் ஆண்களின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலின உறவுகளை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?



சர்வதேச மகளிர் தினம் என்பது ரஷ்யா உட்பட பல நாடுகளில் தேசிய விடுமுறையாக உள்ளது. அங்கு மார்ச் 8ஆம் தேதி மூன்று அல்லது நான்கு நாட்களில் பூ விற்பனை இரட்டிப்பாகும்.

சீனாவில், மாநில கவுன்சில் அறிவுறுத்தியபடி, பல பெண்களுக்கு மார்ச் 8 அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இத்தாலியில், சர்வதேச மகளிர் தினம், அல்லது லா ஃபெஸ்டா டெல்லா டோனா, மிமோசா மலர்களைக் கொடுப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்த பாரம்பரியத்தின் தோற்றம் தெளிவாக இல்லை. ஆனால் இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரோமில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

அமெரிக்காவில், மார்ச் மாதம் பெண்களின் வரலாற்று மாதமாகும். இந்த நாளில் நாட்டின் அதிபர் வெளியிடும் அறிவிப்பு அமெரிக்க பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த ஆண்டு மகளிர் தின கருப்பொருள் என்ன?


2023ஆம் ஆண்டிற்கான ஐ.நா கருப்பொருள் "DigitALL: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" ஆகும். இந்த கருப்பொருள், தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கல்விக்கு பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு, பெண்கள் மற்றும் பெண்களுக்கான சமத்துவமின்மையின் மீதான டிஜிட்டல் பாலின இடைவெளியின் தாக்கத்தையும் ஐடபிள்யூடி ஆராயும். ஏனெனில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2025க்குள் பெண்கள் ஆன்லைன் உலகத்துக்கான அணுகல் இல்லாத நிலை தொடர்ந்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $1.5 ட்ரில்லியன் இழப்பு நாடுகளுக்கு ஏற்படும் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

ஆனால், இதனுடன் தொடர்புடைய மற்ற கருப்பொருள்களும் உள்ளன. சர்வதேச மகளிர் தின இணையதளம் - இது "பெண்களுக்கு நேர்மறையான மாற்றத்தை உருவாக்க உதவும் ஒரு தளத்தை வழங்குவதற்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. மேலும், பாகுபாடற்ற நிலையை உறுதிப்படுத்த #சமத்துவத்தைஏற்போம் என்ற கருப்பொருளையும் கொண்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

நமக்கு ஏன் அவசியம்?



கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான், இரான், யுக்ரேன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள பெண்கள் அந்தந்த நாடுகளில் போர், வன்முறை மற்றும் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில் தங்கள் உரிமைகளுக்காக போராடினர்.

ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள் எழுச்சி மனித உரிமைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இப்போது பெண்களுக்கு உயர்கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே பெரும்பாலான வேலைகளில் ஈடுபட கட்டுப்பாடு, ஆண் துணை இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்ய தடை மற்றும் பொது இடங்களில் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலைமை உள்ளது.

இரானில், பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப்பால் மறைக்க வேண்டும் என்ற அந்நாட்டு ஆளுகையின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி டெஹ்ரானில் அறநெறி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மாசா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் தூண்டியது.

அப்போதிருந்து, பல இரானியர்கள், பெண்களுக்கான சிறந்த உரிமைகள் மற்றும் தற்போதைய அரசியல் தலைமையில் மாற்றத்துக்கு அழைப்பு விடுத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

"பெண், வாழ்க்கை, சுதந்திரம்" என்பதே போராட்டங்களின் முழக்கமாகும். அதிகாரிகள் அவற்றை "கலவரங்கள்" என்று சித்தரித்து, வலிமையுடன் எதிர்வினையாற்றிய நடவடிக்கையில். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

2022ஆம் தேதி பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய படைகள் யுக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, போரால் தூண்டப்பட்ட விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக யுக்ரேனிலும் உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றில் பாலின இடைவெளிகள் மோசமடைந்துள்ளன என்று ஐ.நா தெரிவித்து.

2022ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, அமெரிக்க உச்ச நீதிமன்றம், ரோ வெர்சஸ் வேட் என்ற வரலாற்று சட்டத்தை ரத்து செய்தது. இது அமெரிக்காவில் பரவலான கூக்குரல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியது.

நவம்பர் 2022இல், ஐரோப்பிய நாடாளுமன்றம் 10 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு ஜூலை 2026க்குள் பொது வர்த்தக நிறுவனங்களின் வாரியங்களில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் சட்டத்தை இயற்றியது. அந்த உரிமையை பெறுவதற்கான உண்மையான வாய்ப்பு பெண்களுக்கு இருப்பதை உறுதிசெய்வோம்" என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.

இதற்கிடையே ஆர்மீனியா மற்றும் கொலம்பியாவில் மகப்பேறு விடுப்புகால சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஸ்பெயின் மாதவிடாய் சுகாதார விடுப்பு போல கருக்கலைப்புக்கான அணுகலுக்கும் விடுப்பு வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றியது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது, பெய்ஜிங்கில் 45% விளையாட்டு வீராங்கனைகளுடன் கூடிய பாலின-சமநிலை குளிர்கால விளையாட்டுகளை நடத்தியது. அதன் மூலம் பாலின சமத்துவம் அடையப்படவில்லை என்றாலும், அது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் மகளிர் விளையாட்டுகள் மீதான சீரான கவனத்தை ஊக்குவித்தன.

2023ஆம் ஆண்டு ஃபிஃபா மகளிர் உலக கோப்பை புதிதாக விரிவுபடுத்தப்பட்டது. இதில் 36 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிக்கு முன்னதாக, அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அதன் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு சமமாக ஊதியம் வழங்கும் வகையிலான வரலாற்றுபூர்வ ஒப்பந்தத்தை எட்டியது. இது விளையாட்டில் இரு பாலினருக்கும் பொருந்தக்கூடிய சமமான ஊதியத்தை உறுதிப்படுத்தியது. முன்னதாக, இந்த நோக்கத்துக்காக வீராங்கனைகள் பலர் வழக்குகளை தொடுத்தனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களில் பலர் தங்கள் வழக்கை வாதிட்டனர்.

பிபிசி தமிழ்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக