புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்? Poll_c10மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்? Poll_m10மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்? Poll_c10 
75 Posts - 60%
heezulia

32 Posts - 26%
mohamed nizamudeen

5 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

70 Posts - 60%

30 Posts - 26%

2 Posts - 2%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2023 8:19 pm

மனித ‘பட்டிகள்’... அவிழும் பணமூட்டைகள்... பறக்கும் புகார்கள்... என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்? Vikatan%2F2023-02%2F8eb6f1c4-caf9-4292-b295-ddae96c70656%2F63ef14dba6b85.jpg?auto=format%2Ccompress&format=webp&dpr=1

தி.மு.க-வின் அடாவடி, வாக்காளர்களோடு நின்றுவிடவில்லை. ‘அ.தி.மு.க-காரங்க கேட்டால் பந்தல், விளக்கு, ஏன்... தீப்பந்தம்கூட கொடுக்கக் கூடாது’ என உள்ளூர் லைட்-சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு ‘அன்பு’ கட்டளை போட்டிருக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

ஜெயித்தே ஆக வேண்டும் என ஆட்டத்தைத் தொடங்கிய எடப்பாடி, இரண்டாம் இடமே போதும் எனத் தன் வியூகத்தை மாற்றியிருக்கிறார். வெற்றிக் கணக்கோடு பெட்டியைத் திறந்தவர், தி.மு.க-வின் மூட்டைகளைப் பார்த்துத் திகைத்துப்போய் பின்வாங்கியிருக்கிறார். “அதிக வித்தியாசத்தில் ஜெயிக்காவிட்டால் தொலைத்துவிடுவேன்...” என்று தி.மு.க-வினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமை காட்டியதால், கடந்த 72 மணி நேரத்தில் தேர்தல் களத்தின் தட்பவெப்பமே முற்றிலுமாக மாறிப்போயிருக்கிறது!

ஆடு மாடுகளை அடைத்துவைப்பதுபோல, வாக்காளர்களை ஷாமியானா பந்தல்களிலும், கொட்டகைகளிலும், திருமண மண்டபங்களிலும் அடைத்துவைத்து மிக மோசமாக ‘மனித பட்டி’களைத் தி.மு.க - அ.தி.மு.க-வினர் உருவாக்கியிருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. வாக்கு சேகரிக்கக்கூட வீடுகளில் வாக்காளர்கள் இல்லாததால், பூட்டிய வீடுகளின் முன்பு பேசிவிட்டுச் செல்கிறார்கள் எதிர்க்கட்சியினர். சாப்பாடு, சரக்கு, பணம் எனத் தொகுதிக்குள் இருக்கும் 238 பூத்களிலும் ‘திருவிழா’தான். பணமழைப் புகார்கள், தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுகள் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தினமும் குறைந்தது 20 புகார்கள் பறக்கின்றன. நாளுக்கு நாள் ‘உத்திகள்’ என்கிற பெயரில், அநாகரிகக் காட்சிகள் அரங்கேறுவதால், ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்னவாகும்?’ என்கிற முக்கியமான கேள்வி எழுந்திருக்கிறது.

மூன்று வேளை சாப்பாடு... போரடித்தால் ‘உதயநிதி’ படம்...

வார்டுக்கு வார்டு மனித ‘பட்டிகள்’

காலை 7 மணிக்கெல்லாம், ‘ஓடிவருகிறான் உதயசூரியன்...’ பாடலைத் தேர்தல் பணிமனைகளில் ஒலிக்கவிட்டுவிடுகிறார்கள் தி.மு.க-வினர். பாடல் ஒலிக்கும்போதே, தொகுதிக்குள்ளிருக்கும் வார்டுகளில் லாரிகள் வரிசைகட்டுகின்றன. அவற்றில், வாக்காளர்களை மந்தை மந்தையாக ஏற்றிச் சென்று பெரிய கொட்டகைகளில் அமரவைத்துவிடுகிறார்கள். அங்கேயே மூன்று வேளைச் சாப்பாடு, அவ்வப்போது டீ, காபி, ஜூஸ், மோர் வகைகள் பரிமாறப்படுகின்றன. வாக்காளர்களுக்கு போரடித்தால், பெரிய திரைகளில் சினிமாப் படங்களும் திரையிடப்படுகின்றன. சில இடங்களில் கரகாட்டம். வாக்கு சேகரிக்க எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும் வீதி வீதியாக நடந்தால்கூட, வாக்காளர்கள் இருப்பதில்லை.

நம்மிடம் பேசிய கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் சிலர், “2009-ம் ஆண்டு நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, பணம், பரிசுப்பொருள்களை மழையாகப் பொழிந்து ‘திருமங்கலம் ஃபார்முலா’-வை அறிமுகப்படுத்தினார்கள் தி.மு.க-வினர். இப்போது, ஈரோடு கிழக்கில் ஒருபடி மேலே சென்று, வாக்காளர்களைக் குத்தகைக்கே எடுத்துவிட்டார்கள். வாக்கு சேகரிக்க நாங்கள் தெருவுக்குள் நுழைந்தால், அங்கு மக்களே இருப்பதில்லை. காலை 8 மணிக்கெல்லாம் வாக்காளர்களைக் கொத்து கொத்தாக லாரிகளில் ஏற்றிச் செல்லும் தி.மு.க நிர்வாகிகள், திருமண மண்டபம், காலி இடங்களில் கொட்டகை அமைத்து, அதில் வாக்காளர்களை அடைத்துவைத்துவிடுகிறார்கள். வார்டுக்கு வார்டு இதுபோன்ற மனிதப் பட்டிகளை அமைத்திருக்கிறது ஆளுங்கட்சி.

அந்த மனிதப் பட்டிகளில், வாக்காளர்களுக்கு 500 ரூபாயுடன் காலை உணவு வழங்கப்படுகிறது. பெரிய திரையில் உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’ படங்களைத் திரையிடுகிறார்கள். படங்களைத் திரையிடும் பொறுப்பை வடமாவட்ட அமைச்சர் ஒருவர்தான் ஏற்றிருக்கிறார். முதல் படம் முடிந்தவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு மீண்டும் ஒரு படம். இடையிடையே ‘டீ, ஸ்நாக்ஸ்’ கொடுக்கிறார்கள். இரவு 8 மணிக்கு மேல், மீண்டும் 500 ரூபாய் கொடுத்து, ‘குடிமகன்’களுக்குச் சரக்கு பாட்டிலையும் திணித்து, மனிதப் பட்டியிலிருந்து விடுவிக்கிறது தி.மு.க. இந்தக் கேடுகெட்ட செயலுக்கு முதல்வரின் பொறுப்பிலிருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுத்து நிற்பதுதான் வெட்கக்கேடான விஷயம்.

ஷாமியானா பந்தலுக்குத் தடை... வேட்பாளர் வரும்போது டூர்!

சில இடங்களில், வாக்காளரின் பெயர் உள்ளிட்ட தகவல்களுடன் ஐ.டி கார்டுகளை தி.மு.க-வினர் அச்சிட்டுள்ளனர். அதைக் கொடுத்துவிட்டு மனிதப் பட்டிகளுக்குள் செல்ல வேண்டும். வெளியே வந்ததும், பணத்துடன் ஐ.டி கார்டும் திருப்பியளிக்கப்படும். அடுத்த நாள் வரும்போது, அதே முறை தொடரும். ஒவ்வொரு நாள் வரும்போதும் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவுசெய்துகொள்கிறார்கள். ஒருவேளை வாக்காளர்கள் வரவில்லையென்றால், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மூலமாக வாக்காளர்களைத் தொடர்புகொண்டு கட்டாயப்படுத்தி அவர்களை வரவழைத்துவிடுகிறார்கள்.

தி.மு.க-வின் அடாவடி, வாக்காளர்களோடு நின்றுவிடவில்லை. ‘அ.தி.மு.க-காரங்க கேட்டால் பந்தல், விளக்கு, ஏன்... தீப்பந்தம்கூட கொடுக்கக் கூடாது’ என உள்ளூர் லைட்-சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு ‘அன்பு’ கட்டளை போட்டிருக்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள். வேறு வழியில்லாமல் கோவை, திருப்பூர் பகுதியிலிருந்துதான் ஷாமியானா பந்தலை வரவழைத்துப் பயன்படுத்துகிறோம். அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு பிரசாரம் செய்யும் இடத்திலிருக்கும் மக்களை, அவர் வரும் நேரத்தில் மட்டும் கொடிவேரி, பவானி என ஒரு நாள் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். ஆளுங்கட்சி அமைத்திருக்கும் 120 தேர்தல் பணிமனைகளிலும் விதிமீறல்கள் தாண்டவமாடுகின்றன. தேர்தல் ஆணையத்திடமும், காவல்துறையிடமும் தினமும் புகாரளிக்கிறோம். ஆனால், துரித நடவடிக்கை ஏதுமில்லை. இது போன்ற ஜனநாயகப் படுகொலை உலகத்தில் எங்கும் நடக்க வாய்ப்பே இல்லை” என்றனர் ஆக்ரோஷமாக.

பிப்ரவரி 15-ம் தேதி, எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்குச் சென்றிருந்தபோது, அவர் பிரசாரத்துக்கே ஆள் திரட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோபத்தில்தான், ‘மீசைவைத்த ஆம்பளையாக இருந்தால்... வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால்... வாக்காளர்களை வெளியேவிட்டு வாக்கு சேகரியுங்கள்’ என்று தி.மு.க-வினரை ஏக வசனத்தில் வறுத்தெடுத்திருக்கிறார் எடப்பாடி.

அவிழ்க்கப்படும் பணமூட்டைகள்... கேலிக்கூத்தான ஜனநாயகம்!

ஆரம்பத்தில் தி.மு.க-வுக்கு இணையாக அ.தி.மு.க செலவு செய்தது. ஆனால், அந்தச் செலவை இப்போது குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “அ.தி.மு.க தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றிருந்த முக்கியமான 40 பொறுப்பாளர்களிடம் தேர்தல் செலவுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களிடமிருந்து இந்நேரம் 40 ஸ்வீட் பாக்ஸுகள் வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 16 ஸ்வீட் பாக்ஸுகள் மட்டுமே வந்திருக்கின்றன. ‘சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்துவிட்டோம். இப்போதைக்கு எங்ககிட்ட காசு இல்லைண்ணே’ என வெளிப்படையாகக் கைவிரித்துவிட்டார்கள் பொறுப்பாளர்கள்.

தொகுதிக்குள்ளிருக்கும் அ.தி.மு.க வட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோர் தேர்தல் பணிக்கு வருவதே இல்லை. உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகளில் பெரும்பாலானோரை ‘பேக்கேஜ்’ பேசி, விலைக்கு வாங்கிவிட்டது தி.மு.க. வெளியூரிலிருந்து வந்திருக்கும் கழக நிர்வாகிகள்தான் தேர்தல் பணியாற்றுகிறார்கள். தொகுதியில் 238 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. ஒரு வாக்குச் சாவடிக்கு, நாளொன்றுக்கு லட்சங்களில் செலவு செய்கிறது தி.மு.க. ஆனால், நாங்கள் 20,000 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறோம். இந்தக் கணக்கின்படி பார்த்தால், நாளொன்றுக்கே கோடிகளை வாரி இறைக்கிறது ஆளுங்கட்சி. அவ்வளவு தொகைக்கு நாங்கள் எங்கே போவோம்?

இவ்வளவு நாள் மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத தி.மு.க-வினர், இப்போது வார்டுகளில் லைட், தண்ணீர்க் குழாய் இல்லை எனப் புகாரளித்தால், அடுத்த நிமிடம் அதைச் சரிபண்ணுகிறார்கள். வடமாவட்ட அமைச்சர் ஒருவர் பிரசாரத்துக்குச் சென்றபோது, ‘எனக்கு 21,000 ரூபாய் பணம் கட்டாததால் என்.ஓ.சி சர்டிஃபிகேட் கிடைக்கவில்லை’ எனப் பெண் ஒருவர் கூற, உடனடியாகத் தன் இடுப்பில் சொருகிவைத்திருந்த பணக்கட்டை அப்படியே எடுத்து அந்தப் பெண்ணிடம் திணித்தார் அமைச்சர். பணத்தை இடுப்பில் சொருகிக்கொண்டு அலையும் தி.மு.க-வினர், ஈரோட்டில் பணமூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, வாக்காளர்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்து, இந்தத் தேர்தலையே கேலிக்கூத்தாக்கிவிட்டார்கள்.

பறக்கும் புகார்கள்... என்னவாகும் இடைத்தேர்தல்?

உண்மையில், ஆளுங்கட்சியின் பணபலத்துக்கு ஈடாக அ.தி.மு.க தொண்டர்களால் நின்று போராட முடியவில்லை. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களில் தி.மு.க-வின் பணப் பாய்ச்சல் அதிரடியாக அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு இணையாக அ.தி.மு.க தலைவர்கள் நினைத்தால் ‘ஃபைட்’ கொடுக்க முடியும்தான். ஆனால், ‘இது எடப்பாடி தன்னை ஆளுமையாக நிலைநிறுத்த வேண்டிய தேர்தல். அதற்கு அவர்தானே அதிக செலவு செய்ய வேண்டும்... நாங்கள் ஏன் எங்கள் மூட்டையை அவிழ்க்க வேண்டும்...’ எனக் கட்சி சீனியர்கள் நினைக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க-வின் தேர்தல் பணி சுணங்கிவிட்டது. இந்தச் சூழலில், ஆளுங்கட்சியின் அதீதப் பணப் பட்டுவாடா புகாரைப் பெரிதாக்கி, ஈரோடு இடைத்தேர்தலையே ரத்து செய்யவைக்க வியூகம் வகுக்க ஆரம்பித்திருக்கிறார் எடப்பாடி. தினமும் தேர்தல் ஆணையத்துக்கு இது குறித்த புகார்கள் அனுப்பப்படுகின்றன. ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோரிடம் அதற்கான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார் எடப்பாடி” என்றனர் விரிவாக.

அ.தி.மு.க-வினர் சொல்வதும், களத்திலிருந்து நமக்கு வரும் தகவல்களும் புகைப்படங்களும் வீடியோக்களும் ஒத்துத்தான் போகின்றன. சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிலோ கறியை இலவசமாக அளித்திருக்கிறார் ‘கல்வீச்சு’ அமைச்சர். சில இடங்களில், பட்டுப் புடவை, எவர் சில்வர் குடம் போன்ற பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை எல்லாமே டிரெய்லர்தானாம். தேர்தல் நெருக்கத்தில், குத்துவிளக்கு, கம்மல், மூக்குத்தி கொடுத்து வாக்காளர்களிடம் மேஜிக் காட்டத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இதற்காக இப்போதே மும்பையிலுள்ள ஒரு நிறுவனத்திடம் ஆர்டர் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பெயர் குறிப்பிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் பேசிய தி.மு.க கூட்டணியின் சீனியர் நிர்வாகி ஒருவர், “இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரைத் தவிர, இதர வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்க வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறது அறிவாலயம். பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை, வாக்காளர்களின் கை விரல்களைவிட அதிக எண்ணிக்கையில் ரோஸ் மில்க் தாள்களை வழங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வாக்குப் பதிவுக்கு முன்னதாக, தனியாகப் பத்து கரும்பச்சைத் தாள்களை வழங்கவும் திட்டமிருக்கிறது. ஆக, ஒரு ஓட்டுக்கு மொத்தமாக 15 ரோஸ் மில்க் தாள்கள் வழங்க இலக்கு வைத்திருக்கிறது ஆளுங்கட்சி. முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு வரும்போது, ஒரு லட்சம் பேரைத் திரட்டி பிரமாண்டக் கூட்டம் நடத்தவும் தீவிரமாகிறார்கள். அன்றைக்கு வாக்காளர்களுக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பும் உண்டு” என்று கண்சிமிட்டினார்.

“தூங்கும் தேர்தல் ஆணையம்!”

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி, மாநில, இந்திய தேர்தல் ஆணையர் எனப் பல்வேறு படிநிலை நிர்வாகத்துக்கும் புகார்களைப் பறக்கவிடுக்கிறது அ.தி.மு.க. குறிப்பாக, ‘வாக்காளர் பட்டியலிலுள்ள பல வாக்காளர்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லை. இறந்தவர்கள் பெயர்கள்கூட வாக்காளர் பட்டியலில் இருக்கின்றன. சுமார் 40,000 வாக்குகள் மோசடியாக இருக்கின்றன’ என டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகாரளித்திருந்தார். இதையடுத்துதான், ஈரோட்டில் அனுமதியின்றி இயங்கிய தி.மு.க-வின் 10 பணிமனைகள், அ.தி.மு.க-வின் 4 பணிமனைகளுக்கு சீல் வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இது தொடர்பாக ‘நாம் தமிழர் கட்சி’யின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பேசினோம். “தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் இரு கட்சிகளும் எந்த அளவுக்குக் கொள்ளை அடித்தன என்பதை இந்த இடைத்தேர்தல் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் கொடுத்த காலம் போய், வாக்காளர்களையே ஆடு, மாடுகளைப்போல லாரியில் ஏற்றி மனிதப் பட்டியில் அடைக்கிறார்கள். பகலிலேயே வாக்கு சேகரிக்கத் தெருவுக்குள் சென்றால், ஆளே இல்லை. ஆள் இருந்தால்தானே வாக்கு சேகரிக்க முடியும்... ஆட்களைப் பணம் கொடுத்து, கடத்திக் கொண்டுபோய் அடைத்து வைப்பதில் தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான். தி.மு.க 1,000 பேரை லாரியில் ஏற்றுகிறது என்றால், அ.தி.மு.க 200 பேரை ஏற்றுகிறது. அவ்வளவுதான். அதனால்தான், அவர்கள் அடைத்துவைத்திருக்கும் இடத்துக்கே சென்று நாங்கள் வாக்கு கேட்டுவருகிறோம்.

ஈரோடு முழுக்க இரண்டு கட்சிகள் சார்பிலும் அனுமதியில்லாமல் பணிமனைகள் இயங்குகின்றன. அவை பணிமனை இல்லை... ‘Money’மனை. இரு கட்சிகளும் இதுவரை 50 கோடிகளாவது செலவு செய்திருப்பார்கள். வாக்காளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களைப் போட்டுக்காட்டும் தி.மு.க-வினர், பிபிசி-யின் ஆவணப்படத்தைப் போட்டுக் காண்பிப்பார்களா... தேர்தல் மூலமாக ஜனநாயகம் மலரும் என்பதற்கான அறிகுறியே அங்கு இல்லை. அங்கு நடக்கும் மனித உரிமை, தேர்தல் விதி மீறல்களையெல்லாம் தேர்தல் ஆணையம் வாய் மூடி வேடிக்கை பார்க்கிறது. தேர்தல் பறக்கும் படை, மரத்தடியில் ‘படுத்து உறங்கும் படை’யாகவே இருக்கிறது. இப்படியோர் இடைத்தேர்தலை நடத்துவதற்கு, பேசாமல் ஏலம் விட்டுவிடலாம்” என்றார் காட்டமாக.

“ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் நாற்காலியை வைத்து பெரும் அரசியல் சூதாட்டம் நடக்கிறது ஈரோடு கிழக்கில். தமிழ்நாட்டின் பல பிரச்னைகளைச் சரிசெய்ய ஆகும் செலவை, ஒரு தொகுதியின் வாக்காளர்களை மூளைச்சலவை செய்ய வாரி இறைக்கின்றன கட்சிகள். பணம், மனித உரிமை மீறல், தேர்தல் விதிமுறை மீறல், அடிப்படை அரசியல் அறம்கூட இல்லாத அநாகரிகக் களமாக மாறியிருக்கிறது ஈரோடு கிழக்கு” என்று கொதிக்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். ‘குவியும் புகார்களால், நியாயமற்ற கள நிலவரத்தால், எந்தச் சூழலிலும் தேர்தல் ரத்தாகலாம்’ என்கின்றன எதிர்க்கட்சிகள். ‘வாய்ப்பே இல்லை... நாங்கள்தான் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெல்லப்போகிறோம்’ என்கிறது தி.மு.க கூட்டணி வட்டாரம். ‘நம்மையும், நம் சுயமரியாதையையும் சில ரூபாய்த் தாள்களுக்கு விற்கிறோம்’ என்பதை உணராமல், மனிதப் பட்டியில் சென்று வாக்காளர்கள் அமர்வது கொடூரம். கட்சிகள் தங்களைத் திருத்திக்கொள்கின்றனவோ இல்லையோ... வாக்காளர்களின் மனநிலை மாற வேண்டும்!

விகடன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 19, 2023 4:59 pm

" விதிமீறல் குற்றச்சாட்டுகள் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தினமும் குறைந்தது 20 புகார்கள் பறக்கின்றன."-
டி.என்.சேஷன் போன்றோர்தான் இப்போ இல்லையே!

பணமூட்டை கொட்டுபவர்களை அரசுக்குத் தெரியாதா என்ன?

நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் தம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு , சூதாட்டத்தில் ஓர் அங்கமாகி நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துவிட்டு , ’மக்களின் மன நிலை மாறவேண்டும்’ என்றால் என்ன பொருள்?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 23, 2023 8:35 pm

மிஸ்டர் கழுகு: மனிதப் பட்டிகள்... எகிறிய முதல்வர்... புலம்பும் அமைச்சர்கள்!

‘பணத்தால் ஜெயித்தோம், தேர்தலில் அடாவடி செய்தோம் என்ற பேச்சு தேர்தல் வெற்றிக்குப் பிறகு வந்துவிடக் கூடாது’ எனத் தி.மு.க தலைமையிலிருந்து ஈரோட்டில் இருக்கும் அமைச்சர்களுக்கு உத்தரவு சென்றிருக்கிறது

“பணமழை, பரிசுமழை என இடைத்தேர்தல் வரலாற்றில் புதிய உச்சம் தொட்டிருக்கிறது ஈரோடு கிழக்கு. மனிதப் பட்டிகள், பணப் பட்டுவாடா, குக்கர் விநியோகம் என ஆளுங்கட்சி மீதான புகார்கள் வரிசைகட்டுகின்றன. ‘இதையெல்லாம் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்பதால், தேர்தலுக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என ஈஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்றத்தை அணுகியிருப்பது ஆளுங்கட்சியினரை அதிரவைத்திருக்கிறது” என்றபடியே அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு பால் கொழுக்கட்டை கொடுத்தோம். அதை ருசித்தபடியே தேர்தல் செய்திகளைக் கொட்டினார்...

“வென்றே தீர வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியினர் காட்டும் அதிரடியை, அ.தி.மு.க-வினராலேயே தாக்குப்பிடிக்க முடியவில்லை. மூத்த நிர்வாகிகள் பலரே சோர்வடைந்துவிட்டார்கள். ‘கட்சி வேண்டும்... சின்னம் வேண்டும்... என்பதற்காக மல்லுக்கட்டினோம்... சரி. இப்போதுதான் அவை நமக்குக் கிடைத்துவிட்டனவே... இதற்குமேல் ஏன் செலவு செய்ய வேண்டும்?’ என எடப்பாடியிடம் கேட்டிருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள் சிலர். ‘கட்சியும் சின்னமும் தற்காலிகமாகத்தான் வந்திருக்கின்றன. கட்சியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார். முடிந்தால் சப்போர்ட்டிவாக இருந்து செலவு செய்யுங்கள். இல்லையென்றால் நானே பார்த்துக்கொள்கிறேன்’ எனச் சீறிவிட்டாராம் எடப்பாடி. தலைமையின் உறுதியைப் பார்த்து ஒரே ஒரு ‘மணி’ மட்டும் ‘ஸ்வீட் பாக்ஸ்’ தாராளமாகச் செலவு செய்யத் தொடங்கியிருக்கிறாராம். இன்னொரு ‘மணி’யோ, பாக்கெட்டை இறுகப் பிடித்துக்கொண்டே சுற்றிவருகிறார்.”

“விளைச்சல் இருக்காதென்று தெரிந்த பிறகு எப்படி விதைக்க மனசு வரும்... அதுசரி... அண்ணாமலை கோபித்துக்கொண்டதாகச் சொல்கிறார்களே?”

“ஆமாம் ஆமாம்... இரண்டு நாள் பிரசாரத்துக்காக கோவையிலிருந்து ஈரோட்டுக்குச் சென்றார் அண்ணாமலை. வழியிலேயே அலைபேசியில் தொடர்புகொண்டவருக்கு, ‘பிரசாரக் களத்தில் கூட்டமே இல்லை. குறிப்பாக அ.தி.மு.க-வினர் ஒருவர்கூட இல்லை’ எனத் தகவல் சொல்லப்பட ஏமாற்றத்தில் முகம் கறுத்துவிட்டதாம். ‘நாட்டையே ஆளும் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் நான்... கூட்டம் இல்லாமல் பேசுவதா?’ என நேராக ஈரோட்டிலுள்ள தனியார் விடுதி ஒன்றுக்குச் சென்றுவிட்டாராம். அங்கிருந்தபடி அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டவர், நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கிறார். விஷயம் தலைமை வரை போயிருக்கிறது. ‘அவர் வரவே வேண்டாம் என்பதற்காகத்தானே பிரசாரத்தை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் பலமுறை சொன்னோம். பிறகு ஏன் இப்படி வந்து நிக்குறாரு?’ என எரிச்சலடைந்த தலைமை, கடைசியில் வேட்பாளர் தென்னரசுவோடு முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் சிறு கூட்டத்தை அனுப்பிவைத்திருக்கிறது. இந்த ‘ஏற்பாடு’கள் காரணமாக அண்ணாமலையின் வேன் பிரசாரம் இரண்டு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியிருக்கிறது.”

“(பழனி)சாமியே சைக்கிளில் போகும்போது, பூசாரிக்கு புல்லட் கேட்குதா?”

“ ‘சொந்தமாகக் கூட்டம் சேர்க்க முடியாமல்தான், அ.தி.மு.க உதவியைக் கேட்டோம். கமலைப் பார்க்க வந்த கூட்டத்தில் கால்வாசிகூட நமக்குக் கூடவில்லையென்றால் என்ன அர்த்தம்... அ.தி.மு.க-வினர் என்னை வேண்டுமென்றே அவமானப்படுத்திவிட்டனர்’ என்று புலம்பியிருக்கிறாராம் அண்ணாமலை. ‘நிலைமை புரியாமல் கடுப்பேற்றுகிறார் அண்ணாமலை. பன்னீரிடமிருந்து தப்பித்து, இவரிடம் மாட்டிக்கொண்டோமே?’ எனப் புலம்புகிறது எடப்பாடி தரப்பு.”

“பன்னீர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. ‘ஈரோட்டில் இரட்டை இலைச் சின்னத்தின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்வேன்’ எனச் சொன்னவர், இப்போது, ‘வெற்றிபெற முடியாத சூழல் இருக்கிறது’ எனக் கூறியிருக்கிறாரே?”

“வாலன்டியராக போனால்கூட ஏற்காமல் விரட்டியடித்தால் மனிதர் என்னதான் செய்வார்... தான் நியமித்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் நடத்திய பன்னீர், விரக்தியில் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. அந்தக் கூட்டத்தில், ‘இப்போதாவது நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். நாம் இப்படி ஒதுங்கியே இருந்தால் அரசியலில் காணாமல் போய்விடுவோம். இருக்கிற செல்வாக்கையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், குறைந்தபட்சம் தென்மாவட்டங்களிலாவது கட்சி செயல்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் நிர்வாகிகள். அதையடுத்தே ‘எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்தப்படும்’ என அறிவித்திருக்கிறார்கள். ‘திட்டமிட்டபடி விழா நடந்தால் அதை திருச்சியில் வைத்துக்கொள்ளலாம்’ என்றும் முடிவுசெய்திருக்கிறார்களாம்.”

மிஸ்டர் கழுகு: மனிதப் பட்டிகள்... எகிறிய முதல்வர்... புலம்பும் அமைச்சர்கள்!

“ஓஹோ...”

“எதற்கு திருச்சி... என்று தொண்டர்கள் கருதுகிறார்களோ இல்லையோ, அந்தப் பகுதியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பதறுகிறாராம். எங்கே மொத்தச் செலவையும் தன் தலையில் கட்டிவிடுவாரோ என இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டாராம் இனிப்பான அந்தப் பிரமுகர். ‘கெத்து காட்டுறோம்னு சொல்லி, இருக்கிற ஆட்களையும் எடப்பாடி பக்கம் துரத்திவிடாம இருந்தா சரி’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.”

“கூட்ட முடிவிலேயே ஒருவர் எகிறிவிட்டாராமே?”

“வேற யாரு... பன்னீர் அணியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜன்தான் அவர். கூட்டம் முடிந்ததும் வைத்திலிங்கத்தைச் சந்தித்து, ‘நான் உங்ககூட இருக்கவா வேண்டாமா... நீங்களே சொல்லுங்க. புகழேந்திக்கு என் மாவட்டத்துல என்ன வேலை... எனக்குக் கீழ இருக்குற நிர்வாகிகளைச் சந்தித்து அவரு ஏன் பேசணும்... அவரை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்க. இல்லை என்னையை விட்டுடுங்க’ எனச் சீறியிருக்கிறார். ‘பொறுமையா இருங்க’ என வைத்திலிங்கம் சொன்ன பதிலில் திருப்தியடையாமல், பன்னீரிடமும் சென்று ஒரு வார்த்தைகூட மாறாமல் அதை அப்படியே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். ‘இருக்குற பிரச்னை போதாதுன்னு இது வேறயா?!’ என நொந்துபோய்விட்டாராம் பன்னீர்” என்ற கழுகாருக்கு, சூடான வெங்காய பஜ்ஜி கொடுத்தோம். அதைக் கடித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

“ ‘பணத்தால் ஜெயித்தோம், தேர்தலில் அடாவடி செய்தோம் என்ற பேச்சு தேர்தல் வெற்றிக்குப் பிறகு வந்துவிடக் கூடாது’ எனத் தி.மு.க தலைமையிலிருந்து ஈரோட்டில் இருக்கும் அமைச்சர்களுக்கு உத்தரவு சென்றிருக்கிறது. ஆனால், அதையும் மீறி அங்கே தி.மு.க-வினர் நடந்துகொள்ளும் விவகாரம் குறித்த நமது கவர் ஸ்டோரியான, ‘மனித `பட்டிகள்’, அவிழும் பணமூட்டைகள், பறக்கும் புகார்கள் - என்னவாகும் ஈரோடு இடைத்தேர்தல்?’ கட்டுரையைப் பார்த்து முதல்வர் கொதித்துவிட்டாராம். ‘இரண்டு ஆண்டுக்கால ஆட்சிக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் பேசப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு இப்படியெல்லாம் நடந்துகொள்வது நமக்கு நல்லதல்ல’ என சீனியர் அமைச்சர்களை அழைத்து எச்சரித்திருக்கிறார். ‘இப்போது இப்படித்தான் சொல்லுவார்... ஆனால், வாக்கு சதவிகிதம் குறைந்தால் நம்மை வறுத்தெடுத்துவிடுவார்’ எனப் புலம்புகிறார்கள் சீனியர்கள்” என்ற கழுகார்...

“தீயணைப்புத்துறையில் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள், ஆர்.டி.ஐ மூலம் சில தகவல்களை இயக்குநர் அலுவலகத்தில் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அந்தத் தகவல்களைக் கொடுக்காமலேயே கொடுத்துவிட்டதாக, விண்ணப்பித்தவர்களின் கையெழுத்தை போலியாகப் போட்டிருக்கிறார்களாம் இரண்டு அதிகாரிகள். மேல்முறையீட்டில் குட்டு உடைந்துவிட்டதால், அந்த இரண்டு அதிகாரிகளும் சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* தாம்பரம் சிட்டி லிமிட்டில் நடந்த முக்கியமான கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தனிப்படையிலிருந்த உயரதிகாரி ஒருவர் குற்றவாளிகளிடம் டீல் பேசிய ஆதாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வசம் சிக்கியிருக்கிறது. அவர்கள் ரெய்டுக்குத் தயாராக, விவகாரம் வெளியில் தெரிந்தால் தனக்குத்தான் அவப்பெயர் என்பதால் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மேலிடத்தில் பேசி ரெய்டையே ரத்து செய்யவைத்துவிட்டாராம்.

* பட்டினம் மாவட்ட பெரிய அதிகாரியின் அந்தரங்க லீலைகள் குறித்து மேலிடத்துக்குத் தகவல் செல்ல, தற்போது அது குறித்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறது கோட்டை. தன்னைக் குறித்த தகவல்களைச் சொன்னதாக இரண்டு ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்துவிட்டாராம் அந்தப் பெரிய அதிகாரி.

விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 24, 2023 6:48 pm

முனைவர் சௌந்தரபாண்டியன் wrote: விதிமீறல் குற்றச்சாட்டுகள் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தினமும் குறைந்தது 20 புகார்கள் பறக்கின்றன."-
டி.என்.சேஷன் போன்றோர்தான் இப்போ இல்லையே!

மிகவும் சரியாக சொன்னீர்கள்.சேஷன் வந்த பிறகுதான் தேர்தல் ஆணையம் /தேர்தல் ஆணையர் என்பது இந்திய குடிமக்களுக்கு தெரிந்தது.
தலைமை தேர்தல் ஆணையர் -அரசியல் அமைப்பு மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரி 

@Dr.S.Soundarapandian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக