ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:02 pm

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 5:21 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:23 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:19 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 4:16 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 12:54 pm

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 6:54 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 1:09 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Nov 06, 2024 12:56 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 06, 2024 12:43 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 10:45 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 10:29 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 9:30 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:24 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:21 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:20 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:19 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:18 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 8:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 6:08 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 1:02 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

2 posters

Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Empty தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

Post by சிவா Mon Feb 27, 2023 7:06 pm

முன்பெல்லாம் #தூங்கா_நகரம் என்றாலே மதுரையைத்தான் சொல்வதுண்டு. அதற்கு அங்கிருப்பவர்கள் யாரும் தூங்குவதில்லை என்று அர்த்தமாகாது. இரவிலும் சுற்றுப் பகுதிகளிலிருந்து மக்கள் வந்து சென்றுகொண்டிருப்பதால், இரவிலும் கடைகள் திறந்திருப்பதும், வணிகர்கள் மட்டுமே பெரும்பாலும் நடமாடிக்கொண்டிருப்பதும்தான் காரணம்.

இரண்டாயிரத்துக்குப் பின்னான நமது வாழ்வு முற்றிலும் வேறுவகை. சென்னையில் மட்டுமே இரவு பத்து மணிக்குத் தொடங்கி காலை ஆறு மணிவரை மட்டுமே இயங்கக்கூடிய உணவகங்கள் குறிப்பாக, பிரியாணி மற்றும் துரித உணவுகள் சுடச்சுட சமைக்கப்பட்டு விடிவதற்குள் விற்று தீர்ந்துவிடுகின்றன.  வடசென்னையில் ஒரு கடையில் ராத்திரி ஒரு மணிக்கு அந்த அசைவ உணவகம் திறக்கப்படும் போது வாசலில் கூட்டம் அலைமோதும், நான்கு மணிக்கு அனைத்தும் தீர்ந்து கடை அடைக்கப்பட்டுவிடும்.இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்று புலம்புவதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  அது அவரவர் விருப்பம். ஆனால்,  இரவு ஒரு மணி என்பது உடலியல் கடிகாரத்தின்படி என்ன? அதில் நாம் என்ன செய்யலாம் என்பதைத் தொட்டுக்காட்டவே இந்தப் பகுதி.

ராமாயணத்தின் உப கதைகளில் ஒன்று, #நித்ராதேவி எனும் தூக்கத்தின் தெய்வம். லட்சுமணனின் வேண்டுகோளுக்கிணங்க  பதினான்கு வருட தூக்கத்தை அவனுடைய மனைவி ஊர்மிளைக்குக் கொடுத்து இரவும் பகலும் தூங்கச் செய்கிறாள். லட்சுமணன் விழித்திருந்து காவல் காக்கிறான்.  அதாவது இதிகாச நாயகர்களாகவே இருந்தாலும் அல்லது தெய்வமாகவே இருந்தாலும் தூக்கம் என்பது இயற்கையின் இயங்கு சக்திகளில் முக்கியமானது.

அப்படியிருக்கையில் பெரும் மிருகங்களைவிட பலம் குன்றிய மனிதனுக்கு உறக்கம் என்பதன் தேவையை உணர்ந்துகொள்ளலாம்.நமது #தூக்கம் என்பது  படுக்கையில் படுத்தல், அசைவுகளை நிறுத்துதல், கனவு நிலை, இறுதியாக  ஆழ்ந்த தூக்கம் என நான்கு பகுதிகளாக நிகழ்கிறது. இதில் ஆழ்ந்த தூக்கம் என்பது மட்டுமே நாம் அடுத்த நாள் செயல்படுவதற்கான உடல் மற்றும் மன ஆற்றலைத் தரவல்லது. எனினும் நம்மில் எண்பது சதவிகிதம் பேர், முதல் மூன்று நிலைகளில் தடுமாறிக்கொண்டே இருப்பவர்கள்தான். ஆகவே, நமது  தூக்கத்தை பற்றிய அறிவும், நம்முடைய நிலையையும் அறிந்து வயதுக்குத் தகுந்த உறக்கம் நடைபெறுகிறதா எனக் கவனித்து அதைச் சரி செய்வதுஅவசியம். ஏனெனில், அனைத்து மன அழுத்தம் மற்றும் உளவியல் சிக்கல்களுக்கு அடிப்படை தூக்கத்தில்தான் துவங்குகிறது. ஆகவே, அறிவியல் தூக்கம் சார்ந்த மூன்று வித நோய்களை அறிவுறுத்துகிறது.

முதல் வகை:- நாம் அனைவரும் அறிந்த #இன்சோம்னியா எனும் தூக்கமின்மை அல்லது குறைவான தூக்கம். இது நாம் அதீத பயத்தின் போது நம் மூளை எப்படியான எதிர்வினையாற்றுமோ, அதே  உயரழுத்ததுடன் செயல்படுகிறது. பெரும்பாலும் இது மனஅழுத்தம், பதற்றம் போன்ற நிலைகளிலும் நிகழ்வதுதான்.  இந்த வகை நோயில் உள்ள சவாலே, ஒருவருக்குத் தான், பதற்றம் மனஅழுத்தத்தில் இருக்கிறோம் என்பதே தெரியாது. நீண்ட நாட்களுக்கு பின்னர்தான் அவர் மன நோயாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது கண்டறியப்படும்.

இரண்டாவது வகை:- #நார்கோலெப்ஸி எனப்படும் அதீத தூக்கம், சிலர் நன்றாகப் பன்னிரண்டு மணி நேரம் தூங்கியதாகச் சொல்வார்கள். அது நல்ல உறக்கம் இல்லை என்பதே உண்மை. இதுவும் நிச்சயமாக   சைக்கோ சோமட்டிக் எனப்படும் மனதால் உடலில் உருவாகும் நோய் வகைதான். மூளையில் சுரக்கும் ஓரெக்சின் எனும் வேதிப்பொருள், நம்முடைய உடலுக்குத் தவறுதலாகச் செய்தியை அனுப்பி தொடர்ந்து தூக்கநிலையில் வைத்துக்கொள்வதால் இது சிலருக்கு நிகழலாம்.

மூன்றாவது வகை:- #டிஸ்ஸோம்னியா எனப்படும் தூக்ககோளாறு இதில் தூக்கத்தில் அலறுதல், பேசுதல் எழுந்து நடத்தல் எனப் பல்வேறு குறைபாடுகள் கொண்ட தூக்கம் இது. நம்மில் தமோ குணம் மிகும் பொழுது தூக்கமும் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் வருவதாகவும், தமோ குணத்தை நிகர் செய்வதற்கும், தூக்கத்தின் தரத்தைச் சீரமைப்பதற்கும் யோக மரபு பிரத்யேகமான பயிற்சிகளை வடிவமைத்து வைத்துள்ளது. உதாரணமாக நீண்ட சுவாசத்துடன் கூடிய பயிற்சிகள், படுத்த நிலையில் செய்ய வேண்டிய பயிற்சிகள், தியானப் பயிற்சிகள் என ஒருவர் பத்து முதல் பதினைந்து பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு இவ்வகை நோயிலிருந்து முற்றிலும் குணமாகலாம்.

தூக்கத்தை பற்றி ஆயுர்வேத முதன்மை நூலான சரக சம்ஹிதையில், ‘‘மகிழ்ச்சி, போஷாக்கு, திடகாத்திரம், வீரியம், உயிர்ப்புடன் இயங்குதல் இவை அனைத்தையும் ஒரு நல்ல தூக்கமே வழங்குகிறது. அதேபோல துயரம், ஊட்டச்சத்துக் குறைபாடு, பலவீனம், மலட்டுத்தன்மை, அறியாமை மற்றும் இறப்பு இவை அனைத்தும் தூக்கமின்மையால் ஏற்படுகிறது. தரமான தூக்கமே ஆனந்தமான வாழ்வைத் தரமுடியும்' என்கிறார் #சரகர்.

ஆயுர்வேதமும், நவீன மருத்துவமும் கிட்டத்தட்ட நம்முடைய உறக்கத்தை ஒரே மாதிரிதான் அணுகுகிறார்கள். எனினும் நமக்கு மேலே சொல்லப்பட்ட நான்கு நிலை தூக்கம் என்பது படிப்படியாக நிகழ்கிறதா? மற்றும் மூன்று விதமான தூக்கம் சார்ந்த பிரச்சனைகளில் நம் தனிப்பட்ட அனுபவம் என்ன என்பதை ஒருவர் தொடர்ந்து ஒரு மாத காலம் அவதானித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகலாம். மிக குறுகிய காலத்துக்கு மருத்துவம் எடுத்துக்கொண்டே, வாழ்வியல் முறைகளில் சில மாற்றங்களைச் செய்யலாம், அதில் முக்கியமானது சரியான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்தல்.  அதாவது உங்கள் உடலுக்குத் தேவையான ஆசனங்கள், உங்கள் உடலியங்கியல் முழுவதற்குமான சரியான மூச்சுப் பயிற்சி முறைகள், பிராணாயாமங்கள், தூக்கமும் மனமும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால், பிரத்யாஹார மற்றும் தாரணைப் பயிற்சிகளை மரபார்ந்த ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டு செய்துவருவதன் மூலம்  இரண்டு பலன்களை அடையலாம். ஒன்று இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த பிணியிலிருந்து விடுதலை. அடுத்ததாக, மீண்டும் இதுபோன்ற நோய்க்கூறுகள்வாழ்வில் வராதவண்ணம் தற்காத்துக் கொள்ளுதல்.

உதாரணமாக #பார்க்கின்ஸன் போன்ற நோய்கள் ஒருவருடைய நரம்பு மண்டலத்தை தாக்கி சிறிது சிறிதாக உடலுறுப்புகளை செயலிழக்க வைப்பவை. மேலே, சொல்லப்பட்ட மூன்று வகை தூக்கம் சார்ந்த பிரச்சனைகளோடு நேரடி தொடர்புள்ள நோய். அதை மரபார்ந்த யோக பயிற்சிகளான , பவன் முக்தாசனம், நேத்தி, ஸ்வான பிராணாயாமம், போன்ற யோகப்பயிற்சிகளின் மூலம் குணப்படுத்த முடிந்திருக்கிறது.

எனினும் இதிலுள்ள சவால் என்பது பார்க்கின்ஸன் உள்ள நோயாளிகள் அனைவரையும் யோகாவின் மூலம் மட்டுமே குணப்படுத்திவிட முடியும். என மேம்போக்காகவும், எந்த அடிப்படை அறிவியலும் இல்லாமல் ஒருவரிடம் கற்றுக்கொண்டால் அது மேலும் சிக்கலையே உருவாக்கும். ஆகவே, யோக முறைகளின் எல்லைகளையும் அதன் சாதக பாதகங்கள் தெரிந்த ஒருவரிடம் அல்லது ஒரு ஆராய்ச்சி சார்ந்த யோக கல்வி நிலையத்தில் இதற்கான தீர்வுகளைத் தேடலாம்.

மகராசனம்



தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Makara10

இந்தப் பகுதியில் நாம் ‘மகராசனம்’ எனும் மரபார்ந்த பயிற்சியைப் பற்றி தெரிந்துகொள்வோம். குப்புற படுத்த நிலையில், இரு உள்ளங்கைகளாலும் கன்னம் மற்றும் தாடைப் பகுதியை ஏந்தியவாறு, கண்களை மூடி படுத்துக்கொள்ளவும். மூக்கின் நுனியை கவனித்தபடி பத்து அல்லது அதிகபட்சம் இருபது மூச்சுகள் வரை எண்ணி முடித்து திரும்பிப் படுத்து ஓய்வெடுக்கவும்.

நீண்ட நாள் #முதுகுவலி மற்றும் தண்டுவட பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா பிரச்சனைக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாக அமையும்.



#மகராசனம் #ஆசனம்
நன்றி குங்குமம் டாக்டர்
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

Post by T.N.Balasubramanian Mon Feb 27, 2023 7:29 pm

உங்கள் ராசிக்கேற்ற ஆசனமோ இது!

மகர ராசிதானே உங்களது.

@சிவா


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

Post by சிவா Mon Feb 27, 2023 7:32 pm

T.N.Balasubramanian wrote:உங்கள் ராசிக்கேற்ற ஆசனமோ இது!

மகர ராசிதானே உங்களது.

@சிவா


இதை இப்படியும் யோசிக்கலாமோ? தூக்கமும் கண்களை தழுவட்டுமே! 3838410834
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தூக்கமும் கண்களை தழுவட்டுமே! Empty Re: தூக்கமும் கண்களை தழுவட்டுமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum