புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Saudi Vellaka -மலையாளப் படம் -விமர்சனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 10, 2023 6:01 pm

‘ஆப்ரேஷன் ஜாவா’ திரைப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இயக்குநர் தருண் மூர்த்தியின் இரண்டாவது திரைப்படம் ‘சவுதி வெள்ளக்கா’ (Saudi Vellaka).

யதார்த்தமான கதைக்களமும், உண்மைக்கு நெருக்கமான கோர்ட் ரூம் டிராமாவாகவும் இத்திரைப்படத்தை தருண் இயக்கியிருக்கிறார். படத்தின் மிக நுட்பமான நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கும் சமநிலை படம் முழுக்க நீடித்திருக்கிறது.

மனிதநேயம் மற்றும் இரக்கத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் இறுதிக்காட்சி படத்தில் காணப்படும் சின்ன சின்ன குறைபாடுகளை எல்லாம் ஈடு செய்துவிடுகிறது.

‘சவுதி வெள்ளக்கா’ திரைப்படம், 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. அதேபோல் 21-வது டாக்கா சர்வதேச திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும், 2022 டிசம்பரில் சென்னையில் நடந்த 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

கொச்சினின் நெருக்கடியான குடியிருப்புப் பகுதி சவுதி காலனி. நெருக்கடியான குடியிருப்புகள் என்றாலே பக்கத்து வீட்டுடன் அவ்வப்போது வார்த்தைப்போர் நடப்பது இயல்புதானே. இந்த வார்த்தைப்போர் அணையாத தீயைப் போல புகைந்துக்கொண்டே இருப்பவை.

மூதாட்டி ஆயிஷா ராவுத்தர் (தேவி வர்மா) வீட்டிற்கும் அருகில் வசிக்கும் அந்த பணக்கார வீட்டிற்கும் இடையே குட்டி குட்டி சண்டைகள் நடந்து வருகிறது.

அந்த வீட்டின் உரிமையாளர் மகளிடம் குழந்தைகள் பலர் டியூஷன் படித்து வருகின்றனர். டியூஷன் தொடங்குவதற்குமுன் சிறுவர்கள் அந்த வீட்டின் மொட்டை மாடியில் விளையாடுவது வழக்கம். இப்படி ஒருநாள் கல்லி கிரிக்கெட் ஆடும்போது சிறுவன் அபிலாஷ் (லுக்மன் லூக்) அடித்த ஷாட்டில், காயம்படுகிறார் ஆயிஷா ராவுத்தர்.

இதனால் கோபமடைந்த அவர், சிறுவன் அபிலாஷை அடித்து விடுகிறார். இதில் நீண்ட நாட்களாக ஆடிக் கொண்டிருந்த அபிலாஷின் பல் ஒன்று உடைந்துப் போகிறது. அபிலாஷின் பெற்றோர் ஆயிஷா ராவுத்தர் மீது வழக்கு தொடுக்கின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே திரைப்படத்தின் திரைக்கதை.

புதிதாக ட்ரான்ஸ்பராகி வரும் போலீஸ்காரர் ஒருவர் சவுதி காலனியில் உள்ள அபிலாஷ் வீட்டிற்கு நீண்டநாள் நிலுவையில் இருந்துவரும் வழக்கிற்கான வாரண்ட்டைக் கொடுப்பதற்காக செல்லும் காட்சிதான் படத்தின் தொடக்கக் காட்சி. இதை பார்க்கும்போது ஏதோ க்ரைம் த்ரில்லர் படம் போலத்தான் எண்ணத் தோன்றும்.

காரணம் அபிலாஷின் குடும்பத்தினர் கதாப்பாத்திரங்கள் தேர்வு மற்றும் கவலைகள், பதற்றங்கள் அத்தனை கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் ரசிக்கும்படியாக இருக்கும்.

இந்தத் திரைப்படத்தின் முக்கிய காதாபாத்திரம் மூதாட்டி ஆயிஷா ராவுத்தராக வரும் தேவி வர்மா. கோபம், கவலை, குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் தருணங்களில் அவரது இயல்பான நடிப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

அதேபோல் அபிலாஷாக வரும் லூக்மன் லூக்கின் நடிப்பும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அபிலாஷின் குடும்பத்தார், ஆயிஷா ராவுத்தரின் மகன் மற்றும் மருமகள், பிரிட்டோ கதாப்பாத்திரம், வழக்கறிஞர் கதாப்பாத்திரம், ஊர்க்காரர்கள், சாட்சிகள் என பலரும் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள்தான் இப்படத்தின் கருபொருள். சிறுவனாக இருந்தபோது தொடரப்பட்ட வழக்கு, வாதி மற்றும் பிரதிவாதிகளின் வாழ்வியல் சூழல்களில் ஏற்படுத்தும் மாற்றங்களை மிக நுட்பமாக பேசியிருக்கிறது இத்திரைப்படம்.

வாய்தா, நீதிமன்ற விடுமுறைகள், நீதிபதிகள் மாற்றம் என ஒவ்வொரு வழக்கிற்குப் பின்னால் இருக்கும் குடும்பங்களின் வலி நிறைந்த உண்மைகளைப் பதிவு செய்திருக்கும் விதத்தில் இயக்குநர் தருண் மூர்த்தி அனைவரது பாராட்டையும் பெறுகிறார்.

ஒளிப்பதிவாளர் ஷரத் வேலாயுதனின் கேமரா கொச்சின் மற்றும் அதன் அருகில் இருக்கும் இடங்களை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு. இசையமைப்பாளர் பால் பிரான்சிஸின் பின்னணி இசையும், அந்த 'Pakalo Kaanaathe' பாடலும் பால்வையாளர்களை படத்தில் ஒன்றச் செய்கிறது.

கோர்ட் டிராமாவுடன் கூடிய குடும்பக்கதை என்பதால் பார்வையாளர்களுக்கு மெதுவாக நகரும் திரைப்படம் என்ற உணர்வை பார்வையாளர்களுக்கு தந்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த படக்குழுவும் சிரத்தையுடன் பணியாற்றி இருக்கிறது.

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமோ, ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் இல்லாமல்கூட, சமூகத்தில் சர்வ சாதாரணமாக காணப்படும் உண்மையான வாழ்வியல் பிரச்சினைகளையும் யதார்த்தங்களையும் பேசும் சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணம் ‘சவுதி வெள்ளக்கா’ திரைப்படம்.

கடந்த டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

-குமார் துரைக்கண்ணு (இந்து தமிழ் திசை)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 10, 2023 7:39 pm

பார்க்கிறேன் அண்ணா !....பகிர்வுக்கு நன்றி!....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக