Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)
3 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)
First topic message reminder :
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
#பாலி (Pali) – என்றதும் ‘நமக்குத் தொடர்பில்லாதது’ என்றே தமிழர்கள் நினைத்துக் கொண்டுள்ளார்கள்! இந்த நினைப்பை முதலில் மாற்றவேண்டும்! இதற்கான ஒரு முயற்சியே இப் பதிவு!
பாலி மொழிக்கு என்று தனி #எழுத்துமுறை (script) இல்லை . பாலி நூற்களிற் காணலாகும் மிகத் தொன்மையான எழுத்துமுறை யாதென்றால், #தமிழர்தம் #பிராமிதான்!
கீழ்வரும் பாலிச் சொற்களை ஒவ்வொன்றாகப் பார்த்துவாருங்கள்:-
1 . அக்கி (பாலி)
அக்கினி என்பது பொருள்.
‘அக்கினிச் சட்டி எடுத்து ஆடுதல்’ நாம் அறிந்ததுதானே?
2 . அங்குசகா (பாலி)
நம்மூர் யானைப் பாகன் கையில் கொண்டிருக்கும் அங்குசம்தான் இது!
3. அங்காரகன் (பாலி)
நம் தமிழ்ச் சோதிடர்கள் கூறும் அதே ‘அங்காரகன்’தான்! செவ்வாய்க் கிரகத்தைக் குறிக்கும்.
4. அங்குட்டா (பாலி)
‘அங்குஷ்டம்’ எனப் பழைய தமிழ் நூற்களில் வருவதுதான்; ‘கட்டை விரல்’ என்பது பொருள் .
மற்ற விரல்களைவிடப் பார்வைக்குக் குட்டையாக இருப்பது கட்டை விரல். ஆகவே இதன் அடிப்படையில், ‘குட்டை’ என்பது, ‘குட்டா’ எனப் பாலியிற் பயின்றுள்ளது; அவ்வளவுதான்! முன்னே உள்ள ‘அம்’ , முன்னொட்டு.
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் செல்லும்போது #முன்னொட்டு, #பின்னொட்டுகள் (prefix and suffixes) சேர்வது ஒரு #மொழியியல் (Linguistics ) இயல்பு.
இப் பாலி ஆய்வால் நாம் அறிவது யாதென்றால், ‘அங்குஷ்டம்’ என்ற சொல்லுக்கு முன்னே தோன்றியது, ‘அங்குட்டம்’ எனும் தமிழ்ச் சொல்; ‘அங்குட்டம்’ என்பதனை வேறுவிதமாக உச்சரிக்க விழைந்த தமிழர்கள் ‘ஷ்’ சேர்த்து, ‘அங்குஷ்டம்’ எனலாயினர்!
5. அங்குலா (பாலி)
‘ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுத்தர முடியாது!’ – சொல்கிறார்கள் அல்லவா? அதே ‘அங்குலம்’தான் , பாலியில் ’அங்குலா’!
நல்லவேளை , நம்மவர்கள் ‘அங்குஷ்லா’ என்றொரு சொல்லை உருவாக்கவில்லை!
இப்போதைக்கு , #ஈறுகளின் #மாற்றத்தை மட்டும் கவனியுங்கள்! தமிழின் #‘அம்’ #ஈறு, பாலியில் #‘ஆ’ #ஈறாகத் திரிந்துள்ளது! அவ்வளவுதான்!
6 . அஞ்னானா (பாலி)
‘அஞ்ஞானம்’ என்று நாமறிந்த சொல்தான் இது!
#‘அ’ #முன்னொட்டால் #எதிர்மறைப் #பொருள் #தமிழில் #ஏற்படும்!
சட்டைசெய் – உடன்பாட்டுச் சொல்
அசட்டைசெய் – எதிர்மறைச் சொல்
ஆகவே , ‘அ’ எனும் தமிழ் வேர்ச்சொல் தமிழுக்கும் பாலிக்கும் ஒன்றுதான்!
7 . அஞ்ஞானின் (பாலி)
ஞானி – உடன்பாட்டுச் சொல்
அஞ்ஞானி – எதிர்மறைச் சொல்
ஞானமற்றவன் , அஞ்ஞானி.
சற்றுமுன் சொன்னதுபோல, இங்கும் ‘அ’ முன்னொட்டு எதிமறைப் பொருளைத் தமிழில் தந்துள்ளதைக் கவனிக்க!
8. அடவி (பாலி)
காடு எனும் பொருள் தரும் அருமையான தமிழ்ச்சொல் ‘அடவி’!
தமிழ்ச்சொல் எந்த மாற்றமும் அடையாமல் , அப்படியே பாலியில் வந்துள்ளதைக் கவனியுங்கள்!
இங்கு நான் ஒன்றை உங்களுக்குக் கூறவேண்டும்!
பாலிச் சொற்களை ஆய்ந்தவர்கள், ‘இப் பாலிச்சொல்லுக்கு மூலம் சமஸ்கிருதமா ? இலத்தீனா? கிரேக்கமா?’ என்றெல்லாம் , பல சொற்களுக்கு , ஆய்வை ஓட்டியுள்ளார்களே தவிர ஒரு இடத்திற்கூட ’தமிழிலிருந்து வந்திருக்குமா?’ என்று பார்க்கவே இல்லை! பாலி ஆய்வாளர்களுக்குத் தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாதமாதிரித்தான் உள்ளது! தமிழை உலகளாவிய நிலையில் நாம் எடுத்துச் செல்லவில்லை என்பதை இது தெரிவிக்கிறது! ‘அவர் ஜெர்மனியில் வேலை செய்தவர்; இவர் கனடாவில் வேலை செய்தவர்’ என்று சில தமிழர்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்! ஆனால் , அவர்கள் வெகு கமுக்கமாக இருந்து, எங்கே, தமிழ் தொடர்பாக என்ன வேலை செய்கிறோம் என இங்கு மூச்சு விடமாட்டார்கள்! தமிழை உலகளாவிய நிலைக்கு நாம் எடுத்துச்சென்ற இலட்சணம் இதுதான்!
9 . அட்டா (பாலி)
பரண் என்பது பொருள்.
‘தலையணை பாயை அட்டாலையில் போட்டியா?’ – சிற்றூர்களிற் பாட்டி இரைவாள்!
‘அட்டாலைப் பலகை’ என்பதும் இதுவே.
சதுர அல்லது செவ்வக வடிவில் , சட்டங்களால் அமைக்கப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிற்றால் கட்டி உயரமாகத் தூக்கிக் கட்டியிருப்பர்; இதுவே #‘அட்டாலை’. பாலி மொழி தமிழகத்தில் அறியப்பட்ட காலத்தில் , தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
10 . அன்னா (பாலி)
அன்னம் – சோறு
தமிழ் ’அன்னம்’தான் , பாலி ‘அன்னா’! ‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடாதே’ – தமிழ்ப் பழமொழி.
தமிழ் ‘அம்’மீறு , பாலியில் மாறும் வகையைப் பார்த்துக்கொண்டே வாருங்கள்.
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com).
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (25)
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (25)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
241 . பரிவாரகா (பாலி)
பரிவாரகா – பரிவாரம்
‘பரிவாரம் சூழ அரசன் வந்தான்’- எழுதுவார்கள்.
பரிவாரம் – சூழ இருப்பவர்கள்
’பரி’ பற்றி முன்பே கண்டுள்ளோம்.
பரிவாரம் – சூழ்வோர் (திவாகர நிகண்டு)
பரிவார ஆலயம் – பரிவாரத் தேவதைகளுக்கான கோயில்.
242. பரிவித்தின்னா (பாலி)
பரிவித்தின்னா – வித்தாரம்
‘விஸ்தாரம்’ என்ற புதிய தமிழ் புரிகிறது; ‘வித்தாரம்’ எனும் பழைய தமிழ் புரிவதில்லை! இத்தனைக்கும் ‘வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோட தச்சுதாம்!’ என்ற பழமொழி ‘வித்தாரம்’ என்ற தமிழ்ச் சொல்லைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறது; நாம்தான் காதில் வாங்குவதில்லை!அந்த அளவுக்கு நம் காதுகள் வேற்றுச் சொற்களால் நிரப்பப்பட்டுள்ளன!
‘பரி’ என்ற தமிழ் உருபன் பற்றி முன்பே பார்த்துள்ளோம்.
243. பரிசுத்தா (பாலி)
பரிசுத்தா – பரிசுத்தம்
‘பரி’யின் பொருளை முன்பே கண்டோம்.
சுத்தம் – தூய்மை (தமிழ்ச் சூடாமணி நிகண்டு)
’சுத்தம் சோறுபோடும்’ – தமிழ்ப் பழமொழி
‘தமிழ்த் தேவாரத்தைச் சுத்தாங்கமாகப் பாடுவார்’ – ஓதுவார் மொழி.
244 . பலா (பாலி)
பலா – பலம் (எடையளவு)
1 பலம் – 41 கிராம் ( சிலவிடங்களில் 35 கிராம்)
‘பலம்’ தமிழர் கண்ட நிறை என்பதற்குப் பிங்கல நிகண்டு சான்று.
ஒருமொழிச் சொற்கள் இன்னொரு மொழிக்குப் போகும்போது , எடையளவுகள் கூடவே செல்லும் என்பதற்கு இவ்விடமே சான்று.
245 . பலாசா (பாலி)
பலாசா – பலாசம் (மரம்)
பலாசம் – புரச மரம்
‘பலாசம்’ என்ற மரப்பெயர் திருவிளையாடற் புராணத்தில் வருவதை மேற்கோள் காட்டுகிறது செ.சொ.பேரகரமுதலி.
தமிழ்ப் பிங்கல நிகண்டு பலாச மரத்தைக் குறிக்கிறது.
தமிழகத்தே செழித்து வளர்ந்ததோர் மரம் பலாசம். புத்தமதம் தமிழ் மண்ணில் செழித்திருந்த காலத்தே பலாச மரப்பெயர் ‘பலாசா’ எனப் பாலிச் சுவடிகளில் ஏறியதில் வியப்பில்லை.
