ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர் Poll_c10இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர் Poll_m10இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர்

Go down

இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர் Empty இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர்

Post by சிவா Fri Jan 13, 2023 6:11 am

இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர் Fb_img14

இந்த உலகம் பெரும்பாலும் சுயநலமானது தன் வீடு , தன் சொத்து, தன் வருமானம், தன் அதிகாரம், தனக்குஎது நல்லது என பெரும்பான்மையோர் வாழும் பூமி இது

தன்னையும் தனக்கு வேண்டியதையும் தவிர எதையும் தேடாமல் கிணற்று தவளையாக சுயநல வாழ்வை மானிடர் வாழும் இயல்பில் ஒரு கட்டத்தில் பொதுநலம் சரியும், அறியாமை ஓங்கும், உன்ண உணவும் தங்கும் இடமும், கொஞ்சம் செல்வமும் போதும் அதுதான் வாழ்வு என முடங்கும் இனம் அறியாமையில் சிக்கும்

அவர்களுக்கு ஆட்சி பற்றியோ நாடு பற்றியோ முன்னோர் விட்டு சென்ற நாகரீகம் பற்றியோ, தேசத்தின் எதிர்காலம் பற்றியோ, தாங்கள் உறிஞ்சபடுவது பற்றியோ கவலையே இராது

எல்லா நாட்டு மக்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல, ஆனால் அப்படி அம்மக்கள் பெரும் அறியாமையில் சிக்கும் பொழுது பிரபஞ்சம் ஒருவனை, தேர்ந்தெடுக்கபட்ட ஞானியினை அனுப்பும்

பார்க்க பரதேசியாக ஆனால் கண்களில் தேடலும் பார்வையில் ஞானமும் கொண்ட சாந்தரூபியாக அவன் தேசத்தை உற்று கவனிப்பான், நோய்பட்ட தேசத்தின் நாடி நரம்பெல்லாம் உற்று பார்த்து எது சீர்கேடோ அதை சரியாக கண்டறிந்து தேசமும் மக்களும் நலமாய் வாழ வழியும் ஞானமும் இன்னும் பலவும் போதிப்பான்

அவன் ஆயுதம் ஏந்துவதில்லை, அவன் அதிகம் பேசுவதில்லை, அவன் ஆட்சியாளர்களை பகைப்பதுமில்லை, அவன யாருக்கும் எதிரியுமில்லை

ஆனால் ஓரமாக இருந்து உற்று கவனித்து அவன் மனிதகுலத்துக்கு கொடுக்கும் சிகிசையும் அவன் கொடுக்கும் பெரு நெருப்பும் ஒருநாள் எல்லாவற்றையும் மாற்றும்

இப்படிபட்ட ஞானியர் அடிக்கடி பாரத தேசத்துக்கு கிடைப்பார்கள், எப்பொழுதெல்லாம் தேசம் பெரும் சிக்கலில் சிக்குமோ அப்பொழுதெல்லாம் வருவார்கள்

அவர்கள் ஆதிசங்கரராய் வருவார்கள், வித்யாரண்யராய் வருவார்கள், அவர்கள் சுவாமி ராமதாசராய் வருவார்கள், ராகவேந்திரராய் வருவார்கள்

அப்படி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இனி இந்தியாவுக்கு விடிவே இல்லை, இந்துமதம் இனி எழப்போவதே இல்லை என பெரும் மிரட்டல் வந்த காலங்களில் நரேந்திர தத்தனாய் அந்த ஞானி வங்கத்தில் உதித்தார்

இதே நாளில் 1863ல் உதித்தார்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முறைபடி அறிவிக்கபட்ட 1857க்கு அடுத்த ஆறாம் ஆண்டு அந்த அவதாரத்தை இந்தியா பெற்றது, சுத்தமான இந்திய விடுதலைக்கு அடிகோலிய ஞானி அப்பொழுதுதான் பிறந்தார்

வரலாற்றை வீரர்கள் படைப்பதில்லை, பெரும் சாம்ராஜ்யத்தை வாள்முனைகள் அமைப்பதில்லை, மாபெரும் தேசத்தின் மாற்றங்கள் வீரனாலும் மக்களாலும் மட்டும் கிடைப்பதில்லை

ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும் அதன் பொற்காலத்திலும் அத்தேசம் வலிமையாக எழவும் மாற்றங்கள் எழவும் ஒரு ஞானி வேண்டும்

ஞானியே வரலாற்றினை மாற்றுவான், ஆன்மீக ஞானியே அக்கினி குஞ்சாக காட்டை எரியவைப்பான், அவனே சூரிய வெப்பம் போல் மேகம் கூட காரணமாவான், அவனே பெருமழையாக கொட்டி பெரும் பசுமை செழிப்பை கொடுப்பான்

வரலாற்றில் அரிஸ்டாட்டில், சாணக்கியன் என பலரை இப்படி சொல்லமுடியும், ஏன் நவீன சீனாவினை தொடங்கி வைத்த சன்யாட்சன் சொன்னபடி "இடையில் வந்த இந்த புத்தமதம் இருக்கும் வரை நாம் உருப்பட போவதில்லை நம் பண்டைய கலாச்சாரத்தை மீட்டெடுக்காமல் உருப்படபோவதில்லை" என்பதில்தான் சீனா எழும்பி நிற்கின்றது

இஸ்ரேலின் எழுச்சிக்கும் காரணம் அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் காத்து வருவது மட்டுமேதான், அவர்களுக்கு அந்த சிந்தனையினை கடந்த நூற்றாண்டில் தியோடர் ஹார்ல் தொடங்கினான்

ஆம் சிந்திக்க கற்றுகொடுப்பான் ஞானி, பிரபஞ்ச சக்தியோடு அவன் எடுக்கும் போதனையில் மாபெரும் எழுச்சி எழும், அவனின் சிந்தனை வெறும் உணர்ச்சி வெறியினை கொடுக்காது அது அந்த இனம் எது? அதன் தாத்பரியம் என்ன? அதன் பெருமையும் வரலாறும் என்ன? எனும் மிகபெரிய‌அது வரலாற்றை மாற்றும்

இந்தியாவின் ஞானமும் சிந்தனையும் எக்காலமும் உலகில் கொண்டாடபட்டது, அந்த இந்திய ஹிந்து ஞானத்தை விட கிரேக்க சிந்தனை உயர்ந்தது என காட்டபோவதாக சொல்லி இந்தியா வந்தான் அலெக்ஸாண்டார்

ஆனால் போரஸுடன் தோற்ற நாட்களில் அலெக்ஸாண்டர் இந்திய ஞானத்தாலும் அதன் சனாதான சிந்தனையாலும் ஈர்க்கபட்டான் ஞானியாய் திரும்பசென்றான்

அவனுக்கு பின் புத்தமும் சமணமும் இந்நாட்டை குழப்பி போட்டது ஆதிசங்கரர் வந்து மீட்டெடுத்தார்

இஸ்லாமிய படையெடுப்புகள் அதை ஒழிக்க பார்த்தன, பிரிட்டானியர் இந்நாட்டு மதத்தை கலாச்சாரத்தை ஆண்டிகள் தேசம், பாம்பாட்டி தேசம் என மாற்றி சொல்லி இந்நாட்டின் மகத்துவத்தை திரித்தனர்

இந்தியர்களின் வீரமும் ஞானமும் தாத்பரியமும் ஒழிந்து அவர்களை குழப்பி நாகரீகமற்றவர்காக்கி செவ்விந்தியர்களை போல ஒழித்துவிடும் தந்திரமேதான் ஐரோப்பியருக்கு இந்தது

அதில்தான் இந்தியாவினை பாம்பாட்டி நாடு, காட்டுமிராண்டி நாடு, மூடநம்பிக்கை நிரம்பிய மதத்தை கொண்ட நாடு என கதைகட்டினர், அக்கதை ஐரோப்பாவிலும் வேகமாக பரவிற்று, இந்திய மதமும் நாகரீகமும் பிற்போக்கானது என அவர்களகவே நம்ப தொடங்கினார்கள்

ஆனால் அந்த ஆண்டிகள் தேசத்துக்கா ஐரோப்பாவில் இருந்து பிழைக்க வந்தாய்? அந்த அறிவில்லா மூட நம்பிக்கை தேசமா இவ்வளவு செல்வத்தை உருவாக்கிற்று? என அறிவுள்ள இந்தியர் கேட்டாலும் பிரிட்டிஷ்காரனிடம் பதில் இல்லை

காலம் இந்நாட்டின் தாத்பரியங்களையும், இந்து ஞானத்தின் பிரமிப்பையும் பிரமாண்டத்தையும் அதன் விஸ்வரூபத்தையும் காட்ட ஒரு மகானை உருவாக்கியது, இரண்டாம் சங்கரராக அந்த மகான் வங்கத்தில் தோன்றினார்

சுவாமி விவேகானந்தர், அவர்தான் இந்திய சனாதானதர்மத்தின் ஞான முகத்தை மேற்குலகில் மிளிர செய்தார், அவராலே இந்த மங்கிய விளக்கு மிக பிரகாசமாய் எரிந்தது, மேற்குலகம் இந்திய ஞானத்தை கண்டு அசந்தது, ஏகபட்டோர் இந்துமதம் வரவும், இந்து எழுச்சி ஏற்படவும் அது சுதந்திர கணலாக எரியவும் அதுதான் காரணமாயிற்று

வங்கம் ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர்.

அந்த நரேந்திர தத்தா எனும் ஞான பிறப்பு சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், குதிரையேற்றம் முதல் வீர விளையாட்டு வரை அவருக்கு தெரிந்தது, மிக எளிதாக கலெக்டர் ஆகும் தகுதி அவரிடம் இருந்தது

ஆனால் அவர் ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகபெரிய ஞானி, புலி இன்னொரு புலியினை அடையாளம் காணுதல் போல மிக சரியாக இவரை அடையாளம் கண்டார், அவரின் கைபட்ட நேரத்தில் இருந்து முழு பிரபஞ்ச சக்தி நரேந்திரனில் இறங்கிற்று, சுவாமி விவேகானந்தர் என மாறினார்

அதில்தான் பல்லாண்டு பாரம்பரியம் கொண்ட இந்துமதத்துக்கு பெரும் ஒளி கிடைத்தது

தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் உறுதி,எதற்கும் அஞ்ஞாத மனஉறுதி இவற்றுடன் அவர் பரம்மஹம்சர் மடத்தின் தலைவராகும் பொழுது அவருக்கு வயது வெறும் 23.

பெரும் அவதாரங்களை தவிர, பிறவி ஞானிகளை தவிர யாருக்கும் இது சாத்தியமில்லை.

அந்த வயதிலே ஞானம் அடைந்தார், ஆண்மீகம் என்பது ஆலயத்திலோ அல்லது இமயமலை,காசி சாமியார் கூட்டத்திலோ அல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு தெய்வீக தன்மை உண்டு, அதனை வெளிபடுத்தினால் அதுதான் ஆன்மீகம் என்பதுதான் இம்மண்ணின் ஞானமரபு என பழைய ஞானத்தை மீட்டெடுத்தார்

ஆண்மீகம் மூலம் இந்தியாவினை மாற்றி அமைக்கலாம், என்பதுதான் அவரின் கொள்கை.
அக்கால இந்தியா மிகவும் அறியாமையால் பின் தங்கி மோசமாக இருந்தது, தன் மதமும் அதன் உயர்வும் அறியாமல் இருந்தது

ஆப்கானிய படையெடுப்பும் அதை தொடர்ந்த பிரிட்டிசார் ஆட்சியும் அதனை முறித்து போட்டிருப்பதை உணர்ந்தார், சிவாஜியின் இந்து பேரரசு எழுச்சி ஆங்கிலேயரால் அடக்கபட்டதை அமைதியாக உணர்ந்தார்

சுல்தான்களும் ஆங்கிலேயனும் சேர்ந்து செய்த ஆட்சியில் இந்துமதம் நசுங்கியிருந்ததையும் அந்த ஆன்ம எழுச்சி இல்லாமல் இனி இங்கு மாற்றமில்லை என்பதையும் உணர்ந்தார்.

அரச ஆதரவு இல்லா மதம் வாழாது, மக்களிடம் ஆத்மரீதியாக சிந்திக்கவைக்கா சிந்தாந்தம் நிலைக்காது என்பது அவரின் தீர்க்கமான முடிவாயிற்று

காலத்தால் தூசுஅடைந்து , பாழ்பட்டு கவனிக்க யாருமற்று இருந்த இந்துமதத்தை ஆப்கானியராலும் வெள்ளையனாலும் இந்திய அரசர்கள் வீழவும் விழுந்து கிடந்த இந்துமதத்தை அவர் தட்டி எழுப்பினார்

அதன் தாத்பரிய நம்பிக்கைகள் கொள்கைகள் ஞான விளக்கங்களை காவி உடை அணிந்து அவர் சொல்ல தொடங்கிய பொழுது ஒவ்வொரு இந்தியனின் ஆன்மாவும் உண்மை உணர்ந்தது, யானையின் பலம் அதற்கு தெரிவது போல் ஒவ்வொருவரும் உணர தொடங்கினர், மாயை அகன்றது

தேசபற்றும் அர்பணிப்பும் நிரம்பிய‌ 100 இளைஞர்களை கொடுங்கள் இத்தேசத்தை நான் மாற்றுகின்றேன் என சவால் விட்டார் விவேகானந்தர், இளைஞர்களும் திரண்டனர், பெரும் எழுச்சி அவரால் உண்டாயிற்று

அமெரிக்க சர்வமத மாநாட்டில் அவர் உரையாற்றி நின்றபொழுது வணங்காத கரங்களுமில்லை தெளியாத உள்ளங்களுமில்லை, ஆம் மிகபெரிய ஞானியாக அவரை உலகம் ஏற்றும் கொண்டது

விவேகானந்தர் தெளிவாக இருந்தார், வீணாக ஆயுதபோராட்டமோ அறவழி போராட்டமோ அர்த்தமற்றது என்பது அவருக்கு தெரிந்தது, உண்மையான ஆன்மீக எழுச்சி ஒன்றே இங்கு தர்மத்தை மீட்டெடுத்து நிலைக்க வைக்கும் என்பதை உணரபெற்றார்

நாடெல்ல்லாம் சுற்றிபார்த்த விவேகானந்தர் அதனை மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் என போதித்தார் , அதனால்தால் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அவருக்கு தேவையாய் இருந்தனர்.

அவரது போதனைகள் சாகாவரம் பெற்றவை,

சிகாகோ உலக சமய மாநாட்டில் எல்லோரும் ஆங்கில நாகரீகத்தில் “சீமான்களே,சீமாட்டிகளே” என சொல்லி பேச தொடங்க, எடுத்த எடுப்பிலே “சகோதர, சகோதரிகளே” என தொடங்கி கைதட்டலை அள்ளியவர். கேட்டதற்கு காரணம் சொன்னார். “ஒரு துறவிக்கு பெற்றவரை தவிர வேறு எல்லோரும் சகோதர சகோதரியே” என அமைதியாக விளக்கினார், அதற்கு மேற்கத்திய கலாச்சாரம் இந்துக்களிடம் இருந்து எடுத்து கொண்ட பல சான்றுகளை காட்டினார்

ஐரோப்பியரின் வாழ்க்கை முறை வேறு கலாச்சாரம் வேறு மதம் வேறு. ஆனால் எங்கள் இந்து மண்ணில் வாழ்வும் மதமும் கலாச்சாரமும் ஒன்று என அவர் சொன்னபொழுது ஐரோப்பியரிடம் பதிலே இல்லை, இந்துமதம் அன்றே அவர்களால் மதிப்புடம் நோக்கபட்டது

அதுவும் உலக சமயமாநாட்டில் ஒரு காவி பரதேசி கோலத்தில் சென்று, இந்திய ஞானத்தை, அதன் அமைப்பை, அதன் ஆழ்ந்த நோக்கத்தினை அவர் விளக்கி முழங்கியபொழுது, இமைக்கமறந்து அவரை வணங்கி நின்றது அந்த சபை.

பெண்களுக்கான மரியாதை என்ற பொருளில் அவர் பேசும்பொழுது “எங்கள் நாட்டில் மனைவியினை தவிர எல்லோரையும் அம்மா என்றே அழைப்பார்கள், சிறுமியிடம் பிச்சை கேட்டாலும் தாயே என அழைக்கும் பாரம்பரியம் எங்களது” என அவர் சொன்னபொழுது, மற்ற மத வித்தகர்களிடம் அதற்கு பதில் இல்லை

இந்து மத கலாச்சாரத்தில் பெண்களுக்குரிய உயர்ந்த இடத்தினை அவர் விளக்கியபொழுது மற்ற மத குருக்கள் எல்லாம் சங்கடத்தில் தலையினை தொங்க போட்டுகொண்டனர். அவ்வளவு அழகாக விளக்கினார்.

உண்மையில் பழம் இந்திய அடையாளங்களில் பெண்களுக்கான இடம் அவ்வளவு உயர்ந்ததாய் இருந்திருக்கின்றது என்பதை அவர் விளக்கியபொழுது மற்ற மதத்தாருக்கு இந்துமதத்தின் மீதான அபிமானம் கூடிற்று

இதுதான் விவேகானந்தரின் முத்தாய்ப்பு அவர் எல்லா மதங்களையும் படித்தார், எல்லா மத நோக்கத்தையும் அவரின் இளம் வயதிலே அறியமுடிந்தது, எல்லா ஆறுகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதமும் இறைவனை அடையவே என அவரால் 30 வயதிலே போதிக்க முடிந்தது.

அதனால்தான் மேற்கத்தியர் கூட அவரை கிழக்கின் ஞான ஒளி என அழைத்தனர். கல்வி மூலம் மக்களின் அறியாயமை அகற்றவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார், இந்தியா முழுமையும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதே அவரது முதல் குறிக்கோள்.

நிச்சயமாக சொல்லலாம்,, அழிந்திருந்த இந்து மதத்தினை மீட்டெடுத்தவர் ஆதிசங்கரர் என்றால், அதற்கு அழியா புகழை கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

உலகில் பலநாடுகளில் இந்தியாவில் பிறந்த இருவருக்கு மட்டும் சிலை உண்டு, காரணம் அவர்களை உலகம் மதித்துவணங்கி ஏற்றுகொண்டது, ஒருவர் காந்தி இன்னொருவர் சுவாமி விவேகானந்தர்.

அவரது தெளிவு அப்படி, போதனைகள் அம்மாதிரியானவை. மனிதனுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் ஒப்பற்ற மந்திரங்கள் அவை. ஆன்மாவை தட்டி எழுப்ப கூடியவை.

ஒரு இந்து துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இருந்தவர் விவேகானந்தர்
உங்கள் அறிவிற்காக உங்கள் போல அறிவான மகனை பெற, உங்களை திருமணம் செய்ய தயார் என ஒரு இளம்பக்தை வேண்டி நிற்க, “அம்மா..துறவிக்கு பெண்கள் எல்லாம் தாய் ஸ்தானம், நீ வேண்டுமானால் என்னை மகனாக ஏற்றுகொள், நான் இப்பொழுதே உன் மகனாவேன்” என சொல்லி உயர்ந்து நின்றாரல்லவா? அதுதான் விவேகானந்தர்.

அவர்தான் இந்தியா தன் ஞானமரபிலும் சனாதர்ம உயரிய சிந்தனையிலும் எழுந்து விடுதலைபெற வேண்டும் என முதலில் முழங்கினார்

“இந்த நாட்டிற்கு தேவையானது நிச்சயமாக மதம் அல்ல. அது அவர்களிடமே இருக்கின்றது கல்வியும், தங்கள் மதம் கலாச்சாரம் பற்றிய‌ விழிப்புணர்வுமே அதுதான் இந்நாட்டை மாற்றும், ”
எவ்வளவு அழகான போதனைகள், எளிய வாதங்கள், ஆழ்ந்த தத்துவங்களை மெல்லிய பூங்காற்று போல் சொல்லிய எளிமையான அணுகுமுறைகள்? சந்தேகமில்லை அவர் மாபெரும் ஞானி

அவரின் கிளிகதையும், ஆமை கதையும் போதும் அவரின் ஞானத்தினை சொல்ல

அந்த குளத்தாமை கதையின் மூலம் எங்கே என தேடும்பொழுதுதான் விவேகானந்தரின் ஆகபெரிய தேடலும், அவரின் நுணுக்கமான சிந்தனையும் வெளிபடுகின்றன‌

கடல் ஆமை குளத்தாமையினை நோக்கி கடல் பெரிது என்றால் குளத்து ஆமை கடல் எப்படி இதைவிட பெரிதாக இருக்கும் என அடம்பிடிக்குமாம், இறைவன் எவ்வளவு பெரியவன் என்பதை விளக்க இந்த கதையினை பல இடங்களில் ஆமையாகவும் தவளையாகவும் அறியாமை பதர்களை உருவகபடுத்தி சொல்வார் விவேகானந்தர்

அந்த கதையின் மூலம் அப்பர் சுவாமிகளின் பாடல் என்பதுதான் ஆச்சரியம்

"கூவலாமை குரைகடல் ஆமையைக்
கூவலோடு ஒக்குமோ கடல் என்றல்போல்
பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெருந்தன்மையே" என்பது அப்பர் சுவாமிகளின் பாட்டு

அதையே விவேகானந்தரும் படித்து பேசினார் என்றால் ஒரு இந்துவாக அவர் இந்த பாரத கண்டமெல்லாம் எவ்வளவு தேடி தேடி இந்து நூல்களை படித்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது

அதை நினைக்கையிலே கண்ணீரோடு கண்கள் அப்பெருமகனை தேடுகின்றது

இறைவன் பெரும் சூத்திரதாரி, நைஷ்டிக பிரம்மசாரி துறவிகளை அவன் நீண்டநாள் வாழவிடுவதில்லை, அப்படித்தான் பெரும் ஞான சூரியனாக, தெய்வீக திருமகனாக உலகெல்லாம் இந்துமதத்தின் பெருமையை ஒரு இந்தியனாக ஒளிவீசி பரப்பிய அவரையும் எடுத்துகொண்டான்.இறக்கும் பொழுது அவருக்கு வயது 39 மட்டுமே.

ஒரு மாபெரும் ஞானசூரியனின் பிறந்த நாளை உலகம் இன்று கொண்டாடுகின்றது, ஒரு இந்தியனாக அந்த ஞானமகனை வாழ்த்துவோம், நிச்சயம் அவர் வாழ்த்துகுறியவர், வாழ்த்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டிய அவதாரம்

“இந்த நாட்டின் இழிநிலைக்கு காரணம் மதம் அல்ல, அந்த புனித மதத்தினை ஒழுங்காக பின்பற்றாததே..” என்ற அவரின் போதனை நிச்சயம் இன்றும், எக்காலமும் பொருந்த கூடியது.

அப்படி பின்பற்றினால் இந்நாடு எவ்வளவு உயர்வாக உலகில் ஒளிவீசும், அதனை செய்தால் இந்துமதமும் வாழும், இந்தியாவும் மகா அமைதியாக செழிப்பாக வாழும்

இந்நாடு இந்துக்கள் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்றால் அதற்கு விவேகானந்தர் காட்டிய வழியே எக்காலமும் சால சிறந்தது

இந்து எப்படி வாழவேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும்? எப்படி தியானிக்க வேண்டும் என சொல்லியும் வாழ்ந்தும் காட்டிய மகான்

இந்துத்வா என்பது என்ன? மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்துவதே இந்துமதம், ஒவ்வொரு மனதில் இருக்கும் கடவுள் தன்மையினை வளர்த்து அம்மனிதனை தெய்வநிலையினை எட்ட செய்வதே இந்துமதம்
இந்த உலக வாழ்வில் எதெல்லாம் மனிதனை மனிதனாக வாழவைக்க அவன் மனதை செம்மைபடுத்துமோ அதுதான் இந்துமதம்

"ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் எல்லா வழிபாட்டிலும் என்னையே அடைகின்றான், அது சுடுகாட்டு பூசையோ , ஆடு வெட்டுவதோ இல்லை ஆலய கருவறை முன் நிற்கும் வழிபாடோ எல்லாம் என்னையே சேரும்" என கண்ணன் சொன்ன தத்துவத்தை எளிதாக விளக்கியவர் விவேகானந்தர்

ஒவ்வொரு இந்து வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களில் கீதை போல விவேகானந்தரின் போதனைகளும் கட்டாயம் இருக்க வேண்டும்

பாரதத்தின் கலாச்சார பெருமையும், அதன் மகா உயர்ந்த தாத்பரியமும் , இந்து மதம் உலகுக்கு சொல்லும் மாபெரும் ஞானமும் அந்த ஞானமரபும் அதில்தான் இருக்கின்றன‌

பென்னெடுங்கால ரிஷிகளும் மகான்களும் முனிகளும் ஒருசேர கலந்து உரிய நேரத்தில் இம்மண்ணின் மகத்துவத்தை விவேகானந்தர் உருவில் விளக்க வந்த நாள் இது

அலெக்ஸாண்டரையும் அவன் கிரேக்க மன பெருமையினையும் சாணக்கியன் தோற்கடித்து விரட்டியது போல, ஐரோப்பிய கிறிஸ்துவ பெருமைமிகுந்த அகங்கார‌ தலைகணத்தை தோற்கடித்து விரட்டியவர் விவேகானந்தர்.

அந்த தேசபற்று மிக்க ஞான பிம்பம் நரேந்திரனாய் பிறந்து விவேகானந்தராய் ஜொலித்து மறைந்தபின் இப்பொழுது நரேந்திர மோடியாய் திரும்பவும் வந்திருக்கின்றார், அந்த ஞானமகனால் தேசம் தலை நிமிர்ந்து நிற்கின்றது

சுவாமி விவேகானந்தர் தன் இறுதிநாட்களில் நான் உடலால் மறைந்தாலும் என் ஆன்மா இந்த நாட்டை மீட்டெடுக்க மறுபடி வரும், நான் மறுபடி வந்து இந்நாட்டை உயர்த்துவேன் என அடிக்கடி சொல்லிகொண்டிருந்தார்

அந்த நரேந்திர தத்தா பின்னாளில் நரேந்திர மோடியாய் திரும்ப வந்ததை காலம் காட்டிற்று, மோடி தன் தேச சேவையினை விவேகானந்தரின் சீடராகத்தான் தொடங்கினார்

விவேகானந்தரோடு அவரின் எழுச்சி அடங்கவில்லை உண்மையில் அவர் எழுச்சியும் போராட்டமும் அவர் காலத்துக்கு பின்புதான் பெரும் அலையாக எழும்பிற்று

அவரின் பூலோக வாழ்வு முடிந்து அரூபியாக விஸ்வரூபமெடுத்தார் விவேகானந்தர், அவரின் சிந்தனைகளும் போதனையும் இந்தியாவில் பெரும் எழுச்சியாக உண்டாயிற்று, அதுவும் வங்கத்தில் பற்றி எரிந்தது
இதன்பின்பே வெள்ளையன் வங்கத்தை இரண்டாக பிரித்தான், இந்துக்கள் எழுச்சியினை தொடர்ந்தே முஸ்லீம் லீக் அமைப்புகளும் தோன்றின‌

விவேகானந்தர் ஏற்றிவைத்த அமைதி தீ தொடர்ந்து எரிந்தது, அது இந்து மகா சபையாக ஆர்.எஸ்.எஸ் இயக்கமாக தொடர்ந்து வந்தது, ஆனால் உலக நிலை யாருக்கும் சாதமில்லை, அதனால் என்ன, ஞானி ஏற்றிவைத்த தீ அணையுமா என்ன?

அது எரிந்தது, இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் எழுச்சி பிரிட்டனை வீழ்த்தின, கடைசியில் தன்னால் இனி இந்தியாவினை நிர்வகிக்கமுடியாது என உணர்ந்த பிரிட்டிசார் தேசத்தை பிரித்து குழப்பி இந்தியாவிலும் தன் அதிகார பலத்தை சில கைதடிகள் மூலம் விட்டுவிட்டே சென்றனர்

1947ல் நடந்தது சுதந்திரம் அல்ல, தனக்கு தோதானவர்களிடம் பிரிட்டிசார் தனக்கு உகந்த ஆட்சி செய்ய சொல்லி நாற்காலியினை கொடுத்த ஒரு நிகழ்வு அவ்வளவுதான்

ஆனால் விவேகானந்தர் விஸ்வரூபமாக வளர்ந்தார் நாடெல்லாம் இந்து எழுச்சி நடந்தது, அமைதியாக நடந்தது கன்னியாகுமரி வரை அவர் வந்து நின்றார்

திராவிட கண்களுக்கு அது ஏதோ ஒரு சாது என தெரிந்ததே தவிர அவர்களின் அறியாமை அகங்கார கண்களுக்கு அந்த ஞானம் பிடிபடவில்லை

விவேகானந்தரின் போதனைகள் இன்னும் வளர்ந்தன , 1990களில் உலகமே மாற்றங்களை தேடியபொழுது இந்தியாவிலும் காங்கிரஸ் வீழ ஆரம்பித்தது

அதாவது பிரிட்டிசார் உருவாக்கிய கூட்டம் வீழ ஆரம்பித்து இந்துக்களிடம் எழுச்சி வந்தது, ஆயினும் அக்கட்சி அந்நிய தேசத்து கூட்டத்திடம் சென்றது

பொறுமையுடன் விவேகானந்தரின் ஞானதீ தன் கடமையினை செய்து கொண்டே இருந்தது, 2014ம் ஆண்டு இத்தேசம் பழைய பிரிட்டிஷ் வேர்களை பிடுங்கி எறிந்து தன்னை முழுக்க மீட்டது

ஆம் கவனியுங்கள் உங்களுக்கே புரியும்

1947ல் சுதந்திரம் என சொன்னாலும் உண்மையான சுதந்திரம் 2015ல் தான் நடந்தது, அதன் பின்புதான் காஷ்மீர் இணைப்பு முதல் இன்னும் ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கின்றன‌

அதில் ராமர்கோவிலும் சேர்ந்து கொண்டது, ஆம் விவேகானந்தர் கண்ட கனவுகளெல்லாம் இப்பொழுதுதான் அரங்கேறுகின்றன, இந்தியாவின் சுதந்திரம் 2014ல் நடந்து , காசி இப்பொழுதுதான் துலங்குகின்றது,

இனி ஒவ்வொரு ஷேத்திரமாக துலங்கும்

எங்கெல்லாம் சுவாமி நடந்து அந்த ஷேத்திரங்களின் நிலைகண்டு கண்ணீர்விட்டாரோ அதெல்லாம் துலங்க ஆரம்பித்துவிட்டன, இதெல்லாம் மாபெரும் ஆச்சரியம் சனாதான துறவிகள் மட்டும் காட்டும் ஆச்சரிய அதிசயம்

ஞானிகளின் கணக்குகளும் வாழ்வும் ஆயுளும் புரிந்து கொள்ளமுடியாதவை, இதை ராகவேந்திரா சுவாமிகளின் வரலாற்றிலே காணலாம், ராகவேந்திரரின் சாயல் விவேகானந்திரடமும் உண்டு.

தன் ஆயுள் பற்றி ராகவேந்திரர் சொன்னார் "என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள், என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும், பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்"

விவேகானந்தர் வாழ்வும் இப்படியே, அவரின் பூவுடலுக்கு வயது 39, அவரின் அரூபியான போராட்ட வாழ்வு 100 வருடங்கள், அவரின் சிந்தனை ஆளதொடங்கியிருக்கும் இந்த காலத்தின் அளவு இனிதான் உலகம் அறியும்

அந்த அதர்மம் இந்தியாவில் அட்டகாசம் செய்தபொழுது பிரபஞ்சம் இங்கு விவேகானந்தர் எனும் மகா ஞானியினை அனுப்பியது, அவரால் இங்கு மாபெரும் புரட்சி ஏற்பட்டு 2014ல் இந்திய விடுதலையும் சாத்தியமாயிற்று

ராகவேந்திரரின் அம்சம் விவேகானந்தர் என்படில் சந்தேகமில்லை. ராகவேந்திரரின் எழுச்சி 15ம் நூற்றாண்டில் இந்துமதத்தை காத்தது, எவ்வளவோ இடங்களில் காத்தது அவர் எழாவிட்டால் தென்னகம் பலவற்றை இழந்திருக்கும்

ராகவேந்திரரின் சாயல் இருப்பதால் என்னவோ விவேகானந்தருகும் தமிழகத்துக்கும் இடையேயான தொடர்பு மிக அதிகம், தமிழகத்தை அவர் அதிகம் நேசித்தார்

குமரியில்தான் அவர் தவமிருந்தார்

விவேகானந்தர் 1893ல் சொன்னார், சென்னையில் இருந்து ஒரு ஆன்மீக ஒளி எழுந்து வரகண்டேன் என்றார், அதன் பின்பே ரமணரால் திருவண்ணாமலை மாபெரும் எழுச்சி பெற்றது, காஞ்சி மகாபெரியவர் மாபெரும் ஞானபிம்பமாக எழுந்தார்

இதையெல்லாம் முதலிலே சொன்ன விவேகானந்தர் இன்று கன்னியாகுமரியில் அவர் சிலையாக எழும்பி நிற்கின்றார்

ஆண்மீக தலங்கள் நிரம்பிய தமிழகத்திற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இந்தியா சுற்றிய அவருக்கு தமிழகம் பிடித்தமான இடம், சென்னை வந்தார், அவர் தங்கிய இடம் இன்றும் விவேகானந்தர் இல்லம் என அழைக்கபடுகின்றது, மொத்த இந்தியர்களுக்கும் தெரியாத அவர் பெருமை, தமிழகத்து சேதுபதி அரசனுக்கு தெரிந்தது, சேதுபதி மன்னர் மட்டும்தான் அவர் சிகாகோ செல்ல பணவுதவியும் செய்தார்,

அதன் நன்றிகடனாகத்தான் அந்த மாபெரும் சொற்பொழிவினை நிகழ்த்தியபின் அவர் முதலில் இலங்கை வழியாக தமிழகம்தான் வந்தார்.

அவருக்கு வரவேற்பு கொடுத்த இடத்தில் இன்றும் நினைவுத்தூண் பாம்பனில் உண்டு.

குமரி விவேகானந்தர்பாறை அறிவாதவர் யாருமில்லை, அதுவும் அவர் கால்பட்ட புனிதபாறை,இவ்வாறாக‌ தமிழகத்தில் அம்மகானுக்கு அழியாத நினைவுசின்னம் உண்டு. குமரியில் விவேகானந்தர் நினைவு இல்லம் அமைக்க ஆயிரம் காரணம் உண்டு

ஆனால் அதில் அரசியல் சர்ச்சைகளும் உண்டு.

விவேகானந்தரின் பெயர் எக்காலமும் எதிர்தரப்புக்கு எரிச்சலை கொடுக்கும் என்பதால் கன்னியாகுமரி பாறை சேவியர் பாறை என சிலுவை நட்டு அட்டகாசம் செய்தார்கள், விவேகானந்தர் மண்டபம் அமையமுடியாதபடி சிக்கல் எழுப்பினார்கள்

பக்தவக்சலம் போன்ற உண்மை அரசியல்வாதியும், ஏக்நாத் ராணடே போன்ற உண்மையான தேசபக்தர்களும் இருந்ததால் பிரச்சினை மகா சுமூகமானது, அல்லாவிட்டால் நிச்சயம் அது பெரும் கலவரமாக வெடித்திருக்கும்.

அந்த அளவு இந்துவிரோத சக்திகளுக்கு விவேகானந்தர் பெரும் பயத்தையும் அச்சத்தையும் என்றும் கொடுத்து கொண்டிருக்கின்றார்

(பின்னாளில் அப்பக்கம் இதை மனதில் வைத்தே வஞ்சகமாக நிறுவபட்டதுதான் திருவள்ளுவர் சிலை என்பது வேறு விஷயம்)

அந்த பாம்பன் தூணும் மகா பெரிய வரலாற்றை கொண்டது, ஆனால் அதனை சொல்ல கூட யாருமில்லை. நிச்சயம் அந்த இடமும் மகா வரலாற்று சிறப்பானது. அந்த ஞானமகன் சிகோகோ வெற்றி உரை ஆற்றிவிட்டு இத்திருநாட்ட்டில் கால்பதித்த முதல் இடம்.

தமிழகம் சீர்ழிய காரணமான‌ விதி ஈரோட்டில் எழுந்ததென்றால் தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும் கன்னியாகுமரி பக்கம் இருந்தே எழும்பின, அய்யா வைகுண்டர் முதல் பலர் வந்தார்கள்

அவர் கால்பட்ட புதுகோட்டை ராமநாதபுரம் பக்கம் இருந்துதான் தேவர் பெருமகனும் வந்தார்

இதெல்லாம் ஆழ நோக்க வேண்டிய விஷயங்கள், விவேகானந்தர் இங்கு குறிப்பால் பல விஷயங்களை உணர்த்தித்தான் சென்றார்.

விவேகானந்தர் காட்டிய வழியில் இந்தியா தன் பொற்காலத்தை மீட்டெடுத்து கொண்டிருக்கின்றது, இனி பாரதம் உச்சம் பெறும்

ஒருவேளை காலவோட்டத்தில் இந்தியா சறுக்கினால் மறுபடியும் அந்த "நரேந்திரர்" மறுபடியும் வந்து இந்தியாவினை காத்து கொண்டே இருப்பார்

பாரதத்தின் பெரும் ஞான துறவியும் , இந்திய விடுதலையினை ஆன்மீக வழியில் இந்திய சுதந்திரம் சாத்தியம், அதன் கலாச்சார மீட்டெடுப்பு சாத்தியம், அதன் புனிதமான மதம் சாத்தியம் என நிரூபித்த அந்த மாபெரும் ஞானிக்கு ஞான அஞ்சலிகள்.

அந்த மகான் இந்தியாவின் "ஞான தந்தை"

"இங்குள்ள சிக்கலுக்கெல்லாம் காரணம் இந்துமதம் அல்ல, அதை தவறாக புரிந்து கொண்டதே. அம்மத்தின் உண்மையான தத்த்துவத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கெல்லாம் அது விளங்கவில்லையோ அதை நாம் விளக்க வேண்டும்

இந்துமதத்தின் அருமையும் பெருமையும் அது சொல்லும் வாழ்வியல் முறையினையும் மனபூர்வமாக ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ளும்நாளில் பாரத ஆத்மாவினை அவன் உணர்வான், எல்லோரும் அப்படி உணரும் பட்சத்தில் இத்தேசம் மிகபெரும் மேன்மைபெற்று உலகை ஆளும்"

இதுதான் விவகானந்தர் சொன்ன முத்தாய்ப்பான வரி, ஒவ்வொரு இந்துவும் செய்யவேண்டிய காரியம் இதுதான்

இந்துமதம் எந்த சிக்கலுக்கும் காரணம் அல்ல, அது தவறாக புரிந்து கொள்ளபட்டதும் அதை பலர் திரித்து சொன்னதுமே சிக்கலுக்கெல்லாம் காரணம், அதை சரிசெய்து இந்துமத மேன்மையினை எல்லோருக்கும் எடுத்து சொல்ல ஒவ்வொரு இந்துவும் உறுதி ஏற்க வேண்டிய நாளிது

விவேகானந்தர் எக்காலமும் இங்கு பாரத பெருமையினை காத்து கொண்டே இருப்பார், அந்த ஞானமகனின் பிறந்தநாளில் தேசம் கம்பீரமாய் அவரை வணங்குகின்றது

இந்த "ஞானபாரத சிற்பி" அப்பெருமகனே,ஆயிரம் ஆண்டு கழித்து இந்துமதம் ஒளிவீசி துலங்க பெரும் காரணம் அந்த ஞானதிருமகனே

அந்த அவதாரத்தை நன்றி கண்ணீரோடு வணங்கி அவர் பிறந்த நாளில் இந்துமதத்தாலும் அதன் உயரிய சிந்தனையாலும் நாட்டை காப்போம் நாட்டோடு மதத்தையும் காப்போம் என அவர் வழியில் பாடுபட உறுதியேற்கின்றது இந்துஸ்தானம்

"இந்துஸ்தான இளைஞர்களே, இந்த தேசம் மாபெரும் உயரம் அடையும் வரை, இந்த அன்னையின் விலங்கு உடைபட்டு அவள் கொடி பொன்னொளி வீசி பறக்கும் வரை, இந்த பாரத தேரின் சக்கரங்களாக நீங்கள் சுழன்று கொண்டே இருக்க வேண்டும்

அளப்பரிய ஆற்றலும் வலிமையும் கொண்ட எம் சிங்கங்களே, ஒவ்வொரு நொடியும் விழிப்பாய் தவிப்பாய் இருந்து உழையுங்கள், மாபெரும் எழுச்சிய இங்கே நிகழும்

ஏ ஐரோப்பியரே, ஆயிரம் கைகள் கொண்ட ராவணனாலும் அசைக்க முடியா எம் கையாலநாதனை நீங்கள் அசைக்கலாம் என எண்ணினால் அது தவளை மாபெரும் கடலை குடிக்க‌ நினைப்பதற்கு சமம்

ஓ மேற்குலகமே எங்கள் கீதை கொடுத்த வாழ்வை நீங்கள்தான் பின்பற்றுகின்றீர்கள், நால் வகை மக்களும் அயராது பாடுபட்டு உங்கள் தேசத்தை வளமாய் பலமாய் ஆக்குகின்றீர்கள், அந்த கீதையினை இந்திய இந்துக்கள் முறையாய் பின்பற்றாதே எங்கள் வறுமைக்கும் அறியாமைக்கும் காரணம்

இந்துமதம் ஞானம் மட்டும் தேடும் மடம் அல்ல, அது எல்லா தேடலுக்கும் வழிகாட்டும் உன்னதமான மடம், கீதை எனும் வாழ்வியல் போதனை அப்படியானது, ஒவ்வொரு இந்தியனும் கீதையினை முழூக்க உணர்ந்து அயராது தன் கர்மத்தை செய்யும்பொழுது உலகின் உன்னத நாடாக பாரதம் திகழும்"

இந்துஸ்தான ஞான தந்தையின் அவதார நாளில் , காசிக்கு அடுத்து முக்கிய புனிதபூமி கன்னியாகுமரி என சொல்லி தமிழகம் வந்து தமிழகத்தில் தன் கால்பதித்து தமிழகம் இந்துஸ்தானின் முக்கிய இந்து பூமி என சொல்லி அடையாளமிட்ட அந்த ஞானமகனுக்கு நினைவாஞ்சலி

ஒவ்வொரு இந்திய இளைஞனும் குறிப்பாக தமிழக இளைஞர்களும் அறிவேண்டிய பின்பற்ற வேண்டிய அந்த மாகானை காலமெல்லாம் வணங்கினாலும் இன்றைய நாளில் சிறப்பாக வணங்கலாம்

பிரம்ம ரிஷி - முகநூல் பகிர்வு


இந்தியாவின் ஞான தந்தை விவேகானந்தர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum