ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

3 posters

Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by சிவா Fri Feb 10, 2023 5:34 pm

எப்போதெல்லாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது என்று தமிழக #முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் #ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதி அவர்களின் மகனும், மாமன்ற உறுப்பினருமான  பரிதிஇளம்சுருதி - டாக்டர் நந்தினி (எ) கனிஷ்கா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மணமக்கள் வழக்கறிஞர் பரிதி இளம்சுருதி - டாக்டர் நந்தினி என்கிற கனிஷ்கா அவர்களுக்கு நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.
   
1991-ல் சட்டமன்றத் தேர்தலை நாம் சந்தித்தபோது, ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்தி,  நம்மை தோற்கடித்தார்கள். ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். இதுவரை திமுக சந்திக்காத ஒரு தோல்வி அதுதான், இரண்டே இடத்தில் தான் வெற்றி பெற்றோம். மற்ற எல்லா இடத்திலும் தோற்றோம். ஒன்று துறைமுகம், இரண்டாவது எழும்பூர்.  துறைமுகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெறுகிறார், எழும்பூரில் பரிதி வெற்றி பெறுகிறார்.

இந்த நிலையில் கருணாநிதி அவர்கள் இவ்வளவு பெரிய தோல்வியை மக்கள் தந்த காரணத்தால் என்னுடைய வெற்றியை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ராஜினாமா செய்கிறேன் என்று கருணாநிதி ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் ஒரே ஆள் பரிதி இளம்வழுதி, சட்டமன்றத்தில் தன்னந்தனியாக போய் நின்று ஆளுங்கட்சியின் வண்டவாளங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களையெல்லாம் தைரியமாக கைநீட்டி தட்டிக் கேட்கிற ஒரு வீரனாக, ஒரு போர்ப்படைத் தளபதியாக செயலாற்றியது, அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அவர் செய்த தவறுகளோ, நம் மீது கோபித்துக் கொண்டு சென்றதோ நினைவிற்கு வரவில்லை. அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அதனால்தான் இன்று இந்த திருணமத்திற்கு வந்திருக்கிறேன். தலைவர் அதைப் பார்த்துவிட்டு, பலமுறை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். நினைத்துப் பார்க்கிறேன்.

முரசொலியில் கடிதம் எழுதினார். வீர அபிமன்யூ என்று பட்டம் கொடுத்தார், இந்திரஜித் என்று பட்டம் கொடுத்தார். அப்படிப்பட்ட நிலையிலிருந்து பாடுபட்டவர் நம்முடைய பரிதி இளம்வழுதி. பல பொய் வழக்குகள், கொலைவெறித் தாக்குதல்கள் இப்படி பல நடந்திருக்கிறது.

அப்படிப்பட்ட பரிதி இளம்வழுதியினுடைய அருமை மகனுக்குத்தான் இன்றைக்கு திருமணம். இன்றைக்கு தேதி பிப்ரவரி 10. இதே பிப்ரவரி 10, 1969-ல் தான் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள். திட்டமிட்டு இந்த தேதியை ஏற்பாடு செய்து நடத்துகிறாரா என்று எனக்குத் தெரியாது, ஆனால் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

#கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்று, அது அண்ணா மறைவிற்குப் பிறகு 1969-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் தான் பிப்ரவரி 10. அந்தத் தேதியில்தான் இன்றைக்கு தம்பி பரிதி இளம்சுருதிக்கு திருமணம் நடக்கிறது. ஐந்து முறை தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றியிருக்கக்கூடிய, இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து பணியாற்றியிருக்கக்கூடிய, எப்போதெல்லாம் தலைவர் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது.

வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியதற்காக பாடுபட்ட பேனா தான் அவர் பேனா. டைடல் பார்க்கை வடிவமைத்து அதை உருவாக்குவதற்கு கையெழுத்து போட்ட பேனாதான் அவருடைய பேனா. பூம்புகாரை உருவாக்கித் தந்ததற்கு, அதற்கும் திட்டமிட்டது, அதற்கும் கையெழுத்து போட்ட பேனாவும் கருணாநிதி பேனாதான். குடிசைகளை மாற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்ட பேனாவும் அவருடைய பேனாதான். இலட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பேனாவும் கருணாநிதியுடைய பேனாதான். தமிழ் சமுதாயத்தினுடைய தலையெழுத்தையே மாற்றி அமைத்த பேனாவும், தலைவர் கருணாநிதியுடைய பேனா தான். அந்த பேனா எழுதிய இலட்சியம் தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு கையேடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மணமகன் பரிதி இளம்சுருதி அவர்கள் மாநில அளவில் அயலக அணியினுடைய துணைச் செயலாளராக இருந்து, மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து, கட்சிக்கும் மக்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறப்பான நிலையில் இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் அவரைப் பார்க்கிறபோது, எனக்கு பரிதி இளம்வழுதியின் நினைவுதான் வரும்.

நாடாளுமன்றத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று செய்தி எல்லாம் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு அவர்கள் நாடாளுமன்றத்திலே எடுத்து வைக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களா? சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி விளக்கமாக பேசி அதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார்.  பதில் இல்லை.

வருஷத்துக்கு இரண்டு கோடி பேர்களுக்கு  வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று சொல்லிதான் பிரதமாராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தார். என்ன ஆச்சு? ஒரு கேள்வி கேட்கிறார். பதில் இல்லை. வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை எல்லாம், நான் கைப்பற்றுவேன், அப்படி கைப்பற்றி அதைக் கொண்டு வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 இலட்ச ரூபாயை  வங்கிக் கணக்கில் போடுவேன், நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? 15 இலட்சம் வேண்டாம், 15 ஆயிரம் ரூபாய், 15 ரூபாயாவது போட்டிருக்கிறார்களா? இல்லை.

அதேபோல நம்முடைய நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவராக இருக்கக்கூடிய அருமை தங்கை கனிமொழி அவர்கள், கேட்கிறார், எய்ம்ஸ் என்ன ஆச்சு? 2021 பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அதற்கு பிறகு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களே மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு போயிருக்கிறார். இதுவரைக்கும் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. ஒரு செங்கலை வைத்து நம்முடைய தம்பி உதயநிதி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த செய்தி எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதற்கு பிறகுகூட வெட்கம் வந்திருக்க வேண்டாம். மறுபடியும் பாராளுமன்ற தேர்தல் வருமே, தம்பி இன்னொரு செங்கலை எடுத்து கிளம்பிடுவானே என்ற பயம் வர வேண்டாம்.  இந்த நிலையில், கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒன்றுக்கும் பதில் இல்லை.

அதேபோல ஆ.ராசா அவர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கிறார். பதில் இல்லை. தம்பி தயாநிதி மாறன் அவர்கள் ரொம்ப வேதனையோடு வந்து வெளியில் சொல்லுகிறார். நாடாளுமன்றத்தில் “கோரமே” இல்லை. மோடி பேசியவுடன் அத்தனை பேரும் போய்விட்டார்கள்.

அதேபோல மாநிலங்கவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் ரொம்ப அழுத்தந்திருத்தமாக உப்புமாவையே அடையாளம் காட்டி பேசினார். இப்படிப்பட்ட நிலையிலேதான், இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு எப்படி 2021ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, 2024-ல் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒரு நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள், தயாராக இருங்கள் என்று கேட்டு, அந்தப் படை வரிசையில் ஒருவனாக தம்பி பரிதி இளம்சுருதி அவர்கள் இருக்கிறார். எனவே, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை நான் வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று உன் தந்தை ஸ்தானத்தில் இருந்து உன்னை வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by சிவா Fri Feb 10, 2023 5:38 pm

எழுதாத பேனாவிற்கு எதுக்கு நினைவுச் சின்னம்? பிரேமலதா விஜயகாந்த்


எழுதாத பேனாவிற்கு எதுக்கு நினைவுச் சின்னம்? பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு!

தலைவர் கருணாநிதி நினைவு பேனா சின்னம் அமைக்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் இன்று கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர், ஆனந்த் நன்கு அறிமுகமானவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரை பார்க்கும் போது விஜயகாந்த்தைப் பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள் - அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது - ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது - அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார்.

மக்களது வரிப்பணத்தைக் கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையில்லை. தேமுதிக கொள்கையுடன் ஒத்துப் போகும் கட்சிகள் தமிழகத்தில் பல உள்ளது.

ஆகையால் தான் 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்டதாக தெரிவித்தார். வரும் தேர்தல்களில் கூட்டணி குறித்து விஜயகாந்த் உரிய நேரத்தில் அதனை அறிவிப்பார் என்றார். விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, இதுகுறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by சிவா Fri Feb 10, 2023 6:34 pm

எழுதாத பேனாவை எங்கு வைத்தால் என்ன?



எழுதாத பேனாவை எங்கு வச்சாலும் ஒன்று தான். ஆகவே தரையிலேயே வைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். ஈரோடு தொகுதியில் திமுக ஆட்சியில் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பாஜ., அதிமுக கூட்டணியில் தான் உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு நாட்கள் இருந்தாலும், பாஜ., கூட்டணி தொடரும். அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது. அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்?

பேனா வைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார். ஆனால், நடக்குமா, நடக்காதா என தெரியவில்லை. ஆனால், கடலில் பேனாவை வைக்கிறார். எழுதாத பேனாவை எங்கு வச்சாலும் ஒன்று தான். ஆகவே தரையிலேயே வைக்கலாம்.ஏராளமானோர் பேனா சின்னம் எதிர்க்கிறார்கள். பாதிப்பு ஏற்படும் என மீனவ சமுதாய மக்கள் தெரிவித்துள்ளனர். மீனவர், பொது மக்கள் கருத்தை கேட்டனர். அப்போது, அதிக எதிர்ப்பு குரல் கொடுக்கப்பட்டது.

இதனை எண்ணி, கருணாநிதி நினைவு மண்டபம் அருகில் பேனா சின்னத்தை அமைக்கலாம். இது என்னுடைய கருத்து. பேனா சின்னத்தை வைக்க வேண்டாம் என சொல்லவில்லை. கடலில் போய் வைத்தால் தான் வைத்த மாதிரி இருக்குமா? தரையில் பேனா சின்னத்தை அமைக்கலாம்.

ரூ.81 கோடியில் பேனா சின்னம் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. 79 கோடிக்கு பேனா வாங்கி மாணவர்களுக்கு கொடுக்கலாம். அதனை மாணவர்கள் நினைத்து கொண்டிருப்பார்கள். எழுதாத பேனாவிற்கு பதில், எழுதுற பேனாவை கொடுக்கலாம்.

ஆளுங்கட்சி கூட்டணியில் திமுக., மட்டும் தான் வளர்கிறது. மற்ற கட்சிகள் அப்படியே உள்ளன. திமுக.,விற்கு கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளனர். மின்கட்டணம், சொத்துவரி உயர்ந்துள்ளது.

இது குறித்து கம்யூ., காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளதா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian Fri Feb 10, 2023 8:08 pm

Code:
ரூ.81 கோடியில் பேனா சின்னம் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது............................................

81 கோடிக்கு பேனா வாங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கொடுக்கலாம் என்பது நல்ல யோஜனை.


Last edited by T.N.Balasubramanian on Fri Feb 10, 2023 8:36 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by Dr.S.Soundarapandian Fri Feb 10, 2023 8:22 pm

பேனா நினைவுச்சின்னம் அமைக்கக் கடல்தானா கிடைத்தது?
கடலைப் பாடாத கவிஞர்களே கிடையாது! இப்போது அவர்கள் மனச்சாட்சி எங்கே போனது?
இப்போது புரிகிறதா கவி மணிகளே உங்களுக்குச் சமுதாயத்தில் ஏன் மதிப்பில்லை என்று?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by சிவா Tue Feb 21, 2023 9:38 pm

துரோகத்தின் சின்னம் பேனா


திருப்பூர் மாவட்டம், உடுமலை சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி நாகரத்தினம்; இவரது மகன் விஷ்ணு பிரசாத், விபத்தில் உயிரிழந்தார். அடுத்த, 40 நாட்களில், இவரது கணவர் மோகன்குமாரும், உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். மகனையும், கணவரையும் அடுத்தடுத்து பறிகொடுத்த நாகரத்தினம் செய்த செயல் தான், நம்மை நெகிழச் செய்கிறது...

சின்னவீரம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தான், மோகன்குமாரும், விஷ்ணு பிரசாத்தும் படித்துள்ளனர். மகனின் விபத்து காப்பீட்டு தொகையாக வந்த, 10 லட்சம் ரூபாயை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புரவலர் நிதியாக வழங்கியுள்ளார், நாகரத்தினம். அதாவது, தன் மகனின் நினைவாக, அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு, ஏழை விவசாய பெண் நன்கொடை அளித்துள்ளார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, மக்கள் வரிப்பணத்தை எடுத்து, அவரது அப்பாவின் நினைவாக, கடலில் பேனா சின்னம் அமைக்க தீர்மானித்துள்ளார். கோடிக்கணக்கான ரூபாய், ஸ்டாலின் குடும்பத்தாரிடமும், தி.மு.க.,வினரிடமும் கொட்டிக் கிடக்க, 'மக்களின் வரிப்பணத்தை எடுத்து தான், கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம்அமைப்பேன்' என, ஸ்டாலின் அடம் பிடிப்பது, கொடுமையிலும் கொடுமை.

latest tamil news
பேனா சின்னம் அமைக்க, மக்கள் வரிப்பணம், 81 கோடி ரூபாய் செலவு செய்ய, ஸ்டாலினுக்கு இனிக்கிறது. தன் சொந்த பணத்தை கொடுத்தால் தானே வலிக்கும்... மக்கள் வரிப்பணம், 81 கோடி ரூபாயை, பேனா சின்னம் அமைத்து வீணாக்குவதற்கு பதிலாக, அரசு பள்ளிகளுக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், அது பயனுள்ளதாக இருக்குமே!

கருணாநிதி முதல்வராக இருந்த போது செய்த சாதனைகள் என்ன தெரியுமா என, சில பட்டியல் விபரங்களை வெளியிடலாம்; ஆனால் அவை, முன்னாள் முதல்வர் காமராஜர் செய்த சாதனைகளில் கால் துாசிக்கு சமமாகுமா?

சத்தியமூர்த்தி, நீலகண்ட பிரம்மச்சாரி, செண்பகராமன் பிள்ளை, வ.உ.சி., உள்ளிட்டோர் செய்த தியாகங்களை விட, கருணாநிதி இந்த நாட்டிற்காக அதிக தியாகங்கள் செய்து விட்டாரா...

கருணாநிதி செய்த சாதனைகளின் பட்டியலை வெளியிட்டால், அதை விட அதிகமாக, தமிழகத்திற்கு அவர் செய்த துரோகங்களின் பட்டியல் தான் நினைவுக்கு வரும் என்பதை, அவரது மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உணர வேண்டும். கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைக்கப்பட்டால், அது வருங்காலத்தில் துரோகத்தின் சின்னமாகவே பார்க்கப்படும் என்பதை மறவாதீர்!

சி.கலாதம்பி, பட்டுக்கோட்டை
தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian Wed Feb 22, 2023 6:34 pm

முதல்வர் மக்கள் பணத்திலிருந்து பேனா சின்னம் வைப்பதைக்காட்டிலும். தனது சொந்த பணத்திலோ 
கட்சியின் பணத்திலோ வைக்கலாம். அல்லது தோழமை கட்சிகளிடமிருந்து (காங்கிரஸ்/திக நிச்சயமாக 
கொடுப்பார்கள்.) நன்கொடை பெறலாம். ஒரு முன்னுதாரணமாகும் அதுதான் திராவிட மாடல் ஆகும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by Dr.S.Soundarapandian Thu Feb 23, 2023 11:54 am

“சத்தியமூர்த்தி, நீலகண்ட பிரம்மச்சாரி, செண்பகராமன் பிள்ளை, வ.உ.சி., உள்ளிட்டோர் செய்த தியாகங்களை விட, கருணாநிதி இந்த நாட்டிற்காக அதிக தியாகங்கள் செய்து விட்டாரா...”

“கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைக்கப்பட்டால், அது வருங்காலத்தில் துரோகத்தின் சின்னமாகவே பார்க்கப்படும் என்பதை மறவாதீர்!”

-- அருமையிருக்கு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின் Empty Re: எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum