Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதைby ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடற்பயிற்சியின் நன்மைகள்
2 posters
Page 1 of 1
உடற்பயிற்சியின் நன்மைகள்
நவீனத்தின் எதிரொலியாக உடல் இயக்கம் குறைந்துள்ள இந்த நேரத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உடல் மற்றும் மனநிலையை சரியாகப் பராமரிக்க தினமும் 30 நிமிடமாவது லேசான நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
ஏனெனில் உடற்பயிற்சி செய்தாலும் இக்கால உணவுப்பழக்கவழக்கம், சுற்றுச்சூழல் பல்வேறு நோய்களை உண்டுபண்ணுகிறது. எனினும் சில நோய்கள் வராமல் தடுக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
உடல் பருமன் என்ற பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ள நிலையில் உடற்பயிற்சியின் அவசியத்தை பலரும் இன்று உணர்ந்துள்ளனர்.
ஜிம்முக்கு செல்ல வேண்டுமா?
உடற்பயிற்சி என்றவுடன் ஜிம்முக்கு எல்லாம் சென்று தினமும் மணிக்கணக்கில் கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. லேசான உடற்பயிற்சி போதுமானது.
காலை எழுந்தவுடன் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள திறந்தவெளி, பசுமை நிறைந்த இடங்களில் நடைப்பயிற்சி செய்யலாம். அரை மணி நேரம் நடப்பதே போதுமானது.
அதுபோல காலையில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நேரம் கிடைக்கும்போது, ஆனால் வெறும் வயிற்றில் நடக்க வேண்டும்.
நன்மைகள் என்னென்ன?
உடல் பருமன் பிரச்னைக்கு எளிதான தீர்வு உடற்பயிற்சி. ஏனெனில் உடல் பருமனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. அதன் எதிரொலியாக உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன.
மேலும் உடற்பயிற்சி செய்வதால் பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், பயம், மன அழுத்தம், சிலபுற்றுநோய்கள், முடக்குவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இருந்து காக்கிறது.
உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைப்பதாக பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
நீண்ட ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
உடல் உறுப்புகள் புத்துணர்வு அடைவதால் உங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.
நினைவாற்றலை மேம்படுத்தும்.
தசைகள், எலும்புகள் பலப்படும்.
உடற்பயிற்சி செய்வதால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். அழகு என்பதைத் தாண்டி நீங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உடற்பயிற்சியின் நன்மைகள்
அருமையான பதிவு.
அதன்படி உடல் பயிற்சி செய்ய ஆசைதான்.
முடிவதில்லை என்பதுதான் நிதரிசனம்
அதன்படி உடல் பயிற்சி செய்ய ஆசைதான்.
முடிவதில்லை என்பதுதான் நிதரிசனம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: உடற்பயிற்சியின் நன்மைகள்
உடற்பயிற்சிக்குப் பின் உண்ண வேண்டிய உணவுகள்.
ஆரோக்கியமான தசைகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் கலோரிகளை குறைத்தால் மட்டும் போதாது. அத்துடன் ஆரோக்கியமான உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியது அவசியம். ஒருவர் விரும்பிய இலக்கை அடைவதற்கு வழக்கமான உடற்பயிற்சிகளுடன், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகச் செயல்பட டயட்டும் வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு அதிக முயற்சி தேவை. அதைத் தொடர்ந்து செய்வதற்கு நம்மை நாமே ஊக்குவிக்க வேண்டும்.
உணவுகள் என்று வரும் போது, உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடும் உணவுகள் தசையைச் சரிசெய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்த பின்னர் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், அது கடுமையான உடற்பயிற்சியால் தசையில் ஏற்பட்ட மாறுபாடுகளை சரிசெய்து, தசை வலியைக் குறைத்து மறுநாள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ப உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.
பலரும் உடற்பயிற்சிக்கு பின் புரோட்டின் பார்கள் மற்றும் புரோட்டின் ஷேக்குகளைச் சாப்பிடுவது மட்டுமே சிறந்தது என்று நம்புகின்றனர். ஆனால், இதைவிடச் சிறந்த உணவுகளும் உள்ளன. அந்த உணவுகளை உட்கொண்டால், தசை மாறுபாடுகள், காயங்கள் விரைவில் குணமாவதோடு, உடலுக்குப் போதுமான ஊட்டச்ச்ததுக்கள் கிடைத்து உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைகள்
முட்டைகளில் புரோட்டின் அதிகம் நிறைந்துள்ளது. எனவே, உடற்பயிற்சி செய்த பின் மூன்று முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம், தசைகளில் ஏற்பட்ட காயங்கள் விரைவில் சரியாகும். மேலும் முட்டையில் வைட்டமின் ஏ, டி, ஈ, பி 12, பி 6 மற்றும் கே போன்ற வைட்டமின்களும் உள்ளன.
பனீர்
பன்னீரில் இரண்டு வகையான புரோட்டின்கள் உள்ளன. அவை வே மற்றும் கேசீன். இதில் வே புரோட்டின் உடற்பயிற்சிக்குப் பின் தசைகளை விரைவில் குணப்படுத்தம் திறனுக்கான நன்கு அறியப்பட்டதாகும். கேசீர், என்பது மெதுவாகச் செயல்படும் புரோட்டின். நாம் தூங்கும்போது, இது நம் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களைக் குணப்படுத்தும். எனவே, நீங்கள் உடற்பயிற்சிக்குப் பின் சுவையான உணவை உட்கொள்ள நினைத்தால், பனீரைச் சாப்பிடுங்கள்.
மீன்கள்
மீன்கள் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக, சால்மன் மீன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி, இதில் புரோட்டின், வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்றவையும் அதிகம் உள்ளன. ஒமேகா-3 உடலில் உள்ள காயங்களைக் குறைக்கும். கூடுதலாக இதில் உள்ள பொட்டாசியம், உடற்பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மாற்ற உதவும். சால்மன் மீனில் புரோட்டின் அதிகம் இருப்பதால், உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகளை சரிசெய்ய மற்றும் மீண்டும் உருவாக்க உதவுகிறது. நம் ஊர் மீன் என்றால் வஞ்சிரம் சாப்பிடலாம்.
நட்ஸ்
நட்ஸ்களில் அத்தியாவசிய ஊட்டச்சதுக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு கையளவு பாதாம், வால்நட்ஸ் அல்லது முந்திரியை உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான புரோட்டின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்களை வழங்கும். வேண்டுமெனில் பூசணிக்காய் விதை, சூரியகாந்தி விதை, சியா விதை போன்றவற்றையும் உடற்பயிற்சிக்குப் பின் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம்.
சிறுதானியங்கள்
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டின்கள் என உடற்பயிற்சிக்குப் பின் தேவையான இரண்டு சத்துக்களையும் கொண்ட முழு தானியங்கள்தான் சிறுதானியங்கள். குறிப்பாக, தினை. தாவர அடிப்படையிலான புரோட்டினைக் கொண்ட தினை, அதிகளவு ஊட்டச்சத்துக்களைக் கொண்டதுடன், க்ளுட்டன் இல்லை. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைப் பராமரிக்க விரும்புவோருக்கு ஏற்ற உணவுப் பொருள். உங்கள் உணவில் புரோட்டின் அதிகம் சேர்க்க நினைத்தால், மீன், சிக்கன், பழங்கள் அல்லது காய்கறிகளுடன், தினையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதோடு, இதில் நல்ல அளவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது மற்றும் இதை உடற்பயிற்சிக்கு பின் சாப்பிட்டால் உடற்பயிற்சியின் போது இழந்த ஆற்றலைப் பெற உதவும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
உடற்பயிற்சிக்குப் பின் எக்காரணம் கொண்டும் உப்பு நிறைந்த உணவுகள், எனர்ஜி அல்லது புரோட்டீன் பார்கள் போன்ற செயற்கைச் சுவையூட்டிகள் நிறைந்த உணவுகளை உண்ணக்கூடாது. இல்லாவிட்டால், இது உங்களின் ஃபிட்னஸ் பயணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சோடா அல்லது எனர்ஜி பானங்களுக்கு பதிலாக, இளநீர் அல்லது வெறும் நீரைக் குடிக்கலாம்.
Similar topics
» உடற்பயிற்சியின் பலன்கள்
» விளாம்பழத்தின் நன்மைகள் !
» உடற்பயிற்சியின் முக்கியத்துவ
» நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வழிகள்!
» விளாம்பழத்தின் நன்மைகள் !
» உடற்பயிற்சியின் முக்கியத்துவ
» நோய் இல்லாமல் வாழ உடற்பயிற்சியின் அவசியம்
» உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வழிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|