புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
prajai
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_m10பகாசூரன் திரைவிமர்சனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகாசூரன் திரைவிமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2023 8:46 pm



#பழைய_வண்ணாரப்பேட்டை, #திரெளபதி, #ருத்ரதாண்டவம் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது 'பகாசூரன்'.

இதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும், ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ராதாரவி, தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ், தரக்‌ஷி என பலர் நடித்துள்ளனர்.

தனது அண்ணன் மகள் மேற்கொண்ட மர்மமான தற்கொலையைத் தொடர்ந்து அதற்கான காரணத்தைத் தேடுகிறார் முன்னாள் மேஜராக வரும் நடிகர் நட்டி. அதேசமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குநர் செல்வராகவன். இருவரும் சந்திக்கும் புள்ளியே '#பகாசூரன்' திரைப்படம்.

சாணிக்காயிதம், பீஸ்ட் திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகராக களமிறங்கியிருக்கிறார் செல்வராகவன். கடலூரைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான செல்வராகவனுக்கு தனது மகளின் மீது கொள்ளைப் பிரியம். அவரது விருப்பத்திற்காக பெரம்பலூர் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்கிறார். அங்கு அவருக்கு நிகழும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்தே கதை நகர்கிறது. பல இடங்களில் செல்வராகவன் சிறப்பாக நடித்திருக்கிறார். சிவ பக்தராக வரும் இடங்களில் நல்ல நடிகராக ஈர்க்கிறார்.

இவருக்கு இணையாக படம் முழுக்க வருகிறார் நட்டி. அவரின் அண்ணன் மகள் தனது காதலனின் வற்புறுத்தலின்பேரில் இணையத்தில் நிர்வாண விடியோக்களை வெளியிடுகிறார். அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலுக்குள் சிக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடாக, பாலியல் தொழில் செய்யும் கும்பல் அப்பெண்ணை மிரட்டுகிறது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலைக்குள்ளாகிறார். இது அவரின் சித்தப்பா நட்டிக்கு தெரிய வருகிறது. இதுபோல பல பெண்கள் சிக்கியிருப்பதை அறியும் அவர் அவர்களை மீட்க இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு தகப்பனைத் தேடி அலைகிறார். இப்படி செல்வராகவன் பயணமும், நட்டியின் பயணமுமே ஒட்டுமொத்த திரைக்கதை. படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நன்றாக உதவியிருக்கிறது. செல்வராகவனுக்கு அமைக்கப்பட்டுள்ள பின்னணி இசை ரசிக்கும்படியாக இருக்கிறது. திரைப்படத்தின் தொடக்கத்தில் வரும் பாடல் தவிர மற்ற எதுவும் ரசிக்கும்படியாக அமையவில்லை. தேவையான ஒளிப்பதிவு. தொழில்நுட்ப ரீதியாக தனது முந்தைய படங்களைவிட சிறப்பாக செய்திருக்கிறார் மோகன் ஜி.

இவற்றையெல்லாம் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது?

50 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்தனையிலிருந்து உருவாகியிருக்கிறது 'பகாசூரன்'. பல நூறாண்டுகளுக்குப் பிறகு பெண்கள் தங்களது அடுப்பங்கறையிலிருந்து இப்போதுதான் வெளியில் வந்து கல்வி கற்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனை பதட்டத்துடன் பார்த்த ஒருவர் எழுதிய கதையாக வந்திருக்கிறது 'பகாசூரன்'.

பெண்களைக் காக்க வேண்டும் என சொல்ல வரும் இயக்குநர் அதற்காக படத்தில் ஆபாச நடனம் வைப்பதெல்லாம் கண்முன் தெரியும் முரண்.

செல்வராகவனின் மகள் முதல் தலைமுறை பட்டதாரியான பிறகு மேற்படிப்புக்காக வெளியூர் செல்ல விரும்புகிறார். சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டதாக ஒரு வசனம் வருகிறது. “ஊருக்குள்ளயே படிக்க வைக்க வேண்டியதுதான”, ”நம்ம புள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்ணுறாங்கன்னு கண்காணிக்கனும்” என இப்படிப்பட்ட வசனங்கள் படம் முழுக்க தொடர்கின்றன. எப்படி இருந்த செல்வராகவனை இப்படி வந்து நிறுத்திவிட்டனரே எனத் தோன்றுகிறது.

பல இடங்களில் படத்தின் லாஜிக் தடுமாறி நிற்கிறது. ஓய்வு பெற்ற மேஜராக வரும் நட்டி ஆதாரங்களைத் தேடி ஓடுகிறார். செல்வராகவன் அடுத்தடுத்து கொலைகளை நடத்திவிட்டு சென்றுகொண்டிருக்கிறார். இடையில் என்ன செய்கிறது காவல்துறை?

சற்று பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல்பாதி சற்று கவனிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு அப்படியே எதிர்மாறாக நிற்கிறது இரண்டாம் பாதி. இணையத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பது நோக்கமெனில் அதற்கான உண்மையான காரணத்தை ஆராய்ந்திருக்கலாம். ஆனால் அந்த பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது போன்று காதலையும், பெண் உரிமை கோருவோரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் அரசியல் எதிர்ப்பாளர்களை கதைக்குள் இழுத்துவிட்டதன் விளைவாக தடுமாறி நிற்கிறான் 'பகாசூரன்'.


செல்போன் மூலம் நடைபெறும் பாலியல் தொழிலும், அதனால் ஏற்படும் பெண்களுக்கான பாதிப்பைக் குறித்தும் பேச முனைந்திருக்கிறார் இயக்குநர். இணையத்தில் கிடைக்கும் ஆபாச செயலிகளின் பாதிப்பைக் குறித்து சற்று விரிவாக திரைக்கதையில் கொண்டு வந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் அதுகுறித்து எந்த விவரங்களும் இல்லாமல் கதை நகர்கிறது.

படத்தில் ராதாரவி தொடக்கத்தில் ஒரு காட்சியில் வருகிறார். பெண்களின் உரிமைகளைப் பேசுகிறார். அவர் எப்படி பின்னர் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார் என்பதை உங்களின் எதிர்பார்ப்பிற்கே விட்டுவிடுகிறேன்.

ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்து வருவது, செல்போன்களை பயன்படுத்துவது என சின்ன சின்ன விஷயங்களைக் கூட அபாயமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது 'பகாசூரன்'.

திரைப்படத்தில் தந்தை மகள் பாசத்தை காட்டும் வகையில் ஒரு பாடல் வருகிறது. அதில் செல்வராகவனின் மகள் அவரது காலை அழுத்திவிடுவார். அப்படியே இருந்திருந்தால் எந்த பிரச்னையும் இயக்குநருக்கு இருந்திருக்காது போல.

ஆபாசப் படங்களை எடுத்து பெண்களை மிரட்டுபவர்களை குற்றவாளிகளாக்கி தண்டனை பெற்று தராமல், பெண்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் சரியாகும், பெண்களே கெளரவம் என அதர பழைய கல்வெட்டையே தூக்கி சுமந்த 'பகாசூரன்' கெளரவம், ஒழுக்கம், இத்யாதி, இத்யாதி என பெண்ணையும் சுமைகளை சுமக்கச் சொல்லியிருக்கிறது.

படத்தின் இறுதியில் பேசும் செல்வராகவன், செல்போன்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானதாக பேசுகிறார். அதனைத் தொடர்ந்து பேசும் நட்டி நமது பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார்.

பெண்கள் வெளியில் வரட்டும். கல்வி கற்கட்டும். அவர்களின் உடலை இன்னும் ஆபத்தானதாகக் காட்டி அவர்களின் பாதைகளில் குழிவெட்டி காத்திருக்க வேண்டாம்.



தினமணி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 20, 2023 9:16 pm

'பகாசூரன்' படத்திற்காக திரையுலகினரின் பாராட்டை அள்ளும் செல்வராகவன்!



திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். பிப்.17ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் செல்வராகவனின் நடிப்பை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.


பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப்:


பகாசூரன் படத்திற்கு தென்னிந்தியாவில் நல்ல பெயர் கிடைத்திருப்பதாக தெரிகிறது. எனது நண்பர்களான நட்டி நடராஜன், செல்வராகவனுக்கு வாழ்த்துகள்.

நடிகர் கார்த்தி:


செல்வராகவன் முழுவதுமாக கதாநாயகனாக நடிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு மட்டுமே தெரிந்த சிறந்த நடிகரை இந்த உலகமும் பார்க்கிறது. பகாசூரன் படக்குழுவிற்கு வாழ்த்துகள்.

எஸ்.ஜே.சூர்யா:


லெஜண்டரி இயக்குநர் செல்வராகவன் சார் பகாசூரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் வாழ்ந்துள்ளீர்கள். சிரந்த பாராட்டுகளை பெற்றுவரும் படக்குழுவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் சார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன்:


இதுமாதிரி கதாபாத்திரங்களில் அதிகமாக நடிக்க வேண்டுகிறேன் செல்வராகவன் சார். உங்களது நடிப்பை பற்றி சிறந்த பாராட்டுகளை கேட்கிறேன். பகாசூரன் அணிக்கு வாழ்த்துகள்.

ஜி.வி.பிரகாஷ்:


லெஜண்டரி இயக்குநர் செல்வராகவன்.. சிறந்த நடிப்பை பற்றி கேள்விபட்டேன் சார். பகாசூரன் தியேட்டரில்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக