புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_lcapகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_voting_barகுடி குட்டியைக் கெடுக்கும் .. I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி குட்டியைக் கெடுக்கும் ..


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 25, 2010 5:52 am

குடி குட்டியைக் கெடுக்கும் .. Hardliquor


கம்பஸ் படிக்கும்போது தண்ணிப்பார்ட்டி என்றால் எல்லாருக்கும் ஒரே சந்தோசம்.. எனக்கும்தான் .. ஆனால் மேட்டர் என்னவெண்டால் நான் குடிப்பதில்லை.. பிறகு என்ன சந்தோசம் என்று கேட்கிறீர்களா? இருக்குங்க..
ஒரு காவாசிப்போத்தல் உள்ள போனதும் ஹீரோ தன்ட ரகசிய மேட்டரெல்லாம் அவுட்டு விட்டுவார் பாருங்க.. நடுவில அவர் வாந்தி எடுக்கிறாரோ இல்லியோ கேட்டுட்டிருக்கிற நீங்க எடுத்தாலும் எடுப்பீங்க.. அவ்வளவு நாறக்கதையெல்லாம் சொல்லுவார் ..
மற்றவன் ரகசியத்தை அவன் வாயாலயே கேக்கிற ருசியிருக்கே ..
அட அனுபவிச்சதில்லையா?
உடனடியா ஒரு தண்ணிப்பார்ட்டிய அரேஞ்ச் பண்ணுங்க பாஸ்.. வாழ்க்கையில பாதிய மிஸ் பண்ணிட்டீங்க..

நான் தண்ணி அடிக்காததுக்கு ஒரே காரணம் வெளிப்படையா சொல்வதானால் நம்ம கிட்டயும் நெறய்ய ரகசியம் இருக்கு..


ரகசியம் இல்லாதவன் எவன் பாஸ் ? எல்லாமே ஓப்பினா இருக்கிறது இந்த பொல்லாத சமூகத்தில நல்லதுக்கில்லை.. சில விடயங்களை எல்லோரோட நன்மைக்காகவும் நம்ம மனைவி கிட்டேயா பெற்றோர் கிட்டயோ கூட மறைச்சித்தானாகணும்..


ஒருத்தனுக்கு கம்பசில குப்பை கூட்டுற ஆயாவுல ஒரு கண்ணு இருக்கலாம்.. அதை குடிச்சிட்டு வெளில சொன்ன என்ன ஆவுறது.. அடுத்தநாள் லெக்சரரின்ட மண்டைலயே போஸ்டர் அடிச்சு ஒட்டிடுவாங்க.. அண்ணாவோட ஆயா கழிப்பறையில் கசமுசான்னு.. ஆகவே அந்த ரகசியங்கள் எவ்வளவு சின்னதா இருந்தாலும் அதை நமக்குள்ளயே வச்சிருக்கும் போதுதான் நாம நாமாத்தெரிவம்.. இல்லேன்னா எவனப்பாத்தாலும் மனசுக்க ஒரு குறுகுறுப்பாயே இருக்கும்..


குடி குட்டியைக் கெடுக்கும் .. 251358-main_Full


அப்புறம் குடி ஈரலை தின்னும் , கான்சர் வரும் அப்புடி இப்பிடின்னு எல்லாரும் மிரட்டினாலும் எல்லாரும் குடிக்கத்தான் செய்யுறாங்க.. ஏன்?
சிலரு கவலைய மறக்க என்கிறாங்க. சிலர் சந்தோசமா இருக்க என்கிறாங்க.. இதெல்லாத்தையும் தீவிரமா ஆராயத்தான் நான் தண்ணிப்பார்ட்டியளுக்கு போவேன்..
அங்கின பைட்சா கொண்டுவாற மிக்சர் , கோழிப்பொரியல் ,முட்டைப்போரியல் , உப்பு பிஸ்கட் அது இதுன்னு எல்லாத்தையும் ஒரு புடிபுடிச்சவாறே குடிமக்களை அவதானிக்கிறது ரொம்ப சுவாரசியமா இருக்கும்.


குடி குட்டியைக் கெடுக்கும் .. Article-1219351-06C469EF000005DC-569_468x286

தண்ணி அடிச்சாப்புறம் அவன் ஒரு குழந்தைப்பிள்ளை என்று ஒரு அங்கீகாரம் வழங்கப்படுகிறது .. ஏதோ சுயநினைவுக்கு தெரியாம செய்யுறான் எண்டு எல்லாரும் கதைப்பார்கள் . தங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பால் போக அனுமதிக்கும் அந்த பழக்கத்தில் , மனதை ஒரு லூசா விடும் தன்மைதான் மன இறுக்கத்தை தளர்த்தி சந்தோசத்தை தருகிறது என நினைக்கிறேன்..

இது பின்விளைவுகள் சரியில்லாத ஒரு ஆறுதல் ..
ஆனால் அந்த ஆறுதலுக்கு அடிக்ட் ஆகிவிட்டால் பின்னர் மீள்வது கடினம்..
செம கேசுகளை பாத்திருக்கேன்பா .. குடிக்கு நியு அட்மிசன்சுகளா! கவனம்..!



அப்புறம் நான் தண்ணிப்பார்ட்டிகளுக்கு போவதற்கு இன்னொரு காரணம் இருக்கு.. அதுதாங்க சமூக சேவை..

குடி குட்டியைக் கெடுக்கும் .. Stockphotopro_16352env_media_inmhd010_is
குடி குட்டியைக் கெடுக்கும் .. Drunk_Shadow_by_sonic_VNN
போகும்போது ஆமிக்காரன் பாண்ட் வாசிக்கப்போவது போல லெப்ட்ரைட்டில் போவபர்கள் வரும்பொது நல்லூர்க்கந்தனுக்கு நாயுருவிப்பத்தைக்குள் பிரதட்டை அடித்துக்கொண்டு வருவார்கள்.. அதிலும் எவானவது பூட் வாங்கின கேசெண்டால் (அதுதாங்க லவ் பெயிலியர் ) அவள்தானென்று நினைத்து எங்காவது மரம் வழிய ஏறிவிடுவார்கள்.. அது பிறகு பெரிய சிக்கலாகிவிடும்.. விக்கிரமாதித்தன் பேயை மரத்தில பிடிச்ச மாதிரி கீழ நிண்டு புதுசா ஏதாவது கதை சொல்லித்தான் ஆளை கீழ கொண்டாரணும்..


அண்மையில நான் நண்பர்களோட நெடுந்தீவுக்கு இயற்கையை ரசிக்க போனபோது இரண்டாம் நாள் ஒரு பிரச்சனை வந்துவிட்டது.. யாழுக்கு வெளிநாட்டிலிருந்து வந்திருந்த இன்னொரு நண்பர் பட்டாளமொன்று , தண்ணியடிப்பதற்கு இடம் தேடித்திரிந்த போது , நாம நெடுந்தீவில காம்ப் அடிச்சிருக்கிறத , எவனோ ஆசுப்பத்திரிக்கால்வாயில பிறந்தவன் அவங்களுக்கு சொல்லிப்போட்டான்.. ஏழேட்டுக் கலரிப்போத்தலோட வந்திறங்கிவிட்டாங்கள் இம்போட்டட் குடிமக்கள் ..


என்ன செய்யுறதெண்டு பாவப்பட்டு நாம செட் செய்த இடத்த கூட்டிவந்து இருந்திட்டு , வீட்டு ஓனர் அன்டி சொன்ன கண்டிசன்களை சொன்னோம்..


“மச்சான் வீட்டில தண்ணிணடிக்கப்படாது.. இரவில சத்தம் போடப்படாது.. வெளில தண்ணி சாப்பிட்டா அமைதியா வந்து படுத்திடணும்.. “
ஆட்டினாங்களய்யா ஆட்டு தலையை எல்லாரும் ஒரேயடியா..
பலிக்கு விட்ட ஆட்டையல்லாம் லைனில விட்டு மஞ்சத்தண்ணி ஊத்தினாப்போல..
நம்பினது நம்ம பிழ ராசா..


ரெண்டு கிலோமீட்டர் தள்ளிப்போய் கடற்கரைல ஒரு ஆலமரத்தடியில பின்னெரமா உக்காந்தோம்.
நம்ம செட்டு ( அதுகள் தண்ணி தொடாத கேசுகள்..) கொஞசம் தள்ளி கடலை பாத்திட்டு இருக்க , இவங்கள் தொடங்கிட்டாங்கள் திருவிழாவை..
குடிக்கத்தொடங்கினாப்பிறகு பண்ணின ஆர்ப்பாட்டத்தில ஊர்ச்சனமும் ஈபிடிபிக்காரரும் சிஐடியளும் எண்டு மளமளவெண்டு வந்து சேந்திட்டாங்கள்.. நமக்கெல்லாம் ஒவ்வொரு CIDயும் வரும் பொது விஜய் வருமாப்போல குலைநடுங்குது துடிதுடிக்குது..
ஆனா அவங்களோ ” நாங்கள் எல்லாரும் ஒரே நாட்டின் குடிமக்கள் ” எண்டு , மொழி , அரசியல் , இனம் எல்லாம் கடந்து ப்ரெண்ட்சாயிட்டாங்கள்..
நம்ம கூட்டணி தலைல கைய வச்சவாறு இருந்துட்டு , இரவு வருவதாக கூறிவிட்டு இடம் சுற்றிப்பார்க்க புறப்பட்டுவிட்டொம்..
இரவு மறுபடி வந்து பார்த்தா , மற்ற எல்லாரும் போய்விட்டிருக்க, பாரின் ரிடேன்ஸ் எல்லாம் நிறை வெறியில் குதிரைச்சாணிக்குள் உருண்டு கொண்டிருந்தனர்..


சரி , நம்ம நம்பி வந்ததுகளை கூட்டிட்டு போவமெண்டு எல்லாரையும் கைத்தாங்கலா கூட்டிட்டு போனால் வீடு வரும் வரையும் 2 கிலோமீட்டர் தூரமும் ஒரு சத்தமும் போடாமல் வந்தாங்கள்..
எங்களுக்கும் பயங்கர சந்தோசம் “அடடா நல்ல குடிகாரர்களாயிருக்காங்களே. !.இருந்தா இப்படியிருக்கணும்! போகும் போது ஓட்டோகிராபும் வாங்கணும் எண்டு ஞாபகப்படுத்திக்கொண்டேன்.. ஆனால் எல்லாம் அந்த சொத்தை (குடிமகன் ஒருவனின் பட்டப்பெயர்) அந்த கறுத்த கிடாய் ஆட்டைக்காணும் வரைதான்..



குடி குட்டியைக் கெடுக்கும் .. 12161376021593473697lemmling_Cartoon_goat.svg.med
அடுத்தநாள் விருந்துக்கு அடிப்பதற்கென்று ஒரு ஆட்டை வாங்கி வாசலில் கட்டியிருந்தார்கள்..
முதலில் அதை ஒரு காமப்பார்வை பார்த்த சொத்தை , அதற்கு முன்னால் போயிருந்து "இந்த ஆடு கத்தும் போது என்ட அப்பப்பா மாதிரியே " குடி குட்டியைக் கெடுக்கும் .. 190இருக்கெண்டு சொல்லி ஆட்டைக்கட்டிப்பிடித்தவாறு பெருங்குரலில் கதறி அழலானான்..


அய்யய்யோ இதென்னடா இழவாப்போச்சு .. பக்கத்து வீட்ட ஓனர் அன்டி இருக்கிறாவே ! வந்தா சிக்கலாயிருக்கப்போகுதே” எண்டு நாங்கள் பதைபதைத்தோம்..
அதுக்குள்ள எம் நண்பன் கோண்டா , சொத்தைக்கு ஆட்டின் வாலைக்காட்டி "அடேய் உன்ட அப்பப்பாக்கு வால் இந்த இடத்தையோ இருந்தது " எண்டு ஒரு கேள்வியைப்போட்டான்.. கடுமையாக குழம்பிய சொத்தை “பொறு மச்சான் வாறன்” என்று சிந்தித்த கப்பில் (gap) எல்லாரையும் விறுவிறுவென்று தூக்கி உள்ளே கிடத்திவிட்டோம்..


எல்லாரும் தூங்கியாகி விட்டது.. ஒரு பதினொரு மணியிருக்கும்.. சுயிந்து (தண்ணிப்பார்ட்டி ஒருவன்) வந்து எம்மை தட்டியெழுப்பி “டேய் ஒரு பொறின் பொத்தில் இருக்கு மச்சான் வந்து ஒரு கம்பனி குடுக்கிறது “ என்று எல்லார் சாரத்தையும் உருவலானான்..
இதென்னடா மறுபடி வம்பாப்போச்சு என்று கோண்டாவை அவர்களை மேய்க்க அனுப்பிவைத்தோம்.. அவனும் அவர்களை சத்தம்போடாமல் தண்ணியடிக்க மேற்பார்வை செய்து கொண்டிருந்தான்.. நாம் மறுபடியும் தூங்கலானோம்… அப்போதான் விலங்கம் புது உருவத்தில் வந்தது..



12 மணிக்கு கிறிஸ்மஸ் கரோல் வந்து கொண்டிருந்தது.. இரு பாதிரியார்கள் , ஊர்மக்கள்; கொஞ்சம் , ஒரு கிறிஸ்மஸ் பாப்பா எண்டு தாரை தப்பட்டைகள் முழங்க ஒரு கேட்டுக்கேள்வியின்றி படலையை திறந்து கொண்டு உள்ளேயே வந்து விட்டார்கள்..


என்னடா பிரச்சனை என்று வாசலுக்கு வந்த கோண்டா , கூட்டத்தை கண்டு திக்கித்து நின்றவேளை , கரோல்சை வரவேற்று டீ கொடுப்பதற்காக அன்டி நம் வீடு நோக்கி வருவதை கண்டதும் , “டேய் ! அன்டி வாறா ! எல்லாத்தையும் தூக்கி ஒளியுங்கடா” என்று அலறினான்..


அவன் கத்தின கத்தலில நாங்களும் எழும்பி தண்ணியடிக்கிற பக்கம் ஓடினால் தண்ணிச்சாமான் எல்லாம் அதிலயே கிடக்கு .. ஆக்களைக்காணம்.. என்னடா வெண்டு பாத்தால் பின் வளவுக்குள , ஒருத்தன் கறிச்சட்டியை தூக்கிட்டு ஓட அவனுக்கு பின்னால மிச்ச எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது.. வாய்க்குள் வந்த வார்ததையெல்லாவற்றாலும் திட்டியபடி நாம் எல்லாவற்றையும் எடுத்து ஒளிக்கையில் , சேந்தன் குடிமக்களை பிடித்து இழுத்து வந்து விட்டான்..


குடி குட்டியைக் கெடுக்கும் .. Pc046-cartoon-priest-clipartவந்த பாதிரியார்களில் ஒருவர் எல்லாரையும் பார்த்துவிட்டு ஏதோ தண்ணி தெளித்தார்.. பிறகு கைகொடுத்தார்.. அப்போது திடீரென்று உணர்ச்சிவசப்பட்ட சொத்தை , அவரை கட்டிப்பிடிச்சு “பாதர் பாதர் என்ட அப்பப்பாவுக்கு ஆமீன் குடுங்க பாதர்” எண்டு கத்த ஏனைய குடிமக்களெல்லாம் பாய்ந்து பாதர்களை கட்டிப்பிடித்து அழுதவாறு பிழிய ஆரம்பித்தனர்..


பயந்து போன நாம் நடுவில புகுந்து அவர்களை விலக்கி விட்டோம் (சொத்தை 6.3 அடி உயரம் 110 கிலோ , சுயிந்து ஆறடி 103 கிலோ ; இன்னொரு ஒரு பத்து செக்கன் விட்டிருந்தா பாதர் பாக்குவெட்டில அம்பிட்ட பலாக்கொட்டையாகியிருப்பார் )


விக்கித்து முழித்த அந்த குள்ள பாதர் கேட்டார்.. (சற்றேனும் மாற்றப்படவில்லை)
“பக்தர்களே .. உங்கள் அனைவரிலும் பட்டை சாராயம் மணக்கிறதே.. அது என்ன ரகசியம்? “
குறைக்கண்ணால் பார்த்தபடி குழறும் நாக்குடன் சொத்தை சொன்னான்
“ அது ஒரு பரம ரகசியம் பாதர்..”



உப்படி ஒரு சம்பாசணையை கேட்ட நான் நான் என்ன றியக்சன் குடுப்பது என்று தெரியாமல் விழிக்க , “நான் உங்களுக்கு காதில சொல்லுறன் பாதர் ” என்ற படியே பாதரை நோக்கி முன்னேறினான் சொத்தை..


குளோக்கை தூக்கிப்பிடித்துக்கொண்டு பாதர் ஓடிய ஓட்டம் இன்னும் கண்முன் நிற்கிறது..


சரி விடயத்துக்கு வருவோம்.. குடி பிள்ளை பாக்கியத்தையும் பாதிக்குதாம்.. புதுசா ஒருத்தன இந்த உலகத்துக்கு கொண்டு வந்து அவனையும் ஏன் கஸ்டப்படவேணும் எண்டு நினைக்கிறாக்கள் நன்கு குடிக்கவும்.. குடியால நரம்புத்தளர்ச்சி அது இது என்று ஏராளமான மூளை சம்பந்தப்பட்ட பல வியாதிகளும் வருமாம்..


வீட்டில பிரச்சனை , பேசனாலிட்டியில் தாக்கம் என்று மனவியல் பாதிப்புகளும் வருமாம்..



முடிவா சொல்லுறது என்னண்டா , மொத்தத்தில குடிக்காதவனுக்கு குடிகாரங்க ஒரு கோமாளிதான்.. உங்க ரகசியம் எல்லாம் அறிஞ்சு அதை நினைச்சு உள்ள சிரிச்சிட்டிருப்பாங்க.. ஆகவே கவனம்.. குடிக்காதவங்களை தவிர்க்கிறதிலும் பாக்க குடியை தவிர்க்கலாம்தானே? புகை போதை மாது போன்ற கெட்ட பழங்கங்களுக்குள் பிரவேசிப்பதற்கு முதலாவது படிக்கல் குடி என்பது என் கருத்து..


உங்க பிள்ளைகளுக்கு சின்ன வயதில அப்பாதான் ஹீரோ.. ஹீரோவே தண்ணியடிச்சா ? அம்மா ஓடி வந்து “மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு” எண்டு சப்டைட்டில் போடமுடியாதுதானே? யோசிச்சு பாருங்க ..


ஆகவே இன்னும் நீங்க குடிக்க ஆரம்பிக்காதவரா இருந்தீங்கன்னா என் சொல்லை கேளுங்க.. தற்போது குடிப்பவர்கள் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்க..

குடி குட்டியைக் கெடுக்கும் .. Male-infertility


தவறினால் பிற்காலத்தில மனுசி பொட்டைப்பயலே என்று பேசும் போது குடி குட்டியை (குழந்தையை) கெடுக்கும் என்று நான் எழுதியதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்க்கவேண்டி வரலாம்.. :P வர்ட்டா !


ariyalion.blogspot.com




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 25, 2010 10:26 am

இந்த குடியால எத்தனை குடும்பங்கள் சீர்ரழிகின்றது!



குடி குட்டியைக் கெடுக்கும் .. Riki
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2010 10:53 am

குடி குட்டியைக் கெடுக்கும் .. 56667 அது என்ன குட்டியை கெடுக்கும் ???

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 25, 2010 11:38 am

Kraja29 wrote:குடி குட்டியைக் கெடுக்கும் .. 56667 அது என்ன குட்டியை கெடுக்கும் ???

தல தலதான் ,

குடி குட்டியை கெடுக்குமா. குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589 குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589 குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589 குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2010 12:32 pm

வை.பாலாஜி wrote:
Kraja29 wrote:குடி குட்டியைக் கெடுக்கும் .. 56667 அது என்ன குட்டியை கெடுக்கும் ???

தல தலதான் ,
குடி குட்டியை கெடுக்குமா. குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589 குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589 குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589 குடி குட்டியைக் கெடுக்கும் .. 502589

பின்ன, மற்றவங்க நம்மள தப்பா நினைச்சுக்க கூடாது இல்லியா பாலாஜி

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 12:34 pm

முடிவா சொல்லுறது என்னண்டா , மொத்தத்தில குடிக்காதவனுக்கு குடிகாரங்க ஒரு கோமாளிதான்.. உங்க ரகசியம் எல்லாம் அறிஞ்சு அதை நினைச்சு உள்ள சிரிச்சிட்டிருப்பாங்க.. ஆகவே கவனம்.. குடிக்காதவங்களை தவிர்க்கிறதிலும் பாக்க குடியை தவிர்க்கலாம்தானே? புகை போதை மாது போன்ற கெட்ட பழங்கங்களுக்குள் பிரவேசிப்பதற்கு முதலாவது படிக்கல் குடி என்பது என் கருத்து..

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 25, 2010 12:39 pm

குடி குட்டியைக் கெடுக்கும் .. 677196 குடி குட்டியைக் கெடுக்கும் .. 677196 குடி குட்டியைக் கெடுக்கும் .. 677196



குடி குட்டியைக் கெடுக்கும் .. Uகுடி குட்டியைக் கெடுக்கும் .. Dகுடி குட்டியைக் கெடுக்கும் .. Aகுடி குட்டியைக் கெடுக்கும் .. Yகுடி குட்டியைக் கெடுக்கும் .. Aகுடி குட்டியைக் கெடுக்கும் .. Sகுடி குட்டியைக் கெடுக்கும் .. Uகுடி குட்டியைக் கெடுக்கும் .. Dகுடி குட்டியைக் கெடுக்கும் .. Hகுடி குட்டியைக் கெடுக்கும் .. A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2010 12:40 pm

யுவா wrote:முடிவா சொல்லுறது என்னண்டா , மொத்தத்தில குடிக்காதவனுக்கு குடிகாரங்க ஒரு கோமாளிதான்.. உங்க ரகசியம் எல்லாம் அறிஞ்சு அதை நினைச்சு உள்ள சிரிச்சிட்டிருப்பாங்க.. ஆகவே கவனம்.. குடிக்காதவங்களை தவிர்க்கிறதிலும் பாக்க குடியை தவிர்க்கலாம்தானே? புகை போதை மாது போன்ற கெட்ட பழங்கங்களுக்குள் பிரவேசிப்பதற்கு முதலாவது படிக்கல் குடி என்பது என் கருத்து..

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஹா ஹா ஹா .... எங்கள பொறுத்த மட்டும் குடிக்காதவங்க தான் கோமாளிங்க .

நான் கேட்குறது என்னன்னா , "குடி எப்படி குட்டியை கெடுக்கும்" என்று தான்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 12:41 pm

சுதா மதிய வணக்கம். நலமா.

குடி குட்டியைக் கெடுக்கும் .. 677196

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Jan 25, 2010 12:44 pm

குடி குட்டியைக் கெடுக்கும் .. Anidrink-boyகுடிக்காதிங்க....குடி குட்டியை மட்டுமில்லை குடும்பத்தையும் கெடுக்கும்......நன்றி..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக