புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
366 Posts - 49%
heezulia
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
25 Posts - 3%
prajai
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_m10பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 6:14 pm


தஞ்சாவூர்: தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நம்முடைய தமிழக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பற்றிய ஒரு உண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச சூழலும் ராஜபட்ச ஆட்சிக்கு எதிராக வெடித்து கிளம்பிய இலங்கை மக்களின் போராட்டமான இந்தச் சூழலில் தமிழ் தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார் என்ற செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பிய யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இந்தச் செய்தி மூலம் உறுதியான முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.

தமிழின மக்களின் விடுதலைக்கான திட்டத்தினை அவர் விரைவில் அறிவிக்க இருப்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழின மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம்வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதுவாக இருந்தாலும், எந்தக் காலகட்டத்திலும் அவர்களிடமிருந்து எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.

இப்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிரான களமாக மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்து மகாகடலின் சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதனை தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழின தேசிய தலைவர் பிரபாகரனுக்கு துணை நிற்குமாறு வேண்டிக் கேட்கிறோம்.

பிரபாகரனின் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின் மூலம் அறிந்த செய்தியை அவருடைய அனுமதியின் பேரில் இங்கே வெளியிடுகிறேன்.

எங்கே இருக்கிறார்? எப்போது வருவார்? என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உலகம் முழுவதும் உள்ள நம்முடைய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால், விரைவில் அவர் வெளிப்படுவார். அதை உலகம் அறிந்து கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் காசி ஆனந்தன், உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன், வழக்குரைஞர் அ. நல்லதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 6:15 pm

பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம்!



தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள செய்திக்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் விரைவில் வெளிப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18இல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திக்கு இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 6:27 pm

பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே! வைகோ அறிக்கை!!



தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு இன்று (பிப். 13) தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர்.

என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

ஆனாலும், அவர் கூறியபடி தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 13, 2023 6:52 pm

தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன் - நாம் தமிழர் சீமான்



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான்,

என் தம்பி சின்னவன் பால சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச்சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன்.

தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன் பிராபகன். போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பிரபாகரன் 15 ஆண்டுகள் பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கி இருப்பார்... எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா?

சொல்லிவிட்டு வருவபர் அல்ல எங்கள் அண்ணன் பிரபாகரன்... வந்துவிட்டு சொல்வார். அது தான் அவருக்கு பழக்கம் அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் பிரபாகரன். அதனால் தேவையின்றி குழப்பிக்கொண்டிருக்கவேண்டியதல்ல.

பிரபாகரன் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று பழநெடுமாறன் கூறுகிறார். தோன்றும்போது பேசுவோம்.

அன்பழகன் சொல்வது போல் எங்கள் தலைவர் பிரபாகரன் ஒருநாள் நேரில் வந்துவிட்டால் வந்ததில் இருந்து பேசுவோம்' என்றார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 14, 2023 7:23 pm

இதுவும் ஒரு வித அரசியல். பெயர் வெளிவந்து --ஒரு பிரபலம் ஆகுமே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2023 7:34 pm

T.N.Balasubramanian wrote:இதுவும் ஒரு வித அரசியல். பெயர் வெளிவந்து --ஒரு பிரபலம் ஆகுமே.


மிகச் சரியாகக் கணித்துள்ளீர்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு 1f605

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2023 8:13 pm

இதுதான் பிரபாகரனின் லேட்டஸ்ட் படமா?



பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: நெடுமாறன் அறிவிப்பு Prabhakaran_edi
பகிரப்பட்டு வரும் வே. பிரபாகரனின் புதிய படம்



தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் புதிய புகைப்படமொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

எனினும், இந்தப் படத்தின் நம்பகத்தன்மை பற்றி உறுதி செய்ய இயலவில்லை. இந்தப் படத்தில் நரைத்த தாடியுடன் பிரபாகரன் காட்சியளிக்கிறார்.

பிரபாகரன் நலமாக இருப்பதாக  நேற்றுதான்  பழ. நெடுமாறன் அறிவித்தார். இந்த  நிலையில்தான், இன்று அவரின் புதிய புகைப்படம் வெளிவந்துள்ளது.

தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பின்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக பல்வேறு தலைவர்களும்  கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான தகவலுக்கு பல தலைவர்கள் வரவேற்றுத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சிலர், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டனர். இலங்கை ராணுவமும் இதற்கு மறுப்பு தெரிவித்து, 2009 மே 18-ல் நடந்த இறுதிகட்ட போரில் பிரபாகரன் உயிரிழந்ததற்கான ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், பிரபாகரனின் புதிய புகைப்படம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் விவாதத்துக்கு இடையே, தற்போது கிடைத்துள்ள புதிய படம் பிரபாகரனுடையதுதானா? என்பதை  உறுதிப்படுத்த  இயலவில்லை. எனினும், சில வட்டாரங்களில் இந்தப் படம் பகிரப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2023 8:14 pm

உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் பழ.நெடுமாறன்



பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.

இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.

பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக கியூ பிரிவு போலீசாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம். அப்பிரிவு ஐ.ஜி.செந்தில்வேலன், கியூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான போலீசார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பிரபாகரன் குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 14, 2023 8:17 pm

பிரபாகரன் குறித்த நெடுமாறன் அறிவிப்பால் ஏற்படப் போகும் சிக்கல்கள்- மலேசியா பேரா.ராமசாமி எச்சரிக்கை



பினாங்கு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருப்பது தொடர்பாக மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி சந்தேகங்கள் எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பேராசிரியர் ப.ராமசாமி வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை: பிரபாகரனின் நினைவு வேறு ஆனால்அவர் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வது வேறு. தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியத் தலைவர் பழ.நெடுராமன் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அபிமானமும் உண்டு. இலங்கையில் ஈழத் தமிழர்களின் நியாயமான மற்றும் ஜனநாயகப் போராட்டத்தை ஆதரித்த தமிழகத் தலைவர்களில் முதன்மையானவர் அவர்.

இலங்கையில் தமிழ் தேசியவாத இயக்கம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையில் விடுதலைப் புலிகளால் வழிநடத்தப்பட்டது. உள்நாட்டுப் போரில், மே 18, 2009 இல், வடகிழக்கு இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.பிரபாகரன் மரணத்தை உலகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பிரபாகரன் இறக்கவில்லை, தமிழர்களின் விடுதலைக்கான ஈழப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் காலம் வரும் என்று நெடுமாறன் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வந்தனர்.

நீண்ட கால அமைதி நிலவுவதற்கு முன்பு சில வருடங்கள் இதையே திரும்பத் திரும்பச் சொன்னார். பிரபாகரன் போர்க்களத்தில் இறந்ததை இலங்கை அரசு உறுதி செய்தது; அவர் சுடப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது மர்மமாகவே உள்ளது. உலகத் தமிழர்களில் சில பிரிவுகளில், பிரபாகரன் இறந்துவிட்டாலும், அவர் லெஜண்ட், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு நாயகன் என்பதாலேயே அவரது மறைவை ஏற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளது.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு உடனடியாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட போர்க்களத்தில் பிரபாகரன் இறந்தார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது.அவரது மரணத்தை உறுதிப்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மற்றும் இராணுவ நோக்கத்திற்காக இருந்தது.

பிரபாகரன் போர்க்களத்தில் இறந்திருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அவரது மரணத்தில் உச்சக்கட்ட சந்தேகங்கள் இருப்பதால், இந்திய தேசியவாத மாவீரன் சுபாஷ் சந்திரபோஸின் செய்தியைப் போலவே அவரது மரணமும் தொடர்ந்து மர்மமாகவே இருக்கும்.

போஸின் மரணம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட பிரிவினர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவின் அரசியல் சுதந்திரத்தை விரைவுபடுத்திய பான்-இந்திய தேசியவாதத்திற்கு பெருமை சேர்த்தவர், அவர் ஒரு வீரம் மிக்க நபர் என்பதால் அவரது ஆதரவாளர்களும் குடும்பத்தினரும் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையுடன் இது அதிகம் தொடர்புடையது.

இப்போது, ​​போஸைப் போலவே பிரபாகரனும் சாதாரண தலைவர் இல்லை. அவர் மே 2009 இல் தோற்கடிக்கப்படும் வரை உலகின் கடுமையான தேசிய விடுதலை இயக்கங்களில் ஒன்றான விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தார். பிரபாகரன் மீதான மரியாதை மற்றும் மரியாதையைக் கருத்தில் கொண்டு, அவரது மரணம் உண்மையாக இருந்தாலும் கூட, உணர்வு ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பிரிவினர் தமிழர்களிடையே உள்ளனர். நிச்சயமாக, பிரபாகரன் சாகவில்லை என்பதை இன்னும் சில தமிழ் தேசியவாத இயக்கத்தின் தமிழ்நாட்டின் சில தலைவர்கள் அவரை உயிரோடு வைத்திருக்கிறார்கள். நெடுமாறன் அப்படிப்பட்ட தலைவர்.

நெடுமாறன் போன்ற தலைவர்கள் பிரபாகரன் இறக்கவில்லை, விடுதலைப் புலிகளுக்கு முக்கியமான தலைமையை வழங்க அவர் விரைவில் வெளிவருவார் என்ற செய்தியை ஏன் வாழ வைக்க விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.நெடுமாறன் பிரபாகரனின் சிறந்த நண்பர் மற்றும் அவரது சிறந்த வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். பிரபாகரனின் மரணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. பிரபாகரன் இறக்கவில்லை என்ற உண்மையை உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் உளவியல் கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் அரசியல் நோக்கமும் உள்ளது.

இது இலங்கையில் மிகவும் பிளவுபட்டதாகத் தோன்றும் வளர்ந்து வரும் தேசிய இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் யோசனையுடன் தொடர்புடையது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று குறிப்பிடுவது இயக்கத்தை வலுப்படுத்தவும், நாட்டின் வடகிழக்கில் உள்ள தமிழர் பகுதிகளில் தொலைநோக்கு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் இருக்கலாம். இருப்பினும், பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், சரியான நேரத்தில் வெளிவரக் காத்திருக்கிறார் என்ற செய்தியை அப்படியே வைத்திருப்பதில் ஒரு குறை இருக்கிறது.

14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்- பிரபாகரன் குடும்பமே இறந்துவிட்டது- மாஜி இலங்கை தளபதி சரத் பொன்சேகா
முதலாவதாக, இது இந்தியாவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கான நகர்வுகளை சிக்கலாக்கி ஏமாற்றமடையச் செய்யலாம்.

இரண்டாவதாக, பிரபாகரனின் உடனடித் திரும்புதல் பற்றிய தவறான நம்பிக்கையை இலங்கையிலும் பிற இடங்களிலும் உள்ள தமிழ் அமைப்புகளுக்கு வழங்கலாம்.

மூன்றாவதாக, பிரபாகரன் உயிருடன் இருந்தபோது சில நேர்காணல்களில் தமிழீழ விடுதலைக்கான போராட்டம் தனது மரணத்திற்குப் பின்னரும் தொடர வேண்டும் என்று கூறியிருந்தார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரது மறைவு விடுதலை இயக்கத்திற்கு ஒரு தடையாக இருக்கக்கூடாது.

நான் சொன்னது போல் அய்யா நெடுமாறன் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, ஆனால் அவர் சொல்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

பிரபாகரனின் நினைவை உயிர்ப்புடன் வைத்திருப்பது நீண்ட காலம் நீடிக்கும் ஒன்று. பிரபாகரன் இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் பரவாயில்லை.

தற்போதைய தமிழினத் தலைமைகள் பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகளின் கீழ் விடுதலைப் போராட்டத்தைத் தக்கவைப்பதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 15, 2023 2:11 pm

‘நேதாஜி உயிரோடு இருக்கிறார்’ என்று நேற்றுவரை சொல்லிவந்தார்கள்! பிறகு என்னாயிற்று? அதுபோல்தான் இதுவும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக