புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
89 Posts - 68%
heezulia
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
1 Post - 1%
viyasan
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
266 Posts - 45%
heezulia
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
18 Posts - 3%
prajai
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நேதாஜியின் காதல் Poll_c10நேதாஜியின் காதல் Poll_m10நேதாஜியின் காதல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜியின் காதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 13 Feb 2023 - 21:38

நேதாஜியின் காதல் VYHSpYs

நேதாஜியின் காதல் Nethaj10

காதல்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை , அந்த உணர்வு தெய்வீகமானது அல்லது அற்பமானது என்பதெல்லாம் அவரவர் கர்மவினை பொருத்தது.

பாரதம் எவ்வளவோ காதல் கதைகளை கொண்டிருந்தாலும் உன்னத காதல் , உருக்கமான காதல் நேதாஜியுடையது, அவரின் காதலை கடமை வென்றது, கடமைக்காக காதலை வெல்லும் அளவு அவரின் தாய்நாட்டு பற்று இருந்தது.



வரலாற்றில் நெப்போலியன் போனபார்ட்டின் காதல் விஷேஷமானது ஆனால் அவளா? பிரான்ஸ் தேசமா? என முடிவு செய்யும் நேரம் வந்த பொழுது என் தாய்நாடே எனக்கு முக்கியம் என நாட்டை நேசித்து அவளை கண்ணீருரன் பிரிந்தான் அந்த மாவீரன்.

அவன் காதலுக்கு சற்றும் குறையாதது #நேதாஜியின்_காதல்

#நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா என்றால் மகா விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் உண்டு.

காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருந்த நேதாஜிக்கு உடல்நிலை மோசமானது, ஆங்கில அரசு உயர் சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல அனுமதித்தது.

ஆம், காந்தியின் சீடனாய் இருக்கும் எல்லோருக்கும் அச்சலுகை உண்டு, ஏன் என்றால் அதுதான் பிரிட்டிசார் தந்திரம்,காந்தி இருக்கும்வரை யாரும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் என நம்பினான் வெள்ளையன்.

1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வியன்னாவில் அவர் தங்கி இருந்தபொழுது "இந்திய துயரம்" எனும் புத்தகம் எழுதி ஐரோப்பாவில் இந்திய ஆதரவு திரட்ட தீர்மானித்தார், அதற்கு தட்டச்சு செய்ய ஒரு பெண் தேவைபட்டார்
அந்த பணிக்கு வந்தவள்தான் எமிலி , 23 வயதுதான் ஆகியிருந்தது. மொழிவளம் அவளுக்கு அபரிமிதமாக இருந்தது.

நேதாஜி 38 வயதை எட்டியிருந்தார், அதுவரை அவர் தேசம் என்பதை தவிர ஒன்றையும் சிந்தித்தவர் அல்ல‌.

ஆனால் பெண் எனும் சக்தி சாதாரணம் அல்ல, இந்திரனை விடுங்கள், விசுவாமித்திரர் முதல் ஏன் சிவனிடமே உடலில் பாதியினை கேட்டு அமர வைத்த பெண்ணுக்கான சக்தி நேதாஜியினை விடுமா?

உலகில் ஏன் எதற்கு என தெரியாத ஒரு ஈர்ப்பே பெண் மேலான ஒருவகை ஈர்ப்பு, அதற்கு காதல், காமம், பெண் பொறுக்கிதனம் என எத்தனை பெயர்கள் வைத்தாலும் அதன் ஒரே பெயர் ஈர்ப்புதான்.

38 வயதில் நேதாஜிக்கு அந்த சோதனை வந்தது, சட்டென காதலில் விழுந்தார் , அவரின் வரிகளே அந்த காதலை சொன்னது
"மலை உச்சியின் பனி சூரிய வெளிச்சம் கண்டதும் உருகுவது போல, என் இரும்பு மனம் உன்னிடம் உருகிவிட்டது"

எந்த பராமக்கிரசாலியும் காதலில் விழுவான், ஆனால் மறுநிமிடமே உறுதியான‌ கொள்கையாளன் அதிலிருந்து எழும்பிவிடுவான், அதிலிருந்து வெளிவரமுடியாதவனால் சாதிக்க முடியாது.

நேதாஜி இனி அவ்வளவுதான் என்றார்கள், நேதாஜியின் காதலால் ஒன்றே அவரின் போராட்ட வாழ்வினை முடிக்கும் சக்தி கொண்டது என்றார்கள்.
.
ஆனால் நேதாஜி நாட்டை மறக்கவில்லை...

எமிலி போஸை முழுக்க புரிந்திருந்தார் அதனால் முழு அரணாக இருந்தார், பலமாக இருந்தார்.



இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் அனிதா, இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது..

ஆம் வரலாற்றின் மிகபெரும் பெண் போராளியின் பெயரைத்தான் தன் மகளுக்கு சூட்டினார் போஸ், இந்தியாவிற்கு அவள் அப்படி போராட வெண்டும் என்ற கனவு இருந்தது.

திருமணம் செய்து போஸும் எமிலியும் சேர்ந்திருந்தது வெறும் 3 ஆண்டுகளே, 1942ல் கடைசியாக தன் குடும்பத்தை சந்தித்தார் நேதாஜி
அதன் பின் யுத்தம் நேதாஜி மறைவு என காட்சிகள் வந்தன‌.

ஆனால் எமிலி நேதாஜி நினைவோடே வாழ்ந்தாள், அவருக்காகவே வாழ்ந்தாள்.

அவளின் பிற்கால பல தசாப்த வாழ்வு அந்த 3 ஆண்டு நினைவுகளிலேதான் கழிந்தது.

நினைத்திருந்தால் இந்தியா வந்திருக்கலாம், நேதாஜிக்கு இருந்த பெரும் ஆதரவினை பெற்று பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கலாம்.

சோனியா போன்றவர்களே அரசியல் செய்யும் இந்தியாவில் அவளுக்கு எல்லா வாய்ப்பும் இருந்தது,

ஆனால் அந்த புண்ணியவதி ஒதுங்கி இருந்தாள்.

என் கணவனின் கனவுபடி இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது அது போதும் என ஐரோப்பாவிலே இருந்தாள்.

தன் மகளை, ஆம் நேதாஜியின் ஒரே மகளை மிக சிரமபட்டு தனியாகவே வளர்த்தாள்.

இந்தியாவில் இருந்தோ இல்லை போஸின் குடும்பத்திடமிருந்தோ ஒரு காசும் அவள் பெறவில்லை, இந்திய காங்கிரஸ் அரசும் அக்குடும்பத்தை ஏறேடுத்தும் பார்க்கவில்லை.

பலமுறை எமிலியினை ஏராளமானோர் வற்புறுத்தியும் அவள் இந்திய அரசியலுக்கு வரவில்லை, தன் மகளை இந்தியா பக்கம் விடவுமில்லை.

ஏன் என கேட்டால் கனத்த மவுனமே அவளிடமிருந்து வந்தது.

"நான் இந்திய அரசியலில் பங்குக்கு வந்தால் நான் நேதாஜியினை காதலித்தது அரசியலுக்காக என்பது போல் ஆகிவிடுமல்லவா? அது அவருக்கு களங்கம் அல்லவா" என மிக நெருக்கமானவர்களிடம் சொன்னார் எமிலி என்பார்கள்.

எப்படி ஒரு உயர்ந்த உள்ளம் அவருக்கு இருந்திருக்கின்றது?

நேதாஜி அவளை ஊர் அறிய திருமணம் செய்யவில்லை, காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிய கடிதங்களை கூட கிழித்து போட சொல்லியிருக்கின்றார்.

ஆனால் அவள் செய்யவில்லை, நேதாஜியின் கடிதங்களோடே வாழ்ந்த அவள் 1996ல் இறந்தாள்.

நேதாஜி எந்த அளவு எமிலியினை நேசித்தார் என்பதற்கு அந்த கடிதத்தின் வரிகளில் சில ...

“நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்”

“ இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?.”

“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம்.

அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம்.
இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்"



மிக மிக உருக்கமான வரிகள்..

அந்த அப்பழுக்கற்ற போராளி தேச கடமைக்கும் தன் காதலுக்கும் இடையே போராடி இருக்கின்றான், பரிதாபம்
எமிலி ஒரு மாவீரனால் காதலிக்கபட்டிருக்கின்றாள் அதுவும் உருகி உருகி காதலிக்கபட்டிருக்கின்றாள், அந்த பெருமையில் காலமெல்லாம் தனியாகவே வாழ்ந்திருக்கின்றாள்.

நேதாஜி வாழ்க்கையில் மிக குறிப்பிடவேண்டிய பெண் எமிலி, ஒருவகையில் தியாக தலைவி.

நேதாஜியின் மகள் இன்று ஜெர்மனில் பொருளியல் மேதை.

இந்நாட்டில் ராகுல் காந்தி போல, உதயநிதி போல, அகிலேஷ் யாதவ் போல இருக்க வேண்டிய அனிதா மகா அமைதியாக ஒதுங்கி வாழ்கின்றார்.

அட ராகுல் என்ன? சோனியாவின் இடத்தையே பிடித்திருக்கலாம். பெரும் சக்தியாய் உருவாகி இருக்கலாம்.

காலம் எவ்வளவு விசித்திர விளையாட்டுக்களை எல்லாம் ஆடுகின்றது.

கணவனின் கட்சியினை காப்பேன் என வந்து நின்ற சோனியா ஒருவகை, என் கணவன் இல்லா இந்தியாவில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என நின்ற எமிலி இன்னொரு வகை.

பெண்களில்தான் எத்தனை வகை?

என் கணவன் கட்சி இது , என் மாமியார் கட்சி இது, எங்கள் குடும்ப கட்சி என கட்சியினை கட்டுபடுத்தும் பெண்களும் இந்தியாவில் இருக்கின்றார்கள்.

என் காதல் கணவன், என் மாமனார் என் மாமியார் வரிசையில் என் மகனும் பேரனும் இக்கட்சியில் தலைசூடி பின் நாட்டில் முடிசூட வேண்டும் என தவமிருக்கும் பெண்களும் இந்தியாவில்தான் இருக்கின்றார்கள்.

ஆனால் "நான் நேதாஜியினை காதலித்தேன், அந்த பரிசுத்தமான காதலை அரசியல் முதலீடாக என்னால் செய முடியாது, அவர் பெயரை கொண்டு நான் ஏதும் பெற்றால் அது என் காதலுக்கே களங்கம்" என சொன்ன எமிலியின் அருகில் கூட இந்த பெண்களெல்லாம் வரமுடியாது.

உலகின் அதிசுத்தமான காதல் எமிலியுடையது, எந்த காதலையும் அதற்கு ஈடாக சொல்லவே முடியாது.

நிபந்தனையே இல்லா அன்புதான் காதல், அதனை மிக அதிகமாக பெற்றிருக்கின்றார் நேதாஜி ஆனால் வெறும் 3 ஆண்டுகள்தான் அது நிலைத்திருக்கின்றது.

நேதாஜி கடிதத்தின் அந்த வரியினை பாருங்கள், எவ்வளவு அழகாக எழுதபட்ட வரி.

“நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்”

இந்த வரிக்காகத்தான் கடைசி வரை தனியாகவே இருந்து மகளை வளர்த்து அவருக்காகவே வாழ்ந்தாள் எமிலி.

இந்நாட்டிற்காக வாழ்க்கையினை தொலைத்த தம்பதிகளில் நேதாஜிக்கும் எமிலிக்கும் நிச்சயம் இடம் உண்டு.

நேதாஜியினை முழுக்க புரிந்த பெண்  காதலியாய் மனைவியாய் அவருக்கு கிடைத்தது ஒருவரம், தன் வாழ்நாளில் அந்த மாவீரன் கண்ட நிம்மதியும் மகிழ்வும் இது ஒன்றுதான், தன் வாழ்வில் சில நிமிடங்கள் மட்டும் அவன் நிம்மதியாக இருக்கட்டும் என தெய்வம் அனுப்பிய பெண் அந்த எமிலி.

நேதாஜியின் நாளில் "என் காதல் புனிதமானது, அவர் பெயரை கொண்டு அரசியல் செய்து அதற்கு களங்கம் கற்பித்து, நான் அரசியல்வாதியாகவே காதலித்தேன் எனும் அவப்பெயரை என் கணவனின் வரலாற்றில் பதிவு செய்ய நான் விரும்பவில்லை.

ஐரோப்பிய அந்நியரை எதிர்த்து ஆயுதம் ஏந்திய அவரின் நாட்டில் ஒரு ஐரோப்பிய பெண்மணியான நான் அரசியலுக்கு வந்தால் அது சரியல்ல, நான் அவரின் மனைவி என்பதால் அவர் கனவுகளை சிதைக்கமுடியாது அது இந்திய மக்களுக்கும் அவருக்கும் செய்யும் துரோகம், என் மனசாட்சி என்னை மன்னிக்காது"   என சொல்லி பெரும் அரசியல் எதிர்காலத்தை தவிர்த்த அந்த புண்ணியவதிக்கு டெல்லியில் சிலை வைக்க வேண்டும்.

அதை எங்கே வைக்கவேண்டும், யார் வீட்டு முன்னால் வைக்க வேண்டும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

தமிழகத்தில் எமிலிக்கு ஒரு அடையாளம் வேண்டுமென்றால் அச்சிலை எங்கே நிறுவபடவேண்டும் என்பதை நீங்களே சொல்வீர்கள்
எமிலி போஸ் ஒரு தியாக தலைவி, உண்மை காதலின் சுடர், நேதாஜி உள்ளளவும் அவள் புகழும் அவள் காதலும் தியாகமும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

அருமையான காதலி, தங்க அருமையான தேசம், சுகவாழ்வு , பெரும் எதிர்காலம் என எல்லாவற்றையும் நாட்டுக்காக துறந்து செல்ல அந்த நேதாஜிக்கு எப்படிபட்ட தேசபற்று இருந்திருக்க வேண்டும்?

நினைத்தாலே நெஞ்சம் கசியும் அர்பணிப்பு அது.

எமிலிக்கு பின்னும் ஏராளமான பெண்களை சந்தித்தாலும் அவரின் மனம் காதலில் ஏன் விழவில்லை  என் என்றால் அதுதான் அவர் சொன்னபடி "ஆன்மாவில் இருந்து உதித்த காதல்"

அப்படிபட்ட காதலைத்தான் இங்கு நினைத்து பார்த்தல் அவசியம், தேசத்துக்கும் கடமைக்கும் காதல் தடையாக இருக்குமென்றால் அதை தள்ளிவைத்த நேதாஜியின் தியாகம் எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும்?

கடைசிவரை கஸ்தூரிபாயினை இன்னும் சிலரை தன்னோடு வைத்த காந்தி, ஐரோப்பிய ரோஜாவை சுமந்த நேருவோடு நேதாஜியினை ஒப்பிடுங்கள்.

அந்த மாமனிதன் நாட்டுக்காக காதலை துறந்தான் என்பதும், அந்த காதலி கடைசிவரை அவன் நினைவில் அவன் புகழை காத்து நின்றாள் என்பதும், சல்லி காசுக்கும் சிறிய புகழுக்கும் ஆசைபட்டாலும் அவன் பெயருக்கு ஆபத்து என ஒதுங்கி நின்றாள் என்பதும் நினைக்க நினைக்க கண்ணீர் விடவைக்கும்  நெகிழ்ச்சி.

பாரதம் கண்ட காதலர்களில் நாட்டுக்காய் போராடிய காதலர்களான சாஸ்திரி லலிதா காதல் உள்பட பல காதல்கள் உண்டு அதனில் முதல் இடத்தில் நிற்பவர் நேதாஜி அவரோடு சரிக்கு சமமாக நிற்பவர் அந்த எமிலி.

தேசிய கீதம் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஓரத்தில் இந்த காதலர்களின் தியாக கீதமும் ஒலிக்கத்தான் செய்யும், தேசத்துக்காய் இணைந்த காதல் அது, தேசத்துக்காய் எரிந்த காதலும் அதுவே...

பிரம்ம ரிஷியார் முகநூல் பக்கம்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 14 Feb 2023 - 14:18

வாழ்க நேதாஜி புகழ்! வாழ்க நேதாஜி - எமிலி காதல்!

நன்றி சிவா!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 14 Feb 2023 - 15:51

நேதாஜியின் உணர்ச்சி மிக்க உன்னதமான கடிதம்.

எமிலியின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு.

உருகவைத்தது. அன்பு காதலுக்கு எடுத்துக்காட்டு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக