ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Sun Feb 12, 2023 2:53 pm

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் -2-12-12

காதலர்களுக்கு உதவும் ChatGPT... ஆய்வில் வெளிவந்த முக்கிய தகவல்..!



தேர்வில் தேர்ச்சி பெறுவது முதல் புதிய சமையல் குறிப்புகள் வரை அனைத்தையும் சொல்லும் ChatGPT ஐ காதலுக்கு உதவ அழைக்காமலா இருக்க போகிறார்கள்.

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்… என்று பாடிக்கொண்டு காதலர் தினத்திற்காக காகிதங்களில் கிறுக்கி கசக்கி போடும் நேரம் வந்துவிட்டது. முன்பு எல்லாம் எதையாவது எழுத வேண்டும் என்று வோர்ட்ஸ்வொர்த் முதல் வைரமுத்து வரை எல்லாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வில், 62% இந்தியர்கள் காதல் கடிதங்கள் எழுதுவதற்கு ChatGPT ஐ பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

கடிதங்கள் எழுதும் காலத்தில் இருந்தே தானாக காதலிக்கு கடிதம் எழுதுபவரை விட நண்பர்கள் உதவியோடு எழுதுபவர்கள் தான் அதிகம். இன்னும் ஒரு சிலர் நன்றாக கவிதை எழுதுபவரிடம் இருந்து 1 கவிதையை கடன் வாங்கி அப்படியே காதலியிடம்  ஒப்பித்துவிடுவார். ஆனால் காலம் மாற மாற டெக்னாலஜியை துணைக்கு அழைத்து அங்கு இருந்து கொஞ்சம் பிட் அடித்து பாஸ் ஆகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் OpenAI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் AI சாட் பாக்ஸான ChatGPT ஐ வெளியிட்டது. பலதரப்பட்ட கேள்விகளை கலந்து கேட்டாலும் அதற்கு தெளிவாக ஒரு பதில் தந்து இணையவாசிகளை குதூகலப்படுத்தி வருகிறது இந்த ChatFGPT. மருத்துவ பரீட்சையில் தேர்ச்சி பெறுவது முதல் புதிய சமையல் குறிப்புகள் வரை அனைத்தையும் சொல்லும் இதை காதலுக்கு உதவ அழைக்காமலா இருக்கப் போகிறார்கள்.

சமீபத்தில் McAfee நிறுவனம், 'மாடர்ன் லவ்' என்ற தலைப்பில் ஒன்பது நாடுகளில் உள்ள 5,000 பேரிடம் ஒரு புதுவித ஆய்வை நடத்தியது. அதில் AI மற்றும் இணையம் எப்படி தங்களது காதலை வெளிப்படுத்த உதவுகிறது என்ற கேள்விக்கு கருத்து கேட்கப்பட்டுள்ளது. பதிலளித்தவர்களில் 62 சதவீதம் பேர், ChatGPTஐப் பயன்படுத்தி காதல் கடிதங்கள் எழுதத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அதிலும் இந்திய ஆண்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது.

27 சதவீதம் பேர் ChatGPTயில் இருந்து உதவி பெறுவது கடிதம் அனுப்புவோருக்கு அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக காரணம் கூறியுள்ளனர். 21 சதவீதம் பேர் நேரமின்மையால் அதை பயன்படுத்துவதாகவும், 21 சதவீதம் பேர் கடிதம் எழுதுவதற்கான உத்வேகமின்மை இருக்கிறது ஆனால் காதலை அழகாக வெளிப்படுத்த ஆசை இருப்பதால் ChatGPTயைப் பயன்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் 49 சதவீதம் பேர் ChatGPT-எழுதிய கடிதங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் கோரியுள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டில் காதலர்களுக்குள் பகிரப்படும் கடிதங்களில் அதிகம் செயற்கை நுண்ணறிவால் எழுதப்பட்டதாக தான் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது.

உங்களுக்கு வரும் கடிதங்கள் மிக சிறப்பானதாக இருந்தால் அது நிச்சயம் மனிதனால் எழுதப்படவில்லை என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே. காதலன்/ காதலி கவிஞர் என்று ஏமாந்து விடாதீர்கள். எல்லாம் நம் ChatGPT இன் வித்தை என்று புரிந்துகொள்ளுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Sun Feb 12, 2023 2:59 pm

உங்க ராசிப்படி இந்த கலர் ஆடை அணிந்தால் உங்கள் காதல் கைகூடும்!



காதலிக்கும் அனைத்து ஜோடிகளும், காதலர் தினத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிப்ரவரி மாதம் முழுவதும் காதலின் மாதமாக கருதப்பட்டாலும், காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று தான் விமர்சையாக இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று ஒவ்வொருவரும் தனது துணையிடம், தங்களின் இதயப்பூர்வமான அன்பை வெளிப்படுத்துவார்கள். அப்படி நீங்களும் உங்கள் காதலை வெளிப்படுத்த காத்துக்கொண்டிருந்தால், காதலர் தினத்தன்று ஜோதிட சாஸ்திரப்படி உங்கள் ராசிப்படி எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் உங்கள் காதல் வெற்றி பெரும் என நாங்கள் கூறுகிறோம்.

மேஷம் :

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு. எனவே, நீங்கள் காதலர் தினத்தன்று மட்டுமல்ல, எல்லா நல்ல விஷயத்திற்கும் சிவப்பு அல்லது காவி நிற ஆடைகளை அணிந்தால் செய்யும் செயலில் வெற்றி பெறலாம். திருமணம் ஆனவர்கள் இந்த நிறத்தை அணிந்தால், கணவன் - மனைவிக்கு இடையிலான பரஸ்பர அன்பு அதிகரித்து, உறவு பலப்படும்.

ரிஷபம்

: காதலர் தினத்தில் பச்சை நிற ஆடை அணிவது ரிஷப ராசியினருக்கு நன்மை தரும். பச்சை நிறம் மனதில் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு வருவதுடன், மனதில் உள்ள அன்பைத் தெரிவிக்கும் வண்ணமாகவும் உள்ளது. அதனால் தான் காதலர் தினத்தில் பச்சை நிற ஆடைகளை அணிய வேண்டும். இந்த நிறம் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையே உள்ள அன்பை பலப்படுத்தும்.

மிதுனம்

: மிதுன ராசியினருக்கு மஞ்சள் அல்லது குங்குமப்பூ நிறம் நல்ல அதிஷ்டத்தை கொடுக்கும். எனவே, இந்த நாளில் நீங்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால் அது உங்களுக்கு நல்ல விஷயத்தை கொடுப்பதுடன், அன்பை அதிகரிக்கும்.

கடகம்  :

கடக ராசிக்கு அதிபதி சந்திரன். எனவே, கடக ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால் மிகவும் நல்லது. நீங்கள் திருமணமானவராக இருந்தால், சிவப்பு நிற ஆடைகள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் மற்றும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும்.

சிம்மம் :

காதலர் தினம் உங்கள் துணையுடன் அற்புதமான நேரத்தை செலவிட சிறந்த நாள். மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நல்லது. பரஸ்பர அன்பைப் பேணுவதற்கு இந்த வண்ண ஆடைகள் உங்களுக்கு உதவும்.

கன்னி :

கன்னி ராசியினர் காதலர் தினத்தில் தங்கள் துணையை கவர நீல நிற ஆடைகளை தேர்வு செய்யலாம். இந்த நிறத்தைத் தேர்ந்தெடுப்பது பரஸ்பர அன்பைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் காரிய வெற்றி கிடைக்கும்.

துலாம் :

எந்த ஒரு சுப நிகழ்ச்சியிலும் கருப்பு நிறத்தை அணிந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. இருப்பினும் துலாம் ராசிக்காரர்கள் காதலர் தினத்தன்று கருப்பு நிற ஆடையை அணிந்தால் அது அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் மற்றும் ஒருவருக்கு ஒருவர் மீதுள்ள அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம் :

குங்குமப்பூ நிறம் அனைத்து ராசிகளுக்கும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால், காதலர் தினத்தன்று விருச்சிக ராசிக்காரர்கள் காவி நிற ஆடைகளை அணிந்தால் அது மிகவும் அதிர்ஷ்டம் தரும். நல்லிணக்கத்தை அதிகரிக்க இந்த நிறத்தை நீங்கள் அணிய வேண்டும்.

தனுசு

: தனுசு ராசிக்காரர்கள் காதலர் தினத்தில் அழகான சிவப்பு நிற ஆடையை அணிவதன் மூலம் தங்கள் துணையை கவரலாம். இந்த நிறம் தனுசு ராசிக்கு ஏற்றது. சிவப்பு அன்பின் நிறமாக கருதப்படுகிறது. எனவே, நீங்கள் காதலர் தினத்தில் சிவப்பு நிற ஆடையை அணிவதால் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம்:

காதலர் தினத்தில் மகர ராசிக்காரர்கள் க்ரீம் நிற ஆடைகளை அணிவது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். எனவே, உங்களின் நாளை சிறப்பிக்க விரும்பினால், நீங்கள் கிரீம் நிற ஆடைகளை அணிய வேண்டும். காதலர் தினத்தில் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள்.

கும்பம்:

காதலர் தினத்தில் உங்கள் துணையை கவர பாட்டில் பச்சை நிற ஆடைகளை அணியுங்கள். இந்த வண்ண ஆடைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர உதவும்.

மீனம்:

காதலர் தினத்தன்று மீன ராசிக்காரர்கள் வெள்ளை நிற ஆடை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. வெள்ளை நிறம் இந்த ராசிக்காரர்களுக்கு அன்பையும் மகிழ்ச்சியையும் தருவதாகக் கருதப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Sun Feb 12, 2023 3:04 pm

காதலர் தினத்தை முன்னிட்டு கொடைக்கான‌லில் கொய்மலர்கள் அறுவடை ப‌ணிக‌ள் தீவிர‌ம்.



காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் 8UQsxWR

ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சியான‌ கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார ம‌லைக்கிராம பகுதிகளில் பிர‌தான‌ தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக பிரகாசபுரம், குண்டு பட்டி, கவுஞ்சி, கிளாவ‌ரை உள்ளிட்ட ப‌ல்வேறு மலை கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் மலை கிராம விவசாயிகள் பசுமை குடில்கள் அமைத்து உயர் ரக பூக்கள் வகைகளான ஜிப் சோப்ரா, சார்ட்டிஸ் உள்ளிட்ட கார்னேச‌ன் பூக்களை பயிரிட்டு பராமரிப்பு செய்து வருகின்றனர்.

மேலும் சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பூக்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர் , இந்த உயர்ரக பூ வகைகள் மலர் பூங்கொத்துகள் கொடுப்பதற்கும், காதலர் தினத்தன்று ரோஜா மற்றும் இந்த கொய்மலர்களையும் இணைத்து த‌ங்க‌ள‌து அன்பிற்கினிய‌வ‌ர்க‌ளுக்கும் காதலர்கள் தங்களது காதலிக்கும் பரிசாக கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்துகின்ற‌ன‌ர்.

இந்நிலையில், இந்த உயர் ரக பூக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு பூ ம‌ட்டும் 6 முதல் 8 ரூபாய் வரை விற்ப‌னையான‌துட‌ன் பல‌ ப‌குதிக‌ளுக்கு ஏற்றும‌தியும் செய்யப்பட்டு வந்த நிலையில் வரும் 14ம் தேதி காதலர் தினம் என்பதால் ஒரு கொய் மலர் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் விற்பனையாவதால் மலைகிராம விவசாயிகள் ம‌கிழ்ச்சிய‌டைந்து அறுவடை பணிக‌ளில் தீவிரமாக ஈடுபட்டுபெரு மாநகரங்களுக்கு ஆர்வத்துடன் ஏற்றுமதியும் செய்து வருகின்றனர்.

#கொய்மலர் #காதலர்_தினம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Sun Feb 12, 2023 3:26 pm

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் LJT3qCD

காதலர் தினம் இப்படிதான் உருவானதா..?



உலகம் முழுவதும் அனைத்து ஜீவராசிகளும் கொண்டாடும் வார்த்தைகளில் ஒன்று தான் காதல். அப்பாவின் பாசம், அம்மாவின் பாசம், குழந்தைகள் மீதான பாசம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரின் மீதும் ஒவ்வொரு விதமான பாசம் கலந்த காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணர்வுப்பூர்வமாக அனுபவிக்கும் காதலை அனைவரும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளுக்கு முந்தைய வாரத்தில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. இந்த நாளை நாமும் நமக்குத் தெரிந்தப் படி கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாள் ஏன் கொண்டாடப்படுகிறது? என்பது குறித்து ஒரு நாளும் யோசித்து இல்லை.. இதோ காதல் தினத்தின் வரலாறு மற்றும் சிறப்பம்சம் குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…

காதலர் தின வரலாறு : காதலர் தினம் கொண்டாடுவதற்கான காரணங்கள் எதுவும் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ரோமானியப் பேரரசில் இருந்து காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்துக் கொண்டால் அவர்களின் வீரம் குறைந்துவிடும் என்பது அந்நாட்டு அரசரின் எண்ணமாக இருந்துள்ளது. எனவே தான் அந்நாட்டில் உள்ள ஆண்கள் திருமணம் செய்துக் கொள்வதற்குத் தடை விதித்துள்ளார்.

இந்த சூழலில் தான், திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் இருந்த ஆண்களுக்கு வேலண்டைன் எனும் பாதிரியார் திருமணம் செய்த வைத்துள்ளார். இந்த விஷயம் மன்னனுக்கு தெரிய வந்த போது பாதிரியார் வேலண்டைனுக்கு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக ஒவ்வொரு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் கூறுகிறது. இது பொதுவான விஷயமாக இருந்தாலும், ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு விதமான வரலாறுகளுடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Sun Feb 12, 2023 3:29 pm

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாட்டம் என்பது 7 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது.



பிப்ரவரி 7- காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டே என பிப்ரவரி 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலிக்கும் ஒவ்வொருவருவரும் ரோஜாக்களை கொடுத்து தங்களது காதலை மனப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார்கள்.

பிப்ரவரி 8 – பிரபோஸ் டே தான் காதலர் வாரத்தின் இரண்டாவது நாளாகும். இந்நாளில் தங்களின் காதலை எந்த தயக்கமும் இல்லாமல் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

பிப்ரவரி 9 – சாக்லேட் தினம்: காதலர் வாரத்தின் மூன்றாவது நாளாக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்களோ? பெண்களோ? தங்களின் அன்பானவர்களுக்கு சாக்லேட் பாக்ஸ்களைக் கொடுத்து மகிழும் நாளாக இது அமைகிறது.

பிப்ரவரி 10 டெடி டே : உங்கள் காதலிக்கு இந்நாளில் ஒரு டெடி பொம்மை அன்பளிப்பாக அளித்து அதை வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கச் சொல்லலாம்.

பிப்ரவரி 11- வாக்குறுதி தினம் (promise day): நான் உனக்காக வாழ்கிறேன்,.. உனக்காக எதையும் செய்வேன், நம்பிக்கையோடு என்னைக் காதலிக்கலாம் என வாக்குறுதியை அளிப்பதற்காக காதலர் தின வாரத்தின் 5 வது நாள் வாக்குறுதி தினம் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 12 – ஹக்டே (Hug day): நான் உனக்காக உண்மையாக இருக்கிறேன் என்பதை வெளிக்கொணரும் விதமாக நீங்கள் விரும்பும் ஒருவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளுங்கள்.

பிப்ரவரி 13 – முத்த தினம் (kiss day): காதலர்களுக்கு இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக முத்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் தினம் இது.

பிப்ரவரி 14 காதலர் தினம் : காதலர்கள் மற்றும் தம்பதிகள் ஒன்றாக நேரத்தைச் செலவிடும் நாளாக அமைகிறது காதலர் தினம். இந்நாளில் இவர்கள் தங்களின் அன்புகளை பரிமாறிக்கொள்ளவும் இந்த நாள் உதவுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by T.N.Balasubramanian Sun Feb 12, 2023 5:29 pm

காதலர் தினம் --
கருத்து கூறவேண்டுமெனில் தற்காலங்களில் அர்த்தமற்றதாக இருக்கிறது.
கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடி போலாமா என்று பாட்டுக்கேற்ப 
கல்யாணமான, குழந்தைகள் பெற்றுக்கொண்ட பெண்மணியும் 
வயது குறைவுள்ள ஆணுடன் ஓடிப்போகிறாள்.கேட்டால் காதலாம்.

இளைஞனும் மனைவி இருக்கையில் ஸ்டெப்னி வேண்டி இருக்கிறது.
14 வயது பெண்ணுக்கு காதல் --2/3 பேர்களுடன் டேட்டிங் 
35 வயது 
டீச்சர் 14 வயது பையனை...............
வேண்டாம் இந்த காதலர் தினம் --
தினம்தினம் காதல் 
புது புது காதல் 

வேண்டுமா நீங்களே Guest  அவர்களே சொல்லுங்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Sun Feb 12, 2023 8:45 pm

பிறிதொரு பொழுதில்
உங்கள் பைத்தியக்காரத்தனங்களை
எண்ணி சிரிப்பதற்கேனும்
காதலியுங்கள்



நான் காதலித்து திருமணம் செய்தவன், அதனால் காதல் மீது எனக்கு நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது. ஆனால் காதல் என்ற பெயரில் நடக்கும் காமக் கூத்துக்களும் சமுதாயத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

இதற்காக நாம் காதலை கொச்சைப் படுத்திவிட முடியாது. உண்மையான காதலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்தக் கலியுகத்தில் அவர்களின் எண்ணிக்கை தான் குறைந்து விட்டது. சோகம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by Dr.S.Soundarapandian Mon Feb 13, 2023 11:17 am

காதல் என்பது உண்மைதான்! அது காமம் காரணமாகவோ, இரக்கம் காரணமாகவோ, அழகுணர்ச்சி காரணமாகவோ, இயற்கையான பழக்கம் காரணமாகவோ ஏற்படலாம்! ஆனால், ‘காதலர் தினம்’ என்று வரிந்துகட்டிக்கொண்டு அதற்காகப் பாடுபடத் தேவையில்லை!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Tue Feb 14, 2023 8:28 pm

முத்தங்களின் வகைகள்- அர்த்தங்கள்



தினமும் மனைவியை முத்தமிடுபவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இதேபோல 1980-களில் ஒரு ஆய்வில் வேலைக்கு செல்வதற்கு முன்பு மனைவியை முத்தமிடும் ஆண்கள் குறைவான விபத்தில் சிக்குகிறார்கள் என்றும், அதிக வருமானத்துடன் இருந்ததாகவும் கூறுகிறது.

முத்தமிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்றும், முத்தத்தின் போது உருவாக்கும் கூடுதல் உமிழ்நீர் பல ஆபத்தான பாக்டீரியாக்களை அழித்து இதய துடிப்பை அதிகரிப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

முத்தம் ரத்தத்தில் உள்ள கார்டிசோல் என்ற மனஅழுத்த கார்மோனின் அளவை குறைக்க உதவுகிறது என்றும் நன்மைகளை பட்டியலிடுகிறது.

உதட்டில் முத்தம், கைகளில் முத்தம், நெற்றியில் முத்தம், மூக்கில் முத்தம், கண்களை திறந்து முத்தம், கண்களை மூடிக்கொடுப்பது, கன்னத்தில் முத்தம், கண்களில் முத்தம், கழுத்தில் முத்தம் என முத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளன.

இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம். நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம்.

மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் என்கிறார்கள். கண்களை திறந்து முத்தம் கொடுக்கும் போது, உங்களது துணை ரசிக்கிறார்கள் என்று அர்த்தம். கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்றும், கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்றும், கழுத்தில் முத்தம் கொடுத்தால் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தமாம்.

இதுதவிர பிரஞ்சு முத்தம் என்பது தீவிரமான மற்றும் உணர்ச்சி மிக்க முத்தத்தில் ஒரு வடிவம். இது ஒருவரையொருவர் ஆழமாக காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by சிவா Tue Feb 14, 2023 8:43 pm

காதலுக்கென்றே பல படங்கள் இருந்தாலும் பார்த்து ஆக வேண்டிய 10 படங்கள்



1. டைட்டானிக்

காதல் திரைப்படம் என்றாலே முதலிடத்தில் இருப்பது டைட்டானிக்காகவே இருக்கும். உலகளவில் இப்படத்தைப் பார்க்காதவர்கள் மிகச்சிலரே என்கிற அளவிற்கு ஒரு கப்பலில் ஜாக் -  ரோஸின் காதல் காவியம் பிரிவில் முடிவடையும் போது கண்கலங்காதவர்கள் அரிது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றளவும் ரசிகர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது, உலகம் முழுவதும் 3டியில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

2. 96

தமிழ் காதல் படங்களில் தனித்துவமான இடத்தில் இருக்கும் திரைப்படம் 96. வழக்கமாக நாயகனும் நாயகியும் சந்தித்து, காதலித்து, ஒருவரை ஒருவர் வெறுத்து பின் இணையும் பாணியில் இல்லாமல் சொல்லப்படாத காதலை தன் பேரிளம் பருவம் வரை சுமந்து திரியும் நாயகன் ராம்(விஜய் சேதுபதி),  தன் காதலியான ஜானுவை(திரிஷா) 20 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும்போது மீண்டும் உருவாகும் அழகான காதலையும் கடந்து சென்ற காலத்தின் வலியையும் அதன் உணர்ச்சிகளையும் மிகச்சிறந்த காட்சிகளின் வழியாக இயக்குநர் பிரேம் குமார் கடத்தியிருப்பார். ’ரொம்ப தூரமா போயிட்டியா ராம்’? ஜானுவின் கேள்விக்கு ‘உன்ன எங்க இறக்கிவிட்டனோ அங்கயேதான் நிக்கறேன்’ என்கிற ராமின் பதில் ஒருகணம் நிலைகுலைய வைத்துவிடும்.

3. மதராசப்பட்டினம்

ஆர்யா - எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மதராசப்பட்டினம். இந்திய சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்கள் முன்பாக சென்னையில் நடக்கும் கதையாக இப்படம் உருவானது. ஆங்கிலேயரான எமியை சலவைத் தொழிலாளியான ஆர்யா காதலிக்கும் விதமும் அதை வெளிப்படுத்தும் முறையும் என ஒரு கவிதையைப்போல படம் முழுவதும் பிரிவின் ஏக்கத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் கடத்தியிருப்பார். முக்கியமாக, இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இழந்த காதல் என்பது எத்தனை வலிமையானது என்பதை காட்டும்படியாக உருவாக்கப்பட்டிருக்கும்.

௪. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்

தமிழில் நல்ல காதல் திரைப்படங்களின் பட்டியலை எடுத்தால் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படம் பெரிதாக  இடம்பெறுவதில்லை. ஆனால், காதலின் அழுத்தத்ததையும் ஒரு பெண் ஆணை நம்பினால், வெறுத்தால் என்ன நடக்கும் என்கிற எதார்த்தத்தை கச்சிதகாக முன்வைத்த திரைப்படங்களில் ஒன்று இது. தான் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகனால் திருமணம் செய்யமுடியாமல் போகிறது. அதேநேரம், நாயகி நாயகன் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து அவன் மேல் வெறுப்புடன் இருக்கிறாள். பின், வேறு ஒருவனை திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால், நாயகனால் இந்த இழப்பைத் தாங்க முடியாமல் திருமணத்திற்குப் பின்பும் நாயகியின் பின்னால் சீரழிந்த மனதுடன் அலைகிறான்.  அவள் மனதில் இருப்பது கணவனா முன்னாள் காதலனா என்கிற சிக்கலான கேள்வியை முன்வைத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு படம் நகரும். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் பார்வையாளர்கள் மனம் உடையும் அளவிற்கான பதிலை இயக்குநர் வைத்திருப்பார். காதலிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.

5. நித்தம் ஒரு வானம்

காதல் தோல்வியில் பெரும்பாலும் நினைத்து வருத்தப்படும் விசயங்களில் ஒன்று பிரிந்து சென்றவர்களின் நினைவுகளும் அவர்களுடன் செலவிட்ட காலங்களும்தான். நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் நாயகன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்யப்போவதாகச் சொல்லிப் பிரிந்ததும் பெரிய மன அழுத்தததிற்கு ஆளாகிறான். அவனை அந்த வருத்ததிலிருந்து மீட்க மருத்துவர் ஒருவர் டைரி ஒன்றைக் கொடுத்து படிக்கச் சொல்கிறார். இரண்டு கதைகள் அதில் இருக்கும். ஆனால், அக்கதைகளுக்கு முடிவு எழுதப்பட்டிருக்காது. ஆனால், நாயகனுக்கு அக்கதைகளின் முடிவைத் தெரிந்துகொள்ள பெரிய ஆர்வம். மருத்துவரிடம் கேட்டதும் அவை கதைகள் அல்ல உண்மையான சம்பவங்கள் எனத் தெரிய வருகிறது. கதையில் தொடர்புடையவர்களைத் தேடிச் செல்லும் பயணமே இப்படம். இணைந்த காதலர்களின் மற்றொரு பக்கத்தையும் அவர்களின் காதலை ஆழமாகவும் அழகாகவும் சொல்கிறது நித்தம் ஒரு வானம்.

6. லவ் டுடே

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம். நகைச்சுவை பாணியில் உருவான இப்படத்தில் காதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியமான ஒன்று என்கிற விசயத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண் - பெண் உணர்வு நிலைகளைக் கச்சிதமாக பேசியிருந்தது. புதிய தலைமுறை இளைஞர்களால் பெரிது ரசிக்கப்பட்டது.

7.  அன்னாயும் ரசூலும் - மலையாளம்

ஃபகத் பாசில் - ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற திரைப்படம் அன்னாயும் ரசூலும். கார் ஓட்டுநரான ரசூலுக்கும் துணிக்கடையில் வேலை செய்யும் அன்னாவுக்கும் துளிரும் காதலே இப்படம். அதிகம் பேசாத இருவர் காதலிக்கும்போது அவர்களிடமிருந்து வெளிப்படம் உணர்ச்சிகளும் உடல்மொழிகளுமென படம் நகர்ந்தாலும் இறுதிக்காட்சியின் பயங்கரம் பெரும் தன்னிறக்கத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது. இயக்குநர் ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவும் படத்தில் பேசப்படும் காதல் குறித்தான பார்வையும் அட்டகாசமான திரையனுபவத்தை தருபவை.

8. இஷ்க்

மலையாளத்தில் வெளியான இஷ்க் திரைப்படம் காதலில் ஆணின் ஆணவத்தையும் சந்தேகத்தையும் பேசுகிறது. ஓர் இரவில் காதலர்கள் முத்தம் கொடுக்கும்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் பார்த்துவிடுகிறார். அதன்பின், காதலர்களை மிரட்டி பணம் பறிக்க முயலும்போது நாயகியை ஓட்டுநர் பாலியல் ரீதியாக சீண்டுவதைக் கண்டும் நாயகனால் எதுவும் செய்யமுடியவில்லை. பின் அவர்களிடமிருந்து தப்பிய காதலர்களுக்குள் பிரச்னை ஏற்படுகிறது. காதலன் தன் காதலியிடம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உன்னை என்ன செய்தான்? என கேள்விகளால் துளைக்கிறான். பின், நாயகன் ஓட்டுநரின் மனைவியிடம் தவறாக நடந்தால்தான் அவனை பழி வாங்க முடியும் என நினைத்து அவன் வீட்டிற்குச் செல்கிறான். அதன்பின் நடக்கும் சம்பவங்கள் நவீன யுக உறவில் ஆண்கள் செய்யும் தவறுகளை ஆராயும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

9. சாய்ரட் - மராத்தி

சந்தர்ப்பங்களில் அடிப்படையிலான பிரிவை விட திட்டமிட்டு காதலர்கள் பிரிக்கப்படுவது வலி மிகுந்தது. அதில் மிகமுக்கியமானது சாதி. அப்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகனும் மேல்சாதியைச் சேர்ந்த நாயகியும் காதலிக்கிறார்கள். இது தெரிய வரும்போது நாயகன் தாக்கப்படுகிறான். இதனால், காதலர்கள் ஊரைவிட்டு ஓடுகிறார்கள். அதன்பின், என்னவெல்லாம் நடக்கிறது என்பதை பதபதைக்கும் திரைக்கதையுடன் உருவாக்கி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சாய்ராட். படத்தின் கிளைமேக்ஸ் காட்சி நம் மனசாட்சியை உலுக்கக்கூடியது.

10. தி லன்ஞ் பாக்ஸ் - ஹிந்தி

இர்பான் கான் - நிம்ரட் கவுர் நடிப்பில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ’தி லன்ஞ் பாக்ஸ்’. தன் கணவருக்காக மதிய உணவை சமைத்து டிப்பன் பாக்ஸில் அனுப்புகிறார் நாயகி. ஆனால், அதை தவறுதலாக நாயகன் (இர்பான்) சாப்பிட்டு விடுகிறார். அதன்பின், ஒவ்வொரு நாளும் இதேபோல் நடக்கிறது. சமையல் அருமையாக இருப்பதாக இம்ரான் டிப்பன் பாக்ஸ் வழியாக கடிதம் எழுதி அனுப்பிறார். அதேபோல் நாயகியிடமிருந்து பதில் கடிதங்கள் உணவுடன் வருகிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் இருவரும் காதலிக்கத் துவங்கிறார்கள். இறுதியில் என்ன நடக்கிறது? என்பதை சுவாரஸ்ய கதைக்கருவுடன் உருவாக்கிறார் இயக்குநர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர் தினம் - சிறப்பு தகவல்கள் Empty Re: காதலர் தினம் - சிறப்பு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum