by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
தேர்ந்த நடிப்பை வழங்கி ஆட்டநாயகனாக நிற்கும் விஜய்க்கு இணையாக, இயக்குநர் தொடங்கி யாருமே சரியான பார்ட்னர்ஷிப்பைக் கொடுக்காததால் இந்த 'வாரிசு' ஆட்டத்தில் எங்குமே அனல் பறக்கவில்லை.
பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார். அவருக்கு மூன்று மகன்கள். கருத்து வேறுபாட்டால் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார் கடைக்குட்டி விஜய். கடும் உழைப்பால் சரத்குமார் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசாக முடிசூட்டப்போவது யார், இந்தப் போட்டியால் உடைந்துகிடக்கும் குடும்பம் என்னவெல்லாம் ஆனது, பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ் என்னவெல்லாம் செய்தார் என்பதுதான் `வாரிசு' படத்தின் ஒன்லைன்.
உண்மையில் ஆட்டநாயகனாக மொத்த படத்தையும் தன் தோளில் சுமப்பது விஜய்தான். நக்கலான உடல்மொழி, துரு துரு பேச்சு என வின்டேஜ் விஜய்யாகத் திரையில் 'கில்லி'யாக நிறைகிறார். எதிரிகளிடம் குறும்புத்தனம் செய்வது, அம்மாவிடம் பாசத்தில் ததும்புவது, யோகி பாபுவுடன் டைமிங்கில் கவுன்ட்டர் அடிப்பது என ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு கல கல அவதாரத்தில் கலக்கியிருக்கிறார். இந்த துரு துரு உடல்மொழி சில இடங்களில் ஓவர்டோஸானாலும் பெரும்பாலான இடங்களில் ரசிக்கவே வைக்கிறது. குறிப்பாக இறுதிக்காட்சிகளில் பிரகாஷ்ராஜ் இடத்துக்குச் சென்று அவர் செய்யும் சேட்டை அதகளம். நடனத்திலும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். 'ரஞ்சிதமே' பாடலில் அவர் ஆடியிருக்கும் அந்த சிங்கிள் ஷாட் நடனம் அவரது ரீசன்ட் பெஸ்ட்.
'பிசினஸ் ஃபர்ஸ்ட், பேமிலி நெக்ஸ்ட்' எனப் பரபரப்பாக இருக்கும் டெரர் தொழிலதிபராக சரத்குமார். தோற்றத்தில் கதாபாத்திரத்திற்கான மிடுக்கு இருந்தாலும் முகபாவனைகளில் அது சுத்தமாக மிஸ்ஸிங். பிரகாஷ்ராஜுக்கு என்றே அளவெடுத்துச் செய்த வில்லன் கதாபாத்திரம். ஆனால், அவரும் பெரிய தாக்கத்தை விட்டுச்செல்லவில்லை. விஜய்யின் இரண்டு அண்ணன்களில் ஶ்ரீகாந்த்தின் கதாபாத்திரம் சற்றே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது. அவரும், மற்றொரு மகனாக வரும் ஷ்யாமும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.
குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் புள்ளியாக அம்மா கதாபாத்திரத்தில் ஜெயசுதா. படத்திற்குக் கனம் சேர்ப்பது இவருக்கும் விஜய்க்கும் இடையேயான காட்சிகள்தான். பாடல்கள் தவிர்த்து ராஷ்மிகாவுக்குப் படத்தில் பெரிய வேலை இல்லை. இவர்கள் இல்லாமல் சங்கீதா, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா ஷான், விடிவி கணேஷ், ஸ்ரீமன் எனப் பெரிய நடிகர் பட்டாளமே ஆங்காங்கே தோன்றி மறைகிறது. நட்புக்காக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் போர்ஷன் ஸ்வீட் சர்ப்ரைஸ்.
வழக்கமான டெம்ப்ளேட்தான். அதில் பிசினஸ் மோதல், வாரிசுக்கான போட்டி என எக்ஸ்ட்ராவாக இரண்டு வரிகள் சேர்த்து 'குடும்பங்களுக்கான' பொழுதுபோக்கு படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி பைடிபல்லி. ஆனால், கதாபாத்திரங்களில் போதிய அழுத்தம் இல்லாததால் எமோஷனல் டிராமா வெறும் டிராமாவாக சுருங்கி நிற்கிறது. திரைக்கதையும் எங்குமே டேக் டைவர்ஷன் போடாமல் எளிதில் யூகித்துவிடக் கூடிய வகையில் நாம் பார்த்துப் பழகிய பாதையிலேயே பயணிப்பது அலுப்பைத் தருகிறது.
குடும்பம், நிறுவனம், வாரிசுக்கான போட்டி என அனைத்தையும் நிறுவ முழு முதற்பாதியை எடுத்துக்கொள்கிறார் இயக்குநர் வம்சி. அதனாலேயே பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் அவ்வப்போது பாடல்கள், கொஞ்சம் கதை என நம்மைச் சோதிக்கிறது திரைக்கதை. சரி, இரண்டாம் பாதியில் ஆக்ஷன் பிளாக் என நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அதிலும் விஜய்யின் நடிப்பைத் தவிரப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை.
படத்தில் நாம் யாரும் எதிர்பார்க்காத இன்னொரு ஏரியாவிலும் கோட்டைவிட்டிருக்கிறது 'வாரிசு' டீம். அது VFX. இது க்ரீன் ஸ்க்ரீனில் எடுக்கப்பட்ட காட்சிதான் என அப்பட்டமாகத் தெரியும் அளவுக்குச் செயற்கையாக இருக்கின்றன சில காட்சிகள். பணக்காரர்கள் வாழும் பிரமாண்டமான வீடு என்பதெல்லாம் ஓகேதான். ஆனால், உள்ளே வரும் வெளிச்சம், வெளியில் தெரியும் விஷயங்கள் என அத்தனையும் செயற்கையாகவே இருக்கின்றன. இதுபோன்ற பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களிலேயே இப்படி மேக்கிங்கில் சொதப்பினால் எப்படி பாஸ்?!
இரண்டு நிறுவனங்களுக்கான பிசினஸ் போட்டி என்று பரபரப்பாக ஆரம்பித்துவிட்டு, கடைசி வரை டெண்டர் எடுப்பதற்கான சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மைனிங் என்றாலும் என்ன தொழில் செய்கிறார்கள், ஸ்டார்ட் அப் தொடங்க நினைக்கும் விஜய் எப்படி பாஸுக்கு எல்லாம் பாஸ் ஆனார் என நிறையக் கேள்விகளும் லாஜிக் பிழைகளும் எட்டிப் பார்க்கின்றன.
மாஸ் காட்சிகளில் தெறிக்கிறது தமனின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பெரும்பலம். வழக்கமான வசனங்களாக இல்லாமல் வேறு ஒரு மீட்டரில் விஜய்க்கென மாஸ் வசனங்கள் எழுதிக் கவனிக்கவைக்கிறார் விவேக்.
டான்ஸ், ஆக்ஷன், எமோஷன், காமெடி என எல்லாமே இருந்தும் பத்து வருடங்களுக்குப் பிந்தைய டெம்ப்ளேட் கதையால் சறுக்கியிருக்கிறது படம். தேர்ந்த நடிப்பை வழங்கி ஆட்டநாயகனாக நிற்கும் விஜய்க்கு இணையாக, இயக்குநர் தொடங்கி யாருமே சரியான பார்ட்னர்ஷிப்பைக் கொடுக்காததால் இந்த `வாரிசு' ஆட்டத்தில் எங்குமே அனல் பறக்கவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
#1370889’வாரிசு’ விமர்சனம்- நியூஸ் 18 தமிழ்
-
தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில்
விஜய் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார்,
ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பல நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு சுமார்
200 கோடி ரூபாய் பட்ஜெட்டின் இந்த படத்தை
தயாரித்திருக்கிறார். மகன் பெயரை சொல்ல விரும்பாத
அப்பா. அப்பா பெயரை தன் பெயருடன் சேர்த்துகொள்ள
விரும்பாத மகன்.
இவர்கள் இருவருக்குள் இருக்கும் ஈகோவுடன் குடும்ப
உறவுகளின் முக்கியத்துவத்தை வாரிசு படத்தில் சொல்ல
முயற்சித்துள்ளனர்.
சென்னையில் மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார்.
அவருக்கு மூன்று மகன்கள். ஆனால் இளையமகன்
விஜய் ராஜேந்தர் தன்னுடைய தந்தையின் எண்ணத்திற்கு
மாறாக செயல்படுகிறார். அதேபோல் அப்பவின் சொல்லுக்கு
கடுப்பட்டு தொழிலை ஸ்ரீகாந்த், ஷாம் செயல்படுகிறார்கள்.
அத்துடன் தந்தையின் அடுத்த வாரிசாக நினைக்கிறார்கள்.
மேலும் விஜய் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
அதன் பின் 7 வருடங்களாக தன்னுடைய அடையாளத்தை
உருவாக்கவும் முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் அவர்
மீண்டும் தன்னுடைய அப்பா வீட்டிற்கு வருகிறார்.
அங்கு ஏகப்பட்ட குழப்பங்கள், போட்டி, பிரிவு என
அனைத்தும் நடைபெறுகிறது. அதை அனைத்தையும் எப்படி
சமாளிக்கிறார்? குடும்பத்தை மீட்டாரா? தந்தையுடன்
இணைய காரணம் என்ன? என்பதுதான் வாரிசு.
துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய், செண்டிமெண்ட்
படங்களை தவிர்த்து வந்தார். அதில் இருந்து சற்று விலகி
முழுக்க முழுக்க குடும்ப ரசிகர்களுக்காக இந்தப் படத்தை
கொடுக்க நினைத்திருக்கிறார் விஜய்.
வாரிசு படத்தில் விஜய் தனக்கே உரிய துள்ளலுடன் நடித்து
அசத்தியுள்ளார். குறிப்பாக எந்த ஒரு ஈகோவும் இல்லாமல்
நடித்துள்ளார் விஜய். அதுவும் காமெடி நடிகர்
ரெட்டின் கிங்ஸ்லி போல் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கைதட்டல்கள்
கிடைக்கின்றன.
இது போன்ற 6 சீன்களில் ஸ்கோர் செய்து அசத்துகிறார்.
அது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும்.
இதில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
அது படத்திற்கு பெரிய மைனஸ். விஜய் தன்னுடைய
வீட்டிற்கு வந்த பிறகு இதுதான் நடக்க போகிறது என்பதை
படம் பார்க்கும் ரசிகர்கள் மிக எளிதாக கணிக்க முடிகிறது.
இந்தப் படத்தில் யோகிபாபு மற்றும் விஜய் ஆகியோர் இ
ணைந்து சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். சில
காட்சிகள் விஜயின் முந்தை வெற்றி படங்களின்
மேனரிசங்களையும், காட்சிகளையும் இணைத்துள்ளனர்.
திரையில் நடக்கும் சம்பவங்கள், திரையரங்கில் இருக்கும்
ரசிகர்களிடம் ஏதாவது ஒரு விஷயத்தில் கனெகட் செய்ய
வேண்டும். ஆனால் அங்கு ஏதோ நடக்கிறது, அதை நாம்
பார்த்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை சில
இடங்களில் கொடுத்துவிடுகிறது.
அத்துடன் படத்தின் கதைகளம் மிகபெரிய பணக்காரரின்
வீடு என்பதால், அது எளிய ரசிகனுக்கு ஒரு அந்நிய
எண்ணத்தை கொடுக்கலாம்.
தமன் பின்னணி இசை படத்திற்கு பெரிதாக உதவவில்லை.
ரஞ்சிதமே பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை
பெற்றது. அந்தப் படத்தில் வைக்க வேண்டுமே என்று
திணித்ததுபோல் உள்ளது. குறிப்பாக ரஞ்சிதமே பாடலுக்கு
முந்தைய காட்சியும், அடுத்த காட்சியும் சோகமாக உள்ளது.
ஆனால் பாடலுக்கு மட்டும் அதுவரை வராத ஹீரோயின்
விஜய்யுடன் நடனமாடுகிறார். இந்தப் படத்தில்
ராஷ்மிகா மந்தனாவிற்கான காட்சிகள் மிக மிக குறைவு.
வழக்கமான விஜய் படங்கள் போல நடனமாட மட்டுமே
நாயகியாக வருகிறார்.
இதில் வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தவில்லை. வில்லனுக்கும் நாயகனுக்குமான
போட்டியே இல்லை. அதனால் படத்தில் சுவாரஸ்யம்
குறைகிறது. மேலும் படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ்
காட்சிகள் உள்ளன. ஆனால் அவை முழுமைபெறவில்லை.
அவசரத்தில் உருவாக்கியதுபோன்ற உணர்வை
கொடுக்கிறது.
குடும்ப ரசிகர்களுக்காக அம்மா - மகன், அப்பா - மகன்,
அண்ணன் - தம்பி என செண்டிமெண்டை நம்பி முழுக்க
முழுக்க எடுக்கப்பட்டுள்ள வாரிசு படம் பாஸ் மார்க் வாங்க
முயற்சிக்கிறது. மோசம் என்று சொல்வதற்கு இல்லை.
ஆகா என்று பாராட்டுவதற்கும் இல்லை.
ஆட்டநாகனாக இருக்க வேண்டிய விஜய், Century-ஐ
மிஸ் செய்கிறார்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
#1370894- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
#1370898மேற்கோள் செய்த பதிவு: 1370894krishnaamma wrote:@சிவா , இந்தப்படம் 'பரம்பரா' என்கிற வெப் சைட் சிரியல் போல இருக்கிறதே???? தெலுங்கு சிரியல் அது
நான் இன்னும் பார்க்கவில்லை அக்கா. இணையத்தில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை..
விஜய் படங்கள் பெரும்பாலும் தெலுங்கு டப்பிங் ஆகத்தான் இருக்கும், இப்பொழுது சீரியல் கதையையும் சுட்டுவிட்டார்கள் போலிருக்கிறது...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாரிசு விமர்சனம்: டான்ஸ், ஃபைட், எமோஷன் எல்லாம் இருக்கு... ஆனால், ஆட்டநாயகனாகிறாரா விஜய்?!
#1372177எதே 300 கோடியா? இது உலக மகா உருட்டுடா சாமி.! வாரிசு பட வசூலை பங்கம் செய்த ப்ளூ சட்டை.!
தமிழ்க்ளிட்ஸ் தமிழ் செய்திகள்
வாரிசு படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் வசூல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த பொங்கலுக்கு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஃபேமிலி சென்டிமென்ட் கொண்ட படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்திருக்கிறார் தளபதி விஜய். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி சுமார் 25 நாட்களை கடந்த பிறகும் சக்கை போடு போட்டு வருகிறது. 27 நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன. இந்த தகவலை படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. படம் வெளியான முதல் நாளே உலக அளவில் சுமார் 17 கோடி முதல் 19 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தகவல்கள் வெளியானது.
பொங்கல் தினத்தன்று அஜித்தின் துணிவு படமும் வெளியானதால் இருவரில் யார் வின்னர் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து எழுந்து வந்தது. மேலும் பொங்கல் வின்னர் என்கிற ஹேஷ் டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாக தொடங்கியது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் குறித்து வாரிசு படத்தின் படக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தொடங்கியது. 11 வது நாள் முடிவில் சுமார் 250க்கும் அதிகமான கோடிகளை வசூல் செய்திருப்பதாக தங்களது twitter பக்கத்தில் புதிய போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது படக் குழு. மேலும் பொங்கல் வின்னர் வாரிசு தான் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் 27-வது நாள் முடிவில் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக நேற்று படக் குழு அறிவித்து இருந்தது. ஏற்கனவே 11 நாள் முடிவில் 250 கோடி வசூல் என்கிற அறிவிப்பை பலரும் கலாய்த்தும் கிண்டல் அடித்தும் வந்தனர். தற்போது 25 நாள் முடிவில் 300 கோடி வசூல் என்பதை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
திரைப்படங்களை முதல் நாளே பார்த்துவிட்டு படங்களில் இருக்கும் நிறை குறைகளை கூறுபவர் தான் ப்ளூ சட்டை மாறன். திரைவிமர்சகரான இவர் எப்பொழுதும் நடிகர்கள் பற்றியும் திரைப்படங்கள் பற்றியும் இயக்குனர்கள் பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் வழக்கம் போல வாரிசு திரைப்படத்தை பார்த்துவிட்டு இது ஹிந்தி சீரியலின் ரீமேக் என்று கடுமையான விமர்சனங்களை கொடுத்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். இந்த நிலையில் தற்போது அவர் 300 கோடி வசூலை உலக மகா உருட்டு என்று கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றே போட்டு இருக்கிறார். அதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்