Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலாம்பா தேவி காதல்!
2 posters
Page 1 of 1
திருமலாம்பா தேவி காதல்!
இந்திய திருநாட்டில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வளர்ந்து செயற்கரிய செயல் பல செய்து பின்னர் மறைவுற்றன. அதில் ஒன்றுதான் #விஜய_நகரப்_பேரரசு. விஜய நகரப் பேரரசுகளில் மிகவும் புகழ் வாய்ந்தவர் கிருஷ்ண தேவராயர். அவருடைய சகோதரர் அச்சுத தேவராயர். இவருடைய மனைவிகளில் மிகவும் அன்புக்குரியவரும், நெஞ்சில் கலந்தவருமாகிய #திருமலாம்பா_தேவி தன்னுடைய தங்கை மூர்த்திமாம்பா தேவியை பெண் கொடுத்த வகையில் தஞ்சைக்கு தன் நாயகனுடன் வருகிறார்.
ஆம், தஞ்சை செவ்வப்ப நாயக்கரின் மனைவியே மூர்த்திமாம்பா. விஜய நகரத்திலிருந்து அச்சுத தேவராயருடன் தஞ்சை வந்தார். விஜய நகரத்தில் இருந்தபோது அச்சுத தேவராயர் வரதாம்பிகா என்பவரை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை தேவி திருமலாம்பா எழுதிய வரதாம்பிகா பரிணய சம்பூ என்ற நூலின் மூலம் அறியலாம். இந்நூல் வடமொழியில் எழுந்த சம்பூ காவியங்களில் மிகச்சிறந்த ஒன்றாகும்.
அச்சுத தேவராயரின் பட்டத்து அரசியான வரதாம்பிகை பற்றி எழுதிய நூலின் கடைசிப் பகுதியில் தன்னைப் பற்றியும், தன் அறிவு, ஆற்றல், திறமை பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளார். இதில் எந்த ஒன்றையும் பார்த்தாலோ, படித்தாலோ, கேட்டாலோ அது காவியமாகவோ, நாடகமாகவோ, கவிதையாகவோ எதுவாக இருந்தாலும் அது அப்படியே மனதில் பதித்துக் கொள்ளும் ஆற்றல் தனக்குள்ளது என்று கூறுகிறார். தான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், பல மொழிகள் தனக்கு தெரிவதாகவும் அதன் வாயிலாக தான் வெளிப்படுவதாகவும் கூறுகின்றார்.
இவை அனைத்தையும்விட தாம் அச்சுத தேவராயரின் மனதுக்கு இனியவளாகவும், காதலியாகவும் இருப்பதோடு அவரின் மனைவி என்பதையும் இந்நூலில் தெளிவுபட உரைக்கின்றார். மேலும் திருமலாம்பா தேவியின் கரங்கள் கமலம் போல சிவந்து இருப்பதற்குக் காரணம் புலவர்களுக்கு பரிசில்களை அள்ளி அள்ளித் தருவதாலும் பல மொழிகளில் எப்போதும் எழுதிக்கொண்டே இருப்பதாலும் இவ்வாறு சிவந்துள்ளது என்று கூறுகிறார்.
வாஜ்பேய யாகம், புண்டரீக யாகம், சர்வதோமுக யாகம் ஆகியவற்றைச் செய்த பெரியோர்களின் ஆசியை எப்போதும் பெற்றவர் என்றும், அதற்கெல்லாம் மேலாக அவருடைய பஞ்சமம் பாடும் குரலானது எப்போதும் குயிலைவிட இனிமையானதாகவும், வாணியின் வீணை ஒலிக்கு நிகரானதாகவும் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. இவரைப்பற்றி தஞ்சை அரசவைப் பெண் கவியான இராமபத்ராம்பா, அச்சுத தேவராயரின் மனம் கவர்ந்த தேவி திருமலாம்பா என்றும் இவள் அழகும், சிறப்பும் பொருந்தியவள் என்றும், நற்குணம் மிக்கவள் என்றும் கூறுகிறார்.
கி.பி. 1532 ஆம் ஆண்டு அச்சுத தேவராயர் தம் இரு மனைவியரோடும் மகவோடும் தஞ்சைக்கு வருகிறார். அப்போது வரும் வழியில் திருவரங்கத்தில் பல நாட்கள் தங்கியிருந்து அறச்செயல்கள் பல செய்தார். அப்போது திருமலாம்பா தாம் இயற்றிய பக்த சஞ்சீவி எனும் நிகழ்ச்சியை திருஅரங்கன் முன்பு வைணவர்கள் நடத்திக் கொள்வதற்காக நிலம் அளித்ததை கல்வெட்டு கூறுகிறது. அதே போன்று விஜய நகரத்து ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் கல்வெட்டு அச்சுத தேவராயர் கொடுத்த கொடை பற்றி கூறுகின்றது. இக்கல்வெட்டு அழகிய பாடல் வடிவில் வெட்டப்பட்டுள்ளது. இப்பாடலை இயற்றியவர் திருமலாம்பா என்ற குறிப்பும் காணப்படுகிறது. இப்பாடலின் வழி திருமலாம்பாவின் கவி புனையும் ஆற்றலையும், புலமையையும் அறிய முடிகிறது. திருவரங்கத்தில் அச்சுதராயர் மன்னர் துலாபார மகாதானம் அளித்த செய்தியினையும் திருமலாம்பா கவிதையாக வடித்துக் கொடுத்துள்ளார்.
தஞ்சையில் இவரது பெயரில் ஒரு பேட்டையும், அதனுள் ஒரு கோயிலையும் எழுப்பிய பெருமை இவருக்குண்டு. கி.பி. 1538 ஆம் ஆண்டு தஞ்சையை செவ்வப்ப நாயக்கர் ஆட்சி செய்த போது அக்கோயிலுக்கு மகா பிரதிஷ்டையும் செய்யப்பெற்றது. அக்கோயில் இராஜகோபால சாமி கோயிலாகும். கோயிலின் கர்ப்ப கிரகத்தில் காணும் செய்தியானது திருமலாம்பா தேவி தர்மமாக திருமலையம்மன் பேட்டை மதனகோபால பெருமாள் திருபிரதிஷ்டை செய்கையில் அச்சுத தேவராயர் அதிட்டானமாக கட்டளையிட்ட திருவுள்ளம் பட்டினப்படி என்ற ஆணை குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி இக்கோயில் தஞ்சை வடக்கு வீதியிலிருந்து எல்லையம்மன் கோயில் தெரு செல்லும் வழியில் மிகப்பெரிய இராஜகோபுரத்துடன் கருங்கற்கள் கொண்டு கட்டப்பெற்றுள்ளது. அழகிய கோயிலாக கட்டப்பெற்றுள்ள அப்பகுதி திருமலாம்பா பெயரில் திருமலையம்மன் பேட்டை என்றும், இவரது தருமமாக இக்கோயில் கட்டப்பெற்றுள்ளது என்றும் இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மேலும் இங்கு காணப்படும் கிரந்த கல்வெட்டு ஒன்று அச்சுத தேவராயரின் புகழைப் பாடுகிறது. பாடல் அமைப்பை ஒப்புநோக்கும் போது இப்பாடல் திருமலாம்பா எழுதியதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தஞ்சை - திருச்சி சாலையில் தற்போது சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் ஊர்ப்பகுதி திருமலை சமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் முந்தைய பெயர் திருமலையம்மன் சமுத்திரமாகும். அன்றைய காலகட்டத்தில் நீர்நிலைகளை ஏற்படுத்தும்போது மன்னரின் பெயரிலோ அல்லது மாதேவியரின் பெயரிலோ அமைப்பது வழக்காகும். அந்த வகையில் இவ்வூருக்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். தன் தேவியின் மீது மன்னர் கொண்டிருந்த அளவற்ற அன்பும், காதலும், அத்தேவியின் மீது கொண்ட ஈடுபாடும் அத்தேவியின் பெயரில் நீர்நிலையையும், ஒரு ஊரையும் ஏற்படுத்தியது. மன்னன் கொண்ட காதலால் தோற்றுவிக்கப்பட்ட மகத்தான கொடையே மேலே கண்ட கோயிலும், இவ்வூரும் என்றால் மிகையல்ல. இன்றும் கூட அந்த மன்னர், அந்த தேவி அதாவது அச்சுத தேவராயரையும், திருமலாம்பாவையும் வடக்கு வீதி எல்லையம்மன் கோயில் தெரு சந்திப்பில் உள்ள இராஜகோபால சாமி கோயிலில் காணலாம்.
தினமணி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருமலாம்பா தேவி காதல்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» தேவி
» தேவி தரிசன ஸ்லோகம்
» ஆடி மாத தேவி பாட்டு!
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» தேவி
» தேவி தரிசன ஸ்லோகம்
» ஆடி மாத தேவி பாட்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum