ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:29 pm

First topic message reminder :

மத்தியில் ஆளும் கட்சியும் --அந்த கட்சி ஆளும் மாநில கட்சிகள்.கூறப்போகிற விமரிசனம்.

Code:
ஆஹா --இது மாதிரி பட்ஜெட் -நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்தும்.
மற்ற நாட்டினரும் வரவேற்கும்படியான பட்ஜெட்.தொலை தூர பார்வை கொண்டது.

ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும் மாநில கட்சிகள் , எதிர் கட்சியில் இருப்பவர்கள்.

Code:
இது மாதிரி அரைத்த மாவையே அரைக்கும் பட்ஜெட்,
ஏழைகள் மேலும் ஏழை ஆவார்கள்.பணமுதலைகள்தான் இதை வரவேற்ப்பார்கள்.

காத்திருந்து பார்ப்போம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 11:40 am

7 முக்கிய அம்சங்களுடன் பட்ஜெட் தயாரிப்பு: நிதியமைச்சர்



ஏழு முக்கிய அம்சங்கள் அடங்கியதாக நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 11:42 am

5-வது முறையாக பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் 6-வது நிதியமைச்சர்



புது தில்லி: மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந்தியாவின் ஆறாவது நிதியமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்.

நிர்மலா சீதாராமன் தற்போது தாக்கல் செய்யும் 2023ஆம் ஆண்டின் பொது பட்ஜெட்டானது, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர்கள், அருண் ஜெட்லி, ப சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் மொரார்ஜி தேசாய் ஆகியோர் ஐந்து முறை வருடாந்திர நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பித்த மற்ற அமைச்சர்கள் ஆவர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 11:51 am

157 புதிய செவிலியர் கல்லூரிகள்; தேசிய மின்னணு நூலகம்!


நாடு முழுவதும் 157 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தி 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில்,

நாட்டில் தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து 157 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 12:04 pm

``மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். மேலும் படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவில் Sickle cell anemia ஒழிக்கும் மிஷன் திட்டமிடப்படும்.

மருந்து துறையில் ஆய்வுகளை அதிகரிக்க ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்"

பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப்படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் ஆதிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்

`மாணவர்கள், இளைஞர்களின் அறிவுத் தேடலை மேம்படுத்த தேசிய டிஜிட்டல் லைப்ரரி திட்டமிடப்படும். மேலும் படிப்பறிவு வளர்ச்சியில் இயங்கும் என்.ஜி.ஓக்களுடன் இணைந்து லைப்ரரிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

பார்மா துறையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தியாவில் Sickle cell anemia ஒழிக்கும் மிஷன் திட்டமிடப்படும்.

மருந்து துறையில் ஆய்வுகளை அதிகரிக்க ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 12:10 pm

பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது. ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்மூலம், நாடு முழுவதும் இனி பான் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியும்.

இந்தியாவை இந்த உலகமே ஓர் ஒளிரும் நட்சத்திரமாகப் பார்க்கிறது. உலகமே கடுமையான சூழலை சந்தித்துள்ள வேளையில் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது.

உலக நாடுகள் பாராட்டும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

இந்த பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், தொழில் துறையினருக்கு உகந்ததாக இருக்கும்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியை 7 இன்ஜின்களை செலுத்தி உறுதி செய்யவிருக்கிறோம். அவை: சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொதுப் போக்குவரத்து, நீர்நிலைகள், கட்டுமானம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய 7 இன்ஜின்களை இணைத்து செயல்படுத்தி இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்வோம். இதற்கு எரிசக்தி பகிர்மானம், தகவல்கள் தொழில்நுட்பம், சமூக கட்டமைப்பு, நீர்நிலை பாதுகாப்பு துறைகள் துணையாக இருக்கும்.

முன்னதாக, இன்று காலை நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்தப் பேட்டியில், "மத்தியில் மோடி தலைமையில் அரசு அமைந்ததில் இருந்தே ஒவ்வொரு பட்ஜெட்டும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக உள்ளது. வரிச் சலுகைகளைப் பொறுத்தவரையில் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் பட்ஜெட் எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

பட்ஜெட்டை உருவாக்கியவர்கள்:

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இந்த பட்ஜெட்டைஉருவாக்கி உள்ளது. மத்திய நிதித் துறை செயலர் டிவி சோமநாதன் (தமிழ்நாட்சை சேர்ந்தவர்), பொருளாதார விவகார துறை செயலர் அஜய் சேத், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துகின் கந்தா பாண்டே, வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா, நிதி சேவைகள் துறை செயலர் விவேக் ஜோஷி, தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் இந்தப் பட்ஜெட் உருவாக்கத்தில் பங்கு வகித்துள்ளனர்.

பட்ஜெட் செயலி:

பட்ஜெட் உரை முடிந்த பிறகு, பட்ஜெட் ஆவணம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இணையத்தில் பதிவேற்றப்படும். ‘Union Budget Mobile App’ என்ற செயலி மூலம் பட்ஜெட் ஆவணத்தை வாசிக்க முடியும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 12:51 pm

புதிய வரி நடைமுறையில் வருடத்திற்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது.வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே ரூ.5 லட்சமாக வரை இருந்த உச்ச வரம்பு பட்ஜெட்டில் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 5% வரி எனத் தெரிவித்தார்.

இதுவரை தனிநபர்க்கான உச்சபட்ச வரி 42% ஆக இருந்த நிலையில், உச்சபட்ச வருமான வரி 40%க்கும் கீழ் குறைந்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 12:55 pm

நிதிப் பற்றாக்குறை முதல் பணவீக்கம் வரை - சொல்லும் தெளிவும்



இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 112-ன் படி ஏப்.1-ம் தேதி தொடங்கி மார்ச் 31-ம் தேதி நிறைவடையும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 2024-ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கு முன்பாக நிதியமைச்சர் தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட் இதுவாகும். அதனால், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தநிலையில் பட்ஜெட் குறித்த சில சொற்கள் குறித்து நாம் அறிந்து கொள்ளலாம்.

நிதிப் பற்றாக்குறை:

ஒரு நிதியாண்டில் அரசாங்கத்தின் செலவுகள், அதன் கடன் அல்லாத வருமானத்தை விட அதிமாக இருக்கும்போது நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது அரசாங்கத்திற்கு தேவையான மொத்தக் கடன் தொகையை குறிக்கிறது.

வருவாய் பற்றாக்குறை:

வருவாய் பற்றாக்குறை என்பது, தினம்தோறும் ஒரு அரசாங்கம் மேற்கொள்ளும் செலவினங்களுக்கும், அரசாங்கத்தின் வரி மற்றும் பிற வகைகளில் வரும் வருமானங்களுக்கும் உள்ள வித்தியாசமாகும். இது அரசின் நிதிநிலைமையை அறிந்துகொள்வகற்கும், அரசாங்கத்தின் வருமானம் அதன் செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்த்தும் முக்கியமான அம்சம் வருவாய் பற்றாக்குறை.

வரி வருமானம்:

வருமானங்கள், லாபங்கள் மற்றும் பொருள்கள், சேவைகளைப் பெறுவதில் இருந்து அரசாங்கம் வசூல் செய்யும் மொத்த வருவாய் வரி வருமானம் என்படும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு வகைப்படுகிறது. ஒரு அரசாங்கத்தின் வருமான ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது வரி வருமானமே.

நேரடி வரி:

தனி நபர் மற்றும் வணிகங்களின் வருமானங்களின் மீது விதிக்கப்படும் வரி நேரடி வரி எனப்படும். இதில் வரி செலுத்துபவரும், வரி விதிக்கப்படும் நபரும் ஒருவரே. வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிக்கான உதாரணங்களாகும்.

மறைமுக வரி:

ஒரு பொருளை அல்லது சேவையினைப் பெறுவதற்கு விதிக்கப்படும் வரி மறைமுக வரி எனப்படும். இதில், வரி செலுத்துபவரும் வரி விதிக்கப்படும் நபரும் வேறு வேறானவர்கள். ஜிஎஸ்டி, சுங்க வரி, மத்திய கலால் வரி போன்றவை மறைமுக வரிகளுக்கான உதாரணங்களாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி):

Gross Domestic Product என்று சொல்லப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் (காலண்டு அல்லது முழு ஆண்டு) ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். ஒரு நாட்டின் எல்லைப்பகுதிக்குள் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இறுதி பொருள்கள் அல்லது சேவைகளை இது கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

பணவீக்கம்:

பொருளாதாரத்தில் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை மொத்தமாக உயர்வு அடைவது பணவீக்கம் என்று அறியப்படுகிறது.

சுங்க வரி:

மறைமுக வரிகளில் ஒன்றான சுங்க வரி நாட்டிற்கு உள்ளே அல்லது வெளியே செய்யப்படும் ஏற்றுமதி, இறக்குமதி மீது விதிக்கப்படுகிறது. இந்த வரியானது ஒரு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் இறுதி நுகர்வோர் மீது விதிக்கப்படுகிறது.

நிதிக்கொள்கை:

அரசாங்கம் தனது பொருளாதார நோக்கங்களுக்காக அதன் வருவாய் (வரி வருவாய்) மற்றும் செலவீனங்களை நிர்வகிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளே நிதிக்கொள்கை என்பதாகும்.

ஒருங்கிணைந்த நிதி:

இந்தியாவில் ஒருங்கிணைந்த நிதி என்பது, பேரிடர் மேலாண்மை போன்ற எதிர்பாராமல் ஏற்படும் விதிவிலக்கான செலவினங்களைத் தவிர்த்து, ஒரு நிதியாண்டில் அரசு மேற்கொள்ளும் வருமானங்கள் செலவுகளை உள்ளடக்கிய முக்கியமான கணக்கு ஆகும். விதிவிலக்குகள் இல்லாத அனைத்து செலவீனங்களும் இந்த நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 1:00 pm

கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் இது அமல்படுத்தப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக 38 ஆயிரத்து 800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.

ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும்.

தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக 39,000 கட்டுப்பாடுகள் தளர்வு.

முதியோர் வைப்பு நிதி வரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மாத வருமானம் பெறும் வகையில் இந்த வைப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பொறியியல் துறையில் பயன்படுத்துவதற்காக 5ஜி சேவையில் செயல்படக்கூடிய செயலிகளை உருவாக்க 100 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படும்.

பிஎம் ஆவாஸ் யோஜனாவுக்கான ஒதுக்கீடு 66 சதவீதம் அதிகரிக்கப்படு ரூ.79 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரயில்வேக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் இதுவே அதிகம்.

2047-க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 3:41 pm

பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை: தமிழக எம்.பி.க்கள் போராட்டம்


மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடா்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்குவதில் தாமதம் நீட்டித்து வருகின்றது.

இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட நிகழ்வாண்டிற்கான பட்ஜெட்டிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான நிதி ஒதுக்கவில்லை.

இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பு தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by சிவா Wed Feb 01, 2023 3:47 pm

50 புதிய விமான நிலையங்கள், ஹெலிபேட்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு


உள்ளூர்களை இணைப்பதற்காக நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

*ஜாயின்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ.15 லட்சம் வரை பரிமாற்றம்

*லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்காகன இறக்குமதி வரி விலக்கு தொடரும்

*சிறுவர்கள் பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்

*மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம்

*இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம்

*ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனங்களை மக்கள் அதிகளவு பயன்படுத்த நடவடிக்கை

*கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100 சதவீதம் இயந்திரம் பயன்படுத்தப்படும்

*உள்நாட்டு பயணத்திற்காக 50 கூடுதல் விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள்

*உணவு பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு குறித்து இந்தியா கவனம் செலுத்துகிறது

*திறன் ஏற்றுமதியில் மிகப்பெரிய மற்றும் 2வது மிகப்பெரிய ஏற்றுமதியாளர் இந்தியா

*ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்த்தன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

*5ஜி மொபைல் செயலியை உருவாக்க 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்

*ஏகலைவா பள்ளிகளில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்

*சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் ரூ.63 கோடி கடன் வழங்கப்படும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்  - Page 2 Empty Re: 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum