ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி: புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ்

2 posters

Go down

5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி: புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ் Empty 5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி: புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ்

Post by சிவா Sun Feb 19, 2023 5:44 pm

5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி: புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ் Tamil_News_large_3244628.jpg?w=640&dpr=1

கடந்த ஒன்பது ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு, கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், கவர்னர் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே என, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகள் இருந்தாலும், கவர்னர் பதவி என்பது மிகமிக முக்கியமானது. முதல்வர், மத்திய அமைச்சர் போன்ற பதவிகள் எல்லாருக்கும் எளிதில் கிடைத்து விடாது.

எவ்வளவுதான் அரசியலில் உழைத்தாலும், தேர்தலில் வெற்றி பெறும் தந்திரமும், சமூக பின்னணியும் இருந்தால்தான் முதல்வர், மத்திய அமைச்சர்களாக முடியும்.

ஆனால், அரசியல் சாசனபதவியான கவர்னர் பதவிக்கு, மத்திய அரசு மனம் வைத்தால் யார்வேண்டுமானாலும் வரலாம்.ஆட்சி செய்யும் அதிகாரம் இல்லாவிட்டாலும், மாநில அரசு நிர்வாகத்தின் தலைவர் கவர்னர்தான். முதல்வரை விட ஒருபடி மேலேஅனைத்து மரியாதைகளும் கவர்னருக்கு உண்டு.

சட்டசபையிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல்அளித்தால்தான் சட்டமாகும். குடியரசு தினத்தின்று தேசிய கொடியேற்றும் அதிகாரமும், ஆண்டின் துவக்கத்தில் சட்டசபையில் உரையாற்றும் அதிகாரமும் கவர்னருக்கு உள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கவர்னர் பதவி, பல மூத்த அரசியல்வாதிகளின் பெருங்கனவாக உள்ளது. ஆனால், மத்தியியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள பா.ஜ., - காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்குதான் இந்த வாய்ப்பு அதிகம்.

மத்தியில் பா.ஜ., 2014-ல் ஆட்சிக்கு வந்த பின், ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன், சதாசிவம், தமிழிசை, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய, ஐந்து பேருக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், 60ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் காங்., இருந்தாலும், சி.சுப்பிரமணியம், சி.ரங்கராஜன், பா.ராமச்சந்திரன், ஜோதிவெங்கடாச்சலம், நரசிம்மன், ராமானுஜம் என்று தமிழகத்தை சேர்ந்த சிலரே கவர்னர்களாக இருந்துள்ளனர்.

மத்திய அரசில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க.,வும், ஒருசில ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில்இடம்பெற்ற அ.தி.மு.க.வும், வாய்ப்பிருந்தும் தங்கள் கட்சியை சேர்ந்த யாரையும் கவர்னராக்கவில்லை. கடந்த 1999-ல் தி.மு.க.,பரிந்துரையில், ஓய்வுபெற்றஐ.ஏ.எஸ்., அதிகாரியான எம்.எம்.ராஜேந்திரன், ஒடிசா கவர்னராக இருந்தார்.

5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி: புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ் Gallerye_053740995_3244628.jpg?w=640&dpr=1

தற்போது, தமிழக பா.ஜ., தலைவர்களாக இருந்தவர்கள், அடுத்தடுத்து கவர்னர்களாகி வரும் நிலையில், 60 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும், தங்களுக்குகவர்னர் வாய்ப்பு கிடைக்கவில்லையே என,தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் தங்களுக்குள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி., கூட கிடைக்காத போதும், கவர்னர், மத்திய அமைச்சர் என, முக்கிய பதவிகளை பா.ஜ., வழங்கி வருகிறது. இது, தமிழகத்தில் கால் பதிக்கும் பா.ஜ.,வின் தந்திரம் என்றாலும், 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

கடந்த 2004 - 2014ல் குமரிஅனந்தன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்,திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட பலரும், கவர்னர் பதவிக்கு தீவிரமாக முயற்சித்தபோதும், அப்போது, மத்திய அமைச்சர்களாக இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி: புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ் Empty Re: 5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி: புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ்

Post by T.N.Balasubramanian Sun Feb 19, 2023 9:33 pm

Code:
60 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும், தங்களுக்குகவர்னர் வாய்ப்பு கிடைக்கவில்லையே என,தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் தங்களுக்குள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாவம் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் !  தமிழக காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் வேஷ்டியை கிழித்துக்கொண்டு,
சண்டை போடுவதிலேயே இன்பம் காண்பவர்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum