புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
87 Posts - 64%
heezulia
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
2 Posts - 1%
prajai
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
423 Posts - 76%
heezulia
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
8 Posts - 1%
prajai
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மகா சிவராத்திரி விரதம் Poll_c10மகா சிவராத்திரி விரதம் Poll_m10மகா சிவராத்திரி விரதம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா சிவராத்திரி விரதம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 07, 2023 8:41 am

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலைசிறந்தது சிவராத்திரி விரதம். இதன் மகிமையை சிவபெருமானே எடுத்துச் சொன்னதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.



மகா சிவராத்திரி விரதம் Siva_r10

`எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ என்பது சிவ திருவாக்கு என்கிறது வரதபண்டிதம் எனும் நூல்.

எள்ளளவும் அன்பு இல்லாதவர்களோ அன்பு உள்ளவர்களோ... எவராயினும் மகா சிவராத்திரி புண்ணிய தினத்தில் சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

சிவனைப் பூஜிக்கும் ராத்திரி


‘ராத்ர’ என்ற சொல்லுக்கு, யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள். எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப் பொழுது, ராத்திரி எனும் பெயர் ஏற்றது. ஊழிக் காலத்தை மகா சம்ஹார காலம் என்பர். இந்த நேரத்தில் ஐம்பூதங்களும் மாயையில் ஒடுங்கும்.

அதனால் எங்கும் இருள் சூழ, உலகம் செயலற்று எங்கும் அமைதி நிலவும். இந்த நிலையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார். உலகம் மீண்டும் தழைக்க சக்திதேவி சிவபூஜை செய்வாள். அகண்டாகாராமாகிய அந்த இரவே சிவராத்திரி ஆகும்.

இவ்வாறு சிவபெருமானை வழிபட்ட சக்திதேவி அவரிடம், ‘`இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படித் தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டாளாம். ‘அப்படியே ஆகுக’ என சிவபெருமானும் அருள்பாலித்தாராம். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.

ஞானநூல்கள் சிவராத்திரியை ஐந்து விதமாகச் சொல்கின்றன. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி. இவற்றில் மாசி மாதம் தேய் பிறையில் வரும் சதுர்த்தசி நன்னாளே மாக சிவராத்திரி ஆகும். இதையே மகா சிவராத்திரி எனப் போற்றுகிறோம். இதற்கு வருஷ சிவராத்திரி என்றும் பெயர் உண்டு.

புராணங்களும் புண்ணிய சிவராத்திரியும்


ஒரு காலத்தில் உலகம் அழிந்து, யாவும் சிவபெருமானுள் ஒடுங்கின. அந்தகாரம் சூழ்ந்த அந்த இருளில், பார்வதிதேவியார் சிவ பெருமானை ஆகமங்களில் கூறியுள்ளபடி நான்கு காலம் வழிபட்டாள். இப்படி

சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது எனச் சொல்லும் ஞானநூல்கள், மகா சிவராத்திரி புண்ணிய தினத்துக்கான வேறுசில மகிமைகளையும் சிலிர்ப்புடன் விவரிக்கின்றன. அவற்றில் முக்கியமானது திருமாலும் பிரம்மனும் அடி-முடி தேடிய திருக்கதை.

ஒருமுறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே, தங்களில் பெரியவர் யார் எனும் சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவருக்குமான மோதலால் உலகமும் உயிர்களும் பாதிப்படையுமே என அச்சம் கொண்ட தேவர்கள், சிவபிரானைச் சரணடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தினார் ஈஸ்வரன்.

திருமாலுக்கும் பிரம்மனுக்கும் நடுவில் பெரும் நெருப்புத் தூணாய் தோன்றினார். அதன் பிரமாண்டம் அவர்களை அயர வைத்தது. அந்த பிரமாண்டத்தின் (நெருப்புத் தூணின்) திருவடியையோ அல்லது திருமுடியையோ முதலில் கண்டு வருபவரே பெரியவர் என்று முடிவானது.

பெருமாள், வராக உருவெடுத்து பூமியை அகழ்ந்து, திருவடியைக் காணச் சென்றார். பிரம்மன், அன்னப் பறவையாக மாறி திருமுடி காண உயரப் பறந்தார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புத் தூணின் அடி-முடியைக் காண இயலாமல் போனது (பிரம்மன்- தாழம்பூ கதை குறித்து ஆன்மிக ஆன்றோர்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் உண்டு). செய்வதறியாமல் இருவரும் துதித்து நிற்க, தேவர்கள் யாவரும் போற்றி வழிபட, அந்த நெருப்புத் தூணின் மையத்தில் மான், மழு, அபய, வரத முத்திரை தாங்கியவராக திருக்காட்சி தந்தார் சிவபெருமான்.

``இவ்வாறு நான் காட்சியளித்த இந்தத் தினத்தில் ஆகம முறைப்படி எம்மை பூஜிக்க நல்லது யாவும் நடந்தேறும். அற்புதமான இந்த பூஜை, அஸ்வமேதம் முதலான யாகங்கள் செய்வதைக் காட்டிலும் நூறு மடங்கு பலன் தருவது’’ என்று அருள் பாலித்தாராம்.

சிவ மகா புராணத்தின் பூர்வ பாகம், உபமன்யு பக்தவிலாசம், மகா ஸ்காந்தம், நாரதம், லிங்க புராணம் போன்றவை மேற்கண்ட நிகழ்வை விரிவாகவும் சிற்சில மாறுதலுடனும் விவரிக்கின்றன. தமிழில் உள்ள கந்தபுராணம், அருணகிரி புராணம், சிவராத்திரி புராணம், அருணாசல புராணம் ஆகியவற்றிலும் இந்த நிகழ்வைக் காணலாம்.

ஒரு முறை, பார்வதிதேவியார் விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். அதனால் உலகில் இருள் சூழ்ந்தது. காலமல்லாத காலத்தில் கொடிய இருள் சூழ்ந்ததனால், உயிர்கள் வருந்தின. அப்போது ருத்திரர் தலைமையில் 11 கோடி ருத்திரர்களும் சிவபெருமானை அர்ச்சித்தனர். அதனை நினைவுகூரும் வகையில் சிவராத்திரி கொண்டாடப்படுவதாகச் சில நூல்கள் குறிப்பிடுகின்றன.

பார்வதிதேவி, சிவபெருமானின் கண்களைப் பொத்தியபோது உலகை இருள் சூழ்ந்தது அல்லவா? அப்போது ஈசன் தமது நெற்றிக் கண்ணைத் திறந்தார். நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் பயந்தனர். அப்போது உமைய வள் பரமேஸ்வரனைத் தொழுதுப் பணிந்து வழிபட்டாள். அதனால் மகிழ்ந்த ஈசன், நெருப்பாய் தகித்த சுடரொளியை தண்ணொளியாய் - குளிர் ஒளியாய் ஆக்கி அருள்புரிந்தாராம்.

கொடும்நெருப்புபோன்று நம்மை வாட்டும் துன்பங்களும் நீங்கி இன்பம் பொங்கிட சிவனருள் துணை நிற்கட்டும் என்றே சிவராத்திரி வழிபாடு செய்கிறோம் என்றும் தகவல் உண்டு.

பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்பர் சிலர்.

எப்படி வழிபட வேண்டும்?


மகா சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை - பூஜைகளைச் செய்தபிறகு, சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து வரவேண்டும்.

பிறகு வீட்டில் சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருள்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்து விட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து ஜாமத்துக்கு ஒன்றாக நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.ஒவ்வொரு காலத்துக்கும் உரிய அலங்காரப் பொருள்களால் சிவனாரை அலங்கரித்து, அர்ச்சனைப் பொருள்களால் அர்ச்சித்து, உரிய துதிப்பாடல்களைப் பாடி, நைவேத்தியங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

இரவு முழுக்கத் தூங்காமல் இவ்வாறு பூஜை செய்து மறுநாள் அதிகாலையில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சி கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும். அதன்பின் நமக்கு உபதேசம் செய்த தீட்சை குருவை வணங்கி, அவர் ஆசி பெற்று, ஒரு சில ஏழைகளுக்காவது உணவளித்து, அதன்பின் நாம் உண்ண வேண்டும். இவ்வளவையும் சூரியன் உதித்து இரண்டரை மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.

அந்தவகையில் வாசகர்கள் அனைவரும் பயன் அடையும் விதம், அவர்களின் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் சகல நன்மைகளையும் பெறும் பொருட்டு, மகிமை திருவாவடுதுறை ஆதினத்துக்கு உட்பட்ட பிரசித்திபெற்ற நான்கு சிவாலயங்களில், சிறப்பு சங்கல்பப் பிரார்த்தனை பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

மகா சிவராத்திரி நான்கு காலமும் முறையே... தென் திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில், திருமங்கலக்குடி பிராணநாத ஸ்வாமி திருக்கோயில், திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமி திருக்கோயில், திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில் ஆகிய தலங்களில் நடைபெறவுள்ள சிறப்புச் சங்கல்ப வழிபாட்டில் நீங்களும் சங்கல்ப முன்பதிவு செய்து உங்கள் பிரார்த்தனையைச் சமர்ப்பிக்கலாம் (விவரம் - பெட்டிச் செய்தியில்).

புராணங்கள் பெரிதும் போற்றும், பாடல்பெற்ற இந்தப் புண்ணிய தலங்களில் நிகழ்த்தப்படும் வழிபாடுகள் மகத்துவ பலன் களை அருளவல்லவை. குறிப்பாக மகாசிவராத்திரி புண்ணிய காலத்தில் சமர்ப்பிக்கப்படும் உங்கள் பிரார்த்தனைகள், சிவனருளால் விரைவில் நிறைவேறும். உங்கள் சங்கடங்கள் அனைத்தும் விலகி, வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்!

நான்கு காலம் சிவராத்திரி பூஜை நியதிகள்!


வரும் பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை அன்று மகா சிவராத்திரி புண்ணிய தினம். இந்தத் திருநாளில் சிவபெருமானைப் போற்றியும் பூஜித்தும் செய்யப்படும் வழிபாடுகள் அதீத மகத்துவம் கொண்டவை. இதனால் நம்முடைய சகல தோஷங்களும் பாவங்களும் விலகி, மங்கல வரங்கள் யாவும் ஸித்திக்கும். அதிலும் தேவர்களும் தெய்வங்களும் போற்றிக் கொண்டாடிய புராணச் சிறப்புமிக்க தலங்களில் இந்த வழிபாடு நிகழும்போது அதற்குப் பன்மடங்கு பலன் உண்டு அல்லவா?

அவ்வகையில் வாசகர்களும், அவர்களின் குடும்பமும், சுற்றமும் நட்பும் சகல நன்மைகளை அடையும் பொருட்டு, சக்திவிகடன் சார்பில், மகிமைமிகு திருவாவடுதுறை ஆதினத்துக்கு உட்பட்ட நான்கு சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு சங்கல்ப வழிபாடு நடைபெறவுள்ளது.

சிவராத்திரி புண்ணிய தினத்தில் இரவு நான்கு காலம் முறைப்படி சிவபெருமானை வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள். அவ்வகையில் கீழ்க்காணும் விவரப்படி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கோயிலில், சிறப்பு சங்கல்பப் பிரார்த்தனை வழிபாடு நடைபெறும். அதில் முறைப்படி பெயர், நட்சத்திரத்தோடு வாசகர்களின் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.

திருக்கோயில் விவரங்கள்:


முதல் காலம்: தென் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம்

2-ம் காலம்: திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் ஆலயம்

3-ம் காலம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம்

4-ம் காலம்: திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்.

அற்புதமான இந்தத் தலங்களில் நிகழும் வழிபாட்டில் சங்கல்பித்துப் பிரார்த்திப்பதன் மூலம் சிவனருள் கைகூடும். சகல காரியங்களிலும் வெற்றி பெறலாம். கிரக தோஷங்கள், தீவினைகள், பிணித் துயர்கள் நீங்கும்; தீரா கடன் பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம்.

வாசகர்கள் கவனத்துக்கு: இந்த வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சங்கல்ப வழிபாட்டுக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பெயர் நட்சத்திரத்துடன் சிறப்பு வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு நான்கு திருத்தலங்களின் விபூதிப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

நான்கு காலம் சிவராத்திரி பூஜை நியதிகள்!


முதல் காலம்: (மாலை 6 முதல் 9 மணி வரை) : ஸ்வாமிக்குப் பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்யலாம். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, ரிக் வேதம் சொல்ல வேண்டும்.

இரண்டாம் காலம் (இரவு 9 முதல் 12 மணி வரை): பஞ்சாமிர்த அபிஷேகம். சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசி யால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.

மூன்றாம் காலம் (இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை): தேன் அபிஷேகம் செய்யலாம். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சிக்கலாம். எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும்.

நான்காம் காலம் (அதிகாலை 3 முதல் 6 மணி வரை): கரும்புச் சாறு அபிஷேகம் விசேஷம். அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்யலாம். சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும். நான்கு காலமும் தேவார திருவாசகப் பாடல்களைப் பாடி வழிபடலாம்.

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக