புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?   Poll_c10தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?   Poll_m10தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?   Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram

83 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 4%
prajai

6 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?   Poll_c10தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?   Poll_m10தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?   Poll_c10 
130 Posts - 53%

83 Posts - 34%

11 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:32 pm

தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?   Brami

இரவில் விரைவில் படுக்கைக்கு செல்வதும், அதிகாலையில் எழுவதும் உடல் நலத்திற்கு நன்மை தரும் என்பது நம் முன்னோர்கள் கணிப்பு. இதனை இன்றைய அறிவியலும் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்றோ கணினி மயமாகிவிட்ட உலகில் இரவுப்பணி என்பது தனியான வாழ்வியல் நெறிமுறை ஆகிவிட்டது. தூக்கம் வராமல் இருக்க இரவில் காபி, டீ குடிப்பதும் நவீன வாழ்வியலுக்கு உதாரணமே.

தூக்கம் என்பதை இரவில் தான் தூங்க வேண்டும் என்பதை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். பகலில் தூங்கினால் அனைத்து விதமான வாத நோய்களும் வந்தடையும் என்கிறது பதார்த்த குணசிந்தாமணி எனும் சித்த மருத்துவ நூல்.

இரவுப்பணிக்கு செல்வோர் நிலைமை மட்டுமல்ல, இரவில் அலைபேசியை பயன்படுத்தி தூக்கத்தை தவறவிட்டவர்களின் நிலைமையும் அதே தான். இரவில் தூக்கம் கெடுதி உடலில் ஹார்மோன் சுழற்சியில் மாறுபாடுகளை உண்டாக்குவதாகவும் உள்ளது. இத்தகைய வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளால் தூக்கத்தை தொலைத்து நினைவாற்றலை இழப்பவர்கள் ஏராளம்.

உலக அளவில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 9 சதவீதம் பேர் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கூறும் ஆய்வுகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35-50 சதவீதம் பேர் தூக்கமின்மையில் உள்ளதாக தெரிவிப்பது என்பது வயோதிகப் பருவத்தில் கூடுதல் வருத்தம் தருவது.

தூக்கம் கெடுதியால் வரும் நோய்கள் பற்றியும் சித்த மருத்துவ நூல்கள் பேசுகின்றன. அதில் முக்கியமாக தூக்கம் கெடுவதால் நினைவாற்றல் குறைவதாகவும் உள்ளது. அதிகாலையில் எழுந்து படிப்பதே நினைவாற்றலை அதிகரிக்கும் செயல். இரவில் எவ்வளவு தான் தூக்கம் கெட்டு படித்தாலும் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதில்லை என்கிறது சமீபத்திய சில ஆய்வுகள்.

பள்ளி, கல்லூரி தேர்வுகள் நெருங்கும் நேரங்களில் “டாக்டர் என் பையன் எவ்வளவு படித்தாலும் மறந்து விடுகிறான், அவனுக்கு நினைவுத்திறன் குறைவாக உள்ளது” என்று வருத்தப்படும் பெற்றோர்கள் ஏராளம். அதே போல், தூக்கம் கெட்டு படிப்பதாலும், பணி புரிவதாலும் உண்டாகும் மன அழுத்தமும் ஒன்று சேர்ந்து அதனால் பலப்பல துன்பம் அடைகின்றனர். படுக்கையில் படுத்த உடனே தூக்கம் என்பது பலருக்கு இன்று எட்டாக்கனியாக மாறிவிட்டது.

“டாக்டர் இரவில் தூக்கம் சரியாகவே வரவில்லை, நடு நடுவே விழிப்பும் உண்டாகிவிடுகிறது, தூங்கி எழும்போது ஒரு புத்துணர்ச்சி என்பதே இல்லை” என்று தூக்கத்திற்கு ஏங்குபவர்கள் ஏராளம்.

இத்தகைய தூக்கமின்மையை போக்கி நினைவாற்றலை அதிகரிக்க, மன வளத்தை மேம்படுத்த ஏதேனும் எளிய மூலிகை இருப்பின் அது இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய இயற்கை தந்த நன்கொடை தான்.

அப்படிப்பட்ட ஒரு சித்த மருத்துவ மூலிகை தான் ‘வாடிகம்’ எனும் ‘பிரமி’. வாடிகம் என்ற சொல்லின் பொருளை ஆராயுமிடத்து அறிவு வாடிய காலத்து மூளையின் செயல்திறனை தூண்டி அறிவை செம்மைப்படுத்தும் தன்மையை பெற்றுள்ள மூலிகை என்று பொருள் விளங்குவது சிறப்பு.

பிரமி எனும் எளிய மூலிகை நீர்பாங்கான இடங்களில் வளரும் சிறிய கீரை வகை தான். சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் தூக்கமின்மைக்கான முதன்மைக் காரணம் ‘வாதம்’ தான். துரித உணவு முறையால், நவீன வாழ்வியல் முறையால் உடலில் அதிகரிக்கும் வாதம் மூளையை பாதித்து, இயல்பான தூக்கத்தைக் கெடுத்து தூக்கமின்மையை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. பிரமி கீரையானது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடைய மூலிகை. இது வாதம், பித்தம் இவை இரண்டையும் சீர் செய்யும் தன்மை உடையது.

பிரமி கீரையில் உள்ள பாகோசைடு எனும் அல்கலாய்டு வேதி மூலக்கூறுகள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளது. அது பாகோசைடு ஏ மற்றும் பி ஆகிய இரண்டு வகையாக உள்ளது. இந்த மூலப் பொருட்களால் இது வீக்கமுருக்கியாகவும், உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், மன பதட்டத்தைக் குறைப்பதாகவும், மன அழுத்தத்தை போக்குவதாகவும், நரம்புகளை வன்மைபடுத்துவதாகவும், ஆண்மையை பெருக்குவதாகவும், ஞாபக மறதி நோயை தடுப்பதாகவும், நினைவாற்றலை அதிகரிப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரமியின் முக்கிய செயலியல் கூறுகளில் பிராமைன், ஹெர்பெஸ்டைன் போன்ற பல்வேறு அல்கலாய்டுகள் அடங்கும். மேலும் டி-மேன்னிடால் மற்றும் ஹெர்சபோனின் மற்றும் மோன்னியரின் போன்ற சபோனின்கள் உள்ளன. இதில் உள்ள பேகோசைடு ஏ எனும் அல்கலாய்டு ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், நினைவாற்றலை மேம்படுத்தும் செயல்பாட்டையும் கொண்டுள்ளது.

மேலும் பாகோசைடு ‘ஏ’ மற்றும் ‘பி’ ஆகிய வேதிப்பொருட்கள் நரம்பு செல்களுக்கு (நியூரான்களுக்கு) இடையே உள்ள தூண்டுதல்களின் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் சேதமடைந்த நியூரான்களை சரிசெய்து, புதிய தகவல்களைக் கற்றுக்கொள்வதையும் நினைவில் வைத்திருப்பதையும் எளிதாக்குகிறது.

பிரமி கீரையின் சிறப்பம்சமானது என்னவெனில், இது மூளையில் செரோடோனின் உற்பத்தியை அதிகரித்து இயல்பான தூக்கம் வர வழிவகையும் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தூக்கமின்மையை போக்க விரும்பும் பலரும் மருந்து மாத்திரைகளை நாடாமல் மெனக்கெட்டு கீரை சந்தையை நாடுவது நல்லது. பிரமி கீரையை அவ்வப்போது நெய் விட்டு வதக்கி உண்ண அதன் மருத்துவ குணங்கள் அனைத்தும் கிடைக்கும். இயல்பான உறக்கத்தைத் தூண்டும் மனதிற்கு நிம்மதியும் தரும்.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ‘பிரமி நெய்’ எனும் சித்த மருந்தினை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள நினைவாற்றலை பெருக்கி மதிப்பெண்களை உச்சம் தொட வைக்கும். அது மட்டுமின்றி ‘பிரமி தைலம்’ எனும் சித்த மருந்தினைக் கொண்டு வாரம் இருமுறை எண்ணெய் குளியல் எடுப்பதும் நல்லது. அல்லது பிரமி தைலத்தைக் இரவில் ஐந்து முதல் பத்து சொட்டு வரை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள தூக்கமின்மையைப் போக்கி உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். தொடர்ந்து மூன்று மாதத்திற்கு மேல் தொடரும் தூக்கமின்மை நாள்பட்ட இன்சோம்னியா (தூக்கமின்மை) என்று கருதப்படும். அத்தகைய நிலையிலும் பிரமி சேர்ந்த மருந்துகளை பயன்படுத்தி பயனடையலாம்.

கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு 1000 டன் அளவுக்கு பிரமி மூலிகையின் வர்த்தகம் உலக அளவில் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வர்த்தகம் அதன் நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மைக்காகவே என்பது சிறப்பு. ஆனால், பிரமி கீரையின் தாய் வீடான நம்ம ஊரில் அது மறந்து போன மூலிகை ஆகிவிட்டது என்பது வருத்தமே. அதை பயன்படுத்த தொடங்கி இருந்தால் நிச்சயம் மறந்திருக்க முடியாது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவ மூலிகையை உணவாகவோ, மருந்தாகவோ பயன்படுத்த உடலும், மனமும் வளம் பெறும் என்பது திண்ணம். ஞாபக மறதி நிலை நம்ம ஊர் பக்கமே வராது என்பதும் வெளிப்படையான உண்மை. அதனை பயன்படுத்தி சுகமடைவோம்.

மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக