ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

Top posting users this week
ayyasamy ram
மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!  Poll_c10மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!  Poll_m10மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 
heezulia
மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!  Poll_c10மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!  Poll_m10மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!

Go down

மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!  Empty மனதின் ஓசைகள்! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் ! வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!

Post by eraeravi Sun 5 Mar 2023 - 13:07

மனதின் ஓசைகள்!
(சிறுகதைத் தொகுப்பு)
நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் !
வாழ்த்துரை : கவிஞர் இரா. இரவி!
*****

நூலாசிரியர் கவிதாயினி அ.. நூர்ஜஹான் அவர்களின் மனத்தின் ஓசை தான், ‘மனதின் ஓசைகள்’ என்ற பெயரில் வரும் ‘சிறுகதைத் தொகுப்பு’. தான் சந்தித்த, உணர்ந்த மனிதர்களை பாத்திரங்களாக்கி உலவ விட்டுள்ளார்.

நூலாசிரியர் வறுமையில் பிறந்தபோதும் கடினமாக உழைத்து படித்து முன்னேறி அறப்பணியாம் ஆசிரியப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியோடு நின்று விடாமல் தொடர்ந்து கவிதை, கதை என எழுதி தொடர்ந்து தொய்வின்றி இலக்கியப்பணியும் ஆற்றி வருகின்றார்.

முதுபெரும் எழுத்தாளர்களான திருச்சி சந்தர், கர்ணன் ஆகியோரின் குருகுலத்தில் பயின்றவர். சிறுகதையை, முன்னணி எழுத்தாளர்கள் போலவே சிறப்பாக எழுதி உள்ளார். வானொலியில் ஒலிபரப்பானவற்றையும் எழுதி நூலாக்கி உள்ளார்.

‘சொல்லால் சுட்ட சுகம்’ கதையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான மகேந்திரன் கரம்பிடித்து வழித்துணை மட்டுமல்ல, வாழ்க்கைத் துணையும் ஆகிவிடும் பாரதி பாராட்டுக்குரியவள். கதைகள் முழுவதிலும் மனிதநேயம் கொடிகட்டி பறக்கின்றது. கவிதாயினி என்பதால் கவித்துவமான சொல்லாட்சியுடன் கதைகளை வடித்துள்ளார். பேருந்தில் பயணம் செய்யும் போது நடத்துனருடன் நடந்த உரையாடல்களை உற்றுநோக்கி தினமும் சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் காட்சிப்படுத்தி கதை வடித்துள்ளார். திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வையும் நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தி எழுத்தாற்றல் வெற்றி பெறுகின்றது.

கவியரங்கங்களிலும் கவிதை பாடி கலக்கி வருபவர் நூலாசிரியர். சமூக ஊடகங்களான புலனம், முகநூல் முதலான-வற்றிலும் கவிதை, கதை என எழுதி வரும் பன்முக ஆற்றலாளர். ‘பாரதி கண்ட புதுமைப்பெண்’ணாக வலம் வருபவர். பாரதி மீது பற்றுக்கொண்ட காரணத்தால் கதையின் நாயகிக்கு ‘பாரதி’ என்று பெயர் சூட்டி உள்ளார். ‘பாரதி’ என்ற பெயரும் இருபாலருக்கும் பொருந்தும் விதமானது பாரதியின் கவித்திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

கதையில் கவிதையும் இடம் பெற்றுள்ளது சிறப்பு. நூலாசிரியர் முதலில் கவிஞர், பின்னர் எழுத்தாளர் என்பதால் கவிதை உணர்வு அவருடன், அவர் எழுத்தில் இரண்டறக் கலந்துள்ளது.

‘அழியாத கோலம்’ கதை, படிக்கும் வாசகர்களின் மனதில் அழியாத கோலமாகப் பதிந்து விடுகின்றது. எழுத்தாற்றலின் வெற்றி என்றே சொல்ல வேண்டும். எளிதில் புரியும் வண்ணம் நீரோடை போன்ற எளிய நடை, ஆனால் வலிய கருத்துக்களை போகிற போக்கில் கதையின் மூலம் உணர்த்தி உள்ளார்.

‘அழியாத கோலம் கதையின் தொடக்க வரிகளை உங்கள் பார்வைக்குத் தருகிறேன். “இதமான சில்லென்ற தென்றல் மெல்லியதாய் வீசிட இரவெல்லாம் வராத தூக்கம் தொற்றிக் கொள்ளும் காலைப் பொழுது போர்வையை விலக்கியபடியே கண் விழித்தாள்” பானு.

‘கண் விழித்தாள் பானு’ என்று தான் மற்ற எழுத்தாளர்கள் தொடங்கி இருப்பார்கள். நூலாசிரியர் கவிதாயினி ஆ. நூர்ஜஹான் எழுத்தில் கற்பனைவளம், தமிழ் சொல்லாட்சி ரசனை இருப்பதால் படிப்போரின் உள்ளத்தைக் கவரும்வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார், பாராட்டுகள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிலும் வேலை பார்க்க வேண்டி உள்ளது. அவர்களுக்கு ஓய்வு என்பதை இல்லை, ‘ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு இல்லை’ என்கிற விதமாக கதைகளில் பெண்ணியமும் பேசி உள்ளார். நூலாசிரியர், ஆசிரியர் என்பதால் தன் வீட்டில் நடந்தது, பயணித்தது, பள்ளிக்குச் சென்றது, பயணித்தது என்றெல்லாம் கதைகளில் வந்து விடுகின்றன. சில நிகழ்வுகள் உண்மையாக எழுதி இருப்பதால் படிக்கும் வாசகர்களுக்கு சுவையாக உள்ளது. கதையோடு வாசகர்களும் மூழ்கிவிடும் வண்ணம் சிறப்பான நடை, பாராட்டுகள்.

கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் கவிதை, கொஞ்சம் உண்மை, கொஞ்சும் தமிழ் கலந்த கலவை தான் இந்த சிறுகதை தொகுப்பு.

பானு ஆசிரியர், முனியாண்டி என்ற ஏழை மாணவனிடம் காட்டும் அன்பு, நெகிழ்ச்சி. ஆசிரியர்கள் பள்ளியில் பாடம் நடத்துவது என்பதோடு நின்று விடாமல், மாணவ-மாணவியரின் சூழ்நிலை அறிந்து உதவிடும் உள்ளம் வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக கதை உள்ளது. இது கதை மட்டுமல்ல, பானு ஆசிரியர் வேறு யாருமல்ல, நூலாசிரியர் நூர்ஜஹான் தான். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே ஏழை மாணவ-மாணவியருக்கு மனிதநேயப்பணிகளை செய்து வருவதை நான் அறிவேன், பாராட்டுகள்.

‘நுரைப்பூக்கள்’ கதையில் முதல் வரி தொடக்கமே முத்தாய்ப்பு. இதோ பாருங்கள் : “சக்தி உயர்ந்ததா? சிவம் உயர்ந்ததா? சஞ்சலம் மிகுந்த போராட்டம் இங்கு சக்தியும் சிவமும் இனைந்திடில் வாழ்க்கைக் கோவிலில் இன்பத் தேரோட்டம் நித்தமும் தானே?”

கணவன்-மனைவி இருவரும் புரிதலுடன் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் என்ற வாழ்வியல் கருத்தை முதல் வரியிலேயே முத்தாய்ப்பாக உணர்த்தி உள்ளார்.

நூலாசிரியர், ஆசிரியர், கவிதாயினி, எழுத்தாளர் அ. நூர்ஜஹான் அவர்களுக்கு பாராட்டுகள். தங்களின் இலக்கியப் பயணத்தில் மைல்கல் தான் இந்த “மனதின் ஓசைகள்” நூல். சிறப்பாக வந்துள்ளது, பாராட்டுகள். ஒரு சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன.

ஒரு வேண்டுகோள் : அடுத்து ஒரு நாவல் எழுதுங்கள்.
-------------------------------------------------------------------

நூலாசிரியர் : கவிதாயினி அ.நூர்ஜஹான் அவர்களின் மடல் !

ஐயா நன்றி நன்றி நன்றி குட்டு பட்டாலும் மோதிர கையால் குட்டு பட வேண்டும் என்று சொல்வார்கள் அதைபோல பன்முக திறனாளர் மதுரையில் இருபது அண்டுகளுக்கு முன்பே தன் கவிதைகளை இணையத்தில் வெளியிட்டு உலகெங்கும் உலாவரச்செய்தவர் . பளீச்செனும் வைர வரிகளுக்கு சொந்தக்காரர் !மதுரையின் அடையாளம் எங்கெங்கு தமிழ்முழங்குகிறதோ, அங்கே ஹைககூ திலகம் ரவி ஐயா இருப்பார்கள், பல்வேறு பணிகளுக்கு நடுவே என் கதைகளை படித்து அதுவும் சிறப்பான வகையில் மதிப்புரை தந்துள்ளார் ,இது எனக்கு கிடைத்த மிகபெரிய அங்கிகாரம்! அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன் உங்கள் விருப்ப படியே அடுத்த சிறுகதை தொகுப்பும் எழுதுகிறேன் ஐயா வணங்கி மகிழ்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா!!!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

Back to top

- Similar topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» விசையுறு பந்தினைப் போல்! நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை : கவிஞர் இரா. இரவி *****
» கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. வாழ்த்துரை : குமுதம் வார இதழ்
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum