புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
3 Posts - 1%
Anitha Anbarasan
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
24 Posts - 3%
prajai
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
3 Posts - 0%
manikavi
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
2 Posts - 0%
JGNANASEHAR
மதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_lcapமதுரகவி பாஸ்கரதாஸ் I_voting_barமதுரகவி பாஸ்கரதாஸ் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரகவி பாஸ்கரதாஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 4:44 am

மதுரகவி பாஸ்கரதாஸ் V1210

1876-ல் பிரிட்டிஷ் அரசு ‘நாடகத் தடைச் சட்ட’த்தைக் கொண்டுவந்து, #மதுரகவி பாஸ்கரதாஸின் மேடை நாடகப் பாடல்களைத் தடை செய்தபோது, தடாலடியாகப் ‘பக்திப் பாடல்கள்’ என்கிற போர்வையில் சுதந்திரக் கிளர்ச்சியை உண்டு பண்ணினார். ‘தேம்ஸ் நதிக்கரை கொக்கு... அது நம்மைத் தின்ன வந்த கொக்கு...’ என்று பாப்பா பாடல் மூலம் வெள்ளையரை வெறுப்பேற்றினார்.

‘டாக்டர் புருஷோத்தமன் (மதுரகவியின் நண்பர்) வீட்டில் கே.பி. சுந்தரம் பாளுக்குத் தேசிய நாடகப் பாடல்கள் எழுதிக் கொடுத்தேன்...’ என்றொரு குறிப்பு 1929-ம் ஆண்டு அவர் எழுதிய டைரியில் உள்ளது.

மதுரையில் அனுமந்தராமன் கோயில் தெருவில் புகழ்மிக்கவராக #பாஸ்கரதாஸ் வாழ்ந்தபோது, எம்.எஸ். சுப்புலட்சுமியும் அதே தெருவில் வசித்தாராம். அப்போது தான் பாஸ்கரதாஸிடம் எம்.எஸ். பாடல் கற்றுக்கொண்டார். பின்னாளில் தன் இடிமுழக்கக் குரலால், தென் இந்தியாவையே தன் பக்கம் திருப்பிய, ஒளவையாராகவே வாழ்ந்து மறைந்த கே.பி. சுந்தராம்பாள் தமிழ் சினிமாவுக் குக் கிடைத்ததும் பாஸ்கரதாஸின் ‘வள்ளியம்மை’ சரித்திர நாடகத்தில் நடித்த பிறகுதான். நல்ல உயரமும் கூர்மையான பார்வையுமாகத் தலை யில் பூச்சூடி கையில் வில்லோடும் முதுகில் அம்போடும் வள்ளியம் மையாக கே.பி. சுந்தராம் பாள் மக்கள்முன் தோன் றியபோது கிடைத்த ஆர்ப்பாட்டமான வரவேற்புதான், சினிமாவில் அவரது இமாலய வெற்றிக்கு அடித்தளமிட்டது.

மதுரகவியின் புகழ் பரவப் பரவ, ‘ஹெச்.எம்.வி’-யில்தான் பார்த்த மானேஜர் வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்தார். காளிதாஸில் தொடங்கி, வரலாறு படைத்த ‘சகுந்தலா’, ‘சதி சுலோசனா’ என்று சினிமாவில் பாடல்கள் எழுதி, தன்னை ஒரு நிரந்தரக் கலைஞனாக்கிக் கொண்டார்.

மதுரகவிக்கு இரண்டு மனைவிகள். மூத்தவர் அமிர்தம், இரண்டாமவர் ஒண்டியம்மாள். முதல் மனைவிக்கு ஆறு பிள்ளைகள், இரண்டாம் மனைவிக்குப் பன்னிரண்டு பிள்ளை கள். இன்று மதுரகவியின் வழிவந்த கலைக் குடும்பமாக எழுத்து, நாடகம், பாடல் என்று கலைக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சண்முகம், சரஸ்வதி (மதுரகவியின் மூத்த மகள்) தம்பதியின் பிள்ளைகள் மட்டும்தான்.

தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருக பூபதி என்ற அந்த மூவரில், தமிழ்ச் செல்வன் சிறுகதை எழுத்தாளர். இவரது ‘வாளின் தனிமை’ கதையும் ‘வெயிலோடு போய்’ கதையும் தமிழ் இலக் கியத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டன. ‘புது விசை’ என்ற இதழின் மூலம் மேற்கு உலகக் கலைஞர்களை அறிமுகம் செய்து, புதிய படைப் பாளிகளையும் அறிமுகப் படுத்திய இவர், இப்போது பத்தமடையில் வசிக்கிறார்.

‘கோணங்கி’ என்கிற இளங்கோ, ஒரு அரசு ஊழியர். மதினிமார் கதை, ‘பாழ்’ என்று அடுத்தடுத்து வந்த இவரது சிறுகதைகளைப் படித்துவிட்டு, ஒரு இளைஞர் கூட்டமே கோணங்கியின் எழுத் தில் கிறங்கிப்போய்க் கிடந்தபோது, அரசுப் பணியை விட்டுவிட்டு முழு நேரமும் எழுத்துப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். ‘கல்குதிரை’ என்னும் இதழை, தீவிர இலக்கிய இதழாகக் கொண்டு வருகிறார்.

பாஸ்கரதாஸின் இன்னொரு பேரன் முருகபூபதி, ‘வனத்தாதி’ என்னும் நாடகத் தைக் காட்டில் நடத்திக் காட்டியவர். நீண்ட கூந்தலோடு எந்த நேரமும் நாடகம், பாடல் என்று வாழும் முருகபூபதி, தஞ்சை பல்கலைக் கழகத்தில் பாஸ்கரதாஸ் பற்றிய ஆய்வு ஒன்றைச் செய்திருக்கிறார்!

‘‘எனக்கு முன்னாடியே என்னோட பெரியப்பா கருப்பையா, தாத்தா பாஸ்கரதாஸ் பற்றிய ஆவணங்கள் சிலவற்றைச் சேர்த்திருக்கிறார். அவரது நாடகங்களை ஆய்வு செய்த போது, தென்மாவட்டம் முழுக்கத் தேடி பழைய இரும்புக் கடைகளிலும் பழைய நாடக மன்றங்களிலும் கண்டெடுத்துச் சேமித்தவை இவை!’’ என்று அந்தக் கால ஒயின்பாட்டில் முதல் நூற்றுக்கணக்கான ஒலிப் பேழைகள், கையெழுத்துப் பிரதிகள் என அரிய ஆவணங்களையும் பொருட்களையும் கைகாட்டுகிறார் முருகபூபதி.

‘‘வள்ளித் திருமணத்தில் ‘தேடி வந்தேனே புள்ளிமானே’ என்று எழுதி, தாத்தாவே பாடியிருக்கிறார். ஹெச்.எம்.வி. வெளியிட்ட அந்தத் தகடு, என்னிடம் உள்ளது. அந்தப் பாடலை இப்போது கேட்டா லும் சிலிர்க்கிறது. அந்த இசை, எல்லாக் காலத்துக்கும் பொருந் தும்படியான நவீன கூறுகளுடன் உள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் நாடகப் பள்ளி உள்ளது போல், மதுரகவியின் பெயரிலும் நாடகப் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் எதிர்காலச் சந்ததிக்கு நாடகம் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இளங்கோவடிகளின் காலம் தொட்டுச் செழிப்பாக இருந்த நாடகக் கலை, நம் தலைமுறை யில் அழிவின் விளிம்பில் இருக்கிறது. நமது தமிழ் நாடகப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற அரசு முன்வந்தால், என்னிடமிருக்கும் எல்லா அரிய ஆவணங்களையும் அதற்குப் பயன்படும்படி கொடுப்பேன்...’’ என்கிறார் முருகபூபதி.

மதுரகவியின் சொந்த ஊரான நாகலாபுரம் (விளாத்திகுளம்) போனால், அவரது கல்லறை மீது துணி காயப் போட்டிருக்கிறார்கள். குட்டி ஆடுகள் தஞ்சம் அடைந்து களைப்பாறிக்கொண்டிருக்கின்றன. கூரை சரிந்து பாழடைந்து கிடக்கிறது மதுரகவி பாஸ்கரதாஸின் வீடு. வீட்டுக்குள் இருந்த பெரியவர், மதுரகவியின் ஐந்தாவது மகன் சேது.

‘‘அப்பாவையோ, அப்பாவின் பாடல்களையோ தடைசெய்ய முடியாத வெள்ளைக்கார அரசு, அவர் பாடலைப் பாடியவர்களை ஒடுக்கியது. காதர் பாஷா என்கிற நண்பர், அப்பா பாடலைப் பாடியதற்காகவே கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர். கடைசிக் காலம்வரை அப்பாவுடனே இருந்தேன். மதுரை திருநகரில் ‘சித்ரகலா’ ஸ்டூடியோவை அவர் நிறுவியபோது, அதை நான் கவனித்துக் கொண்டேன். அவருக்குக் கண் பறிபோன பின்பு, அவருடனே நாகலாபுரத் துக்கு வந்து இங்கேயே இருந்துவிட்டேன். அவர் புகழைச் சம்பாதித்தாரே தவிர, வேறெதையும் சம்பாதிக்கவில்லை. இந்த வீட்டில் அப்பாவின் சுவாசம் நிறைந்திருக்கிறது. அதையே சுவாசித்து, என் இறுதிக் காலம் வரை வாழ்ந்து விடுவேன்...’’ என்கிறார் சேது.

நாகலாபுரத்தின் ஓர் ஒதுக்குப்புறத்தில் உமறுப் புலவருக்குக் கலைஞர் கட்டிய மணிமண்டபம் கம்பீரமாக நிற்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகச் சிதிலமாகிக் கொண்டிருக்கும் மதுரகவியின் வீட்டையும் பலருக்கும் பயன்படும்படி மாற்ற வேண்டும் என்பது தான் மதுரகவியின் சந்ததிகளின் ஆசை.

#மதுரகவி #பாஸ்கரதாஸ் #மதுரகவி_பாஸ்கரதாஸ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 4:46 am

சரித்திர அதிர்வுகளில் பாஸ்கரதாஸின் கலை



'வாசகனுக்குப் படைப்பாளியின் பரிசானது சமூக உத்வேகமோ தார்மீக மேம்பாடோ, தேச பக்தியோ அல்ல; மாறாக வாசகனின் புரிந்து கொள்ளலை விரிவுபடுத்தலே' என்ற கூற்று பாஸ்கரதாஸின் பாடல்களில் காணப்படும் எளிய சொற்களாலும், அவை எளிதில் மக்களைப் பற்றும் விதத்தாலும் அறிந்து கொள்ளலாம்.

பாஸ்கரதாஸ் கவிஞர், இசையமைப்பாளர், நாடகப்பாவலர், திரைப்பட முன்னோடி சமூகச் சீர்திருத்தவாதி எனப் பல தளங்களில் தன்னையும் தன் பணியையும் விரிவுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர். அவர் தான் வாழ்ந்த காலத்தில் எழுச்சியுற்ற சுதந்திரப் போரில் ஈடுபட்டு தம் நாடகப் பாடல்களால் அனைவரது மனங்களையும் வசீகரித்தவர். அவர் காலத்தில் நிகழ்ந்த விடுதலை இயக்கங்கள், கலகங்கள், மரணங்கள், அவலங்கள் என அடுக்கடுக்கான பிரச்சனைகளின் நிழல்கள் அவரது படைப்புகளில் கவிழ்ந்து அதன் உக்கிரம் பாடல்களின் சூழல் வழியாகத் துயரத்தின் முழு வீச்சினையும் வெளிப்படுத்தியது.

தமிழ் நாடக வரலாறு தன்னைப் புரட்டிப் பார்க்கும் போது அதிர்வுகள் நிறைந்த தன் காலவெளிப் பக்கங்களில் நூற்றுக்கணக்கான கலைஞர்களின் செயல்பாடுகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் தன் இருண்ட பகுதிகளில் அவற்றை மறைத்துக் கொண்டது. விடுதலைப் போராட்ட காலத்தின் உணர்வுகளை நாடகக் கலைஞர்களின் செயல்பாடுகள் வழியாகவே அதிகம் அறிந்து கொள்ள முடிகிறது. தன் வாழ்வில் தூண்டப்படும் உணர்ச்சிகளோ சம்பவங்களோ எதுவாயினும் அதன் உயிர்த்தன்மையைக் கலைஞன் தன் படைப்பின் வழியாய் ஏதோ ஒரு வகையில் பதிவு செய்து விடுகிறான். போதுமான தொடர்பு சாதனங்கள் -ல்லாத அக் காலங்களில் நாட்டில் நிலவும் போராட்ட குழலையும், தன்மைகளையும் நாடகத்தின் வழியாக மக்கள் தெரிந்து கொள்வதும், அதன் மூலம் தங்களை அடையாளம் காண்பதும் வெகு வேகமாக நிகழ்ந்து கொண்டேயிருந்தது. அது நகரம், சிற்றூர், கிராமம், பட்டி தொட்டியென விரிந்து நாடகக் கலைஞர்களின் குரல்கள் வழியாய் எல்லோரையும் பற்றிக் கொண்டது.

நாடகத்துக்கும் மக்களுக்குமான உறவு நெருக்கமாக இருந்த அக் காலத்தில் நாடக மேடைகளில் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய வகையில் நடிகர்கள் பாடும்போது மக்கள் கொதிப்படைந்து வெள்ளை அரசுக்கு எதிராய் முழக்கமிடுவது, உணர்ச்சிவயப்பட்டுத் தாக்குவது, மீண்டும் அதே பாடலைப் பாடச் சொல்வது என -டைவிடாமல் குறுக்கீடுகள் நிகழ்ந்தன. இதே வேகத்தில் நடிகர்கள் கைது செய்யப்படுவது, மீண்டும் பாடுவது, மீண்டும் கைது என அடக்குமுறைகள் தொடர்ந்தன. இந்த மறக்க முடியாத சரித்திர அடுக்குகளில் மதுரகவி பாஸ்கரதாஸ் என்ற நாடகக் கலைஞனின் செயல்பாடுகள் கவனத்திற்குரியது. தன் வாழ்வைச் சுற்றியிருந்த குழலையும், சமூகத்தில் கவ்வியிருந்த இருளையும், மனிதர்களின் அவநம்பிக்கைகளையும் கண்டு புழுங்கிய அவர் நாடகக்கவி என்ற முறையில் ஒரு தலைமுறையின் காலத்தைத் தன் படைப்புகளால் உயிர்ப்பித்திருக்கிறார். விடுதலைப் போராட்டம் தீவிரமாகும்போது தனி நபர் வாதத் தன்மையுள்ள அவரது நாடக கீதம் புதிய திசையில் சிறகுகள் வீசிப் பறக்கத் தொடங்கியது.

எஸ்.எஸ். விஸ்வநாததாஸ், காதர்பாட்சா, சுப்பையா பாகவதர், நாகசாமி பாகவதர், அப்துல் காதர், எம். ஆர். கமலவேணி, கண்ணாம்பாள், பி.எஸ். சிவபாக்கியம் என எண்ணிக்கையற்ற நாடக நடிகர்-நடிகைகள் பாஸ்கரதாஸின் நாடகப் பாடல்களுக்கு மேடையில் உயிர் கொடுத்தனர். அவர் பாடலைப் பாடாத எவருமேயில்லை என்ற நிலை. தேசியம், விடுதலை, பஞ்சாப் படுகொலை, காந்தியின் தியாகம், பகத்சிங்கின் வீரம் என அடுக்கடுக்கான உணர்வுச்சூழல் கொண்ட பாடல்கள் மக்கள் மனதில் அலைவீசிய காலம் அது. நாடகம் தடை செய்யப்பட்ட ஊர்களிலும் பாஸ்கரதாஸின் பாடல்களை மக்கள் முணுமுணுத்து அவரின் எழுத்துக்களுக்கு விளக்கேற்றினார்கள். அன்றைய ரயில்வே பிளாட்பாரங்களிலும் தெருவோரங்களிலும் அனாதைகள் பாஸ்கரதாஸின் பாடல்களைப் பாடியபடி யாசகம் செய்வார்கள் என்ற செய்தி இப்போதும் நம்மை அதிர வைக்கிறது. அவரைப் 'பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ்' என அழைப்பதும் வழக்கில் இருந்துள்ளது. சரித்திரத்தின் எழுதப்படாத சித்திரமாகப் பாஸ்கரதாஸின் படைப்புகள் மக்களின் இதயங்களைப் பற்றிக் கொண்டேயிருக்கும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 4:50 am

பாஸ்கரதாஸின் வாழ்க்கைப் பிரயாணங்கள்



'விடுதலைப் போராட்டம் தீவிரம் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் மக்கள் எல்லோரையும் தேசப் பணியாற்ற, தேசத் தலைவர்கள் கூவி அழைத்தனர். இந்நிலையில் தேசத் தலைவர்கள் காந்தி, சித்தரஞ்சன்தாஸ், விபின் சந்திரபால், திலகர், கோகலே போன்ற எண்ணற்ற தலைவர்கள் தமிழகம் வந்து தங்கள் துடிப்புமிகு பேச்சாலும், செயல்களாலும், மக்களை விடுதலைப் போராட்டம் நோக்கி ஈர்த்தனர். மக்களைப் பாதித்தது போலவே, கலைகளையும் விடுதலை உணர்வு பாதித்தது. இக்காலங்களில் நாடகப் பணியில் ஈடுபட்ட எல்லோரும் விடுதலைப் போரில் தங்களை இணைத்து நாடகங்கள் வழியாகவும், பாடல்கள் வழியாகவும் தங்கள் தேசப் பணியைச் செய்து வந்தனர்.

இச் சூழலில் திருநெல்வேலி பகுதிகளில் மகாகவி பாரதி, வ.உ.சி., வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர் போன்ற தமிழ் ஈடுபாடு மிக்க தலைவர்கள் விடுதலைப் போரில் தங்களை -ணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தனர். இவர்களின் செயல்பாட்டுக்களமாக விளங்கிய திருநெல்வேலி மாவட்டத்தில், விளாத்திகுளம் தாலுகா, நாகலாபுரம் பள்ளிவாசல்பட்டி எனும் கிராமத்தில் 1892-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதி பாஸ்கரதாஸ் பிறந்தார். பெற்றோர் முத்தாண்டித் தேவர், இருளாயி. பாஸ்கரதாஸ¤க்கு அவர்களிட்ட பெயர் வெள்ளைச்சாமி. நான்காம் வகுப்பு வரை நாகலாபுரத்தில் படித்த பாஸ்கரதாஸ், தன் பாட்டியின் ஊரான மதுரைக்குச் சென்று சுண்ணாம்புக்காரத் தெருவில் அவர்களோடு வாழ்ந்தார். தெருக்காரர்களோடு சேர்ந்து ஆரம்பத்தில் கட்டிட வேலைக்குச் சென்று மாலையில் அவர்களோடு தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றில் கலந்து கொள்வது, நிகழ்த்துவது என அதன்பால் ஈர்க்கப்பட்டார்.

பாஸ்கரதாஸ் தன் சிறு வயதில் திருப்பரங்குன்றத்தில் ஒரு நாள் கட்டிட வேலை முடித்துத் தூங்கிக் கொண்டிருக்கும்போது முருகக்கடவுள் அவர் முன் தோன்றி, ''நான் எப்போதும் உனக்கு உதயமாவேன் நீ எழுது! உனக்குக் கவிகள் வரும்'' என்று சொன்னதாகப் பாஸ்கரதாஸே தன் குழந்தையிடம் சொல்லியுள்ளார். அதன் பின்னரே கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காண்பித்து எழுத ஆரம்பித்தாராம். அவர் இளமையில் பர்மாவுக்கு நாடகம் நிகழ்த்தச் செல்லும்போது அங்கு தினகரன் என்ற ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா, முஷ்டகுறிச்சியைச் சேர்ந்தவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் ஒரு காங்கிரஸ் தியாகி.

தினகரனுக்கும் பாஸ்கரதாஸ¤க்குமான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருந்தது. பின்னர் தினகரன் தன் ஒரே தங்கையான அமிர்தத்தைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டுகிறார். அதன்படி பாஸ்கரதாஸ் பெற்றோர்களின் ஒப்புதலின்றி அமிர்தத்தை மணந்து கொள்கிறார். அமிர்தத்துக்கு உடன்பிறந்தவர்கள் ஏழு சகோதரர்கள். தான் திருமணம் செய்து கொண்டதைச் சில ஆண்டுகள் வரை பெற்றோருக்குத் தெரியாமலேயே வைத்திருந்தார் பாஸ்கரதாஸ். காலப்போக்கில் இச் செய்தி பெற்றோர்களுக்குத் தெரிய வருகிறது. தன் சொந்த அத்தை மகள் ஒண்டியம்மாளைத் திருமணம் செய்து கொள்ளப் பெற்றோர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். பூர்வீகச் சொத்துக்களும், பந்தங்களும் விட்டுப் போய்விடக்கூடாது எனக் கூறி ஒண்டியம்மாளை பாஸ்கரதாஸ¤க்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தின்போது அமிர்தத்தின் சகோதரர்கள் பெரும் சண்டையிட, பாஸ்கரதாஸ், சொந்தமும் பூர்வீகச் சொத்தும் இழக்கக்கூடாது என்பதற்காகவும், தன் முறைப்பெண் என்பதாலும், எனக்கு ஆண் வாரிசு வேண்டுமென்பதாலும் இத் திருமணம் செய்ய நேர்ந்த அவசியத்தை அவர்களுக்குக் கூறி சண்டையைத் தீர்த்து சமாதானம் அடையச் செய்கிறார். அப்போது பாஸ்கரதாஸ¤க்கு ஒரு பெண் குழந்தை. மேலும் ''இரு மனைவிகளையும் கடைசி வரை சிறப்பாக வாழ வைப்பேன்'' என உறுதி கூறுகிறார். இரு மனைவிகளும் அவரோடு ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிறார்கள். அமிர்தத்துக்கு அதன் பின் மற்றொரு பெண் குழந்தை பிறந்தது.

இரண்டாவது மனைவி ஒண்டியம்மாளின் தங்கை முத்தம்மாளும் பாஸ்கரதாஸின் மீது காதல் கொண்டு தன் விருப்பத்தைச் சகோதரியிடம் தெரிவிக்க, நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் மணம் முடித்துத் தர ஒப்புதல் தெரிவித்த ஒண்டியம்மாள், சொத்து, பந்தம் பிரிந்து போகக்கூடாது எனக்கூறி பாஸ்கரதாஸிடம் சம்மதம் வாங்குகிறார். தாஸின் 1933-ஆம் ஆண்டு நாட்குறிப்பில் ''முத்தம்மாள் திருமணம் சுற்றம் சூழ ஒண்டி வீரன் சுவாமி கோவிலுக்குப் போய், குழந்தைகளுக்கு ராமையா ஆசாரியால் காது குத்தப்பட்டு, ஒண்டியாளால் முத்தம்மாளை எனக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றது. சாமி கும்பிட்டு மாலை 6.30 மணிக்கு வந்தோம்'' (நாட்குறிப்பு 8.9.1933) என்று எழுதியுள்ளார். முத்தம்மாள் திருமணமாகி சில மாதங்களில் டைபாயிடு சுரம் கண்டு போதிய மருத்துவ வசதியற்று இளம் வயதிலேயே இறந்து போனார். மூத்த மனைவி அமிர்தம்மாளுக்கு இரண்டே பெண் மக்கள். இரண்டாவது மனைவி ஒண்டியம்மாளுக்கு ஆறு ஆண் பிள்ளைகளும், ஆறு பெண் பிள்ளைகளுமாகும்.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 29, 2023 4:53 am

சந்நியாசியான காந்தி!



சிறு வயதிலேயே பாடல்கள் எழுதுவதிலும், பாடுவதிலும் ஆற்றல் பெற்றிருந்தார் வெள்ளைச்சாமி. நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய வள்ளல் பாண்டித்துரைச்சாமி தேவருக்குத் துணையாகயிருந்த ராமநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி, அந்நாளில் வெள்ளைச்சாமியின் கவியாற்றலை உணர்ந்து புகழ்ந்ததுடன் அவரைத் தமது அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவையில் பாட வைத்துப் பாராட்டி, முத்தமிழ் சேத்திர மதுர பாஸ்கரதாஸ் என்ற பெயரைச் சூட்டினார். மதுர என்பது இனிமையையும் பாஸ்கரன் என்பது சூரியனையும் குறிக்கும். பாஸ்கரன் என்பது சேதுபதி மன்னரையும் குறிக்கும்.

எட்டையபுர மகாராஜா பாஸ்கரதாஸின் கவியாற்றலைப் புகழ்ந்து தன் அரண்மனைக்கு அழைத்து, மரியாதை செய்து வேண்டிய நிலங்களைக் கொடுத்துள்ளார். பிற்காலத்தில் அவ்விடத்தில் பல கடைகள் கட்டப்பட்டன. இப்போது அவ்விடம் நாகலாபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது. அங்கு தாஸ், ஊர் பொதுவிற்காக ஒரு நல்ல தண்ணீர் கிணறு வெட்டிக் கொடுத்துள்ளார். அக் கிணறு 'அய்யா' கிணறு என்று அழைக்கப்பட்டது. இப்போதும் அவ்வாறே அழைக்கப்படுகிறது. தன்னைத் தேடி வருவோரைக் கதராடை கொடுத்து வரவேற்பார். தாழ்த்தப்பட்டசாதியைச் சேர்ந்த மாடு மேய்க்கும் இளைஞனுக்குக் கதராடை கொடுத்த விவரத்தைத் தன் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அவர் எந்த ஊருக்குப் போனாலும், அங்கு புஷ்ப தாம்பூலக் கதராடை மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார் என்பதை அவரது நாட்குறிப்புகளைக் கொண்டு அறிய முடிகிறது. தன் சம காலத்திய கலைஞர்கள், கலை ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் பலரோடும் தனக்கிருந்த உறவையும் தன் நாட்குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

அந்நாளைய அமைச்சர் பி.டி. ராஜன் மதுரைக்கு வரும்போது அவரைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடிய பாஸ்கரதாஸ், அவர் பேரில் திருமங்கலம் நகரவாசிகளுக்கு வாழ்த்து விருத்தப்பா ஒன்றும் எழுதிக் கொடுத்துள்ளதை நாட்குறிப்பில் கூறியுள்ளார். எட்டையபுரம் சின்ன மகாராஜா திரு. காசிப்பாண்டியன் மதுரைக்கு வரும்போதெல்லாம் அவரைச் சந்தித்ததையும், பாடல்கள் எழுதிக் கொடுத்ததையும், பேட்டி கண்டதையும் தன் நாட்குறிப்பில் கூறுகிறார். நாகர்கோயிலுக்கு நாடகம் நிகழ்த்த பி.எஸ். சிவபாக்கியம் அவர்களோடு சென்றபோது பொதுவுடமைக் கட்சித் தலைவர் திரு. ப.ஜீவானந்தத்தைச் சந்தித்து அவரது இல்லத்தில் தங்குகிறார். (5.8.1934). அதேபோல் நாதசுர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன், விடுதலைப் போராட்டத் தலைவர் உ. முத்துராமலிங்கத் தேவர், அவரது தந்தை பசும்பொன் உக்கிர பாண்டித் தேவர் போன்றவர்களோடு தொடர்ந்து கடிதத் தொடர்பு வைத்துள்ளார். ஒரு முறை பசும்பொன் உக்கிரபாண்டித் தேவர் தன் வீட்டுக்கு வரும்போது அவருக்கு விருந்து வைத்து பிரயாணச் செலவுக்குப் பணமும் கொடுத்து மரியாதை செய்துள்ளதையும் நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். அதேபோல் பம்மல் சம்பந்த முதலியார், தி.க. சண்முகம் சகோதரர்கள் போன்ற கலைஞர்களோடும், 'தேவதாஸ்' திரைப்பட இயக்குநரும் நடிகருமான பி.வி. ராவுடனும், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் திரு. டி.ஆர். சுந்தரம் போன்றவர்களோடும் தனக்கிருந்த உறவைக் குறிப்புக்களாக நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். மேலும் எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் கொழும்பிலிருந்து பாஸ்கரதாஸ¤க்குக் கடிதமும் 'தேசபக்தன்' பத்திரிகையும் அனுப்பியுள்ள செய்தியைத் தன் நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.

1944-இல் திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழிசை மாநாடு தொடர்பாக ராஜா சர். அண்ணாமலை செட்டியாரோடு கலந்து கொண்ட செய்தியையும் நாட்குறிப்பில் காண முடிகிறது. திருச்சி நடிகை டி.எம். கமலவேணிக்கும் பாஸ்கரதாஸ் குடும்பத்துக்குமிருந்த நெருங்கிய உறவினைக் கமலவேணி, தாஸ¤க்கு எழுதிய கடிதங்கள் வழி அறிய முடிகிறது. கடிதத்தின் முடிவில் தங்கள் உண்மையுள்ள மாணவி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. டி.எஸ். வேலம்மாள், தாஸ¤க்கு எழுதியுள்ள கடிதத்திலும் நாடகப் பாடல் தொடர்பான உறவு வெளிப்படுகிறது. இலங்கையிலிருந்து, பாஸ்கரதாஸிடம் நாடகம் வேண்டி எழுதப்பட்ட எம்.கே.வி தம்பி மற்றும் சிலருடைய கடிதங்கள் அவருடைய நாடக வாழ்வின் பரந்த நிலையைக் கூறுகிறது. பாஸ்கரதாஸ் மூலமே இலங்கைக்கு நிறைய நாடகங்கள் கொண்டு செல்லப்பட்டதோடு, முதன்முதலாகப் பாஸ்கரதாஸே தமிழ் நாடக சபாக்களை இலங்கைக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பதும் தெரிகிறது. பாஸ்கரதாஸின் பாடல்கள் மேடைகளில் தடை செய்யப்பட்ட காலங்களில் அவரது பாடல்களையும், நாடகங்களையும் பிரசுரம் செய்த திரு. இ.மா. கோபாலகிருஷ்ணக் கோனாரின் அச்சகத்திற்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்து மூடும்போது, பாஸ்கரதாஸ் மூன்று மாத காலம் புதுவையில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார்.

மகாத்மா காந்தி காரைக்குடியிலிருந்து மதுரைக்கு வந்து நெல்லை ரயிலில் ஏறினார். காந்திஜி ஏறியிருந்த ரயில் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் காமராஜரும் மற்றும் சில ஊழியர்களும் உட்கார்ந்திருந்தனர். பாஸ்கரதாஸ் ரயிலுக்கு வந்து காந்திக்கு மாலை போட்டு அவரிடம் தாம் இயற்றிய பாடல் புத்தகம் ஒன்றை அளித்துள்ளார். அப் புத்தகத்திலிருந்த பாடல்களில் ஒன்று 'காந்தியோ பரம ஏழை சந்யாசி' என்பதாகும். இப் பாட்டு அக்காலத்தில் மேடைதோறும் பாடப்பெற்று வந்தது. காந்திஜியிடம் இப் பாட்டின் பொருளை டாக்டர். பி.டி. ராஜன் ஆங்கிலத்தில் விளக்கினார். இதைக் கேட்டதும் 'ஹம் கோய நயாஸி பனாயா' அதாவது நம்மைச் சன்யாசியாக்கிவிட்டார் எனக் கூறி சிரித்தார். சந்நியாசி என்றதும் காந்திக்குச் சிரிப்பு வந்து விட்டது.


மதுரகவியின் திரைப்படங்கள்



1931-இல் பேசத் தொடங்கிய தமிழ் சினிமா வாழ்க்கையின் விரிந்த பரப்பையும் குறிப்பிட்ட காலத்தின் அரசியல் சமூகப் போக்குகளையும் தன்னுள் கொண்டு வெளி வந்தது. அம்முதல் படத்திலேயே தேச பக்தியையும் ஆங்கில அரசிற்கெதிரான கருத்துக்களையும் எடுத்துரைக்கும் படைப்பு வல்லமை பெற்றிருந்தது. மதுர பாஸ்கரதாசின் பாடல்கள் 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள் திரைக்கு வந்த 'காளிதாஸ்' முதல் தமிழ், தெலுங்கு பேசும் படம், பாட்டு மற்றும் கதைப் புத்தகம் என்றும் 'காளிதாஸ்' பாட்டுப் புத்தக முகப்பில் காணப்படுகிறது. அதில் இயக்குநர் பெயரோ, பாடலாசிரியர் பெயரோ காணப்படவில்லை. அதில் கீழ்வரும் ஒரு பாடல் காணப்படுகிறது.

ராட்டினமாம் காந்தி

கைபாணமாம்

பாரில் நம்மைக் காக்கும்

பிரமாணம் சுதேசிய (ராட்டினமாம்)

எனத் தொடங்கும் பாடல். இப்பாடலில் கடைசிப் பகுதி மூலமே இதனை எழுதிய ஆசிரியரைக் கண்டுபிடிக்க முடிகிறது என்கிறார் அறந்தை நாராயணன்.

வீட்டுக்கு வீடு

மெய்யாக வேண்டுமே

மீட்சி பெறத் தூண்டுமே

'பாஸ்கரன்'

ஆட்சி பிறந்தாண்டுமே


இதில் பாஸ்கரன் எனக் காணப்படுகிறது. அந்நாளில் பாடலின் இறுதியில் தங்கள் பெயரைப் பதிவு செய்கிற பழக்கம் (முத்திரையடி) இருந்து வந்துள்ளது.

ஆகவே, இந்தப் பாடலை மதுர பாஸ்கரதாஸ்தான் எழுதியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடிகிறது. அதேபோல் 1933-இல் வந்த 'வள்ளி திருமணம்' படத்திலும் தாஸ் பாடல்கள் எழுதியுள்ளார். அப்பாடல்

'ஆலோலம் ஆலோலம் ஆலோலம்

அன்னம் கெளதாரிகள் ஆலோலமே

வெட்கம் கெட்ட வெள்ளைக் கொக்குகளா

விரட்டி அடித்தாலும் வாரிகளா!'

எனத் தொடங்கி நாட்டில் அப்போது நடந்து கொண்டிருந்த மகாத்மா காந்தி தலைமையிலான அந்நியப் பொருள் பகிஷ்காரம். சுதேசி இயக்கத்தை இப்பாடலின் மூலம் அப்படம் பிரச்சாரம் செய்கிறது. பாடலின் இறுதியில்

இனித்த பாஸ்கரன்

தமிழ் முறை வீதம்

ஜெனித்த குல முறை

திணைக்காவல் நீதம்

இதன்படி 'வள்ளி திருமணம்' படத்தில் பாடப்பெற்ற இப்பாடலை எழுதியவர் மதுரகவி பாஸ்கரதாஸ் என்பதை அறிய முடிகிறது. மேலும், பாஸ்கரதாஸ் பிரஹலாதா, சுலோசனாசதி, 1934இஇல் வந்த 'திரெளபதி வதிராஹரன்', சுதர்சன் டாக்கிசின் 'ராதாகிருஷ்ணன்' போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதிக் கொடுத்ததை தன் நாட்குறிப்புகளில் கூறுவதோடு, சேலம் மாடர்ன் தியேட்டரின் 'சதி அகல்யா' திரைப்படத்திற்கும், 1936இஇல் வந்த 'சாரங்கதாரா' திரைப்படத்திற்கும், ஈரோடு ராஜேஸ்வரி டாக்கியாரின் 'ராஜா தேசிங்கு' படத்திற்கும், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், கித்திரஹாயன், ராதா கல்யாணம் போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதோடு நடிகை நடிகர்களுக்கு நடிப்பு சங்கீதம் சொல்லிக் கொடுத்ததையும் தனது நாட்குறிப்புகளில் விபரமாகக் கூறியுள்ளார்.

காளிதாஸ் திரைப்படம் தொடங்கி தொடர்ந்து பல திரைப்படங்களுக்குப் பாட்டெழுதிய பாஸ்கரதாஸ் தனது பாடல்களில் காந்தியின் கதர் பிரச்சாரக் கொள்கைகளையும் ஆங்கில அரசிற்கெதிரான தமது கருத்தையும் முன்வைப்பதோடு சுதேசக் கொள்கையையும் போற்றுகிறார். மேலும் பாரத தேவியின் மகிமையையும், தேச பக்தியையும், மக்களையும் போற்றிப் பாடியுள்ளார். அவர் எழுதிய திரைப்படப் பாடல்கள் அனைத்திலும் தேசியக் கருத்துக்கள் விரவியிருப்பதைக் காண முடிகிறது.

வரலாற்று அதிர்வுகளில் பாஸ்கரதாசின் படைப்புகள்


பாஸ்கரதாசின் பாடல்களில் இந்திய தேசிய விடுதலை இயக்கப் பாடல்களே முதன்மை வகிக்கின்றன. ஒத்துழையாமை இயக்கம், கதர் பிரச்சாரம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, உப்பு வரி எதிர்ப்புக் கொள்கை, ரூல்சிலை எதிர்ப்புக் கொள்கை போன்ற இயக்கக் கொள்கைகளும் காந்தி, பகத்சிங், நேரு, மோதிலால் நேரு, திலகர், கோகலே, லாலா லஜபதிராய், பி.ஜி. ஹார்னிமன், தாதாபாய் நெளரோஜி, அலி சகோதரர்கள், விபின் சந்திரபால், தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சாரளாதேவி, தாகூர், ஆனந்த மோகன்போஸ், சுபாஷ் சந்திரபோஸ், அரவிந்தர், விவேகானந்தர், வ.உ.சி., பாரதி, திரு.வி.க., சத்யமூர்த்தி, சுப்பிரமணிய சிவா போன்ற அறுபதுக்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் அவர்கள் செயல்பாடுகள் பற்றித் தம் பாடல்களில் எடுத்துரைத்துள்ளார்.

விரிவான பொருளில் சுதந்திரம் என்பது தன்னைப் பொறுத்தும், தன் சொந்த மக்களைப் பொறுத்தும், சொந்த வரலாறு குறித்தும் இல்லாவிடில் உண்மையான கலைஞனை நினைத்துப் பார்க்க இயலாது. அந்தக் காற்றின்றி சுவாசிப்பது சாத்தியமில்லை என்பதைப் போல் பாஸ்கரதாஸ் ஆங்கில அரசின் அடக்குமுறையைக் கண்டு அஞ்சாது தன் நாட்டில் நிகழ்ந்த தேச விடுதலைப் போராட்டத்தைத் தன் நாடகப் பாடல்களால் மக்களுக்குப் பரப்பினார். அவரது பாடல்கள் தமிழகம், இலங்கை, பர்மா, ரங்கூன், மலேயா எனப் பரந்து எங்கும் அறியப்பட்டது. கலாச்சார திசை நோக்கி தம் விடுதலை இயக்கத்தின் நொடி முள்ளை நகர்த்திய அவர், மக்களின், கலைஞர்களின் நடுவே நின்று சேர்ந்து இயங்குதல் ஒன்றே சம காலத்தைப் புரிந்து கொள்ளவும், படைப்பின் ரகசியத்தை மீட்டுத் தருவதுமான சூட்சுமம் என்ற புரிதலோடு இயங்கிய மாபெரும் படைப்பாளி மதுரகவி பாஸ்கரதாஸ்.

#மதுரகவி #பாஸ்கரதாஸ் #மதுரகவி_பாஸ்கரதாஸ்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9756
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm

அருமையான , தேவையான , பதிவு சிவா அவர்களே! இதற்காகத் தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! பள்ளி கல்லூரிகளில் பாடமாக வைக்கத் தகுந்தவை! இது போன்ற #சுதந்திரப்போராட்ட வரலாறுகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு:ளன !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக