ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!

2 posters

Go down

ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Empty ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!

Post by eraeravi Mon Jan 02, 2023 11:02 am

ஹைக்கூ உலா!

நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  !

நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com பக்கம்120.விலை : ரூ. 80.


கவிஞர் இரா.இரவியின் ‘ஹைக்கூ உலா’ என்னும் ஹைக்கூ நூலை வாசித்தேன். இந்நூலில் இடம்பெற்ற அறம் சார்ந்த ஹைக்கூ கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. இதில் உள்ள கவிதைகள் ஜப்பானிய ஹைக்கூ பாணியையோ, இலக்கணத்தையோ அடிப்படையாகவோ கொண்டிருக்காவிட்டாலும், தமிழுலகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்துச் செறிவோடு இருப்பது சிறப்பு.  

கைரேகையில் இல்லை
கைகளில் உள்ளது
எதிர்காலம்!

என்னும் கவிதையில் உழைப்பவனுக்கே எதிர்காலம் உண்டு என்னும் அறம் தெரிகின்றது. உழைப்பில் நாட்டம் கொள்ளாமல், கைரேகை பார்ப்பது வீண் என்பது தெளிவு.

திரும்ப கிடைக்காது 
வீணாக்கிய 
வினாடிகள்!

இந்த வரிகள் ‘காலம் பொன் போன்றது’ காலத்தை வீணாக்கக் கூடாது என்ற அறக்கருத்தை வலியுறுத்துகின்றது.

விவேகமன்று 
விளைநிலங்களில் 
கட்டிடங்கள் !

இக்காலத்தில் விளைநிலங்கள் முறையற்ற வகையில் அழிக்கப்படுகின்றது, அதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கவிதை.

வருத்தத்தில் விவசாயி 
மகிழ்வில் மணற்கொள்ளையர் 
வறண்ட ஆறு!

மணல் கொள்ளை நடப்பதை அறத்தோடு ஆராய்ந்து சொல்கிறது இக்கவிதை.

நடுவதோடு சரி 
பராமரிப்பதில்லை  
மரம்!

எங்கும் மரம் நடுவது வலியுறுத்தப்படுகின்றது. அது செயல்படுத்தவும் படுகின்றது. ஆனால், தொடர்ந்து பராமரிக்கப்படுவதில்லை என, அறச் சீற்றத்துடன் சுட்டுகிறது கவிதை.

சாதியில் இல்லை 
எண்ணத்தில் உள்ளது 
உயர்வு தாழ்வு!

இந்தியாவில் உயர் சாதி, தாழ்ந்த சாதிப் பிரச்சனை பெரும் சவாலாக உள்ளது. அதை அழகாகச் சொல்கிறது கவிதை.

வன்முறை வளர்க்கும்
நட்பை அழிக்கும் 
மது!

அறமற்ற செயல்களில் மது குடித்தலும் ஒன்று. அந்த மதுக் குடித்தலால் ஏற்படும் தீமையை விவரிக்கிறது இந்தக் கவிதை.

கற்பனையின் உச்சம் 
ஏமாற்றமே உச்சம் 
இராசிபலன் !

இராசிபலனைத் தினமும் பார்த்து, வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கும் வீணர்களை ஏளனம் செய்யும் கவிதை இது.

நடிப்பில் வென்றனர் 
நடிகர் திலகத்தை 
அரசியல்வாதிகள்!

இன்றைய அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் மக்களிடம் நடித்து, அறமற்ற செயல்களைச் செய்கிறார்கள் என்பதை அழகாகப் படம் பிடிக்கிறது.  

அடுத்தவருக்குத் தீங்கு
நினைக்காதிருத்தல் 
அறம்!

மற்றவருக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பதும் ஓர் அறம் தான் என்பது தெளிவாகின்றது. இக்கவிதையில்.  

பகிர்ந்துண்ணும் பறவை
தனித்துண்ணும் மனிதன் 
உயர்திணை எது?

பறவைகள் தங்களுக்குக் கிடைக்கும் உணவுகளைப் பகிர்ந்துண்ணும்போது. மனிதன் அப்படிச் செய்கின்றானா என்பது கேள்விக்குறி!  

கேடு தரும் 
உள்ளத்திற்கும் உடலுக்கும்
பொறாமை!

பொறாமைப்படாமல் இருப்பது, நல்ல ஓர் அறச் செயல் என்பது, இக்கவிதையில் சுட்டப்படுகின்றது. 


நல்லவனுக்கு 
ஆயுதம்
உண்மை!

இந்த உலகில் அறத்துடன் நல்லவனாக வாழ்வதற்குத் துணையாகக் கொள்ள வேண்டிய சிறந்த ஆயுதம் ‘உண்மை’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை எடுத்தியம்பும் இக்கவிதை ஒரு மகுடம்.
இதேபோல், அறம் சார்ந்த ஏராளமான கவிதைகள் இடம்பெற்று, இந்நூல் ஒரு பயனுள்ள நூலாக மிளிர்கின்றது.
-
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

ஹைக்கூ உலா!  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி  !  நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்! Empty Re: ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி  ! நூல் மதிப்புரை கவிஞர் டி.என்.இமாஜான், சிங்கப்பூர்!

Post by T.N.Balasubramanian Mon Jan 02, 2023 11:35 am

கவிஞர் இரவி அவர்களே !
வணக்கம் 
உங்கள் பதிவுகள் யாவும் உங்களை பற்றியோ /உறவுகள் பற்றியோ 
வேறு பல ஊடகங்களில் வந்த விமரிசனத்தை பதிவு செய்கிறீர்கள்.
ஈகரை படிப்பவர்களுக்கு இது எப்பிடி உதவக்கூடும்?
உங்கள் பதிவுகளை மின்னூல் வழியாக பதிவு செய்து ஈகரை மின்னூல் பகுதியில் 
தரவேற்றம் செய்யலாமே.

சற்றே யோசியுங்கள்.தவறாக நினைக்கவேண்டாம் 

இரமணியன் 

@eraeravi


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum