புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
75 Posts - 60%
heezulia
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
70 Posts - 60%
heezulia
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
போலி டாக்டர் பட்டம் Poll_c10போலி டாக்டர் பட்டம் Poll_m10போலி டாக்டர் பட்டம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி டாக்டர் பட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 5:31 pm

திரை பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்; வெளியான அதிர்ச்சி தகவல்


போலி டாக்டர் பட்டம் 210_20

அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வராத நடிகர் வடிவேலுக்கு வீட்டிற்கே சென்று டாக்டர் பட்டத்தைக் கொடுத்துள்ளனர். இந்த விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த அமைப்பு நீதிபதி தலைமையில் இயங்கி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், இதற்கு முன்பாக ராகவா லாரன்ஸ், டி.இமான் உள்ளிட்டோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவ டாக்டர் பட்டங்கள் போலியாக வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாகக் கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டது.

நீதிபதியிடம் அண்ணா பல்கலைக்கழக வளாகம் என்று சொல்லி அவரை ஏமாற்றியுள்ளனர். எங்களிடம் அவர் எழுதிய கடிதம் இருப்பது போல் காண்பித்து எங்களை ஏமாற்றியுள்ளனர். நீதிபதியிடம் இருந்து கடிதம் வந்துள்ளதால் எங்கள் நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு பேரிடமும் முறையான ஆவணங்கள் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். இது போன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம். இனிமேல் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என முடிவெடுத்துள்ளோம்." என்றார்.

இதன் மூலம் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியுள்ளது போலி எனத் தெரியவந்துள்ளது. மேலும், நீதிபதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை தனியார் அமைப்பு ஏமாற்றியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 5:33 pm

‘போலி டாக்டர் பட்டம்’ - சர்ச்சை குறித்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் பேட்டி

அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வராத நடிகர் வடிவேலுக்கு வீட்டிற்கே சென்று டாக்டர் பட்டத்தைக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், நடந்தது போலி டாக்டர் பட்டமளிப்பு விழா என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அண்ணா பல்கலை.யில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பாக போலீசில் புகாரளித்துள்ளோம். தனியார் அமைப்பு நடத்திய போலி பட்டமளிப்பு விழாவிற்காக அண்ணா பல்கலைக்கழக அரங்கத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். இதுபோன்ற தவறான செயல் நடைபெற்றதற்கு வருந்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் அளித்ததாகக் கூறியதால் பட்டமளிப்பு விழாவிற்கு அனுமதி கொடுத்தோம். அவரிடம் அண்ணா பல்கலை.யில் நடக்கும் நிகழ்ச்சி என்று சொன்னதால் வந்திருப்பார் என்று தோன்றுகிறது. நிகழ்ச்சி நடத்திய தனியார் அமைப்புக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது'' என்றார்.

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 01, 2023 5:50 pm

மருத்துவ உலகில் போலி டாக்டர்கள் உள்ளனர். முறையாக மருத்துவ படிப்பு படிக்காமலேயே , டாக்டர் எனக்கூறிக்கொண்டு மருத்துவ ஆலோசனைகள் தருகின்றனர்.

கௌரவ முனைவர் பட்டம் (டாக்டடோரேட் ) இப்போது சந்தையில் கிடைக்கிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1772
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Mar 01, 2023 9:22 pm

பிராங்க் ஷோ செய்ற மாதிரி ஒரு ப்ரோக்ராமே நடத்தி இருக்காங்களே!!!
ஹா ஹா ஹா!!!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 01, 2023 9:38 pm

``அண்ணா பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நம்பி ஏமாந்துட்டோம்" - `பரிதாபங்கள்’ கோபி


சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான 'பரிதாபங்கள் கோபி', சுதாகர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கெளரவ டாக்டர் பட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஒய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அனைவருக்கும் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

இந்த நிலையில் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை சங்கம் என்றே ஓர் அமைப்பே இல்லையென்ற அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும், நிகழ்வுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரும் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டிருந்தது என்ற தகவலும் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "இந்த அரங்கத்தில்வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால், எங்கள் டீனும் கடிதத்தைப் பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிட்டார். இது வள்ளிநாயகம் கொடுத்த கடிதமா அல்லது அதுவும் போலியா எனத் தெரியவில்லை. அதில் இந்திய அரசு முத்திரை இருந்தது.

வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்திருக்கிறோம். அவர் பெயரை வித்தியாசமாக அவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. எங்கள் பக்கத்திலிருந்து நாங்கள் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டோம். காவல்துறையில் இது குறித்து புகாரளித்திருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழைமைவாய்ந்த, பெருமையான அரங்கம். இந்த அரங்கத்தில்வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்றார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம், ``இந்த நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்டு நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் நிகழ்வில் பங்கேற்றேன்" என்று விளக்கமளித்திருக்கும் நிலையில் விழா அமைப்பாளர்களின் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன.

இது குறித்து `பரிதாபங்கள்’ கோபியிடம் பேசினோம். ``எங்களைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்பவர்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் எந்தப் பெரிய நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஹரிஷ் ஒரு மாதத்துக்கு முன்பு என்னை போனில் தொடர்புகொண்டு இந்த நிகழ்வு குறித்துப் பேசினார். அதற்குப் பின்னர் என்னுடைய மேலாளர்தான் அவரிடம் பேசினார். அண்ணா பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நம்பித்தான் நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டோம். இதைச் சொல்லித்தான் பல பிரபலங்களையும் ஏமாற்றியிருப்பதாகத் தெரிகிறது. இதனால் எங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. தவறிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.



Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1772
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Mar 02, 2023 8:38 am

பணம் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்று கொண்டு இருப்பார்களோ?

'பரிதாபம்'!!!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 02, 2023 12:42 pm

எதிர்ப்பு எதிர்ப்பு



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 12:28 pm

அண்ணா பல்கலை.யில் போலி கெளரவ டாக்டா் பட்டம்: ஹரிஷ் தலைமறைவு!


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா் அரங்கில் பிப். 26-ஆம் தேதி ‘சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ என்ற தனியாா் அமைப்பின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரைப்பட இசையமைப்பாளா் தேவா, நடிகா் கோகுல், நடன இயக்குநா் சாண்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் உள்பட 40 பேருக்கு கௌரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் வழங்கினாா்.

இந்த நிலையில் இந்த விருது அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் வழங்கப்படுவதாகக் கூறி, அந்த அமைப்பு நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனால் உண்மையிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தின் சாா்பில் அந்த விருது வழங்கப்படவில்லை என்றும் புகாா் எழுந்தது.

பல்கலைக்கழகம் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா் அரங்கத்தை வாடகைக்கு கேட்டு கடந்த நவம்பரில் கடிதம் வழங்கியதும், அதனுடன் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரில் போலியான பரிந்துரை கடிதம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், அந்த அமைப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி என அனுமதி பெற்றுவிட்டு, டாக்டா் பட்டம் வழங்கியிருப்பதும், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், அண்ணா பல்கலைக்கழகப் பெயா்களை அந்த அமைப்பு திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளா் (பொ) ரவிக்குமாா், கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் அந்த அமைப்பின் மீதும், அதன் நிா்வாகிகள் மீதும் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில், கோட்டூா்புரம் போலீஸாா், அந்த அமைப்பின் மீதும், அந்த அமைப்பின் இயக்குநா் ஹரீஷ் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

தலைமறைவு



இந்நிலையில், விவகாரம் தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், போலி கெளரவ டாக்டா் பட்டம் வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகி உள்ளார்.

தலைமறைவாகி உள்ள ஹரிஷை கோட்டூா்புரம் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 12:47 pm

`ஒரு டாக்டர் பட்டத்த வாங்கப் போய் நாங்க பட்ட பாடு இருக்கே’ - `பட்டமளிப்பு சர்ச்சை’ | நடந்தது என்ன?!



போலி டாக்டர் பட்டம் Vikatan%2F2023-03%2Fd1f228ad-20ea-457f-8984-93ac1c422240%2FWhatsApp_Image_2023_03_03_at_11_15_22.jpeg?rect=0%2C0%2C800%2C450&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

"முதலில் என்னை பேச சொல்லித் தான் அழைத்தார்கள். பின் விருது கொடுக்க வைத்தார்கள். மேடையில் இருந்து கீழே இறங்கினால் தவறாக இருக்கும் என்பதால் செய்தேன். அது விருதா, டாக்டர் பட்டமா? என்பது எல்லாம் எனக்கு நியாபகம் இல்லை" -



அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழா குறித்த சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சர்ச்சையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும், `என் மீது தப்பு இல்லை இவர்தான் காரணம்’ என இன்னொருவரை நோக்கிக் கை காட்டி வரும் நிலையில், சர்ச்சையின் தொடக்கப்புள்ளி யார்? பட்டமளிப்பு விழாவை நடத்திய ஹரிஷ் அவ்வளவு கச்சிதமாக அனைவரையும் ஏமாற்றி விட்டாரா? என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் பயணித்தோம்.

சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு சார்பில் கடந்த 26-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட கௌரவ டாக்டர் பட்டமளிப்பு விழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, சின்னத்திரை பிரபலம் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான 'பரிதாபங்கள் கோபி', சுதாகர் உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை ஒய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார். விழாவுக்கான அழைப்பிதழில் இந்திய அரசின் முத்திரை அச்சிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பெயர் இருந்ததால், எங்கள் டீனும் கடிதத்தைப் பார்த்தவுடன் அனுமதி வழங்கிவிட்டார். வள்ளிநாயகம் வருவதாக எங்களிடம் சொன்னதால் நாங்கள் இடம் கொடுத்திருக்கிறோம். காவல்துறையில் இது குறித்து புகாரளித்திருக்கிறோம். அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். அதிலும் விவேகானந்தா அரங்கம் பழைமைவாய்ந்த, பெருமையான அரங்கம். இந்த அரங்கத்தில் வைத்து இப்படி ஒரு தவறான செயல் நடந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்றார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம், ``இந்த நிகழ்ச்சிக்காக அனுமதி கேட்டு நான் கையெழுத்து போடவில்லை. உண்மையாகவே எனக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. நான் ஒரு சிறப்பு விருந்தினராக மட்டுமே பங்கேற்றேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்ததால் நான் நிகழ்வில் பங்கேற்றேன்" என்று விளக்கமளித்திருக்கும் நிலையில் விழா அமைப்பாளர்களின் மொபைல் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன.


போலி டாக்டர் பட்டம் Vikatan%2F2023-03%2Fd1f228ad-20ea-457f-8984-93ac1c422240%2FWhatsApp_Image_2023_03_03_at_11_15_22.jpeg?rect=0%2C0%2C800%2C450&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

இது தொடர்பாக நிகழ்வில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற பிரபலங்களிடம் பேசினோம்.

``என்னடா எல்லாரும் கூப்பிட்டாங்க. நம்ம விகடன்ல இருந்து யாரும் கூப்பிடலயேன்னு நினைச்சேன்.." என கலகலப்பாக தொடங்கினார் ஈரோடு மகேஷ், "வடிவேலு சார் சொல்லுவார்ல. காக்கா இம்புட்டுக்காண்டு எச்சம் விட்டதுக்காக டீக்கடையையே கொளுத்திட்டீங்கலேன்னு.., அந்த மாதிரி ஒரு டாக்டர் பட்டத்த வாங்கப் போய் நாங்க ரொம்ப பட்டுட்டோம் தலைவா. விழா ஏற்பாட்டாளர் ஹரீஷ் நிகழ்வுக்கு ஒரு 15 நாள் முன்னாடி ஃபோன் பண்ணினார். வாட்ஸ்அப்-ல அவரோட PROFILE-ஐ அனுப்பினார். பல முக்கிய ஆளுமைகளுக்கு விருது கொடுத்த புகைப்படங்கள் அதில் இருந்தது. அதனால் நிகழ்வுக்கு ஒப்புக் கொண்டேன். மேலும், நீதியரசர் வள்ளி நாயகம் விருது கொடுக்கிறார்னு சொல்லும் போது நமக்கே ஒரு பெருமையான ஃபீல் வரும்ல. அதனாலதான் விழாவுக்கு போனேன். ஏதோ தப்பா பட்டதால இதை சமூக வலைதளங்கள் எதுலயும் பகிர்ந்துக்கல. இப்ப இந்த பட்டம் போலின்னு தெரியுது. இதனால எனக்கு பெருமையும் இல்ல. சிறுமையும் இல்ல. ஆனா அவிங்கள மட்டும் சும்மா விடக் கூடாது தலைவா..," என்றார்.

"சார், வைகாசி பொறந்தாச்சு படம் வந்தப்பவே எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வந்தாங்க.., இவன் அப்படி என்ன சாதிச்சுட்டான்னு டாக்டர் பட்டம் கொடுக்குறீங்கன்னு எங்க அப்பா விரட்டி விட்டார். அப்புறம் தான் தெரிஞ்சது. அது விஜிபி, கோல்டன் பீச்ல சுத்திட்ருக்குற வெள்ளைக்காரங்கள செட் பிராப்பர்ட்டியா கூட்டி வந்து, 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தா டாக்டர் பட்டம் கொடுக்குற குரூப்புன்னு..," ரகளையான ஃபிளாஷ்பேக்குடன் தொடங்கினார் இசையமைப்பாளர் தேவா. "நான் இயல் இசை மன்றத்தின் தலைவரா இருந்தப்ப ஒரு சம்பவம் நடந்துச்சு. அப்ப உள்ள விலைவாசிக்கு டாக்டர் பட்டத்தோட ரேட்டு.., 40 ஆயிரம் ரூபா... அதுவும் எப்படி தெரியுமா?

ஒருத்தருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்துட்டு, கொஞ்ச நாள் கழிச்சு அவருக்கு ஃபோன் பண்ணி சார் உங்க திறமைக்கு நாங்க காசு வாங்கி இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, நீங்க ஒரு மூணு பேரை எங்க கிட்ட கொண்டு வாங்க. உங்ககிட்ட வாங்குன 40 ஆயிரத்த கொடுத்துகுறோம்னு MLM மாதிரி ஏஜெண்ட் புடிச்சு டாக்டர் பட்டம் கொடுத்துகிட்டு இருந்தாங்க. எனக்கு சத்தியபாமா பல்கலைக்கழகம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்தெல்லாம் இதற்கு முன்னரே டாக்டர் பட்டம் கொடுத்துருக்காங்க. ஆனா நான் அதை எங்கையும் பயன்படுத்தியதில்லை. கௌரவ டாக்டர் பட்டம் தொடர்பா இவ்வளவு அனுபவம் இருந்தும், நான் நிகழ்வுக்கு போனதுக்கு ஒரே காரணம் ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் தான்.

நிகழ்ச்சிக்குப் போனதும் பின்னாடி திரும்பி பார்த்தா ஒன்னு கூட தெரிஞ்ச முகமா இல்ல... பூரா ஜோசியக்காரங்க, ரியல் எஸ்டேட் அதிபர்களா இருந்தாங்க. அப்பவே ஏதோ ஒண்ணு தப்பா பட்டுச்சு. இதெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா சார். விழா மேடையில இந்த ஹரிஷ் இருக்காப்லயே, "ஒரு வேளை நீங்க யாராவது லஞ்சம் வாங்குறதோ இல்ல இந்த பட்டத்த வச்சி மோசடி ஏதாவது செய்றதோ எங்களுக்கு தெரிஞ்சா, உங்களுக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை திரும்ப வாங்கிக்குவோம்" அப்படின்னு சொன்னார் பாருங்க. அத நினைச்சு நினைச்சு சிரிக்கிறேன் சார். எனக்கு டிவி பார்த்துதான் இந்த விஷயமே தெரியும் உடனே ஹரிஷ்க்கு ஃபோன் செய்தேன். `சார் நான் நீதியரசர் வள்ளி நாயகம் வீட்டிலதான் சார் இருக்கேன். என் மேல அபாண்டமா ஊடகங்கள் பொய் சொல்லுது சார்’ என்றார். நான் என்ன சொல்றது.., தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.

போலி டாக்டர் பட்டம் Vikatan%2F2023-03%2F0334eb18-98ea-4388-a5aa-9b9e58357e31%2Fyogi_babu.jfif?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளி நாயகத்திடமிருந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிகழ்வுக்கு இடம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதம்தான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.

அது தன்னுடைய லெட்டர்ஹெட் இல்லை. தன் கையெழுத்து இல்லை என மறுத்து வரும் ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகத்திடம் பேசினோம், முதலில் ஹரிஷ் உங்களை எப்படி தொடர்பு கொண்டார் என்ற கேள்விக்கு, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடக்கும் விருது வழங்கும் விழாவுக்காக அழைப்பு விடுத்தனர். நானும் கலந்து கொண்டேன். அதற்குப் பிறகு அண்மையில் நடந்த இந்த பட்டமளிப்பு விழாவுக்காக அழைத்தனர்" என்றார்.

ஓய்வு பெற்ற நீதியரசரான தங்களுக்கு மனித உரிமை அமைப்பை தனியார் ஒருவர் நடத்தக் கூடாது என்பதும், பல்கலைக்கழகமாக இல்லாத ஒரு அமைப்பு எப்படி பட்டமளிக்கலாம் என்ற எளிமையான கேள்வி எழவில்லையா? என்று கேட்டோம்.

"முதலில், அவர்கள் என்னிடம் ஊழலுக்கு எதிரான இயக்கம் என்றுதான் அறிமுகமானார்கள். அதனால் தான் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். அதற்குப் பின் என்னை இந்த நிகழ்ச்சிக்காகத்தான் அழைத்தனர். செல்லும் ஒவ்வொரு விழாவிலும் அதை நடத்துபவர்களின் பின்னணி குறித்து என்னால் ஆய்வு செய்ய முடியாது. மேலும் வெளிநாடுகளில் செயல்படும் 'உலக தமிழ் பல்கலைக்கழகம்' என்ற பெயரில் எல்லாம் இதற்கு முன்னால் விருது கொடுத்திருக்கிறார்கள். அந்த பல்கலைக்கழகம் எங்கே இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?. அவர்கள் மத்திய அரசின் லஞ்ச ஒழிப்பு துறையின் கீழ் பதிவு செய்திருந்த BY LAW-வை கையில் வைத்திருந்தனர். அதில் அரசு முத்திரை இருந்தது. ஒரு வேளை அவர்கள் தனியார் தொண்டு நிறுவனம் என்ற பிரிவில் தங்கள் அமைப்பை பதிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இது தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என்றார்.

யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களுக்கு விருதளித்தது குறித்து கேட்கும் போது, "அது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சொன்ன தனியார் விருது நிகழ்வில் கொடுத்தது" என்றார். விருது விழா என்றுதானே சொன்னீர்கள். ஆனால், பட்டமளிப்பு விழா போல் உள்ளதே என்ற கேள்விக்கு, "முதலில் என்னை பேச சொல்லித் தான் அழைத்தார்கள். பின் விருது கொடுக்க வைத்தார்கள். மேடையில் இருந்து கீழே இறங்கினால் தவறாக இருக்கும் என்பதால் அவர்கள் சொன்னது போல் செய்தேன். அது விருதா டாக்டர் பட்டமா என்பது எல்லாம் எனக்கு நியாபகம் இல்லை" என்றார்.

விருது கொடுத்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான, www.iachrc.com, புகாரையடுத்து முடக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னொரு இணையதளத்திலும் இவர்கள் இயங்கி வந்தனர். அந்த இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் நிறுவன சட்டம் 2013ன் படி 2021ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது பதிவு குறித்த விவரத்தில் தங்களது நிறுவனத்திற்கு நிதி எப்படித் திரட்டப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ள முறைதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதின் மூலம் நிதி திரட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மனித உரிமைகள் என்ற வார்த்தையை அரசு சாரா தொண்டு நிறுவனம் தனது பெயரில் பயன்படுத்தக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 2011-ம் ஆண்டு கூறியுள்ளது.

மேலும், மனித உரிமைகள் என்ற பெயரைத் தனியார் அமைப்புகள் பயன்படுத்தினாலோ, வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு என்பதை ஊழல் தடுப்பு என்று இவர்கள் போட்டுக் கொள்வது ஏன்? சர்வதேச அமைப்பு என்று கூறிக் கொள்ளும் இவர்கள் வேறு எந்த நாடுகளில் தங்கள் அலுவலகங்களை வைத்திருக்கிறார்கள்? வெறும் தன்னார்வ அமைப்பாக பதிவு செய்து கொண்டு இவர்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடியுமா? என பல கேள்விகள் எழுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ் செஃப் தாமு உட்பட பல பேருக்கு இந்த அமைப்பு கௌரவ டாக்டர் பட்டங்களை வாரி வழங்கியிருப்பதாகவும், பிரபலங்கள் மூலமாக மேலும் சில பிரபலங்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு பலருக்கு பட்டம் அளித்திருப்பதாகவும், இதற்காக பட்டம் பெறுபவர்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த அமைப்பு பட்டங்களை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழக டீன் வசந்தி இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார். ஓய்வு பெற்ற நீதியரசரின் கையெழுத்து இருந்தால் என்ன மாதிரியான நிகழ்ச்சி என்று கூட கேட்காமல் அனுமதி கொடுத்து விடுவார்களா? இந்த கேள்விகளுக்கு அண்ணா பல்கலைக்கழக தரப்பில் தெளிவான பதில் இல்லை.

இந்த நிலையில் இந்த விழா ஏற்பாட்டாளரான ஹரிஷ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தான் முறைப்படி மத்திய அரசில் தன் அமைப்பை பதிவு செய்துள்ளதாகவும்(CERTIFICATE OF INCORPORATION) அதன்படி, கௌரவ டாக்டர் பட்டம் வழங்கலாம் என மத்திய அரசு தங்கள் அமைப்பிற்கு அனுமதி அளித்துள்ளதாகவும், பட்டம் பெற்றவர்கள் யாரும் பதட்டப்படத் தேவை இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தன் மீது எழுந்துள்ள புகார்களை சட்ட நிபுணர்களின் உதவியோடு எதிர்கொள்ள உள்ளதாகவும் ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறமிருக்க, காவல்துறையினர் legal opinion கேட்டுள்ளனர். இன்னும் நடவடிக்கை தொடங்கவில்லை. முதல் தகவலறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. சான்றிதழ் மற்றும் அங்கீகாரம் தொடர்பான புகார் என்பதால் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி விடவே வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!

விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 03, 2023 4:36 pm

இப்பிடிக்கு எல்லோரையும் ஏமாற்றி பட்டமளிப்பு விழாவை நடத்திய ஹரிஷ் க்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

சுகேஷ் /ஹரிஷ் இன்னும் எவ்வளவு பேரோ???



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக