by ayyasamy ram Today at 10:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
Page 1 of 2 • 1, 2
தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று பிற்பகலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார்.
मुझे समाचार पत्रों के माध्यम से तमिलनाडु में काम कर रहे बिहार के मजदूरों पर हो रहे हमले की जानकारी मिली है। मैंने बिहार के मुख्य सचिव एवं पुलिस महानिदेशक को तमिलनाडु सरकार के अधिकारियों से बात कर वहां रह रहे बिहार के मजदूरों की सुरक्षा सुनिश्चित करने का निदेश दिया है।
— Nitish Kumar (@NitishKumar) March 2, 2023
அந்த ட்வீட்டில், "தமிழ்நாட்டில் உள்ள பிகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டேன். பிகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் பேசும்படி தலைமை செயலரையும் டிஜிபியையும் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில், நிதிஷ்குமாரின் இந்த ட்வீட் அரசின் பல மட்டங்களிலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதற்கு சற்று முன்பாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி பதிவாகியிருந்தது.
அதில், "தமிழ்நாட்டில் இந்தி பேசுவோரும் வட இந்தியரும் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களிலும் பிற ஊடகங்களிலும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதிலிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் பதிவிடப்படுகின்றன. இம்மாதிரி வதந்திகளை நம்பவோ, பரபப்பவோ செய்யாதீர்கள்."
"இவ்வாறு பரப்பப்படும் ஒரு வீடியோவில் காட்டப்படும் மோதலானது, தமிழ்நாட்டில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலானது. மற்றொன்று, கோயம்புத்தூரில் உள்ளூர் மக்களுக்கு இடையில் நடந்த மோதல் தொடர்பானது."
"தமிழ்நாடு மிகவும் அமைதியான, பாதுகாப்பான மாநிலம். இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பொது ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த ட்வீட்டில் காணப்படும் தகவல்கள், பொய்யானவை. தவறான கருத்தைத் தருபவை. இம்மாதிரியான போலியான தகவல்களை பரப்ப வேண்டாம். பரப்பினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு காவல்துறை தலைவர்" எனப் பதிவிடப்பட்டிருந்தது.
முகமது தன்வீர் என்பவரது ட்வீட்டை மேற்கோள்காட்டி இந்தப் பதிவை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டிருந்தது. தற்போது முகமது தன்வீர் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார்.
ஆனால், வீடியோவுடன் கூடிய மற்றொரு ட்வீட்டை வெளியிட்டிருக்கும் முகமது தன்வீர், இந்த வீடியோவுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.
அவர் அந்த ட்வீட்டோடு இணைத்திருக்கும் வீடியோவில், சில இளைஞர்கள் தாங்கள் இந்தி பேசியதற்காக தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
அந்த வீடியோவோடு அவர் எழுதியிருக்கும் பதிவில், "தமிழ்நாடு காவல்துறையே, இவர்கள் பொய் சொல்கிறார்களா? பிகாரைச் சேர்ந்தவர்களும் இந்தி பேசுபவர்களும் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகிறார்கள். என் மீது எஃப்ஐஆர் போடுவதாக பயமுறுத்துவதற்கு முன்பாக, பிகாரிகளை ஒடுக்கும் உங்கள் குண்டர்களை தடுத்து நிறுத்துங்கள். பிகார் காவல்துறையே, உங்களுக்கு இந்தி தெரியுமா? இதைக் கேளுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் ஒரு தொலைபேசி உரையாடலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். "இந்த வலியைக் கேளுங்கள். அர்மான் தமிழ்நாட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். தமிழர்கள் எப்படி இந்தி பேசும் மக்களை ஒடுக்குகிறார்கள் என்பதை அவர் சொல்கிறார். பிகார் அரசும் பிகார் காவல்துறையும் தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களைப் போலச் செயல்படக்கூடாது. பிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
இன்னொரு வீடியோவை வெளியிட்டு, அதில் "தமிழ்நாட்டில் இருந்து உயிர் பிழைத்து ஓடிவந்திருக்கும் தொழிலாளர்கள் கூறுவதைக் கேளுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதற்கடுத்த பதிவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், "தமிழக வேலை தமிழருக்கே, வட இந்தியரை வெளியேற்று" என்று கூறும் போஸ்டரைப் பகிர்ந்து இதற்கு என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். இந்த முகமது தன்வீர் தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பிறகே, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ட்வீட் வெளியானது.
இதையடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஒரு வீடியோவை வெளியிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லையென்றும் பரப்பப்படும் வீடியோக்கள் போலியானவை என்றும் விளக்கமளித்தார்.
இதற்குப் பிறகு பா.ஜ.கவைச் சேர்ந்த பலரும் இதுபோன்ற தகவல்களைப் பரப்பத் தொடங்கினர். ஹரி மாஞ்சி என்ற பா.ஜ.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், "தமிழ்நாட்டில் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர். ஆனால், லாலுவின் மகனும் பிகாரின் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் கேக் சாப்பிடுகிறார். வெட்கக்கேடு" என்று கூறியிருந்தார். அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருந்த படத்தையும் இணைத்திருந்தார்.
எம்.டி சிக்கந்தர் என்பவர், சாலையில் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோவை இணைத்து, ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார்.
Terrorist attacks are being carried out on Hindi speaking people in Tamil Nadu that the law is over in the country?
— Md. Sikandar (@mds2985) March 1, 2023
Sir, legal action should be taken against the terrorists @PMOIndia @INCTamilNadu @TAMILNADUPOLIC6 @HemantSorenJMM @NitishKumar @IrfanAnsariMLA @adgpi pic.twitter.com/Vtryr08EEJ
அந்த ட்வீட்டில் "தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நாட்டில் சட்டம் என்பது இல்லையா? இந்த பயங்கரவாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்று கூறியிருந்தார். ஆனால், அந்த வீடியோவில் இருந்த சம்பவம் ஹைதராபாதில் நடைபெற்றது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.
யுவராஜ் சிங் ராஜ்புத் என்பவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் மிக மோசமான ஒரு படுகொலை சம்பவத்தின் வீடியோவைப் பதிவிட்டு, "தமிழ்நாட்டில் பிஹார் தொழிலாளர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்படும் நிலையில், நிதிஷ் அரசு வாய்மூடி இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்த வீடியோவில் இருந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டில் நடந்த ஒரு படுகொலை சம்பவம்.
ஆனால், இதையெல்லாம்விட மோசமாக, இந்தியில் வெளிவரும் பிரபல பத்திரிகைகளான தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான் ஆகியவை இந்த ட்வீட்களை நம்பி, தமிழ்நாட்டில் 12 பிகாரிகள் கொல்லப்பட்டதாக செய்திகளை வெளியிட்டன.
இந்தத் தகவல்கள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு பலரால் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், பிகார் அரசைத் தொடர்புகொண்டு தமிழக அரசின் சார்பில் உண்மை நிலைமை தெளிவுபடுத்தப்பட்டது.
இருந்தபோதும் தைனிக் பாஸ்கரில் வெளியிடப்பட்ட ட்வீட் இரவு வரை நீக்கப்படாத நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த நாளிதழைத் தொடர்புகொண்டு பேசினர். பிறகு அந்த ட்வீட் ஒரு வழியாக நீக்கப்பட்டது.
பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான முகமது ஜுபைர், இந்தப் பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தி ஒரு நீண்ட ட்வீட் தொகுப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
5. One more video viral with similar claim that people from Bihar are attacked by people of Tamil Nadu. According to Police, this incident is from Tirupur & is related to a clash between two groups of Bihari migrant workers. ( Alt News could not independently verify the clip) pic.twitter.com/o0pRzjTVWO
— Mohammed Zubair (@zoo_bear) March 2, 2023
Hindi News Channels like @DainikBhaskar & @abplive, @Live_Hindustan & Punjab Kesari are sharing such dangerous content without even verifying the videos/News. pic.twitter.com/oLPZeRrbiV
— Mohammed Zubair (@zoo_bear) March 2, 2023
பாரம்பரியமான ஊடகங்களே இதுபோன்ற செய்திகளை வெளியிட்ட நிலையில், காவல்துறையின் தலையீட்டில் அந்தச் செய்திகள் தற்போது நீக்கப்பட்டுவிட்டாலும், தனிநபர்கள் வெளியிட்ட பொய்ச் செய்திகள் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் இருக்கின்றன.
திடீரென தமிழ்நாடு குறித்து இதுபோன்ற போலித் தகவல்கள் ஏன் பரப்பப்படுகின்றன என்பதில் இதுவரை தெளிவு ஏதும் ஏற்படவில்லை.
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1372951பீஹார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்? வீடியோக்கள் தவறானவை, போலியானவை: டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம்
பீகார் மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்று வெளியான வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாக கூறினார். அண்மையில் தமிழகத்துக்கு வேலைக்காக வந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற 2 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அம்மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பீஹார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில், தொழிலாளர்கள் தாக்கப்படுவம் வீடியோக்களுக்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில், “சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1372955- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1372972தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை: அமைச்சர் சி.வெ.கணேசன்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.
அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.
தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1372973திருப்பூர் ரயில்வே காவல்நிலையம் முன்பு திரண்ட வடமாநிலத் தொழிலாளர்கள்
திருப்பூர்: பிகார் மாநில தொழிலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி, திருப்பூர் காவல்நிலையம் முன்பு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் ரயில்வே தண்டவாளத்தில் வடமாநிலத் தொழிலாளியின் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மீட்டனர்.
அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக்கூறி ரயில்வே காவல் நிலையம் முன்பாக வடமாநிலத் தொழிலாளர்கள் இன்று திரண்டனர்.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் (37), இவர் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து, பின்னலாடைகளுக்கு அழுக்கு எடுக்கும்(ஸ்டெயின் ரிமூவர்)கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் ரயில்வே காவல்துறையினர் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, நடத்திய விசாரணையில் சஞ்சீவ்குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக்குப்தா ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
இதில், சஞ்சீவ் குமார் ரயில் நிலையத்துக்கு வருவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், தண்டவாளத்தைக் கடக்கும்போது தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக சஞ்சீவ்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக்கூறி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரயில்வே காவல் நிலையம் முன்பாகத் திரண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1372983வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பிகார் குழு இன்று தமிழகம் வருகை!
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பிகார் அரசின் 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வரவுள்ளது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் விடியோக்கள் மூலமாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால், இந்த விடியோக்கள் போலியானவை என்றும் இதுபோன்று வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர், அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் கூறியிருந்தார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பிகார் அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 4 பேர் கொண்ட குழு இன்று தமிழகம் வரவுள்ளது.
இதுகுறித்து இன்று மாலை சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாநில குழுக்கள் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1372999'வடமாநிலத் தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம்' - திருப்பூர் மாவட்ட எஸ்பி அறிவிப்பு |
திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில், வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடமாநிலத் தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித்தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி தமிழகத்தில் வசிக்கும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, வெளியான வீடியோக்கள் போலி என தமிழக டிஜிபி வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குழு சென்னை வந்துள்ளது. அவர்கள் தமிழக தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றனர். மேலும், பீகாரைச் சேர்ந்த மக்கள், பணி செய்யும் இடத்திற்கே சென்று அவர்களது பணி சூழ்நிலை மற்றும் வசதிகள் குறித்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து வெளி மாநிலத்தவர்கள் வெளியேறி வருவதாகத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங்க் சாய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ போலியானது. இதற்காக தமிழ்நாடு காவல்துறை ஏற்கனவே தமிழ்நாடு சோசியல் மீடியா சேனல் வழியாக செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வடமாநிலத் தொழிலாளர்களுக்காக பிரத்தியேக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஸ்பெஷல் செல் 24 மணி நேரமும் இருக்கிறது. ஏதேனும் பிரச்சனை என்றால் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: 94981-01300, 0421-2970017' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1373004வடமாநில தொழிலாளரை தாக்கியதாக பரவிய வதந்தி.. சொந்த ஊருக்கு செல்ல குவிந்த பீகார் தொழிலாளிகள்
வட மாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏராளமான பீகார் தொழிலாளர்கள் இன்று குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. |
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள், குறிப்பாக பீகார் மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஒரு வதந்தி பரவிய நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்திருந்தனர்.
90% பொய் தான் என நம்பினாலும், சிறு அச்சம் இருக்கிறது தான் உண்மை! |
அவர்களிடம் நாம் இதுபற்றி கேட்ட போது, திருச்சியில் தங்கி ஹோட்டலில் பணியாற்றி வருவதாக கூறிய ஒருவர், “ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஊருக்கு செல்ல முன்கூட்டியே ரயில் டிக்கெட் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது சென்னையிலிருந்து பீகாருக்கு செல்ல இங்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எங்களுக்கு பாதுகாப்பான இடமாகவே இதுவரை இருந்துள்ளது. எந்த அச்சுறுத்தலையும் நான் சந்தித்தது கிடையாது.
ஆனால் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. அது ஒரு அச்சமான உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த வீடியோ 90% பொய்யானது என்று நம்புகிறேன். இருந்தாலும் 10% உண்மையாக இருக்குமோ என்ற மனநிலையும் இருக்கிறது. குறிப்பாக எங்களது வீடுகளில் உள்ளவர்கள் இந்த வீடியோக்களை பார்த்து அச்சம் அடைந்ததன் காரணமாக எங்களை வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றனர்.
எங்கள் வீட்டிலிருக்கும் அச்சத்தை போக்கவே செல்கிறோம்! |
இருப்பினும் தற்போதைய சூழலில் ஹோலி பண்டிகை கொண்டாடவும், வீட்டில் உள்ளவர்கள் அச்சத்தை போக்கவும் எங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இருப்பினும் நாங்கள் தமிழ்நாட்டை பாதுகாப்பான இடமாகவும், வேலை பார்க்க ஏற்ற இடமாகவுமே கருதுகிறோம். அதனால் எங்கள் வீடுகளுக்கு சென்ற பிறகு மீண்டும் திரும்ப தமிழகத்துக்கு வந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்.
நிறைய இடங்களில் வேலை பார்க்கிறோம்! எங்களுக்கு பாதுகாப்பான இடமாகவே தமிழ்நாட்டை பார்க்கிறோம்! |
மற்றவர்கள் கூறுகையில், “எங்கள் சொந்த மாநிலமான பீகார் மாநிலத்திற்கு தற்போது ரயில் மூலம் செல்ல உள்ளோம். அங்கு ஹோலி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும். அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து ஊருக்கு செல்ல காத்திருந்தோம், அதற்காக தான் தற்போது ரயில் நிலையத்துக்கு வருகை தந்துள்ளோம். சென்னையின் பல்வேறு இடங்களில் நாங்கள் தங்கி பணியாற்றியுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பான இடமாகவே சென்னை இருந்து வருகிறது.
தற்போது ஹோலி விழா மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு செல்கிறோம். மீண்டும் எங்களுக்கு ரயில் முன்பதிவு டிக்கெட் கிடைத்ததும், விரைவில் சென்னைக்கு வந்து விடுவோம்” என்றனர். |
Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1373027வதந்தி பரப்பியவா் மீது வழக்கு:பிகாா் விரைந்த கோவை போலீஸாா் |
தமிழகத்தில் வட இந்திய தொழிலாளா்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அது தொடா்பாக விசாரணை நடத்த கோவை போலீஸாா் பிகாா் விரைந்திருப்பதாகவும் மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் ஹிந்தி பேசக் கூடிய வடமாநிலத் தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடா்பாக இரு மாநில முதல்வா்கள், காவல் துறையினா் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தொழிலாளா்கள் அச்சத்தில் இருப்பதால் அவா்கள் சொந்த ஊா் திரும்பத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆள் பற்றாக்குறையால் தொழில் பாதிக்கப்படும் என்று ஜவுளி, உற்பத்தித் துறையைச் சோ்ந்த தொழில்முனைவோா் அரசுக்கு கவலை
தெரிவித்திருக்கின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் விழிப்புணா்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதிகாரிகள் கலந்துரையாடல்: அதன் ஒரு பகுதியாக கோவை குறிச்சி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் வட மாநிலத் தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் ஆகியோா் அவா்களுடன் கலந்துரையாடினா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவா் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதால், யாரும் பயப்படத்தேவையில்லை என்று அந்த மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறோம்.
மேலும், ஹிந்தியில் அச்சிடப்பட்ட விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கி, ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதில் இருக்கும் தொடா்பு எண்ணுக்கு பேசும்படியும் கூறியிருக்கிறோம். தொழிலாளா்களிடம் பேசியதில், அவா்கள் தங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை எனக் கூறியுள்ளனா் என்றாா்.
வதந்தி பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை: காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடா்பாக விசாரிக்க தனிப் படையினா் பிகாா் விரைந்திருக்கின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக வெளி மாநிலத்தவா்கள் தகவல்களைப் பெறுவதற்காகவும், பிரச்னைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வசதியாகவும் காவல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கண்காணிப்பு அலுவலா் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கும் அந்த கட்டுப்பாட்டு அறையில் ஹிந்தி மொழி தெரிந்தவா்கள் பணியமா்த்தப்பட்டிருக்கின்றனா்.
மேலும், தவறான தகவல்களைப் பரப்புபவா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். வெளிமாநிலத்தவா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்திருக்கிறோம். இங்குள்ள தொழிலாளா்களிடம் பேசியதில் அவா்களில் 99 சதவீதம் போ் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கின்றனா். வெகு சிலா் மட்டுமே சமூக வலைதள தகவல்களால் பயந்திருந்தனா். அதையும் அவா்களிடம் பேசி போக்கியிருக்கிறோம் என்றாா்.
தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மனு: இதற்கிடையே கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.
அதில், வதந்தி பரப்பப்படுவதால் வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதாகக் கூறி வருகின்றனா். இதனால், தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிகாா் அரசுடன் தமிழக அரசு பேசி அங்கிருக்கும் தொழிலாளா்களின் குடும்பத்தினரின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இங்கிருக்கும் தொழிலாளா்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
ட்விட்டரில் பதிவிட்டவா் மீது வழக்கு:
இதற்கிடையே ட்விட்டரில் வதந்தி பரப்பியதாக யுவராஜ் சிங் என்பவா் மீது கோவை சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனா். இருவேறு பிரிவினருக்கு இடையே வெறுப்பை வளா்த்து ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படுவதாகக் கூறி சட்டப் பிரிவுகள் 153 ஏ, 505 (2), தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இது தொடா்பாக அந்த நபரைப் பிடித்து விசாரிப்பதற்காக தனிப் படை போலீஸாா் பிகாா் விரைந்திருக்கின்றனா்.Re: தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
#1373033மிகக் கொடியது என்று தெரிந்தும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விளம்பரங்கள் வந்துகொண்டுதானே இருக்கின்றன? யார் என்ன செய்துவிட்டார்கள்?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
» கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம்
» பொள்ளாச்சியை சேர்ந்த 11 பேர் பலி
» ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்
» மின்சாரம் கசிந்ததாக வதந்தி: மும்பை ரயில்வே நிலையத்தில் நெரிசல்;15 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்