ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா என்றால் அன்பு - சிறுகதை

Go down

அப்பா என்றால் அன்பு - சிறுகதை  Empty அப்பா என்றால் அன்பு - சிறுகதை

Post by சிவா Thu Jan 26, 2023 12:01 pm

அப்பா என்றால் அன்பு - சிறுகதை  Ld461305462000284511


ஐந்து வருடங்களுக்குப் பிறகு இந்தக் கோயிலில் நுழைகிறேன். இங்கு இருந்த போது அம்மாவுடன் அடிக்கடி வருவது மனத்திரையில் ஆட… அலை பாய்ந்த என் கண்களில் தேவதை போல் தென்பட்டாள் அவள்… அம்மா! எதிரே ெகாஞ்ச தூரத்தில் கோவிலை விட்டு வெளியே வந்து ெகாண்டிருந்தவளை நோக்கி உடல் முழுக்க ஓடிய ஒரு சிலிர்ப்புடன் வேகமாகச் சென்றேன்.

மெல்லிய சரிகைச் சேலை… ஒற்றை வளையல்… தலையில் சிறிய பூச்சாரம்! எதுவும் மாறவில்லை. அப்படியே இருக்கிறாள்… என் அம்மா… என் கையைப் பிடித்திருந்த ஆதித்யாவின் பஞ்சு விரல்களைப் பட்டென விட்டு விட்டு ஓடினேன்.. கண்களில் கண்ணீர் திரள…“அம்மா…” அழைக்க எழுந்த என் குரல் தொண்டையிலேயே நின்று விட்டது. யாரோ முன்பின் தெரியாதவள் தன் பக்கத்தில் வருவது போல அவள் என் பக்கமே திரும்பாமல்… முகத்திலும் ஒரு சின்ன மாற்றம் கூடக் காட்டாமல் மிகவும் சாதாரணமாக இயல்பாக… எங்களைக் கடந்து போய் விட்டாள். உடலில் மட்டுமல்ல… உள்ளேயும் அவள் இன்னும் மாறவில்லை…! என்னால்தான் மனதில் விழுந்த அந்த அடியைத் தாங்க முடியவில்லை. பூக்கொத்து போலப் பேரனை முதல் முதலாகப் பார்ப்பவள்… இப்படியா இருப்பாள். நம்பவே கஷ்டமாக இருந்தது.

“குண்டுக் கண்ணு… பட்டுத் தலைமுடி… கத்தி மூக்கு…. ஆதி அப்படியே நீதான் இந்துன்னு… ப்ரசன்னா சொல்வதில் ஒண்ணு கூட உண்மை இல்லையா? என் அச்சாக இருக்கும் ஆதியை… அவள் பேரனைப் பார்க்கவே இல்லையா…நின்று பேசி விட்டால்… கல் மனம் கனிந்து விடுமோ என்று பயந்து…  போய் விட்டாளா?

பிரசன்னாவைத்தான் கல்யாணம் பண்ணுவேன்… இல்லைன்னா… கல்யாணமே வேண்டாம்” என்று நான் சொன்ன அன்று எப்படி வெறுப்பைக் காட்டி என்னையும்… கூடவே அப்பாவையும் வறுத்தெடுத்தாளோ… அதே வெறுப்பை இன்னமுமா சுமந்து கொண்டிருப்பாள்…சாமி கும்பிடும் மனநிலை.. சுத்தமாக காணாமல் போய் விட.. நான் அப்படியே உட்கார்ந்து விட்டேன். அது கூட அம்மாவுடன் வரும்போது.. எப்போதும் உட்காரும் இடம்தான். இது போன்ற கலக்கமான நேரங்களில் தேடுவது போல்.. இப்போதும் பிரசன்னாவயே மனம்  தேடக் கையில் எடுத்த ஃபோனை… உள்ளே வைத்தேன். அங்கே இன்னும் முழுதாக விடிந்திருக்காது… நான் கூப்பிட்டால்… ஒரே ரிங் தான்.

“இந்து… என்னடா” ன்னு… உடனே எடுத்திடுவார்… பாவம்… காலையிலேயே மூட் அவுட் ஆக்க வேண்டாம்.”“அம்மா… வீட்டுக்கு…” திடுமெனக் கேட்ட ஆதியின் குரலில் பதறி எழுந்தவள்… அவனை அள்ளி எடுத்துக் கொண்டேன். அம்மாவின் சலனமேயில்லாத முகம் மட்டுமே மனதில் இருந்ததால் கோவிலை வெறுமே சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தேன். ஆதி கையில் கிடைத்த பொம்மையுடன் உட்கார்ந்து விட… எதுவுமே பிடிக்காமல் அப்படியே எத்தனை நேரம் என்னை மறந்திருந்தேனோ…. கலைத்தது அழைப்பு மணி! இந்த நேரத்தில்… யார்… படபடப்புடன்… கதவு ஓட்டை வழியாகப் பார்க்கையில்… முகத்தைத் துடைத்தபடி… கொஞ்சம் பதட்டத்துடன் நின்றிருந்தார்… அப்பா!

அம்மா சொல்லி விட்டாள் போல… அவளை மீறித்தான் வந்திருப்பார். எப்படிக் கண்டுப் பிடித்தார்… வீட்டை… கோவிலிலிருந்து பக்கம்தான்.. ஆனாலும்… சட்டெனக் கலங்கிவிட்ட கண்களை மறைத்துக் கொண்டு… எந்த உணர்வுமில்லாத பொம்மை போலக் கதவைத் திறந்தேன்.அவரோ… உணர்வுக் குவியலாய் உள்ளே நுழைந்தார். கண்ணீருடன் ஆதியைத் தூக்கிக் கொண்டார்… என்னவோ தெரிந்தவர் போல் ஆதியும் அவர் தோளில் சாய்ந்தது… ஆச்சர்யம்.

“அப்படியே அம்மா மாதிரியே இருக்கேடா குட்டி… நான் தாத்தாடா… இந்து… என்னடா… இங்கே எப்போ வந்தே…? எங்கிட்டே ஏன் சொல்லலை? மாப்பிள்ளை… வேலை… என்று நிறுத்தியவரிடம்…“யு.எஸ். மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டேன்னு… பிரசன்னாவை எவ்வளவு மோசமாப் பேசினாங்கப்பா… அம்மா… அப்போ பெரிசா சபதம் போட்டேனே… உங்களையும் விடப் பெரிய ஸ்டேட்டஸுக்கு வருவேன். அது வரையில பார்க்க மாட்டேன்… பேச மாட்டேன்னு… அதான்.. ஒரு நிமிஷம் கூட என்னை விட்டுட்டு இருக்காத உங்க மாப்பிள்ளை… இப்போ யு.எஸ்ஸில் உட்கார்ந்திருக்கார்… போதுமா?”

ஆத்திரத்துடன் இத்தனையும் கத்தியிருப்பேன்.. அம்மாவாக இருந்தால்.. அப்பாவிடம்… அது எப்போதும் முடியாது. அதுவும் இப்போது ஆதியை உயிரே கையிலிருப்பதுபோல் பொத்தி வைத்திருந்தவரிடம்… மெல்லத்தான் சொல்ல முடிந்தது. “ஆஃபீஸ்ல யு.எஸ். ப்ராஜெக்ட்டா… ரெண்டு வருஷம் நீ இங்கே ஊர்ல இருந்தா நான் நிம்மதியா இருப்பேன். ஃபிரண்ட்ஸ் பார்த்துக்குவாங்கன்னு அவர்தான் சொன்னார். அவங்க அம்மா அப்பால்லாம்... கிராமத்தை விட்டுட்டு வர மாட்டாங்க. அதான் நானும் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு இங்கே வந்துட்டேன். அவர் வர்ற வரையிலதான்... ”“யாராயிருந்தாலும்… அம்மா, அப்பா துணையாகுமா… இந்து? இப் ப டித் தனியா நீ இருக்கலாமா?

நாங்க இருக்கறப்போ.. அதுவும் இப்போ நான் ரிடையர் ஆயாச்சு. இவனைப் பார்க்கறத விட என்ன வேலை எனக்கு.. நான் பார்த்துக்கறேன்.. நீயும் நிம்மதியா ஆஃபீஸ் போகலாம். அம்மா பற்றிய சிந்தனையே இல்லாமல்.. அவர் பேசிக் கொண்டே போக.. இது எதுவுமே நடக்கப் போவது இல்லை என நான் நினைத்ததை எல்லாம் பொய்யாக்கி விட்டார். அதுவும் அடுத்த நாளே…

என் வீடு என் வசம் இல்லாமல் போய் விட்டது.. தினம் காலையிலேயே வந்து ஏதோ மந்திரக் கோலைக் கையில் எடுத்துக் கொண்டது போல்..நானும் ஆதித்யாவும் காலையில் என்ன சாப்பிடுவது என்பதில் ஆரம்பித்து.. அவர் சொல்வதில் துளியும் பிசகாது எங்கள் தினசரி வாழ்க்கை ஓடியது. பிடித்துத் தள்ளுவதுபோல நான் நகர்த்திய நாட்கள் எல்லாம். எல்லாம் இப்போது இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன.

நான் வீட்டுக்கு வரும் போது… நீட்டாக டிரெஸ் பண்ணிக் கொண்டு ஆதி விளையாடிக் கொண்டோ… கதை கேட்டுக் கொண்டோ இருக்க.. மெல்லிதாக… சஷ்டி கவசம்… எனக்குப் பிடித்த வீணை என்று ஏதாவது இசையோடு வீடே தனி அழகுப் போர்வை போர்த்திக் கொண்டு இதுதான் வீடு என்று சுகமாய் மா(ற்)றி விட்டது. இதமாய் இருந்தது. வந்ததும் டீ தந்து கொஞ்ச நேரத்தில் சாப்பாடும் தந்து, உபசாரம் செய்வது எல்லாம் இப்போது எனக்கு மிகவும் வேண்டியிருந்தது.

அப்பா எப்போதுமே நன்றாகச் சமைப்பார். சில சமயங்களில் அம்மாவை விடக் கூட.. நாங்கள் இருவரும் சேர்ந்து அவளைக் கேலி செய்து ஒரு வழியாக்கி விடுவோம். எல்லாம் கனவு போல் இருக்கிறது… இப்போது.நமக்கு என்று ஒருவர் வீட்டில் இருந்து அக்கறையுடன் பார்த்துக் கொள்வதுதான் எத்தனை சுகம்… இதம்… இதையெல்லாம் விட்டு விட்டு எப்படித்தான் இத்தனை நாள் இருந்தேனோ என்று கூட யோசிக்க ஆரம்பித்து விட்டேன் எல்லாம் மறந்து.

ரெண்டு வருஷம் தானே ப்ரசன்னா… ஓடிவிடும்… சமாளித்து விடுவேன். எல்லாருக்கும் கிடைக்காதுப்பா இது போல ஆன் சைட் சான்ஸ் எல்லாம். நீங்க கவலையே படாதீங்க. ஊர்ல வேற இருக்கப் போறேன். ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் இருக்காங்க. அப்புறம் என்ன என்று சமாதானப்படுத்தி வலுக்கட்டாயமாக அவரை அனுப்பி இருக்கக் கூடாதோ என்று இரண்டாம் நாளே நினைக்க ஆரம்பித்ததும்... சாயங்காலம் வந்து பூட்டிய கதவைத் திறக்கையில் முகத்தில் அறைந்த அமைதியும்.. வெறுமையும்.. ஆதி இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்திருக்கும் எனக்கு.

வீடு, வேலை, ஆதி என்று ஒரே கோட்டில் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கை இப்போது எல்லாத் திசையிலும் சிறகுகளுடன் உல்லாசமாய் பறப்பது போலிருந்தது. ப்ரசன்னா எங்களுடன் இல்லாத ஒரே குறைதான்.அப்பா என்கிற தேவனிடம் இருந்த அன்பு எனும் ஒரே ஒரு மந்திரக் கோலின் வீச்சுக்கு நானும் ஆதியும் மட்டுமல்ல, ப்ரசன்னாவும் கூட ஆட ஆரம்பித்து விட்டார். இப்போதெல்லாம் மாமா.. மாப்பிள்ளைக்கு நடுவில் ஒளிவு மறைவே இல்லை என்பது அப்பா இங்கு வந்து ரெண்டு மூணு நாளிலேயே தெரிந்துவிட்டது. இருந்தாலும் தினம் என்னிடம் “என்ன இந்து இன்னிக்கு மாமா வந்தாங்களான்னு சிரித்துக் கொண்டே கேட்பதும், நான் பொய்க் கோபத்துடன் முறைப்பதும், பிடித்திருந்தது. அப்பாவின் வருகை எங்கள் பிரிவைக் கூட சுவையாக்கி விட்டது.

அம்மாவும் இப்படி வந்து விட்டால்.. என நான் ஒரு நாள் சொன்னதுக்கு..“வருவாடா.. அம்மா பத்தி உனக்குத் தெரியாதா? ஒரே பொண்ணுன்னு எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சேன். ஸ்மார்ட்டா இருக்கற எந்தப் பையனைப் பார்த்தாலும் உடனே, இவன் நம்ம இந்துவுக்கு சரியா இருப்பான்னுதான் நினைப்பேன்னு உன் மேலே அதிகமா உரிமை எடுத்துகிட்டா.. நம்பிக்கையும் வைச்சுட்டா.

நீயா செலக்ட் பண்ணினது… ஒரு அம்மாவா அவளால தாங்க முடியலை. உனக்குப் பிடிச்சிருக்கு. அதனால நீ ப்ரசன்னாவோட சந்தோஷமா இருப்பேன்னு நான் நம்பினேன். அவருக்கு அந்த நம்பிக்கை இல்லங்கறதை விட.. நீ அவ பேச்சைக் கேட்கலை.. அவளை மதிக்கலை அதுவும் முக்கியமான கல்யாண விஷயத்தில் அவளை மீறி உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டது. அவளால இன்னும் ஏத்துக்க முடியலை. அதோட.. நீ ப்ரசன்னாவைக் கல்யாணம் பண்ணுவேன்னு அவ நினைக்கவேயில்லை.

நானும் தாண்டா.. ஏன் இந்து பக்கத்து வீட்டு அருணோட ஃப்ரண்ட்தான் மாப்பிள்ளை. ரெண்டு மூணு தடவை அருணோட நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு. அப்புறம்.. எப்படி..?” அப்பா கேட்க.. ஏதோ இப்போதுதான் காதல் வந்தது போல் ஒரு வெட்கம் வந்து முகத்தைச் சிவக்க வைத்தது.. “போங்கப்பா… இப்போ போயிக் கேட்கறீங்க.. நல்ல அப்பா.. காதல் வர்றதுக்கு ஒரு வார்த்தை, ஒரு பார்வை போதும்னு ஒரு கதையில வரும்ப்பா.

அப்படி டக்குன்னு உங்க மாப்பிள்ளை என் மனசில வந்திட்டாரு. போதுமா? இப்போ அம்மா பத்தித்தானே பேசறோம்..” என் வெட்கத்தை ரசித்துச் சிரித்தபடி “ஆமாமா கோபம், ஈகோ எல்லாம் தூக்கிப் போட்டுட்டு வரணும்ல.. கொஞ்சம் டைம் குடு. வந்துடுவா..” இந்து.. நீ சின்னப் பிள்ளையில என்னை ரவிப்பா…ன்னு பேரைச் சொல்லிக் கூப்பிடுவே தெரியுமா? அம்மா திட்டித் திட்டி மாத்தினா.

எனக்கென்னவோ அது பிடிக்கும். என்னவோ மனசுக்கு ரொம்ப நெருக்கமா.. சுகமா இருக்கும். இப்போ இவன் என்னை ரவித்தாத்தாங்கறான். கேட்டாலே இனிக்குது. உங்க அம்மா வந்தா என்ன சொல்லுவாளோ?

உன்னை ரொம்பப் பிடிச்சதாலயும், அளவுக்கு அதிகமான அன்பாலயும் தான் அவளால இதைத் தாங்க முடியலை. இன்னும் கொஞ்சம் டைம் ஆகலாம். இல்லை சொல்ல முடியாது. சட்டுன்னு வெறுப்பு வந்தா மாதிரி ஒரே நிமிஷத்தில உடைஞ்சும் போகலாம். இப்போவும் ஆதியை ப்ரசன்னாவோட பையனாப் பார்க்காம, பேரனாப் பார்க்கிற பக்குவம் வந்துட்டா.. ஓடி வந்திடுவா. என்னை விட உன்னைப் பத்தி உன் அம்மாதாண்டா நிறையப் பேசுவா. உனக்குப் பிடிச்ச பைனாப்பிள் கேசரி நீ போனதிலேர்ந்து அவ பண்ணறதேயில்லை தெரியுமா… அது எனக்கும் பிடிக்கும்கறதைக் கூட மறந்தே போயிட்டா. எங்கிட்டேக் கூட தராம அவளேதான் ஆதியைத்தூக்கி வைச்சுக்குவா… பாரேன்…” அப்பா சொன்ன விதத்தில் அது அப்படியே என் முன் அழகான காட்சியாக விரிந்தது.

“ஒரே பொண்ணுன்னு ரொம்ப செல்லம்.. எது செஞ்சாலும் சரின்னுங்க. அவ என்னை மதிக்கறதே இல்லை. போற இடத்தில என்னைத்தாண்டி சொல்லுவாங்கன்னு எப்போதும் அம்மா டென்ஷனில் கத்த.. அம்மாவையும் சமாளித்து.. என்னிடம் தனியாக.. “கொஞ்சம் அம்மா சொல்றதையும் கேளு இந்து..ன்னு கொஞ்சிக் கெஞ்சி.. அப்பா நிஜமாகவே கிரேட்தான். இப்போ அவர் என் கூட இருக்கறப்போ அடிக்கடி என் அப்பா கிரேட்டுன்னு நினைக்கிறேன். ப்ரசன்னாவின் வருகை எப்போது எனும் என் ஏக்கம்.. மனதின் மூலையில் முணுமுணுக்க ஒவ்வொரு நாளும் என்னவோ விரல் சொடுக்கில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பா வீட்டில் இருக்கும் தெம்பில்.. அடுத்தநாள் வேலையையும் கொஞ்சம் முடித்து விட்டு அன்று லேட்டாக வீட்டுக்கு வந்ததுமே “ரொம்ப வேலையா இந்து.. காபி தரட்டா.. என்ற அப்பாவிடம்.. சாப்பிடறேன்பா.. பசிக்குது… குளிச்சிட்டு வரேன்..”டிராயிங்க் செட் வைத்து ஏதோ வரைந்து கொண்டிருந்த ஆதி.. என்னை நிமிர்ந்து பார்த்து அளவாகச் சிரித்து விட்டு கலர் கொடுப்பதில் மூழ்கிப் போக.. இவன் கூட மாறி விட்டான் என நினைத்தபடி டிரெஸ் எடுக்க பீரோவைத் திறந்த நான்.. ஒரு நிமிடம் திகைத்துப் போனேன்.

உள்ளே அடுக்கடுக்காய் டிரெஸ். அத்தனையும் நான் காலேஜ் படிக்கும் போது போட்டதுபோல் எனக்கு மிகவும் பிடித்த அதே பிராண்ட்… அதே அளவும். எப்போதும் வாங்கும் அதே கடையில் வாங்கி அடுக்கி வைத்து விட்டு ஒன்றுமே தெரியாதவர் போல கதவருகில் சாய்ந்து கொண்டு நிற்கிறார் அப்பா..

“மாப்பிள்ளை இல்லைன்னா நல்லா டிரெஸ் பண்ணக் கூடாதா? சரியா சாப்பிடாம மெலிஞ்சு போயி.. லூசா உனக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாம ஒரு சுடியைப் போட்டுட்டு ஆஃபீஸ் போயி.. அவர் இல்லாம சோகமா இருக்கேன்னு ஊருக்கே சொல்லணுமா? நீ எவ்வளவு அழகா.. பார்த்துப் பார்த்து வாங்குவே. எல்லாரும் எந்த டிரெஸ் போட்டாலும் உனக்கு மட்டும் எப்படி இப்படிக் கிடைக்குதுன்னு கண்ணு போடறாங்கப்பான்னு பெருமையா சொல்லுவே.

எப்பவும் அளவெடுத்துத் தைச்சாப் போல எவ்வளவு கரெக்டாப் போடுவே. அதான் வாங்கினேன். இனிமே இதான் போடணும். எப்பவும் போல பளிச்சுன்னு இருக்கணும். இந்த அழுமூஞ்சி வேண்டாம்.. அது எனக்கும் பிடிக்காது. மாப்பிள்ளைக்கும் பிடிக்காது. என்னோட இந்து எப்பவும் சந்தோஷமா ஸ்மார்ட்டா இருக்கணும். எப்படி என் செலக்‌ஷனெல்லாம்.” மந்திரக் கோல் வீச்சு..! தாங்க முடியாமல்.. திகைத்து நின்றவளை..

“ஆமாமா.. பார்த்துப் பார்த்து எடுத்தவ நானு. பேரு மட்டும் உங்களுக்கா… எப்பவும் நான் தனிதான்.. நீயாவது என் கட்சில இருப்பியாடா ஆதிக் கண்ணா..” ஆதியின் தாடையைப் பிடித்துக் கொஞ்சியபடி வருவது அம்மா..!! சில சமயம் கனவில் இப்போதெல்லாம் அடிக்கடி நான் காணும் காட்சி… கண் முன்னே உயிரோட்டமாக…!!வீடெங்கும் எனக்குப் பிடித்த அம்மா எனக்காகவே அடிக்கடி பண்ணும் பைனாப்பிள் கேசரியின் வாசனை… என் மூக்கு வழியே நுழைந்து மனதில் இனிப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

நடக்காது என நான் நினைத்ததையும் சாதித்து விட்ட அப்பாவின் அன்பின் வீச்சு…!! அதற்கு மேல் தாங்க முடியாமல்..ஐந்து வயது இந்துவாக ஓடிப் போய் “ரவிப்பா..” என்று அப்பாவைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தேன்…

நன்றி: குங்குமம் தோழி
யசோதா சுப்ரமணியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum