Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
[இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
Page 1 of 1
[இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
தமிழரின் பொன்னாள் எந்நாள்?
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)
தமிழ்ப் பேராசிரியர்
திருநின்றவூர்.
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)
தமிழ்ப் பேராசிரியர்
திருநின்றவூர்.
எழுச்சியும் வீரமும் மகிழ்ச்சியும் தன்னகத்தே கொண்டு, மாபெரும் சாதனைகள் செய்த இனமாகத் தமிழினம் திகழ்கின்றது. செம்மார்ந்த வாழ்க்கை வாழ்ந்து உலகினுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர்கள் தமிழர்கள். அறிவியல் சார்ந்த வாழ்வியலை இரண்டறக் கலந்து, அந்நாகரீகத்தால், சிறப்பு இனமாகத் திகழ்ந்தது தான் தமிழினம்.
ஒவ்வொரு நிகழ்வுகளிலும், ஆழமான பொருளோடு நிதர்சனமான வடிவமைத்து அதனை ரசனையோடு வாழ்ந்து ரசித்தவன் தமிழன். உணவுப் பழக்கவழக்கம், உறவு முறைகள், அன்றாடப் பழக்கவழக்கம், கவைகள், கல்வி, கலாச்சார முறைகள் ஆகிய எல்லாவற்றிலும் அர்த்த்ங்கள் ஆயிரத்தினை வைத்து யோசித்து, யோசித்து முறைப்கடுத்தியவர்கள் தாம் தமிழர்கள். இவர்களின் வரலாற்றை நோக்கும்போது, ‘காலங்களை’ மையம் கொண்ட உலக நடப்புகளின் அறிவியலைக் கண்டுணர்ந்து, அதற்குத்தக, தமது தொழில், விவசாயம், பண்டிகைகள், போன்றவற்றை உருவாக்கி இருக்கின்றார்கள்.
‘காலம்’ எனும் பொழுது, சூரியனின் ஒளி மற்றும் சூரியனின் சுழலும் பாதை போன்றவற்றின் தன்மையை அடிப்படையாய் கணக்கில் கொண்டு வரையறுத்தனர். இதுபோல், ஒவ்வொன்றையும், பண்டையத் தமிழர் அறிவியல் கண் கொண்டே பார்த்துத் திட்டமிட்டனர். அவ்வகையில், தைமாதத்தின் முதல் நாளைத் தமிழர் திருநாளாம் ‘பொங்கல் திருநாள்’ என்று அறிவுபடத் திட்டமிட்டுக் கொண்டாடினார்கள்.
இத்திருநாளுக்குத் தொடர்புடைய வகையில், உழவர்களைப் பெருமைப்படுத்தியும் கொண்டாடினார்கள். உழவுக்கு உழைத்த காளைகளையும் கொண்டாடினார்கள். தமிழர்களின் உன்னதத் திருவிழவாம் ‘பொங்கல் திருநாள்’ குறித்து நமது இலக்கியங்கள் வரலாறாய் பலவற்றைக் கூறியிருக்கின்றன.
சங்ககாலத் தமிழர்கள் எப்படிப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினர் என்பதைப் பல்வேறு இலக்கியங்கள் கூறுகின்றன.
புறநானூற்றில் 168-ஆவது பாடலில், கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் அவர் வாழ்ந்த காலத்து மக்கள் எவ்வாறு ‘புதுப்பொங்கல்’ செய்து பலரோடு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை மிக அழகாகத் தமது பாடலில் எடுத்துக் கூறுகின்றார். அப்பாடலானது,
“உழாஅது வித்திய பரூஉக்குரள் சிறுதினை
முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
மரையான் கநற்த நுரைகொள் தீம்பால்,
மான்தடி புழுங்கிய புலவுநாறு குழிசி
வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்”
புதிதாகக் கறந்த நுரை ததும்பும் தீம்பாலிலே, புத்தரிசியைப் இட்டு, சந்தனக் கட்டைகளை வைத்து விறகெரித்துப் பொங்கல் செய்தனர். அவ்வாறு செய்த பொங்கலைப் பலரோடு முற்றத்தில் அமர்ந்து பெரிய வாழை இலை போட்டு பகிர்ந்து உண்ணுகின்ற வழக்கத்தை இப்பாடல் தெளிவாகக் காட்சிப்படுத்துகின்றது. ‘பொங்கலை’-புன்கம் எனப் பழங்காலத் தமிழ்ச் சொல் நெல்லோடு வேயப்பட்ட தாளைக் கொண்டு கட்டப்பட்ட கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித் தனியாகப் ‘பொங்கல் கொண்டாடும் பெருவிழாவின் போது காணப்படும் ஆராவாரமும் மகிழ்ச்சியும் கொண்ட இடம் போல் மிகப் பொலிவுடன் காட்சி தந்தன என்று புறநானூறு பாடலில் ‘குறுங்கோழியூர் கிழார் கூறுகின்றார். அப்;பாடலானது,
“வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்ட களம்
போல் வேறு வேறு பொலிவு தோன்ற”
என்பதாகும். பெண்கள் தைமாத தொடக்கத்தில் நோன்பு இருந்தனர். என்பதை நம் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் திருநாளில் வைகை ஆற்றில் நீராடித் தமக்குச் சிறந்த கணவர் கிடைக்க வேண்டும் என விரதமிருந்தனர். எனவே, மங்கலமான தொடக்கமாகத் ‘தைமாதத்தை’ மக்கள் வரவேற்றுக் கொண்டாடி இருக்கின்றனர். எனவே தான் முன்னேர் வாக்காக, “தைப் பிறந்தால் வழி பிறக்கும்” என்ற வாக்கு. நம் பயன்பாட்டில் இன்றும் இருந்து வருகிறது. திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து தை நீராடி இருக்கும் பழக்கத்தை ‘பரிபாடல் எனும் இலக்கியத்தில் 11-ஆம் பாடலான ‘வையைப்’ பாடல் விளக்குகிறது.
“தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ
தாயருகா நின்று தவத் தைநீராடல்
நீயரைத்தி வையை நதி”
என்பது பரிபாடல் வரியாகும்.
“தைத் திருநாளுக்கு மகளிர் கூட்டமாக நீராடி வருவதாக” ஐங்குறுநூறு பாடல் 84 கூறுகின்றது.
இதே போல், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகைப் பாடலும் தைமாதத்தில் நடக்கும் திருவிழாக்களை எடுத்து இயம்புகின்றன.
சிலப்பதிகாரத்தில் பொங்கல்:-
அறுவடை முடிந்ததும், கடவுளுக்கு அதாவது காவல் பூதத்திற்குப் பொங்கல் செய்து எப்படி எல்லாம் வழிபட்டார்கள் நம் தமிழர்கள் என்பதைச் ‘சிலப்பதிகாரம்’ எனும் நூல், மிகத் தெளிவாகக் கூறுகின்றது. அதாவது,
“புழுங்லும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து”
என்று படையலிட்ட பொருள்களை விளக்குகிறது. அதில், பொங்கலும் ஒன்றாகும். ‘புழுங்கல்’ என்ற சொல்லும் பொங்கலைக் குறித்த சொல்லாகவே முன்பு கூறப்பட்டது.
சீவக சிந்தாமணியில் பொங்கல்:-
‘மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக் கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”
எனும் சீவக சிந்தாமணி வரிகளால், புதிதாக எடுக்கப் பெற்ற கலத்தில் அதாவது பானையில், பால் ஊற்றி, அரிசி போட்டுப் பெண்கள் பொங்கல் வைத்தனர் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் திருத்தக்கதேவர்.
பக்தி இலக்கியம் வெளிப்படுத்தும் பொங்கல்:-
சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானச்சம்பந்தர் பூம்பாவை எனும் நங்கையை உயிர்பித்து எழ வைத்தத் திருப்பதிகமாக அமைந்துள்ள திருமுறையில், “தைப் பொங்கல் திருநாளைக் காணாமல் போவாயோ பூம்பாவாய்” எனப் பாடுகின்றார். காலந்தோறும் தமிழர்கள் இத்திருநாளை எவ்வளவு மகிழ்ச்சியோடு ஒற்றுமையாக இருந்து கொண்டாடி இருக்கின்றனர். என்பதை இதன் மூலம் உணர முடிகின்றது.
“நெய் பூசும் ஒண்புழுங்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
இலங்கை வாழ் தமிழரும், சிங்களவரும், உழவர்களை மதித்துத் தைமாதத்தில் விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். விழா முடிவில் அனைவரும் தானியங்கள் பெற்று மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர். எனும் செய்தியை ‘சரசோதி மாலை’ எனும் 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூல் கூறும். இந்நூல் இலங்கையில் ‘போசராச பண்டிதர்’ என்பவரால், சிங்கள மன்னன் ஆசைக்கு இணங்க எழுதப்பட்டது. இலங்கைத் தமிழர் வாழ்விலும் தைத் திருநாள் பெரு விமர்சையாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.
கி.பி.16-ஆம் நூற்றாண்டில், தமிழகத்திற்கு வருகை புரிந்த, வெளிநாட்டுச் சுற்றுலா பயணியான ‘ஆப்பே டுபே’ எனும் போர்த்துசீசியர் ‘இந்துக்களின் வழக்கங்களும்-வாழ்க்கை முறையும்’ எனும் நூலினை எழுதியுள்ளார். அந்த நூலில் தமிழகத்தில் கொண்டாடப்படும் ‘பொங்கல் விழா’ குறித்து மிக விரிவாக எழுதியுள்ளார்.
இதேபோல், சோவியத் நாட்டின் அறிஞர் ‘விதாலி புர்னீகா’ என்பவரும் நமது பொங்கல் விழாவைக் குறித்து மிக விரிவாகத் தமது நூலில் எழுதியுள்ளார்.
காலங்காலமாகக் கொண்டாடி வரும் பொங்கல் விழா நமது பெருமையைக் கலாச்சாரத்தைப் பண்பாட்டை உலகுக்கு எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கிறது. ‘அறுவடைத் திருநாள்’ என இவ்விழாவை உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி மற்றும் பின்பனி என ஒரு ஆண்டை ஆறு பருவமாகக் கனித்த தமிழன், இளவேனில் பருவத் துவக்கத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கண்டான். சீனர்கள், ஜப்பானியர்கள் எனப் பலகோடி மக்கள், இவ்வுலகில், இளவேனில் காலத் துவக்கத்தையே தங்கள் புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது இங்கு எண்ணத்தக்கதாக அமைகிறது. அதனையே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறும் பொழுது,
“தைம்மதி பிறக்கும் நாள், தமிழர் தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்பு நாள், வீடெல்லாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புது நெருப்பேறி அரிசையைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும்நாள்”
என்று பொங்கல் திருநாளை வர்ணிக்கின்றார்.
பொங்கல் தினத்தில் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் கூட்டித் துப்புரவாக்கிச் சாணத்தால் மெழுகி, கோலம் போட்டு, மலர் மாலை மாவிலைத் தோரணம் கட்டி, வீட்டை அழகுப்படுத்திக் கொண்டு இருப்பர். ஏழைகள், உறவினர்களை இழந்தவர்கள் போன்றவர்களுக்குப் பொங்கல், வடை, முறுக்கு, அரியதரம், பயிற்றம் பணியாரம், கனிகள் என்பவற்றையெலாம் வழங்கி அவர்களின் பசியைப் போக்கி, உள்ளத்தை மகிழவைக்கும் மாண்பு இன்றளவும் விவசாயிகளிடம் இன்றளவும் காணப்படுகின்றது.
உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில், தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் “மாட்டுப் பொங்கல்” திருநாளாகத் தமிழகம் முழுவதும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இவ்விழா மிகப் பழமையான சிந்துவெளி நாகரீக காலத்திலேயே இருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது. புதுதில்லி தேசிய கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற ஒரு முத்திரை சிந்து சமவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒரு காளை மாடு நிறையப் பிடிவீரர்களைத் தூக்கி எறிவதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே, நம் மூதாதையர்கள் கி;.பி 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ‘ஏறு தழுவுதல்’ நிகழ்வை நடத்தியிருக்கின்றனர் என்பதை உணர முடிகின்றது என்பர் தொல் பொருள் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன்.
சங்க காலக் கட்டத்தில் ஏறுதழுவுதல்:-
பண்டைய கால முல்லை நிலத்தில், ‘ஏறுதழுவுதல்’ எனும் ‘ஜல்லிக்கட்டு’ நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்கி இருக்கின்றனர். இவ்வாறு காளையை அடக்கியவர்களையே ஆயர் குலப் பெண்கள் மணமுடித்துக் கொண்டனர். காளைகளை அடக்காதவர்களை இப்பிறப்பில் மட்டுமல்ல, மறுபிறப்பிலும் மணமுடித்துக் கொள்ள ஆயர்குல பெண்கள் நினைக்கக் கூட மாட்டார்கள் என்பதை ‘கலித் தொகை’ பாடல் விளக்குகிறது.
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத
நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய- உயிர் துறந்து
நைவாரா ஆயமகள் தோள்”.
என்று ஆயமகளின் தன்மை இப்பாடலில் விளக்கப்படுகிறது.
மலைபடுகடாம் குறிப்பிடும் ஏறுதழுவுதல் காட்சி:-
வலிமை மிக்கக் காளைகளை ஒன்றுடன் ஒன்று பொருதும்படியாகச் செய்து மிக்க ஆராவாரத்துடன் ஒலிஎழுப்பி மகிழ்வர் வெற்றிபெறும் காளைகளின் வெற்றியைத் தமது வெற்றியாகக் கொள்வர் தாங்களும் காளைகளுடன் மோதிக் காளைகளை அடக்குவர் என்பதை அழகுற எடுத்துக் காட்டுகிறது ‘மலைபடுகடாம்’; பாடல் காட்சி.
“இனத்திற் தீர்ந்த
துளங்கிமின் நல்லேறு மலைத் தலை வந்த
மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கிக்
கோவலர் குறவரோடு ஒருங்கியைந்து ஆர்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லெனக் கம்பலை”
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் ஒரு காட்சி ஏறுதழுவலைப் பற்றி வருகின்றது. ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுகின்றனர். அவ்வாறு ஆடிப்பாடும் பொழுது, முல்லைப்பூ அணிந்து நிற்கும் பெண்ணைப் பார்த்து, ‘வளமான இளைய காளையை அடக்கி, வெற்றியோடு வரும் இளைஞனே இவளைத் திருமணம் செய்து கொள்வான்’ எனப் பாடுகின்றாள். அவளும் வெட்கத்தில் நாணுகிறாள். அதனை,
“மல்லல் மழவிமை ஊர்ந்தாற்கு உரியள்
இம் முல்லையம் பூங்குழல் தான்”
என்கிறாள்.கலித்தொகையின் முல்லைக்கலியில், ஏறுதழுவல் குறித்த பல செய்திகள் முறையாகக் கூறப்பட்டுள்ளன. காளைகளின் நிறம், காளைகளின் வகை, காளை வீரம், அதனை அடக்கும் வீரர்களின் செயல்பாடுகள், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவலைக் கண்டு ரசிக்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் மன இயல்பு ஆகியவற்றை உணர்வு பொங்கக் கூறுவதாகப் பாடப்பட்டிருக்கிறது.
கி.பி 2500 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிக் கட்டுக் கோப்புடன் விளையாடியிருக்கின்றனர் என்றால், இக்காலத்திற்கெலாம் முன்னேயே இவ்விளையாட்டு உருவாகி வளர்ந்து இருக்க வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்ட வேறு வேறு பூக்களை அணிந்து வந்தனர் என்பதை,
“மெல்லிணாக் கொன்றையும், மென்மலர்க் காயாவூம்
புல்லிலை வெட்சியும், பிடவும், தளவூம்
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவூம், கடத்தவூம் - கமழ் கண்ணி மலைந்தனர்”
என விளக்குகிறது இப்பாடல்
ஏறுதழுவல் என்பது தமிழிரின் வீரவிளையாட்டாகும். உடலை உத்தமமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடத்து உண்டாக்கிய ஒன்று வீர பரம்பரையாக வாழ்ந்த இனமாக நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது “மாட்டுப் பொங்கல” திருநாள்.
ஏறுதழுவலின் வேறு பெயர்கள்:-
சல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வேலி மஞ்சு விரட்டு, வட மஞ்சு விரட்டு, எருது கட்டு, வடமாடு, காளை விரட்டு, ஏறு விடுதல் எனப் பலவாறாக அழைக்கப்படுகிறது.
சிராவயல் மஞ்சு விரட்டு, குறித்து எஸ். இராமகிருஷ்ணன் விரிவாகத் தமது நூலில் எழுதியுள்ளார்.
அறிவைத் தந்த திருவள்ளுவனை இக்காலத்தில் நினைத்து வாழ்த்துகிறோம். அவர் கூறியபடி வாழ எத்தனிக்கின்றோம். இயற்கையை வணங்குகிறோம். சூரிய கடவுளுக்கு, காவல் தெய்வங்களை வணங்குகிறோம். புதிதாக உருவான பயிர்களை மகிழ்வுடன் பொங்கல் செய்து தானமிட்டு மகிழ்வுடன் அனைவரும் குரவைகூத்து கொண்டாடி மகிழ்கிறோம். வீரத்தை வெளிக்காட்டும் மாட்டை அடக்கி மாமன் மகளை மணந்து இல்வாழ்க்கையின் பயனை அடைகிறோம். இதுபோன்ற வாழ்வை உலகில் வேறெந்த இனமும் வாழவில்லை எனும்படி நம்மினம் கொண்டாடித் திளைக்கும் விழாதான் இந்தப் பொங்கல் விழாவாகும்.
இத்தகு சிறப்பினைப் பெற்ற நமது விழாவினைத் தவிர்த்து விட்டு இன்று தமிழினம் திரையரங்கை நோக்கி படையெடுத்து, நடிகரை கோடீஸ்வர்களாக மாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு அலைகிறது. 500 கோடி சாராயம் வாங்கிக் குடித்து மல்லார்ந்து கிடந்து இனத்தின் பெருமையை சீரழிக்கின்றது. மாற்றும் பெரியவர்களும் மாற்ற முயற்சிக்கவில்லை. அரசும் முயலவில்லை. என்றும் இதிலிருந்து மாறித் தமிழினம், தமிழரின் பண்பாட்டை எப்போது மீட்டெடுக்கும். அந்த நாள் தமிழரின் பொன்னாள்.
பாரதிசந்திரன்
(முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்)
தமிழ்ப் பேராசிரியர்
திருநின்றவூர்
9283275782
chandrakavin@gmail.com
bharathichandranssn- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020
சிவா and bharathichandranssn இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Similar topics
» சங்க இலக்கியம் --- நம்ம இலக்கியம்
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
» உலா (இலக்கியம்)
» சிந்து இலக்கியம்
» குழந்தை இலக்கியம்
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
» உலா (இலக்கியம்)
» சிந்து இலக்கியம்
» குழந்தை இலக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum