புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாடா - விமர்சனம் Poll_c10டாடா - விமர்சனம் Poll_m10டாடா - விமர்சனம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
டாடா - விமர்சனம் Poll_c10டாடா - விமர்சனம் Poll_m10டாடா - விமர்சனம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
டாடா - விமர்சனம் Poll_c10டாடா - விமர்சனம் Poll_m10டாடா - விமர்சனம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாடா - விமர்சனம் Poll_c10டாடா - விமர்சனம் Poll_m10டாடா - விமர்சனம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாடா - விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 11 Feb 2023 - 22:16

டாடா - விமர்சனம் -2-11-12

தயாரிப்பு - ஒலிம்பியா மூவிஸ்
இயக்கம் - கணேஷ் கே பாபு
இசை - ஜென் மார்ட்டின்
நடிப்பு - கவின், அபர்ணா தாஸ்
வெளியான தேதி - 10 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5



தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைகள் என்ன இருக்கிறது என்று தேடித் தேடிப் பார்த்து இன்றைய இயக்குனர்கள் படமெடுக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையும் சொல்லப்படாத ஒரு கதைதான். கதையின் மையக்கரு மட்டும் கொஞ்சம் 'விவகாரமான' ஒன்றாக இருந்தாலும் படத்தை ரசிக்கும்படியாகவும், சுவாரசியமாகவும் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு.

காதலர்களுக்கு இடையில் இருக்கும் 'ஈகோ' தான் படத்தில் முக்கிய பிரச்சினை. கொஞ்சம் 'குஷி' படம் மாதிரியான ஈகோ என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதில் ஒரு 'இடுப்பு' விவகாரத்தால் பிரிந்து போகிறார்கள். இதில் ஒரு 'குழந்தை' விவகாரத்தால் பிரிந்து போகிறார்கள். பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் திரைக்கதையில் சுவாரசியமாக இருக்க வேண்டும், அது இந்தப் படத்தில் இருப்பதால் ரசிக்கவும் வைக்கிறது.

கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரியில் படிப்பவர்கள், காதலர்கள். ஒரு நாள் படுக்கை வரை அவர்களது நெருக்கம் போக அபர்ணா கர்ப்பமாகிறார். கவின் கர்ப்பத்தைக் கலைத்துவிடச் சொல்ல, அபர்ணா குழந்தை பெற்றே தீருவேன் என்கிறார். இந்த விவகாரம் இருவரது குடும்பத்திற்கும் தெரியவர பெற்றோர்களின் கோபத்தால் கவின், அபர்ணா தனித்துவிடப்படுகிறார்கள். இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்குகிறார்கள். அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது.

ஒரு நாள் பெரும் சண்டையாக வர ஆபீஸ் செல்லும் கவின் கோபத்தில் மொபைல் போனை ஆப் செய்து வைக்கிறார். அந்த சமயத்தில் அபர்ணாவுக்கு பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் குழந்தை பெறுகிறார். இரவு வீட்டிற்குத் திரும்பிய பின்தான் அபர்ணாவுக்கு குழந்தை பிறந்தது தெரியவர மருத்துவமனைக்கு ஓடுகிறார் கவின். அங்கு குழந்தை மட்டும் இருக்கிறது, அபர்ணா இல்லை. குழந்தையைக் கூடப் பார்க்காமல் அபர்ணா அவரது பெற்றோருடன் சென்றது கவினுக்குத் தெரிய வருகிறது. இனி, ஜென்மத்திற்கும் அபர்ணாவை மன்னிக்க மாட்டேன் எனச் சொல்லி, குழந்தையை அவரே வளர்க்க ஆரம்பிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.

படிக்கும் போது காதல் என்பதையே பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பார்கள். ஆனால், படிக்கும் போதே குழந்தையா என்பதை எந்த பெற்றோர்தான் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி ஒரு நிலையில் கவின், அபர்ணா இருவரும், பெற்றோர் ஆதரவு இல்லாமல், நண்பன் உதவியுடன் தனியே தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். மெச்சூரிட்டி இல்லாத வயதில் குழந்தை, வாழ்க்கையை எதிர் கொள்ளும் பிரச்சினை அனைத்தும் அவர்களுக்கு வருகிறது. கவின் எதையும் கணக்கு போட்டு வாழ்க்கையை நடத்த, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுகிறார் அபர்ணா. அதுவே இருவரையும் பிரிக்கவும் செய்கிறது. கவின், அபர்ணா இருவரும் இதற்கு முன்பு பல படங்களில் நடித்த அனுபவசாலிகள் போல இந்தப் படத்தில் கதாபாத்திரத்தையும், காட்சிகளின் தன்மையையும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்களது நடிப்புதான் படத்திற்கு பெரும் பலமே. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. சமீபத்திய படங்களில் கலங்க வைத்த ஒரு காட்சி என்று சொல்லலாம்.

கவினிற்கு எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் உத்தம நண்பனாக ஹரிஷ். திடீரென உதவி செய்யும் ஒரு நல்ல மனிதராக விடிவி கணேஷ். அலுவலகத்தில் அவ்வப்போது குறும்புத்தனம் செய்து மாட்டிக் கொள்ளும் பிரேம் ஆண்டனி என சில கதாபாத்திரங்கள் படத்தில் குறிப்பிட வேண்டியவை. கவின் அப்பா பாக்யராஜ், அம்மா ஐஸ்வர்யாவுக்கு பெரிய வேலையில்லை. கவின் மகனாக மாஸ்டர் இளன் அழகாய் நடித்திருக்கிறார்.

அறிமுக இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுக்கு முதல் படத்திலேயே அவரது திறமையை வெளிப்படுத்தக் கூடிய உணர்வு பூர்வமான ஒரு படம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கதையுடன் இணைந்து பயணிக்கும் எழிலரசனின் ஒளிப்பதிவு, தேவையான காட்சிகளை சரியாகத் தொகுத்திருக்கும் கதிரேஷ் அழகேசனின் படத்தொகுப்பு பாராட்டுக்குரியது.

கவினும், அபர்ணாவும் பிரிந்த பிறகு சென்னையிலேயே இருந்தாலும் இந்த சோஷியல் மீடியா யுகத்தில் நான்கு வருடங்களாக ஒருவர் மற்றவரைத் தேடத் துளியும் முயற்சிக்கவில்லை என்பது மட்டும் லாஜிக்காக இடிக்கிறது. படிக்கும் போது காதலுடன் நிறுத்திக் கொள்ளுங்கள், குழந்தை வரை செல்ல வேண்டாம் என்று எங்காவது அட்வைஸ் கொடுத்திருக்கலாம்.

டாடா - தாயுமானவன்…



தினமலர்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 12 Feb 2023 - 12:33

டாடா - விமர்சனம் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக