புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
15 Posts - 71%
heezulia
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
3 Posts - 14%
Barushree
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
4 Posts - 5%
heezulia
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
2 Posts - 2%
prajai
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
1 Post - 1%
Barushree
மது  Poll_c10மது  Poll_m10மது  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 12, 2022 6:14 pm



மது  Main-qimg-7e3f1c5828ec9a4335d98033325bed6e-lq

1. மது மற்றும்

2. போதை என்ற வார்த்தைகளை நன்கு புரிந்துகொண்டாலே போதுமானது.

மது :

மது என்பது வேதிப்பொருட்களின் சேர்க்கையால், நொதித்தல் மூலம் உண்டாகும் ஒரு திரவக்கலவையாகும். இதனை, இயற்கையான முறையிலோ அல்லது வேதிப்பொருட்களின் வினையின் மூலமோ பெறலாம். மதுவின் பிற வடிவங்களாக, கள், மகரந்தம், தேன், பானம், கஞ்சா, சாராயம், சரக்கு போன்றவை வர்ணிக்கப்படுகின்றன.

போதை:

மேற்குறிப்பிட்டவைகளை, உட்கொள்வதால் மனத்தில் இறுக்கம் குறைந்து, கிளர்ச்சி அடைந்து, சற்றே தன்நிலை மறந்து, சுயக்கட்டுப்பாட்டை இழந்து கிறங்கியிருக்கும் நிலையே போதையாகும்.

போதைப்பழக்கம் :

படிக்கும் போது தீய நண்பர்களோடு ஏற்பட்ட பழக்கங்களினாலும் மற்றும் பொழுதுபோக்காகவும் கற்றுக்கொண்ட பழக்கத்தை விட்டுவிட முடியவில்லை என அடிமைப்பட்ட பிறகு வருந்துவதில் பயன் ஏதும் இல்லை.

செய்யும் வேலையைக் காரணம் காட்டி, கடின வேலை செய்பவர்கள் தங்கள் உடல் வலி மறந்து இருக்கவும் போதையைப் பயன்படுத்துவதாகச் சொல்லி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

போதையின் பாதகங்கள்:

போதை தனிமனிதனை மட்டும் பாதிக்கவில்லை. சுற்றியுள்ள சமுதாயத்தையும் பாதிப்படையசெய்கின்றது.

உதாரணமாக,

படிப்பு பாழாதல்

குடும்பத்தில் பிரச்னைகள்...

அலுவலகப் பிரச்னைகள்

குழந்தைகள் மீது வன்முறை

வன்முறைக் குற்றங்கள்...

வாகன விபத்துகள்

பாலியல் குற்றங்கள்

சமுதாயத்தில் குற்றம் புரிதல்

போதையின் விளைவுகள்:

ஒருவர் மது அருந்தும்போது, அது , சிறுகுடல் மற்றும் வயிறின் மூலமாக, அவரது இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது,

பின்னர் இது, உடல்முழுவதும் பரவுகிறது.

ஒருவர் ஒருமுறை மது அருந்தினால், அவரது உடல் சில மணிநேரங்களுக்குப் பாதிக்கப்படுகிறது.

அப்போது, மது அருந்தியவருடைய மனம் இறுக்கமின்றித் தளர்வடைகிறது, அவர் மகிழ்ச்சியாக உணர்கிறார். படிப்படியாக, மதுவின் தாக்கம் குறையும்போது, மது அருந்தியவர் குழப்பமாகவும் மயக்கமாகவும் உணர்கிறார்.

மது அருந்தியதும், ஒருவருடைய மனத்தடைகள் விலகுகின்றன. அதனால், அவரது அசைவுகளில்/நடத்தைகளில் ஒழுங்கு குறைகிறது, அவரது பாலியல் விருப்பம் அதிகரித்தாலும்,அவர் பாலியல் செயல்திறன் குறைந்துவிடுகிறது.

ஒருவர் மதுவுக்கு அடிமையாகிறார் என்றால், அவரது மூளை தொடர் பாதிப்புக்கு உள்ளாகிறது,

மனித உடலால், ஒரு மணிநேரத்துக்கு குறிப்பிட்ட அளவு மதுவை மட்டுமே ஜீரணிக்க இயலும். இது, அதிகமாகும்போது, அவரது உடலால் அதனை ஜீரணிக்க இயலாது, அவர் உட்கொண்ட மது அவரது உடல்முழுவதும் சுற்றிவருகிறது. ஆகவே, அவர் சோம்பேறித்தனமாக உணர்கிறார், ஒழுங்கற்றமுறையில் நடக்கிறார். அவரது உடலை அவராலேயே கட்டுப்படுத்த முடிவதில்லை.

மதுவிலுள்ள வேதிப்பொருள்களின் ஆற்றல் :

மதுவில் , ஆல்கஹால் என்ற வேதிப்பொருள்தான் இருக்கும். குறிப்பாக, எத்தனால் என்கிற எத்தில் ஆல்கஹால் உள்ளது.

இரத்தத்தில், ஆல்கஹால் இருப்பதைக் கண்டறிய,

1. மூச்சுப் பரிசோதனை அல்லது

2. இரத்தப்பரிசோதனை அல்லது

3. சிறுநீரகப் பரிசோதனை மூலமாகவும் கண்டறியலாம்.

இரத்தத்தில், 50மில்லி கிராம் அளவுக்கு இருந்தால், அது ஓரளவு போதையைக் குறிக்கும்.

300மில்லி கிராமுக்கு மேலிருந்தால், அது பெரும் போதையைக்குறிக்கும்.

இதற்கும் மேலிருந்தால், உயிருக்கு பாதிப்பு உண்டாகும்.

மெத்தனால் இருப்பின், அது மிகவும் தீங்கை விளைவிக்கும். குறைந்த அளவில், கண் பார்வை போகும்.

அதிக அளவில், உயிர் போகும்.

கள்ளச்சாராய விபத்துகள், பொதுவாக, மெத்தனாலுடன் தொடர்புடையவை.

எத்தனால், வினைமாற்றத்தால், அசிட்டால்டிஹைடாக மாறும். மது அருந்தும்போது, அசிட்டால்டிஹைடு ரத்தத்தில் கலந்து, மூளையில் இருக்கும் நியூரான்களைப் பாதிக்கிறது.

நியூரான்கள் வழியாகத்தான் சிக்னல்கள் செல்லும். அசிட்டால்டிஹைடு முதலான நச்சு பொருட்கள், நியூரான்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பி, ஒரு நியூரானுக்கும் மற்றொரு நியூரானுக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்தைப் பாதிக்கிறது. இதனால்தான், உளறுவது, பேசுவது புரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மது அருந்தும்போது, மனித மூளையில் உள்ள, பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை நிகழ்த்துகிற பகுதிகள் மதுவால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம்.

மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது.

இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்படுட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது.

உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். உடல் சோர்வடைதல், குற்ற உணர்ச்சி, தனிமையை நாடுவது போன்ற அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

ஒருவர் எப்போதாவதுதான் குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்கும்.

நீண்டநாள் மது அருந்துதலின் பாதிப்புகள் :

1. ஞாபகசக்தி இழப்பு

2. மனச்சோர்வு

3. எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள்

4. உயர் ரத்த அழுத்தம்

5. கருவுக்குப் பாதிப்பு

6. புற்றுநோய் அபாயம் அதிகரித்தல்

7. டிமென்சியா அபாயம் அதிகரித்தல்

8. கல்லீரல் பாதிப்பு

9. மூளைத் திசு சுருங்குதல்

10. இதயத் தசைகள் பலவீனமடைதல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, பக்கவாதம்

11. செரிமானப் பிரச்னைகள்

12. பாலியல் செயலின்மை

13. இளம்வயதிலேயே முதியவர்போன்ற தோற்றம், செயல்பாடுகள்

14. புத்திசாலித்தனம் குறைதல்

சங்க இலக்கியத்தில் கள்/மது:

கள் ‍ என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌

கள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது.

மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு.

நெல்லால் சமைத்த கள் நறவு எனவும், தேனால் சமைத்த கள் தேறல் எனவும், பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.

கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன.

தெய்வப்புலவர் திருவள்ளுவர், மது அருந்துதலை ஒரு பெருங்கேடு என அறிந்து, கள்ளுண்ணாமை என்ற தனி அதிகாரமே படைத்துள்ளார். அதிலிருந்து, சில திருக்குறள் வரிகளை, உங்கள் சிந்தனைக்காக, இங்கே தூவுகிறேன்.

(மோகன் குமார் ஏகாம்பரம்,சென்னைப் பல்கலைக்கழகம்)


மது  Main-qimg-ff795b2928c314942750fe1a02ddf4a0-lq
மது  Main-qimg-1bac6f87d2d55018132c269210fc8037-lq
மது  Main-qimg-abbf018aeea64f8396e3bc4636536e3c-lq
மது  Main-qimg-f011ec0ba9476027d12461070417b99d-lq
மது  Main-qimg-6358be2981b0a496347caa10a36a0a42-lq
மது  Main-qimg-3a7d8a57e873788a4fda7d108128dc2c-lq
மது  Main-qimg-16bffa15561857d0d340b6da064f36bf-lq
மது  Main-qimg-465927aa00442f6738447e4b4ddfb22b-lq


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 12, 2022 7:08 pm

மது  103459460 மது  3838410834

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 12, 2022 11:33 pm

அது சரி! மது பற்றிய தீமையையெல்லாம் யாருக்குக் கூறுகிறீர்கள்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக