Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்புby ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?!
Page 1 of 1
டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?!
![டெல்லிக்கு ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு உதயநிதி?! Vikatan%2F2023-03%2F0f30bd62-f35b-4b0a-9fc9-6958860282ce%2F6401920134bfe](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-03%2F0f30bd62-f35b-4b0a-9fc9-6958860282ce%2F6401920134bfe.jpg?rect=0%2C0%2C4167%2C2344&auto=format%2Ccompress)
“தமிழ்நாட்டைப்போல ஒற்றுமையான கூட்டணியை அமையுங்கள். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. அகில இந்தியத் தலைவர்கள், இந்தத் தகவலை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள்’’
அகில இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா! காரணம், அகில இந்தியத் தலைவர்களின் பங்கேற்புடன், மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த மாநாடுபோல நடந்த பொதுக்கூட்டம். கூட்டத்தில் நாம் கண்ட சில சுவாரஸ்யங்கள் இங்கே... |
* சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தன் பிறந்தநாள் கூட்டத்தில், பங்கேற்றிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தன் தந்தை கருணாநிதி பாணியில், அகில இந்தியத் தலைவர்களை அழைத்து கட்சியின் பொதுக்கூட்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், மேடை தொடங்கி பொதுக்கூட்டத்திடல் வரை எல்லாமே நவீனம்.
* 60 அடி அகலம்கொண்ட மேடை முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருந்தது. அதேபோல கட்அவுட்டுகளுக்கு பதிலாக அதே உயரத்துக்கு டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு, தலைவர்களின் படங்கள் திரையிடப்பட்டன. தி.மு.க கொடி மட்டுமன்றி, நிகழ்வில் பங்கேற்ற அகில இந்தியத் தலைவர்களின் கட்சிக்கொடிகளும் சுமார் 100 அடி உயரமுள்ள பிரமாண்ட கம்பங்களில் பறக்கவிடப்பட்டிருந்தன.
* பொதுக்கூட்டம் நடைபெற்ற திறந்தவெளி அரங்கைச் சுற்றிலும், 20 மாத தி.மு.க ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. தி.மு.க தொண்டர்கள் அந்தப் படங்களுக்கு அருகில் நின்று ஆர்வமாக செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள்.
* நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின் தி.மு.க-வில் இணைந்தது தொடங்கி, மிசா காலம், இளைஞரணிச் செயலாளர், கட்சித் தலைவர் எனப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது, முதல்வரான பிறகு செயல்படுத்திய திட்டங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. அதற்கு உடன்பிறப்புகளிடையே செம ரெஸ்பான்ஸ். அந்தக் குறும்படத்தில், உதயநிதியை அமைச்சராக்கியதையும் ஸ்டாலினின் சாதனையாகக் குறிப்பிட்டிருந்தது கொஞ்சம் ஓவர்தான்.
* ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, “ஸ்டாலின் அவர்களே... ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே உழைத்துவருகிறீர்கள். நீங்கள் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தபோது தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்தார்கள்.
* கூட்டத்தில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘`ஸ்டாலின் நாத்திகவாதியாக இருந்தாலும், எந்த மதத்துக்கும் எதிரானவர் இல்லை. அவரின் வழிகாட்டுதலால் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. கொரோனா தொற்று காலத்தை மிகச்சரியாகக் கையாண்டார். இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக சமுகநீதியை முன்னிறுத்திச் செயல்படுகிறார்” என்று பாராட்டு மழை பொழிந்தார்.
* அமைச்சர் துரைமுருகன், ‘`என் அனுபவத்தில் சொல்கிறேன், இந்திய நாடு ஒருநாள் இந்த கோபாலபுரம் வீட்டு வீதியில் நுழைந்து, நீங்கள்தான் இந்தியாவுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று நிற்கும் காலம் வரும்’’ என்று சொன்னபோது ஸ்டாலின் முகத்தில் புன்னகை.
* பீகார் மாநிலத் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவ், “வடஇந்தியாவில் இருக்கும் கட்சிகள் உங்களிடம் சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசியதும், மேடையின் முன்னாலிருந்த அமைச்சர்கள் சிலர் எழுந்து நின்று கைதட்டினர்.
* இறுதியாகப் பேசிய ஸ்டாலின், “தமிழ்நாட்டைப்போல ஒற்றுமையான கூட்டணியை அமையுங்கள். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. அகில இந்தியத் தலைவர்கள், இந்தத் தகவலை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள்’’ என்பதை, தமிழிலும் ஆங்கிலத்திலும் அழுத்திச் சொன்னார். ஆனால் அவரைத் தவிர, வேறு தலைவர்கள் பா.ஜ.க எதிர்ப்பைத் தீவிரமாகப் பேசவில்லை. இதனால், அவர்கள் பேசும்போது கூட்டத்தில் பெரிதாக கைதட்டல், ஆர்ப்பரிப்புகள் இல்லை.
* பொதுக்கூட்ட மேடைக்குப் பின்னால் தற்காலிக ஏ.சி அறை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்த தலைவர்கள் அங்கிருந்துதான் மொத்தமாக மேடை ஏறினர். ஃபரூக் அப்துல்லா மேடையில் ஏறி, தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்ததும், கூட்டத்தினரோடு ஒரு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
* நிகழ்ச்சியில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேடையில், தேசியத் தலைவர்களுக்கு மத்தியில் ஸ்டாலின் என்றால், கீழே முன்வரிசையில் தமிழகத் தலைவர்களுக்கு நடுநாயகமாக உதயநிதி அமர்ந்திருந்தார். `டெல்லிக்கு ஸ்டாலின்... தமிழ்நாட்டுக்கு உதயநிதியா?’ என்று கிசுகிசுத்தார்கள் தி.மு.க-வினர். ஆனால், கருணாநிதியின் பெயரோ, படமோ பொதுக்கூட்ட வளாகத்தில் தென்படாதது மூத்த உடன்பிறப்புகளுக்கு கடும் வருத்தம்.
* கடும் போட்டிக்கு இடையே, விழாவை சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் நடத்துவதாக முடிவானது. அதனாலேயே பிற மா.செ-க்களும், மற்ற பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளும், கூட்டத்துக்கு ஆள் சேர்க்காமல் ஈகோ பார்த்ததாகப் புலம்பினார்கள் தெற்கு மாவட்ட நிர்வாகிகள். அது உண்மை என்பதை, அங்கு போடப்பட்டிருந்த 70,000 சேர்களில், சுமார் 25,000 சேர்கள் காலியாகக் கிடந்ததே உறுதிப்படுத்தியது! |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்
» இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
» ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார்
» மாவீரன் படத்திலிருந்து விலகினார் உதயநிதி ஸ்டாலின்?
» காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்
» இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்
» ஸ்டாலின், உதயநிதி மீது நில அபகரிப்பு புகார்
» மாவீரன் படத்திலிருந்து விலகினார் உதயநிதி ஸ்டாலின்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|