246 . பல்லவா (பாலி)
பல்லவா – பல்லவம் (தளிர்)
‘பல்லவம்’ , தளிரைக் குறிப்பதற்குக் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டுகிறது தமிழ் லெக்சிகன். ‘தமிழில் கீர்த்தனை இலக்கியம்’ என்ற எனது நூலில் ‘பல்லவம்’ பற்றிய சொல்லாய்வைக் குறித்துள்ளேன்.
’பல்லவம்’ என்ற தமிழ்ச் சொல்லைப் ‘பஹ்லவம்’ எனத் திரித்து அல்லல் பட்டோர் பலர்!
247 . பவாதா (பாலி)
பவாதா – வாதம்
தமிழ்ச் சொல் முன்னே ‘ப’ சேர்த்துப் பல பாலிச் சொற்கள் உருவாகியுள்ளன என்பதை முன்னும் கண்டோம். ‘பவாதா’ என்ற பாலிச் சொல்லும் இப்படியே உருவாகியுள்ளது.
’பாலி’ எனும் பெயர் ஏற்பட்டதற்கே ‘ப’சேர்க்கும் இச் சிறப்புப் பண்புதான் காரணம் என்றுகூட நினைக்க இங்கு சிறிது இடம் உண்டு.
துறவிகளின் வல்லமையே வாதத் திறமைதான். சைவ, புத்த , சமண மதங்களுக்கு இது பொருந்துவதை மத ஆய்வாளர்கள் அறிவர். ஆகவே ‘பவாதா ’.
248 . பவேணி (பாலி)
பவேணி – வேணி (சடை)
தமிழ்ப் பிங்கல நிகண்டில் ‘வேணி’ என்பதற்குச் சடை எனும் பொருள் உள்ளது.
‘வேணி அலங்காரர்’ எனத் தமிழ்க் குறவஞ்சி நூற்களிற் காணலாம்.
வே – வேர்ச்சொல் ; ‘நிறைய’ , ‘தொகுதி’, ‘பெரிய’ என்றெல்லாம் பொருள் இவ் வேருக்கு உண்டு. வேணவா = பெரிய அவா.
தொகுதியாக இருந்த வீடுகளைக் குறிக்க ‘வேணி’ (= சேரி) எனும் சொல்லும் வந்துள்ளது.
இந்த அடிப்படையில்தான் ‘மயிர்த்திரள்’ எனும் பொருளில் ‘வேணி’ வந்துளது.
249 . பவேசா (பாலி)
பவேசா – பிரவேசம்
‘ஆலயப் பிரவேசம்’ – நமக்குப் பழக்கமான தமிழ்த் தொடர்தானே?
’உணர்ச்சிப் பிரவாகம்’ ; ‘வெள்ளப் பிரவாகம்’– தமிழ்த் தொடர்கள். ‘செல்லுதல்’ எனும் பொருண்மை ‘பிர’ எனும் தமிழ் உருபனுக்கு இருப்பதைக் காணலாம்.
பிரவாணி – நாடா (யாழ்ப்பாண அகராதி) ; நீளமாகச் செல்லுதல் எனும் பொருள் இங்கு உள்ளதை ஓர்மின்.
பிராணி – புதர்கள், மரங்கள், நீர் முதலியவற்றின் உள் நுழைவுகளில் வாழ்வதால் விலங்குகள் ‘பிராணி’ எனப்பட்டிருக்க வேண்டும். ‘செல்லுதல்’ எனும் பொருண்மையை இங்கு காண்க.
பிரவேசச் செலவு – பிரயாணச் செலவு ; இப் பொருளைப் பணவிடுதூதை மேற்கோள் காட்டிச் சொல்வது தமிழ் லெக்சிகன்.
பி – வேர்ச்சொல் ; பிர – பகுதி (stem)
‘பிரயாணம்’ , ‘பிரயாணி’ ஆகிய தமிழ்ச் சொற்களுக்கு இப் ‘பிர’வே பகுதி.
‘பிரவேசம்’ , ‘பவேசம்’ ஆனது #மரூஉ.
250 . பாகா (பாலி)
பாகா – பாகம் (பக்குவம்)
’நளபாகம்’ – நமக்குத் தெரியுமே! பாகக் கலையில் (சமையற் கலையில்) சிறந்தவன் நளன் என்பரே!
ப – வேர்ச்சொல் ; ‘பக்குவம்’ , ‘பாகம்’ முதலிய சொற்களை உருவாக்கியுள்ளது இவ் வேர்.
பாகபாண்டம் – சமையலுக்குரிய மட்பாண்டம் (யாழ்ப்பாணத் தமிழகராதி)
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (26)

251 . பாகாரம் (பாலி)
பாகாரம் – பிரகாரம்
‘பிர’ பற்றிச் சற்றுமுன் கண்டோம். அதே ‘பிர’தான் இங்கும்.
பிரகாரச் சுவர் – சுற்றுச் சுவர்
கோயிலில் நம் மக்கள் பிரகாரத்தைப் பலமுறை சுற்றி மகிழ்வரே!
‘இடமிருந்து வலமாக ஒரு நெறிப்படச் செல்லுதல்’ என்ற பொருளே ‘பிரகாரம்’ எனும் சொல்லில் உள்ளது.
‘காந்தி சொன்ன அந்தப் பிரகாரமே காங்கிரஸ் தொண்டர்கள் ஒழுக்கமாக நடந்துகொண்டார்கள்’ – தமிழ் உரைநடை.
‘பிரகாரம்’ , ‘பாகார’மாகப் பாலியில் மாறியது மரூஉ.
252.பாட்டா (பாலி)
பாட்டா – பாடம் (lesson or version)
‘பாடம் போற்றல்’ என நன்னூலில் வருவது, புத்தகப் பகுதியாகிய பாடம் (lesson).
‘சரண் ஆங்களே’ என்பதற்குச் ‘சரண் நாங்களே’ என்றும் பாடம். - இங்கே ‘பாடம்’ சொல்லமைக் (version) குறிக்கிறது.
‘படி’ அடியாகப் ‘பாடம்’ பிறந்துள்ளது.
தமிழ்ப் ‘பாடம்’, பாலியில் ‘பாட்டா’ ஆகியுள்ளது.
253 . பாணா (பாலி)
பாணா – பிராணன்
‘பிர’ அடியான தமிழ்ச் சொல்லே ‘பிராணன்’. ‘செல்லுதல்’ , ‘பரவுதல்’ முதலியன இதன் அடிப்படைப் பொருள்.
’சீவன்’ என்பதும் ‘பிராணன்’ என்பதும் பொருளால் ஒன்றே.
தமிழ்த் திவாகர நிகண்டு ‘பிராணன்’ என்பதற்கு ‘உயிர்’ என்றே பொருள் உரைக்கிறது.
’காலையில் நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தார்; பிறகு சற்று நேரத்தில் பிராணனை விட்டுட்டார் ’ . – வழக்கு.
254. பாதாளா (பாலி)
பாதாளா – பாதாளம்
‘பணம் பாதாளம் மட்டும் பாயும்’
‘அரண்மனைக்குள் ஒரு பாதாளச் சுரங்க இருக்காம்ல’- பேச்சு வழக்குகள்.
தரைக்குக் கீழே அரித்துச் செல்வதால் கரையான் , ‘பாதாள மூலம்’ எனவும் அறியப்படும்.
கிணற்றுள் விழுந்த பொருளை எடுக்கப் பயன்படும் கருவி, ‘பாதாளக் கரண்டி’!
‘பாதாளம் ஏழினும்’ - (திருவாசகம்)
பாதம் + அளம் = பாதாளம்
பாதம் – கீழே
அளம் – கடல்; கூர்மை
தரைக்குக் கீழே அளம்படச் செல்வதால் ‘பாதளம்’ ஆகிப் பின் ‘பாதாளம்’ ஆகியுள்ளது.
255 . பாதா (பாலி)
பாதா – பாதம்
பாதம் – கால்
‘கால்பந்து விளையாடிப் பாதம் வீங்கிவிட்டது.’ – பேச்சு.
‘பாத மூலம்’ எனப்படுவது குதிங்காலையே.
’பாதாதி கேச உவமா அலங்காரம்’ என்றே தமிழ்ச் சிற்றிலக்கிய வகை ஒன்று உண்டு.
தரையில் பதிவதால் அது, ‘பாதம்’.
256 . பானா (பாலி)
பானா – பானம்
பருகுவதால், அது பானம் ; ப – வேர்ச்சொல்.
பானகம் – இது தமிழர்க்கே உரிய குடிநீர் அல்லவா? ’பானகம்’ என்பது ‘பானாக்கம்’ எனவும் சொல்லப்படும் தமிழகத்தில்.
யாழ்ப்பாண அகராதி , ‘பானகம்’ என்பதற்குக் ‘குடிக்கை’ என்று பொருள் நல்கியுள்ளது.
257 . பாபா (பாலி)
பாபா – பாவம்
இந்தப் பாவம், ‘ஐயோ பாவம்’!
‘பகைபாவம்’ – திருக்குறள்.
‘பாவச் செயல்’ , ‘அந்தப் பாவம் எனக்கு வேண்டாம் ’ , ‘பாவபுண்ணியம்’ – தமிழர் நாவிற் புழங்குவன.
‘பாவம்’ எனும் தமிழ்ச் சொல், ’பாபா’எனச் சில திராவிட மொழிகளில் இன்றும் உள்ளது. (திராவிட மொழிகள், தமிழிலிருந்து பிரிந்தவை என மறவற்க) .
பா – வேர்ச்சொல்; ‘பாழ்’ முதலிய ‘தீச் செயல்’ அல்லது ‘அழிவுச் செயல்’ குறிக்கப்படுவதை நோக்குக. இந்த அடிப்படையில்தான் ‘பாவம்’ எனும் தமிழ்ச்சொல் உருவாகியுள்ளது.
258 . பாயாசா (பாலி)
பாயாசா – பாயசம்
பா- வேர்ச்சொல் ; அன்னம் போல இலாது , நீர்க்கலவையாக , பரவியபடி, இருப்பதால் இவ்வேரால் ‘பாயசம்’ எnற சொல்லைத் தரமுடிந்தது.
‘கன்னலமுது’ , ‘கண்ணமுது’, ’திருக்கண்ணமுது’ என்று கூறப்படுவதும் இதுவே.
‘பாயசம்’ என்பதே ‘பாயாசம்’ எனப்பட்டது.
259 . பாலகா (பாலி)
பாலகா – பாலகன் (காவலாள்)
துவார பாலகர் – வாயிற் காவலர் ; துவாரம் – வாயில்.
வாயிலைப் பார்த்துக்கொள்வதால் - பாலனம் பண்ணுவதால் - அவன் பாலகன்.
260 . பாசா (பாலி)
பாசா – தளைத்தல்; கட்டுதல்
பாசக் கயிறு – கட்டும் கயிறு
‘எம கிங்கரர்கள் பாசக் கயிற்றுடன் வந்தனர்’ – புராணிகர் மொழி.
பாசம் – கயிறு (சூடாமணி நிகண்டு)
ப – வேர்ச்சொல்
பற்றுவதால் , அது ‘பாசம்’!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (27)
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (27)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
261 பிங்கா (பாலி)
பிங்கா – பிங்கலம் (நிறம்)
‘மாடு , பிங்கல நிறமுடையது’ என்பர்; பழுப்புக் கலந்த சிவப்பு நிறத்தது என்பது பொருள்.
பிங்கல நிறத்தைப் ‘பொன்னிறம்’ என்கிறது திவாகர நிகண்டு.
பிங்கல நிகண்டு எழுதிய பிங்கலர், இந் நிற அடிப்படைப் பெயர் கொண்டவராக இருத்தல் வேண்டும்; ‘வெள்ளையன்’ போன்ற பெயர்கள் சான்று.
அகராதிகளில் , ‘பிங்கலன்’ என்பதற்கு ‘நெருப்பு’, ‘சூரியன்’ , ‘சிவன்’ என்று பொருட்கள் தரப்பட்டுள்ளன.
ஆகவே, ‘பிங்கலம்’ என்பதற்குரிய தமிழ்த் தன்மை இதனால் தெளிவாகிறது.
262 . பிண்டா (பாலி)
பிண்டா – பிண்டம் (உருண்டை; திரள்பொருள்)
’நீத்தார் நினைவு நாளில் இலையில் பிண்டம் வைத்து வழிபடுவர்’ – வீட்டு வழக்கு.
’பிண்ட பாதம்’ – யானை ; திரண்ட பாதம்.
‘பிண்டப் பொருள் ’ - திரண்ட பொருள்.
குழந்தைக் கருவின் தோற்றத்தைப் ’பிண்டத் தோற்றம்’ என்றனர் தமிழ் மக்கள்.
‘பிண்ட’ எனும் தமிழ்ச் சொல்தான் #இருக்கு #வேதத்தில், ‘திரளை’ , ‘உண்டை’ எனும் பொருட்களைத் தந்துநிற்கிறது எனக் குறிக்கிறது செ.சொ.பேரகரமுதலி.
263 . பிதர் (பாலி)
பிதர் – பெற்றோர்
‘பெற்றவர்’ எனும் தமிழ், ‘பெத்தவர்’ ஆக, அதைப் பாலி, ‘பிதர்’ ஆக்கிக் கொண்டது.
அஞ்ஞான்று, ‘பிதர்’ ஆனது #‘பித்ரு’ ஆயிற்று; சடங்குகளில் அதுவே நிலை பெற்றது.
தமிழ்ச் சொற்களின் மரூஉ, திரிபுகளை நிலைப்படுத்தி, வேற்றுச் சொற்களோ என மருளச் செய்யச் #சடங்குகள்(rituals) பெரும் பங்கு வகித்துள்ளன.
264 . பித்தா (பாலி)
பித்தா – பித்தம்
‘வாதம், பித்தம், கபம்’ எனத் தமிழ்ச் சித்தமருத்துவம் கூறிய மூன்று நாடிகளில் ஒன்று ‘பித்தம்’.
‘அது பித்தவாந்தி’ – கிராம வழக்கு.
‘பித்தம் தலைக்கேறி , மயங்கி விழுந்தாள்’ – மக்கள் அனுபவம்.
‘பித்தக் கரப்பான்’ , ‘பித்தக்கனல்’ என்பனவெல்லாம், ‘பித்தம்’ காரணமாக நம்முள் உருவாகும் நோய்களே!
தமிழ்ச் சித்த மருத்துவக் கலைச்சொல்லை அரைகுறையாகக் கற்றுக்கொண்டவர்கள் ‘பித்தம்’ என்பதைப் ‘பிதா’ என உச்சரித்து அதையே உலகம் முழுதும் பரப்பும் கொடுமையை என்னவென்பது?
265 . பிள்ளக்கா (பாலி)
பிள்ளக்கா – பிள்ளை
‘நீங்கள் எல்லாம் பிள்ளக்காப் பசங்கடா; உங்களுக்கு என்ன தெரியும்?’ – இப்படி நாடகம், திரைப்படங்களில் கேட்டிருக்கலாம்.
அந்தப் ‘பிள்ளக்கா’ , ஒரு பாலிச்சொல் என்பது இன்று தெரியவருகிறது.
அஃதாவது , ‘பிள்ளை’ , ‘பிள்ளைங்க’ , முதலிய தமிழ்ச் சொற்களே ‘பிள்ளக்கா’ ஆகியுள்ளது.
தவிரவும் ‘அக்கா’ எனும் அசைச் சொல் சேர்ப்பது தமிழ் மரபே. ‘கிளியக்கா’ , ‘சுப்பக்கா’ முதலிய இடங்கள் சான்று.
266 . பிசாசா (பாலி)
பிசாசா - பிசாசு
‘இயக்கர் ’ , ’விச்சாதரர்’ , ‘பிசாசர்’ – இவர்கள் ‘பதினெண் கணத்தா’ருள் , தமிழில் குறிப்பிடப்படுவோரே. இவர்கள் அரசர், அரண்மனை, செல்வர் சார்ந்த பணியாளர்களே; தமிழகத்தில் இருந்தோரே; அங்குமிங்கும் இயங்கி வேலை செய்பவர்கள் , ’இயக்கம்’ காரணமாக ‘இயக்கர்’ எனப்பட்டனர்; அவ்வளவுதான்! ‘ஏவல் கூவல் கேட்போர்’ இவரே; ‘இயக்கர்’ என்போரை ‘யக்ஷர்’ என்று நம்மனோர் உச்சரித்து எழுதியதால் தமிழ் வழக்கு மாண்டது!
‘பிசாசு’ என்பதற்கு வேர்ச்சொல் ‘பி’ ; ‘பிற’ , ‘பிறிதானது’ என்ற பொருண்மை கொண்டது .
வழக்கமான கரும்பிலிருந்து வேறுபட்ட கரும்பைப் ‘பேய்க் கரும்பு’ என்பர். பேய் , கரும்பு சாப்பிட்டதா? ‘பேய்க்கொம்மட்டி’ என்று இன்னும் பலவற்றைக் கூறலாம்.
வழக்கமான இயல்பிலிருந்து மாறுபட்ட குணங்களை உடைவனைப் பார்த்து , ‘இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ என்று கூறலாயினர். வயிற்றுவலியால் துன்புற்ற பெண்ணைப் ‘பேய் பிடித்தவள்’ என்று சொல்லி அவளை அடியோ அடி என்று அடித்ததை நானே பார்த்துள்ளேன். இதெல்லாம் மக்களின் மூடநம்பிக்கைகள்.
தமிழ்ச் சொற்கலைச் சரியாக விளங்கிக் கொள்ளாததும் , தமிழர்களின் மூட நம்பிக்கைகளை நெய்யூற்றி வளர்த்துள்ளது! ‘காலில் சுளுக்குப் பிடித்துள்ளது’ என்போம்; ‘சுளுக்கு’ என்ற பேய் நம் காலைக் கவ்விப் பிடித்துள்ளதா? நல்ல வேளை ‘சுளுக்குப் பேய்’ என்று யாரும் கூறவில்லை!
மற்றவர்கள் செய்யும் வேலையைவிடக் கூடுதலாகச் செய்பவனைப் பார்த்து , ‘ஆள் பிசாசா வேலை செய்கிறான் ஐயா’ என்கிறோம் அல்லவா? அவனுடைய மாறுபட்ட தன்மையைச் சுட்டப் ‘பிசாசு’ வருகிறது பாருங்கள்!
267 . பீடிகா (பாலி)
பீடிகா – பீடம்
பீடு – பெருமை ; சிலப்பதிகாரத்தில் இச் சொல் வருகிறது.
உயர்வான, மேலான, பெருமைக்குரிய இடம் – பீடம்.
பலி கொடுக்கும் இடம் – பலிபீடம்
விக்கிரகம் நிறுத்தும் இடம் – விக்கிரகப் பீடம்
அரசன் அமரும் அரியணை – பீடம்
268 . புச்சா (பாலி)
புச்சா – வால்
புச்சத் தலம் – குதம் (பிங்கல நிகண்டு)
புச்சம் – மயிலின் தோகை
ஆகவே ‘புச்சம்’ என்பதே பாலியில் ‘புச்சா’ என நின்றது எனவாகிறது.
உண்மை இப்படியிருக்க, ‘punar’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து ‘புச்சா’ எனும் பாலிச் சொல் வந்திருக்கவேண்டும் என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்!
பல அடிப்படையான தமிழ் வரலாறுகள் இப்படி மாண்டொழிந்துள்ளன!
269 . புஞ்ஞா (பாலி)
புஞ்ஞா – புண்ணியம்
‘பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்’ – வடலூர் இராமலிங்கர் .
புண்ணியம் – நல்வினை
‘இதைச் செய்யுங்கள் , உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்’ – தமிழ் வழக்கு.
‘புண்ணிய கருமம்’ – நற்செயல்
‘புள்’ – அடிச்சொல்; ‘துளைத்து வருவது’ , ‘முன் செய்த் செயலின் பலன் பின்னும் ச்ர்ல்வது ’ என்ற பொருண்மைகளில் இந்த அடி (stem) வருகிறது.
‘புண்ணியம்’ என்பதை , நம்மனோரிற் சிலர் , மற்ற தமிழர்களை மட்டப்படுத்தும் நோக்கோடு, ‘புண்யம்’ என எழுதி, அரசவை முதலிய இடங்களில் இடம்பிடித்தனர் என்பது நம் மக்கள் வரலாறு.
270 . புடா (பாலி)
புடா – புடம் (container)
‘புடகம்’ – இலைத் தொன்னை
தமிழ்ப் பொற்கொல்லர்கள் தங்கத்தைப் புடம் போட்டுக் கொண்டிருந்தபோது , ‘புடம்’ எனும் சொல் பாலி சென்றுள்ளது.
‘புடபாத விதி’ என்றே புடமுறைகள் பற்றிய ஒரு நூல் இருந்ததாகப் பெயரளவில் அறிகிறோம் (செ.சொ.பேரகரமுதலி).
முன் சொன்ன ‘புள்’ என்பதே இதற்கும் பகுதி; ‘உட்செல்லல்’ எனும் பொருண்மைத்து.
***
(கருவி நூல் : Poli – English Dictionary by T.W.Rhys Davids and William Stede, Pali Text Society , www.buddhistboards.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (28)
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (28)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
271 . புன்னாகா (பாலி)
புன்னாகா – புன்னாகம் (மரம்)
புன்னாகம் – புன்னை மரம் (பிங்கல நிகண்டு)
தமிழக ஆண்பாற் பெயர்களில் ‘புன்னைவனம்’ என்பதும் ஒன்று; என் உறவினர் ஒருவருக்கு இப்பெயர் உண்டு.
சங்க இலக்கியம் குறிக்கும் மரம் ‘புன்னை’.
புன்னை , ‘புன்னாகம்’ , ‘பூநாகம்’ எனவும் அறியப்படும்.
‘இந்தப் புன்னை மரம் , உன் தங்கை’ எனத் தாய் ஒருத்தி தன் மகளிடம் கூறுவதாகத் தமிழ்ச் சங்க இலக்கியம் பாடுகிறது.
272 . புரா (பாலி)
புரா – புரம் (நகர்)
புரம் – நகர் (பிங்கல நிகண்டு)
’காஞ்சிபுரம்’ – காஞ்சி நகர்
தேவாரத்தில் வரும் ‘புரந்தரன்’ , கோட்டையை உடையவனாகிய இந்திரனைக் குறிக்கும் என்ப. எனவே ‘புரந்தரன்’ , ‘வேற்றுச்சொல்லோ’ என மயங்கற்க!
273 . பகுளா (பாலி)
பகுளா – வகுளம் (மரம்)
வகுள மரம் – மகிழ மரம்
பாலிச் சொற்கள் ‘ப’வை முதல் ஒலியாகக் கொண்டு தொடங்கும் ஓர் இயல்பைக் கொண்டுள்ளதை நாம் முன்பே கண்டோம்.
வங்க மொழியில் தமிழ் ‘வ’ ஒலிக்குப் பகர ஒலியையே கொடுக்கின்றனர்; நாம் ‘வசந்தி’ என்றால் , வங்காளிகள் ‘பொசந்தி’ என்கிறார்கள்.
பாலி – வங்க மொழி ஒப்புமை இவ்வகையில் ஆயத்தக்கது.
சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில், ‘வகுளம்’ குறிக்கப்படுகிறது.
274 . பதரீ (பாலி)
பதரீ – வதரி
வதரி – இலந்தை மரம் (சூடாமணி நிகண்டு)
ஆழ்வார்கள் அருந்தமிழில் ‘வதரி’ என்று பாடிய வைணவத் தலத்தை (உத்தராகண்ட் மாநிலம்) நம்மனோர் ‘பத்ரி’ என மாற்றித் தமக்குள் தாமே ஓர் உயர்வை(?)க் கற்பித்துக்கொண்டனர்.
275 . பந்தா (பாலி)
பந்தா – பந்தம் (உறவு)
‘திருமணப் பந்தம்’ என்கிறார்கள் அல்லவா? அந்தப் பந்தம்தான் இது.
‘சொந்த பந்தம்’ – தமிழ் வழக்கு.
ப – வேர்ச்சொல் ; ‘பந்து’ , ‘பந்தம்’ முதலிய சொற்களை இவ் வேர் உருவாக்கியுள்ளது; ’பற்றுதல்’ எனும் பொருண்மை இந்த வேருக்கு உண்டு.
’தீப் பந்தம்’ – துணியைப் பந்துபோற் சுற்றித் தீயைப் பற்றவைத்துக் கையில் பிடிப்பது.
276 . பலா (பாலி)
பலா – பலம் (strength)
ப – வேர்ச்சொல் ; ‘பருத்தது’ முதலிய தமிழ்ச் சொற்களைத் ’தடி’ என்ற பொருண்மையில் உருவாக்கியுள்ளது.
‘பலசாலி’ – பலம் நிறைந்தவன்
‘பீமன் பலசாலி’ – பாரதக் கதை
‘பலமான எதிர்க் கட்சி , மக்களாட்சிக்குத் தேவை’ – அரசியல் ஆய்வாளர்கள்.
‘பலா’ எனும் பாலிச் சொல், எங்கிருந்து பாலிக்கு வந்ததாம்? ‘de-bilis’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து வந்திருக்கலாமாம்! எழுதியுள்ளார்கள்!
277 . பலவந்த் (பாலி)
பலவந்த் – பலவந்தன்
பலவந்தன் – வலிமையுள்ளவன்
’பலவந்தன்’ , ‘வலவந்தன்’ எனவும் தமிழில் எழுதப்படும்
‘பல’ எனுமடி , ‘பலம்’ எனும் பொருளுக்கும், ‘வல’ எனுமடி ‘வலிமை’ என்பதற்கும் நிற்கிறது.
‘பலவந்தமாக அவள் கையைப் பிடித்து நீ இழுத்திருக்கிறாய்’ – பஞ்சாயத்தில் கூற்று.
‘வலவந்தமாக அவன் தலையைச் சுவற்றில் மோதியுள்ளாய்’ – பஞ்சாயத்தார் சொல்.
278 . பலி (பலி)
பலி – பலி (sacrificial offering )
‘பலி’ எனும் தமிழ்ச் சொல் புறநானூற்றில் வருகிறது; அகநானுற்றிலும் காணப்படுகிறது.
ப – வேர்ச்சொல் ; ‘படை’ , ‘படையல்’ முதலிய சொற்களை உருவாக்கிய அதே பொருண்மையில்தான் ‘பலி’யையும் உண்டாக்கியுள்ளது.
‘உயர் அதிகாரிகள், ஆகக் கீழ்மட்ட அலுவலரைப் பலிகடா ஆக்குவது வழக்கம்’ - ஆட்சியியல் ஆய்வாளர் எழுத்து.
‘பலி’ (pali) என்றுதான் உச்சரிக்க வேண்டும் ; ‘bali’ என உச்சரித்துத் தமிழ்ச் சொல்லை வேற்றுச் சொல்லாகக் கொண்டுபோகக் கூடாது.
தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களை எல்லாம் தவறாகவே உச்சரித்து, வெற்றிகரமாகத் தமிழ்ச் சொற்களையெல்லாம் வேற்றுச் சொற்களாக மாற்றும் சூழ்ச்சி அரங்கேறி வருகிறது!
279 . பகு (பாலி)
பகு – வெகு
வெகு – அதிக
வெகுபேர் – அதிகப்பேர்
‘நாட்டு விடுதலைக்காக உழைத்தவர்களை வெகுவாகப் பாராட்டினார்’ – இதழ் மொழி.
‘வெகு நாட்கள் இதற்காகக் காத்திருந்தேன்’ – மேடைச் சொல்.
வெ – வேர்ச்சொல் ; ‘வெள்ளம்’ , ‘வெளி’ முதலியவற்றில் ‘மிகுதி’ப் பொருண்மை இருப்பதை உணர்வீர்.
சொற்களின் முதலொலியாகப் ‘ப’வை வைப்பதில் பாலி முனைப்புக் காட்டுவதை இங்கும் காண்கிறோம்.
‘பகு’ எனும் பாலிச்சொல் எந்த மொழியிலிருந்து பாலிக்கு வந்திருக்கலாமாம்?
சிரிக்காமல் படியுங்கள்-
“ paxqs எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து பாலிக்குப் ‘பகு’ வந்திருக்கலாம். ”
280 . பிம்பா (பாலி)
பிம்பா - பிம்பம் ( உருவம்)
பி – வேர்ச்சொல் ; ‘பிரதி’ முதலிய சொற்களை ‘உரு’ , ‘உருவம்’ முதலிய பொருண்மைகளில் இவ் வேர் உருவாக்கியுள்ளது.
தமிழ் ஆகமம் எனும் தமிழ்ச் சிற்பக்கலை நூlலில் ‘பிம்பம் செய்முறை’ என்பது உருவங்கள் செய்யும் முறையே.
‘உருவம்’ எனும் சொல் இருக்கும்போது , ‘பிம்பம்’ எனும் சொல்லை உருவாக்கும் தேவை தமிழ் விசுவகர்மர்களுக்கு ஏற்பட்டது!
கரையில் நிற்பவனின் தோற்றத்தை ‘உருவம்’ என்று சொல்லிவிடலாம்; அதே ஆளின் தோற்றம் நீருக்குள் தெரியும்போதும் ‘உருவம்’ என்றால் அக் கலைஞனுக்கு ஒரு குழப்பம் வருகிறது; அதை நீக்கத்தான், நீருக்குள் தெரியும் தோற்றத்தைப் ‘பிம்பம்’ எனும் சொல்லால் குறிக்கலானன். இதுதான் தமிழ்ச் சொற்கள் உருவான வரலாறு! உடனே நம்மனோர், ‘உருவம்’ தமிழ்ச் சொல்; ‘பிம்பம்’ வேற்றுச் சொல் என்று , எந்த ஆராய்ச்சியு மில்லாமல் கூறிவிட்டனர்! ***

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (29)

281 . பிலா (பாலி)
பிலா – பிலம் (பாதாளம்)
பிலத்துவாரம் – பாதாள வாயில்
‘வாலி பிலத்துவாரத்துள் நுழைந்தான்’ – இராமாயணக் கதை.
எலிவலை , ‘பிலம்’ எனவும் கூறப்படும் தமிழில்.
பி +ல்+அம் = பிலம்
பி – வேர்ச்சொல்; ‘பிளவு’ முதலிய சொற்கள் ‘உட்புகல்,’ , ‘உள்வழி’ முதலிய பொருண்மைகளின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டுள்ளன.
ல் – எழுத்துப் பேறு
அம் – விகுதி.
282 . பீஜா (பாலி)
பீஜா – வீசம் (விதை)
வீசம் – விதை (பிங்கல நிகண்டு)
விதைக்கப் படுவதால் , அது ‘வீசம்’.
‘வீசம்’ , ‘பீசம்’ என ஆகிப், பிறகு நம்மனோரால் , வழக்கம் போலப் ‘பீஜம்’ ஆனது; பாலிக்குப் போகும் போது ‘பீஜா’ !
283 . கட்டியா (பாலி)
கட்டியா – கத்தியர் (கத்தி உடையவர்)
‘கத்தி’ என்பது, ‘கட்டி’ ஆனது மரூஉ.
284 . சக்கவர்த்தி (பாலி)
சக்கவர்த்தி – சக்கரவர்த்தி
சக்கரவர்த்தி - ‘திகிரி மன்னவர்’ (சூடாமணி நிகண்டு)
சக்கரவர்த்தி – ஆண்பாற் பெயர்
சக்கரவர்த்தினி – பெண்பாற் பெயர்
‘தீதின்று உருள்க நீ ஏந்திய திகிரி’ என்ற மணிமேகலை அடியால் , யாருடைய ஆணையானது அவனின் பரந்த ஆட்சி எல்லை முழுதும் செல்லுபடி ஆகிறதோ அவனே ‘திகிரி காவலன்’ எனும் ‘சக்கரவர்த்தி’ ஆவான்.
தமிழ்ச் சொல்லாகிய ‘சக்கரம்’ என்பதிலிருந்து உருவான ‘சக்கரவர்த்தி’ என்பதும் தமிழ்ச் சொல்தான்; இவ்வாறான ஆய்வு எதையும் செய்யாமல் , ‘சக்கரவர்த்தி’ தமிழல்ல என்று இவர்களாகவே கருதிக்கொண்டு ’அரசர்க்கரசன்’ என தமிழ்சொல் ஒன்றை உருவாக்கிக் கொண்டனர்! “சரி! அப்போ ‘சக்கரவர்த்தி’ என்று குறிப்பிட்டுப் பேசும் வரலாறுகள் எத்தனையோ உள்ளனவே, அவையெல்லாம் தமிழ் வரலாறு இல்லையா?” .
தமிழ் ஆய்வில் உள்ள மிகப்பெரிய ‘சவால்’ என்னவென்றால் பிழையான தமிழர் கருத்துகளை – முடிவுகளைச்- சரிசெய்வதே!
285 . சீகா (பாலி)
சீகா – சிங்கம்
‘சிங்கம்’ , ‘சீயம்’ – ஒருபொருட் பன்மொழிகள்
சீயாசனம் = சிங்காசனம்= சிம்மாசனம்
சீ + ய்+ அம் = சீயம்
சீ – வேர்ச்சொல் ; ய் – எழுத்துப் பேறு ; அம் - விகுதி
சிங்கம் = சி + ங் + க் + அம்
சி – வேர்ச்சொல் ;ங் – இனவெழுத்துச் சந்தி ; க் – எழுத்துப் பேறு ; அம் – விகுதி.
286 . போ (பாலி)
போ – போதி (மரம்)
போதி மரம் – அரச மரம்
போ – தமிழ் அடிச்சொல்லாகிய இது, தனித்துப் பாலியில் ஒரு சொல்லாய் நின்றுள்ளதைக் காண்மின்.
‘போ’ எனும் தமிழ் அடிச்சொல்லுகு முந்தைய வடிவம் ‘பொ’ எனும் வேர் ; இதுவே ஆதி நீழலாகப் ‘போ’ ஆனது ; அந்தக் கட்டத்தில்தான் பாலி சென்று அங்கு தங்கியது.
பொ + த் + இ = பொதி
பொ – வேர் ; த் – எழுத்துப் பேறு ; இ – உடைமை விகுதி
அஃதாவது , பொதிந்துள்ளதால், அது ‘பொதிமரம்’ ; அரச மரத்தை உற்றுப் பாருங்கள் ; ஆல மரம் போலப் படராது, ஓரிடத்தில் பொதிந்து காணப்படும்; ‘பொதி மரம்’ என்பதே ‘போதி மரம்’ ஆயிற்று!
287 . ப்யாதி (பாலி)
ப்யாதி – வியாதி
‘வியதி’ என்ற தமிழ்ச் சொல்லே ‘வியாதி’ ஆனது.
‘வேற்றுமை அணி’க்கு ‘வியதிரேக அணி’ என்றொரு பெயர் உண்டு(செ.சொ.பேரகரமுதலி)
‘விய’ எனும் தமிழ் அடிக்கு , ‘வேறாதல்’ எனும் பொருள் இருப்பது இதனால் தெளிவாகிறது. உடல் நிலையானது , வழக்கம் போல இல்லாது சற்று வேறுபட்டுக் காணப்படுவதே ‘வியாதி’.
‘வியாதி’ என்ற தமிழ், பாலியில் ‘ப்யாதி’ என ஆகியுள்ளது.
பாலிச் சொற்கள் ‘ப’ ஓசையைச் சொல்லின் முன் நிறுத்துவதை இயல்பாகக் கொண்டவை என்பதை நமது ஆய்வில் பார்த்துவருகிறோம்.
288. ப்யூஹா (பாலி)
ப்யூஹா – வியூகம்
வியூகம் - படைவகுப்பு
‘எதிர்க் கட்சிகள் வியூகம் வகுக்கின்றன’ – இதழ்கள்.
‘அபிமன்யு சக்கர வியூகத்துள் மாட்டிக்கொண்டான்’ – பாரதம்.
சற்றுமுன் பார்த்த ‘விய’ அடிப்படையில் தோன்றிய தமிழ்ச் சொல்லே ‘வியூகம்’ ; ‘வியாபித்த முறை கூறுவதே ‘வியூகம்’.
289 . பிரம்மா (பாலி)
பிரம்மா - பிரம்மா
பி – வேர்ச்சொல்; ‘பிறப்பிப்பது’ , ‘உண்டாக்குவது’ என்ற பொருண்மைகளை இவ்வேர் உருவாக்கும்.
உயிர்கள் , சடப்பொருட்கள் உண்டாகின்றன அல்லவா? அவ்வாறு உண்டாவதற்குக் காரணமான இயற்கைச் சக்தியைத்தான் ‘பிரம்மா’ என்றனர் தமிழர். நாளடைவில் எங்கோ வானத்தில் வசதியான நாற்காலியில் , பணிப்பெண்கள் சூழ அமர்ந்திருப்பவர் என்று சித்திரித்து விட்டனர்; சித்திரித்தவர்களும் தமிழர்களே!
மழையை ‘மழைக்கடவுள்’ என்று குறித்த தமிழர்கள்தான், படைப்புகள் நடைபெறுவதற்கான இயற்கையைப் ‘பிரம்மா’ என்றனர்.
‘பிரம்மா’வை ஆங்கிலத்தில் ‘Brahma’ என எழுதப்போக, இன்று ஜப்பானியர் ‘பிராஹ்மா’ என்றே சொல்லிவருகின்றனர்!
290. பாகா (பாலி)
பாகா – பாகம் (part)
‘உடம்பின் பாகங்கள்’ எனில், ‘உடம்பின் உறுப்புகள்’ என்பது பொருள்.
’சொத்தை நான்கு பாகமாகப் பிரித்துக் கொடுத்தார்’ எனில், ‘பாகம்’ என்பது ‘பகுப்பு’ என்றாகிறது. சூடாமணி நிகண்டில் ‘பாகம்’ என்பதற்கு இப்பொருள் தரப்பட்டுள்ளது.
பகுக்கப்படுவதால் , அது ‘பாகம்’ ஆயிற்று.
‘பகுதி’ என்றால் தமிழ் எனவும் ‘பாகம்’ என்றால் வடசொல் என்றும் சொல்லும் நம்மனோர் உளர்! ’பகுதி’க்கும் ‘பகு’தா அடி, ‘பாகம்’ என்பதற்கும் ‘பகு’தானே அடிப்படை?

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (41)
படிக்க படிக்க பார்க்க ஆசை பாலி தீவை !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (30)
பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (30)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
291 . பாரா (பாலி)
பாரா – பாரம் (weight)
‘வண்டி பின்பாரம் தாங்காமல் குடைசாய்ந்துவிட்டது’ – தமிழ்க் கிராமச் சொல்.
‘குடும்பப் பாரம் தாங்காமல் , ஆள் சந்நியாசியாகிப் போய்விட்டார்!’ - தமிழ்ப் பேச்சு.
பாரம் – கனம் (சூடாமணி நிகண்டு)
’பாரமும் இலமே’ (புறநானூறு)
ப – வேர்ச்சொல் ; ‘பரு’ முதலிய சொற்களைக் ‘கனம்’ எனும் பொருண்மை தோன்ற உருவாக்கயது இவ்வேர்.
292 . பும்மி (பாலி)
பும்மி – பூமி
பூ – மொட்டு மலர்ந்து விரிவதால் – பூப்பதால் - அது ‘பூ’
எனவே , ‘பூ’ எனும் ஓரெழுத்து ஒருமொழிக்கு ‘விரிந்த’ என்ற பொருளைக் காண்கிறோம்.
உலகம் , விரிந்ததாகலின் , ‘பூ’ அடிப்படையில் ‘பூமி’ ஆயிற்று.
பூ + ம் + இ = பூமி ; பூ – வேர் ; ம் – எழுத்துப் பேறு ; இ – உடைமை விகுதி.
பூவுலகு – விரிந்த உலகு
‘பூமி’ , ‘பும்மி’ எனப் பாலியில் வந்தது மரூஉ.
பூமி (poomi) என்றுதான் சொல்லவேண்டும் ; ‘boomi’ என்று உச்சரித்து, அதை வேற்றுமொழிச் சொல்போல ஆக்கக் கூடாது ! குறிப்பாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவோர் இதைக் கவனிக்கவேண்டும்.
293 . பேரி (பாலி)
பேரி – பேரிகை (kettle-drum)
‘பேரி’ , ‘பேரிகை’ – இரண்டுமே தமிழ் வடிவங்கள்தாம்.
சிறிய உடுக்கிலிருந்து வேறுபடுத்துவதற்காகப் , ‘பெரிது’ என்பதைச் சுட்ட ‘பேரி’ என வந்தது.
பே + ர்+ இ = பேரி ; பே – வேர்ச்சொல் ; ர் – எழுத்துப் பேறு ; இ – உடைமை விகுதி.
பேரி + கை = பேரிகை ; பேரி – பகுதி ; கை – சொல்லாக்க விகுதி.
294 . போகா (பாலி)
போகா – போகம்
போதல் – செல்லுதல் ; ஒன்றில் ஈடுபட்டுத் திளைத்தல்
இரண்டாம் போகம் – இரண்டாம் முறையாகச் சாகுபடிக்குச் செல்லுதல்(போதல்).
‘வீட்டை ஏகபோகமாக அவனே அனுபவித்தான்’ – என்றால் ‘வீட்டை அவன் ஒருவனே அனுபவிக்கும் செயலில் ஈடுபட்டவன்’ என்பது பொருள்.
போ + க்+ அம் = போகம்
போக்கியம் – நுகர்ச்சிக்குரிய பொருள் (தமிழ் லெக்சிகன்)
எனவே , ‘போகம் (poham)’ என்றுதான் உச்சரிக்கவேண்டும் ; ‘bogam’ என்று சொல்லக்கூடாது; அது மொழிச் சிதைவுக்கு வழிவகுக்கும்.
295 . போஜனா (பாலி)
போஜனா – போசனம்
‘பொய்சொன்ன வாய்க்குப் போசனம் கிடைக்காது’ – தமிழ் மக்கள் மொழி.
போசனம் – புசிக்கை (சூடாமணி நிகண்டு)
யாக போசனர் – கடவுளர் (யாழ்ப்பாண அகராதி)
புசிக்கப்படுவதால், தமிழில் அது ‘போசனம்’ ஆயிற்று.
‘போசனம்’ , நாளடைவில் ‘ஊட்டச்சத்து’ என்ற பொருளிலும் வரலாயிற்று. ; ’சிறுவன் கொழுகொழுன்னு இருக்கான் , நல்ல போசாக்கு!’ ;.
‘போசாக்கு’ என்ற வடிவம் உள்ளதே தவிரப் ‘போஜாக்கு’ எனும் வடிவம் புழக்கத்தில் இல்லை.
296 . மகரா (பாலி)
மகரா – மகரம் (மீன்)
மகரக் கொடியோன் – மீனைக் கொடியில் வரைந்த மன்மதன்
மகரக் குழை – மீன் வடிவிலான குண்டலம்
‘ம’ – வேர்ச்சொல் ; ‘மச்சம்’ முதலிய தமிழ்ச் சொற்களை இதுவே உருவாக்கியது; அதே முறையில்தான் ‘மகரம்’ என்பதும் உண்டானது.
297 . மகரந்தா (பாலி)
மகரந்தா – மகரந்தம்
மகரந்தம் – மலர்த் தாது (திவாகர நிகண்டு)
ம – தமிழ் வேர் ; ‘மக்கிப் போனது’ எனில் , இற்றுத் தூளானது என்பதே பொருள்; இதே அடிப்படையில் பூவின் தாது நுணுங்கித் தூளாக உள்ளதால், ‘ம’ வேர் அங்கு சொல்லாக்கத்திற்குப் பயன்பட்டுள்ளது.
298. மகுடா (பாலி)
மகுடா – மகுடம்
உட் குழைவு கொண்ட , குட வடிவுகொண்ட முடியைத் தலையில் கவிழ்த்து (மடக்கி) வைப்பதால், அது ‘மகுடம்’ ஆயிற்று; தமிழ் ஆகமக் கலைச்சொல் இது.
உட்குழைவு கொண்ட பகுதி உடையதால் , அது ‘மகுடி’!
299 . மக்கடா (பாலி)
மக்கடா – மர்க்கடம் (குரங்கு)
எப்போதும் முதுகை வளைத்தும் , முழங்காலை மடக்கியும் அமரும் இயல்பினது ஆகையால் , ‘ம’ எனும் வேர் அடிப்படையில் குரங்கிற்கு ‘மர்க்கடம்’ எனும் தமிழ்ச் சொல் பொருந்தியது.
300 . மக்கா (பாலி)
மக்கா – மார்க்கம் (வழி)
அந்தக் காலத்தில் பல வழிகள் ஒற்றையடிப் பாதைகளாகவே இருக்கும் ; இன்றியமையாச் சாலைகளே அகலமாக இருக்கும்; அகலப் பாதையே ‘மார்க்கம்’ ; ஒற்றையடிப் பாதையை ‘மார்க்கம்’ என்பதில்லை. எனவே , ‘மா’ ( அகலமானது, பெரிது) அடிப்படையில் வந்த தமிழ்ச் சொல்லே ‘மார்க்கம்’.
மார்க்கம் – வழி (பிங்கல நிகண்டு)

301 . மங்களா (பாலி)
மங்களா – மங்களம்
மங்கலம் , மங்களம் – இரு சொற்கள் தமிழில் உள.
மங்கலம் என்ப மனைமாட்சி - திருக்குறள்
மங்கலத் திருநாள் – நல்ல நாள் (மணிமேகலை)
மங்கலத் துகில் – வெண் துகில் (சீவக சிந்தாமணி)
மங்கல நாண் – தாலிக் கயிறு
மங்கலக் கருவி – மழிப்புக் கருவி
திருமங்கலக்குடி , கொற்றமங்கலம் – ஊர்ப்பெயர்கள்
இப்படி ‘ல’ போட்டு எழுதப்பட்ட சொல்லானது, ‘ள’ எழுத்தைப் பயன்படுத்த இடம் கொடுத்துள்ளது.
‘மங்கலம்’ , ‘மங்களம்’ – பொருள் மாறாமல் இரு வகைகளிலும் எழுதப்பட்டன.
‘மங்கல வாச்சியம்’ , எனப்பட்டது ‘மங்கள வாத்தியம்’ ஆகியுள்ளது.
பழைய சோதிடர்கள் ‘மங்கல வாரம்’ என எழுதப், புதுச் சோதிடர்கள் ‘மங்கள வாரம்’ என எழுதலாயினர்.
302 . மணி (பாலி)
மணி – மணி (gem)
சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் ‘மணி’ இப் பொருளில் வருகிறது. பிங்கல நிகண்டிலும் இதே சொல் இதே பொருளில் வரக் காணலாம்.
கரடு முரடான மேற்பரப்பிலாது, மழுமழுப்பானது , வழவழப்பானது என்ற பொருளைத்தரும் ‘ம’ வேர்ச்சொல்லாகும்.
ம+ண் +இ = மணி ; ம – வேர்ச்சொல் ; ண்- எழுத்துப்பேறு ; இ – உடைமை விகுதி.
303 . மண்டபா – (பாலி)
மண்டபா - மண்டபம்
ம – வேர்ச்சொல் ; இதுவே ‘மண்டை’ (தலை) முதலிய சொற்களை உருவாக்கியது; இதே ‘பெரிதானது’ எனும் பொருண்மையில், உருவாக்கிய சொல்தான் ‘மண்டபம்’.
‘மண்டபம்’ எனும் சொல் சிலப்பதிகாரத்தில் வருகிறது.
தமிழ் ஆகமங்களில் ‘மண்டப நிர்மாணம்’ என்று முறைகள் விவரிக்கப்படுள்ளன.
‘வசந்த மண்டபத்தில் இளவரசனும் இளவரசியும் சந்தித்தனர்’ என்று பழைய தமிழ் நாடகங்களில் ,வரும்.
304 . மண்டூகா (பாலி)
மண்டூகா – மண்டூகம் (தவளை)
மண்டூகம் – தவளை (பிங்கல நிகண்டு)
‘மண்டூகம்’ எனத் தவளைக்கு ஏன் அப்பெயர் வந்தது?
ஒழுங்கற்ற தோலை உடையதால் வந்தது!
ஒழுங்கற்ற அறிவை உடையதால்தான் மூடனை ‘சரியான மண்டூகம்’ என்கிறோம்!
இரும்பின் மேற்பரப்பு ஒழுங்காக இல்லாது துரு ஏறியிருந்தால் , அத் துரு, ‘மண்டூகம்’ எனப்படும் .
‘மண்டூகம்’ என்பதற்கு ‘இரும்புத் துரு’ வைப் பொருளாகக் காட்டுவது செ.சொ.பேரகரமுதலி.
305 . மதி (பாலி)
மதி - அறிவு
‘மதி நுட்பம்’ – திருக்குறள்
ம – வேர்ச்சொல் ‘; ‘அளவிட்டுத் தெரிவது’ எனும் பொருண்மை கொண்டது இவ்வேர்; இரண்டாம் பிறை
, மூன்றாம் பிறை , முழுநிலவு என்றெல்லாம் மதிக்க இடம் தந்து நிற்பதால் , நிலவை ‘மதி’ என்கிறோம் !
எல்லையை அளவுபட வகுத்து , மதிப்பிட்டுக், கட்டுவதால் சுவரை ‘மதில்’ என்கிறோம்!
நிலையை , கருத்தை அளவிடும் தகுதி பெற்றவனே . ‘மதி’யுள்ளவன்.
306 . மது (பாலி)
மது – கள் (பிங்கல நிகண்டு)
அறிவுக்கும் உடலுக்கும் மயங்கிய நிலையாம் ஒரு மதமதப்பைத் தருவதால் கள்ளுக்கு ‘மது’ எனப் பெயர் வந்தது.
307 . மனுஜா (பாலி)
மனுஜா – மனிதன்
மனிதன் – ஆண்மகன் (பிங்கல நிகண்டு)
‘மனிதன்’ என்பது ‘மனிசர்’ என்று திவ்வியப் பிரபந்தத்தில் குறிப்பிடப்படுகிறது(தமிழ் லெக்சிகன்).
‘மனிசர்’ , என்பதே பாலியில் ‘மனுஜா’ ஆகியுள்ளது.
‘மனு’ என்றாலும் தமிழில் ‘மனிதன்’ என்பதே பொருள் (தமிழ் லெக்சிகன்).
பெண்களில் , ‘மங்கை’ , ‘மடந்தை’ என்றெல்லாம் பருவப் பெயர்கள் உள்ளதுபோல, ஆணின் பருவப் பெயரே. ‘மனிதன்’, ‘மனு’ இரண்டும்.
‘உன்னை நான் வளர்த்து மனுவாக்கி விடவேண்டும்’ - துயருடன் தமிழ்த் தாய் கூறுவாள்.
308 . மந்தா (பாலி)
மந்தா – மந்திரம்
ம – வேர்ச்சொல் ; ‘மன்’ (நிலையானது); முதலிய தமிழ்ச்சொற்களுக்கு இதுவே அடிப்படை.
நிலையான வாசகமே மந்திரம் ; இன்ன மந்திரம் என்றால் அது அப்படித்தான் இருக்கும்; அதை யாரும் விருப்பம்போல மாற்றக் கூடாது; திருமண மந்திரத்தை ஒரே மாதிரியாகவே அனைவரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள்; ‘துதிப்படல்’ வேறு ’மந்திரம்’ வேறு; துதிப்பாடலை இடத்துக்கு இடம் யாரும் எப்படியும் மற்றிப் பாடிக்கொள்ளலாம்.
குடியிருக்கும் வீடானது நிலையானது ஆகையால் , வீட்டை ‘மந்திரம்’ என்கிறது கம்பராமாயணம்.
309 . மந்தா (பாலி)
மந்தா – மந்தம்
மந்தம் – சுறுசுறுப் பின்மை ; செயற்பா டின்மை
‘இவன் மந்த புத்திக்காரன்’ – முதலாளி திட்டுவார்!
‘வானிலை மந்தமாக இருக்கிறது’ – மக்கள் மொழி
மந்தம் – சோம்பல் (சூடாமணி நிகண்டு)
‘மந்த மா’ , யானையைக் குறிக்கும் (சூடாமணி நிகண்டு)
ம- தமிழ் வேர் ; ‘மடி’ (சோம்பல்) முதலிய சொற்களை எந்தப் பொருண்மையில் ஆக்கியதோ , அதே பொருண்மையில்தான் ‘சோம்பல்’ எனும் பொருளையும் ஆக்கிற்று.
310 .மயூரா (பாலி)
மயூரா – மயூரம் (மயில்)
மயூரம் – மயில் (சூடாமணி நிகண்டு)
தமிழர்தம் யோக முறைகளில் ‘மயூராசனம்’ என்பதும் ஒன்று.
ம +ய் + இல் = மயில்
ம – வேர்ச்சொல்
ய் – உடம்படு மெய்
இல் – இன்மையைக் குறிக்கும் விகுதி
‘மடங்குதல் இல்லாத தோகையைக் கொண்டதால் , அது ‘மயில்’எனப்பட்டது.
இடுப்பு, காலை மடக்காமல் கிடையாக வைப்பதே மயூராசனம்; ‘ம’வே ‘மயூரம்’ என்பதற்கும் வேர்.

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (31)

311 . மரணா (பாலி)
மரணா – மரணம்
மரணம் – இறப்பு
‘மரண கண்டி’ என்றே ஒரு தமிழ் நூல் இருந்துள்ளது; பிச்சைப் பாக்கம் மார்க்கலிங்கக் கணியர் என்ற சோதிடர் எழுதிய இதனைத் தெரிவிப்பது யாழ்ப்பாணத் தமிழகராதி.
சூடாமணி நிகண்டில் ‘மரணம்’ எனும் தமிழ்ச் சொல்லைக் காண்கிறோம்.
ம – வேர்ச்சொல் ; ‘மாள்’, ‘மடி’ முதலிய சொற்களில் வந்துள்ள அதே ‘அழிவு’ப் பொருண்மை அடிப்படையில் ‘மரணம்’ என்ற சொல்லையும் தந்தது இவ் வேர்.
ம +ர் + அணம் = மரணம்
ம – வேர்ச்சொல்
ர் – எழுத்துப் பேறு
அணம் – விகுதி ( ‘காவணம்’ முதலிய தமிழ்ச் சொற்களில் இவ் விகுதியை நுகர்க.)
‘ம’ எனும் அதே வேர் உருவாக்கிய மற்றொரு சொல் ‘மரர்’.
மரர் – இறந்தவர்
அமரர் – இறப்பற்றவர் (அ – எதிர்மறைப் பொருளில் நிற்பதைக் காவனிக்க); ‘அமரர் ஊர்தி’ , நினைவுக்கு வருகிறதா?
312 . மலா (பாலி)
மலா – மலம்
மலம் – கழிவுப் பொருள்; அழுக்கு
மலம் - மூத்திரம் முதலான உடல் மாசுகள் (சூடாமணி நிகண்டு).
சற்றுமுன் நாம் பார்த்த அழிவுப் பொருண்மை அடிப்படையில் , இங்கும் ‘ம’ நிற்கிறது.
ம + ல் + அம் = மலம்
ம – வேர்
ல் – எழுத்துப் பேறு
அம் – விகுதி.
தமிழ்ச் சைவர்கள் ‘மும்மலம்’ பற்றிப் பக்கம் பக்கமாகப் பேசியுள்ளதை நினைவுக்குக் கொண்டு வருக!
313 . மல்லா (பாலி)
மல்லா – மல்லர்
மல்லர் - மற்போர் வல்லார்
‘மல்லல் வளனே’ – தொல்காப்பியம்
’மல்’ எனும் அடி, உடல் வலுவைக் குறிக்கும்.
‘மல்ல செட்டி’ , ‘மல்லக செட்டி’ – தமிழ் வழக்குகள்.
மல் + ல் + அர்
மல் – பகுதி
ல் – பகுதி ஒற்று இரட்டித்தது விகாரம்
அர் – பலர்பால் விகுதி.
314 . மல்லிகா (பாலி)
மல்லிகா - மல்லிகை
‘மல்லிகை’ எனும் சொல் சங்க இலக்கியமான பரிபாடலில் வருகிறது.
மல் + ல்+ இ + கை
மல் – பகுதி ; ‘உருண்டு திரண்ட’ என்பது பொருள்; மல்லிகைப் பூவானது , சிறிதாக, உருண்டு திரண்டே இருக்கும்; பருத்துத் தடித்தவளை ‘மல்லி’ என்கிறது யாழ்ப்பாணத் தமிழகராதி.
ல் – ஒற்று இரட்டித்த விகாரம்
இ – உடைமை விகுதி; ‘மல்லி’ எனத் தனிச் சொல்லாகவும் நிற்பதைக் காண்க.
கை – சொல்லாக்க விகுதி.
315. மசானா (பாலி)
மசானா – மயானம்
‘அரிச்சந்திரன் மயான காண்டம்’ – தமிழ் அறிந்த நாடகம் அல்லவா?
‘மயானம்’ எனும் சொல் , தேவாரத்தில் வருகிறது.
‘மயனமாய் அரைத்தல்’ – நன்றாகப் பொடியாகுமாறு அரைத்தல் (செ.சொ. பேரகரமுதலி )
இறந்துபட்ட உடலை மண்ணோடு மண்ணாக்கப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடமே ‘மயானம்’. உடலை மயனம் செய்யும் இடமே ‘மயானம்’. ‘மயன இடம்’ ,‘மயானம்’.
‘மயானம்’ என்பது மக்கள் நாவில் ‘மசானம்’ ஆனது ; ‘குயவன்’ , ‘குசவன்’ ஆனது போல.
‘மசானம்’ என்பதை , நம்மனோர் , தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொள்ள, ‘ஸ்’ சேர்த்து, ‘ஸ்மசானம்’ என்றனர்! இதுதான் தமிழகத்திலேயே வேற்றுமொழி அல்லது இன்னொரு மொழி பிறந்த கதை!
316 . மசி (பாலி)
மசி – மை
மசிக்கூட்டில் மையைத் தொட்டு அந்தக் காலத்தில் எழுதும் பழக்கம் இருந்தது.
‘மை’ , ‘மசி’ இரண்டுமே தமிழ்ச் சொற்கள்தாம்.
கரி , அல்லது அதுபோன்ற பொருட்களை மசித்து உண்டாக்குவதால் , அது ‘மசி’.
‘கீரையை நல்லா மைப்போலக் கடைய வேண்டும்’ – தமிழ்ப் பாட்டி.
மரம் முதலியன உளுத்துப் போவதை ‘மைப்பேறுதல்’ என்பர் (செ.சொ.பேரகரமுதல்).
எனவே ‘மைத்து உருவாக்குதலால் அது மை’ !
317 . மாயா (பாலி)
மாயா – மாயை
மாயை – பொய்த்தோற்றம் ; இருப்பது போன்ற இல்லாதது.
’மாயை’ எனும் தமிழ்ச் சொல் மணிமேகலையில் வருகிறது.
தமிழ்ச் சைவர்கள் குறிக்கும் மூன்று மலங்களில் ‘மாயை’யும் ஒன்று.
மா – வேர்ச்சொல் ; ‘மாள்தல்’ , ‘மாண்டான்’ முதலிய மறைவுப் பொருண்மையில் இவ்வேர் அடியாகச் சொற்கள் பிறந்துள.
பொருள் இருப்பது போலத் தோன்றும்; அருகே போனால் ஒன்றும் இருக்காது; அதுதான் ‘மாயம்’!
“என்ன மாயம்? இங்குதானே இருந்தான்? அதற்குள் எங்கே போனான்?” – சொல் வழக்கு.
‘மாயை’ என்ற தமிழ்ச் சொல் மட்டுமல்ல ‘மாயா வாதம்’ என்று சொல்கிறார்களே, அதன் தோற்றமும் தமிழகமே!
318 . மாரணா (பாலி)
மாரணா – மரணம்
‘மரணம்’ பற்றி முன்பும் பார்த்துள்ளோம்.
தமிழ்ச் சோதிடர்கள் ‘மாரணம்’ என்றே குறிக்கிறார்கள்.
“வீட்டுக்காரர் படுத்த படுக்கையாக இருக்கிறராம்; அந்த அம்மாள் மாரணம் பார்க்க என்னைக் கூப்பிடுறாங்க” – சோதிடர் சொல்.
ஒருவனுக்கு எப்போது மரணம் வரும் எனக் கட்டம் பார்த்துக் கூறும் சோதிடர்கள் நம்மிடையே இன்றும் உளர்!
319 . மாருதா (பாலி)
மாருதா – மாருதம் (காற்று)
மாருதம் – காற்று (பிங்கல நிகண்டு)
உடல் மற்றும் அனைத்துப் பொருள்களையும் மருவுதலால் அதை ‘மாருதம்’ என்கிறோம்.
320 . மாலா (பாலி)
மாலா – மாலை
மாலுதல் – மயங்குதல்
பூக்களை ஒன்றருகே ஒன்றுவைத்து, நெருங்க – மயங்கக் -கட்டுவதால் , அது மாலை.
மா+ ல் + ஐ = மாலை
மா – வேர் ; மாலுதலுக்கு வந்தது.
ல் – எழுத்துப் பேறு
ஐ – உடைமை விகுதி.
கலித்தொகையில் ‘மாலை’ , பூமாலை எனும் பொரு:ளில் வருகிறது.

பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (32)

321.மாசிகா (பாலி)
மாசிகா – மாசம் ; மாதம்
‘மதி’யால் (நிலாவால்) கணிக்கப்பெறும் கால அளவு ஆகையால் ‘மாதம்’ எனும் சொல் வந்தது (செ.சொ.பேரகரமுதலி,2007).
‘மாதம்’ , ‘மாசம்’ – இரண்டும் தமிழில் புழங்குகின்றன.
‘மாச சிவராத்திரி’, ‘மாசப் பிறப்பு’ என்றெல்லாம் காணலாம்.
எனவே பாலியில் ‘மாசிகா’ எனத் தமிழைப் பின்பற்றி வந்தது எனக் கூறத் தடையில்லை.
322 . மித்தா (பாலி)
மித்தா – மித்திரன் (நண்பன்)
‘மித்’ எனும் தமிழ் அடியாகப் பிறந்த சொல் ‘மிதுனம்’. ‘ஆண்பெண் இரட்டை’ என்பது பொருள் (தமிழ் லெக்சிகன்); அஃதாவது ‘நெருக்கம்’ என்பது பொருளாகும். எனவே நெருக்கம் கொண்டவர்- நண்பர்- என்ற பொருளில் நின்றது ‘மித்திரன்’ எனும் தமிழ்ச் சொல்.
‘ஒன்றுநன்’ – மித்திரன் (பிங்கல நிகண்டு)
பயன்பாடு குறையக் குறையத் தமிழ்ச் சொற்கள், அயற்சொற்கள் போலத் தென்படத் தொடங்கின! நல்லவேளை, நிகண்டுகளும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூற்களும் இருந்ததால் ஓரளவுக்குத் தப்பித்தோம்!
323 . முஞ்சா (பாலி)
முஞ்சா – முஞ்சை
முஞ்சை – தருப்பைப் புல் ; முஞ்சாப் புல்
‘தருப்பை’ பற்றி முன்பே பார்த்துள்ளோம்.
முஞ்சல் – இறத்தல் (சாம்பசிவம் பிள்ளை அகராதி)
முஞ்சாப் புல்லானது பக்க வேர்விட்டுக் கிளைத்துக்கொண்டே செல்லும் இயல்பினது; 20,30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அப் பரவல் நடக்கும்.இதனால்தான் ‘முஞ்சுதல் இல்லாத புல்’ எனும் பொருளில் தமிழில் ‘முஞ்சாப்புல்’ என்றனர்.
324 . முட்டி (பாலி)
முட்டி – முடக்கிய விரற் பொருத்து (clenching fist)
எலும்புகள் முட்டிக்கொண்டு நிற்குமிடம் ஆகையால் , அது முட்டி.
பின்னாளில் , நம்மனோர் – ஆம் நம்மவர்கள்தாம் – ‘முஷ்டி’ என்று சொல்ல அலாதிப் பிரியம் காட்டிவிட்டனர் !
அவ்வாறு நம்மனோர் ஏன் விழைந்தனர்?
அதற்கு ஒரு காரணம் உள்ளது.
‘முட்டியைக் காட்டு’ என்றால், எதைக் காட்டுவான்?
குயவன் செய்த சிறு பானையாகிய முட்டியையா? கை முட்டியையா?
சிறு குழப்பம் வருகிறதல்லவா?
‘முட்டியளவு அரிசியை இதில் போடு’ என்றால், சிறுபானையளவு அரிசியையா? கைமுட்டியளவு அரிசியையா?
ஆகவேதான் , குழப்பத்தை நீக்கத்தான் , தமிழர்கள் , கண்டுபிடித்ததுதான் ‘முஷ்டி’! எங்கிருந்தோ யாரோ தலைச் சுமையாக ‘முஷ்டி என்ற சொல்லைத் தூக்கிக் கொண்டுவந்து, இங்கு போட்டுவிட்டுப் போகவில்லை! இந்த மொழி நுட்பத்தை ‘வேற்றுமொழிச் சொல்’ என நாம் கூறிக்கொண்டிருக்கும் எல்லாச் சொற்களுக்கும் பொருத்தி அறிக!
325 . முத்தா (பாலி)
முத்தா – முத்தன்
முத்தன் – விடுவிக்கப் பட்டவன்
உடலிலிருந்து உயிர் விடுவிக்கப்பட்டுத் துறக்கம் (’மோட்சம்’)பொருந்தியவரை ‘முத்தியடைந்தார்’ என்பர்.
முத்துதல் – பொருந்துதல் (செ.சொ.பேரகரமுதலி)
‘அவர் போய்ச் சேர்ந்துவிட்டார்’ என இறந்தவரைக் குறிப்பிடல் காண்க. பொருந்துதல் – சேர்தல்.
‘முத்தன்’ , ‘முத்தி’ என்பதை நம்மனோர் ‘முக்தன்’ , ‘முக்தி’ என எழுத விழைந்துள்ளனர்.
326 . முத்தா (பாலி)
முத்தா – முத்து (pearl)
மு+ த் + த் + உ
மு – வேர்ச்சொல் ; ‘உருண்டு திரண்ட பொருளை இவ்வேர் சுட்டும் ; ‘முலை’ முதலைய சொற்களைக் காண்க.
த் – எழுத்துப் பேறு
த் – இரட்டிப்பு விகாரம்
உ – விகுதி.
முத்தானது உருண்டு திரண்டு இருப்பதைக் கண்ணுறுக.
‘முத்துமுத்தா எழுதறான்’; எழுத்துகள் உருண்டு திரண்டு இருப்பதையே அவ்வாறுஇ சுட்டுகிறோம்.
327 . மோஹா (பாலி)
மோஹா – மோகம்
’மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்‘ என்கிறோமே, அந்த ‘மோகம்’தான்.
மோகம் – காம மயக்கம்
மோ + கம் = மோகம்
மோத்தலால் – விரும்பலால் – ‘மோகம்’, பெருங்காதலைக் குறித்தது (செ.சொ.பேரகரமுதலி).
‘மோகம்’ என நாம் எழுதினாலும் , உச்சரிப்பது, ‘மோஹம்’ என்றுதான்; ‘அகநானூ’ற்றில் உள்ள ‘க’வை , ‘ஹ’ என்றே நம்மனோர் உச்சரிப்பதைக் காண்க.
328 . மோசா (பாலி)
மோசம் – வஞ்சனை
மோசனம் – விடுபடுதல் (சூடாமணி நிகண்டு)
மோசித்தல் – விட்டொழிதல் (செ.சொ.பேரகரமுதலி)
முசிதல் – அறுதல் (’’)
நம்பிக்கை அற்ற நிலையே மோச நிலை; ஆகவே ‘மோசம்’ என்ற சொல், ‘வஞ்சனை’, ‘ஏமாற்றுதல்’ போன்ற பொருட்களுக்கு வந்தது.
‘அவனை நம்பி மோசம்போய்விட்டேன்’ – உலக வழக்கு.
329 . மேதாவின் (பாலி)
மேதாவின் – மேதாவி
மேதாவி – அறிவாளி
‘மேதாவி’ எனும் தமிழ்ச் சொல் கம்பராமாயணத்தில் வருகிறது.
வழக்கிலும் , ‘இவர் ரொம்ப மேதாவி!’ ; ‘இந்த மேதாவித்தனம்தானே கூடாதென்பது!’ என்றெல்லம் வரக் காணலாம்.
‘மேன்மை’ என்ற தமிழ்ச் சொல் அடியாக வந்த சொல்லாக ‘மேதாவி’யைக் காட்டுகிறது செ.சொ.பேரகரமுதலி.
330 . மேதினீ (பாலி)
மேதினீ – மேதினி (உலகம்)
மேதினி – நிலவுலகம் (பிங்கல நிகண்டு)
‘மேதினியில் இட்டார் பெரியோர்’ - இந்த ‘நல்வழி’யை நாம் அறிவோமே!’.
‘மே’ எனும் வேர் அடிப்படையில் , மேது – மேதுனி – மேதினி எனச் சொல் வருகையை விளக்குகிறது செ.சொ.பேரகரமுதலி.
ஒரு சொல் , இன்னொரு மொழிக்குப் போகும்போது ,சில இடங்களில், அச் சொல்லின் ஈறு நீழல் ஓர் இயல்பாம்; அவ்வகையில்தான் , ‘மேதினீ’ வந்துள்ளது பாலியில்.

Similar topics
» தமிழர் நாடு! தமிழர் தேசியம்! தேவையா ?
» விழியும் மொழியும்
» பழ மொழியும் அதன் அர்த்தங்களும்
» நான் அறிந்த பரிதாபாத் !
» வெளியானது நிவின் பாலி பட டிரைலர்
» விழியும் மொழியும்
» பழ மொழியும் அதன் அர்த்தங்களும்
» நான் அறிந்த பரிதாபாத் !
» வெளியானது நிவின் பாலி பட டிரைலர்
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum