புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
. தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்
Page 1 of 1 •
- sncivil57இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020
. தமிழக வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்கள்
தமிழக வரலாறு ஒன்று எழுதுவதற்குத் துணைபுரிந்துள்ள சான்றுகளைக் காலப் பகுப்பின்படியே சீர் தூக்கி ஆராய்வோம்:
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்: சிந்துவெளி அகழ்வாராய்ச்சி களுக்குப் பிறகு தமிழரின் வரலாறும் நாகரிகமும் புதிய. கோணங் களிலிருந்து நோக்கப்பட்டு வருகின்றன. சிந்துவெளி நாகரிகம் பண்டைய தமிழரால் வளர்க்கப்பட்டது. அன்று என்று அண்மையில் சில ஆய்வாளர்கள் தம் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எனினும், அந் நாகரிகத்தைப்பற்றிய ஆய்வுகள் புதுமுறை விஞ்ஞான சாதனங்களின் துணையுடன் நடைபெற்று வருகின்றன. மொகஞ்சதாரோ, ஹாரப்பா மக்கள் கையாண்ட எழுத்துகளில் மறைந்து கிடக்கும் செய்திகள் இன்னும் வெளியாக வில்லை; அவர்களுடைய எழுத்து முறைகட்கும் இந்தோ ஐரோப்பிய எழுத்து முறைகட்கும் ஒரு தொடர்பைக் கற்பிக்கும் ஆய்வுகளும் அறிஞர் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு விளக்கமாக இல. எனவே, சிந்துவெளி நாகரிகம் இன்ன மரபினதெனத் தெளி வாகும் வரையில் ஹீராஸ் பாதிரியாரின் கொள்கையையே நாமும் தொடர்ந்து மேற்கொண்டு வரவேண்டியுள்ளது. ஹாரப்பா எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பு உண்டென்று அவர் கருதினார்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வாழ்ந் இருந்த மக்கள் பெரிய பெரிய பெருங்கற்குழிகளில் (பாழிகளில்) பிணங்களைப் புதைக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். இக் குழிகளில் பலவகையான இரும்புக் கருவிகளும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்ட மட்பாண்டங்களும் புதைக்கப் பட்டுள்ளன. இத்தகைய புதைகுழிகள் மேற்காசிய நாடுகளிலும், வடஆப்பிரிக்காவிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும் காணப்படு கின்றன. அவற்றுக்கும், தமிழகத்துக் குழிகட்கும் பல ஒற்று மைகள் தோன்றுகின்றன. ஆதிச்சநல்லூரிலும் புதுச்சேரிப் பகுதி யிலும் கண்டெடுக்கப்பட்ட புதைபொருள்களுள் பல சைப்ரஸ் தீவிலுள்ள ‘என்கோமி’ என்னும் இடத்திலும், பாலஸ்தீனத்தி லுள்ள காஸா, ஜொரார் என்னும் இடங்களிலும் கண்டெடுக்கப் பட்ட புதைபொருள்களைப் போலவே காணப்படுகின்றன. இவற்றையெல்லாங் கொண்டு பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளையும் குடிப் பெயர்ச்சிகளையும் ஒருவாறு நுனித் தறியலாம்.
சங்க காலம்: இக்காலத்து மக்களின் வாழ்க்கை முறை களையும் பண்பாடுகளையும் அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. அவற்றில் மன்னர் களின் பெயர்கள் பல காணப்படுகின் றனவாயினும் அவர்கள் வாழ்ந்த காலத்தை அறிந்துகொள்வதற்குக் கல்வெட்டுகள் காணப்படவில்லை. தமிழகத்தில் சில இடங்களில் ரோமாபுரி நாணயங்கள் கிடைத்துள்ளன. அரிக்கமேட்டுஅகழ்வாராய்ச்சியில் கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டு ரோமாபுரி நாணயங்கள் கிடைத்துள்ளன. அந் நூற்றாண்டுகளில் தமிழகத்துக்கும், ரோமாபுரிக்குமிடையே நடைபெற்றுவந்த செழிப்பான வாணிகத்துக்கு அவை சான்று பகர்கின்றன. இவ் வாணிகத்தைப் பற்றிய சில அரிய செய்திகளை ‘எரித்திரியக் கடலின் பெரிப்ளூ’ (Periplus of Erithraean Sea) என்னும் ஒரு கிரேக்க நூலின் மூலமாகவும் அறிகின்றோம். பழம் பாண்டிய மன்னரின் நாணயங்கள் சில ச துரவடிவிலும், நீண்டசதுர வடிவிலும் கிடைத் துள்ளன. இவற்றில் ஒருபுறம் மீன் சின்னமும், பின்புறம் யானை அல்லது காளைமாட்டுச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால அளவில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகின்றது. பூம்புகாரில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அவற்றைக்கொண்டு சில வரலாற்றுக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன.
பல்லவர் காலம்: சங்க காலம் முடிவடைந்த பிறகு சுமார் முந்நூறு ஆண்டுக்காலம் தமிழகத்தில் என்ன நேர்ந்தது என்று அறிய முடியவில்லை. தமிழக வரலாற்றில் இதை ஓர் இருண்ட காலம் என்று குறிப்பிடுவதுண்டு. அக்காலத்தில் நிகழ்ந்த செய்திகளுக்கு உடன்காலச் சான்றுகள் கிடைத்திலவேனும், அம் மூன்று நூற்றாண்டுகளில் தமிழகத்தில் மாபெரும் அரசியல், சமய, மொழி மாறுதல்கள் தோன்றி, தமிழரின் வாழ்வையும் நாகரிகத் தையும் பல புதிய திருப்பங்கட்கு உட்படுத்தின என்பகை ஊகித் தறியலாம். அவ்விருண்ட காலத்தில் களப்பிரரால் ஏற்பட்ட அரசியல் மாறுதலுக்கு வேள்விக்குடிச் செப்பேடுகள் (கி.பி. 768) சான்று பகர்கின்றன. அக் களப்பிரர் காலத்தில் சமண பெளத்த சமயங்கள் தமிழகத்தில் மிகப் பெருமளவு வளர்ச்சியுற்றன : மதுரையில் சமண முனிவர் வச்சிரநந்தி என்பார் தமிழ்ச்சங்கம் ஒன்றைத் தோற்றுவித்து அதன் மூலம் சமண சமய இலக்கியங் களைத் தமிழில் பெருக்கி அதற்கு வளமூட்டினார்.சோழ நாட்டில் அச்சுத விக்கந்தன் என்ற பெளத்த மன்னன் பெளத்த விகாரை களை அமைத்தும், பெளத்த சமய நூல்களை இயற்றுவித்தும் பெளத்த சமயத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துக் கொண் டிருந்தான். அவன் களப்ப குலத்தைச் சார்ந்தவன். களப் பிரரைப்பற்றி அறிவதற்குக் கன்னட நாட்டுக் கல்வெட்டுகள் சிலவும் பயன்படுகின்றன. சிலர் வேறு கருத்துகளை வெளியிட்ட போதும் களப்பிரர் கன்னட நாட்டிலிருந்ததாகவே தோன்று கின்றது.
தமிழகத்துக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
கல்வெட்டுகள் தமிழகத்தில் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் காணப்படுகின் றன. பிராமிக் கல்வெட்டுகள் என்று கருதப்பட்டுவந்த இவற்றைச் சுமார் கி.பி. ஐந்தாம் நூற் றாண்டுவரையுள்ள காலத்தைச் சார்ந்தவையெனக் கருதலாம்: இவை பெரும்பாலும், தென் ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், கேரள நாட் டின் மேற்குப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாகத் திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, சித்தன்னவாசல், புகலூர், சிங்கவரம் (ஸ்ரீநாதர்குன்று) ஆகிய ஊர்களில் இவற்றை இன்றும் காணலாம். இவை தவிர, பெயர் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் அரிக்க மேட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து யாது என்பது பற்றிக் கருத்து வேற்றுமைகள் உள. அதை அசோக எழுத்து அல்லது ஒருதர மாறுபட்ட பிராமி என்று முன்னாள் ஆராய்ச்சி யாளர் பலரும் கருதினர். ஆனால், தற்போதைய கருத்து வேறு பட்டுள்ளது. அது பிராமி எழுத்தன்று என்றும் தாமிளி அல்லது திராவிடி என்ற லிபி எனவும் ஒரு சிலர் கருதுகின்றனர். இவற்றில் கையாண்டிருக்கும் மொழி பழைய தமிழேயாகும்.
பல்லவர் காலத்திலும் அதற்குப் பின்னும் பற்பல கோயில் களில் கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரம், மகேந்திரவாடி, பல்லாவரம், மேலச்சேரி, மண் டகப்பட்டு, தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம் ஆகியவற்றி லுள்ள கோயில்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் கையாளப்பட்ட லிபி பல்லவ கிரந்தம் எனப்படுவது; அதனைப் பிராமியைச் சார்ந்த ஒருவகை லிபியெனக் கருதலாம். இந்த லிபியில் சில மாற்றங்களடைந்த பல்லவ கிரந்த லிபியும், நாகரி எழுத்துகளும் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் ஆண்ட இராசசிம்மனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் செப்புப் பட்டயங்கள் சில தோன்றியுள்ளன. அவற்றுள் இருமொழிகளில் பொறிக்கப்பட்ட சாசனங்கள் மிகப் பல. இரண்டாம் சிம்மவர்மனின் (சுமார் கி.பி. 550) ஆறாம் ஆட்சி ஆண்டில் அளிக்கப்பட்ட பள்ளன்கோயில் செப்புப் பட்ட யகள் முதன்முதலாக வடமொழியும் தமிழும் கலந்தவை. அவற் றைத் தொடர்ந்து பற்பல செப்புப் பட்டயங்கள் தோன்றலாயின . அவை கூரம், புல்லூர், பட்டத்தாள் மங்கலம், கண்டந் தோட்டம், காசக்குடி, பாகூர், வேலூர்ப்பாளையம் ஆகிய இடங் களில் கிடைத்தவை. இவை ஏறத்தாழ கி.பி. 8, 9 ஆம் நூற் றாண்டுகளைச் சார்ந்தவை எனலாம். இக்காலம் முதல், பாண்டிய சோழ சாசனங்களில் வட்டெழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
சோழப் பேரரசு காலத்தில் தோன்றிய செப்பேட்டுச் சாசனங்கள் மிகப் பெரியவை. அவற்றுள் கூறப்படும் மெய்க் கீர்த்திகள் மிக விரிவானவை. இக்காலச் செப்பேடுகளில் மாபெரும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடேயாகும்.
செப்பேடுகள் பொதுவாக வாழ்த்துப் பாடல்களுடன் (மங்கள சுலோகங்களுடன்) தொடங்கின. அதைத் தொடர்ந்து, கொடையளித்தவரின் மெய்க்கீர்த்தி, அவரது பண்டைய அரச பரம்பரையின் வரலாறு ஆகியவை இடம்பெற்றன. அதற்குப் பின் நன்கொடையின் முழு விவரமும், நன்கொடை பெறுபவரின் முழுப் பெயரும், வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவ்வறத் தினை அழித்தார் அடையும் இன்னல்களைக் கூறும் சாப வாசகங் களும் இடம்பெற்றன
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாட்டின் வரலாற்றிற்குப் பேருதவி அளிக்கும் அடிப்படை ஆகாரங்கள் எனலாம். மக்களிட மிருந்து அரசாங்கம் பெற்ற வரிகள், கோயில் அலுவலாளர்களின் தனித்தனி வேலைகள், கோயிலைச் சார்ந்த நகைகள், சொத்துகள் முதலியவற்றின் விவரங்கள் காணப்படுகின்றன கல்வெட்டுகள் தூண்களிலும், சுவர்களிலும், கல்தளங்களிலும், தனிப் பாறைகளிலும் காணப்படுகின்றன. இசைபற்றிய ஒரு சிறந்த கட்டுரை முழுவதும் புதுக்கோட்டையிலுள்ள குடுமியான் மலைப்பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் வியப்புக்குரியது. சில கல்வெட்டுகள் நினைவுச் சின்னங்களாக அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் ஏறக்குறைய 28,000 கல்வெட்டுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில கல்வெட்டுகள் மன்னர்களின் செயல்களையும் கைங்கரியங்களை யும் மிகைபடக் கூறியுள்ளன.
களப்பிரர் காலம் முடிந்து பல்லவர்களின் ஆட்சி தொடங்கின பிற்காலத்தைப்பற்றிப் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கத் தொடங்குகின்றன. வரலாற்றுத் தொடரும் ஒழுங்காக இடையீ டின்றிச் செல்லுகின்றது. பல்லவர் காலத்திய கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், குகைக்கோயில்கள், கற்றளிகள், ஏரிகள், தமிழ் இலக்கியப் படைப்புகள், தேவாரப் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள், சிற்பங்கள், சுவரோவியங்கள், பண்ணிசைக் குறிப்புகள் ஆகியவை அக்காலத்தைப் பற்றிய செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ள உதவுகின்றன ஹியூன்சாங் என்ற சீனப் பயணியின் பயணக் குறிப்புகளில் (கி.பி. 641-2) பல்லவர் காலத்தைப்பற்றிய சில குறிப்புகள் உள்ளன .
பாண்டிய சோழப் பேரரசுக் காலம் : இக்காலத்திய தமி ழகத்து வரலாற்றை ஆராய்ந்து கோவைப்பட எழுதுவதற்கு எண் ணற்ற கல்வெட்டுகள், செப்பேட்டுப் பட்டயங்கள், நடுகற்கள், தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், கோயிற் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், சீனம், அரேபிய நாட்டு மொழி நூல்கள் சிலவற்றுள் காணப்படும் குறிப் புகள் நமக்குத் துணைபுரிகின்றன. செப்பேட்டுப் பட்டயங்களில் லீடன் பட்டயங்கள், திருவாலங்காட்டுப் பட்டயங்கள், கரந்தைப் பட்டயங்கள், சாரளாப் பட்டயங்கள் சிறப்பானவை. கல்வெட்டு கள் அளிக்கும் செய்திகளின் வரலாற்று மதிப்பை அளவிட முடியாது. தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுகளும், திருமுக் கூடல், உத்தரமேரூர், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் காணப் படும் கல்வெட்டுகளும், மன்னர்கள், மக்கள் ஆகியவர்களின் வாழ்க்கையைத் தெற்றென எடுத்துக்காட்டுகின்றன. சோழ மன்னர்களின் வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் கல் வெட்டுகள் சிங்களத்திலும், சாவகத்திலும், சுமத்திராவிலும், பர்மாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனத்தில் சுவான் செள என்னும் ஊரில் ஒரு கோயிலில் கசேந்திர மோட்சம், உரலில் பிணிக்கப்பட்ட கண்ணன் ஆகிய சிற்பங்கள் காணப் படுகின்றன.
வரலாற்றுத் தொடர்புடைய தமிழ் இலக்கியங்களுள் கலிங்கத்துப் பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், குலோத்துங்கன் கோவை, பெரிய புராணம், வைணவ மரபை யொட்டிய குருபரம்பரை, சீரங்கம் கோயிலொழுகு, மதுரைக் தல வரலாறு, கேரளோற்பத்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஆனால், இவையனைத்தும் நம்பக்கூடியனவென்றோ வரலாற்றுக் குப் பயன் உடையவை என்றோ கருத முடியாது. அவற்றுள் காணப்படும் சிற்சில கருத்துகள் வரலாற்றுப் பயன் உடைய வையாம்.
சீனக் கடலோரத்திலும் பாரசீக வளைகுடாவிலும் தமிழக வணிகரின் குடியிருப்புகள் அமைந்திருக்கவேண்டும் என அறிகின் றோம். சீனத்துக்கு அனுப்பப்பட்ட சோழரின் தூதுகளைப்பற்றிய குறிப்புகள் சீன நாட்டின் “சாங்” வரலாறுகளில் கிடைக்கின்றன. இவை முதலாம் இராசராசன், முதலாம் குலோத்துங்கன் ஆகிய மன்னரின் காலத்தவை. சீனப் பயணியான சா-ஐூ-குவா (கி.பி. 1225) இச் செய்திகளை மெய்ப்பித்துள்ளார். அராபிய எழுத்தாளரான இபுனே ஹாக்கால், ஈஸ்டாக்கி என்பவர்கள் தமிழகம் அரபு நாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பு களைக் தம் நூல்களில் எடுத்துக் கூறியுள்ளனர். சிங்களத்து வரலாற்று நூலான மகாவமிசத்திலும் தமிழகத்தைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. வெனிஸ் பயணி மார்க்கோ போலோ (சுமார் கி.பி. 1293) தென்னிந்தியாவைப்பற்றித் தரும் செய்திகள் வியக்கத்தக்கனவாம்.
சோழர் காலத்தில் பொன் நாணயங்களும் இதர நாணயங் களும் வெளியிடப்பட்டன. உத்தம சோழன், இரண்டாம் ஆதித்தன், முதலாம் இராசேந்திரன் , முதலாம் இராசாதிராசன் முதலிய சோழ மன்னரின் நாணயங்கள் பல கிடைத்துள்ளன. சோழர் காலத்திய கல்வெட்டுகளில் பல நாணயங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் பல இப்போது கிடைக்கவில்லை.
சோழர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் புகழ் பெற்ற கோயில்கள் பல எழுப்பப்பட்டன. பல கோயில்கள் விரிவாக் கப்பட்டன. இசையும் நாட்டியக் கலையும் மிக உயர்நிலையை எட்டிப்பிடித்திருந்தன. ஒவியம், சிற்பம் ஆகிய கலைகள் அப் போது அடைந்திருந்த சீரும் சிறப்பும் என்றுமே எய்தியிருந்தன வல்ல என்று திட்டமாகக் கூறலாம். குறிப்பாகச் சோழர் காலத் துக் கோயில்களின் அமைப்பு, படிவங்களின் சிறப்புகள் முதலிய வற்றைப்பற்றியும் நன்கு அறிய முடிகின்றது.
மத்திய காலம் : விசயநகரப் பேரரசின் எழுச்சியும் முடிவும், மதுரைப் பாண்டியரின் வீழ்ச்சியும், மதுரை நாயக்கர் ஆட்சியின் தோற்றமும் முடிவும் மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின் றன. இக்காலத்திய அரசியல், சமய நிலை, சமூக நிலை, கலை வளர்ச்சி ஆகியவற்றைப்பற்றிய செய்திகள் நமக்குப் பல துறை களில் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங் கள், இலக்கியங்கள், கிறித்தவப் பாதிரிமாரின் அறிக்கைகள், கடிதங்கள், கங்காதேவியின் ‘மதுரா விசயம்’, கொங்கு தேச இராசாக்களின் சரித்திரம், இபின் பத்துதா (1304-78) என்ற முஸ்லிம் பயணியின் பயணக் குறிப்புகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய செய்திகளைக் கொண்டு கோவையான வரலாற்றை எழுதக்கூடும்.
பிற்காலம் : கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதி யைப் பிற்காலம் என்று குறிப்பிடுகின்றோம். இந்தியாவுடன் வாணிகம் செய்யவந்த ஐரோப்பியக் கம்பெனிகளின் ஆவணங் கள், பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்களின் ஆவணங்கள், ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு, சிலரின் வாழ்க்கை வரலாறுகள் முதலியவை வரலாற்றுக் களஞ்சியங்களாக உதவு கின்றன. இவையேயன்றி, ராபர்ட் ஆர்மி (Orme) எழுதிவைத்த ‘இராணுவ நடவடிக்கைகள்’ என்னும் நூலும், மக்கன்ஸியின் கையேட்டுப் படிகளும் 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் அரசியல், சமுதாய நிலைகளை அறிந்துகொள்வதற்குப் பயன்படு இன்றன. இவ் வெளிநாட்டு அறிஞர்கள் செவிவழிக் கேட்ட வற்றை ஓட்டி எழுதியுள்ளவை யாவற்றையும் நம்ப முடியாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தின் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் குறிப்புச் சுவடிகள் (Gazetteers) வெளியிடப் பட்டன. இங்கிலாந்திலுள்ள அரசு ஆவணக்களரியிலும், சென்னையிலுள்ள அரசு ஆவணக்களரியிலும் (Record Office) உள்ள பல கையேட்டுச் சுவடிகள் அண்மைக்காலத்தின் வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கப் பட்டுள்ளன. பாரத நாடு விடுதலை பெற்ற பின் அரசாங்க ஆவணங்கள் மிகப் பயன்படுகின்றன.
இருபதாம் நூற்றாண்டு நடந்துகொண்டிருக்கிறது. அவ்வப் போது அதன் வரலாறு நூல்களிலும், செய்தித்தாள்களி லும் எழுதப்பட்டு வருகின்றன. தந்தியும், தொலைபேசியும், புகைப்படம் எடுக்கும் கருவிகளும், வானொலியும், தமிழக வரலாறு நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே அவற்றைப் பதிவு செய்துவைக்கத் துணைபுரிந்து வருகின்றன.
இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்
https://tamilnewbookspdf.blogspot.com/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|