Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் இருக்கும்வரை நடக்காது..!
2 posters
Page 1 of 1
நான் இருக்கும்வரை நடக்காது..!
மனிதனும் அப்படித்தான். வெளியே அமைதியாக - ஆனந்தமாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் ஏதோவொரு சிந்தனை விழித்துக்கொண்டேதான் இருக்கும்.
கிராமத்தில் இருக்கும் வீடுகளில் பெரியது அது. பலரும் பல விஷயங்களுக்காக அந்த வீட்டுப் பெரிய மனிதரைப் பார்க்க வருவது வாடிக்கை. அன்று சாது ஒருவர் அந்த வீட்டுக்கு வந்தார்.
பெரிய மனிதர் படுத்திருந்தார். சாது அவரை நெருங்கி ``ஐயா’’ என்று குரல் கொடுத்தார்.
‘‘எனது அமைதியைக் கெடுக்காதீர்கள்!’’ என்றார் பெரிய மனிதர்.
உடனே சந்நியாசி சிரித்துவிட்டுச் சொன்னார், ‘‘கெடக்கூடிய நிலையில் இருந்தால், அது அமைதியே அல்ல!’’
உண்மைதான். எந்தச் சூழலிலும் நாம் அமைதியாக இல்லை என்பதே உண்மை. எரிமலைகள் வெளியே அமைதியுடன் திகழ்வது போன்று தோற்றம் தந்தாலும் உள்ளே எரிமலைக்குழம்பு கனன்றுகொண்டுதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் பீறிட்டு வெளிப்படலாம்.
மனிதனும் அப்படித்தான். வெளியே அமைதியாக - ஆனந்தமாக இருப்பதாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் ஏதோவொரு சிந்தனை விழித்துக்கொண்டேதான் இருக்கும். இப்படியான எவ்விதச் சிந்தையும் இன்றி ஒருவரால் வெளியேயும் உள்ளேயும் சும்மா கிடக்க முடிகிறது என்றால், அவரே மகா புருஷர் என்கின்றன நம் ஞான நூல்கள். கிடைத்தற்கரிய சொர்க்க வாய்ப்பு இது.
விஸ்வாமித்திரரின் மகன் அஷ்டகன். ஒரு முறை இவன், அசுவமேத யாகம் செய்தான். அழைப்பை ஏற்று அரசர்களும் முனிவர்களும் யாகத்துக்கு வருகை தந்தனர்.
யாகம் முடிந்ததும் அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி ஆகிய நால்வரும் ஒரே தேரில் சென்றனர். அப்போது எதிரில் நாரதர் வருவதைக் கண்டு அவரையும் தேரில் ஏற்றிக்கொண்டனர்.
``நாரதரே! நாங்கள் புகழ் மிக்க அரசர்கள். நீங்களோ சிறந்த மகரிஷி. இப்போது நம் ஐவரில், நால்வர் மட்டுமே சொர்க்கம் செல்லலாம் எனில், தேரிலிருந்து இறங்க வேண்டியவர் யார்?’’ என்று அவர்கள் கேட்டதும், ``அஷ்டகன்!’’ என்றார் நாரதர்.
``ஏன்?’’ - அரசர்கள் கேட்டனர்.
``நான், அஷ்டகனின் அரண்மனையில் இருந்தபோது பல்லாயிரம் பசுக்களைக் காட்டி, அவற்றைத் தானம் செய்து விட்டதாகப் பெருமிதத்துடன் கூறினான். செய்ததைச் சொல்லிக்காட்டிப் புகழ்ந்து கொள்பவனுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடையாது!’’ என்றார் நாரதர்.
உடனே, ``மூவர் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும் என்றால், நால்வரில் யார் இறங்க வேண்டும்?’’ என்று அரசர்கள் கேட்டனர்.
``இப்போது இறங்க வேண்டியவன் பிரதர்த்தனன். ஒரு முறை, இவனுடன் மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சென்றேன். ஒருவர் பின் ஒருவராக மூன்று பெரியவர்கள் மூன்று குதிரைகளையும் தானமாகக் கேட்டுப் பெற்றனர். இழுப்பதற்குக் குதிரை இல்லாமல், தானே தேரை இழுத்தான் பிரதர்த்தனன்.
ஆனால், ‘எதைத்தான் தானமாகக் கேட்பது என்று இந்தப் பெரியவர்களுக்குத் தெரியவில்லையே!’ என்று மனதுக்குள் சலித்துக்கொண்டான். தானம் கொடுத்துவிட்டு நொந்துகொள்பவனுக்கு எப்போதும் சொர்க்கத்தில் இடமில்லை!’’ என்றார் நாரதர்.
``மூவரில் இருவருக்குத்தான் சொர்க்கத்தில் அனுமதி எனில் யார் இறங்க வேண்டும்?’’ என்று அரசர்கள் மீண்டும் கேட்டபோது, ``வசுமனஸ்’’ என்றார் நாரதர்!
``இவனிடம் உள்ள உயர்ந்த ரதத்தை ஒருவன் கேட்டபோது, ‘எனக்கு இந்த ரதத்தில் எந்த உரிமையும் இல்லை. எவர் வேண்டுமானாலும், எப்போதும் இதை என் அனுமதியின்றிப் பயன்படுத்தலாம்’ என்று நயமாகச் சொன்னானே தவிர, தானம் செய்வதைத் தவிர்த்தே வந்தான். வெறும் வார்த்தை தானம் சொர்க்கம் வழங்காது!’’ என்று விளக்கினார் நாரதர்.
இப்போது அடுத்த கேள்வியை அவர்கள் கேட்டனர், ``சரி, சிபியும் நீங்களும் தேரில் இருக்க... ஒருவர் இறங்கிவிட வேண்டும் எனில் யார் இறங்க வேண்டும்?’’
நாரதர் சட்டென்று சொன்னார், ``நானே!’’ என்று.
இதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த நாரதர் காரணத்தை விளக்கினார்.
``சிபி எந்த நாளிலும் தானத்தைப் புகழுக்காகவோ, புண்ணியத்துக்காகவோ செய்தவன் இல்லை. இல்லாதவருக்கு உதவுவதே இருப்பவனது கடமை என்று நினைப்பவன். நம்மில் சொர்க்கம் செல்ல அவனே முழுத் தகுதி உடையவன்!’’ என்றார் நாரதர்.
தற்புகழ்ச்சி, சலிப்பு, வார்த்தை ஜாலங்கள் போன்றவை யாவும் `நான்’ எனும் அகங்காரத்தால் விளைபவை அல்லவா? நான் எனும் எண்ணம் கொண்ட நெஞ்சில் அமைதி தங்கியதில்லை!
அன்பர் ஒருவர் ரமண மகரிஷியை தரிசிக்க வந்தார். அப்போது உணவு வேளை. பகவான் ரமணர் பக்தர்களுடன் சாப்பிட அமர்ந்தார். அவரை தரிசிக்க வந்த அன்பர் ஒருவர் பகவான் ரமணரை அணுகி, ‘`எனக்குச் சிறிது பிரசாதம் கொடுங்கள்!’’ என்று கேட்டார்.
அதாவது, ரமண மகரிஷி தனது உணவிலிருந்து சிறிது கொடுக்க வேண்டும் என்று விரும்பினார் அந்த அன்பர். அதை அவர் பிரசாதமாகக் கருதினார்.
இதை உணர்ந்துகொண்ட ரமணர், ‘`சாப்பிடுபவன்... ‘நான்’ என்ற எண்ணம் இல்லாமல் சாப்பிட்டால் அதுவே பிரசாதம்தான்!’’ என்றாராம்!
புத்தரிடம் யார் யாரோ சீடர்களாக இருந்து, ஞானம் பெற்றனர். ஆனால், ஆனந்தனுக்கோ புத்தர் கண் மூடிய கடைசி நாள் வரை ஞானம் கிட்டவில்லை.
புத்தர் மரணத்தின் மடியில் விழுந்த நாளில், ``இவ்வளவு காலம் உங்களுடன் இருந்தும் கைவராத ஞானம், இனிமேலா எனக்கு வாய்க்கப்போகிறது?’’ என்று வருந்தினான் ஆனந்தன்.
``ஆனந்தா! ‘எனக்கு மூத்தவன்’ என்பதை இன்று வரை நீ மறக்கவில்லை. அந்த நினைப்பில் உனக்கு ஒரு கர்வம் இருக்கிறது. நான் உன்னுடனேயே இருக்க வேண்டும், உறங்க வேண்டும் என்று நீ விதித்த நிபந்தனையை நான் ஏற்றுக்கொண்டேன். எனக்கே நிபந்தனை விதித்தவன் என்ற அகந்தையும் உன்னை விட்டு அகலவே இல்லை. ‘நான்’ இருக்கும் வரை, உனக்கு ஞானம் வர வாய்ப்பு இல்லை. ‘நான்’ இறந்ததும் ஒருவேளை நீ ஞானி ஆகலாம்’ என்று அருளினார்.
இந்த `நான்’ எனும் அகங்காரம், அமைதியை அழிப்பதோடு, தகுதியை உணர்ந்துகொள்ளும் பக்குவத்தை அறவே அற்றுப்போகச் செய்துவிடும். சுயத்தை இழக்கச் செய்யும். நம்மிடமிருந்து `நான்’ தொலையட்டும்; வாழ்க்கை மலரட்டும்!
விகடன்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நான் இருக்கும்வரை நடக்காது..!
அருமையான ஆன்மீக தகவல் .
ரசித்தேன்.
சிறந்த நீதி நெறி /விளக்கம்.
ரசித்தேன்.
சிறந்த நீதி நெறி /விளக்கம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» உயிர் இருக்கும்வரை என் மனதை விட்டுப்பிரியாது
» பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி
» தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை
» வாக்கு எண்ணிக்கையில் எந்தத் தவறும் நடக்காது:பிரவீன்
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
» பின்னணி இல்லாமல் எதுவும் நடக்காது : கருணாநிதி
» தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை
» வாக்கு எண்ணிக்கையில் எந்தத் தவறும் நடக்காது:பிரவீன்
» "எதற்கெடுத்தாலும் நான், நான், நான்...!" - ஜெயலலிதா மீது விஜயகாந்த் சாடல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum