புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
339 Posts - 79%
heezulia
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
8 Posts - 2%
prajai
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மதுரகவியாழ்வார் Poll_c10மதுரகவியாழ்வார் Poll_m10மதுரகவியாழ்வார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரகவியாழ்வார்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 31, 2023 3:17 am



சங்கம் கண்டு தமிழ் வளர்த்த தெய்வத் திருநாடு பாண்டிநாடு. இங்குள்ள தெய்வத் திருப்பதிகளில் திருக்கோளூர் சிறப்பு மிக்கது. இங்குள்ள மக்கள் கல்விப் பெருக்கமும், நல்லொழுக்கமும் தெய்வபக்தியும் கொண்டவர்கள். இத்தகைய சிறப்பு மிக்க திருவூரில் அந்தணர் மரபில், துவாபரயுகம் ஈசுவர ஆண்டு, சித்திரைத் திங்கள் சுக்கில சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் #மதுரகவியாழ்வார் அவதரித்தார்.

சின்னஞ்சிறு பருவத்திலேயே இவருக்குக் கல்வியில் மிக்க ஆர்வம் இருந்தது. தமிழ்மொழி, வடமொழி ஆகிய இரண்டையும் ஐயமறக் கற்றுப் பெரும்புலமை பெற்றார். நான்மறைகளையும் அவற்றின் அங்கங்களையும் தெளிவுறப் பயின்றதோடு புராண இதிகாசங்களையும் நன்கு கற்றுத் தத்துவ ஞானம் பெற்றார். கருவிலேயே இவர் புலமைத் திருவோடு பிறந்தவராதலால் இனிய கவிதைகள் பாடுவதிலும் வல்லவராய் விளங்கினார். எனவே #மதுரகவி என்னும் திருநாமம் இவருக்கு உரியதாயிற்று.

இவருக்கிருந்த மெய்யுணர்வின் காரணமாக இவர், பாம்பனையில் பள்ளிகொள்ளும் பரந்தாமனிடம் மிகுந்த பக்தியுடையராய் இருந்தார். எந்நேரமும் அப்பெருமானையே இதயத்தில் எண்ணி, இவ்வுலக வாழ்விலுள்ள ஆசைகளை நீக்கினார். எம்பெருமானைச் சேவித்து, உய்வுபெறும் எண்ணத்தோடு இவர் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார். அயோத்தி, மதுரை, மாயை, காசி , காஞ்சி, அவந்தி, துவாரகை என்னும் ஏழு திருத்தலங்களுக்கும் சென்று இறைவரை வணங்கி மீண்டும் அயோத்தி வந்தார். அங்குப் படிம வடிவில் எழுந்தருளியுள்ள இராமபிரானையும் சீதாபிராட்டி யாரையும் வணங்கி, அங்கேயே நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார்.

இந்நாட்களில் ஒருநாள் இரவு அவருக்குத் தாம் பிறந்த திருக்கோளூரில் வீற்றிருக்கும் பெருமாளைத் தொழும் எண்ணம் எழுந்தது. தென்திசையை நோக்கி அவர் தொழும்போது அப்பக்கமாய் வானோங்கி வளர்ந்த ஒரு திவ்வியத் பேரோளியைக் காணுகிறார்.
இதைக் கண்ட அவரிடம் அளவுகடந்த வியப்பு மேலோங்குகிறது. "இவ்வொளி எங்குள்ளது? எதனால் ஏற்பட்டது?" என்பதைத் தெரிந்து கொள்ள அவரிடம் ஆர்வம் பொங்குகிறது. அவர் அவ்வொளியை நோக்கியபடியே பயணத்தைத் தொடங்கினார். இரவு முழுதும் அவ்வொளியை நோக்கி நடப்பதும் கதிரவன் உதயமானதும் அந்த இடத்தில் தங்குவதும் மீண்டும் இரவு அவ்வொளியை நோக்கிச் செல்வதுமாக நாட்கள் கழிகின்றன. இவ்வாறு மதுரகாவியார் நெடுவழி நடந்து ஆழ்வார் திருநகரியை அடைந்தார். அவ்வொளி அங்குள்ள பெருமாள் திருவாலயத்துள் புகுந்து மறைந்தது.

மதுரகவியார் அங்குள்ளவர்களிடம் அவ்வொளியைப்பற்றிக் கேட்க, அவர்கள் அது, சடகோபர் திருமேனியிலிருந்து வெளிப்படும் ஒளியே எனத் தெரிவித்தார்கள். வியப்பும் பெருமகிழ்வும் கொண்ட மதுரகவியார், தியானத்தில் ஆழ்ந்துள்ள நம்மாழ்வார் பக்கம் சென்று அவரைச் சேவித்து சிந்தை மலர்ந்தார். ஆழ்வார் முகத்திலிருந்து வீசிய அருளொளி மதுரகவியாரைப் பெரிதும் ஈர்த்தது.

நம்மாழ்வாரின் அருள் தமக்குக் கிடைக்குமா என்பதைச் சோதித்து அறிய மதுரகவியார் விரும்புகிறார். இந்நோக்கத்தோடு இவர், நம்மாழ்வார் பக்கம் வந்து இரு கைகளையும் நன்கு தட்டி ஓசை எழுப்புகிறார். பின்னர் ஒரு கல்லை எடுத்துப் போடுகிறார். இவ்வொசைகளைக் கேட்ட நம்மாழ்வார் கண்திறந்து பார்த்தார்.

இதைக்கண்டு உள்ளம் சிலிர்த்து உவகை கொண்ட மதுரகவியார், "செத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" எனக் கேட்டார். இதன் பொருள், இயற்கையின் உருவாகும் உயிரில்லாத இவ்வுடம்பில் உயிர் தோன்றினால் அது
எதை அனுபவித்துக் கொண்டு இவ்வுலகில் கிடக்கும் என்பதாகும்.

மதுரகவியார் கேட்ட இக்கேள்விக்குப் பதிலாக நம்மாழ்வார், "இறையுணர்வு கொண்ட உயிராக இருந்தால் எம்பெருமானிம் ஈடுபாடு கொண்டு அவனிடமே தோய்ந்து கிடக்கும். அவ்வாறு இறையுணர்வு பெறாத ஆத்மாவாக இருந்தால் ஐம்புல வேட்கைகளில் ஈடுபட்டு நல்வினை தீவினைகளை அனுபவித்து இவ்வுலக மாயப்பிறவிகளிலேயே அமிழ்ந்து கிடக்கும்" என்னும் பொருள்பட, "அத்தைத்தின்று அங்கே கிடைக்கும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இவ்விளக்கம் கேட்ட மதுரகவியார் தனக்கு உய்வளிக்கவே நம்மாழ்வார் பெருமானிடமிருந்து தோன்றிய பேரொளி, தம்மை ஈர்த்து அவர் பக்கம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதை உணர்ந்தார்.

அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். அவரையே தமது ஞானப்பெருமானாகக் கொண்டு அவரிடம் அடைக்கலமானார். ஆழ்வார் பெருமானும் இவரை ஏற்றுக்கொண்டார்.

வேதங்களின் சாரமாகப் பிரபந்தங்களை அருளிச் செய்த நம்மாழ்வார் அவைகளை மதுரகவியாருக்கு உபதேசித்தருளினார். அவரும் அவைகளைப் பட்டோலையில் எழுதினார். இப்பாசுரங்களில் மிக்க ஈடுபாடு கொண்ட இவர், இவைகளை மக்கள் ஞான ஒளிபெற
எங்கும் பரப்பினார்.

மதுரகவியார் தமக்கு ஞானம் அளித்த பெருமானை நாளும் சேவித்து மனம் உருகுவார். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் அவர் பாசுரங்களைப் பாடிப் பாடி பரவசநிலை பெறுவார். அவரே தாம் வழிபடும் தெய்வம் எனக் கருதினார். ஆண்டவனை வழிபடுவதும் அவன் அடியார்களை வழிபடுவதும் ஒன்றேயன்றோ! எனவே மதுரகவியாழ்வார் மற்ற ஆழ்வார்களைப்போல் பரந்தாமனைப் பாடாது நம்மாழ்வாரைப் பாடுவதிலேயே பரந்தாமன் அருள்பாலிக்கும் என்ற உணர்வோடு நம்மாழ்வார்மீது பதினொரு பாசுரங்களைக் கொண்ட பாமாலை ஒன்றைப் பாடியருளினார்.

அதன் முதற்பாடல், `கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்று தொடங்குவதால் அப்பாமாலைக்குக் `கண்ணி நுண் சிறுத்தாம்பு' என்று பெயராயிற்று.

பிற்காலம் மதுரகாவியர் நம்மாழ்வார் திருவுருவத்தை அர்ச்சக வடிவமாக அமைத்துப் பெருமாள் திருக்கோயிலின் உள்ளேயே எழுந்தருளப் பண்ணினார். அதற்கு வேண்டும் அமைப்புகளையெல்லாம் சேவ்வனே செய்து முடித்தார். நாளும் நம்மாழ்வார் படிமத்துக்கு நறுமண மலர்மாலை சூட்டி, சேவிப்பார். குறிப்பிட்ட காலங்களில் விழா எடுத்துச் சிறப்பிப்பார். இவ்விழாக்களின்போது `வேதம் தமிழ் செய்த மாறர் வந்தார், திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார், ஞானப் பெருமான் வந்தார், நல்பொருள் நாதர் வந்தார்' என்பன போன்ற விருதுகளை அடியார்களுடன் இவரும் சேர்ந்து முழக்கி வீதி வலம் வருவார்.

ஒருமுறை இவ்வாறு விருதுகள் முழக்கி வரும்போது, மதுரைச் சங்கத்து மாணாக்கர்கள் இவர்களை எதிர்த்து, "உங்கள் ஆழ்வார், பக்தர்தானே? அவர் இறைவர் அல்லரே. அவர் சங்கம் ஏறிய புலவர் ஆவரோ? அவர் பாடிய திருவாய்மொழி சங்கம் ஏற்ற செய்யுளும் அல்லவே. எனவே நீங்கள் , புலமை மிக்க எங்கள் பக்கம் இவ்வாறு விருதுகள் கூறிச் செல்லுதல் தகாது' எனக் கூறித் தடுத்தனர்.

மதுரகவியார் சங்கத்தார் எதிர்ப்பைக் கண்டு வருந்தினார். அவர்கள் கடுஞ்சொற்கள் கேட்டு அவர் நெஞ்சம் அளவிலாத் துன்பம் கொண்டது. அவர் ஆழ்வார் பெருமானைப் பிரார்த்தித்து, " இச்சங்கத்தார் கொண்டுள்ள இறுமாப்பு ஒழியத் தேவரீர் அருள் கூர்தல் வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

நம்மாழ்வார் ஒரு கிழ அந்தணர் வடிவத்தோடு மதுரகவியார் முன்தோன்றி, "திருவாய்மொழியில் `கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதி, அதைக் கொண்டு சென்று சங்கப் பலகையில் வைத்தால் அவர்கள் இறுமாப்பு தகர்ந்தொழியும்" என அருளி மறைந்தார்.

இதுகேட்டு மகிழ்வுற்ற மதுரகவியார், அவ்வாறே. "கண்ணன் கழலிணை' என்ற பாசுரத்தின் முதலடி எழுதிய ஏட்டை எடுத்துச் சென்று சங்கப் பலகையில் வைத்தார். உடன்தானே சங்கப் புலவர்கள் அமர்ந்திருந்த பலகை பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கியது. புலவர்கள் அனைவரும் நீரில் வீழ்ந்தனர். பின்னர் அப்பலகை மதுரகவியார் வைத்த ஏட்டை மட்டும் ஏந்திக் கொண்டு நீர்மேல் மிதந்தது.

நீரில் வீழ்ந்த சங்கப்புலவர்கள் தத்தளித்துத் தடுமாறி மெல்ல நீந்திக் கரை சேர்ந்தனர். அப்போது தான் அவர்களுக்குச் சடகோபர் தெய்வ அருளும், அவர் அருளிய பிரபந்தச் சிறப்பும் தெரியலாயின.

ஆழ்வாருக்கு ஏற்பட்டிருந்த புலமை தெய்வீகமானது என்பதை உணர்ந்தனர். தாம் செய்த பிழைக்கு வருந்திக் கழிவிரக்கம் கொண்டனர். அவர்கள் இறுமாப்புத் தகர்ந்தது. தம் பிழை நீங்கும் பொருட்டு அவர்கள் ஆழ்வாரின் தெய்வத் திருவருளைக் குறித்து ஒவ்வொருவரும் தனித் தனித் துதிப்பாடல் எழுதி வெளியிட்டனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Jan 31, 2023 3:18 am

ஆழ்வார்கள் பன்னிருவர். இந்த 12 ஆழ்வார்களும் இணைந்து பாடிய பாசுரங்கள் நான்காயிரம். இந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் மிகக் குறைந்த பாசுரங்கள் பாடி ஆழ்வார்கள் ஆனவர்கள் இரண்டு பேர். ஒருவர் திருப்பாணாழ்வார். அவர் பத்து பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனார். அடுத்து பதினோரு பாசுரங்களைப் பாடி ஆழ்வார் ஆனவர் மதுரகவி யாழ்வார். திருப்பாணாழ்வார் பாடிய பாசுரங்கள் அமலனாதிபிரான் என்று தொடங்குவதால், அமலனாதிபிரான் பிரபந்தம் என்று வழங்கப்படுகிறது.

மதுரகவி ஆழ்வார் பாடிய பிரபந்தம் கண்ணிநுண் சிறுத் தாம்பு என்று தொடங்குவதால், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. திருப்பாணாழ்வார் பாடிய பத்து பாசுரங்கள் பெருமானைப் பற்றிய பாட்டாகும். மதுரகவியாழ்வார் பெருமாளைப் பாடவில்லை. பெருமாளைப் பாடிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடியதால் கண்ணிநுண் சிறுத்தாம்பு ஆசாரிய பிரபந்தம் என்று போற்றப்படுகிறது.

எல்லா திவ்ய தேசங்களிலும் வைணவ வீடுகளில் நடக்கும் வழிபாடுகளிலும், திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே தொடங்குவார்கள். இவர் ஏன் நம்மாழ்வாரை பற்றி மட்டும் பாடி, ஆழ்வார் என்கிற உயர் நிலை அடைந்தார் என்பதை அறிய, அவர் வாழ்க்கையை அறிய வேண்டும். செந்தமிழும், தெய்வீகமும் கலந்த பாண்டிநாடு.எல்லா இனிய வளங்களும் பெற்ற நாடு. அங்கே திருக்கோளூர் என்றொரு ஊர். அவ்வூரில் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த அந்தணர் மரபில் ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய சூரியாக எம்பெருமானுக்கு ஒழிவில் காலமெல்லாம் கைங்கர்யம் செய்து வரும் குமுதர் என்ற பக்தரின் அம்சமாக தோன்றினார், மதுரகவிகள்.

அவர் பிறந்த மாதம் சித்திரை. பிறந்த வருஷம் ஈஸ்வர வருஷம். நட்சத்திரம் சித்திரை. வெள்ளிக்கிழமை. வேதங்கள், வேதாந்தங்கள் என்று மரபுக்கே உரிய கல்வியைக் கற்று இளம் வயதிலேயே பெரிய பண்டிதர் ஆனார்.தமிழில் இனிமையான (மதுரமான) கவிகளைப் பாடுபவர் என்ற பொருளில், மதுரகவியார் என்றே அன்புடன் அழைக்கப்பட்டார்.வயது வந்ததும், பல்வேறு திருத்தலங்களில் உள்ள எம்பெருமான்களை தரிசிப்பதற்காகப் புறப்பட்டார்.

வடமதுரை, காசி, கயை, நைமிசாரண்யம், சாளக்கிராமம், பதரி காச்ரமம் என்று அத்தனை தலங்களையும் தரிசித்தவர் ஸரயூ நதிக் கரையில் அமைந்திருக்கும் அயோத்தி மாநகரத்தை அடைந்தார்.அங்கே அர்ச்சாவதார அழகனாக எழுந்தருளியிருக்கும் ராம பிரானைச் சேவித்துக்கொண்டே பலநாட்கள் தங்கியிருந்தார்.ஓர் நாள் இரவு.எங்கே இருந்தாலும் தான் பிறந்த ஊரான திருக்கோளூரின் திசைநோக்கித் தொழுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மதுரகவிகள், அன்றும் தென்திசை நோக்கி தியான ரூபமாகத் தொழுது நின்றபோது, வானத்தில் அதிசயிக்கத்தக்க ஓர் ஜோதியைக் கண்டு வியந்தார்.

எங்கே இருந்து இந்த ஜோதி வருகிறது என்பதை ஊகித்துப் பார்த்தார். சரி, ஏதோ ஓர் அதிசயம் இந்த பூலோகத்தில் நடைபெற்றிருக்கிறது. அதனை அறிந்து வருவோம் என்று கருதி உடனே தென்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.பகலில் ஓய்வெடுத்துக்கொண்டு இரவில் ஜோதி தெரியும் திசையையே ஆதாரமாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

நாட்கள் சென்றன. பல நாட்கள் நடையாக நடந்து திருக்குருகூர் அடைந்தார். திருக்குருகூரை அடைந்த அவர், வானத்தைப் பார்த்தபோது அந்த ஜோதி மறைந்துபோனது தெரிந்தது.உடனே அருகில் நின்றவர்களை விசாரித்தார். “ஐயா! இந்த ஊரில் ஏதேனும் அதிசயம் நடக்கிறதா?” என்று.“ஆமாம்” என்று கூறிய அவர்கள், காரியார், உடையநங்கை தம்பதியினரைப் பற்றியும், அவர்கள் புதல்வராக ஓர் மகாநுபாவர் பிறந்திருப்பதையும், பதினாறு வருடங்கள் உண்ணாமலும் உறங்காமலும் அவர் யோகதிசையில் திருக்குருகூர் சந்நதி புளிய மரத்தடியில் எழுந்தருளியிருப்பதையும்
கூறினார்கள்.

உடனே, திருக்கோயிலுக்குப் புறப்பட்டார் மதுரகவிகள். அங்கே அழகே ஓர் வடிவாய், சின்முத்திரையோடு, ஆடாது அசையாது, வாடாது, வதங்காது, அமர்ந்திருக்கும் பாலகனின் எழில் தோற்றத்தைக் கண்டார்.சற்றுநேரம் இவரும் தியானதிசையில் நின்றார்.பிறகு சுயஉணர்வு வந்து பாலகனைக் கைதட்டி அழைத்தார்.இவர் அழைப்பிற்கு அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை.அவருடைய பார்வை உணர்வையும், செவிப்புலன் உணர்வையும் சோதிக்க எண்ணிய மதுரகவியார், ஓர் சிறிய கல்லை எடுத்து, அவர் முன் போட்டார்.

சட்டென்று அந்த ஞானதீபம் அசைந்தது. ஆழ்வார் கண் மலர்ந்தார்.ஆயிரம் தாமரைப் பூக்கள் ஒன்றாக மலர்ந்த மலர்ச்சியும் குளுமையும், சூரிய ஒளியை விட அதிக வீட்சண்யம் உடைய ஒளியையும் தரிசித்த மதுரகவியார், “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?” என்று மெதுவாகக் கேட்டார்.அடுத்த நொடி அந்த இனிமையான குரலினை உலகம் கேட்டது. வகுளாபரணரான ஆழ்வார், சோதிவாய் மெல்லத் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும் ....” என்றார்.

கூட இருந்தவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை. கேட்டவர்க்கும், சொன்னவர்க்கும், இவற்றையெல்லாம் தூண்டிவிட்ட எம்பெருமானுக்கும் தெரிந்த விஷயத்தை இவர்களால் அறிய முடியுமா என்ன?செத்தது என்றால் அசேதனமான சரீரம். (உடம்பு) சிறியது என்றால் உள்ளே இருக்கும் ஆத்மா. பிறந்து இறக்கும்படியான சரீரம்.

இதிலே அழியாத உயிர். (ஆத்மா)
ஆத்மா (ஜீவாத்மா) மறுபடி மறுபடி
சரீரத்தை அடைந்து கர்மவினைகளை
அநுபவித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த ஆத்மா, வாழ்க்கையில் நிறைவடைவதேயில்லை. எத்தனைதான் இருந்தாலும், மண்ணுலக சுக துக்கங்களைத் திரும்பத் திரும்ப அநுபவித்தும் சலிக்காமல் மறுபடியும் கர்மவினையில் சிக்கி சரீரத்தில் புகுந்து கிடப்பதிலேயே காலம் கழிக்கிறது.உயிரற்றதாகிய பஞ்சபூதங்களால் ஆன உடம்பில், உயிர் புகுந்து கொண்டு, (அணு பரிமாணமுள்ள ஜீவாத்மா), அந்த உடம்பால் உள்ள உணர்வுகளை (சுவை, ஒளி, ஊறு, ஓசை , நாற்றம்) அநுபவித்துக் கொண்டு அந்த உடம்பு சாயும் வரை அதிலேயே இருக்கிறது.

சித் எனப்படும் ஜீவாத்மா, அசித் எனப்படும் (உயிரற்ற) உடம்பில் புகுந்ததால் இரண்டும் இயங்குகின்றது. அதன் பலனாக அது ஈஸ்வரனை அடைய வேண்டும். மாறாக, சித்தும் அசித்தும் இணைந்து இயங்கி சிற்றின்ப போகங்களிலே காலம் கழிக்கிறது. சித்தானது வேறு உடம்பைத் தேடி அங்கேயும் இதே உலக இன்பங்களை நுகர்கிறது.சரீர ஆத்ம சம்பந்தத்தை இத்தனை அழகாகவும், அது உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அற்புதமாக இந்த கேள்வி பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.இதன் மூலம் கேள்வி கேட்டவர் ஞானத்தையும், பதில் சொன்னவரின் ஞானத்தையும் ஒன்றாக அறியமுடிகிறது.

அடுத்த கணம், வயதில் மூத்தவரான மதுரகவிகள், ஞானத்தில் மூத்தவரான நம்மாழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்தார்.
“அடியேனை ஏற்றருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார்.

இப்படிப்பட்ட சீடருக்காகவன்றோ வேறு யார் தொடர்பும் இல்லாமல், இத்தனை காலம் காத்திருந்தார் அவர்.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆழ்வார் செந்தமிழால் எம்பெருமானைப் பாட ஆரம்பித்தார். அவற்றை மதுரகவியாழ்வார் ஓலைப்படுத்திக் கொண்டே வந்தார்.வேதம், தமிழில் ஆழ்வாரின் வாய்மொழியாக வெளிப்பட்டது. அதை மதுரகவியாழ்வார் எழுதிக்கொண்டே வந்தார்.செயற்கரிய இந்த செயலுக்காகவும், ஆழ்வாரின் அபிமானம் பெற்று ஆசாரியரையே தெய்வமாக எண்ணியதாலும் மதுரகவியாழ்வார், ஆழ்வார்களின் வரிசையிலே வைக்கப்பட்டார்.

மாறன் சடகோபனைத் தவிர, வேறொன்றும் நானறியேன் என்று இறுதிவரை
இருந்தார் மதுரகவியாழ்வார்.
நாவினால் நவிற்று இன்பமெய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

ஆசாரிய அபிமானம்மிக்க மதுரகவியாழ்வர் நம்மாழ்வாரின் திரு மேனியை வடித்து அதனை நாடோறும் வணங்கிவந்தார்.அவருடைய பிரபந்தங்களைப் பாடிப்பரப்பும் பணியிலும் ஈடுபட்டார். நம்மாழ்வாரின் பெருமையை “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்று தொடங்கும் பதினோரு பாக்களால் பாடினார்.திருக்குருகூரில் ஆழ்வாரின் அருச்சை வடிவினை (சிலையான திருமேனியை) எழுந்தருள்வித்து, நாள்தோறும் கிரமமான வழிபாடுகளை நடத்திவந்தார்.வெகுகாலம் ஆசாரிய கைங்கர்யம் செய்து வந்த மதுரகவியாழ்வார், அந்த ஆசாரியன் கைங்கர்யத்தை நேரில் செய்ய (பரமபதத்தில் செய்ய) ஓர் நன் நாளில் திருநாடலங்கரித்தார்.

அமுதனார் தாம் இயற்றிய ராமாநுச நூற்றந்தாதியில், மதுரகவி ஆழ்வாரைப்பற்றிப் பாடும் போது, ராமானுசருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பைக் கொண்டாடுகிறார்.

“எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -
சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் “பெரியவர்” சீரை உயிர்
களெல்லாம்
உய்தற்கு உதவும் ராமாநுசன் எம் உறுதுணையே!
என்று பாடுகிறார்.

இதில் மதுரகவி ஆழ்வாரை,“பெரியவர்” என்று கொண்டாடுகிறார்.பெரியவர் என்னும் பதத்தை, மதுரகவி ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.மதுரகவியாழ்வரை பெரியவர் என்று எதனால் அமுதனார் சொல்கின்றார் என்பதற்கு ஒரு சுவையான விளக்கம்.நம்மாழ்வாருக்கும் பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது.நம்மாழ்வார், “பகவானே உன்னை விட நான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய்.அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்திருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள்” என்று பாடிய பாடல் இது.

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய் அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்
ஊன்பருகு நேமியாய் உள்ளு.”
பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால்,
அவரை தன் உள்ளத்தில் வைத்திருக்கும் மதுகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா.
இதைத்தான் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.

பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும்,
‘சடாரி’ என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும்.
நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான’ சடகோபன்’ என்னும் பெயரே சடாரி என்று மருவியது.
“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக இருப்பவர்.
எனவே கோயில்களில் நம்மாழ்வார் சந்நதியில், சென்னியில்,
சாதிக்கப் படும் திருவடிகள் ‘மதுர
கவிகள்’என்று போற்றப்படுகின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக