புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Manimegala
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
29 Posts - 3%
prajai
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_m10ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 13, 2023 2:08 pm

First topic message reminder :

ஸ்ரீதரமூர்த்தி - பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41) - Page 5 Coq37Nv

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (1)
                                                                     - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

    #பாலி (Pali) – என்றதும்  ‘நமக்குத் தொடர்பில்லாதது’ என்றே தமிழர்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள்! இந்த நினைப்பை முதலில் மாற்றவேண்டும்! இதற்கான ஒரு முயற்சியே இப் பதிவு!

   பாலி மொழிக்கு என்று தனி #எழுத்துமுறை (script) இல்லை . பாலி நூற்களிற் காணலாகும் மிகத் தொன்மையான எழுத்துமுறை யாதென்றால், #தமிழர்தம் #பிராமிதான்!

     கீழ்வரும் பாலிச் சொற்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவாருங்கள்:-

1 .  அக்கி  (பாலி)
அக்கினி என்பது பொருள்.
‘அக்கினிச் சட்டி எடுத்து ஆடுதல்’ நாம் அறிந்ததுதானே?

2 . அங்குசகா  (பாலி)
நம்மூர் யானைப் பாகன் கையில் கொண்டிருக்கும் அங்குசம்தான் இது!

3. அங்காரகன்    (பாலி)
நம் தமிழ்ச் சோதிடர்கள் கூறும் அதே ‘அங்காரகன்’தான்! செவ்வாய்க் கிரகத்தைக் குறிக்கும்.

4. அங்குட்டா  (பாலி)
‘அங்குஷ்டம்’ எனப் பழைய தமிழ் நூற்களில் வருவதுதான்; ‘கட்டை விரல்’ என்பது பொருள் .
மற்ற விரல்களைவிடப்  பார்வைக்குக்  குட்டையாக இருப்பது கட்டை விரல். ஆகவே இதன் அடிப்படையில்,  ‘குட்டை’ என்பது, ‘குட்டா’ எனப் பாலியிற் பயின்றுள்ளது; அவ்வளவுதான்! முன்னே உள்ள ‘அம்’ , முன்னொட்டு.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது #முன்னொட்டு, #பின்னொட்டுகள் (prefix and suffixes) சேர்வது ஒரு  #மொழியியல் (Linguistics ) இயல்பு.
இப் பாலி ஆய்வால் நாம் அறிவது யாதென்றால், ‘அங்குஷ்டம்’ என்ற சொல்லுக்கு முன்னே தோன்றியது, ‘அங்குட்டம்’ எனும் தமிழ்ச் சொல்; ‘அங்குட்டம்’ என்பதனை வேறுவிதமாக உச்சரிக்க விழைந்த தமிழர்கள் ‘ஷ்’ சேர்த்து, ‘அங்குஷ்டம்’ எனலாயினர்!

5. அங்குலா (பாலி)
‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர முடியாது!’ – சொல்கிறார்கள் அல்லவா? அதே ‘அங்குலம்’தான் , பாலியில் ’அங்குலா’!
நல்லவேளை , நம்மவர்கள் ‘அங்குஷ்லா’ என்றொரு சொல்லை உருவாக்கவில்லை!
இப்போதைக்கு , #ஈறுகளின் #மாற்றத்தை மட்டும் கவனியுங்கள்! தமிழின் #‘அம்’ #ஈறு, பாலியில் #‘ஆ’ #ஈறாகத் திரிந்துள்ளது! அவ்வளவுதான்!

6 . அஞ்னானா (பாலி)
‘அஞ்ஞானம்’ என்று நாமறிந்த சொல்தான் இது!
#‘அ’ #முன்னொட்டால் #எதிர்மறைப் #பொருள் #தமிழில் #ஏற்படும்!
சட்டைசெய் – உடன்பாட்டுச் சொல்
அசட்டைசெய் – எதிர்மறைச் சொல்
ஆகவே , ‘அ’ எனும் தமிழ் வேர்ச்சொல் தமிழுக்கும் பாலிக்கும் ஒன்றுதான்!

7 . அஞ்ஞானின் (பாலி)
ஞானி – உடன்பாட்டுச் சொல்
அஞ்ஞானி – எதிர்மறைச் சொல்
ஞானமற்றவன் , அஞ்ஞானி.
சற்றுமுன் சொன்னதுபோல, இங்கும் ‘அ’ முன்னொட்டு எதிமறைப் பொருளைத் தமிழில்  தந்துள்ளதைக் கவனிக்க!

8. அடவி  (பாலி)
காடு எனும் பொருள் தரும் அருமையான தமிழ்ச்சொல் ‘அடவி’!
தமிழ்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் , அப்படியே பாலியில் வந்துள்ளதைக் கவனியுங்கள்!
இங்கு நான் ஒன்றை உங்களுக்குக் கூறவேண்டும்!
பாலிச் சொற்களை ஆய்ந்தவர்கள், ‘இப் பாலிச்சொல்லுக்கு மூலம் சமஸ்கிருதமா ? இலத்தீனா? கிரேக்கமா?’ என்றெல்லாம் , பல சொற்களுக்கு , ஆய்வை ஓட்டியுள்ளார்களே தவிர ஒரு இடத்திற்கூட  ’தமிழிலிருந்து வந்திருக்குமா?’ என்று பார்க்கவே இல்லை! பாலி ஆய்வாளர்களுக்குத் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாதமாதிரித்தான் உள்ளது! தமிழை உலகளாவிய நிலையில்  நாம் எடுத்துச் செல்லவில்லை என்பதை இது தெரிவிக்கிறது!  ‘அவர் ஜெர்மனியில் வேலை செய்தவர்; இவர் கனடாவில் வேலை செய்தவர்’ என்று சில தமிழர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்! ஆனால் , அவர்கள் வெகு கமுக்கமாக இருந்து, எங்கே, தமிழ் தொடர்பாக என்ன வேலை செய்கிறோம் என இங்கு மூச்சு விடமாட்டார்கள்! தமிழை உலகளாவிய நிலைக்கு நாம் எடுத்துச்சென்ற இலட்சணம் இதுதான்!

9 . அட்டா  (பாலி)
பரண் என்பது பொருள்.
‘தலையணை பாயை அட்டாலையில் போட்டியா?’ – சிற்றூர்களிற் பாட்டி இரைவாள்!
‘அட்டாலைப் பலகை’ என்பதும் இதுவே.
சதுர அல்லது செவ்வக வடிவில் , சட்டங்களால் அமைக்கப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிற்றால் கட்டி உயரமாகத் தூக்கிக் கட்டியிருப்பர்; இதுவே  #‘அட்டாலை’. பாலி மொழி தமிழகத்தில் அறியப்பட்ட  காலத்தில் , தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

10 . அன்னா (பாலி)
அன்னம் – சோறு
தமிழ் ’அன்னம்’தான் , பாலி ‘அன்னா’! ‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே’ – தமிழ்ப் பழமொழி.
தமிழ் ‘அம்’மீறு , பாலியில் மாறும் வகையைப் பார்த்துக்கொண்டே வாருங்கள்.

(கருவி நூல் :  Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 15, 2023 12:48 pm


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (33)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

331. யக்கா (பாலி)
யக்கா – இயக்கர்
இயக்கர் – இயங்குவோர்
சொல்லப்பட்ட வேலையைச் செய்வதற்காக அங்குமிங்கும் இயங்குவதால் , பணியாளர்கள் ‘இயக்கர்’ எனப்பட்டனர் தமிழில்.

‘இயக்கர்’ என்ற தமிழே ‘யக்ஷர்’ ஆனது; ஆக்கியோர் தமிழரே! மத்திய ஆசியாவிலிருந்து யாரோ கொண்டுவந்து போட்டுவிட்டுப் போனது போல எழுதி வைத்துவிட்டார்கள்!

332 . யாசகா (பாலி)
யாசகா – யாசகன் (இரவலன்)

யாசகன் – இரவோன் (திவாகர நிகண்டு)

பாலியில் , ஆண்பால் ஈறாக ‘ஆ’ வருவதை நாம் பார்த்துவருகிறோம்.

‘யாசகன்’ எனும் தமிழ்ச் சொல் , சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படையில் வருகிறது.

யா – வேர் ; பிணித்தல் என்பது பொருள்; கொடுப்போ னிடத்திலிருந்து , அவனால் தரப்பெற்றுத் தனதாகப் பிணித்தலே ‘யாசகம்’.

333 . யுத்தா (பாலி)
யுத்தா – யுத்தம்
யுத்தம் – போர் (பிங்கல நிகண்டு)

‘யுத்தம்’ என்றால் ‘பொருத்தம்’ என்றொரு பொருள் தமிழில் உளது (வின்ஸ்லோ அகராதி).
இரு படைகள் பொருதுதலே போர். யுத்தக் களத்தைப் ‘பொருகளம்’ என்றல் காண்க.

‘உயுத்தம்’ என்பதே தமிழில் ‘யுத்தம்’ என நின்றது; ‘உருத்திரன்’ என்பது ‘ருத்ரன்’ ஆகியுள்ளதைக் காணலாம்; ‘உருத்திராட்சம்’ என்பது, ‘ருத்ராட்சம்’ ஆனமையையும் நோக்கலாம்.

334 . யோஜனா (பாலி)

யோஜனா – யோசனை (தூர அளவு)

ஒரு யோசனை – ஏறத்தாழ 11 கி.மீ.

‘ஓசனை’ எனும் தமிழே , ‘யோசனை’ என்றும் தமிழர் நாவில் நின்றது. ‘ஓசனை’ என்றே சீவக சிந்தாமணியில் உள்ளது.

335 . ரவி (பாலி)
ரவி – இரவி (சூரியன்)

‘இரவி’ என்ற வடிவத்தைத் தந்துள்ளது திருவாசகம்.

’இர’ – இரவு (செ.சொ.பேரகரமுதலி)
இர + வி = இரவி

வி – வேறுபடுத்தல் (மேற்படி அகராதி)

இரவை வேறுபடுத்திப் பகலாக மாற்றுவது கதிரவன் ஆதலால், ‘இரவி’ எனும் சொல் வந்திருக்கலாம்.

336. யோகா (பாலி)
யோகா – ஓகா
ஓகம் – திரட்சி
மனம், மெய்களை ஓரிடத்தில் குவித்தலே ஓகம்; இது ‘யோகம்’ எனப் பின்பு ஆகியுள்ளது.

யோகர் – முனிவர் (சூடாமணி நிகண்டு)

337 . ரோமா (பாலி)
ரோமா – உரோமம்
‘ரோமம்’ எனும் வடிவத்தைக் காட்டுகிறது தாயுமானவர் பாடல் (தமிழ் லெக்சிகன்).

‘உரோமம்’ எனும் வடிவத்தைக் காட்டுவது திவாகர நிகண்டு. உரோமம் – மயிர் (திவாகரம்).

அடர்ந்து வளர்வதால் , ‘உரம்’ அடியாக ‘உரோமம்’ எனும் தமிழ்ச் சொல் வந்தது.
மண்டி வளர்வதால் ‘ம’ எனும் வேர் அடியாக ‘மயிர்’ எனும் தமிழ்ச் சொல் வந்தது.

338 . ரோசா (பாலி)
ரோசா – ரோசம்
‘சொன்னா ரோசம் பொத்துக்கொண்டு வருதோ?’ – மாமியார் இரைவாள்.

துல்லிய உணர்ச்சிக் குவியலையே ‘உரோசம்’ என்கிறோம் ; இதுவே ‘ரோசம்’ , ‘ரோஷம்’ என்றெல்லாம் ஆயிற்று.

339 . லஞ்சா (பாலி)

லஞ்சா – இலஞ்சம்
இலங்கவிடுதல் – செல்லவிடுதல் ; ஒருவனிடம் செல்லவிடும் பணம் அல்லது பொருளே இலஞ்சம்; ‘இல’ அடியாக உண்டான சொல் இது.
‘40% லஞ்சம் வாங்குகிறார்களாமே?’ – மக்கள் மொழி. தமிழ் மக்கள் நாவில் ‘லஞ்சம்’ என்றே ஒலிக்கும்; இதுவே , பாலியில் ‘லஞ்சா’!

340 . லவணா (பாலி)
லவணா – இலவணம் (உப்பு)
இ – வேர் ;சூட்டில் நீர் வற்றுதலை ‘இஞ்சுதல்’ எனல் காண்க.கடல் நீர் வெயிலில் வற்றியபின் உப்பாக நிற்பதை அறிவோம்.
இ – அடியாகவே ‘இலவு’ வந்துள்ளது; இலவங்காய் பழுக்காமல் நீர் வற்றி வெடித்துப் பஞ்சாக வெளிவரல் அறியலாம்.
தமிழ் வழக்கில் ‘லவணம்’ ஆகிப், பாலியில் ‘லவணா’ என நின்றது.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 17, 2023 12:17 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (34)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

341 . லிங்கா (பாலி)
லிங்கா - இலிங்கம்
இலிற்றுதல் – துளிர்த்தல் (செ.சொ.பேரகரமுதலி)

கல், மண் நிலப்பரப்பிலிலிருந்து மேலே எழும் (எழுதல் – நீட்டி வெளித் தோன்றுதல் - துளிர்த்தல்) குளவி போன்ற கல்லே ‘இலிங்கம்’ ; அந்த ‘இலிங்கம்’ ஓர் அடையாளமாகப் பயன்படலாயிற்று. பின்னாளில் ‘சிவலிங்கம்’ ஆனது.

342 . லீலா (பாலி)
ஈலா – இலீலை(விளையாட்டு)
இலிற்றுதல் – சுரத்தல் ; தோன்றுதல்.

விளைந்து உருவாவதே ‘விளையாட்டு’; கற்பனையாகக் களம், விதிகளை உருவாக்கிக் கொண்டு , ‘நீ ஓடுவியாம், நான் பிடிப்பேனாம்’ என்றெல்லம் வைத்துக்கொண்டு ஆடிமகிழ்வதே விளையாட்டு.

இலீலையும் அப்படியே. இலீலையைத் ‘திருவிளையாடல்’ எனல் காணலாம்.
‘இலீலை’யை , ‘லீலை’ என்று தமிழர்கள் புழக்கத்தில் விடவே , பாலியில் ‘லீலா’ ஆனதில் வியப்பே இல்லை!

343 . வம்சா (பாலி)
வம்சா – வம்சம் ; வமிசம் ; பின் சந்ததி

‘அரக்கர் வருக்கம்’ எனும் சொற்களில் , கம்பராமாயணத்தில், குறிப்பிடப்படுவது அரக்கர் வம்சத்தையே.
‘வருக்கம்’ , ‘வம்சம்’ – இரண்டுக்கும் வேர் ‘வ’ .
‘வளர்ச்சி’ , ‘வழிவழி’ முதலிய சொற்களுக்கு ‘வ’வே வேராய் நிற்பதைக் காண்க.
‘வமிசம்’ என்பதற்கு இன்னொரு சொல்லாகச் ‘சரவடி’ யைக் காட்டுகிறது வின்ஸ்லோ அகராதி.

344. வக்கா (பாலி)
வக்கா – வர்க்கம்
வர்க்கம் – இனம்
வர்க்கத்தார் – இனத்தார்
’மெல்லினம்’ என்பதற்கு , ‘மெல்லோசையுடைய எழுத்துகளின் வர்க்கம்’ என விளக்கப்படுவதை ஓர்க.

‘பூதம்’ என்பதற்குப் பொருள்தரும் பிங்கல நிகண்டு , ‘உயிர் வர்க்கம்’ என்றே தருகிறது.
‘வர்க்கம்’ என்பது ‘வருக்கம்’ எனவும் வரும்.

‘வ’ என்பதே ‘வர்க்கம்’ என்பதற்கும் வேராகும்.

வர் +க் +க் +அம் = வர்க்கம்
வர் - பகுதி
க் – எழுத்துப்பேறு (augment )
க் – விகாரம்
அம் – வினைமுதற் பொருளீறு.

345 . வசனா (பாலி)
வசனா – வசனம்
வசனம் – வாசகம் (பிங்கல நிகண்டு)
வசனம் – பேசுதல் ; ‘உன் வசனத்தை நிறுத்து’;
‘கதை வசனம் எழுதினார் கண்ணதாசன்’
வசனம் – சொல் (திவாகர நிகண்டு) ; சொல்லை உச்சரித்துப் பேசுவதே ‘வசனம்’.
தமிழ்ச் சொல்லான ‘வசனம்’ , பாலியில் ‘வசனா’ ஆனது.

346 . வஞ்சனா (பாலி)
வஞ்சனா – வஞ்சனை
வஞ்சனை – மோசடி ; ஏமாற்று
‘காவிரியில் நீர் திறந்துவிடுவதாகக் கூறி வஞ்சித்துவிட்டனர்’ – மக்கள் சினம்.

‘வஞ்சகம்’ எனும் சொல் திருவாசகத்தில் வருகிறது.

வ – வேர்ச்சொல் ; ‘வளைவு’ , ‘வணக்கம்’ முதலிய சொற்களில், ‘நேரிய தன்மையில் வழுவிய’ எனும் பொருண்மை இவ் வேருக்கு இருப்பதை உணரலாம்.

347 . வடா (பாலி)
வடா – வடமரம் (ஆலமரம்)
வடம் – வடம் போன்ற ஆலம் விழுது.
விழுது மரம் ஆதலால் , அம் மரம் ‘வடமரம்’ எனப்பட்டது.
348 . வட்டா (பாலி)
வட்டா – வட்டம்
நேராகச் செல்லாமல் , சறுக்கலாகச் (வட்டமாக) செல்வதால், அது ‘வட்டம்’; இதுபற்றி முன்பும் பார்த்துள்ளோம்.

வ + ட் + ட் + அம்
வ – வேர்ச்சொல்
ட் – எழுத்துப் பேறு (augment)
ட் – விகாரம்
அம் – பெயர் விகுதி.

தமிழின் ‘அம்’மீறு, ஆகார ஈறாகப் பாலியில் வந்துள்ளதைக் காண்கிறோம்.

349 .வாணிஜ்ஜா (பாலி)
வாணிஜ்ஜா – வணிகன்
‘வணிகன்’ என்பது தமிழில் ‘வாணிகன்’எனவும் சொல்லப்படும்.
வணிகம் செய்பவன் ‘வணிகன்’; அவனே ‘வாணிகன்’.
‘பணிகம்’ என்பதே ‘வணிகம்’ ஆனது எனப் பல சான்றுகளால் நிறுவியுள்ளது செ.சொ.பேரகரமுதலி.

‘பணிகம்’ என்பது உற்பத்தியைக் குறிக்கும்; உற்பத்தியாளரே ஆதி வணிகர்.

பண்ணுதல் – உண்டாக்குதல்

350 . வண்ணா (பாலி)
வண்ணா – வண்ணம் (நிறம்)
‘வான்சுதை வண்ணம்’ எனத் திருக்குறளில் வருகிறது.

‘வள்’ அடியாகப் பிறந்த சொல் , ‘வண்ணம்’; ‘ஒழுங்கு’ என்பது பொருள். மற்ற பொருள் நிறங்களிலிருந்து வேறுபட்ட ஒழுங்கை உடையதால் ‘மஞ்சள்’ , ‘கறுப்பு’ என்று அந்தந்த ஒழுங்கைச் சுட்டலாயினர் தமிழர்.

‘வண்ணம்’ எனும் தமிழ்ச் சொல், வழக்கமான , பாலிக்கேயுரிய ஈற்றெழுத்து மாறுபாட்டுடன் ‘வண்ணா’ எனப் பாலியில் வந்துள்ளது.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 19, 2023 12:28 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (35)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

351 . வத்து (பாலி)

வத்து – வத்து ; ‘வஸ்து’ ; பொருள்
வ – வேர்ச்சொல் ; ‘வரையறுக்கப்பட்டது’ என்பது பொருள்.
வரையறுக்கப்பட்ட , ஒரு தோற்றத்தைத் தரும் பொருள் எதுவும் ‘வத்து’தான்.
‘வத்து’தான் , பின்னாளில் ‘வஸ்து’ ஆனது; ‘வஸ்து’ , பின்னர் ‘வாஸ்து’ ஆகிவிட்டது!
தமிழின் ஒரு தொன்மை வடிவைப் பேணிக்காத்து இன்று நமக்கு அளித்துள்ளது பாலிச்சொல்லான ‘வத்து’.

352 . வனா (பாலி)
வனா – வனம்
வனம் – காடு (சூடாமணி நிகண்டு)
வளர்ந்துநிற்கும் மரஞ் செடி கொடிகளின் கூட்டமே ‘வனம்’.
‘வ’வே வேர்ச்சொல்.
தமிழ் ‘அம்’மீறு , பாலியில் ‘ஆ’வாக மாறுவதை முன்பும் பார்த்துள்ளோம்.

353 . வரா (பாலி)

வரா – வரம்
‘சாகா வரம் பெற்ற கம்பன்’ – கம்பர் விழா முழக்கம்.
‘நலமாக இருக்க நாம் அந்த வரம் வாங்கிவரலையே!’ – முதியவள் புலப்பம்.
‘வரம்’ – பரிபாடலில் வருகிறது.
வ – வேர்ச்சொல்; ‘வரை; ’வரம்பு’ முதலிய சொற்களை ‘நிர்ணயிக்கப்பட்டது, ’தீர்மானிக்கப்பட்டது’ என்று பொருண்மைப்படும் சொற்களை இவ் வேரே உண்டாக்கியது.இந்த அடிப்படையில்தான் ’மேலிடத்தால் கொடுக்கப்பட்டது’ எனும் பொருளில் ‘வரம்’ எனும் சொல்லையும் ‘வ’எனும் வேர் உண்டாக்கியுள்ளது.

354 . வலயா (பாலி)
வலயா – வலயம் (ring)
வலயம் – வளையம் ; வட்டம் (சூடாமணி நிகண்டு)
’வளையம்’ எனும் சொல்லிலிருந்தே ‘வலயம்’ உண்டானதாகக் கூறுகிறது செ.சொ.பேரகரமுதலி.
தமிழ் இலக்கியங்களில் ‘வளையம்’ , ‘வலயம்’ என்ற இரு வடிவங்களையும் காணமுடிகிறது.
‘வலயம்’ எனும் ஒரு வடிவம், பாலிக்கும் சென்றுள்ளது!

355 . வல்லீ (பாலி)

வல்லீ – வல்லி ; கொடி
வல்லி – கொடி (பிங்கல நிகண்டு)
வல்லுதல் – பிரிதல்
கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டதால் , சூதாடு பலகை ‘வல்லுப் பலகை’ எனலாயிற்று.
கொடியானது பிரிந்து பிரிந்து ஓடி வளர்வதால் ‘வல்’ அடியாக ‘வல்லி’ ஆனது.

356 . வாக் (பாலி)
வாக் – வாக்கு
‘மனம் வாக்கு காயம்’
‘வாக்குவாதம்’
-இவ்விடங்களி ‘வாக்கு’ என்பது சொல்லைக் குறிக்கும். ‘சொல்’எனும்போது அது பேச்சையும் சுட்டும்.

வேதவாக்கு – வேத வாக்கியம் – வேத மொழி
‘அவளிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்காதே!’ – இங்கு ‘வாய்’ , பேச்சைக் குறிக்கிறது.
ஆகவே ‘வாய்’ என்பதன் வேராகிய ‘வா’வே ‘வாக்கு’ என்பதற்கும் வேர் எனப் புலனாகிறது.

357 . வாக்யா (பாலி)
வாக்யா – வாக்கியம்
வாக்கியம் – சொற்றொடர்

வா – வேர் ; ‘வாக்கு’ பற்றி மேலே பார்த்தோம்; ‘வாக்கு’ , எழுத்தில் வரும்போது , அது ‘வாக்கியம்’. தமிழர்களே ‘வாக்யம்’ என்று உச்சரித்த போதுதான் குழம்பிப்போனார்கள்!

பெருங்கதையில் ‘வாக்கியம்’ எனும் சொல் வருவதை எடுத்துக் காட்டுகிறது தமிழ் லெக்சிகன்.

358 . வாபி (பாலி)
வாபி – வாவி (குளம்)
வாவி – நீர்நிலை (பிங்கல நிகண்டு)
வாவல் – தாண்டுகை (பிங்கல நிகண்டு)
நீர்நிலையைத் தாண்டினால், ஒரு பொழில் இருக்கும் ; அப்படிப்பட்ட நீர்நிலையே ‘வாவி’. பெரிய ஏரியை ‘வாவி’ என்னார்.
இவ்வாறு ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் ஒரு குறிப்பிட்ட சொல் ஆழம் கொண்டது! ஆனால், நாம் இப்போது எதனையும் அறியாது சகட்டுமேனிக்கு எல்லா நிலைகளிலும் ஏதாவது கைக்கு வரும் சொல்லைப் போட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறோம்!

தமிழ் நின்று செழித்த நிலம் அமைதியான , அவசரமில்லாத , நிலம்; இப்போதைய தமிழகம் அவசர நிலம் !

359 . வாயு (பாலி)
வாயு – வாயு (காற்று)
காற்றைக் குறிக்கும் ‘வாயு’ எனும் சொல் மணிமேகலையில் வருகிறது.
‘வாயுக் குத்து’ ,‘வாயுப் பிடிப்பு’ – நாம் அறிந்ததே!

‘வாயு’ என்பது ‘வாய்வு’ எனவும் வரும்.

வாயுத் தொல்லை உண்டாக்கும் பண்டத்தை ‘வாய்வுப் பண்டம்’ என்பார்கள்.
‘இந்த வாய்வுப் பண்டமே எனக்கு ஆகாதுங்க’ – மூதாட்டி சொல்வாள்.
வா – வேர்ச்சொல் ; வாவுதல் – தாவுதல் ; மெதுவாகவும் வேகமாகவும் , அங்குமிங்கும் வீசுவதால் காற்றைக் குறிக்க இவ் வேர் பொருத்தமாயிற்று.

360 . வாரணா (பாலி)

வாரணா – வாரணம் (யானை)
‘வாரணம் பொருத மார்பன்’ என இராவணனைக் கம்பர் பாடுவாரே!
மணிமேகலையிலும் ‘வாரணம்’ வருகிறது.

வரணம் – வளைவு
வளைந்த துதிக்கையுடையது ஆகையால், அது ‘வரணம் ஆனது.’
‘வரணம்’ என்பதே ‘வாரணம்’ ஆனது.





முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 23, 2023 11:56 am


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (36)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

361. வாஹனா (பாலி)
வாஹனா – வாகனம் (ஊர்தி)
வா – வேர்ச்சொல்
‘வாவிச் செல்லும் இருக்கை’ எனும் பொருளில் ‘பல்லக்கு’ம் வாகனமாகக் கருதப்படும்.
பெரிய புராணத்தில் ‘வாகனம்’ எனும் சொல் வருகிறது.
தமிழ் ‘வாகனம்’ என்பது ‘vahanam’ என்றுதான் ஒலிக்கிறது; ‘vakanam’ என ஒலிப்பதில்லை என்பதைக் கவனிக்க. ‘ஹ’ ஒலியைத் தந்தது தமிழ்தான் என்பதை இதன்மூலம் அறியலாம்.

362 . வித்தாரா (பாலி)
வித்தாரா – வித்தாரம் (விரிவு)

‘ அகலம்’ எனும் பொருளுடைய ‘வித்தாரம்’ , இப்போது ‘விஸ்தாரம்’ எனப் புழங்குகிறது. ‘வீடு நல்லா விஸ்தாரமாக இருக்குப்பா’ என்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட பொருள் மீது நீளமாகப் பாட்டெழுதக் கூடிய புலவனை தமிழில் ‘வித்தார கவி’ என்பர்.

வி – வேர்ச்சொல் ; ‘விட்டம்’ , ‘வித்தாரி’ முதலிய தமிழ்ச் சொற்களை இந்த வேரே ‘விரிவு’ எனும் பொருண்மையில் நல்கியுள்ளது.

363 . விதண்டா (பாலி)
விதண்டா – விதண்டா
‘நீபேசுவது விதண்டா வாதம்’ – வாதப் பேச்சு.
விதண்டா வாதம் – பொருந்தா வீண் வாதம்
இப்பொருள்பட இதனைக் கையாண்டுள்ளார் தாயுமானவர் – ‘பூதங்கள் பேய்க்கோலமாய் விதண்டை பேசுமோ’(செ.சொ.பேரகரமுதலி).
வீண் பிதற்றலாக இல்லது, சிறப்பாக எடுத்துச் சொல்லுதலை ‘விதப்பு’ எனத் தமிழ் இலக்கணத்தில் கூறுவர்.

364 .விதவா (பாலி)
விதவா – விதவை
‘சிதறுதல்’ எனும் பொருளில் ‘விதிர்த்தல்’ என்ற சொல், புறநானூற்றில் வருகிறது.
கணவன் , தன்னைவிட்டுப் பிரிந்துபோன நிலையில் – இறந்துபோன நிலையில்- மனைவியானவள் ‘விதிர்க்கப்பட்டவள்’ ; அதுவே ‘விதவை நிலை’.

வி – வேர்; ‘விடு’ முதலிய சொற்களை நீங்கற் பொருளில் இவ் வேர் தந்துள்ளது. அதே பொருண்மையில்தான் ‘விதவை’.

365 . விதி (பாலி)
விதிக்கப்படுவது ‘விதி’.
இலக்கணப் புலவர்களால் விதிக்கப்படுவது ‘இலக்கண விதி’.
‘இனியொரு விதிசெய்வோம்’ – பாரதி.

வி – வேர்ச்சொல்
வி +த் + இ = விதி

சமுதாயத்திற்காக விதிக்கப்படுவதையே நாம் ‘சட்டம்’ என்கிறோம். பாலிச் சொல்லான ‘விதி’யும் ‘சட்டம்’ எனும் பொருளிலேயே வந்துள்ளது.

366 . விமலா (பாலி)
விமலா - விமலன்
விமலன் – கறையற்றவன்; மலமற்றவன்
‘மலம்’ தமிழாகும்போது , அதன் எதிர்ச்சொல்லும் தமிழாகத்தானே இருக்கவேண்டும்?

வி – தமிழில் எதிர்ப்பொருள் முன்னொட்டாகவும் வரும்; ‘டங்கம்’ படாதது ‘விடங்கம்’ ; டங்கம் – உளி; விடங்கம் – உளி படாதது.

367 . விரோதா (பாலி)
விரோதா – விரோதம்
விரோதம் – முரண்; மாறுபாடு

‘ஓதம்’ என்பதற்கு மாறுபாடான சொல் ‘விரோதம்’. ‘விரட்டப்பட்ட ஓதம்’ எனும் பொருளில் வருகிறது ‘விரோதம்’. மாறுபாடிலாது மனம் மெய் கொண்டிருத்தலே ‘ஓகம்’.
இளைஞனுக்கு மாறுபட்ட வயதினன் ‘விருத்தன்’; இங்கும் ‘விர்’ அடியாதல் காண்க.

368 . விவரணா (பாலி)
விவரணா – விவரிப்பு
வி – வேர்; ‘விளக்கம்’ , ‘வித்தாரம்’ முதலிய சொற்களை உருவாக்கியது இந்த வேரே; இதே பொருளில்தான் ‘விவரிப்பு’.
‘கீழ்வரும் கருத்தை விவரித்து ஒரு கட்டுரை வரைக’ – தமிழ் வினாத்தாளில் வருமே!
‘தாற்பரியம்’ எனும் சொல்லுக்குப் பொருள் வரையும் யாழ்ப்பாண அகராதி ‘விவரம்’ என்கிறது.

369 . விவாகம் (பாலி)
விவாகம் – திருமணம்
சிலப்பதிகார உரையில் ‘விவாகம்’ எனும் சொல் வருகிறது (தமிழ் லெக்சிகன்).

’வாகம்’ என்பது வாகனத்தையும் குறிக்கும் காற்றையும் குறிக்கும்.
மணமகன் – மணமகள் இருவரும் , காற்றைப் போலப் பிரிக்க இயலாவாறு , சேர்ந்து செல்லும் வாழ்க்கை வாகனம் ஏறுதலே ‘விவாகம்’.

370. விசாலா (பாலி)
விசாலா – விசாலம் ; அகலம்

’சால மிகுத்துப் பெயின்’
‘சாலச் சிறந்தது’
- இப்படிக் காணும்போது , ‘சால’ என்பதற்கு ‘அதிகம்’ , ‘கூடுதல்’ என்றெல்லாம் பொருட்கள் ஏற்படுவதைக் காணலாம். ‘சிறப்பு’ எனும் பொருள் கொண்ட ‘வி’ முன் வரும்போது ‘விசால்’ , ‘விசாலம்’ என்றெல்லாம் ஆகும்.

ஒற்றையடிப் பாதையிலிருந்து வேறுபடுத்தவே ‘சால்’ அடிப்படையில் , ‘சாலை’ எனும் தமிழ்ச் சொல் வந்தது என நான் முன்பே எனது ஒரு சொல்லாய்வு நூலில் எழுதியுள்ளேன்.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

371 . விஷேசகா (பாலி)
விஷேசகா – விசேடம்
விசேடம் – சிறப்பு
‘விசேடம்’ என்பதே ‘விசேஷம்’ஆகியுள்ளது.

‘விசேடித்தான்’ எனக் கலித்தொகை உரையில் உள்ளது (தமிழ் லெக்சிகன்).
‘சிறப்புரை’யை ‘விசேடவுரை’ என்றெழுதுவர்.

‘விசேளம்’ என்பது ‘விசேட’த்தின் திரிபுதான் என்கிறது தமிழ் லெக்சிகன்.
தொப்பாரம் – முடி’விசேடம்’ (தமிழ் லெக்சிகன்)

வி – வேர் ; ‘விநாயகன்’ போன்ற சொற்களில் இவ் வேர் ‘முதன்மை’ எனும் பொருண்மையில் வந்துள்ளதை நோக்கலாம்.

372 . வீணா (பாலி)
வீணா – வீணை
‘நாரதர் வீணை’ – சிலப்பதிகாரம் பேசிற்றே!
’மாசில் வீணை’ – தமிழ்த் தேவரம் இசைத்ததே!
‘வீணா’ எனும் வடிவம் ‘வீணா தண்டம்’ என்ற தமிழ் வடிவத்தில் உள்ளதே!
‘விண்’ அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லே ‘வீணை’.

373 . வீதி (பாலி)
வீதி - வீதி
இவ்வாறு தமிழ்ச் சொற்கள் எவ்வித மாற்றமும் இல்லாது பாலியில் உள்ளதைக் கவனிக்க.

வீதி – தெரு (பிங்கல நிகண்டு)
வீதி – அகலம் ; ‘நல்ல வீதி விட்டு வெட்டு’ – தச்சர் சொல்லுவார். தேவாரத்தில் ‘வீதி’ எனும் சொல், ‘அகலம்’ என்ற பொருளில் வருகிறது.
‘அகலமான வழி’யைச் சுட்டுவதே ‘வீதி’.

374 . வீரா (பாலி)
வீரா – வீரன்
‘மதுரை வீரன்’ இருந்தானே!
வீரமுள்ளவன் ‘வீரன்’.

வீ+ர் +அன் = வீரன்
வீ – வேர்
ர் – எழுத்துப் பேறு
அன் – ஆண்பால் விகுதி.

375 . வேகா (பாலி)
வேகா – வேகம்
‘வேகம்’ எனும் சொல் சீவகசிந்தாமணியில் வருகிறது.
வேகர் – தூதுவர்; வேகமாகச் செல்பவர் ‘வேகர்’.
வே – வேர்ச்சொல்; விரைவுப் பொருண்மை தருவது இந்த வேரே.
வே + க்+ அம் = வேகம்
‘வேகம்’ எனும் பொருள் கொண்ட தமிழ்ச் சொல்லே ‘வேகாளம்’.

376. வேதாளா (பாலி)
வேதாளா – வேதாளியரின் பாட்டு
வேதாளியர் – தமிழ்ப் புலவர்
‘வேதாளியர்’ என்பது பாட்டுப்பாடும் புலவர்களைக் (bards) குறிக்கும்; பொதுவாகப் புலவர்களையும் சுட்டும்.

‘வேதாளிய’ரே சிலப்பதிகாரத்தில் ‘வைதாளிகர்’ எனச் சுட்டப்படுகின்றனர்.

‘வேதாளக் கதை’ என்று படித்திருப்பீர்கள்; அது எந்த வேதாளமும் வந்து கூறியவையல்ல! தமிழ்ப் புலவன் கூறியவையே! ஆம்! ‘வேதாளக் கதை’யில் வரும் அரசர் யாவரும் தமிழ் அரசர்களே!

377 . வேதனா (பாலி)
வேதனா – வேதனை
வேதனை – துன்பம்
‘அவர் செய்ததை நினைத்தால் , மனதுக்கு வேதனையாக இருக்கிறது’- நண்பர் புலப்பம்.

இயல்பான நிலையில் இல்லாமல் , கொந்தளிப்புற்ற மன நிலையே ’வேதனை’. உலோகத்தைக் காய்ச்சிக் , கொந்தளிப் புற்றதாக்கலே ‘வேதித்தல்’.
வே – வேர்ச்சொல் ; ‘வேறாக்கல்’ பொருண்மை கொண்டது இவ் வேர்.

378 . வெய்யாகரணா (பாலி)
வெய்யாகரணா – வியாகரணம்
வியாகரணம் – இலக்கணம்
யா – கட்டுதல் ; யாகரணம் – கட்டிக் கூறுதல் ; இலக்கணக் கருத்தை மட்டும் சுருக்கமாகக் கழறல்; இலக்கணம் தொடர்பில்லாத விரிவுகளுக்கு யாகரணத்தில் (இலக்கணத்தில்) இடமில்லை.
வி – எனும் ‘சிறப்பு’ப் பொருள் முன்னொட்டுச் சேர்ந்து , வி + யாகரணம் = வியாகரணம் ஆனது ; வி + நாயகம் = விநாயகம் ஆனது போல.
‘யாகரணம்’ விளைந்ததும் தமிழகமே; ‘வி’போட்ட ‘வியாகரணம்’ விளைந்ததும் தமிழகமே! இதுவே பாலியில் ‘வெய்யாகரணம்’!

379 . வேசி (பாலி)

வேசி – வேசி ; விலைமகள்
வேசி – பரத்தை (பிங்கல நிகண்டு)
வே – வேர்ச்சொல் ; ‘வேண்டு’ , ’வேட்கை‘ முதலிய ‘விருப்ப’ப் பொருண்மைச் சொற்களை இவ் வேர் உருவாக்கியுள்ளது.
காம வேட்கை கொண்டோர் நாடிச் செல்வதால், ‘வே’ அடிப்படையில் அவள் ‘வேசை’ எனப்பட்டாள்.

380 .வியஞ்சனா (பாலி)

வியஞ்சனா – வெஞ்சனம் ; துணை உணவு(side dish)

பெரிய வடிவு எழுத்துமீது சிறிய வடிவுப் புள்ளி எழுத்து கூடுதலாக அமர்வதால், மெய்யெழுத்தை ‘வெஞ்சனம்’ என்றனர் தமிழில்.
இதைப் போன்றே சோறாகிய பெரிய அளவு உணவு அருகே ஒரு சிறு அளவு உணவு கூடுதலாக வைக்கப்படுவதால், அது ‘வெஞ்சனம்’ ஆயிற்று! ‘துணை உணவு’ என்பதன் பொருளையும் ஒப்பிடுக.

கூடுதலான சினமே ‘வெஞ்சினம்’.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 30, 2023 12:02 pm


பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (38)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

381 . வியாதி (பாலி)

வியாதி – நோய்

வியம் – உடல்
ஆதி - வருத்தம் ; துன்பம் (செ.சொ.பேரகரமுதலி)

வியத்தின் (உடலின்) துன்பமே ‘வியாதி’.

382 . வாசா (பாலி)
வாசா - வாசம் ; வசித்தல்

வசித்தல் – தங்குதல் (சூடாமணி நிகண்டு)
வசி - இருப்பிடம் (யாழ்ப்பாண அகராதி)

ஆகவே , ‘வசி’ அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லே ‘வாசம்’ என்பது தெளிவாகிறது.
காசி வாசி – காசியில் வாழ்வோன்.
கோடை வாசத் தலம் – கோடையில் தங்கும் இடம்.
‘வாசம்’ செய்பவன் , ‘வாசன்’.
முனிவர் ‘வாசம்’ செய்யும் இடம் , ‘பாழி’ (பிங்கல நிகண்டு).

383 . வ்யாபாரா (பாலி)

வ்யாபாரா – வியாபாரம்
விடுவதால் அது வியாபாராம்.aஃதாவது,
பொருளைச் செல்ல விடுவதால் , அது வியாபாரம்.

ஒரு பொருளைப் பணத்துக்காகவோ , இன்னொரு பொருளுக்காகவோ தன்னிடமிருந்து இன்னொருவருக்குக் கொடுத்தலே இங்கு ‘செல்ல விடுவது’.
வி – வேர்ச்சொல் ; ‘விடு’ முதலிய சொற்களில் இவ்வேரைக் காண்கிறோம்.

384 . சகுனா (பாலி)
சகுனா – சகுனம் ; நன்மை தீமைக் குறி

ச – வேர்ச்சொல் ; ‘குறுக்கு’ எனும் பொருளுள்ள தமிழ்ச் சொற்களை உருவாக்கியுள்ளது இவ் வேர். ‘சன்னல்’ , சுவரின் குறுக்கே அமைக்கப்படுவதால் ‘ச’ ,வேராக நின்றதைக் காண்க.

புறப்படும்போது பூனை குறுக்கே வந்தால் , ‘சகுனம் சரியில்லை’ என்கிறார்கள் ; இது மூட நம்பிக்கைதான்.

385 .சகீ (பாலி)

சகீ – சகி ; தோழி
ச- வேர்ச்சொல் ; ‘வளைவு’ப் பொருண்மை கொண்டது. ‘சக்கரம்’ முதலிய சொற்கள் சான்று.

ஒருத்தியுடன் வளைவாக – நெருக்கமாக – இருப்பவளே ‘சகி’.
‘பாலும் கசந்ததடி சகியே’ – பாரதி.

ச+க்+இ = சகி
க் – எழுத்துப் பேறு
இ – பெண்பால் விகுதி.

தமிழிலிருந்து பாலிக்குச் சென்ற சொற்கள் பல , ஈற்று ஈகார நீட்டம் பெற்றதைக் கண்டுவருகிறோம்; அதன்படியே , ‘சகி’ , ‘சகீ’ ஆகியுள்ளது.

386 . சங்கா (பாலி)

சங்கா – சங்கு
சங்கின் புரிகள் , வளையம் வளையமாகச் சேர்ந்திருக்கும்; இவ்வாறு சேர்ந்திருத்தலால் , அது ‘சங்கு’; பலர் சேர்வதே ‘சங்கம்’. ச- வேர்.
‘சங்கு’ எனும் தமிழே , பாலியில் ‘சங்கா’; ஈற்றெழுத்து நீட்சி.

387 . சங்கமம் (பாலி)

மேற்சொன்ன ‘ச’வே இதற்கும் வேர்.
சங்கம் + அம்= சங்கமம்
சங்கம் கொள்வதால் , ‘சங்கமம்’.
‘ஆறுகள் கடலில் சங்கமம் ஆகின்றன’ – புவியியல் உண்மை.

388 . சங்கீதா (பாலி)
சங்கீதா – சங்கீதம்
சங்கீதம் – இசை (பிங்கல நிகண்டு)

சங்காதம் - கூட்டம் ; ‘உன் சங்காத்தமே வேண்டாம்’.

மேலே ‘சங்கு’ எனும் சொல்லுக்கான ஆய்வை இங்கும் ஒட்டிக்கொள்க.

சுரக் கூட்டத்தால் ஆன கீதத்தின் இசைவே ‘சங்கீதம்’.

389 . சந்தேகா (பாலி)
சந்தேகம் – ஐயம்
‘சிக்கற’ எனக் கம்பர் கூறுவார்’; ‘சந்தேகம் அற’ என்பது பொருள்.
குறுக்கும் நெடுக்குமாக நூல் மாட்டிக்கொண்டால் அங்கே ‘சிக்கு’.
அகலத் தெருவின் இடையே ஒடுக்கமான குறுக்குத் தெருவே ‘சந்து’.
எனவே ‘சந்து’ அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லே ‘சந்தேகம்’. இதுவே பாலியில் ‘சந்தேகா’ ! சந்தேகம் தீர்ந்ததா?

390 . சமயா (பாலி)
சமயா – சமயம் (நேரம்)

சமைந்த காலம் – சமயம்
சமைந்த காலம் – அமைந்த காலம்; பொருந்திய காலம் .
சமர் – போர் ; பொருதல் அல்லது பொருந்தல் இங்கு நடப்பது. எனவே ‘சம’ அடியாகப் பிறந்த சொல்லாம் ‘சமயம்’ ; எனவே ‘சமயம்’ , ‘பொருந்திய அந்த நேர’த்தைச் சுட்டக் காண்கிறோம்.

‘சமயத்தில் அவர் எனக்கு உதவினார்’ – நண்பர் பேச்சு.
‘சமயம் பார்த்து என்னைப் பழிவாங்கிவிட்டார்’ – நொந்தவர் புலப்பம்.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 04, 2023 12:59 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

391 . சமரா (பாலி)
சமரா – சமர் (போர்)

சமர் – போர் (திவாகர நிகண்டு)
சமர்த்தல் – பொருதல் (செ.சொ.பேரகரமுதலி)

போரைக் குறிக்கும் ‘சமரம்’ எனும் சொல் சிலப்பதிகாரத்தில் வருகிறது.

ச + ம்+ அர் = சமர்

ச – வேர் ; ‘சண்டை’ , முதலிய சொற்களைப் ‘பொருதல்’எனும் பொருளில் ஈன்றுள்ளது இவ் வேர்.
ம் – எழுத்துப்பேறு
அர் – பகுதிப்பொருள் விகுதி

392 . சமானா (பாலி)

சமானா – சமானம்
‘சமம்’ என்பதே ‘ஆனம்’ எனும் இடைச்சொல் சேர்ந்து, ‘சமானம்’ ஆனது.

‘எல்லா மதங்களும் சரிநிகர் சமானமாகப் பார்க்கப்படவேண்டும் ’ – இன்றைய அரசியல் தொனி.
‘மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பவன் மிருகத்துக்குச் சமானம்’ – நீதி மொழி.

393 . சமீபா (பாலி)
சமீபா – சமீபம் (அருகில்)
‘சமீபம்’ , தமிழ்ப் பாட்டில் ‘சாமீபம்’ எனவும் வந்துள்ளது.

ச – வேர் ; ‘சன்னம்’ , அகலமாக இராது நெருக்கமாக இருப்பது; இதில் ‘ச’ வேர் வந்துள்ளதைக் காண்க.

அருகில் சமைந்திருப்பதால் , ‘சமீபம்’.

394 . சமூலகா (பாலி)
சமூலகா – சமூலம்
சமூலம் – வேர் , இலை, தண்டு முதலிய செடியின் அனைத்துப் பாகங்களும்.

தமிழ்ச் சித்தமருத்துவக் கலைச்சொல் இது.
‘கரிசலாங் கண்ணிச் சமூலத்தை அரைத்துச் சாறெடுத்து…’ – சித்தமருத்துவ நூல் விவரணம்.

‘எல்லோரும்’ – சகலரும் ; இங்கே , ‘ச’ எனும் முன்னொட்டு ‘அனைத்து’ப் பொருண்மை கொண்டுள்ளதைக் காண்க.
‘சகடு’ – இங்கும் ‘ச’ ‘மொத்த’ப் பொருண்மையை வருவதைக் காண்கிறோம். சகடு – மொத்தம் (செ.சொ.பேரகரமுதலி)

395 . சமூகா (பாலி)
சமுதாயம் – பெருந்திரள் (சூடாமணி நிகண்டு)

‘ஐயா அவர்கள் சமூகத்திற்கு எழுதிக்கொண்டது’ – அந்தக் காலக் காவல் நிலைத்தில் விண்ணப்பம் .

‘எங்கள் சமூகத்தை இழிவு படுத்திவிட்டார்’ – அரசியல்வாதி கூப்பாடு.
சமூகம் – குறிப்பிட்ட குழு
‘சமுகம்’ எனவும் இது குறிக்கப்பட்டுள்ளது.
ச- வேர்; ‘மொத்தம்’ , அனைத்தும்
முதலிய பொருண்மைகள் இவ் வேருக்கு உண்டு.

396 . சரீரா (பாலி)
சரீரா – சரீரம் (உடல்)
பூக்களை ஒழுங்குபடக் கட்டினால் , அது ‘பூச்சரம்’.
உடல் உறுப்புகள் எல்லாம் ஒத்துழைத்து, ஒன்றாக நின்றால் , அது ‘சரீரம்’ ; ‘ச’ – வேர்.
இருவர் கருத்து ஒத்துப்போனால் ‘சரி’ என்ற இணக்கம் ஏற்படுவதைக் காண்க. ‘ச’ எனும் வேரை இங்கும் பிடிக்க.

397 . சகிதம் (பாலி)
சகிதம் - ‘உடன்’ (along with)
‘குடும்ப சகிதமாகத் திருமணத்திற்குச் சென்றார்’

ச- வேர்ச்சொல் ; ‘உடன்’ எனும் பொருண்மை கொண்டது ; ‘சார்பு’ , ‘வளைவு’ முதலிய பொருட்களைத் தந்துள்ளது இவ் வேர்.
‘உடன் இருப்பவள்’ என்ற பொருளில் ‘சகி’ எனும் சொல் வந்துள்ளதை நினைக்க.

சகி + தம் = சகிதம்
சகி – பகுதி ; ‘உடன்’ எனும் பொருளது.
தம் – அசைநிலை ஈறு .

397 . சாகரா (பாலி)
சாகரா – சாகரம் (கடல்)
‘சகரம்’ என்பதே ‘சாகரம்’ ஆனது.
‘ச’ எனும் வேர்ச்சொல் , ‘வளைவு’ , ‘வட்டம்’ முதலிய பொருட்களைத் தரும் என முன்பே ஆய்ந்துள்ளோம்; கடலானது நிலவுலகைச் சூழ்ந்துள்ளதால் அதற்குப் பெயர் ‘சாகரம்’ .

398 . சாலா (பாலி)
சாலா - சாலை (shed)
‘ஒருசாலை மாணாக்கன்’ என்போமே , அந்தச் சாலைதான் இது.
‘பாடசாலை’யில் வரும் ‘சாலை’யும் இதுவே.
சாலை உடையது சாலை.
சால் – அகன்றது ; பெருங்கூடமாக இருப்பது.
‘அவன் வயிற்றைப் பார் , சாலாக இருக்கிறது’ – கிராமத்துக் கேலி மொழி.
சால் + ஐ = சாலை.

399 . சாலி (பாலி)
சாலி – சாலி (நெல் வகை)
‘சாலி’ – தமிழகத்து நெல் வகைகளுள் ஒன்று.
‘சாலி நெல்லின்’ – பொருநராற்றுப்படை.
கம்பராமாயணத்தில் ‘சாலி’ பேசப்பட்டுள்ளது.


400 . சிங்காரா (பாலி)

சிங்காரா – இன்பச் சுவை (’சிருங்காரம்’)

சிங்காரம் – நவரசத்துள் ஒன்றாகிய இன்பச்சுவை (சூடாமணி நிகண்டு).

‘சிங்காரம்’ என்பதே பழந்தமிழ்ச் சொல்; அதில் , வேறு யாருமல்லர் நம்மவர்களே, ‘ரு’ சேர்த்துச் ’சிருங்காரம்’ ஆக்கிவிட்டனர்!

‘காரம்’ என்ற ஈற்றை வைத்தே ‘சிங்காரம்’ தமிழ்ச் சொல்லே என எளிதில் உணரலாம்; ‘அதிகாரம்’ முதலிய சொற்களைக் காண்க.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 04, 2023 5:35 pm

படிக்க படிக்க பாலி போக ஆசை ஏற்படுகிறது.

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 07, 2023 12:50 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (40)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

401 . சிரீ (பாலி)
சிரீ – சிரீ (ஸ்ரீ)

‘சிரீ’ என்பதைத்தான் ‘ஸ்ரீ’ ஆக்கியுள்ளது தமிழகம்.
‘ சிரீரங்கம்’ என்பதே நம் ஊர்ப்பெயர் ; ’ஸ்ரீரங்கம்’ என நம்மனோர் ஒரு கட்டத்தில் எழுத விழைந்தனர்; அவ்வளவுதான்!

பாலியின் ‘சிரீ’ நமக்கு ஒரு சொல்லாய்வுச் சான்றைத் தந்துள்ளது.

402 . சிலா (பாலி)

சிலா – சிலை (கல்)

’இளமையிற் கல்வி, சிலையில் எழுத்து’ – பழமொழி.
சிலையில் எழுத்து – கல்வெட்டு.

சிலை + சாசனம் = சிலைச் சாசனம்
தமிழர்களில் இன்னொரு பகுதியினர் , வேறுவகைப் புணர்ச்சியைக் கையாண்டு,
சிலை + சாசனம் = சிலாசாசனம் என்று எழுதலாயினர்! அன்றைக்குப் பிறந்தது ‘வடமொழி!’

403 . சீமா (பாலி)

சீமா – சீமை
சீமா – எல்லை (தமிழ்ச் சிற்ப நூற்களில் வரும் கலைச்சொல்)
ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்புகொண்ட பகுதி, ‘சீமை’ எனக் கூறப்பட்டது; ‘சிவகங்கைச் சீமை’ சான்று.அஃதாவது , சீமை = நாடு. ‘என்னடி, பழக்கம்? சீமையில் இல்லாத பழக்கம்!’ எனக் கிராமத்துப் பெண் கூவுவாள்.

‘சீர்மை’ என்பதே ‘சீமை’ ஆனது.
அஃதாவது , காடாக மண்டியிருந்த பகுதியை நாடாக்கியபின், அந்த நாடு , ‘சீர்மை யானது’ எனும் பொருளில் ‘சீர்மை’ எனக் குறிக்கப்பட்டுப் பின்னர் , ‘சீமை’ ஆனது.

சீ + ம்+ ஐ = சீமை
சீ – வேர்ச்சொல்
ம் – எழுத்துப் பேறு
ஐ – உடைமைப்பொருள் விகுதி

404 . சுகா (பாலி)
சுகா – சுகம்
சுகம் – இன்பம் (பிங்கல நிகண்டு)
சுக்குதல் – கூடுதல்; புணர்தல்.
சு+க்+அம் = சுகம்
சு – வேர்ச்சொல் ; ’சுருக்கம்’ முதலிய பொருண்மைகளைத் தரும் வேர் இது.
க் – எழுத்துப்பேறு
அம் – விகுதி

‘வீட்டில் அனைவரும் சுகம்தானே?’- நலம் விசாரிப்பு.

‘சுகம்’ என்றால் , ஆரவாரமின்றிப், பரபரப்பின்றி , மன அமைதியோடு இருத்தல். இந்தப் பொருளைத்தான் தரவல்லதாக இருக்கிறது ‘சு’ வேர்.

405 . சுத்தா (பாலி)
சுத்தா - சுத்தம்
‘சுத்தம் சோறுபோடும்’ – தமிழ் மொழி
‘சுத்தபத்தமாக இருந்துதான் லேகியம் அரைக்கவேண்டும்’ – சித்த வைத்தியர் கறார்.

சுத்தம் – தூய்மை (சூடாமணி நிகண்டு)

செலவு போக எஞ்சிய இலாபத்தைச் ‘சுத்தலாபம்’ என்ற கலைச்சொல்லால் குறித்தவர்கள் தமிழர்கள்.

சு + த் + த் + அம் = சுத்தம்
சு – வேர்
த் – எழுத்துப் பேறு
த் – விகாரம்
அம் – விகுதி

406 . சுத்தி (பாலி)
சுத்தி – தூய்மைசெய்தல்
‘நீர்ச் சுத்திகரிப்பு நிலையம்’ – கட்டுகிறோம் அல்லவா?

சு + த் +த்+ இ = சுத்தி
சு – வேர்
த் – எழுத்துப் பேறு
த் – விகாரம்
இ – உடைமைப் பொருள் விகுதி

தமிழ்ச் சித்த மருத்துவத்தில் , உலோகத்தைப் புடம்போடுவதைச் ‘சுத்தித்தல்’ எனும் கலைச்சொல்லால் குறிப்பர்.


407 . சுருங்கா (பாலி)
சுருங்கா _ சுருங்கை ; சுரங்கம்

’சுருங்கைச் சிறுவழி’ (மணிமேகலை)
‘கோட்டையிற் கள்ள வழி’ (சூடாமணி நிகண்டு)

நல்லவேளை, இதே பொருளைத் தரும் ‘ஸ்ருங்கா’ என்றொரு சொல்லை நம்மனோர் உருவாக்கவில்லை!

408 . சுவண்ணா (பாலி)

சுவண்ணா – சுவர்ணம் ; தங்கம்

‘சொர்ணம்’ , ‘சொர்னம்’ , ‘சொன்னம்’ , ‘சுவன்னம்’ – எல்லாமே தங்கத்தைத்தான் குறிக்கும்.
‘சொர்ணத்தம்மாள்’ எனும் பெயர் தமிழ் மண்ணில் பரவல் பெற்றது.

சொன்னம் - பொன் (திவாகர நிகண்டு)

தங்கத் தாதுவிலிருந்து உருக்கி எடுக்கும்போது , சொலிக்கும் பொருளாக வெளிவருவதால் , ‘சொல்’ அடியாகச் ’சொன்னம்’ எனும் சொல் பிறந்தது. ‘சுவர்ணம்’ முதலிய சொற்கள் பிற்காலத்தவை.

சொல்(ன்) + ன் + அம் = சொன்னம் .

408 . சேது (பாலி)

சேது – சேது; பாலம்

சேது – செய்கரை (பிங்கல நிகண்டு)
‘செய்தது’ என்பதன் சுருக்கமே ‘சேது’.

‘சேதுபந்தனப் படலம்’ – கம்பர் எழுதியுள்ளாரே!
‘சேதுவை மேடுருத்தி’ – பாரதியார்.

409 . சேனா (பாலி)

சேனா – சேனை ; படை

‘சேனாபதி’ - படைத் தலைவன்; இதன் பகுதியில் ‘சேனா’ நிற்பதைக் கவனிக்க.
‘சேனைத் தலைவர்’ (நாலடியார்)

உருளைக் கிழங்கு , வள்ளிக் கிழங்கு போல அல்லாமல், பெரிதாக , ஒன்றுசேர்ந்து, தடியாக , விளைவதால், அது சேனைக் கிழங்கு.
சே +ன்+ஐ = சேனை

410 . சேவா (பாலி)
சேவா – சேவை
சேவை செய்தல் – ஊழியம் செய்தல்
சேவகன் – ஊழியன்; ‘சேவுகன்’ எனவும் இவன் அறியப்படுவான்.
‘கண்ணன் என் சேவகன்’ - பாரதியார்.

சே – வேர்ச்சொல். சேர்ந்திருந்து ஊழியம் செய்பவனே ‘சேவகன்’; ‘சே’ எனும் வேர்ச்சொல் சேவையையும் , அருகிருத்தலையும் ஒரு சேர உணர்த்துவதைக் காணலாம்.

சே + வ் + ஐ = சேவை

***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 09, 2023 12:57 pm

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

411 . சொப்பா (பாலி)
சொப்பா – சொப்பனம்; கனவு

சொல்லுதல் – களைதல் (புறநானூறு)
தூக்கத்தில் மட்டும் வந்து, பிறகு களைந்து போகும் இயல்பினது ஆகையால் ‘சொ’ வேர்ச்சொல் ஆனது.

தமிழ் மண்ணில் , ’சொற்பனம்’, ‘ஸ்வப்னம்’ ஆகியன தோன்றுவதற்கு முன் இருந்த ‘சொப்பனம்’ எனும் வடிவு, பாலிக்குப் போய் அங்கு ‘சொப்பா’ என நின்றது.

தமிழ்ச் சொல் வடிவங்களில் மிகப் பழமையான வடிவங்களை அறிய இப் பாலிச் சொற்களின் ஆய்வு நமக்குப் பயன்பட்டுள்ளது.
பிராகிருதம் எனும் மொழிக்குடும்பத்தில் பாலியும் அடங்கும்.
புத்தர் பேசிய மொழி பாலி என்போரும் , இதனை மறுப்போரும் உளர்.
பாலி எப்போதும் பேச்சுமொழியாக இருந்ததில்லை என்ற கருத்துடைய ஆய்வாளர்களும் உளர். பாலி, எளிய மக்களின் பேச்சுமொழியாக இருந்தது என்றும் எழுதியுள்ளனர்.
பௌத்த மதத்தின் பழைய நூற்கள் பாலி மொழியிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பாலி , ‘மகதன்’ எனவும் அறியப்பட்டுள்ளது.
பாலி மொழியின் மேல் எல்லை கி.மு. 1 ஆம் நூற்றாண்டாகும்.
பாலித்தீவு , இந்தோனேஷியாவின் ஒரு தீவு. இங்குள்ள இசுலாமியர்களும் இந்துக்களும் ஒருவரையொருவர் மதித்து வாழ்கின்றனர். இப் பாலித்தீவில் மக்கள் பேசுவது பாலினீஷியன் ஆகும்; நாம் ஆய்ந்த பாலி அல்ல. நாம் ஆய்ந்த பாலி, இந்தியாவின் பிராகிருத மொழிக்குடும்பப் பாலியாகும்.
இந்த அடிப்படையில் மேலும் தமிழ்ச் சொல்லாய்வுகள் கிளைக்கவேண்டும்!அது, வரலாற்று ஆய்வாகவும் பண்பாட்டு ஆய்வாகவும் விரியும்.
பாலி ஆய்வு முடிவுற்றது.
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக