by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
வேங்கைவயல் - இன்னும் நாறிக்கொண்டுதான் இருக்கிறது முதல்வரே...
“ஈசலைத் தின்னோம்
எலியையும் தின்னோம்
நத்தையும் தின்னோம் - நாங்க
நரகலும் தின்னோம்!”
கடந்த 2015-ல் நான் இயக்கிய ‘கத்துக்குட்டி’ என்கிற படத்தில் இப்படியொரு பாடல் இடம்பெற்றிருந்தது. தணிக்கைக்குழு அந்தப் பாடலிலுள்ள ‘நரகலும் தின்னோம்’ என்கிற வரியை அனுமதிக்கவில்லை. “இந்த மாதிரி அநியாயங்கள் நடப்பதால்தானே அதைப் பாடலாக்கி யிருக்கிறோம்…” என்று தன்மையாக தணிக்கைக்குழு அதிகாரிகளிடம் விளக்கினேன். “சும்மா பரபரப்புக்காக இப்படிப் பண்ணாதீங்க… நரகல்னு நீங்க குறிப்பிடுறது மலத்தைத்தானே… அப்படியெல்லாம் இப்போ எங்கே சார் நடக்குது?” எனக் கோபப்பட்டார் ஓர் அதிகாரி. “மன்னிச்சுடுங்க சார்… தலித்துகளின் வாயில் மலத்தைத் திணித்த திண்ணியம் கிராமம், திருச்சிக்குப் பக்கத்தில் இருக்குன்னு நினைச்சுட்டேன். இப்போதான் தெரியுது, அது வேற நாட்டுல இருக்குன்னு…” என்றேன். “அதிகாரிகளிடம் இப்படியெல்லாம் பேசாதீங்க…” என்று சூடானவர்கள், “அதெல்லாம் எப்போதோ நடந்திருக்கலாம். மறுபடியும் அதை நினைவூட்டுகிறவிதமாக அந்த வரி இருக்கு. அதனால, அதை அனுமதிக்கவே முடியாது” என உறுதிகாட்டி ‘கட்’ கொடுத்துவிட்டார்கள்.
2015-ம் ஆண்டிலேயே ‘அப்படிப்பட்ட அவலங்களையெல்லாம் கடந்து, தமிழகம் அறிவுசார் மாநிலமாக முன்னேறிவிட்டதாக’ நினைத்தது அதிகாரிகள் தரப்பு. ஆனால், 2023-லும் தலித் மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்து ‘சாதியக் குரூரம் தமிழ்நாட்டில் இன்னும் அப்படியேதான் இருக்கிறது’ என நிரூபித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் இந்த அவலம் அரங்கேறி இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டன. இன்னமும் குற்றம் செய்தவர்களைக் கைது செய்யாமல் விட்டுவைத்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை. நான்கு போலீஸார் களத்தில் இறங்கினால், நான்கு மணி நேரத்தில் கண்டுபிடித்துவிட முடிகிற இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டும், குற்றவாளிகளை இன்னமும் நெருங்க முடியாததுதான் ஆச்சர்யமும், அதிர்ச்சியும், கவலையும்.
சம்பவம் நடந்த சமயத்தில், சில நாள்களுக்கு கிராமம் முழுக்க போலீஸைக் குவித்தார்கள். ஊருக்குள் யார் நுழைந்தாலும் விசாரித்தார்கள்; கெடுபிடி காட்டினார்கள்.
பத்திரிகைகளும், யூடியூப் சேனல்களும்கூட போட்டி போட்டு பேட்டி எடுத்தன. சிறிய, பெரிய கட்சி ஆட்கள் கிளம்பி வந்து, ‘இந்தப் பிரச்னையைச் சும்மாவிட மாட்டோம்’ எனச் சீறினார்கள். ஆனால், இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில், உள்ளூர் ஆட்களைத் தவிர ஒருவரும் கிராமத்தில் இன்று இல்லை. ஒன்றிரண்டு போலீஸார் மட்டும் நிற்கிறார்கள். ‘நடந்த கொடூரத்துக்குத் தீர்வு கிடைத்துவிட்டதுபோல’ அல்லது ‘ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று உணர்ந்துவிட்டது போல’ கிராமமே அமைதிக்குத் திரும்பியிருக்கிறது. ‘குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை ஓய மாட்டோம்’ எனச் சவடால் பேசிய ஓர் அரசியல்வாதியையும் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை காணவில்லை.
“இது நம்புற மாதிரி இல்லை!”
கிராமத்துக்குள் நுழைந்து மக்களிடம் பேசத் தொடங்கினால், “அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே சார்… மந்திரிங்க, மாவட்டம், கலெக்டர்,
எஸ்.பி-னு ஊரே அல்லோலகல்லோலப் பட்டுச்சு. இப்போ எல்லாரும் அடுத்த வேலைக்குப் போயிட்டாங்க. இத்தனை நாளுக்கு அப்புறமும் ஊரைப் பத்தி விசாரிக்க வந்திருக்கீங்க… ஏன் சார்?” என்றார் சக்திவேல் என்பவர்.
“குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை இன்னமும் கண்டுபிடிக்கலையே?” என்றோம்.
“விசாரணைங்கிற பேர்ல பல பேரை போலீஸ் அழைச்சுக்கிட்டுப் போகுது. வெளியே வந்து அவங்க போலீஸை எதிர்த்து குரல் கொடுக்குறாங்க. இதுதான் மாறி மாறி நடக்குது. குடிக்கிற தண்ணியில மலத்தைக் கலந்தது எவ்வளவு பெரிய கொடுமை, காலத்துக்கும் இந்த ஊருக்கு மாறாத அசிங்கம்கிறது யாருக்குப் புரியுது... பாதிக்கப்பட்ட மக்கள் கதறுறாங்க. அத்தனை சமூகத்து மக்களும், `குற்றவாளியைக் கண்டுபிடிங்க’ன்னு கையெடுத்துக் கும்பிடுறாங்க. இத்தனை நாளாகியும் போலீஸ் கண்டுபிடிக்காம திணறுதுன்னு சொன்னா அது நம்புற மாதிரி இல்லைங்க” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
“உள்ளூர் போலீஸ் ஒழுங்காகத்தான் விசாரித்தார்கள். இந்தக் கொடூரச் சம்பவத்தின் மீதான கொதிப்பை ஆறப்போடத்தான் வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றியிருக்கிறார்கள். இது கொலை வழக்கோ, கொள்ளை வழக்கோ இல்லை. ஊருக்கு வெளியிலிருந்து யாரும் வந்து இந்தக் குரூரத்தைப் பண்ணியிருக்க முடியாது. கல்வியும் விஞ்ஞானமும் வளர்ந்திருக்கும் இந்தக் காலத்திலும், தலித் மக்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கலந்திருப்பது பெரிய கொடூரம். சமூகநீதி பேசுகிற இந்த அரசு, சம்பந்தப்பட்ட குற்றவாளியை அடுத்த நாளே பிடித்திருக்க வேண்டும். ஒரு எஸ்.ஐ ரேங்க்கிலுள்ள போலீஸ் அதிகாரி நினைத்திருந்தால்கூட இந்நேரம் குற்றவாளியைப் பிடித்திருக்க முடியும்.
சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் இந்த விவகாரத்தை மறக்கடிக்க நினைக்கிறார்கள். மலம் கலந்த தண்ணியைக் குடித்தவர்கள் அந்த அசிங்கத்தைக் காலத்துக்கும் மறக்க முடியுமா?” என்றார் ஒரு பெரியவர்.
``நாங்க பேசக் கூடாதுன்னு நினைக்கிறாங்க... எங்க தலையிலேயே முடிக்கப் பார்க்குறாங்க!’’
வேங்கைவயல் பகுதிக்குள் நுழைந்தால், “இந்த கேஸை விசாரிக்கிறவங்களுக்கு மனசாட்சி இருந்தா, பாதிக்கப்பட்ட எங்களையே திரும்பத் திரும்ப விசாரிப்பாங்களா... எங்களுக்குப் பாதுகாப்பா நிக்க வேண்டிய போலீஸ், எங்க பசங்களை அழைச்சுக்கிட்டுப் போயி ‘தப்பை ஒத்துக்கங்கடா’ன்னு படாதபாடு படுத்துது. பசங்க போனைப் பிடுங்கி வெச்சுக்கிட்டு பொழப்பைப் பார்க்கவிடாம அலைக்கழிக்குது. இந்தக் கொடூரத்தை யார் பண்ணியிருக்க வாய்ப்பிருக்குனு நாங்களே தைரியமா போலீஸ்கிட்ட சொல்லிட்டோம். ஆனா, அவங்க பக்கம் போலீஸ் திரும்பவே மாட்டேங்குது. தப்பை எங்க தலையிலேயே கட்டி முடிக்கப் பார்க்குறாங்க. பீயைக் கலந்த தண்ணியைக் குடிச்சிட்டோமேன்னு மனசு நோகாத நாளில்லை. ஒவ்வொரு நாளும் தண்ணி குடிக்க சொம்பை எடுத்தா, கொமட்டிக்கிட்டு வருது. கலந்தவனைக் கண்டுபிடிங்க… அவன் கால்ல விழுந்து, ‘யப்பா சாமி, நாங்க என்னடா பாவம் பண்ணினோம் உனக்கு?’னு நாங்களே கேட்டுக்கிறோம்னு அத்தனை அதிகாரிங்ககிட்டயும் சொன்னோம். ஆனா, இப்ப ‘கலந்ததே நாங்கதான்’னு கிளப்பிவிடுறாங்க. இந்த விஷயத்தை இனியும் நாங்க பேசக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. அதனாலதான் எங்க பக்கமே திருப்புறாங்க. எந்தச் சாதிக்காரனா இருந்தாலும் கண்டுபிடிங்க. எங்க ஆளுகளா இருந்தாலும் ஆதாரத்தோட சொல்லுங்கன்னுதானே நாங்க கேட்கிறோம். ரெண்டு மாசமாகியும் கலந்தவன் யாருன்னு கண்டுபிடிக்க முடியலைன்னா, அந்தக் குற்றத்தை எங்க மேலயே சுமத்துவாங்களா?” எனக் கலங்குகிறார் ராஜி ரத்தினம் என்கிற பெண்மணி.
மலம் கலந்த நீரைக் குடித்ததால், முதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இவரின் மகள்தான். மருந்துச்சீட்டு உள்ளிட்ட விவரங்களைக் காட்டி, “என் குழந்தை மட்டுமில்லாம இன்னும் சிலருக்கும் வயித்துப்போக்கு, காய்ச்சல்னு வந்துச்சு. தண்ணியில பிரச்னைன்னு டாக்டர் சொன்னப்பகூட நாங்க சுதாரிக்கலை. சம்பவத்தன்னைக்கு பைப்ல தண்ணி கலங்கலா வந்துச்சு. மஞ்ச கலர்ல இருந்துச்சு. அப்புறம்தான் பசங்களை டேங்க் மேல ஏறிப் பார்க்கச் சொன்னோம். மேலே மலம் மிதக்க, அதை ஒரு கேரி பேக்ல எடுத்துவந்து பசங்க காட்டினப்ப, இந்தத் தண்ணியவா குடிச்சோம்னு உயிரே போயிடுச்சு. இப்போ போலீஸ் என்ன பண்றாங்கன்னா, ‘டேங்க்ல மலம் மிதக்குதுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”னு எங்க பசங்களையே திரும்பத் திரும்ப விசாரிக்கிறாங்க. பார்த்தது தப்புன்னா, பாவத்தைப் பண்ணினது தப்பு இல்லையா சார்?” என்கிறார் ராஜி ரத்தினம்.
“எங்க வலி உண்மையிலேயே யாருக்கும் புரியலை!”
மற்ற பெண்களும் நம்மைச் சூழ்ந்துகொண்டு, “நாங்க பட்ட அவமானத்தையும் வலியையும் உணர்ந்திருந்தா, இந்நேரம் குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சிருப்பாங்க. எங்களைத் திருப்திப்படுத்த புயல் வேகத்துல ஒரு புது வாட்டர் டேங்க் கட்டியிருக்காங்க. இப்பக்கூட எல்லா மக்களும் பயன்படுத்துற மாதிரி பொது வாட்டர் டேங்க்லருந்து தண்ணி கொடுக்க இவங்க நினைக்கலை. தனியா எங்களுக்குன்னு புது டேங்க் கட்டியிருக்காங்க. இதுலயும் நாளைக்கு மலத்தைக் கலக்க மாட்டாங்கனு என்ன நிச்சயம்... அதனால, புது டேங்க்கை நாங்க பயன்படுத்தவே மாட்டோம். புது டேங்க் கட்டுறதுல காட்டுற வேகத்தை, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறதுல காட்டவேண்டியதுதானே?” என்கிறார்கள் ஆதங்கமாக.
அடுத்தடுத்து போலீஸ் விசாரணை வேங்கைவயல் தலித் மக்கள் பக்கமே திரும்புவதால், பலரும் வீட்டிலேயே இல்லை. ஆண்கள் வெளியூர் வேலைக்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். கைக்குழந்தையோடு நின்ற சுதா, “நடந்தது கொடுமைன்னா, அதைவெச்சு அடுத்தடுத்து நடக்குறது அதைவிடப் பெரிய கொடுமையா இருக்கு. எங்க வலி உண்மையிலேயே யாருக்கும் புரியலை. யார் மனசும் பதைபதைக்கலை. அந்தத் தண்ணிய அவங்க குடிச்சிருந்தாத்தான் எங்க வலி புரியும்” என்றார் கண்ணீருடன்.
இரண்டு ஆப்பரேட்டர்கள்... இரண்டு அரசியல்வாதிகள்... மூன்று கேள்விகள்!
மொத்த கிராமத்தையும் சுற்றிவந்து விசாரித்த வகையில், நமக்குப் புரிபட்ட உண்மை இதுதான். முத்தரையர், முக்குலத்தோர், தலித் மக்கள் என மூன்று சமூக மக்கள்தான் இங்கு வசிக்கிறார்கள். ஒரு சிலர் வேறு சாதியினர். சாதிரீதியான பெரிய பிரச்னைகள் இந்த ஊருக்குள் நிகழ்ந்தது கிடையாது. பல கிராமங்களிலும் நீடிக்கிற கோயில், குளம் சம்பந்தப்பட்ட ஒருசில பிரச்னைகள் உண்டு. நடந்த கொடுமை, தலித் மக்களை எந்த அளவுக்குத் தத்தளிக்க வைத்திருக்கிறதோ அதேபோல் பிற சமூக மக்களையும் மனம் நோக வைத்திருக்கிறது. “எங்க ஊரு பேரை வெளியே சொல்லவே அசிங்கமா இருக்கு சார்…” என ஆதங்கப்பட்டார்கள் சிலர்.
“அந்தப் பகுதி கவுன்சிலரின் கணவர் - பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் தரப்புகளுக்கு இடையில் பல காலமாக நிகழும் மோதலின் அடுத்தகட்டமாகவும், வாட்டர் டேங்க் ஆப்பரேட்டரை மாற்றி வேறொருவரை நியமித்த விவகாரத்தாலும்தான் இந்தப் பிரச்னை தொடங்கியது” என்கிறார்கள் ஊர் மக்கள். ஒருகட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த விவகாரத்தை வைத்துப் போராட்டம் நடத்துவதற்குத் தயாரான நிலையில்தான், தலித் மக்கள் குடிக்கும் தண்ணீர்த் தொட்டியில் மலம் மிதந்திருக்கிறது.
சில இளைஞர்கள் நம்மைத் தனியே அழைத்து, “வாட்டர் டேங்க் ஆப்பரேட்டரை மாற்றிய விவகாரத்துக்கும், மலம் கலக்கப்பட்ட விவகாரத்துக்கும் தொடர்பிருக்கிறது. ஒரே ஒரு நாளில் விசாரித்து மலம் கலந்த அயோக்கியனைத் தூக்கிவிட முடியும். ஆனால், ஏனோ போலீஸ் செய்யாமல் இருக்கிறது. ஆப்பரேட்டர்கள் இருவர், அரசியல்வாதிகள் இருவர் என நால்வரைச் சுற்றித்தான் இந்த விவகாரத்தின் உண்மை இருக்கிறது. மூன்றே மூன்று கேள்விகளில் குற்றவாளியை நெருங்கிவிடலாம். ஆனால், தலித் மக்கள்மீதே போலீஸ் சந்தேகப்படுகிறது. அவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறது” என்றார்கள் ஆதங்கமாக.
கவுன்சிலர் வீட்டுக்குச் சென்றோம், அவரின் கணவர் பேசினார். “ ‘தலித் மக்கள் உன்னோடு ஏன் அன்பாவும் நெருக்கமாவும் இருக்குறாங்க?’னு போலீஸ் என்னை விசாரிக்குது. `ஏன் எதிரியா இருக்க?’னு கேட்கலாம். `ஏன் அன்பா இருக்க?’னு கேட்கிற அதிகாரிகளை என்ன சொல்றது... நீர்த்தொட்டியில் மலம் மிதந்த தகவலை மக்கள் சொன்னப்ப, ஓடிப்போய் அதிகாரிகளுக்கும் போலீஸுக்கும் தகவல் சொன்னதே நான்தான். இப்போ எங்க மேலயே குற்றத்தைத் திருப்புறாங்க…” என்றார்.
ஊராட்சி மன்றத் தலைவரைச் சந்தித்தோம். “எந்த விசாரணைக்கும் நாங்க தயாரா இருக்கோம். தயவுபண்ணி குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு தண்டனை கொடுங்கன்னுதான் வலியுறுத்துறோம். சம்பவம் நடந்தப்ப பஞ்சாயத்துத் தலைவியா எனக்கு எவ்வளவு கெட்ட பேரு. நாங்கதான் சம்பவத்தைப் பண்ணினோம்னுகூடப் பரப்பினாங்க. யாரையும் வேற சாதி ஆளா நானோ, என் கணவரோ பார்க்க மாட்டோம். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிச்சாத்தான் நாங்க நிமிர்ந்து நடமாட முடியும்” என்றார்.
டேங்க் ஆப்பரேட்டரில் ஒருவரைச் சந்தித்து, “உங்களை நீக்கிய பின்னணியில்தான் இந்த அவலம் நடந்ததாகச் சொல்கிறார்களே?” என்றோம். “பிரசிடென்ட்டோட கணவர் என்னை வேலையைவிட்டு நீக்கினதால நான் வருத்தத்துல இருந்தது உண்மைதான். கோயில்ல போயி கள்ளி வெட்டிவெச்சு, ‘நீயிருந்தா அவரைக் கேளு’ன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன். தலித் மக்களுக்குத் தண்ணி போட்டு விடுற நான் எப்படி அதுல மலத்தைக் கலப்பேன்... போலீஸ்கிட்ட எனக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிட்டேன். கலந்தவனைக் கண்டுபிடிச்சாத்தான் நான் இந்த ஊர்ல நடமாட முடியும். அதைச் செய்யுங்கய்யா…” எனக் கும்பிட்டார் அவர்.
இன்னொரு டேங்க் ஆப்பரேட்டர் வீட்டுக்குப் பலமுறை போனோம். “எத்தனை பேரோட கேள்வியை அவரால தாங்க முடியும்... அதனால அவர் வயக்காட்டுப் பக்கம் போயிடுறார்…” என வருத்தப்பட்டார்கள் வீட்டில் இருந்தவர்கள்.
கால் செருப்பில் மலம் ஒட்டிவிட்டால்கூட அசிங்கம் என முகம் சுளிக்கும் நாம், மலத்தையே குடிக்கவைக்கப்பட்ட மக்களின் துயரத்தைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தவில்லை. வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதி பேசுகிற அரசும், இடைத்தேர்தலிலும், பிறந்தநாள் கொண்டாட்டத்திலும், பேனா நினைவுச்சின்னத்தை நிறுவுகிற ஆயத்தங்களிலும் மட்டுமே தீவிரமாக இருக்கிறது. குடிக்கிற தண்ணீரில் அசிங்கத்தைக் கலந்தவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி மொத்த கிராமமும் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருக்க... இரண்டு மாதங்களாகப் பூப்பறித்துக்கொண்டிருக்கிறது போலீஸ். பொதுத் தொட்டியில் தண்ணீர் இணைப்பைத் தராமல், தலித் மக்களுக்குத் தனியே புது தண்ணீர்த் தொட்டியை கட்டும் செயல் அரசின் தீண்டாமைச் செயல் இல்லையா... ஒரு சின்ன கிராமத்தில், ஊருக்கே தெரியும் குற்றப்புள்ளிகளை ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்லும் காவல்துறையின் வாயை யார் நம்புவார்கள்... குடிநீரில் கலக்கப்பட்ட மலத்தைவிட, அதைச் செய்யத் துணிந்தவர்களின் மனங்களில் கலந்திருக்கும் சாதிய வன்மமும், தீண்டாமைக் கருத்தும்தான் கொடும் நாற்றமடிக்கிறது. அவர்களை உடனடியாகத் தண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையின், அரசின் அலட்சிய, தாமதப்போக்கு கவலையளிக்கிறது. சாதிய வாக்கு அரசியலில் மனிதத்தைத் தொலைப்பது ஒரு நவீன சமூகத்துக்கு கொஞ்சம்கூட அழகல்ல.
“எங்கள் பிழைப்பும், எங்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதியும், எங்களுக்குள் புகுத்தப்பட்ட மலம் கலந்த குடிநீரும் நாளுக்கு நாள் இன்னும் இன்னும் மோசமாக நாறிக்கொண்டுதான் இருக்கிறது முதல்வரே!” என்கிற வேங்கைவயல் மக்களின் கண்ணீர்க் குரலுக்குச் செவிசாய்ப்பாரா ஸ்டாலின்?
“சாதிரீதியான சங்கடங்கள் உருவாகிவிடக் கூடாது!”
வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி தில்லை நடராஜனிடம் மக்களின் ஆதங்கம் குறித்துக் கேட்டோம். “கொலை, கொள்ளை வழக்குகள் வழக்கமானவை. அவற்றை விசாரிப்பது, அடுத்தகட்டத்தை நோக்கிப்போவது சுலபம். ஆனால், இந்த விவகாரம் அப்படிப்பட்டது அல்ல. யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் குற்றவாளி எனக் கூறிவிட முடியாது. எல்லாவற்றுக்கும் சாட்சி வேண்டும். குற்றத்துக்கான நோக்கம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். விசாரணை வளையத்தைப் படிப்படியாகச் சுருக்கி, குற்றவாளிகளை நெருங்க வேண்டும். அதனால்தான் அதிக நாள்கள் பிடிக்கிறதே தவிர, வேறெந்தக் காரணமும் இல்லை.”
“பாதிக்கப்பட்ட தலித் மக்களை நோக்கியே உங்கள் விசாரணை திரும்புவதாக ஆதங்கப்படுகிறார்களே?”
“ஒருவரை விசாரிப்பதாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். நாங்கள் யாரையும் சித்ரவதை செய்யவில்லை. தலித் மக்கள் மட்டுமல்லாமல் பல சமூகத்தவரையும் விசாரிக்கிறோம். இந்த விவகாரத்தில் அவசரப்பட முடியாது.”
“முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டால், 15 தொகுதிகளில் ஆளுங்கட்சிக்குச் சிக்கலாகும். முக்குலத்தோர் என்றால் 15 மாவட்டங்களுக்கு மேல் சிக்கல். தலித் மக்களில் ஒருவர் என்றால், தமிழகம் முழுக்கவே பாதிப்பு. இதனால்தான் இந்த வழக்கு அடுத்தகட்டத்தை நோக்கி நகராமல் அப்படியே கிடப்பதாகச் சிலர் சொல்கிறார்களே?”
“நீங்கள் சொல்வது போன்ற சாதியப் பார்வைகள் கிடையாது. ஆனால், சாதிரீதியான சங்கடங்கள் உருவாகிவிடக் கூடாது என்கிற பொறுப்பும் கவனமும் முக்கியம். எதற்காகவும் வழக்கை ஆறப்போடவில்லை. மிக விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வாங்கிக் கொடுப்போம்.”
“இதுதான் சமூகநீதி அரசின் சாதனையா?”
- பதில் சொல்கிறார் அமைச்சர் மெய்யநாதன்‘குறிப்பிட்ட சமுதாயத்தைப் பாதுகாக்க, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் திட்டமிட்டு வழக்கைத் தாமதப்படுத்துகிறார்’ எனச் சொல்லப்பட, அந்த விமர்சனம் குறித்து அவரிடமே கேட்டோம். “நான் எப்போதுமே சாதி, மத வேறுபாடு பார்க்காதவன். ஆரம்பத்திலிருந்தே நான் பகுத்தறிவுவாதி. இந்த விவகாரத்தில் திட்டமிட்டு, என்மீது இப்படிப்பட்ட அவதூறு தொடர்ந்து பரப்பப்படுகிறது. இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருப்பவர் தமிழக முதல்வர். அதற்கு மாறாக நான் எப்படிச் செயல்பட முடியும்... விசாரணை முறைப்படி நடக்கிறது. மாவட்ட நிர்வாகத்திலோ, காவல்துறை விசாரணையிலோ நான் எவ்விதத் தலையீடும் செய்யவில்லை.”
“பொதுத் தண்ணீர்த் தொட்டி மூலமாக இணைப்பு கேட்டு அந்த மக்கள் போராடுகிறார்கள். ஆனால், நீங்கள் தனித் தண்ணீர்த் தொட்டி கட்டியிருக்கிறீர்கள். `அதைப் பயன்படுத்த மாட்டோம்’ என வேங்கைவயல் மக்கள் சொல்கிறார்களே?”
“திடீர் மாற்று ஏற்பாடாகத்தான் புது டேங்க் கட்டினோம். மக்கள் அதை மறுத்தால், பொதுத் தொட்டியிலிருந்தே இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்போம். மக்களின் உணர்வை மதித்து, அதற்கேற்ப மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொடுப்போம்.”
“தேசத்தையே தலைகுனிய வைத்திருக்கும் இந்தச் சம்பவத்தில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இவ்வளவு தாமதம் தகுமா... இதுதான் சமூகநீதி அரசின் சாதனையா?”
“விசாரணை முறைப்படி நடக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என எதையும் செய்துவிட முடியாது. சி.பி.சி.ஐ.டி விசாரணையில் நிச்சயம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்!”
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இதைப்போன்றதோர் சூழலில் காமராஜர் அவர்கள் துணிவாகச் செயற்பட்ட முன்மாதிரியைப் பார்க்கச் சொல்லுங்கள்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்